Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாணசபையை ஏற்க மறுத்த புலிகள் இறுதியில் எதைச் சாதித்தனர்? – பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கேள்வி

Featured Replies

மகாணசபையை ஏற்க மறுத்த புலிகள் இறுதியில் எதைச் சாதித்தனர்? – பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கேள்வி

மாகாணசபையை ஏற்க மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதியில் எதைச் சாதித்தார்கள் என்று பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் கேள்வி எழுப்பினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே பேராசிரியர் இப்படிக் கேள்வி எழுப்பினார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் கலந்துரையாடல் அறையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வீரகேசரிப் பத்திரிகையின் ஆசிரியர் வீ. தேவராசா கலந்து கொண்டு உரையாற்றினார். மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் கேள்விகளையும் முன் வைத்தார்கள்.

மகாணசபைத் தேர்தலை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதன் வாயிலாக வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் கோட்பாட்டுக்கு கைவிடும் நிலை வருமா எனவும் தனி ஈழத்திற்காக போராடிய நாங்கள் அதிகாரங்களற்ற மாகாண சபைக்கு இணங்குவது சர்வதேச சமூகத்தில் எமக்கு பின்னடைவை உருவாக்குமா எனவும் அரசு அதைப் பிரசாரப்படுத்துமல்லவா எனவும் மாணவன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

குறித்த கேள்விக்கு பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் தானாகவே எழுந்து கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்... மாகாண சபையை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்தன் மூலம் இறுதியில் எதைச் சாத்தித்தார்கள்? இந்தத் தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் அதிகாரத்தை நாம் இழக்க நேரிடும்.

இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. இவ்வாறன இளைஞர்கள் கூட்டமைப்புடன் இணைந்து முடிவுகளை எடுத்து இணைந்து செயற்பட வேண்டும். அரசியலை வெறும் உணர்ச்சியை வைத்துக் கொண்டு மேற்கொள்ள முடியாது பிட்டார். புலிகள் மாகாண சபையை நிராகரித்ததைப் போல தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

globaltamilnews

மாணவர்கள் கேள்விகள் கேட்பதும் இப்படி கலந்துரையாடல்களில் ஈடுபடுவதும் வரவேற்கத்தக்கது, ஆரோக்கியமானது. ஆனால் பல கேள்விகளை இந்த மாணவர்கள் விரும்பினாலும் கேட்கமுடியாத உரிமைகளையே அவர்கள் கொண்டுள்ளனர்.

மகாணசபைத் தேர்தலை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதன் வாயிலாக வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் கோட்பாட்டுக்கு கைவிடும் நிலை வருமா எனவும் தனி ஈழத்திற்காக போராடிய நாங்கள் அதிகாரங்களற்ற மாகாண சபைக்கு இணங்குவது சர்வதேச சமூகத்தில் எமக்கு பின்னடைவை உருவாக்குமா எனவும் அரசு அதைப் பிரசாரப்படுத்துமல்லவா எனவும் மாணவன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

மகாணசபைத் தேர்தலை சிங்களம் பின்போடா உள்ளதாக முன்னர் செய்திகள் வந்திருந்தனவே. அந்த நிலையில் அதற்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை வைத்தே கூட்டமைப்பும் தாயகமக்களும் அதை ஏற்பதா இல்லையா என விவாதிக்கலாம்.

பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் தான் இதை ஒழுங்குபடுத்தினாரா? பின்புலம் கொழும்பாக இருக்கும்.

குறித்த கேள்விக்கு பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் தானாகவே எழுந்து கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்... மாகாண சபையை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்தன் மூலம் இறுதியில் எதைச் சாத்தித்தார்கள்? இந்தத் தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் அதிகாரத்தை நாம் இழக்க நேரிடும்.

தமிழர் அரசியல் கட்சிகள் எதையுமே சிங்களத்திடம் இருந்து பெறத்தவறியமையே ஆயுத போராட்டத்திற்கு வித்திட்டது என்பது பேராசிரியர் வேணுமென்றே மறந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய யுத்தத் தோல்வியில் இந்தக் கேள்வி ஏதோ ஒரு மதிப்புமிக்க.. கேள்வி போன்று தோன்றும்.. ஏன் தோன்றச் செய்யப்படும்.

இதே பேராசிரியரிடம் எனது கேள்வி.. மாகாண சபைகளை ஏற்றுக் கொண்டதால்.. தென்பகுதி மக்கள் கண்டது எதை..???! வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபைகயை புலிகள் தவிர மற்றவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த போதும் அவர்கள் 1987 முதல்.. 1990 வரை கண்டவை எதை.. 1990 இல் இருந்து முக்கிய நகரங்கள் சிறீலங்காவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்ற போதும்... ஏன் வடக்குக் கிழக்கு இணைந்த மகாணா சபை பற்றிய இயக்கம் குறித்து இவர்கள் உட்பட சிங்கள.. இந்திய அரசுகள்.. கவலைப்பட்டிருக்கவில்லை.. அதுபோக.. மலையக மக்கள் இந்த மாகாண சபைகளூடு பெற்ற அரசியல்.. சமூக.. பொருண்மிய உரிமைகள் என்ன..??!

சும்மா.. புலிகள் நிராகரித்ததனால் தான் வடக்குக் கிழக்கு மாகாண சபை இயங்கவில்லை என்பது ஒரு சாட்டு. புலிகள் அதை நிராகரித்த போதும்.. இந்திய வல்லரசின் ஆதரவோடு.. அதற்கு என்று ஒரு முதலமைச்சர் இருந்தார்... பிறகு அவரும் தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு இந்தியப் படைகளோடு கப்பலேறினார். இன்று அவர் சிறீலங்காப் படைகளின் உதவியோடு கொழும்பில் உள்ளார். முடிந்தால் அவர் இந்திய அரசோடும்.. சிங்களப் படைகளோடும் சேர்ந்து மீண்டும் வடக்கிக் கிழக்கு இணைந்த மாகாண சபையை இயக்கட்டும் பார்க்கலாம். அதன் மூலம்.. தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை தீர்க்கட்டும் பார்க்கலாம்.

அதிகாரங்களற்ற வெறும் பெயரளவிலான அலகுகளை வைச்சுக் கொண்டு சிங்களவர்களே எதனையும் தங்கள் மக்களுக்குச் செய்ய முடியவில்லை என்று அழுகிறார்கள்.. கிழக்கின் முதல்வர்.. தனக்கு கட்டிடத்திற்கு பெயர் அடிக்கிற அளவு கூட அதிகாரம் கிடையாது என்கிறார்.. இதற்குள்.. இவர் ஒருத்தர்.. பேராசிரியாராக வேற அடைமொழி போட்டிருக்கிறார்.. இப்படி ஒரு புதிய இல்லாத கண்டுபிடிப்பை செய்துவிட்டுள்ளார்.

புலிகள் மாகாண சபைகளை நிராகரித்ததன் மூலம்.. அவர்கள் மாகாண சபைகள் என்பவை.. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்க்க முடியாத தீர்வைக் கொண்டவை என்பதை அந்த திட்டம் கொண்டு வரப்பட்டதுமே உலகிற்கு சொல்லிவிட்டார்கள். மாகாண சபைகள் என்ற அதிகாரமற்ற வெறும் பத அலகுகள் மூலம்.. தமிழ் மக்களை ஏமாற்ற நாடகம் ஆடப்படுகிறது என்று சொல்லிவிட்டார்கள். புலிகள் சொன்னதை இன்று சிங்கள மக்களும் சொல்கிறார்கள். முஸ்லீம்களும் சொல்கிறார்கள்.. மலையக மக்களும் சொல்கிறார்கள்.. கிழக்கு மக்களும் சொல்கிறார்கள்.. ஏன் முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண சபை முதல்வர் வரதராஜப் பெருமாளும் சொல்கிறார்.

ஆனால் அன்று 1987 இல் மாகாண சபைகளை விழுந்தடித்து.. ஏற்றுக் கொண்டு.. மற்றவர்கள்.. மலையக.. மற்றும் வடக்குக் கிழக்கு மக்களுக்கு செய்தவை என்ன..??! ஏன் தற்போதும் 13+, அதிகாரப்பரவாலாக்கம்.. சம்ஷ்டி.. சுயநிர்ணய உரிமை.. பொலிஸ் காணி அதிகாரங்கள் கேட்கினம். (ஏன் இன்று சிங்கள அரசில் அங்கம் வகிக்கும் டக்கிளஸ் தேவானந்தா என்ற தேவாங்கு கூட... மத்தியில் கூட்டாட்சி வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில்... கவனிக்கவும் மாகாண சபையில் அல்ல... மாநிலத்தில் சுயாட்சி கேட்டவர் பாருங்கோ.). இதெல்லாம் அற்புதமான மாகாண சபைக்குள்ளால கிடைச்சிருக்கும் என்றால் ஏன் அழுகினம்..????! அதெல்லாம் கிடைக்கப் பெற்றிருந்தால்.. ஏன் 1987 இலேயே.. புலிகளை அரசியல் ரீதியில் வெல்ல முடியல்ல..! ஏன் இராணுவத் தீர்வை தேட வேண்டி சிங்களத்துக்கும் இந்தியத்திற்கும் தேவை வந்தது. இது குறித்தும் யாழ் பேய் ஆசிரியர்கள் கொஞ்சப் பேர் விளக்கினால் நன்று..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் போன்றவர்கள் இப்போதெல்லாம் கடவாய் கிளியும் வரை கத்துபவர்கள் கடந்தகாலங்களில் என்னத்தை செய்தார்கள் இவர்கள் எதோ ஒருவகையில் இலங்கை அரசின் அடிவருடிகளகத்தான் செயற்ப்பட்டிருப்பார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய யுத்தத் தோல்வியில் இந்தக் கேள்வி ஏதோ ஒரு மதிப்புமிக்க.. கேள்வி போன்று தோன்றும்.. ஏன் தோன்றச் செய்யப்படும்.

இதே பேராசிரியரிடம் எனது கேள்வி.. மாகாண சபைகளை ஏற்றுக் கொண்டதால்.. தென்பகுதி மக்கள் கண்டது எதை..???! வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபைகயை புலிகள் தவிர மற்றவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த போதும் அவர்கள் 1987 முதல்.. 1990 வரை கண்டவை எதை.. 1990 இல் இருந்து முக்கிய நகரங்கள் சிறீலங்காவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்ற போதும்... ஏன் வடக்குக் கிழக்கு இணைந்த மகாணா சபை பற்றிய இயக்கம் குறித்து இவர்கள் உட்பட சிங்கள.. இந்திய அரசுகள்.. கவலைப்பட்டிருக்கவில்லை.. அதுபோக.. மலைய மக்கள் இந்த மாகாண சபைகளூடு பெற்ற அரசியல்.. சமூக.. பொருண்மிய உரிமைகள் என்ன..??!

சும்மா.. புலிகள் நிராகரித்ததனால் தான் வடக்குக் கிழக்கு மாகாண சபை இயங்கவில்லை என்பது ஒரு சாட்டு. புலிகள் அதை நிராகரித்த போதும்.. இந்திய வல்லரசின் ஆதரவோடு.. அதற்கு என்று ஒரு முதலமைச்சர் இருந்தார்... பிறகு அவரும் தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு இந்தியப் படைகளோடு கப்பலேறினார். இன்று அவர் சிறீலங்காப் படைகளின் உதவியோடு கொழும்பில் உள்ளார். முடிந்தால் அவர் இந்திய அரசோடும்.. சிங்களப் படைகளோடும் சேர்ந்து மீண்டும் வடக்கிக் கிழக்கு இணைந்த மாகாண சபையை இயக்கட்டும் பார்க்கலாம். அதன் மூலம்.. தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை தீர்க்கட்டும் பார்க்கலாம்.

அதிகாரங்களற்ற வெறும் பெயரளவிலான அலகுகளை வைச்சுக் கொண்டு சிங்களவர்களே எதனையும் தங்கள் மக்களுக்குச் செய்ய முடியவில்லை என்று அழுகிறார்கள்.. கிழக்கின் முதல்வர்.. தனக்கு கட்டிடத்திற்கு பெயர் அடிக்கிற அளவு கூட அதிகாரம் கிடையாது என்கிறார்.. இதற்குள்.. இவர் ஒருத்தர்.. பேராசிரியாராக வேற அடைமொழி போட்டிருக்கிறார்.. இப்படி ஒரு புதிய இல்லாத கண்டுபிடிப்பை செய்துவிட்டுள்ளார்.

புலிகள் மாகாண சபைகளை நிராகரித்ததன் மூலம்.. அவர்கள் மாகாண சபைகள் என்பவை.. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்க்க முடியாத தீர்வைக் கொண்டவை என்பதை அந்த திட்டம் கொண்டு வரப்பட்டதுமே உலகிற்கு சொல்லிவிட்டார்கள். மாகாண சபைகள் என்ற அதிகாரமற்ற வெறும் பத அலகுகள் மூலம்.. தமிழ் மக்களை ஏமாற்ற நாடகம் ஆடப்படுகிறது என்று சொல்லிவிட்டார்கள். புலிகள் சொன்னதை இன்று சிங்கள மக்களும் சொல்கிறார்கள். முஸ்லீம்களும் சொல்கிறார்கள்.. மலையக மக்களும் சொல்கிறார்கள்.. கிழக்கு மக்களும் சொல்கிறார்கள்.. ஏன் முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண சபை முதல்வர் வரதராஜப் பெருமாளும் சொல்கிறார்.

ஆனால் அன்று 1987 இல் மாகாண சபைகளை விழுந்தடித்து.. ஏற்றுக் கொண்டு.. மற்றவர்கள்.. மலையக.. மற்றும் வடக்குக் கிழக்கு மக்களுக்கு செய்தவை என்ன..??! ஏன் தற்போதும் 13+, அதிகாரப்பரவாலாக்கம்.. சம்ஷ்டி.. சுயநிர்ணய உரிமை.. பொலிஸ் காணி அதிகாரங்கள் கேட்கினம். இதெல்லாம் அற்புதமான மாகாண சபைக்குள்ளால கிடைச்சிருக்கும் என்றால் ஏன் அழுகினம்..????! அதெல்லாம் கிடைக்கப் பெற்றிருந்தால்.. ஏன் 1987 இலேயே.. புலிகளை அரசியல் ரீதியில் வெல்ல முடியல்ல..! ஏன் இராணுவத் தீர்வை தேட வேண்டி சிங்களத்துக்கும் இந்தியத்திற்கும் தேவை வந்தது. இது குறித்தும் யாழ் பேய் ஆசிரியர்கள் கொஞ்சப் பேர் விளக்கினால் நன்று..! :lol::D

இவற்றிற்கெல்லாம் அவருக்கு பதில் தெரியும் நெடுக்ஸ்

ஆனால் சொல்லமாட்டார். சொல்லமுடியாது. இவர்வாயால் அதை சொல்லவும் வேண்டாம். மக்களுக்கு தெரியும். பதில் விரைவில் கிடைக்கும்.

டக்லஸ் மாபெரும் தமிழ் மன்னன் என்பது போன்ற பேராசிரியர்களின் அறிக்கைகளைப்பார்க்க பரிதாபமாக இருக்கிறது. ஒரு பேராசிரியர் எப்படியெல்லாம் பேசக்கூடாதோ அப்படியான வரலாற்றுத்திரிவுகளை இவர்கள் பேசக்காரணமென்ன?

அதுவும் புலிகளின் பிரசன்னமில்லை என்பதைத்தவிர வேறென்ன?

இது குறித்தும் யாழ் பேய் ஆசிரியர்கள் கொஞ்சப் பேர் விளக்கினால் நன்று..! :lol::D

(பேய் ஆசிரியர்கள்) : எங்கள் தலைவிதி, பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், பேராசிரியர் ஹூல், பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்...

(பொய் ஆசிரியர்கள்) : அவர்களுக்கு பேராசிரியர் பீரிஸ், பேராசிரிய குணரத்தினா, பேராசிரிய விஜேசிங்க ....

மொத்தத்தில் யாருமே பேராசிரியர்கள் இல்லை :o

இவர்கள் முன்னர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு என்ற ஒன்றின் பெயரால்.. ஒட்டுக்குழு விசுவாசி.. சிறிதரன் தலைமையில் இயங்கியவர்கள். எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது.. சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையையை சிங்களத் தளபதி.. ரத்வத்த களத்தில் நடத்த.. அங்கு புலிகள் மீது இடைவிடாது குற்றங்களை சுமத்தி.. சந்திரிக்கா - ரத்வத்த செய்து வந்த போர்க்குற்றங்களை அப்படியே உலகிற்கு விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் காட்டி.. அறிக்கைப் போர் செய்து மறைத்தவர்கள் இவர்கள்.

செம்மணிப் படுகொலை தொடர்பில் இன்று வரை மூச்சு விடாத.. மனித உரிமைகள் தான் இவர்கள் பேசியவை. புலிகள் மக்களை விரட்டி அடித்து வன்னிக்கு கொண்டு போகிறார்கள் என்று அறிக்கை அறிக்கையாக கொடுக்க.. ஐநா பொதுச் செயலராக அப்போது இருந்தா பூற்றோஸ் காலி மட்டும்.. அகதிகள் பிரச்சனை குறித்து விடுதலைப்புலிகளின் கருத்தோடு இணங்கி.. கரிசணை வெளியிட்டார். அதற்கு இவர்களும் கதிர்காமரும் ஐநா நுளம்புக்கு மருந்தடிக்கிறதோட அதன் பணிகளை சிறீலங்காவிற்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்கள்.

நாகர்கோவிலில் பள்ளி மீது குண்டு வீசி எம் பிஞ்சுகள் மாய்ந்த போதும்.. நவாலி தேவாலயம் மீது குண்டு வீசி எம் மக்கள் கொல்லப்பட்ட போதும்.. மடுவில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் மீது குண்டு வீசிக் கொன்ற போதும்.. புதுக்குடியிருப்பில்.. குண்டு வீசிக் கொன்ற போதும்... இவர்கள் மனித உரிமைகள் பற்றிப் பேச முன்வரவில்லை. மாறாக புலிகள் மீது அவற்றிற்கும் குற்றம் சுமத்தினார்கள். ஆனால்... கொழும்பில் ஆயுதக் குழு டக்கிளசின் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெரும் மனித உரிமை மீறல்களைக் கண்டவர்கள் இவர்கள்..?!

புலிகள் யாழ்ப்பாணத்தில் பொது மக்களின் வீடுகளை குண்டு வைத்து தகர்த்து யாழ்ப்பாணம் பாலைவனமாகவுள்ளது என்று அறிக்கை விட்டவர்கள் இவர்கள். ஆனால் உண்மையில் நடந்தது.. ரத்வத்தையின் வெண்புறா தாங்கிய சிங்கள டாங்கிகள்.. பெரும் சொத்தழிவை ஏற்படுத்தி யாழ்ப்பாண நகரை கைப்பற்றின. அன்று புலிகளின் சமயோசித நகர்வால் தான்.. முன்னொரு முள்ளிவாய்க்கால் தவிர்க்கப்பட்டது. அன்று யாழ் நகரில் இருந்து அந்த மக்களை வெளியேற்றி தென்மராட்சிக்கும்.. வன்னிக்கும் நகர்த்தி இராவிட்டால்.. முள்ளிவாய்க்காலின் முதல் வடிவத்தை அன்று யாழ் நகர் கண்டிருக்கும். அதை இதே சிங்களத் தலைமைகள் செய்திருக்கும். இன்று நல்லவள் வேடம் போடும் சந்திரிக்கா செய்த போர்க்குற்றங்களை நம்மவர்களும் மறந்திருக்கலாம்... ஏன் மன்னித்தும் இருக்கலாம். ஆனால் செம்மணியுள்.. நவாலியில்..நாகர்கோவிலில்.. மடுவில்.. புதுக்குடியிருப்பில்... என்று பல இடங்களிலும் காவு கொள்ளப்பட்ட எம் மக்களின் ஆத்மாக்கள் மறந்திரா..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாகாண சபை தீர்வு கூட புலிகளினது அல்ல, இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்ட தீர்வாகும்.

இன்று காங்கிரஸ் தமிழருக்கு எதிரான ஒரு கட்சியாக தமிழர்களால் பார்க்கப்படுகிறது, இலங்கை விடயத்தில் மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் அதிக முனைப்பு காட்டும் ஒரு கட்சியாகும்,ஆரம்பத்திலிருந்தே சரியாக சென்று கொண்டிருந்தத காங்கிரசின் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை சாதுரியமாக திசை திருப்பிய ஜே ஆர் ஜெயவர்த்தனாவும் அதன் பின் அனுபவமற்ற ராஜீவ் காந்தியை தவறாக வழிநடத்திய இந்திய கொள்கை வகுப்பாளர்களாலும் எமது தீர்வு மாகாண சபைக்குள் முடங்கியுள்ளது.

ஆனாலும் இதே காங்கிரஸ் எமது அபிலாசைகளை அங்கீகரிக்கும் நிலை உருவாகும், அதனை உருவாக்கித்தரும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு அதிலும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு நிச்சயமாக உள்ளது,

இலங்கை போர் முடிந்த உடனேயே உடனடியாக சீனாவுடன் ஒரு நட்புறவு ஒப்பந்த்தம் ஒன்றை மேற்கொள்ள முயன்றது ஆனால் அது பற்றி எந்த தகவலும் பின்னர் வரவில்லை, ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் கோத்தபாய சரத்துக்கேதிராக ஒரு வாக்கு மூலம் கொடுத்திருந்தார் அதாவது இந்திய அச்சுறுத்தலுக்கு எதிராக இலங்கை படையினரை பலப்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடை வைத்திருந்தார் என்பதாகும் , அது உண்மையாகவும் இருக்கும் ஏனெனில் போரிற்கு பின் தமிழர்களை கொண்ட ஒரு படையணியை உருவாக்க போவதாக சரத் கூறியிருந்தார். இதன் உள்ளர்த்தம் என்ன?

பிரச்சனைக்குரிய தமிழர்களை கொண்ட தமிழர்களை கொண்டு ஏன் ஒரு படையணி உருவாக வேண்டும்?

எல்லாவற்றையும் விட இலங்கை இந்திய ஒப்ந்ததிற்கு இலங்கை இணங்காவிட்டால் அது நாட்டினை பிளவுபடுத்துவதிலேயே முடிந்திருக்கும் என இலங்கையரசின் ஒரு ஆவணமான அக்கொடிங் அன் வித்ரோவல் கூறுகிறது.அதனை செய்ய முயன்றது காங்கிரசே.

மாணவரின் சரியான கேள்விக்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

(பேய் ஆசிரியர்கள்) : எங்கள் தலைவிதி, பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், பேராசிரியர் ஹூல், பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்...

(பொய் ஆசிரியர்கள்) : அவர்களுக்கு பேராசிரியர் பீரிஸ், பேராசிரிய குணரத்தினா, பேராசிரிய விஜேசிங்க ....

மொத்தத்தில் யாருமே பேராசிரியர்கள் இல்லை :o

இவர்கள் படித்த சுயநலத்தின் ஒட்டு மொத்த பிள்ளைகள்.

Edited by தமிழ் அரசு

இவர்கள் முன்னர் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பு என்ற ஒன்றின் பெயரால்.. ஒட்டுக்குழு விசுவாசி.. சிறிதரன் தலைமையில் இயங்கியவர்கள். எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது.. சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையையை சிங்களத் தளபதி.. ரத்வத்த களத்தில் நடத்த.. அங்கு புலிகள் மீது இடைவிடாது குற்றங்களை சுமத்தி.. சந்திரிக்கா - ரத்வத்த செய்து வந்த போர்க்குற்றங்களை அப்படியே உலகிற்கு விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் காட்டி.. அறிக்கைப் போர் செய்து மறைத்தவர்கள் இவர்கள்.

இன்று இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்திய விருப்பத்திற்கு அமைய தீர்வுகள் தமிழர் தரப்புக்கு கொடுத்துவிட்டதாக கோத்தா கூறியுள்ளான்.

அதாவது புலிகள் அழிந்ததே தீர்வு, அதுவே தமிழர் தீர்வும் என கூறியுள்ளான்.

அவனையோ இல்லை சிங்களத்தையோ எந்த விதத்திலும் எதிர்த்து போராட முடியாத நிலையில் தவறை பழியை புலிகள் மீது போடுவதே கலையாகி விட்டது இந்த வாய்ச்சொல் வீரர்களுக்கு.

புலிகள் சாதித்ததை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்று அதை ஒரு அரசியல் வெற்றியாக மாற்ற தவறியவர்கள் நாங்கள், அதற்கு ஒரு காரணம் இந்த பச்சோந்தி கூட்டம்.

பேராசிரியர் என்றால் எந்தவொரு விடயத்திலும் ஒரு ஆராய்ச்சி இருக்கும்..... இவர் முட்டாள் பேராசிரியரா இல்லை சுயநல கைக்கூலியா...?

மணவன் ஒருவனின் கேள்விக்கு பதிலாக "மகாணசபையை ஏற்க மறுத்த புலிகள் இறுதியில் எதைச் சாதித்தனர்?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன். இவரின் கல்விப்பிரிவு எது என்பது தெரியாது. அது அரசியல் அல்லது சமூகவியலாகவிருந்தால் மிகவும் வருத்தபட வேண்டிய விடயம். இவர் தன்னிடம் கேட்காத கேள்விக்கு பதிலளித்தது மட்டுமின்றி சற்றும் தொடர்பில்லாத, ஜனநாயகோட்பாடுகளை புறம் தள்ளிய ஒரு பதிலை அளித்துள்ளர். கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு எவ்வளவு நம்பிகையும் அபிமானமும் இருக்கலாம். ஆனால் யாரும் இன்னொருவரை கேள்வி எதுவுமின்றி கூட்டமைப்பை பின்பற்று என்று ஆணையிட முடியாது. இவர் பேராசிரியராய் இருக்க தரமற்றவர் ஏன் எனில் இவருக்கு மாணவர்கள் கேள்வி கேட்பதை சகித்துகொள்ள முடியாது. தான் தனது கௌரவத்தை இழந்து உணர்சிவயப்பட்டு கூட்டத்தின் இடைநடுவில் எழுந்து நின்றது மட்டுமல்லாது, உண்மைக்கு புறம்பாய் மாணவன் உணர்ச்சி வயப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

பேராசிரியர் தனது விடையில், கூட்டமைப்பு மாகாணசபைகளை நிராகரிக்கவில்லை என்பதுபோலவும், கூட்டமைப்பு அந்ததேர்தலில் போட்டியிடுவது மாகாண சபைகளை ஏற்பதாகுமென்பதுபோலவும், புலிகள் ஆயுதபோராடத்தை தொடர்ந்ததை கூட்டமைப்பு நிராகரித்ததெனவும் பொருள்பட கூறியிருகிறார்.

1.தற்காலனிலையில் கூட்டமைப்பு எந்த ஒரு அரசியல் முறையையும் தீர்வாக அரசாங்கத்திடம் கையளிக்கவில்லை. (இது கூட்டமைப்பு எந்த ஒரு தீர்வையும் ஏற்கதயாராக இருகிறதென்பதில்லை). கூட்டமைப்பு மாகாணசபையை ஆதரித்தால் அதை தீர்வாக முன்வைதிருந்திருக்கமுடியும். தமிழர் பிரச்சனைகள் இப்பொழுது தீர்வகியிருந்திருக்க வேணும். ஆகையால் “புலிகள் மாகாண சபையை நிராகரித்ததைப் போல தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துவிட முடியாது” என அவர் கூறமுடியாது.

2.மாகாணசபை என்பது தற்போது இலங்கை அரசின் ஒரு தெளிவில்லாத சொற்பிரயோகம். இவரும், மாணவனும், அதில் கருத்தொற்றுமை காட்டவில்லை. மாணவன் அமூலில் இருக்கும் மாகாணசபையையும் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் புலிகள் நிராகரித்த மாகாணசபையையும் பற்றி பேசுகிறார்கள். கேள்வியும் பதிலும் சந்திக்க வாய்பில்லை.

3.சம்பந்தரின் அண்மைய கூறுப்படி, புலிகளின் ஆயுதபோராட்டமும், தமிழரசுக்கட்சியின் அகிம்சை போராடமும் தோற்று போய்விடவில்லை, அவை தீர்வை நோக்கி முன்னேறச்செய்திருகின்றன என்றுதான் கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் இந்த நிலைப்பாட்டோடு தான் முரண்பட்டுக்கொண்டு, மாணவன் ஒரு கேள்வி கேட்டதற்காக மட்டும் அந்த மாணவன், கூட்டமைப்புக்கு எதிரி என்ற முடிவுக்கு வந்து “இவ்வாறன இளைஞர்கள் கூட்டமைப்புடன் இணைந்து முடிவுகளை எடுத்து இணைந்து செயற்பட வேண்டும்” என்று பதிலளிப்பது ஊருக்கு தானேடி உபதேசம் அது எனகும் உனக்கும் இல்லையடி எனபதுபோலுள்ளது.

மாணவனின் கேள்வி பருவ நிலைத்தாண்டாத அனுமானங்களும், ஊகங்களும், தூயதத்துவங்கள் மீது ஏற்றப்பட்டு எழுப்பட்ட ஒரு தத்துவார்த்த கேள்வி. கூட்டமைப்பு இதைச்செய்தால் அதன் பொருள் இதுவாகுமென்றோ, அல்லது அதை வெளிநாடுகள் இப்படி எடுத்துகொள்ளுமென்றோ அனுமானிப்பது யதார்த்தமாகாது. கணிதத்தில் இருப்பது போன்று “1+1=2” என்ற இறுக்கமாக சமநிலை படுத்தபட்ட சமன்பாடுகள் அரசியலில் கிடையா. கூட்டமைப்புக்கு தான் ஏன் மாகாணசபை தேர்தலில் நிற்க விரும்புகின்றது என்பதை தமிழ் மக்களுக்கு விளங்க வைக்க வேண்டிய கடமை உண்டு. ஆனால் அந்த விளக்கங்களை தமிழ் மக்கள் அப்படியே ஏற்று கொள்ளப்போகிறார்கள் என்பதுமில்லை. மேலும் வெளிநாடுகள் தமது நலங்களுக்கு ஏற்புடைய வகையிலேயேதான் கூட்டமைப்பின் செயல்களுக்கு விளக்கமளிக்கும் என்பதும் நாம் கண்ட அனுபவம்.

இந்த கேள்வி தீர்வுக்கான பல இடைநிலை செயல்பாடுகளை உள்ளடக்கும் விஸ்தீரணம் கொண்டது. அந்த இடைநிலைகளாவன

1. கூட்டமைப்பு தனது செயல் பாடுகளால் வெளிநாடுகளை, அவை ஒரு அரசியல் தீர்வுக்கு இலங்கை அரசாங்கத்தை உடன்பட வைக்க அழுத்தம் கொடுக்கவேண்டுமென்பதை நம்பவைத்தல்.

2. இலங்கை அரசாங்கம் ஒரு அரசியல் தீர்வுக்கு உடன்படல்.

3. அதை சட்டமாக்குதல்.

4. அந்த சட்டத்தை நடைமுறை படுத்தல்.

5. அந்த நடைமுறைபடுத்தலால் தமிழ் மக்கள் சில நட்டம் திட்டிகளை அனுபவித்தல்.

கடந்த 65 வருடகாலமாக கூட்டமைப்புக்கு இந்த ஐந்தயும் ஒரே தடவையில் செய்துமுடிக்க முடியவில்லை. 65 வருடங்கள் கழிந்தும், இன்னமும் வெளிநாடுகளை நமக்கு ஒரு தீர்வை பெற்று தர வேண்டுமென்பதை முழுதாக நம்பவைக்கமுடியாத நிலையில், அவர்கள் பெற்று தரப்போகும் தீர்வில் குறை இருக்க போகிறது என்று மாணவன் கவலைப்படுவது அர்த்தமற்றது. தேர்தல் எதுவாயினும், ஒரு கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் நிலைப்பாட்டை தெளியபடுத்தும்

1.கடந்த உள்ளூராட்சி தேர்தலில். அரசாங்கம் உள்ளுர் ஆட்சி முறையினால் வரும் சலுகைகளை தமிழ் மக்கள் வேண்டி நிற்கிறார்கள் என்று காட்ட முனைந்தது. அரசாங்கம் தோற்றமையால் தமிழ் மக்களுக்கு உள்ளூர் ஆட்சியினால் வரும் பயன்களில் அக்கறை இல்லை என்பது நிரூபணமானது. உள்ளூராட்சி தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டு வென்றது. இந்த வெற்றியை தமிழர்கள் ஒரு அரசியல் தீர்வை பெற்று வர ஆணை அளித்திருகிறார்கள் என்று கூட்டமைப்பு விளங்கபடுத்தியது. அது போன்றே மாகாணசபைத்தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டாலும் தேர்தல் விஞ்ஞாபனம் மூலம், மாகாணசபைகளை நிராகரிக்கலாம்.

2.கூட்டமைப்பு இப்பொழுது ஒற்றை ஆட்சி பாரளுமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு M.P.களை வைத்திருக்கிறது. ஆனால் அந்த M.P.பதவிகளை பயன்படுத்தி, ஒற்றை ஆட்சி முறையை ஒரு தீர்வாக ஏற்று கொள்ளாமல், அதை நீக்கி புதிய தீர்வை நோக்கி நகரவைக்க முயல்கிறது.

3.கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவார்தைகள் நடாத்துவது ஒரு அரசியல் தீர்வை தர அரசாங்கம் காத்திருகிறத்தென்று நம்பியதினால் அல்ல. மாறாக அரசாங்கத்தின் கபட நோகங்களை வெளிநாட்டு அரசுகள் கவனித்துகொண்டிருக்கும்போது வெளிக்கொண்டுவந்து காட்டவே.

4.கூட்டமைப்பு அதிகாரங்களை பெற்றுக்கொள்ளவோ, தக்கவைக்கவோ முயலவில்லை. அப்படி அதிகாரங்களைப் பற்றி சிந்தித்தால், தேவானந்தா, முரளிதரன் ஆகியோர் போன்று அரசுடன் சேர்ந்து மந்திரி பதவிகளைத்தான் பெற்றுகொள்ளவேண்டும். சலுகைகளையோ, பதவிகளையோ, அதிகாரங்களையோ மக்கள் உள்ளூராட்சி தேர்தளில் தேடவில்லை.

5.உண்மையான தீர்வு போர்குற்ற விசாரணையை முன்னெடுப்பதால் மட்டுமே முடியும்

Edited by மல்லையூரான்

மல்லையூரான்,

பல கோணங்களிலும் அணுகி அலசியுள்ளீர்கள். அருமையாக உள்ளது, தொடருங்கள்.

மாணவனின் கேள்வி பருவ நிலைத்தாண்டாத அனுமானங்களும், ஊகங்களும், தூயதத்துவங்கள் மீது ஏற்றப்பட்டு எழுப்பட்ட ஒரு தத்துவார்த்த கேள்வி. கூட்டமைப்பு இதைச்செய்தால் அதன் பொருள் இதுவாகுமென்றோ, அல்லது அதை வெளிநாடுகள் இப்படி எடுத்துகொள்ளுமென்றோ அனுமானிப்பது யதார்த்தமாகாது. கணிதத்தில் இருப்பது போன்று “1+1=2” என்ற இறுக்கமாக சமநிலை படுத்தபட்ட சமன்பாடுகள் அரசியலில் கிடையா. கூட்டமைப்புக்கு தான் ஏன் மாகாணசபை தேர்தலில் நிற்க விரும்புகின்றது என்பதை தமிழ் மக்களுக்கு விளங்க வைக்க வேண்டிய கடமை உண்டு. ஆனால் அந்த விளக்கங்களை தமிழ் மக்கள் அப்படியே ஏற்று கொள்ளப்போகிறார்கள் என்பதுமில்லை. மேலும் வெளிநாடுகள் தமது நலங்களுக்கு ஏற்புடைய வகையிலேயேதான் கூட்டமைப்பின் செயல்களுக்கு விளக்கமளிக்கும் என்பதும் நாம் கணட அனுபவம்.

மல்லையூரான்,

பல கோணங்களிலும் அணுகி அலசியுள்ளீர்கள். அருமையாக உள்ளது, தொடருங்கள்.

நன்றி அகூத.

என்னுடைய ஆய்வுகள் உபயோகத்தில் மட்டுபடுதபட்டவையே. நீங்களும் வேறு சில உறவுகளும் இந்தகளத்தில் தொடரும் பணிகள், களத்திற்கும், தமிழ்மக்களுக்கும் உயிர்நாடிபோன்றது. அவை தொடரவேண்டும் என்பது என் விருப்பமும் பிரார்த்தனையும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சமூகத்தில் படித்தவர்களின் கருத்துக்களுக்கு சரியோ தவறோ மரியாதை கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.சிங்களம் தமிழ்புத்திசீவிகளின் குரல்களினூடாக தமிழ்மக்கள் தமது அரசியல் உரிமையைக் கைவிட்டுவிட்டு வாழுவதே வாழ்க்கைக்கு உகந்தவழி என்ற வகையில் போதிக்கத் துவங்கி உள்ளது.(புஸ்பரட்னம்,சிவச்சந்திரன்)

தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் நாம் முகத்துக்கு அஞ்சி வேசையாடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சிவச்சந்திரன் கூறிய கருத்து எந்த வகையிலும் தவறானது அல்ல. அவர் கூறிய கருத்து சாதாரண தமிழனின் கருத்தாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தென்சூடான் எத்தனையோ வருடங்களாக தமது பொறுமையினைக் காத்தே தம்மீதான அனைத்துலக சமூகத்தின் நன்மதிப்பினை பெற்றனர்.

ஆனால், விடுதலைப் புலிகள் அவ்வாறு செய்து கொள்ளவில்லை.

இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் கூட தமது நம்பகத்தன்மையினை தூய்மையாக வெளிப்படுத்தவில்லை. பல இடங்களில் தமது அவசர குடுக்கைகளினால்தான் மோதல் நிலையினை உருவாக்கினர்.

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் கூட இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று அனைத்துலக சமூகம் சார்பாக சு.ப.தமிழ்ச்செல்வனின் கைகளைப்பற்றி எரிக் சொல்ஹெய்ம் கேட்டபோது சு.ப.தமிழ்ச்செல்வன் அவரின் கைகளை உதறி வெளியேறிய கதைகளை அவருடன் கூடவே சென்ற தூதுக்குழுவில் அங்கம் வகித்த போராளிகளிடம் கேளுங்கள்.

1987 இல் மாகாண சபை நிர்வாகத்தினை இந்திய அரசு ஊடாகப் பெற்று எம்மை நாம் நிரூபிக்கவில்லை. மாறாக மோதல் நிலைகளை பல இடங்களில் விடுதலைப் புலிகளே உருவாக்கினார்கள்.

உதாரணத்துக்கு வெளியில் நடமாடினாலே கைது செய்து கொல்ல நினைக்கும் விடுதலைப் புலிகளின் தளபதிகளை அதுவும் சிறிலங்கா அரசால் தேடப்படும் பட்டியலில் இருக்கும் குமரப்பா, புலேந்திரனை கடலில் இறக்கி அவர்களைக் கைது செய்து கொல்லும் நிலைக்குச் சென்றவர்கள் விடுதலைப் புலிகளின் தலைமையே.

இதனை விடுங்கள்; பிரேமதாசா தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்று விரும்பியிருந்தார். ஆனால், அவரையும் விட்டு வைத்தார்களா? இல்லையே.

பிரேமதாசவும் நம்பிக்கைத் துரோகி என்றுதான் இங்கே எழுதுவீர்கள். நல்லூர் ஆலயத்துக்கு வருகை தந்த பிரபாகரனை கொல்ல பிரேமதாச முயன்றதாக பொட்டு அம்மான் எழுதியதாக விடுதலைப் புலிகள் ஏட்டில் வெளிவந்து படித்தது நினைவு.

ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்றே மூத்த போராளிகள் பலர் கூறினர். அதாவது, விடுதலைப் புலிகள் தமது செய்கைகளை நியாயப்படுத்த எந்தப் பொய்யையும் கூறவும் தயங்க மாட்டார்கள்; அதேவேளை செய்யவும் தயங்கவும் மாட்டார்கள்.

முடிவாக சொல்கிறேன்: எத்தனையோ சந்தர்ப்பங்களை தவறவிட்ட நாங்கள் இன்று மீண்டும் உள்ளுராட்சி சபையில் வந்து நிற்கின்றோம்.

ஏதோ கனவில் இருந்த நாம் இன்று அடி மாட்டு விலைக்குப் போகிற அளவுக்கு போய்விட்டோம் என்பதுதான் உண்மை.

இங்கே எழுதுகின்ற பலர் இன்னும் யதார்த்த நிலையில் இல்லை என்றே தெரிகின்றது.

சிவச்சந்திரனின் கருத்துக்கு பதிலிடாமல் அவரைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர். ஆக, இதிலிருந்து என்ன தெரிகின்றது எனில் நீங்கள் ஒருகாலமும் திருந்தப் போவதில்லை என்பது நன்கு புலப்படுகின்றது.

பல உலக நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் பொருளாதார அரசியல் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய நிறுவனங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் இளைப்பாறிய அரசியல்வாதிகள், இராணுவம் சம்பந்தப்பட்டவர்களால் நடாத்தப்படுகின்றது.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள சாக் (SAAG) என்ற அமைப்பும் ஒன்று. அது அண்மையில் நடந்த உள்ளூராட்சி தேர்தல் சம்பந்தமாக எழுதியுள்ளது. இதில் கொழும்பின் போக்கை கண்டித்துள்ளது.

SRI LANKA: Elections to Local Bodies – An Indian Perspective

http://www.southasiaanalysis.org/%5Cpapers47%5Cpaper4635.html

சரித்திரத்திலிருந்து சிங்களம் படிக்க மறுக்கின்றது என அந்த கட்டுரை முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சிவச்சந்திரனின் கருத்துக்கு பதிலிடாமல் அவரைத் தாக்குவதிலேயே குறியாக இருக்கின்றனர். ஆக, இதிலிருந்து என்ன தெரிகின்றது எனில் நீங்கள் ஒருகாலமும் திருந்தப் போவதில்லை என்பது நன்கு புலப்படுகின்றது.

சிங்கலங்கா தமிழர்களை வடகிழக்கில்கூடச் சிறுபான்மையினராக ஆக்க நீண்ட காலத் திட்டம் வகுத்துச் செயற்படுத்துகின்றது என்பதைத் தெளிவாக உணர்ந்தும் இணக்கப்பாட்டு அரசியல், விட்டுக்கொடுக்கும் அரசியல் பற்றிக் கதைப்பவர்கள் சிங்கலங்காவின் வேலைத்திட்டத்திற்குள் உள்ளார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சிவச்சந்திரன் கூறிய கருத்து எந்த வகையிலும் தவறானது அல்ல. அவர் கூறிய கருத்து சாதாரண தமிழனின் கருத்தாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தென்சூடான் எத்தனையோ வருடங்களாக தமது பொறுமையினைக் காத்தே தம்மீதான அனைத்துலக சமூகத்தின் நன்மதிப்பினை பெற்றனர்.

ஆனால், விடுதலைப் புலிகள் அவ்வாறு செய்து கொள்ளவில்லை.

இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் கூட தமது நம்பகத்தன்மையினை தூய்மையாக வெளிப்படுத்தவில்லை. பல இடங்களில் தமது அவசர குடுக்கைகளினால்தான் மோதல் நிலையினை உருவாக்கினர்.

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் கூட இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று அனைத்துலக சமூகம் சார்பாக சு.ப.தமிழ்ச்செல்வனின் கைகளைப்பற்றி எரிக் சொல்ஹெய்ம் கேட்டபோது சு.ப.தமிழ்ச்செல்வன் அவரின் கைகளை உதறி வெளியேறிய கதைகளை அவருடன் கூடவே சென்ற தூதுக்குழுவில் அங்கம் வகித்த போராளிகளிடம் கேளுங்கள்.

1987 இல் மாகாண சபை நிர்வாகத்தினை இந்திய அரசு ஊடாகப் பெற்று எம்மை நாம் நிரூபிக்கவில்லை. மாறாக மோதல் நிலைகளை பல இடங்களில் விடுதலைப் புலிகளே உருவாக்கினார்கள்.

உதாரணத்துக்கு வெளியில் நடமாடினாலே கைது செய்து கொல்ல நினைக்கும் விடுதலைப் புலிகளின் தளபதிகளை அதுவும் சிறிலங்கா அரசால் தேடப்படும் பட்டியலில் இருக்கும் குமரப்பா, புலேந்திரனை கடலில் இறக்கி அவர்களைக் கைது செய்து கொல்லும் நிலைக்குச் சென்றவர்கள் விடுதலைப் புலிகளின் தலைமையே.

இதனை விடுங்கள்; பிரேமதாசா தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்று விரும்பியிருந்தார். ஆனால், அவரையும் விட்டு வைத்தார்களா? இல்லையே.

பிரேமதாசவும் நம்பிக்கைத் துரோகி என்றுதான் இங்கே எழுதுவீர்கள். நல்லூர் ஆலயத்துக்கு வருகை தந்த பிரபாகரனை கொல்ல பிரேமதாச முயன்றதாக பொட்டு அம்மான் எழுதியதாக விடுதலைப் புலிகள் ஏட்டில் வெளிவந்து படித்தது நினைவு.

ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்றே மூத்த போராளிகள் பலர் கூறினர். அதாவது, விடுதலைப் புலிகள் தமது செய்கைகளை நியாயப்படுத்த எந்தப் பொய்யையும் கூறவும் தயங்க மாட்டார்கள்; அதேவேளை செய்யவும் தயங்கவும் மாட்டார்கள்.

முடிவாக சொல்கிறேன்: எத்தனையோ சந்தர்ப்பங்களை தவறவிட்ட நாங்கள் இன்று மீண்டும் உள்ளுராட்சி சபையில் வந்து நிற்கின்றோம்.

ஏதோ கனவில் இருந்த நாம் இன்று அடி மாட்டு விலைக்குப் போகிற அளவுக்கு போய்விட்டோம் என்பதுதான் உண்மை.

குமரப்பா புலேந்திரன்.. கடலில் இறக்கிவிடப்படவில்லை.. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையிலும் போராளிகள் சுதந்திரமாக நடமாட அளிக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையிலும்.. இந்தியப் படைகள் எமது மண்ணில் எமக்கு காவல் நிற்க அனுமதிக்கப்பட்ட நிலையிலும் தான் அவர்கள் இந்தியாவிற்குப் போனார்கள். பொய்யை சொல்வது என்றாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்.

பிரேமதாச பிரபாகரனைக் கொல்ல திட்டமிடவில்லை.. புலிகள் சொன்னது பொய்.. புலிகளின் தளபதிகளே அதைச் சொன்னார்கள் என்றால்..

புலிகளின் எந்தத் தளபதி எப்ப அப்படிச் சொன்னது.. என்று சொல்லுதலும் அவசியம்.

புலிகள் பொய் சொல்கிறார்கள் என்றால் மற்றவர்கள் அண்டப்புளுகு மூட்டைகளை அவிழ்த்து அவர்களும் புலிகள் பற்றிய கனவுக் காய்ச்சலில் வாழ்ந்ததே மிச்சம்.

ஒரு பேச்சுக்கு.. நீங்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று கருதிக் கொண்டால்.. புலிகளாவது உள்ளூராட்சி சபைகளில் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.. மற்றவர்கள் வடக்குக் கிழக்கை இன ஐக்கியத்திற்காக சிங்களத்திடம் தாரை வார்க்க நிற்கிறார்கள்.

புலிகள் கனவில் வாழ்ந்தால்.. மற்றவர்கள்.. அந்தக் கனவு கொடுத்த காய்ச்சலில் வாழ்ந்தார்கள். எவர் இதில் கேவலம்...???!

அதுசரி.. உங்கள் கருத்துக்கும் மாகாண சபைகளை புலிகள் ஏற்காததால் தான் அது தோல்வியில் முடிந்ததற்கும் என்ன சம்பந்தம். புலிகள் ஏற்ற ஒப்பந்தங்களைக் கூட சிங்கள அரசு சரியாக அமுல்படுத்தவில்லை. இதில்.. புலிகள் ஏற்றிருந்தால் மட்டும் மாகாண சபை விளங்கி இருக்கும் என்ற எதிர்பு கூறலின் அடித்தளக் காரணிகள் என்ன..??! புலிகள் மாகாண சபைகளை ஏற்றுக் கொள்ள அவை தமிழ் மக்களுக்கு என்ன உரிமைகளை வழங்க முன் வந்தன..???!

இதற்கு எல்லாம் உங்களிடம் பதில் இல்லை. புலிகள் கனவில் உழன்றனர் என்ற உளறலைத் தவிர.. புலிக்காய்ச்சல் என்ற ஒரு மாயைக் காய்ச்சலில் வாழ்ந்ததைத் தவிர நீங்கள் எதை வெட்டிக் கிழித்தீர்கள்.. மக்களை எதிரிகளோடு சேர்ந்து கருவறுத்ததைத் தவிர...!

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் கூட இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று அனைத்துலக சமூகம் சார்பாக சு.ப.தமிழ்ச்செல்வனின் கைகளைப்பற்றி எரிக் சொல்ஹெய்ம் கேட்டபோது சு.ப.தமிழ்ச்செல்வன் அவரின் கைகளை உதறி வெளியேறிய கதைகளை அவருடன் கூடவே சென்ற தூதுக்குழுவில் அங்கம் வகித்த போராளிகளிடம் கேளுங்கள்.

புலிகளை வற்புறுத்தி அடிபணிய வைக்க அமெரிக்காவும் யப்பானும் செய்த திருவிளையாடல்களை வாசித்து அல்லது கேட்டறியவும்.

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சிவச்சந்திரன் கூறிய கருத்து எந்த வகையிலும் தவறானது அல்ல. அவர் கூறிய கருத்து சாதாரண தமிழனின் கருத்தாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தென்சூடான் எத்தனையோ வருடங்களாக தமது பொறுமையினைக் காத்தே தம்மீதான அனைத்துலக சமூகத்தின் நன்மதிப்பினை பெற்றனர்.

ஒரு சாதாரண தமிழ் மகன் தான் இந்த தேர்தலில் தங்கள் முடிவுகளை சர்வதேசத்துக்கு வடிவாக தெரிவித்துவிட்டார்கள். அந்த பயத்தினால் வந்த நிலையே இந்த கலத்துரையாடல்கள்.

தென் சூடனில் சர்வதேசத்தின் நிலையையும் எங்கள் போராட்டத்தில் அவர்களின் நிலையையும் கொஞ்சம் சிந்தித்து பருங்கள், இப்பவும் தங்கள் நலன்களை கருத்தில் கொண்டே எங்கள் பிரச்சனை கையளுகின்றார்கள்,

இப்ப தான் புலிகள் இல்லையே, இப்ப நீங்கள் இலங்கை அரசாங்கத்துடன் கதைத்து, ஒரு நல்தொரு தீர்வு கிடைக்க வழிசெயுங்களே , என்னதான் அவர்கள் தருகிறார்கள் என்று பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் மனைவியே நல்லூர் ஆலயத்திற்கு வந்த்திருந்த்ததாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது அதனை அடிப்படையாக கொண்டு அவரை பின் தொடர்ந்தது தலைவரின் இடத்தை கண்டு பிடிக்க இலங்கை புலனாய்வு முயன்றது. பிரபாகரன் கோயிலுக்கு வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், விடுதலைப் புலிகள் அவ்வாறு செய்து கொள்ளவில்லை.

இறுதியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் கூட தமது நம்பகத்தன்மையினை தூய்மையாக வெளிப்படுத்தவில்லை. பல இடங்களில் தமது அவசர குடுக்கைகளினால்தான் மோதல் நிலையினை உருவாக்கினர்.

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் கூட இன்னொரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று அனைத்துலக சமூகம் சார்பாக சு.ப.தமிழ்ச்செல்வனின் கைகளைப்பற்றி எரிக் சொல்ஹெய்ம் கேட்டபோது சு.ப.தமிழ்ச்செல்வன் அவரின் கைகளை உதறி வெளியேறிய கதைகளை அவருடன் கூடவே சென்ற தூதுக்குழுவில் அங்கம் வகித்த போராளிகளிடம் கேளுங்கள்.

1987 இல் மாகாண சபை நிர்வாகத்தினை இந்திய அரசு ஊடாகப் பெற்று எம்மை நாம் நிரூபிக்கவில்லை. மாறாக மோதல் நிலைகளை பல இடங்களில் விடுதலைப் புலிகளே உருவாக்கினார்கள்.

உதாரணத்துக்கு வெளியில் நடமாடினாலே கைது செய்து கொல்ல நினைக்கும் விடுதலைப் புலிகளின் தளபதிகளை அதுவும் சிறிலங்கா அரசால் தேடப்படும் பட்டியலில் இருக்கும் குமரப்பா, புலேந்திரனை கடலில் இறக்கி அவர்களைக் கைது செய்து கொல்லும் நிலைக்குச் சென்றவர்கள் விடுதலைப் புலிகளின் தலைமையே.

இதனை விடுங்கள்; பிரேமதாசா தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்று விரும்பியிருந்தார். ஆனால், அவரையும் விட்டு வைத்தார்களா? இல்லையே.

ஒரு சாதாரண தமிழ் மகன் தான் இந்த தேர்தலில் தங்கள் முடிவுகளை சர்வதேசத்துக்கு வடிவாக தெரிவித்துவிட்டார்கள். அந்த பயத்தினால் வந்த நிலையே இந்த கலத்துரையாடல்கள்.

தென் சூடனில் சர்வதேசத்தின் நிலையையும் எங்கள் போராட்டத்தில் அவர்களின் நிலையையும் கொஞ்சம் சிந்தித்து பருங்கள், இப்பவும் தங்கள் நலன்களை கருத்தில் கொண்டே எங்கள் பிரச்சனை கையளுகின்றார்கள்,

இப்ப தான் புலிகள் இல்லையே, இப்ப நீங்கள் இலங்கை அரசாங்கத்துடன் கதைத்து, ஒரு நல்தொரு தீர்வு கிடைக்க வழிசெயுங்களே , என்னதான் அவர்கள் தருகிறார்கள் என்று பார்ப்போம்

புலிகள் மீது சேறு பூசுகின்றோம் என்பதால் தன் இனம் முழுவதும் அழிவதையே அங்கீகரிக்கும் இவர்களைப்போன்றவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கின்றீர்கள்? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீது சேறு பூசுகின்றோம் என்பதால் தன் இனம் முழுவதும் அழிவதையே அங்கீகரிக்கும் இவர்களைப்போன்றவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்கின்றீர்கள்? :(:(:(

முற்றிலும் உண்மை விசுகு,

இவர்களெல்லாம் தங்களின் வயிற்று பிழைப்புக்காக ௬லிக்கு மாரடிக்கும் கும்பல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்சூடான் எத்தனையோ வருடங்களாக தமது பொறுமையினைக் காத்தே தம்மீதான அனைத்துலக சமூகத்தின் நன்மதிப்பினை பெற்றனர்.

ஆனால், விடுதலைப் புலிகள் அவ்வாறு செய்து கொள்ளவில்லை.

அண்ணை சூடானுடைய மொத்த சனத்தொகை எவ்வளவு அண்ணா? (http://en.wikipedia.org/wiki/South_Sudan)

தமீழழத்தின் மொத்த சனத்தொகை எவ்வளவு?

ஆக மொத்த தமிழ்சனமும் அழியும் வரைக்கும் பொறுமையாக இருந்திருக்க வேணும் எண்டுறிங்கள்? அதுக்கு பிறகு ஆருக்கு அண்ணை தீர்வு வேணும்?

வாந்தியை முழுசா வாயுக்குள்ளை வச்சிருக்காதையண்ணை,கக்கிட்டு போங்கோ :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.