Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவுகள் குறித்து நான் துவண்டு போகவில்லை! கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள்: டக்ளஸ் தேவானந்தா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் குறித்து நான் துவண்டு போகவில்லை! கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள்: டக்ளஸ் தேவானந்தா.

[sunday, 2011-07-24 21:17:24]

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த எவ்விதமான பிரச்சினைகளுக்கும் ஒருபோதும் தீர்வு காணமாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றியைப் பெற்றிருந்தாலும் அவர்கள் எமது மக்களுக்கான அரசியல் புனரமைப்பு அபிவிருத்தி மற்றும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள் என்றும் நடைபெறவுள்ள மாகாணசபைக்கான தேர்தலின் போது மக்கள் இதை உணர்ந்து கொண்டு சரியான தீர்ப்புக்களை வழங்குவார்கள் என்றே நம்புகின்றேன்.

இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அரசை மக்கள் புறக்கணித்துள்ளனரா என்று ஊடகவியலாளர்கள் கேட்டபோது இது ஒரு தவறான புரிந்துணர்வு என்பதுடன் தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு தவறான பிரச்சாரங்கள் ஊடாக மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்பதுடன் இந்தத் தவறான பிரச்சாரங்களால் வழிநடாத்தப்பட்டதன் விளைவுகளை எமது மக்கள் விளங்கிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பத்தையும் இத்தேர்தல் ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மொழிவாதம், இனங்களைத் தூண்டி தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பிரச்சாரம் தொடர்பில் இங்குள்ள தமிழ் ஊடகங்களும் மக்களுக்கு சரியான வழிகளை எடுத்துக் காட்டவில்லை என்பதுடன் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கோ உணர்வுகளுக்கோ ஏற்ப சரியாக செயற்படவில்லை. அத்துடன், கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பான உள்ளுராட்சி வேட்பாளர் ஒருவர் ஈ.பி.டி.பியினரால் தாக்கப்பட்டமை தொடர்பாக கேட்ட போது இச்சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பிக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. அத்துடன் எம்மீது திட்டமிட்ட வகையில் குற்றம் சுமத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இனவாதத்தை நம்பியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

எமது ஆளுகைக்குட்பட்ட யாழ் மாநகர சபை மக்களுக்கான தனது செயற்பாடுகளை மிகத்தரமான முறையில் மேற்கொண்டு வருகின்ற போதிலும் அங்குள்ள எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியா நகர சபையை கைப்பற்றியிருக்கும் நிலையில் அதனால் அச்சபையை சரியாக நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஈ.பி.டி.பி. கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தமிழ்ப் பிரதிநிதிகளே என்று தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து நான் துவண்டு போகவில்லை என்றும் தேர்தல் முடிவுகள் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், ஏனெனில் இது, எல்லோருடைய கண்களையும் திறக்கச் செய்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=47084&category=TamilNews&language=tamil

இந்த இணக்க / துரோக அரசியல் கூலி, சிங்களம் என்ன அபிவிருத்தியை செய்துள்ளது என கூறுவார்?

மக்கள் தெளிவாக இந்த சர்வதேச செய்து நிறுவனத்திற்கு கூறினார்கள், அபிவிருத்தி என்ற போர்வையில் என்ன நடக்கின்றது. ( வடபகுதியை சிங்கள மயப்படுத்தவே அபிவிருத்தித் திட்டங்கள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=89431 )

எம்மை வைத்து, எமது அவலங்களை வைத்தே செய்யும் அரசியலுக்கு சேவகம் செய்யும் இந்த மனிதர் இராஜினாமா செய்துவிட்டு எங்காவது அடைக்கலம் புகுவதே சாலச்சிறந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அனைத்து விதமாகவும் நாடகமாடியும் மக்கள் உன்போன்ற துரோகிகளை அடையாளம் கண்டு பாடம் புகட்டியுள்ளார்கள் இதற்க்கு மேலும் நீ உயிரோடு இருக்க வேண்டுமா என சிந்தித்துப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவருக்கும் உதவாத தமிழருக்கும் உதவாத அரசியல் பன்னாடையை தமிழ் சிங்கள மக்கள் செம்புள்ளி கரும்புள்ளி குத்த வேண்டும்.

அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை விலைக்கு வாங்கலாம் என்று நினைத்த பத்தாம்பசலிகளுக்கு கிடைத்த பெரும் தோல்வி.தோல்வியை ஈடுகட்ட எங்காவது ஓடித்தள்ளுவது தான் சிறந்தது.யாழ்க்களத்தில் டக்கிளஸ் தலித்துகளுக்கு பெரும் உதவி செய்கிறார் என்று பெரிய பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்(கள்) ஏன் இவருக்கு இப்படி ஒரு தோல்வி கிடைத்தது என்பதை சொல்வார்களா??

குத்தியின் இலக்கு "உதயன்" சரவணபவன் என கேள்வி! ... யாழில் குத்தியின் பல கூத்துக்களை உடைத்தெறிந்தது உதயனாம், அதுவும் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்... சரவணபவன் அவதானமாக இருப்பது நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் உண்மையைத் தானே சொல்கிறார். அவர் ஏன் துவண்டு விடப் போகிறார். அவர் எப்போது ஜனநாயகத்தை ஜனநாயக வழியில் சந்தித்திருக்கிறார். 1988 இல் இருந்து பிரேமதாசவோடு சேர்ந்து ஆயுத அராஜக அரசியல் செய்ய வெளிக்கிட்டவர் இன்று வரை அதை சிங்களத்தோடு சேர்ந்து நின்று செய்து வருகிறார். இவரினதும்.. சிறீலங்கா கடற்படையினரதும்.. இராணுவத்தினதும் கட்டுப்பாட்டுக்குள் 1991 இல் யாழ் தீவுப்பகுதிகள் வந்தது முதல் இவர் மக்களை அடித்து விரட்டி விட்டு தன் தொண்டர்களை வைச்சே வாக்கும் போட்டு ஒவ்வொரு முறையும் எம். பி ஆகியும் விடுகிறார்.

இவரிடம் தமிழ் மக்கள் பகிரங்க சவால் விடுகிறார்கள்.. ஏலும் என்றால் இவர் தீவுப் பகுதி சாராது நின்று தேர்தலில் வெல்லட்டும் பார்க்கலாம். அதுமட்டுமன்றி இந்த வெங்கை சொல்லிக் கொண்டு திரிந்தது.. மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி என்று. அதுவும் பிரபாகரனுக்கு பயந்து அதைச் சொல்லிக் கிட்டு திரிஞ்சுது. பிறகு சந்திரிக்காவோடு சேர்ந்து நின்று சொல்லிச்சு.. பிரபாகரன் தனது பாசிச அரசியலை விட்டு போனால்.. நான் அரசியலில் இருக்கவே மாட்டன் என்று. இப்ப பிரபாகரன் மட்டுமில்ல.. புலிகளே அரசியலை விட்டுப் போயாச்சு.. ஏன் இந்த வெங்கை இன்னும் ஆயுத அரசியல் செய்யுது. தமிழ் மக்களுக்கு தான் செய்த முன் வினைப் பழிக்கு இப்ப பரிகாரம் தேடுதாம்.. எங்க பரிகாரம் தேடுது.. இன்னும் இன்னும் படுகொலைகளைச் செய்து பாவத்தை எல்லோ தேடுது.

இவங்க ஒன்றிரண்டு பேர் சிங்களத்துக்கு இந்தியத்துக்கு கூலிக்கு மாரடிக்க இருக்கிற படியால் தான் மலையக மக்களில் இருந்து வடக்குக் கிழக்கு மக்கள் வரை ஒரு முன்னேற்றம் இல்லாமல் இருக்கினம். தொண்டமான் இணக்க அரசியல் செய்து மலைய மக்களைப் பிச்சைக்காரர் ஆக்கினார். பின்னர்.. ஆறுமுகம் தொண்டமான்.. ! ஆனால் இணக்க அரசியல் செய்த இந்தக் கூலிகள் நல்லா பணத்தாலும் உடலாலும் கொழுத்து விட்டார்கள். பாவம் மக்கள். அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் இரத்த அட்டைகள் இவை. இவற்றை உயிரோடு கொழுத்த வேண்டும். இன்றேல் தமிழன் மீது இவர்களை வைச்சே சிங்களம் சவாரி செய்துகிட்டு இருக்கும். இவர்களும் காலத்துக்கு காலம் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி அச்சுறுத்தி அராஜகம் புரிந்து ஆயுத சன நாய் அகம் வளர்த்துக் கொண்டிருப்பர். இவர்கள் எப்போதுமே திருந்தப் போறதில்லை. அதனை இவர்களிடம் எதிர்பார்ப்பது வீண்.

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் தீவுப்பகுதி மட்டுமல்ல, இந்த ஒட்டுக் குழுக்களின் செயற்பாடு இல்லாவிட்டால் இவர்களால் எங்கும் வெற்றிபெற முடியாது. வ்வளவு காலம் அரசோடு இருந்தும் ஏதாவது தீர்வு கண்டாரா(னா)?

  • கருத்துக்கள உறவுகள்

:lol::wub:அவர்கள் தீர்வொன்று கண்பதற்காகத்தான் அரசோடு ஒட்டியிருக்கிறார்கள் என்று யார் சொன்னது ? அரசின் தீர்வைத் தமிழர்கள் தலையில் அரைப்பதற்காகவல்லவா அவர்கள் அரசுக்கு காவடி தூக்குகிறார்கள்??

மொழிவாதமாம், இனவாதமாம்....எப்படியிருக்கு?? இதெல்லாம் இல்லையென்றால் என்னத்துக்காக இவனெல்லாம் 80 களில போராடத் தொடங்கினானாம்?? சரி, இவ்வளவு காலமும் புலியிருந்தது, ஆகவேதான் அரசுடன் பாதுகாப்புக் கருதி ஒட்டியிருந்தாய், இப்பத்தான் புலியில்லையே, ஏன் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறாய்?? அரசுடன் இன்னும் ஒட்டியிருப்பதை எப்படி நியாயப்படுத்துவாய்??

சிலவேளை இவன் தன்னைத் தமிழன் என்பதையே மறந்து விட்டனோ என்னவோ?? தமிழ்பேசும் சிங்கள அமைச்சர் என்கிற நினைப்பாக்கும் !! அப்பச் சரிதான், இதுமட்டுமல்ல, இதுக்கு மேலும் பேசுவான். நாங்கள் இவனையும் இவனது வேட்டை நாய்களையும் இனித் தமிழர்கள் என்று பார்க்காமல் சிங்களவர்கள் என்று பார்த்தால் எந்தப் பிர்சச்சினையுமில்லை.

20 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஐ. தே.க., சு. க. சிங்கள அரச பயங்கரவாதிகளுடன் ஒட்டி உறவாடி என்ன தீர்வைப் பெற்றுக் குடுத்தான் இந்த டக்லஸ்? சிங்கள அரச பயங்கரவாதிகள் அள்ளி வீசிய சிங்கள விலைமாதர்களை பயங்கரவாதி நாராயணனுடன் அனுபவித்துத் திரிந்து, பின்னர் மகேஸ்வரியுடன் அலைந்து திரிந்து, பின்னர் அதையும் கொலை செய்துவிட்டு, மீண்டும் சிங்களக் காட்டுமிராண்டிகளுடன் கூத்தடிக்கும் இவன் ஒரு சாக்கடை. கொலை, கப்ப, கடத்தல், கொள்ளைக் கும்பல் தலைவனான டக்ளசின் பிடியில் இருக்கும் தீவகமே உன்னை விரைவில் சுட்டெரிக்கும்.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் குறித்து நான் துவண்டு போகவில்லை! கூட்டமைப்பு வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண மாட்டார்கள்: டக்ளஸ் தேவானந்தா.

நீங்கள் இலகுவில், துவண்டு போய் விட மாட்டீர்கள், என்பது எங்களுக்குத் தெரியாததா, என்ன?

ஆனால், கவனம்!

மகிந்த உங்களைத் துவட்டப் போகின்றார்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவன் எல்லாம் ஒரு அள்.... ..........இவனின் வலதுகை விந்த்தன் Wellawatta ல் கன காலமாக சங்கிலி அறுத்து திரிச்சவன். போலீஸ்ல் சனம் பிடிச்சு கொடுக்க, கொஞ்ச நாளில் வெளியில் நிற்கிறான்,

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் தோல்வி மகிழ்ச்சியளிக்கின்றது: டக்ளஸ் _

7/25/2011 10:47:49 AM

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட இந்தத் தோல்வி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. எல்லோரது கண்களும் விரைவில் திறந்து கொள்ளும் என்று பாரம்பரிய கைத்தொழில் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா நடந்து முடிந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைக்கான தேர்தலை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளருடனான சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இனங்களுக்கிடையிலான உறவுகளைச் சீரமைத்து அரசியல் தீர்வு உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மக்கள் உதவுவார்கள் என நம்பியிருந்தேன். கடந்த யுத்தத்தால் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களுக்குப் பின் இலங்கை அரசு இதயசுத்தியுடன் நெருங்கி வந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் இங்கு வருகை தந்து மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வு காண உதவினேன். அரசியல் பேதங்களுக்கு அப்பால் இந்த உண்மையை மக்கள் மறுக்க மாட்டார்கள். நான் எப்போதும் சொன்னதைச் செய்வேன் செய்வதையே சொல்லுவேன். ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் வருகையை திரிபுபடுத்தி பொய்யான பிரச்சாரங்கள் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களை தவறான வழியில் பிரசாரம் செய்து திசை திருப்பியுள்ளனர்.

நாங்கள் உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளோம். இரண்டு சபைகளின் எதிரணியில் உள்ளோம். எம்மை ஆதரித்த மக்களுக்கு நேர்மையுடனும் உண்மையுடனும் ஊழலற்ற ஆட்சியைத் தருவோம். அதே சமயம் பொறுப்புள்ள எதிர்க்கட்சியினராக மக்களின் தேவைகளே நிறைவேற்றவும் உள்ளோம். எங்களுக்கு ஆதரவை வழங்கிய அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலண்டீன், யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். மாவட்ட அமைப்பாளர் கே. கமல் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32880.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்லுறது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று.டக்ளசே உன் ஆயுதக் குழக்களை கலைத்து விட்டு தீவுப்பகுதியில் தேர்தலில் நின்றுபார்.ஒரு நாய் கூட உனக்கு ஓட்டுப்போடாது.1991 ஆம் ஆண்டிலிருந்து கடற்படையின் உதவியுடன் கள்ள ஓட்டுப் போட்டே எம்பியாகி வந்த கதையெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.அது எப்படி எல்லாத் தமிழ் மக்களும் ஒரே மாதிரி சிந்திக்க தீவக மக்கள் மட்டும் வேறுமாதிரி சிந்திக்கிறார்கள்?எல்லாம் கள்ளவாக்கின் மகிமை!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரில் பத்துக்கு மேற்பட்ட சிறுவர்பாடசாலைகளை கடந்த பலவருடங்களாக நாம் நடாத்திவருகின்றோம். அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சம்பளம் நிர்வாகச்செலவுகள் மற்றும் பிள்ளைகளுக்கான மதிய உணவு என்பன பிரான்சிலுள்ள எமது சங்கத்தினால் வழங்கப்பட்டு வந்தன. திடீரென போன 3 மாதமாக ஆசிரியர்களுக்கான சம்பளத்தை இவர்கள் கொடுக்கத்தொடங்கினர். அரச பதிவுக்குள் போய்விட்டார்கள் நல்லது தானே என நினைத்த நாம் எமது கொடுப்பனவை நிறுத்துவோம் என நினைத்து அவர்களுடன் பேசியபோது அவர்கள் பதறியடித்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தை எமக்கு அனுப்பினார்கள். அரச இலட்சனையுடன் எழுதப்பட்டுள்ள கடிதத்தை படித்துப்பார்த்தால் சிறு பிள்ளைகள் சிறு பிள்ளைகளுக்கு எழுதிய ஒப்பந்தம் போல்...

எப்பொழுதிலிருந்து என்றும் இல்லை

ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் கொடுப்பனவை நிறுத்துவோம் என்று மட்டும் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

(அதாவது தேர்தலுக்காக உள்ளே எடுக்கப்பட்டு ஆசிரியர்கள் தமக்காக தேர்தல் வேலை செய்து தாம் வென்றால் தொடரும் என்பதே இஅதன் சூட்சமம்) நான் சொன்னோம் சரி அங்கு அவர்தானே வெல்லப்போகின்றார். அப்படியானால் வேலை நிரந்தரம் தானே என. அதற்கு பதில் அடுத்ததேர்தல்வரை அவருக்கு நாம் தேவையில்லையே. :(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.