Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோதபாய ராஜபக்ஷவை இந்து நாளேடு கண்டித்தது.

Featured Replies

கோதபாய ராஜபக்ஷவை இந்து நாளேடு கண்டித்தது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோரரும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ, இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் வெளியிட்ட கருத்துக்களை இந்தியாவின் ஹிந்து நாளேடு கண்டித்துள்ளது.

ஆசிரியர் தலையங்கம் ஒன்றை அந்த ஏடு இன்று வெளியிட்டது.

போரின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலம் நாடாளுமன்றத்தில் அதிகரித்துள்ளதாகவும், போரின் முன்பிருந்து நிலவிய தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அது வாய்ப்பாக அமைந்தாலும் அந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசு மிகக் குறைந்த நடவடிக்கைகளை மட்டும் எடுத்துள்ளமை, போரின்போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய இந்தியா போன்று நண்பர்களுக்கும் கரிசனை தருவதாக ஹிந்து தெரிவிக்கிறது.

போர்க் குற்றங்களை இலங்கைப் படையினர் புரிந்தார்களெனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது குற்றச்சாட்டுக்ளை முன்வைத்து பிரச்சினையை மேலும் பெரிதுபடுத்துவதாக கோதபாய ராஜபக்ஷ மீது ஹிந்த குற்றம் சாட்டுகிறது.

பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ளதால், அரசியல் தீர்வு தேவையில்லையென்பது உட்பட, அவர் வெளியிட்ட பல்வேறு கருத்துக்கள் தமிழர்களை அவமானம் செய்யும் வகையிலானவை என்று ஹிந்து தெரிவிக்கிறது.

அதேவேளை, பிரித்தானிய தமிழரான தமிழ்வாணி ஞானகுமார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவோ, கொல்லப்படவோ இல்லையென்பதால், தமது படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தவறானவை என்று வெளியிட்ட, மிகவும் கோபத்தை ஏற்படுத்தும் ஒரு கருத்துக்காகவே, கோதபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென ஹிந்து மேலும் குறிப்பிடுகிறது.

கோதபாய ராஜபக்ஷவின் கருத்துக்களைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லையென்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக அறிவிக்கவேண்டுமெனவும் ஹிந்து நாளேடு மேலும் தெரிவிக்கிறது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8964

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பெட்டிகள் என்னும் கை மாறவில்லையா .......?

ராஜீவின் கொலைக்கு பின், ... இடைக்காலங்களில் சில செய்திகளை வெளியிட்டாலும் ... சிங்களத்தை முதல் முறையாக தாக்கிய ஆசிரியர் தலையங்கத்தை ஹிந்து பிரசுரித்திருக்கிறது. ... தொடருமா?????????

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்குகாகப் பேசுவதாகப் பாசாங்கு செய்து தமது காரியத்தை சாதிக்கும் வடவரின் மற்றொரு நகர்வு.

தமிழருக்குகாகப் பேசுவதாகப் பாசாங்கு செய்து தமது காரியத்தை சாதிக்கும் வடவரின் மற்றொரு நகர்வு.

... இதில் பாசாங்கு செய்ய ஹிந்துவிற்கு என்ன தேவை இருக்கிறது???? .. <_<

கதிரையில் இருப்பவ கருணாநிதியில்லை என்று மர மண்டை கிந்துவுக்கே புரியுது. பொறுத்திருந்து பாரப்போம் கோபத்தபய இன்னும் எத்தனை காததூரம் போவாரென்று.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து நாளேடு முதலில் வட இந்தியனினது கிடையாது. தமிழனினது. பிராமணர்களால் நடத்தப்படுவது. தொடர்ச்சியாகவே தமிழ்த் தேசியத்துக்கும் எமது விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான கருத்துக்களைக் கக்கி வருவது. சிங்களப் பேரினவாதத்துக்குச் செய்த தொடர்ச்சியான சேவையினால் இதன் ஆசிரியர் ராம் மாணிக்கலிங்கம் சந்திரிக்கா குமாரதுங்கவினால் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இலங்கையின் உயர் விருதான லங்க்கா ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டவர்.

1987 இன் முன்னர் வரைக்கும் புலிகளுக்கு ஆதரவான போக்கைக் கடைப்பிடித்த இந்து இப்போது,முற்றிலும் மாறாக புலிகள் உற்பட தமிழ்த்தேசியத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதோடு, சிங்கள இனவழிப்பை நியாயப்படுத்தி கட்டுரைகளும் எழுதி வருகிறது. மகிந்த, கோத்தா ஆகியோரது விசமத்தனமான இனவழிப்புச் செவ்விகளை நியாயப்படுத்தி எழுதிவந்த இப்பத்திரிக்கை அவர்களுக்கெதிராகவே ஆசிரியர் தலையங்கம் எழுதுவதென்பது, மகிந்தாக்களும், கோத்தாக்களுக்கும் இந்தியாவை மதிப்பதில்லை என்கிற ஆதங்கத்தினால் வந்ததே ஒழிய, எம்மீது அக்கறைப்பட்டு வந்ததில்லை.

இற்றைவரைக்கும் வடக்கின் வசன்தம், கிழக்கின் உதயம் போன்ற சிங்களத்தின் பசப்பு வார்த்தைகளை தனது தாரக மந்திரமாக கொண்டு இந்தியாவிலே சிங்களத்தின் திட்டமிட்ட இனவழிப்பை மறைத்து இந்தியர்களை மயக்க நிலையில் வைத்திருப்பதும் இதே பத்திரிக்கைதான்.

  • தொடங்கியவர்

இன்று தமிழக மக்களின் நிலைப்படும் அவர்களின் தெளிவும் கூட இந்துவை மாற்றியிருக்கலாம்.

எதுவானாலும் நாம், இந்த நடிப்பையோ இல்லை உண்மையையோ எமக்கு சாதகமாக மாற்றுவதே எமது தேவை.

இதில் கோத்தாவே கூடுதலாக கடுப்புக்குள்ளகியுள்ளார். மகிந்தாவை இன்னும் இந்த ஆசிரியர் தலையங்கம் தாக்கவில்லை, அவரை நம்புகின்றது.

to: letters@thehindu.co.in

cc: readerseditor@thehindu.co.in

Subject: re: A brother out of control

Dear Editor,

Thanks for your editorial, "A brother out of control" ( http://www.thehindu.com/opinion/editorial/article2359597.ece ).

The Rajabakse brothers have been enjoying absolute power in Sri Lanka for many years now. With control one should also have responsibility and accountability. And is what we should be continuously demanding for.

Thanks,

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா அரசுக்கு ஆதரவானவர் இந்து இராம். இதனால் தான் கோத்தபாயா ஜெயாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட இராம் கோத்தபாயாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகிறார். எனினும் அகூதா சொல்வது போல இராமின் கருத்தினை எமக்கு சாதகமாக மாற்றலாம்.

ஒருத்தரும் தமிழர்களை வேறுக்கவில்லை,வெறுத்தது யாரை என்றும், ஏன் என்றும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஏன் புத்தி பேதலித்த புலம் பெயர்ந்த தமிழ் கூட்டத்திற்கு விளங்கவில்லை.இப்போ கூட ஜெயலலிதா தொடக்கம் இந்து வரை ஆதரிப்பது தமிழர்களைத் தானே ஒழிய அழிந்து போனவர்களை அல்ல.

ஒருத்தரும் தமிழர்களை வேறுக்கவில்லை,வெறுத்தது யாரை என்றும், ஏன் என்றும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஏன் புத்தி பேதலித்த புலம் பெயர்ந்த தமிழ் கூட்டத்திற்கு விளங்கவில்லை.

புத்திபேதலிக்காத புலம்பெயர்கூட்டத்தில் இருக்குற நீங்க ...சொல்லுங்க..

அவங்கதான் எல்லாம் அழிஞ்சுபோயாச்சே.....

தமிழரை வெறுக்காத அந்த சுவீட் பீப்பிள், இனிமே ஒரு சுயாட்சியை நமக்கு பெற்றுத்தருவாய்ங்களா?

பெற்றுத்தருவாங்க என்றால்......

1) எப்படி?

பெற்றுத்தரமுடியாது என்றால்..

2) ஏன்?

அப்பிடி ஒரு தீர்வு தேவை இல்லைன்னு நீங்க நெனைச்சா...

3) எதுக்காக?

நீங்க டக்கு டக்குன்னு பதில் சொல்லிகிட்டே போவீங்களாம்........ நானு பக்கு பக்குன்னு வாசிச்சுகிட்டே வருவேனாம்!

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி,

உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. ஜமாயுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க டக்கு டக்குன்னு பதில் சொல்லிகிட்டே போவீங்களாம்........ நானு பக்கு பக்குன்னு வாசிச்சுகிட்டே வருவேனாம்!

:lol::D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கிட்டீங்க அறிவிலி. :D:lol:

"ஹிந்து" ... பிராமணனுக்கு சொந்தமானது!! அது எப்போதும் எமக்கு எதிராகவே இருக்கும்???? ... இப்படி பார்த்தால், இன்று இந்தியாவில் மே18ல் நடைபெற்ற யுத்த குற்ற ஆவணங்களை ஒளிபரப்பும் இந்திய ருடேக்கு சொந்தமான தொலைக்காட்சியோ, விகடன் குழுமமோ (ராஜீவ் காந்தி கொலைக்கு பின் எமக்கு எதிராக திரும்பி, இன்று மீண்டும் எமக்காதரவாக செயற்படும்), குமுதம் குழுமமோ, ... சொல்லப்போனால் இந்திய ஊடகங்களில் 90% ஆனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் பிராமணர்களே (இது மேற்கில் யூதர்கள் ஊடகங்களை வைத்திருப்பது போன்று)!!! ... இந்தியாவில் எமக்கு ஆதரவாக எந்த ஒரு பிராமணனுக்கும் சொந்தமான ஊடகங்கள் செயற்படக்கூடாதா????

அதற்கு மேல் ... எவ்வளவு காலத்துக்கு தமிழ் பேசும் பிராமணனை ... தமிழன் இல்லை என்றோ? எதிரியாகவோ பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்??? ... இப்படிப்பார்த்தால் ... விஜயகாந்தோ, வைகோவோ பலரை நாம் ஒதுக்கியே வைக்கவல்லாவா வேண்டும்????

... எல்லாவற்றுக்கும் மேல் ... எமக்கு இன்றுவரை அழிவை தந்து கொண்டிருக்கும் இந்தியாவால் தான், ஓர் வாழ்வையும் தர முடியும்!!!!

ஒருத்தரும் தமிழர்களை வேறுக்கவில்லை,வெறுத்தது யாரை என்றும், ஏன் என்றும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஏன் புத்தி பேதலித்த புலம் பெயர்ந்த தமிழ் கூட்டத்திற்கு விளங்கவில்லை.இப்போ கூட ஜெயலலிதா தொடக்கம் இந்து வரை ஆதரிப்பது தமிழர்களைத் தானே ஒழிய அழிந்து போனவர்களை அல்ல.

அர்ஜுன், ... வங்கம் தந்த பாடம் ... தந்த கழகக்கண்மணியே!!! ... (அதை வாசித்தீரா????) ... அழியாமல் இருப்பவரே!!! .... ஏதாவது இன்றுவரை அழிந்தவர்கள் போன பின்னாவது, பிறந்த இனத்துக்கு செய்தீர்களா???? ... காலம் காலமாக ஒட்டி இருந்து இனத்தை கருவறுத்ததுதான் கண்ட மிச்சம்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை,

பிராமணர்கள் எல்லோரும் எமக்கு எதிரானவர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், ராம், சோ போன்றவர்கள் ஆபத்தானவர்கள் என்பதுதான் எனது வாதம். குமுதம், ஆனந்த விகடன் போன்றவை எமக்கு ஆதரவாக மாறி பலகாலம் ஆயிற்று. ஆனால் ராமின் இந்து மட்டுமே இதுவரையிலும் எமக்கெதிராகவும், சிங்களத்தின் இனவழிப்பிற்கு ஆதராவவும் எழுதிக்கொண்டிருக்கிறது. அவர் பிராமணர் என்பதனால் அப்படி எழுதுகிறாராரல்லது தமிழ்த்தேசியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அப்படி எழுதுகிறாரா என்பது அவருக்கு வெளிச்சம். சிங்களப் பேரினவாத நாட்டின் சனாதிபதியொருவரால் அதியுயர் விருது பெற்றவர் என்பது எதைக் காட்டுகிறது ? இனவழிப்புப் போர் முடிந்த பின்னரும் கூட சிங்களத்தின் பிரச்சாரத்தை முன்னெடுப்பது எதைக் காட்டுகிறது?

ஆனால் இவை எதுவுமே இல்லாமல், அவர் உண்மையாகவே எம்மீதான அக்கறையினாலேயே இப்படி எழுதுகிறார் என்றால் சந்தோசம். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரகு,

... அரசியலில் மட்டுமல்ல, ஊடகத்துறையிலும் ... நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியுமில்லை!! ... இன்று ராமுக்கு பட்டமளித்த சந்திரிக்கா எங்கே???? .. சந்திரிக்காவே யுத்தக்குற்றத்தை பார்த்து அழுது வடிக்கும் போது, சந்திரிக்காவின் நண்பர் ராம் மாறமாட்டாரா, இந்த நேரத்தில் மட்டுமாவது????

... எல்லாவற்றுக்கும் மேல் ... உண்மையாக கதைப்போமாயின் ... நாம் ஒருவரை வட்டம் போட்டால், வாழ் நாள் முழுக்க, அதனுள் தான் இருப்பார் என்றே வைத்தும் விடுவோம்! ... தப்ப முடியாது ... மாறினாலும் விடமாட்டோம்! .. அதற்கு மேல், அவர்களை ஏதாவது விதமாக அணுகி மாற்றவும் முயல மாட்டோம்!!!! .... அவ்வாறே எமக்கு எதிராக, ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின் செயற்பட தொடங்கிய ராமையும் விட்டு விட்டோம்!!!!!

வாங்கம் தந்த பாடம் விளங்கும் அளவிற்கா எமதுஅரசியல் அந்தநேரம் இருந்தது.

எமது நோக்கத்தை நாம் அடைய வளையவோ நெளியவோ குனியவோ தயங்கக்ககூடாது.அதைவிட்டு எங்கும் நாம் மீசையை முறுக்குவம் என்றால் கஷ்டம் தான்.

உலக அரசியல் தெரியாமல் இன்னமும் வேட்டுவம் கொத்துவம் என்றபடியே போகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

indian-rupees1.jpg

யூ வாட்டு கான்ஸ்ட்ரேன்ட் ஆன் பொட்டி பொட்டி... ஐ மீன் கரன்சி பொட்டி.... அதை பல கிந்திய தலைவர்களிடம் கைமாற்றவேணும்.. அவன் லங்க ரத்தனா விருது குடுத்தான் என்பது முக்கியமில்லை நீங்க அங்கால கூப்பிட்டு பங்க ரத்தினா விருது கொடுக்கவேண்டும் :D ஊடகதுறைகளிடம் அப்பத்தான் நியுசு நிறைய வரும்...மனிதாபிமானம் எல்லாம் ஸ்கூலி பிள்ளைகளைக்கானது :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

இந்த அரசியலை, பத்திரிக்கை துறையை உணர்ந்து அதற்கு ஏற்ப எமது அரசியலை முன்னேடுக்கவேண்டியதே சாதுரியம்.

இந்தியாவில் இன்றுவரை சர்வாதிகார ஜனநாயக அரசியலே உள்ளது, அதில் ஊடகத்துறையும் அடங்குகிறது.

அமெரிக்க ஜனநாயகத்தில் நாட்டின் தலைவரை கூட உரிய நேரத்தில் விமர்சனம் செய்யும் பண்பும், நாட்டுப்பற்றும், உரிமையும் உள்ளது. இன்று ஒபாமா பற்றி, அவரது (பொருளாதார) கொள்கைகள் பற்றி பலவித விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. முன்னர் புஸ் அவர்களின் ஈராக்கின் மீதான யுத்தம் தவறு என எழுதின.

இந்தியாவில் சாம் இராயப்பா தவிர இன்றுவரை எழுதவில்லை, விவாதிக்கவில்லை உண்மையை: 'தனிப்பட்ட வெறுப்பு காரணமாக இந்தியா தனது பாதுகாப்புக்கே ஆப்பு வைத்துள்ளது'.

பா.ஜ. க. உடன் மாநிலக்கட்சிகள் விரைவில் ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் உள்ளன. அந்த வகையில் பத்திரிகைகளும், மாறும், ஆசிரியர் தலையங்களும் கூட மாறும்.

"லங்கா ரத்னா" பரிசு பெற்ற சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலி இந்து ராம், தமிழ் நாட்டு மண்ணிலிருந்துகொண்டு இந்திய அரச பயங்கரவாதிகளின் காலை வாரிவிடுவதை பார்த்தால் பொன்சேகா குழுப் பயங்கரவாதிகளிடம் இலஞ்சம் பெற்றுள்ளது தெரிகிறது.

Edited by ஆராவமுதன்

அன்று தொடக்கம் இன்றுவரை சிங்கள அரசை தனது நலன்களுக்கு ஏதுவாக வைத்திருப்பதற்கே அனைத்தும் நடக்கின்றது. போராட்டத்தை ஆதரித்ததும் சரி எதிர்த்ததும் சரி பத்திரிகைகளின் போக்கும் சரி ஜெயலலிதா உட்பட்டவர்களின் அன்றய ஆதரவும் பின்னைய எதிர்ப்பும் இன்றய அதரவும் எல்லாம் இந்திய அரசியல் நலன் சார்ந்ததே. இங்கே குறிப்பிடப்படும் குமுதம் ஆனந்த விகடன் இந்து எதுவானாலும் என்றைக்கும் தமிழர்நலன் சார்ந்து இருந்ததில்லை அது எப்போதும் இந்திய நலன் சார்ந்தே இருக்கின்றது. இன்று தமிழர் நலனில் அக்கறை காட்டுவதுபோல் இந்தப் பத்திரிகைகளும் அரசியல் வாதிகளும் செயற்படுவதும் இந்திய நலன் சார்ந்ததே. இந்திய ஆழும் வர்க்கம் எவ்வாறு நகருகின்றதோ அவ்வாறே அதற்கு துணையாக ஊடகங்களும் செயற்படுகின்றது. போராளிகளை பயிற்றுவித்தது பிளவுகளை ஏற்படுத்தியது ஆதரித்தது எதிர்த்தது அழித்தது என இலங்கைக்குள் ஆதிக்கம் செலுத்துவதற்கு தொடர்ந்து தமிழர்கள் இந்திய ஆழும் வர்க்கத்தால் பலிக்கடாவாக்கப்பட்டார்கள் இன்றய காலம் பலியிட்டது குற்றம் என்று இலங்கைக்குள் மூக்கை நுளைக்க முற்படும் காலம். இந்தக் காலத்துக்கு ஏற்றவாறே இந்தியப்பத்திரிகைகள் தாளம் போடுகின்றது தவிர தமிழரில் அக்கறைப்படுகின்றது என்று ஒருபோதும் சிந்திக்க முடியாது. இதுதான் இந்தியத் தலையீடு குறித்த யதார்த்தமாக இருக்கின்றபோதும் தமிழர்களை பலியிடுவதற்கும் பகடைகளாக பயன்படுத்துவதற்கும் ஒரு எல்லை இருக்கின்றது அதன் அருகிலேயே தமிழர்கள் இருக்கின்றார்கள். இந்திய மாயைக்குள் மாண்டுபோவதும் மீண்டு எழுவதும் தமிழர்களின் புத்திசாலித்தனத்திலேயே தங்கியிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன், ஏறக்குறைய உங்களின் இந்தியா தொடர்பான நிலைப்பாடுதான் என்னுடையதும். இந்தியா எப்போதும் தனது நலன் தொடர்பாகவே கவலைப் பட்டிருக்கிறது. இடைக்கிடையே அதன் அரசியல்த் தலமைத்துவத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும் நடந்திருக்கிறது.

ஆனால், இந்தியாவின் சுயநலத்தினூடு எமக்கு ஒரு வழிபிறக்குமென்றால், அதைப் பயன்படுத்துவதில் குறையிருக்கப்போவதில்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம், இனி யார் எப்படி உதவினாலும் ஏற்றுக்கொள்ளும் மன நிலையை அடைந்துவிட்டோம் என்றுதான் நினஐக்கிறேன்.

நடுக்கடலில் தத்தளிப்பவனுக்கு கையில் எதுகிடைத்தாலும் பற்றிக்கொள்வதுபோல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.