Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1971

Featured Replies

அன்று பாடசலை விடுமுறை நானும் நண்பர்களும் "கள்ளன் பொலிஸ் " விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தோம்.எனது அம்மாவும் நண்பர்களின் அம்மாக்களும் திடிரேனே ஒடிவந்தனர்"தம்பிமார் ஒடி போய் கூப்பன் கடையில் அரிசியும்,பருப்பும்,சீனியும் வாங்கி கொண்டு ஒடிவாங்கோ நாங்கள் பின்னுக்கு வாறோம்"என்றனர்.நாங்களும் ஒடிப்போய் கடையில் நின்றோம்.அங்கே ஒரே சனக்கூட்டம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.வானொலி எல்லாம் பெரிதாக அந்த ஊரில் இல்லைஒரு சில வீட்டிலும் கடைகளிலும்தான் வானொலி இருந்தது.அதுவும்" வால்வ் ரேடியோ"அதற்க்கு பக்கத்தில் பெரிய பற்றரி ஒன்றும் வைத்திருப்பார்கள்.வானோலி வைத்திருந்தவர்கள்தான் அந்த சனக்கூட்டத்தில் அன்றைய கதாநாயகர்கள்,"நான் இப்ப ரேடியோ கேட்டுப்போட்டுத்தான் வாரன் .நாடு பூராவும் ஊரடங்குசட்டமாம் ஒருத்தரும் வெளியே செல்லக்கூடாதாம் சென்றால் பொலிஸ் அல்லது இராணுவம் எங்களை சுடலாமாம்" என்றார் ஒரு வானொலி தாத்தா.

அந்த ஊரில் தொலைபேசி வசதி குறைவு.பொலிஸ் நிலையம், டிஸ்பென்சரி(அரசினர் மருத்துவ நிலயம் ...அப்போதிக்கரி)தபால் நிலையம், மற்றும் அரச அலுவளகங்களில் தான் தொலைபேசி வசதிகள் இருந்தன.தனியார் கடைகள் செய்தியை கேட்டு கடைகளை மூடவெளிக்கிட்டார்கள், நான் நின்ற கடை கூப்பன்கடை(சங்க கடை) முகாமையாளர் அந்த கடையை தன் இஸ்டத்திற்கு மூட முடியாது .என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துகொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் எனது தந்தையார் சைக்கிளில் மிகவும் அவசரமாக ஒடி வந்து ,சைக்கிளை ஒரத்தில் சாத்திவிட்டு கடையில் நிற்பவர்களை பார்த்து " இப்ப உங்களுக்கு அரிசி சீனி முக்கியமோ எல்லோரும் வீட்டை ஒடுங்கோ ,முகாமையாளரை அழைத்து கடையை மூடு ,ஒருத்தருக்கும் ஒன்றும் கொடுக்க வேண்டாம்,இப்ப ஏறாவூர் பொலிஸ்காரன் வந்தான் என்றால் எல்லோரையும் சுட்டுப்போடுவான்"என்றவர்க்கு என்னை அங்கே கண்டவுடன் மேலும் கோபம் வந்துவிட்டதுஒடு வீட்டை என்று அதட்டினார்.அப்பா அரச உத்தியோகத்தில் இருந்தவர் அத்துடன் அந்த பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தவர் ஆகவே அந்தகடையில் நின்ற சனத்திற்க்கு இவர் சொல்லுவது உண்மையாக இருக்கும் என்ற எண்ணத்தில் எல்லோரும் கலைந்து சென்றனர்.

அன்றைய காலகட்டத்தில் கிராமங்களில் அரச உத்தியோகத்தர்கள்,கிராம சேவையாளர்கள் ஊர் தலைவர்கள் என்ற எண்ணத்துடன் நடந்துகொள்வார்கள். காலை 11 மணியளவில் ஊரே அடங்கிவிட்டது. எல்லோரும் தங்களது வீடுகளில் இருந்தார்கள், சன நடமாட்டம் ,வாகன போக்குவரத்தின்றி வீதி வெறிச்சோடிப்போயிருந்தது. செய்தி கேட்பதற்காக அயலில் உள்ளவர்கள் வேலியால் புகுந்து உள்ளே வந்தார்கள் ,எதிர் வீட்டில் உள்ள ஒரு பெரிசு வீதியில் பொலிஸ் இராணுவ ஜீப் ஏதாவது வருகின்றதா என இரு பக்கமும் பார்த்துவிட்டு ஒடி வந்தார்.வானொலியில் செய்தி ஒலிபரப்ப முதல் போடும் இசை போட்டவுடன் எல்லோரும் அமைதியாக வானோலியின் முன்னால் போய் இருந்தார்கள் ,எங்களை(சின்ன பெடியன்களை)டேய் சத்தம் போடாதையுங்கடா என ஒரு பெரிசு அதட்டிச்சுது நாங்களும் விளையாடுவதை நிறுத்தி அமைதியாக இருந்தோம்."பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்ற எடுத்த முயற்சி முப்படைகளின் முயற்சியினால் தோற்கடிக்கப்பட்டது............"என வானோலி கதை சொல்லிகொண்டிருந்தது. பயங்கரவாதிகள் என்ற சொல்லுமட்டும் எனக்கு நினைவில் இருக்கிறது மற்றவை எல்லாம் மறந்து விட்டது.2 வாரங்களாக ஒருவரும் வேலைக்கு செல்லவில்லை,வீடுகளில் இருந்து வானொலி கேட்டபடி கார்ட்ஸ் விளையாடி கொண்டு அரசியல் அலசுவார்கள்.பத்திரிகைகள் வரவில்லை வானொலில் சொல்லுவதுதான் உண்மை என எல்லோரும் ஏகமனதாக ஏற்றுகொண்டனர் காரணம் வேறு ஊடகங்கள் அந்த நேரத்தில் மக்களுக்கு கிடைக்கவில்லை.

நாடு பூராவும் காலவரையின்றி ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது ,கூட்டங்கள் வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது,இருவருக்கு மேல் கூடி நின்று கதைத்தால் பொலிசாரோ அல்லது இராணுவத்தினரோ உங்களை கைது செய்யலாம் என அடிக்கடி வானோலி புலம்பிகொண்டிருந்தது..

ஒரு நாள் நானும் எனது நண்பர்களும் வீட்டு முற்றத்தில்விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது பொலிஸ் ஜீப் வீட்டு வாசலில் வந்து நின்றது .நாங்கள் எல்லொரும் வீட்டினுள் ஒடி மேசையின் கீழ் ஒழித்தோம்.அதிகாரி மட்டும் வீட்டினுள் வந்தார் எனது அப்பாவை அவருக்கு முதலே தெரியும் சிங்களத்தில் எதோ கதைத்தார் ,அம்மாவும் பயந்து "பொலிஸ் வந்திருக்கு என்னவாம் என்ன என்று பதற்றத்துடன் கேட்டு கொண்டிருந்தா". "பொலிஸ் தேவைக்கு எமது அரச தினைக்கள வாகனம் வேண்டுமாம் அதுதான் வந்திருக்கிறார் சாவிகளை எடுத்து கொடுத்துவிட்டு வருகிறேன்" என்றவர் உள்ளே சென்று வாகன சாவிகளை எடுத்து அவரிடம் கொடுத்து ஒரு கையப்பமும் பேப்பரில் வாங்கினார்.அவர் வெளியே சென்ற பின்புதான் நாங்கள் கீழ் இருந்து வெளியே வந்தோம்.

1971 ஆம் ஆண்டு வடக்கிலும் கிழக்கிலும் எந்தவிதமான பெரிய அசாம்பாவிதங்கள் நடை பெறவில்லை.மற்றைய மாகாணங்களில் எல்லாம் போர் சுழல்தான்.பின்பு பத்திரிகைகள் வெளிவரத்தொடங்கிவிட்டன. அப்பா சகல் பத்திரிகைகளையும் வாங்குவார்.வீரகேசரி, சிந்தாமணி,மற்றும் ஒப்சேவர் என வீட்டில் ஒரே பத்திரிகையாக இருக்கும் இதனால் எனக்கும் கொஞ்சம் வாசிப்பு பழக்கம் வர தொடங்கிவிட்டது.முதலில் அதில் இருக்கும் படத்தை பார்ப்பேன் பின்பு அதில் உள்ள செய்திகளை வாசிப்பேன்.அம்மா சினிமா செய்திகளை மட்டும் பார்ப்பா.இப்ப வாரமாதிரி அப்ப சினிமா செய்திகள் வருவதில்லை ஒரு அரைபக்கம் அல்லது கால் பக்கத்தில் தான் வரும்.

அப்பாவும் அயல் வீட்டு பெரிசுகளும் பத்திரிகைகள் மற்றும் வானோலியில் வரும் செய்திகளை வைத்து அரசியல் கதைப்பார்கள்( நாங்கள் இப்ப யாழில் கருத்தாளர்கள் என்ற எண்ணத்தில் கிறுக்குவது போலதான் ஆனால் அந்த காலத்தில் வாயால் வெட்டி விலாசுவினம்) எனக்கு ஒன்றும் விளங்காது சும்மா கேட்டுக் கொண்டிருப்பேன்.பாடசாலை காலவரையிண்றி மூடப்பட்டிருந்தது ,இரண்டு மூன்று மாதங்கள் என நினைக்கிறேன்.ஒரே விளையாட்டு படிப்பில்லை.

ஒரு பத்திரிகையில்

சிறை பிடிக்கப்பட்ட பயங்கரவாதிகள் என போட்டோக்கள் போட்டிருந்தார்கள் ,எல்லோரும் இளம் வயதினர் .பயங்கர வாதிகளுக்கு நாம் உணவு கொடுக்கிறோம் என இளைஞர்கள் சாப்பிடும் படமும் போட்டிருந்தார்கள். அந்த படங்களை பார்த்தவுடன் அம்மா கண்கலங்கினார்,"ஜயோ சின்னப்பெடியங்களும் இருக்கிறாங்கள் யார் பெத்த பிள்ளைகளோ!" உடனே அப்பா " ஒம் ,பள்ளிக்கூட பெடியன்களை எல்லாம் உந்த டெரரிஸ்ட் மார் பிடிச்சு கொண்டு போய் ஆயுதப்பயிற்சி கொடுத்தவங்களாம்,பிரத்தியேக வகுப்பு என்று போட்டு பாடசாலை முடிந்தவுடன் அரசியல் பாடம் கொடுக்கிறவங்களாம் பின்பு காட்டில ஆயுதபயிற்சி கொடுத்தவங்களாம்", "உதுல எத்தனை தமிழ் பெடியன்கள் இருந்தாங்களோ தெரியவில்லை" என்று அம்மா தனது தமிழ் பற்றை வெளிப்படுத்தினார்."அவங்கள் எங்கன்ட பெடியளை எடுக்கவில்லை உதுல பொம்பிளை பிள்ளைகளும் சேர்ந்து இருக்குது பாவங்கள்" என்றார் அப்பா.

"ஜயோ உதுகள் என்னத்துக்குத்தான் இதில சேர்ந்ததுகளோ தெரியவில்லை.,பெத்ததுகள் என்ன பாடு படுங்கள்"அம்மா தனது கவலையை தெரிவித்தார்.

அந்த காலகட்டத்தில் ஏறாவூர் பொலிஸ் மட்டும்தான் எனக்கு தெரிந்தவரை ஆயுதத்துடன் திரிந்தவர்கள்.மற்றும்படி கடற்படையையோ இராணுவத்தையோ நான் கண்டதில்லை.ஊரடங்குகாலத்தில்தான் இராணுவத்தை காணக்கூடியதாக இருந்தது .

ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும் வீட்டின் அருகே ட்ரக்வண்டி நின்றது.சிறிது நேரத்தில் சிங்களத்தில் எதோ கதைப்பது கேட்டது"மகே அம்மே"என்று கத்திய சத்தம் மட்டும் இன்னும் நினைவில் இருக்கின்றது.

தொடரும்

(ஆசை யாரைத்தான் விட்டுது ...எனக்கும் தொடர் கதை சீ சீ..தொடர் கிறுக்கள் செய்ய ஆசை....ஆனால் முடியல்ல இப்ப கை நோகுது 2,3 நாளில் மிச்சத்தை அடிக்கிறேன்...தொடருகிறேன் :D:D )

ஜில் உங்களுக்குள் இப்படியா?????????? நல்ல எழுத்து நடை. உங்களால் முடியும். அடிச்சுத் தூள் கிளப்புங்கோ .கிறுக்கல் என்ற சொல்லாடல் புத்தனுக்கே உரியது என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். வாழ்த்துக்கள் ஜில். :):)

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புத்தர். அந்தக் காலத்துக்குக் கதைகளையும் அறியத்தான் வேண்டும். தமிழர் போராட்டத்துடன் ஒரு "முடிச்சு"ப் போடுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சில பல பழைய நினைவுகள் வருகுது.உதாரனம் 6 மணிச்சட்டம்.போன்றவை :)

எளிய நடையில் கதை நன்றாக இருக்கிறது.

ஜில் சேகுவரா குழப்ப நேரத்தில நடந்த உங்கள் சொந்த அனுபவத்தைத்தான் கதையாக எழுதுகிறீர்களா?

Edited by thappili

தொடருங்கள் புத்தர். அந்தக் காலத்துக்குக் கதைகளையும் அறியத்தான் வேண்டும். தமிழர் போராட்டத்துடன் ஒரு "முடிச்சு"ப் போடுவீர்களா?

அப்ப ஜில் = புத்தன் :o:o என்ரகடவுளே :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஜில் = புத்தன் :o:o என்ரகடவுளே :lol::lol:

if ( ஜில் == புத்தன் )

{

என்ரகடவுளே
:lol::lol:
;

}

else

{

:o:o
;

}

  • கருத்துக்கள உறவுகள்

ஜில் ஜில் அண்ணா நன்றாக இருக்கிறது தொடருங்கள்

  • தொடங்கியவர்

ஜில் உங்களுக்குள் இப்படியா?????????? நல்ல எழுத்து நடை. உங்களால் முடியும். அடிச்சுத் தூள் கிளப்புங்கோ .கிறுக்கல் என்ற சொல்லாடல் புத்தனுக்கே உரியது என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். வாழ்த்துக்கள் ஜில். :):)

நன்றிகள் கோமகன் ....புத்தன் ஜில் எல்லாம் நானே

தொடருங்கள் புத்தர். அந்தக் காலத்துக்குக் கதைகளையும் அறியத்தான் வேண்டும். தமிழர் போராட்டத்துடன் ஒரு "முடிச்சு"ப் போடுவீர்களா?

நன்றிகள் கிருபன் ..நிச்சம் முடிச்சுபோடுவன்...

சில பல பழைய நினைவுகள் வருகுது.உதாரனம் 6 மணிச்சட்டம்.போன்றவை :)

நன்றிகள் சஜீவன்....மதவாச்சியில் ரயில் தண்டவாளத்தை கழற்றிய சம்பவம் 1971 முதல் நடந்ததா பிறகா ..உங்களுக்கு நினைவில் இருந்தால் அறியத்தரவும்

எளிய நடையில் கதை நன்றாக இருக்கிறது.

ஜில் சேகுவரா குழப்ப நேரத்தில நடந்த உங்கள் சொந்த அனுபவத்தைத்தான் கதையாக எழுதுகிறீர்களா?

நன்றிகள் ஒம் சொந்த அனுபவத்தை கிறுக்கிறேன் :D

ஜில் ஜில் அண்ணா நன்றாக இருக்கிறது தொடருங்கள்

நன்றிகள்..உடையார்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஜில் தொடருங்கள்...1971 களில் இருந்த ஈழத்தை என் வயதுக்காரர்கள் பார்த்ததே இல்லை....உங்கள் எழுத்துக்களில் தரிசிக்கவையுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழில் தொடர்கதை காலம் போல் இருக்கிறது...புத்தனின் எழுத்து எப்பவுமே எனக்குப் பிடிக்கும் தொடர்ந்தும் எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ புத்தனை விட ஜில் தான் நல்லாக கதை எழுதுகின்றார்

1971 இல் நான் சிறுவன் உங்கள் மூலம் நிறைய அறிய ஆவலாக உள்ளது

நல்ல எழுத்துநடை ஜில்! ... அக்காலத்தில் சேகுவேராவின் ஆயுதப்புரட்சிக்கு, முதன் முதலில், விசுவமடுப்பகுதியில் (அப்போதுதான் காட்டை வெட்டி நாடாக்குகிறார்கள்) ஆயுத பயிற்சி இரகசிகமாக நடந்ததாகவும் கூறுகிறார்கள்! ... தொடருங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ஜில்.ஜே.வி.பி காரருக்கு தமிழ் மக்கள் பாதுகாப்பு கொடுத்தார்களாமே??

இந்த பதிவு தொடருக்கு புத்தனுக்கு எனது வாழ்த்துக்கள்..நான் வலை பதிவு ஆரம்பித்த 2006 ஆண்டளவில் நான் போட்ட விளையாட்டாக கிறுக்கிய பதிவு ஒன்று. உங்கள் இந்த தொடரோடு சம்பந்தமாய் இருப்பதால் அதை மீள் பார்வைக்காக கீழே இணைத்திருக்கிறேன் நன்றி.

இன்றைக்கு curfew ஆம்..ஊரடங்கு சட்டமாம்... பள்ளிக்கூடம் போன எங்களையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்கள்... அது ஏன் என்ன விசயம் என்ற புரியாத வயது... சிறிசுகளுக்கு மட்டுமல்ல சில பெரிசுகளுக்கும் கூட சரியான விளப்பமில்லை...

போர் சூழலே இல்லாத சூழலில் போர் கோலம் கொண்டிருக்கிறாங்கள். பொலிஸ் ஜீப் அறக்க பறக்க ஓடி கொண்டிருக்கிறது... சனமும் சாமன் சக்கட்டையை சேர்த்து கொண்டிருந்தது... உந்த இங்கை இருக்கிற பொலிஸ்க்காரர் இவ்வளவு காலமும் ஒரு துவக்கு தூக்கியதை கண்ணால் காணல்லை. பட்டன் பொல்லோட திரியத்தான் கண்டிருக்கிறன்.. மிஞ்சி மிஞ்சிப்போனால் பொலிஸ் சார்ஜன்ட் ஏர் கண்ணிலும் கொஞ்சம் தரம் கூடிய சிறிய துவக்கு வைச்சிருப்பர்... ஆக கூடி பொலிஸ் இன்ஸ்பக்ட்டர் சப் மிசின் கண் வைச்சிருந்தார் இல்லை. இதுக்குள்ளை சனம் என்னன்டா... இரண்டாம் உலக மகா யுத்தம் நடக்க போவது போல கிலி கொண்டு திரியுது....

சனத்துக்கு தனிய தனிய இருக்க பயமோ என்னவோ ... அக்கம் பக்கம் கூட்டமாக சேர்ந்து வீடுகளில் றேடியோ.. கேட்குதுகள்.... அது மாதிரி எங்கட வீட்டை கூட்டம்... எங்கட தாத்ஸ் ஒன்று ரிட்டையர்ட் உந்த சிங்கள ஊரெல்லாம் உத்தியோகம் பார்த்தது... காலையிலை பேப்பர் பார்க்காட்டில் சாப்பாடு இறங்காது உந்த சீவனுக்கு..... சும்மா சொல்ல கூடாது உந்த சீமானுக்கு உலக விசயமெல்லாம் கை விரலுக்குள்ளை...

றேடியோவும் ஒரு பக்கத்திலை ஏதோ சொல்லிக்கொண்டிருக்க.... அதே நேரத்தில் தாத்ஸும் தனரை பங்குக்கு வெட்டி விழுத்தி கொண்டிருந்தது.. சுத்தியிருக்கிற சனமும் உவற்றை பிரசங்கத்தை ஆ என்று கேட்டுக்கொண்டிருக்குது..

சேகுவரா என்ற இயக்கமாம்.. நாட்டிலை புரட்சி செய்து நாட்டை பிடிக்கிற நோக்கமாம்.. தெற்கிலை தங்காலை, அம்பாந்தோட்டை காலி மாத்தறை பகுதியிலுள்ள பொலிஸ் ஸ்ரேசன் எல்லாம பிடிச்சுட்டாங்களாம்... இப்ப அவங்கட கோஸ்டி ஒன்று தலைநகரை பிடிக்கவும் வடக்கை பிடிக்க வந்துட்டிருக்கிறாங்களாம்..... அவங்களும் புரட்சி கம்னியூசம் கதைச்சாலும் தமிழரை எல்லாம் எதிரியாக ... இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் ஒரு பகுதியாகத்தான் பார்க்கிறாங்களாம்.... அதோடை பொய் மெய் தெரியாது 55 வயதுக்கு மேல் உழைக்க இயலாதவன்களை எல்லாம் கொலை செய்யிற நோக்கமும் இருக்காம் என்று தாத்ஸ் சொல்லி முடிக்க......சுற்றி இருக்கிற பெரிசுகளுக்கு எல்லாம் முழி பிதுங்கி நிக்குதுகள்.... நிசர்ப்தம் அமைதி ... றேடியோ. மட்டும் அலறி கொண்டிருக்குது...

சிறிமா அரசாங்கம் இந்தியாவிடம் உதவி கேட்டு...இந்திய வான்படையின் உதவி கேட்டிருப்பதாகவும்... தீவிரவாதிகளை காடுகளில் தேடி கொண்டிருப்பதாகவும்... அரசாங்கத்தின் பூரண கட்டு பாட்டில் நாடு இருப்பதாகவும்...மக்கள் பீதி கொள்ள வேண்டாம் என்றும்... உண்மையும் பொய்யும் கலந்த செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தது.

ஆகா... இந்தியா... வந்தாங்கள் என்றால் அடக்கி போடுவாங்கள் என்று நிம்மதி பெருமூச்சு விட்டு சில பெரிசுகள் சொல்ல... தாத்ஸ் மீண்டும் தனது பிரசங்கத்தை தொடங்கியது.... உந்த சிறிமா தான் சேகுவரா இயக்கத்தின் தலைவன் றோகுண விஜவீராவை.. முந்தி ஆட்சியிலை இல்லாத நேரம் ரஸ்யாவிலுள்ள பல்கலைகழகத்தில் மருத்துவம் படிக்க உதவி செய்தவ.... அவன் அங்கை சீன ரஸ்ய அரசியல் சிக்குமாக்கு பிரச்சனைக்குள்ளை தலையை கொடுத்ததால் நாடு கடத்தப்பட ..நாட்டுக்கு வந்து புரட்சிக்கு தலைமை தாங்கிறான் . இப்ப வளர்தத பாம்பே கொல்ல வாற மாதிரி சிறிமாவை துரத்துது... என்று சொல்லி மூச்சு விடுது தாத்ஸ்

தூரத்தில் ஜீப் சத்தமோ...லொறி சத்தமோ கேட்க ... நடுநிசி தாண்டிய நிலையில் அவரவர் உட் பாதையூடாக தங்கள் வீடு சென்று கொண்டிருக்கினர்...

சேகுவரா என்ற பயப் பீதி யோடை அந்த காலம் கேள்விப்பட்ட பேர்.... தான் இன்று என்னால் விரும்படும் ஒரு பழைய புரட்சியாளன் சே(che) இன் முழுப்பெயர் தான் சே(che) குவூரா(quevara) என .. காலம் தான் தெரிய வைத்தது

மன்னிக்கவும் மேலை உள்ள பதிவை மீண்டும் தவறுதலாக இணைத்து விட்டேன் ..இப்பொழுது அழித்து விட்டேன்

Edited by sinnakuddy

  • தொடங்கியவர்

ஜில் தொடருங்கள்...1971 களில் இருந்த ஈழத்தை என் வயதுக்காரர்கள் பார்த்ததே இல்லை....உங்கள் எழுத்துக்களில் தரிசிக்கவையுங்கள்...

நன்றிகள் சுபேஸ்

இப்ப யாழில் தொடர்கதை காலம் போல் இருக்கிறது...புத்தனின் எழுத்து எப்பவுமே எனக்குப் பிடிக்கும் தொடர்ந்தும் எழுதுங்கள்

நன்றிகள் ரதி...... தொடர் கிறுக்களுக்கு ஜில்....குட்டிக்கிறுக்கலுக்கு புத்தன்

எனக்கென்னவோ புத்தனை விட ஜில் தான் நல்லாக கதை எழுதுகின்றார்

1971 இல் நான் சிறுவன் உங்கள் மூலம் நிறைய அறிய ஆவலாக உள்ளது

நன்றிகள் வாத்தியார் ...சின்னக்குட்டியும் சில தகவல்கள் தந்துள்ளார் .....

  • தொடங்கியவர்

நல்ல எழுத்துநடை ஜில்! ... அக்காலத்தில் சேகுவேராவின் ஆயுதப்புரட்சிக்கு, முதன் முதலில், விசுவமடுப்பகுதியில் (அப்போதுதான் காட்டை வெட்டி நாடாக்குகிறார்கள்) ஆயுத பயிற்சி இரகசிகமாக நடந்ததாகவும் கூறுகிறார்கள்! ... தொடருங்கள் ...

நன்றிகள் நெல்லையன்..... நான் நினைக்கிறேன இதில் அவ்வளவு உண்மை இல்லை என்றுதான்...ஜக்கிய இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் சிங்கள தொழிலாளிகள் அதிகாரவர்க்கத்து எதிராக போராட வேண்டும் என்று குரலெழுப்பிய ஒருசில தமிழ் ஆயுதகுழுக்கள் 1983 பின்பு இந்த கருத்தை சொன்னவர்கள் என்று நினைக்கிறேன் மற்றும் படி ஜெ.வி.பி மருந்துக்கும் தமிழர் பகுதியில் ஆயுத பயிற்சி எடுத்து இருப்பினமோ தெரியாது.....

அதே தமிழ் குழுக்கள் புலத்தில் இருந்து இதே கருத்தை வைத்து கட்டுரை எழுதி கொண்டிருக்கினம்

யாழ் கொழும்பு ரயில் வண்டியை தடம் புரட்டிய புரட்சிவாதிகள் .....மதவாச்சியை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் 1971 முதல் செய்த அரச விரோத செயல் அதிலும் அவர்கள் தமிழர் செல்லும் புகையிரதத்தைதான் தெரிவு செய்திருந்தார்கள்....இவர்களை நம்பி நாம் ஒற்றுமையாக இவர்களுடன் சேர்ந்து புரட்சி செய்ய வேணுமாம் ......

1973,1974 களில் மிளகாய் தோட்டம் செய்ய யாழில் இருந்து பலர் விசுவமடு சென்றவர்கள் ..வெளிக்கிடடி விசுவமடுக்கு என்ற நாடகம் அந்தகாலகட்டதில் பிரபமாகியிர்ந்தது

  • தொடங்கியவர்

தொடருங்கள் ஜில்.ஜே.வி.பி காரருக்கு தமிழ் மக்கள் பாதுகாப்பு கொடுத்தார்களாமே??

நன்றிகள் நுணா உதுவும் அந்த ஜக்கிய இலங்கைக்குள் புரட்சி செய்யிற உத்தமர்களின் கருத்துதான்....

  • தொடங்கியவர்

...

சேகுவரா என்ற பயப் பீதி யோடை அந்த காலம் கேள்விப்பட்ட பேர்.... தான் இன்று என்னால் விரும்படும் ஒரு பழைய புரட்சியாளன் சே(che) இன் முழுப்பெயர் தான் சே(che) குவூரா(quevara) என .. காலம் தான் தெரிய வைத்தது

அந்த காலகட்டத்தில் ஜெ.வி.பி என்ற பெயரைவிட சேகுவாரா என்ற பெயர்தான்பிரபலம்.....நன்றிகள் சின்னக்குட்டி நான் எழுத எண்ணியவற்றில் அரைவாசியை நீங்கள் எழுதிவிட்டீர்கள் போல இருக்கிறது..ஆனபடியால் இத்தொடர ஜில் சின்னக்குட்டி தொடர் என்று அழைப்போம்.. :D:D

இன்றைய ஜேவிபி இனர் மீது கடுகளவு கூட மரியாதையில்லை. முழுக்க கள்ளப் பயல்கள்.

ஒருமுறை சிங்கள நகர் மீதான தாக்குதல் நடந்த அன்று, அந்நகர் ஊடாக செல்லவேண்டிய நாங்கள் பயணத்தை இடையில் நிறுத்த வேண்டி வந்தது. அப்பொழுது பழைய சேகுவரா போராளி ஒருவர், ஏழ்மையிலும் மிகவும் உதவினார். 71 கிளர்ச்சியின் முன் வவுனியா மாவட்டத்தில் இருந்தவராம்.

  • கருத்துக்கள உறவுகள்

if ( ஜில் == புத்தன் )

{

என்ரகடவுளே
:lol::lol:
;

}

else

{

:o:o
;

}

case

when (ஜில் = புத்தன்)

then 'என்ரகடவுளே :o :o '

else :o :o

end

தொடர்ந்து எழுதுங்கோ ஜீல் என்ற புத்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜில், உங்கள் தொடர்கதையை இன்று தான் பார்த்தேன்.

அதிலும் ஜே.வி. பி. ஐ அடக்க ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா, இந்தியாவின் உதவியுடன் எப்படி அடக்கினார் என்பதையும் அறிய ஆவலாய் உள்ளேன்.

எமக்கு பாவித்தமாதிரி.... ஜே.வி. பி.யையும் அடக்க நச்சுக் குண்டுகளை இந்தியா பாவித்ததா....

அல்லது சிங்களைவனை எம்மை விட உயர்ந்ததாக நினைத்து மென்மையான அணுகு முறையை கையாண்டார்களா?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நாங்கள் எல்லோரும் பயந்து போய் அப்படியே இருந்தோம்,சிறிது நேரத்தின் பின்பு முனகல் சத்தம் கேட்டது,நான் கண் அயர்ந்துவிட்டேன்.அடுத்த நாள் காலையில்தெரியவந்தது அரச திணைக்கள வாகன சாரதி பாஸ் இல்லாமல் வாகனத்தை செலுத்தி வந்திருக்கிறார் அதனால் இராணுவத்துடன் வாக்குவாதப்பட்டிருக்கிறார் கோபமடைந்த இராணுவத்தினர் அவரை அடித்துவிட்டுசென்றுள்ளனர் இராணுவத்தினர் சென்ற பின்பு அயலவர்கள் சாரதிக்கு சில முதலுதவி செய்து இரவு தங்கவைத்து காலயில்தான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றவர்கள்

"யாரப்பா உதுகளின்ட தலைவன் இப்ப என்னத்துக்கு சண்டையை தொடங்கினவனாம்,பிள்ளைகளுக்கு படிப்பு இல்லை ,கடையும் ஒன்றும் திறக்கிறார்கள் இல்லை,அரிசி, மா எல்லாம் முடிஞ்சு போய்விட்டது இன்னும் இரண்டு நாளுக்கு இப்படியே இருந்தால் எல்லோரும் பட்டினியாகத்தான் இருக்க வேண்டும்" என அம்மா புலம்பிக்கொண்டிருந்தா அவவின் பிரச்சனை அவவுக்கு,"எந்த நாசமாய் போனவன் உதை செய்தவன் என அம்மா கேட்க "உந்த பேப்பரில எல்லாம் விபரமாய் போட்டிருக்கு எடுத்து வாசியும்" என்றார் அப்பா.

" உதுகளை வாசிக்க நேரமில்லை"என்றபடியே அடுப்படிக்கு சென்றவர் மீண்டும் திரும்பி வந்து"உதுகளின்ட பெரியவன் யார்" என வினாவினார்.

"ரோகன விஜவீரா ,(சீனாவுக்கோ ரஸ்யாவுக்கோ) மருத்துவ படிப்பு படிக்க போய்விட்டு அங்கே செகுவாராவின் கொள்கை யுடன் ஈடுபாடு வரவே புரட்சி மூலம் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார்.மக்கள் விடுதலை முன்னனி தான் அந்த அமைப்பின் பெயர் ,மக்கள் ஆட்சியை உருவாக்க வேண்டுமாம் ,அதாவது உழைக்கும் மக்களின் ஆட்சியை உருவாக்க வேண்டுமாம் என்று சொல்லுகிறான் "என அப்பா விளக்கம் கொடுத்தார். அம்மாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை போல இருந்தது."என்ன இருந்தாலும் சின்ன பிள்ளைகளை பிடிச்சு துவக்கு தூக்க விட்டிருக்ககூடாது பெத்ததுகள் என்னபாடுபட்டிருக்கிங்கள் எனக்கே வயிறு ஒருமாதிரியிருக்கு என கண் கலங்கத்தொடன்கினா..

பத்திரிகைகளில் பலவித செய்திகள் வரத்தொடங்கின,பல செய்திகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தன.

'டொக்டர் சுட்டுக்கொலை பொக்கட்டிலிருந்து வாகனசாரதி பத்திரத்தை எடுக்கும் பொழுது இராணுவம் சுட்டது,ஆயுதத்தை எடுக்கின்றார் என்ற பயத்தில் இராணுவம் சுட்டது'...

'சரணடைய சென்ற இளைஞன் சுட்டுக்கொலை'

'கதிர்காமத்தில் ஆற்றில் பல சடலங்கள் மிதந்து சென்றதை கண்டவர் கூறியது'

'அன்புலன்ஸ் வண்டியில் வந்த ஜவர் கொலை 'அன்புலஸ் வண்டியை நிறுத்தாமல் சென்றதால் இராணுவத்தினர் துப்பாக்கி பிர்யோகம் செய்தனர்..

'தாயார் மகனை காட்டி கொடுத்தார்'...

'பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றினால் 65 வயதுக்கு மேற்பட்டோர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பார்கள்' இவ்வாறன செய்திகள் அரச பத்திரிகைகளில் வெளியிட்டார்கள்.

அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட ஒருபத்திரிகை நிறுவனம் பிற்காலத்தில் தடை செய்யப்பட்டது.நான் நினைக்கிறேன் சன்டே டைம்ஸ் என்று...அன்புலன்ஸ் வண்டியில் நடந்த சம்பவத்தை படம் எடுத்து போட்ட படியால் தான் அந்த பத்திரிகை தடை செய்யப்பட்டதாக பின்பு பலர் கதைத்தனர்....

இரண்டு மாதங்களின் பின்பு நாட்டு நிலமைகள் கட்டுப்பாட்டினுள் வந்தது.இருந்தாலும் நாலு பேருக்கு மேல் கூடி கதைப்பதோ,பாடசாலை முடிந்தவுடன் ஒன்று கூடுதலோ,பிரத்தியேக வகுப்புக்கள் வைப்பதையோ தடை செய்திருந்தது அரசாங்கம்.

எனது பூட்டனார் கேகாலை மாவட்டத்தில் பெரிய இறப்பர் தோட்டம் வைத்திருந்தவர். 1971 ஆம் ஆண்டளவில் அப்பம்மாவும் சித்தப்பாவும் அங்கு வாழ்ந்து வந்தார்கள்.அங்கு பல சிங்கள தொழிலாளிகள் வேலை செய்து வந்தார்கள். அவர்களின் ஒருமகன் ஆட்களுடன் இவர்களின் வீட்டை வந்து வீட்டில் இருந்த துவக்குகளை (அந்த காலத்தில் வேட்டை ஆடுவதற்க்கு அனுமதி பத்திரம் பெற்ற துவக்குகளை வைத்திருக்கமுடியும்)ஆயுதத்தை காட்டி விரட்டி தங்களுடைய ஆட்சி மலரப்போகுது என்று சொல்லி அங்கிருந்த பணத்தையும் எடுத்து சென்றதாக அப்பம்மா கடிதம் போட்டிருந்தா.

நீண்ட தூர போக்குவரத்துக்கள் நடை பெற தொடங்கின கொழும்பிலிருந்து எனது அண்ணரும் சித்தப்பாவும் அவரது மகனும் வந்தார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டதட்ட ஜேவிபியின்ட ஆரம்ப போராட்டத்தை ஒத்து தான் எங்கட போராட்டமும் இருக்குது...ஜில் தொடர்ந்து எழுதுங்கள்.தெரியாத விடயத்தை தெரிந்து கொள்ளக் கூடியதாய் உள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.