Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயது வந்தவர்களுக்கு மட்டும்

Featured Replies

அண்மையில் ஒரு சுவார்சியமான பேசாப்பொருளை வாசிக்கும் சந்தர்பம் கிடைத்தது. பொதுவாக நாம் புலம்பெயர்ந்து இரண்டு தசாப்தங்கள் கடந்தபொழுதிலும், படுக்கைஅறை விடையத்தில் கட்டுப்பெட்டித்தனமாகவும், பாலியல் என்றால் அருவருக்கத்தக்க பொருளாகவுமே பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும் இங்கு பிறந்து வளர்ந்த இளையோரிடம் ஓரளவு மாற்றங்கள் பாலியல் கல்விமூலம் இருந்தாலும் இந்திய சினிமாக்கள் உருவாக்கிய கருத்தியல்கோட்பாடுகளின் தாக்கமும் காணப்டுகின்றது. அவர்கள் திருமணபந்தத்தில் நுழைந்தாலும் இதன் தாக்கம் எதிரொலிக்கவே செய்கிறது. பொதுவாக உடல்உறவு என்பது ஒருபக்கசரர்பான இயங்குமுறையுடனேயே நடந்து முடிந்துவிடுவதால் நாளடைவில் தம்பதிகளின் பல பிரச்சனைகளின் தோற்றுவாயாக இருப்பது பலருக்கப் புரிவதில்லை. தம்பதிகளுக்கு உடல்உறவு பற்றிய தெளிவிற்கும் அதன்மீது ஈடுபாடு அதிகரிக்கவும் பாலியல் மற்றும் மனோதத்துவ நிபுணர்களும் சில படி முறைகளை ஆலோசனைகளாக வழங்குகின்றனர் நட்புகளான உங்கள் கருத்துகளையும் எதிர்பார்கின்றேன்

முதல் படி : வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள்...

நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் வெளிச்சத்திலும், வெளிச்சத்திலேயே படுக்கையறை விளையாட்டை வைத்துக்கொள்ள விரும்புபவர் என்றால் இருட்டிலும் உறவை வைத்து பாருங்களேன். புதிய சூழல் ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். எப்போதும் துணையின் எதிர்பார்ப்புக்கு மட்டும் ஈடுகொடுப்பதற்கு பதிலாக தாமே முன்வந்து முயற்சியை மேற்கொள்வது துணையின் ஆர்வத்தைத் தூண்டும் என்கின்றனர். `செக்சியான ஒரு சிறு நடனம், கவர்ச்சியான உள்ளாடைகள் உங்களின் கணவரை ஈர்க்கக்கூடும்’ என்று பெண்களுக்குக் கூறுகிறார்கள்.

இரண்டாவது : படி தனித்தனியே சுற்றுலா...

பிரிந்திருபது அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல, ஆசையையும் கூட்டும். எனவே முடிந்தால் தம்பதி கள் இருவரும் தனித்தனியே வெளி யிடங்களுக்குச் சில நாட்களுக்குச் சென்று வாருங்கள். இது சற்றுக் கடினம்தான். ஆனால் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால் இதற்கான ஏற் பாடுகளைச் செய்ய முடியும். ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள், இரு வரும்… பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். நாட்கணக்கில் பிரிந்தி ருக்க வாய்பில்லாதவர்கள், ஒருவரிடம் ஒருவர் விலகியிருக்கும்படி மணிக்கணக்கில் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், ஆனால் அதே நேரம் அதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் செக்சாலஜிஸ்ட்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

முன்றாவது படி : ஒரு புதிய இடத்தில்…

ஒரு புதிய இடத்தில் அல்லது அமைதியான உணவகத்தில் ஒருநாள் மாலையில் தன்னை வந்து சந்திக்குமாறு துணைக்குக் குறிப்பு எழுதி வைங்கள். அங்கே நீங்கள் ஈர்க்கும் விதமாக ஆடை அணிந்து சென்று, ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங் கள். உங்கள் துணைவர் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்போடு அங்கு வருவார். உங்களைக் கண்டு பிரமித்து போவார். ஒரு பொது இடத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் `த்ரில்’ அங்கே இருக்கும். நெருப்பும் பற்றிக் கொள்ளும். புதிய கோணங்கள், புதிய இடங்கள் எப்போதும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று குடும்ப நல மருத்துவர் தெரிவிக்கிறார்.

நான்காவது படி :`பிளாஷ்பேக்’கில் முழ்குவது…

நீங்கள் முதன்முதலாக `அது’ வைத்துக்கொண்ட இடம், அந்த சூழலை மறக்க முடியுமா? அப்போது அவர்(ள்) நடந்துகொண்ட விதம், துணையிடம் தெரிந்த பதற்றம், சிரிப்பை வர

வழைத்த சிறு குளறுபடிகள் எல்லாவற்றைம் மறக்க முடியாதல்லவா? அவை எல்லாவற் றைம் ஒருமுறை `பிளாஷ்பேக்’ ஓட்டி பாருங்கள். தேனிலவின்போது எடுத்த புகைபடங்கள், வீடியோவை பாருங்கள். அந்த நாட்களில் நீங்கள் பின்னணியில் ஒலிக்க விட்ட இசையை மீண்டும் ஒருமுறை ஒலிக்க விடுங்கள். மறுபடியும் அந்த ஆரம்பகால வேகம், தாகம் பிறக்கும் என்கிறார்கள்.

ஐந்தாவது படி : தடாலடியான செயல்பாடுகள்...

விறுவிறுப்பு, `த்ரில்’லை ஏற்படுத்தும் செயல்கள் `டோபோமைனை’ விடுவிக்கின்றன என்கிறார், ரட்சர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹெலன் பிஷர். காதல் உணர்வுடன் தொடர்புடைய ரசாயனம் `டோபோமைன்.’ உறவு விருப்பத்துக்கான ஹார்மோனாகிய `டெஸ்ட்டோஸ்டிரோனின்’ அளவை `டோபோமைன்’ கூட்டுகிறது. வேகமான ஆற்றில் படகைச் செலுத்துவது, உயரமான இடத்திலிருந்து தக்க பாதுகாபுடன் தலைகீழாகக் குதிக்கும் `பங்கி ஜம்பிங்’ போன்றவை உங்களுக்கு உதவக்கூடும். சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடுவது `எடார்பினை’ விடுவித்து உங்களை ஓர் உச்சத்தில் வைக்கி றது, அப்போது `பங்கி ஜம்பிங்’ போன்றவை கூடத் தேவையில்லை என்கிறார் குடும்ப நல ஆலோசனை நிபுணர் வர்க்கா. நீங்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடலாம் அல்லது சிறு உடற்பயிற்சியை நாடலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார்.

ஆறாவது படி : விலகி… சீண்டி…

தம்பதிகளை பொறுத்தவரை படுக்கையறையில் சற்றே விலகியிருப்பது பொதுவாக பரிந்துரைக்கபடுவது இல்லை. இருவரில் ஒருவர் மட்டும் ஆசை கொண்டு அதற்கு அடுத்தவர் இசைந்து கொடுப்பது, `அவசரமான உறவுகள்’ வைத்துக்கொள்வதற்கு இரண்டு வார கால விடுப்பு அளியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் `அதை’ வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள். அதுவரை நீங்கள் உங்கள் துணையைச் சீண்டி வாருங்கள். விலகியிருக்கும் அந்த ஒரு வார காலம் `அவருக்கு’ நீண்ட காலமாகத் தெரியும். அதன் பின் படுக்கையில் இணைம்போது அற்புதமாகவும் இருக்கும். ஆனால் இதுகுறித்து இருவரும் பேசி சம்மதம் என்றால் மட்டுமே ஈடுபடுங்கள், `விடுப்பு’ காலம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாலியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

நான் இன்னும் வயதுக்கு வர வில்லை ஆனால் இதை வாசிச்சிட்டன் மன்னிக்கவும் கோமகன். :unsure:

Edited by கிளியவன்

  • தொடங்கியவர்

நான் இன்னும் வயதுக்கு வர வில்லை ஆனால் இதை வாசிச்சிட்டன் மன்னிக்கவும் கோமகன். :unsure:

நான் எப்படி நம்பிறது கிளியவன் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

`செக்சியான ஒரு சிறு நடனம், கவர்ச்சியான உள்ளாடைகள் உங்களின் கணவரை ஈர்க்கக்கூடும்’

ஆமாம்.

This video contains content from SME, who has blocked it in your country on copyright grounds.

Sorry about that.

நான் வாழும் நாட்டில் இந்த மீனா குமாரியக்கூட பார்க்க முடியாத நிலை :mellow: :mellow: :mellow: :mellow:

நான் எப்படி நம்பிறது கிளியவன் :lol::lol:

:D :D :D

Edited by கிளியவன்

  • தொடங்கியவர்

This video contains content from SME, who has blocked it in your country on copyright grounds.

Sorry about that.

நான் வாழும் நாட்டில் இந்த மீனா குமாரியக்கூட பார்க்க முடியாத நிலை :mellow: :mellow: :mellow: :mellow:

:D :D :D

சரி சரி கிருபன் உங்களுக்கு உதவி செஞ்சவர்தானே கிளியவன் :D:D:D

இதெல்லாம் ஒரு கனவுருப் புனைவாற்றல் ரேஞ்சில விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்தது கொள்ளும் தன்மை இருந்தால் இவை எதுக்கும் அவசியம் இல்லை.

இதெல்லாம் ஒரு கனவுருப் புனைவாற்றல் ரேஞ்சில விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் நன்கு புணர்ந்து கொள்ளும் தன்மை இருந்தால் இவை எதுக்கும் அவசியம் இல்லை.

உண்மைதான் குட்டி.

உண்மைதான் குட்டி.

நான் சொன்னது புணர்ச்சியை இல்லை தப்பிலி, மனதளவில் புரிதல் தான் அவசியம் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் கொஞ்சக்காலத்தாலை ரைம்ரேபிள் வைச்சுத்தான் குடும்பகாரர் இரவுக்கடனை முடிக்கோணும் போலை கிடக்கு :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சக்காலத்தாலை ரைம்ரேபிள் வைச்சுத்தான் குடும்பகாரர் இரவுக்கடனை முடிக்கோணும் போலை கிடக்கு :wub:

நமக்கு இது சரிவராதண்ணை

நாம நம்ம முறையையே தொடர்ந்தும் பின்பற்றுவோம். :lol::D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

This video contains content from SME, who has blocked it in your country on copyright grounds.

Sorry about that.

நான் வாழும் நாட்டில் இந்த மீனா குமாரியக்கூட பார்க்க முடியாத நிலை :mellow: :mellow: :mellow: :mellow:

:D :D :D

அப்படி என்றால் நீங்கள் ஜேர்மனியா?

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விசயங்கள் எப்ப பேசும் பொருளாக வருகுதோ அப்பதான் விமோசனம்.அதுவரைக்கும் புட்டும் முட்டைப்பொரியலும்தான். :unsure: (நன்றி இன்னுமொருவன்)

அப்படி என்றால் நீங்கள் ஜேர்மனியா?

:rolleyes:

ஜேர்மனி இல்லை ஜிவா மத்திய கிழக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.