Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தில் சிந்து பாடும் ஆண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேருக்கும் ஏன் தலைக்குமேல் பல்பு எரிகிது? பார்வைக்குறைபாடோ.

கலைஞன் கண நாளைக்குப் பிறகு உங்கள் நகைச்சுவையைப் பார்த்து சிரித்தேன்...முடியல :icon_idea:

  • Replies 79
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேருக்கும் ஏன் தலைக்குமேல் பல்பு எரிகிது? பார்வைக்குறைபாடோ.

பல்ப் (ஒளிரும் மின்குமிழ்) சிமைலி.. சிந்திக்க என்பதாக அமையப் பெற்றிருந்தது. கூலாக... சிந்திக்க வேண்டிய விடயம்.. என்பதைச் சொல்லவே இதனை நான் பாவிக்கிறேன். :icon_idea:

Edited by nedukkalapoovan

உ+ம்: விபச்சாரம். உலகில் ஆண்கள் விபச்சாரம் செய்யும் வழக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. பெண்களே ஆண் வாடிக்கையாளர்களை கவர்ந்து விபச்சார பாலியல் வியாபாரம் என்று சொந்த உடலை விற்றுப் பிழைக்கும் வேறு எந்த உயிரினத்திலும் இல்லாத ஒரு கேவலமான வேலையைச் செய்கிறார்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப உடலை விற்று ஆண்களைக் கவர்ந்து பிழைக்கின்ற பெண்களே ஆண்களின் தவறுக்கான பிரதான காரண கர்த்தாக்களாகவும் இருக்கிறார்கள். இந்த இடத்தில் இந்தக் கட்டுரையாளர் கண்ணை மூடிக் கொண்டதுதான் வியப்பாக இருக்கிறது.

...

'விபச்சாரம்' என்ற சொல்லை இணையத்தில் தேடினேன், விக்கிபிடியாவில் 'பால்வினைத்தொழில்' என்று இருந்தது, அதிலிருந்து சிலவற்றை இங்கே இணைக்கிறேன்...

பெண்களே பெருமளவில் பாலியற் தொழிலாளிகளாகக் காணப்படுகின்ற போதிலும் குறிப்பிடத்தக்க அளவில் ஆண்களும் ஈடுபடுகின்றனர்.

----

சீனாவைச் சேர்ந்த ஒரு விலைமாது சொல்கிறார். "நான் எனக்குப் 17 வயதாக இருந்த போது எனது ஒன்று விட்ட சகோதரியுடன், வேலை எடுத்துத் தருவதாகச் சொன்ன ஒரு உறவு மாமாவுடன் பேருந்து ஏறினேன். நான்கு மணி நேரப் பயணம் என்றார் மாமா. ஆனால் நான்கு நாட்கள் காடுகள் மேடுகள் கடந்த பயணம் அது. அது கடத்தல் என்று தெரிய முன்னமே பயத்தில் வீடு திரும்ப மன்றாடினேன். மாமா விடவில்லை. பர்மா எல்லையில் நாங்களிருவரும் விலைபேசப் பட்டோம். அவர்கள் எம்மை ஒரு சட்டைத்துணி போல, ஒரு ரவிக்கை போல ஆராய்ந்து பார்த்தார்கள். கன்னி கழியாமல் இருக்கிறோமா என்பதைக் கூட கவனமாக ஆராயந்தார்கள். இப்போ நான் இந்த வாழ்வில் இருந்து மீளமுடியாதவளாகி விட்டேன்" என்று.

----

UNHCR சொல்கிறது. "ஆப்பிரிக்காவில் மிகவும் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளே. இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் முதலில் இராணுவத்தாலும் பின்னர் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலும் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கோ அல்லது பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் உணவு, உடை, மருந்து, பாடசாலை போன்றவற்றுக்காக பாலுறவுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள். அதன் பின் விலைமாதர்களாக்கப் படுகிறார்கள்" என்று

இவர்கள் தாமாகவே பிரியப்பட்டு விபச்சாரத் தொழிலுக்கு வந்தவர்கள் போல் தெரியவில்லை. இப்பெண்கள் விபச்சாரிகளாக இங்கே பல ஆண்களுக்குப் பெரும்பங்கு உள்ளது.

http://ta.wikipedia....%AE%B2%E0%AF%8D

அதற்காக எல்லாப் பிழைகளுக்கும் ஆண்கள் தான் காரணம் என்று சொல்லவில்லை. பல பெண்களும் விபச்சாரத்திற்குத் தாமாகவே காரணமாக உள்ளார்கள் என்பதும் உண்மையே.

-----

மேலும் இணையத்தில் தேடியபோது கிடைத்தது...இதில் எவ்வளவு உண்மை இருக்கென அறிய முடியவில்லை.

http://www.uyirmmai....s.aspx?cid=2263

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

'விபச்சாரம்' என்ற சொல்லை இணையத்தில் தேடினேன், விக்கிபிடியாவில் 'பால்வினைத்தொழில்' என்று இருந்தது, அதிலிருந்து சிலவற்றை இங்கே இணைக்கிறேன்...

அதற்காக எல்லாப் பிழைகளுக்கும் ஆண்கள் தான் காரணம் என்று சொல்லவில்லை. பல பெண்களும் விபச்சாரத்திற்குத் தாமாகவே காரணமாக உள்ளார்கள் என்பதும் உண்மையே.

-----

மேலும் இணையத்தில் தேடியபோது கிடைத்தது...இதில் எவ்வளவு உண்மை இருக்கென அறிய முடியவில்லை.

http://www.uyirmmai....s.aspx?cid=2263

ஆண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என்ற செய்தியை நானும் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஆனால் பெண்கள் அளவில் இலட்சக் கணக்காக இல்லை. குறிப்பாக ஆண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமாக இல்லை. அங்கொன்று இங்கொன்றாக சிலர் பெண் விபச்சாரிகளின் பாணியில் பணத்துக்காக ஈடுபடக்கூடும். அது எதிர்காலத்தில் வழக்கமாகலாம். ஆனால் தற்போது வரை அது பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது போல் வழக்கமாக இல்லை.

பல விபச்சாரிகள் சொல்லும் செய்தி இதுதான். யாரோ இழுத்துக் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.. எங்களால் மீள முடியவில்லை என்று. உண்மையில் தற்செயலாக விபச்சாரத்தில் விடப்பட்டவர்கள் மீள்வதற்கு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை பல வழிமுறைகள் இருக்கின்றன. உண்மையில் மேலை நாடுகளில் விபச்சாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வறுமை என்பதை அரசு சரி செய்கிறது. இருந்தும் ஏன் விபச்சாரிகள் உருவாகின்றனர் என்றால்.. அதற்கு விடை பெண்களின் உடல் மற்றும் பணத்தேவை கருதியே. இவர்கள் தங்களின் தேவைக்காக சந்தர்ப்பங்களை உருவாக்கி ஆண்களை கவர்ந்து கொள்கின்றனர். இறுதில் பெயர்.. ஆண்கள் மீது சுமத்தப்படும். அவன் விபச்சாரியை நாடிப் போறான் என்று. ஆனால் சந்தர்ப்பம் பெண் விபச்சாரிகளால் உருவாக்கப்பட்டதாக இருக்கும். :icon_idea:

Edited by nedukkalapoovan

ஆண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என்ற செய்தியை நானும் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். ஆனால் பெண்கள் அளவில் இலட்சக் கணக்காக இல்லை. குறிப்பாக ஆண்களை விபச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமாக இல்லை. அங்கொன்று இங்கொன்றாக சிலர் பெண் விபச்சாரிகளின் பாணியில் பணத்துக்காக ஈடுபடக்கூடும். அது எதிர்காலத்தில் வழக்கமாகலாம். ஆனால் தற்போது வரை அது பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவது போல் வழக்கமாக இல்லை.

Holland நாட்டில் விபச்சராம் சட்டப்படி உள்ளதென நினைக்கிறன். அங்கே ஆண்களின் விபச்சாரம் வழக்கமாக இருக்க சந்தர்ப்பங்கள் இருக்குமல்லவா?

பல விபச்சாரிகள் சொல்லும் செய்தி இதுதான். யாரோ இழுத்துக் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.. எங்களால் மீள முடியவில்லை என்று. உண்மையில் தற்செயலாக விபச்சாரத்தில் விடப்பட்டவர்கள் மீள்வதற்கு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை பல வழிமுறைகள் இருக்கின்றன. உண்மையில் மேலை நாடுகளில் விபச்சாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வறுமை என்பதை அரசு சரி செய்கிறது. இருந்தும் ஏன் விபச்சாரிகள் உருவாகின்றனர் என்றால்.. அதற்கு விடை பெண்களின் உடல் மற்றும் பணத்தேவை கருதியே. இவர்கள் தங்களின் தேவைக்காக சந்தர்ப்பங்களை உருவாக்கி ஆண்களை கவர்ந்து கொள்கின்றனர். இறுதில் பெயர்.. ஆண்கள் மீது சுமத்தப்படும். அவன் விபச்சாரியை நாடிப் போறான் என்று. ஆனால் சந்தர்ப்பம் பெண் விபச்சாரிகளால் உருவாக்கப்பட்டதாக இருக்கும். :icon_idea:

எல்லா ஆண்களும் அவர்கள் செய்வது சரியே நினைத்துக்கொள்ள பெண்கள் மேல் தான் பிழை உள்ளது என்ற கருத்து ஆண்களை ஊக்குவிக்குமே தவிர அவர்களை யோசிக்க வழிவகுக்கும் என்பது கேள்வியாகவே உள்ளது...

'பல விபச்சாரிகள் சொல்லும் செய்தி இதுதான்' எல்லாரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியானதா?

ஒரு கையால் தட்டினால் ஓசை எப்படி வராதோ (சுண்டி சத்தம் வரவைப்பதைச் சொல்லவில்லை) அப்படித்தான் விபச்சாரமும். ஒரு இடத்தில் விபச்சாரம் நடக்குமானால் அங்கே இருவருக்கும் பங்கு உண்டு!

'இறுதியில் பெயர் ஆண்கள் மீது சுமத்தப்படும்' என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள்? 'விபச்சாரி' என்று பெண்களுக்கல்லவா பட்டம் சூட்டுகிறோம்...??

***

மேற்கோள் காட்டப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.

நிக்கல்சனின் ஆய்வின்படி திருமணமான ஆண்கள் மாத்திரம்தான் கள்ள உறவைத் நாடுகிறார்களா? :blink:

டிஸ்க்கி

மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், மாட்டை கொண்டு மரத்தில் கட்டி விட்டு மரத்தைப் பற்றி எழுத வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதைத் தான் வந்து எழுதுவீர்கள் என்று எனக்கு தெரியும்...ஆண்கள் விபச்சாரம் செய்வதை நீங்கள் கேள்விப்படவில்லோயோ[ஆனால் இதுவும் பெண்கள் செய்யும் விபச்சாரத்தோடு ஒப்பிடுகையில் குறைவு.]...பெண்கள் விபச்சாரம் செய்கிறார்களே அதற்கு என்ன காரணம் என்பதை எப்பவாவது சிந்தித்து பாத்தீர்களா?

ஒரு நாளைக்கு ஒருத்தனோட படுப்பதே கஸ்டம் ஆனால் விபச்சாரத்தை தொழிலாக கொண்டோர் ஒரு நாளைக்கு எத்தனை பேரோடு படுக்க வேண்டும்?...ஒரு தகப்பன்,சகோதரன்,கணவன் குடும்பத்தை கவனிக்காமல் நடுத் தெருவில் விட தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகவும்,தங்களது குழந்தைகளுக்காகவுமே இத் தொழிலை செய்கின்றனர்...ஒரு குடும்ப தலைவன் ஒழுங்காய் இருந்தால் ஏன் பெண்கள் இந்த தொழிக்குப் போக போகிறார்கள்?

எந்தத் தாயாவது தன்மகனோடு படுத்தாள என்ட செய்தியை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?... பெண்களும் தப்பு செய்கிறார்கள் தான் இல்லை என சொல்லவில்லையே ஆனால் ஆண்களோடு ஒப்பிடுகையில் குறைவு என்று தானே சொல்கிறேன்...இந்த கட்டுரையை ஆராய்ச்சி செய்து எழுதியவர் ஒரு ஆண்...சும்மா ஆண்கள் தப்பு செய்தால் அதை தட்டிக் கேட்க மகளிர் சங்கங்கள் இருக்கு ஆண்களுக்கு சங்கங்கள் இல்லை என்ட சின்னப் பிள்ளைத் தனமான வாதங்களை விடுங்கள்...வேண்டுமானால் நீங்களே ஒரு சங்கம் தொடங்கலாம்

மீண்டும் சொல்கிறேன் தலைப்போடு சேர்ந்து கருத்து எழுதுங்கள்...இது வீட்டு வன்முறை பற்றிய தலைப்பு இல்லை...சந்தர்ப்பம் கிடைத்தால் ஆண்களால் எல்லோருட‌னும் படுக்க முடியும் என்பதே தலைப்பு...சந்தர்ப்பம் கிடைத்தும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கிறானே அவன் தான் உண்மையான ஆண் மகன்

'விபச்சாரம்' என்ற சொல்லை இணையத்தில் தேடினேன், விக்கிபிடியாவில் 'பால்வினைத்தொழில்' என்று இருந்தது, அதிலிருந்து சிலவற்றை இங்கே இணைக்கிறேன்...

அதற்காக எல்லாப் பிழைகளுக்கும் ஆண்கள் தான் காரணம் என்று சொல்லவில்லை. பல பெண்களும் விபச்சாரத்திற்குத் தாமாகவே காரணமாக உள்ளார்கள் என்பதும் உண்மையே.

-----

மேலும் இணையத்தில் தேடியபோது கிடைத்தது...இதில் எவ்வளவு உண்மை இருக்கென அறிய முடியவில்லை.

http://www.uyirmmai....s.aspx?cid=2263

எப்படி குட்டி இப்படி ஒரு முடிவுக்கு நீங்கள் வந்தனீங்கள்?

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.

நிக்கல்சனின் ஆய்வின்படி திருமணமான ஆண்கள் மாத்திரம்தான் கள்ள உறவைத் நாடுகிறார்களா? :blink:

டிஸ்க்கி

மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், மாட்டை கொண்டு மரத்தில் கட்டி விட்டு மரத்தைப் பற்றி எழுத வேண்டாம்.

இல்லை பொதுவாக ஆண்கள்...அவர்கள் திருமணம் முடித்தோ/முடிக்காமலோ இருக்கலாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதைத் தான் வந்து எழுதுவீர்கள் என்று எனக்கு தெரியும்...ஆண்கள் விபச்சாரம் செய்வதை நீங்கள் கேள்விப்படவில்லோயோ[ஆனால் இதுவும் பெண்கள் செய்யும் விபச்சாரத்தோடு ஒப்பிடுகையில் குறைவு.]...பெண்கள் விபச்சாரம் செய்கிறார்களே அதற்கு என்ன காரணம் என்பதை எப்பவாவது சிந்தித்து பாத்தீர்களா?

ஒரு நாளைக்கு ஒருத்தனோட படுப்பதே கஸ்டம் ஆனால் விபச்சாரத்தை தொழிலாக கொண்டோர் ஒரு நாளைக்கு எத்தனை பேரோடு படுக்க வேண்டும்?...ஒரு தகப்பன்,சகோதரன்,கணவன் குடும்பத்தை கவனிக்காமல் நடுத் தெருவில் விட தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகவும்,தங்களது குழந்தைகளுக்காகவுமே இத் தொழிலை செய்கின்றனர்...ஒரு குடும்ப தலைவன் ஒழுங்காய் இருந்தால் ஏன் பெண்கள் இந்த தொழிக்குப் போக போகிறார்கள்?

எந்தத் தாயாவது தன்மகனோடு படுத்தாள என்ட செய்தியை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?... பெண்களும் தப்பு செய்கிறார்கள் தான் இல்லை என சொல்லவில்லையே ஆனால் ஆண்களோடு ஒப்பிடுகையில் குறைவு என்று தானே சொல்கிறேன்...இந்த கட்டுரையை ஆராய்ச்சி செய்து எழுதியவர் ஒரு ஆண்...சும்மா ஆண்கள் தப்பு செய்தால் அதை தட்டிக் கேட்க மகளிர் சங்கங்கள் இருக்கு ஆண்களுக்கு சங்கங்கள் இல்லை என்ட சின்னப் பிள்ளைத் தனமான வாதங்களை விடுங்கள்...வேண்டுமானால் நீங்களே ஒரு சங்கம் தொடங்கலாம்

மீண்டும் சொல்கிறேன் தலைப்போடு சேர்ந்து கருத்து எழுதுங்கள்...இது வீட்டு வன்முறை பற்றிய தலைப்பு இல்லை...சந்தர்ப்பம் கிடைத்தால் ஆண்களால் எல்லோருட‌னும் படுக்க முடியும் என்பதே தலைப்பு...சந்தர்ப்பம் கிடைத்தும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கிறானே அவன் தான் உண்மையான ஆண் மகன்

வறுமை.. பிணி.. பட்டினி என்று சொல்லிச் சொல்லியே பெண்களை விபச்சாரம் செய்வதை நியாயப்படுத்திக் கொண்டிருங்கோ. ஐரோப்பாவில் மட்டும் 1 மில்லியன் தொகைக்கும் மேலாக பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள். அதுவும் வசதி படைத்த நாடுகளில் உள்ள பெண்கள். இவர்கள் எதற்காக விபச்சாரம் செய்கின்றனர்..??! இந்தளவுக்கு ஆண்கள் செய்வது இல்லை. ஆண்கள் பெண் விபச்சாரிகளை.. கொப்பி காட் செய்கிறார்களே தவிர.. ஆண்கள் விபச்சாரம் செய்வது வழக்கமில்லை.

மேலும்.. வீட்டில் ஆண்கள் மட்டும் தான் தவறாக நடந்து கொள்ளினம்.. என்ற உங்கள் பார்வை மிகத் தவறானது. பெண்கள் முறை கேடாக நடந்து கொள்வது பற்றிய செய்திகளும் இருக்கின்றன. ஆங்கிலத்தில் பேசும் போது.. எப்படி எல்லாம் பேசுவார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பள்ளி மாணவர்களையே விட்டு வைக்காத ஆசிரியைகள்.. வீட்டில் என்ன செய்யினமோ.. யாருக்கு தெரியும்..! ஆக.. தப்புச் செய்வதில்.. ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. சந்தர்ப்பம் கிடைச்சால் பெண்களும் ஆண்களுக்கு நிகராக தவறு செய்வார்கள். அதை இந்தக் கட்டுரையாளர் உட்பட எல்லோரும் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும். :icon_idea:

Edited by nedukkalapoovan

சந்தர்பம் கிடைக்கும் போது செய்யாமல் விட்டதுகளை நினைத்து காலம் பூரா மனம் வருந்துபவனே ஆண்மகன்.

நெடுக்கரில் அனுதாபம் தான் வருகின்றது.பாவம் குழந்தை பெடியன் அறியாத வயது.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

பல விபச்சாரிகள் சொல்லும் செய்தி இதுதான். யாரோ இழுத்துக் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்.. எங்களால் மீள முடியவில்லை என்று. உண்மையில் தற்செயலாக விபச்சாரத்தில் விடப்பட்டவர்கள் மீள்வதற்கு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை பல வழிமுறைகள் இருக்கின்றன. உண்மையில் மேலை நாடுகளில் விபச்சாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வறுமை என்பதை அரசு சரி செய்கிறது. இருந்தும் ஏன் விபச்சாரிகள் உருவாகின்றனர் என்றால்.. அதற்கு விடை பெண்களின் உடல் மற்றும் பணத்தேவை கருதியே. இவர்கள் தங்களின் தேவைக்காக சந்தர்ப்பங்களை உருவாக்கி ஆண்களை கவர்ந்து கொள்கின்றனர். இறுதில் பெயர்.. ஆண்கள் மீது சுமத்தப்படும். அவன் விபச்சாரியை நாடிப் போறான் என்று. ஆனால் சந்தர்ப்பம் பெண் விபச்சாரிகளால் உருவாக்கப்பட்டதாக இருக்கும். :icon_idea:

pimp (http://en.wikipedia.org/wiki/Pimp) என்று கேள்விப்படாத பால்குடி மாதிரி நாடகம் வேண்டாம். அதுவும் இலண்டனில் இருந்துகொண்டு!

நெடுக்ஸ், நீங்கள் எழுதிய கருத்துக்கே நானும் எனது கருத்தை முன்வைத்தேன். தனிப்பட்ட ரீதியின் களஉறவுகளை மனம் நோகப் பண்ண வேணும் என்பது எனது நோக்கமில்லை. நான் எழுதியதை மேற்கோள் காட்டி நீங்கள் முன்வைத்த கருத்திற்கு கு.சா. அண்ணை வைத்த கருத்து உங்களைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதியதால் தெரிந்தோ தெரியாமலோ நானும் ஒரு காரணமாகியுள்ளேன் என்று நினைக்கத் தோன்றுகிறது. அதற்காக நெடுக்ஸிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்! :(

...

எப்படி குட்டி இப்படி ஒரு முடிவுக்கு நீங்கள் வந்தனீங்கள்?

...

ரதி, பிரித்தானியாவில் பல பாடசாலைப் சிறுமிகள் பெற்றோர் தங்களுக்குக் கைசெலவிற்குப் பணம் கொடுப்பதில்லை என்பதற்காக, போதைப் பொருட்கள் வாங்குவதற்காக என்று சிறிய வயதிலையே விபச்சாரத்தில் அதன் கெடுதல்கள், பின்விளைவுகள் முழுதும் தெரியாமல் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மையே! அதே போல் பல கிழக்கு ஐரோப்பிய நாடுப் பெண்கள் முக்கியம் போலந்து, ரசிய நாடுகளில் இருந்து வரும் பெண்கள் திருமணமாகி குடும்பம் இருந்தும் பதவி உயர்வுக்காக (குறுக்கு வழியில் அடைய நினைக்கும் சிலர்) மட்டும் மேலதிகாரிகளின் கவனத்தை தம்பக்கம் ஈர்த்து, பதவி உயர்வு பெறுகிறார்கள். இதுவும் ஒரு வகை விபச்சாரம் தான்! இவர்களை யார் கட்டாயப் படுத்துவது?

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்பம் கிடைக்கும் போது செய்யாமல் விட்டதுகளை நினைத்து காலம் பூரா மனம் வருந்துபவனே ஆண்மகன்.

ஓம் ஓம்.. அப்ப இந்தியாவில நிக்கேக்க செய்ய முடியல்லையே.. அப்புறம்.. இந்தியன் ஆமிக்காரனோட நிற்கேக்க... செய்ய முடியல்லையே.. இப்ப சிறீலங்கன் ஆமியோட சேர்ந்து செய்தால் என்ன..என்று நினைச்சு.. வருந்திறவை தான்... ஒட்டுக்குழு ஆயுத தாரிகள். அது உண்மை தான். அவையைப் போலவே உலகமும் இருந்திட்டா.. இன்று உலகத்தில்.. எதுவும் உருப்படியா இருக்க முடியாது. ஆண்களும் தான். ஒட்டுக்குழுக்கள் போல கேடு கெட்ட ஆண்கள் தான் உலகம் எங்கும் இருக்கினம் என்பது.. ஒட்டுக் குழு ஆயுத தாரிகளுக்கு மட்டுமே பொருந்தும். :icon_idea::lol: :lol: :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முகம்தெரியாத ஒரு அன்னையைச் சாடி கருத்தெழுத குமாரசாமியண்ணைக்கு எப்படி மனம் வந்தது? :blink:

தமிழில மாமா வேலை என்று சொல்லினமே. அப்புறம் எதுக்கு இது. மாமாக்கள் விபச்சாரிகளை உருவாக்குவதிலும்.. விபச்சாரிகளின் ஏஜெண்டுகளாக இருந்து அவர்களுக்கு ஆண்களை வளைச்சுக் கொடுக்கிற பேர் வழிகளே தவிர.. வேறு எதுவும் இல்லை. மேற்கு நாடுகளில் வறுமையில் விபச்சாரம் செய்பவர்கள் குறைவு.. இல்லை எனலாம். மேலதிக பணம்.. போதைவஸ்துக்கு.. பணக்கார ஆண்களை கவர.. சமூகத்திற்கு மாறாக.. உடல் தேவைகளை பூர்த்தி செய்ய என்று விபச்சாரம் செய்யும் பெண்களே அதிகம். :):lol:

...

காசு நிறைய இருக்கு எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் நடந்து கொண்டு போகும் போதா விபச்சாரி கண்ணில் பட்டு சமூக சேவை செயக்கிறான்? உடல் பூர்த்தி செய்யத்தானே ஆண்களும் அங்கு போகிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகம்தெரியாத ஒரு அன்னையைச் சாடி கருத்தெழுத குமாரசாமியண்ணைக்கு எப்படி மனம் வந்தது? :blink:

முகம் தெரியாத பெண்களை குறை சொல்வதற்கும்....அவர்களின் பொருளாதார பிரச்சனைகளை வேறுபார்வையில் பார்ப்பதற்கும் திரு நெடுக்கால் போவானுக்கு எப்படி மனசு வந்தது? :(

...

ஆக.. பெண்ணின் உடல் தேவைக்கு ஆணும்.. ஆணின் உடல் தேவைக்கு பெண்ணும் தேவைப்படுவதால்.. இருவரும் சேர்ந்து அளிக்கும் பொது சந்தர்ப்பத்தின் கீழ் தவறு செய்யினம். அப்படி இருக்க.. இந்தக் கட்டுரையாளர் ஆண்களை மட்டும் சாடி.. பெண்களை பாதுகாப்பதன்.. அல்லது அவர்களின் சமூகத் தவறை மூடி மறைப்பதன் நோக்கமே எனக்குப் புரியவில்லை. அது தவறான ஒரு நிலைப்பாடு. இவை பெண்கள் தாராளமாக தவறு செய்யவே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்... இல்லையா. :):icon_idea:

ஒரு ஆணிடம் பல பெண்கள் தமது உடல் தேவைகளை பூர்த்தி செய்கிறார்களா? அல்லது ஒரு பெண்ணிடம் பல ஆண்கள் தமது உடல் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்களா? இதில் எது அதிகமாக/ பரவலாகக் காணப்படுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணிடம் பல பெண்கள் தமது உடல் தேவைகளை பூர்த்தி செய்கிறார்களா? அல்லது ஒரு பெண்ணிடம் பல ஆண்கள் தமது உடல் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்களா? இதில் எது அதிகமாக/ பரவலாகக் காணப்படுகிறது?

மேற்கு ஐரோப்பாவில் 1 மில்லியன் விபச்சாரிகள். அவர்களுக்கு நிரந்தர வாடிகையாளர்கள் என்போர் அந்தளவுக்கு இல்லை. ஆனால் அவர்கள் குறைந்தது 10 வாடிக்கையாளரையாவது (அவர்களில் அநேகர் மீண்டும் மீண்டும் கவர்ந்திழுக்கப்படுபர்களாக உள்ளனர்.) கவர்ந்திழுக்கச் செய்வதாக அண்மையில் செய்திக் குறிப்பொன்றில் படித்தேன். இதன் மூலம்.. சமூக நோய்களின் தாக்கம்.. பிரதானமாக நிகழ்கின்றன. ஆக.. பெண்கள்.. தங்களின் மேலதிக வாருவாய்க்காக ஏற்படுத்திக் கொடுக்கும் சந்தர்ப்பம் ஆண்களை தவறு செய்யத் தூண்டுகிறது. ஒரு கும்பல் கடையை உடைக்க.. கட்டுப்பாடில்லாத இடங்களில் எல்லாம் மேலும் கும்பல்கள் கடைகளை உடைத்தன. அதுபோலவே.. கட்டுப்பாடில்லா.. விபச்சாரத்திற்கான சந்தர்ப்பம்... பெண்களால் அளிக்கப்படுகின்ற போது ஆண்கள் தப்புச் செய்கின்றனர். அந்த இடத்தில் கட்டுப்பாட்டை போட்டு விட்டால்.. தப்புச் செய்பவர்கள் நிச்சயம் குறையவே செய்வார்கள். இல்லையா..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை, ஐரோப்பிய நாடுகளில் வேலை இல்லாத ஒரு நபருக்குத் தேவையான சாப்பாட்டுக்கும், இருக்கிற இடத்திற்கும் அந்தந்த நாடு அரசாங்கம் சலுகைகள் செய்கிறது. அதற்குள் வாழ்க்கை முறைய கடைப்பிடிக்க முடியாதவர்கள் தான் மேற்கொண்டு வேறு வழிகளில் சம்பாதிக்கிறார்கள்.

குட்டியர்! அவர்களின் வாழ்க்கை முறையை(ஐரோப்பியர்கள்) நீங்களும் வாழ்ந்து பாருங்கள் அப்போது தெரியும்.ஒரு மூட்டை பசுமதியை 20 யுரோவுக்கு வாங்கி வைச்சுட்டு பெரியவசனம் எல்லாம் எழுதப்படாது(வேறை ஒராளுக்கு நக்கல்) :)

நானே நடிகைகளை சந்தித்தத்தை மறந்தாலும் யாழில் சிலர் மறக்காமல் அதை நினைத்தே வயிறு ஏரிகின்றார்கள்.

சாமியார் சிஷ்யன் கதைதான் ஞாபகம் வருகின்றது.

மேற்கு ஐரோப்பாவில் 1 மில்லியன் விபச்சாரிகள். அவர்களுக்கு நிரந்தர வாடிகையாளர்கள் என்போர் அந்தளவுக்கு இல்லை. ஆனால் அவர்கள் குறைந்தது 10 வாடிக்கையாளரையாவது (அவர்களில் அநேகர் மீண்டும் மீண்டும் கவர்ந்திழுக்கப்படுபர்களாக உள்ளனர்.) கவர்ந்திழுக்கச் செய்வதாக அண்மையில் செய்திக் குறிப்பொன்றில் படித்தேன். இதன் மூலம்.. சமூக நோய்களின் தாக்கம்.. பிரதானமாக நிகழ்கின்றன. ஆக.. பெண்கள்.. தங்களின் மேலதிக வாருவாய்க்காக ஏற்படுத்திக் கொடுக்கும் சந்தர்ப்பம் ஆண்களை தவறு செய்யத் தூண்டுகிறது. ஒரு கும்பல் கடையை உடைக்க.. கட்டுப்பாடில்லாத இடங்களில் எல்லாம் மேலும் கும்பல்கள் கடைகளை உடைத்தன. அதுபோலவே.. கட்டுப்பாடில்லா.. விபச்சாரத்திற்கான சந்தர்ப்பம்... பெண்களால் அளிக்கப்படுகின்ற போது ஆண்கள் தப்புச் செய்கின்றனர். அந்த இடத்தில் கட்டுப்பாட்டை போட்டு விட்டால்.. தப்புச் செய்பவர்கள் நிச்சயம் குறையவே செய்வார்கள். இல்லையா..???! :icon_idea:

நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரியாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் பாருங்கள், ஆண்களிடம் இருந்து அந்த வருவாயை பெற முடியும் என்ற ஒரு நோக்கம் இருப்பதால் அதைக் குறிவைத்து பல பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

ஆக, சமூகத்தில் விபச்சாரத்திற்கு வலுச்சேர்ப்பது யார்?

ஆண்கள் விபச்சாரிகளிடம் போவதை நிறுத்தினால்/ பெண்கள் இலகுவான முறையில் சம்பாதிப்பதை ஊக்குவிக்காது இருந்தால், அவர்கள் வேறு/ கஷ்ரமான ஒரு வழியில் பணத்தை சமாதிக்க முடியுமல்லவா? சமூக நோய்களையும் பரப்பாது இருக்க உதவும் அல்லவா?

குட்டியர்! அவர்களின் வாழ்க்கை முறையை(ஐரோப்பியர்கள்) நீங்களும் வாழ்ந்து பாருங்கள் அப்போது தெரியும்.ஒரு மூட்டை பசுமதியை 20 யுரோவுக்கு வாங்கி வைச்சுட்டு பெரியவசனம் எல்லாம் எழுதப்படாது(வேறை ஒராளுக்கு நக்கல்) :)

அண்ணை நாங்க ஒன்றும் ராஜ போக கம்பிர வாழ்க்கை வாழ இல்லை! எங்களுக்கும் வாழ்கையின் கஷ்ரம் தெரியும். பசுமதியை வாங்கி வைச்சு ஒவ்வொரு நாளும் சோறு சாபிட்டால் வேலைக்கு எப்படி போறது? :o

வரவுக்கு ஏற்ற செலவு செய்யும் ஐரோப்பியர்களும் உள்ளார்கள். அளவுக்கு அதிகமா ஆசைப் படுகிறவர்களுக்குத்தான் திடீரென பணம் தேவைப் படுகிறது. அதுவும் 'ஈஸி மணி'!

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரியாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் பாருங்கள், ஆண்களிடம் இருந்து அந்த வருவாயை பெற முடியும் என்ற ஒரு நோக்கம் இருப்பதால் அதைக் குறிவைத்து பல பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

ஆக, சமூகத்தில் விபச்சாரத்திற்கு வலுச்சேர்ப்பது யார்?

ஆண்கள் விபச்சாரிகளிடம் போவதை நிறுத்தினால்/ பெண்கள் இலகுவான முறையில் சம்பாதிப்பதை ஊக்குவிக்காது இருந்தால், அவர்கள் வேறு/ கஷ்ரமான ஒரு வழியில் பணத்தை சமாதிக்க முடியுமல்லவா? சமூக நோய்களையும் பரப்பாது இருக்க உதவும் அல்லவா?

நாங்கள் மீண்டும்.. கோழியில் இருந்து முட்டை வந்ததா.. முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற நிலைக்கு வாறம் என்று நினைக்கிறன். நான் பெண்கள் இலகுவாக காசு பார்க்க.. உடல் தேவைகளை தீர்க்க.. இன்னும் இன்னும் பிற தேவைகளுக்காக.. ஆண்களைக் கவர்ந்து விபச்சாரம் செய்கிறார்கள்.. என்றால்.. நீங்கள் ஆண்கள் கவரப்படுவதால் தானே பெண்கள் அப்படிச் செய்யினம் என்கிறீர்கள். நானோ பதிலுக்கு பெண்கள் கவர்வதால் தான் ஆண்கள் அப்படி நினைக்கினம் என்று சொல்கிறேன். ஆக.. அடிப்படையில் இரு தரப்பும்.. இதற்குக் காரணமாகிறது. கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது போல ஆண்களே காரணம் அல்ல. பெண்களும் காரணமாகிறார்கள்.. பெண்களும் ஆண்களை நோக்கி அப்படி ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கா விட்டால்.. ஆண்கள் இப்படி ஒரு சமூகச் சீரழிவுக் கலாசாரத்திற்குள் நுழைய வேண்டிய தேவை வந்திருக்காது... தானே. 1 மில்லியன் விபச்சாரிகளிடம் எல்லா ஆண்களும் போவதில்லை. ஒரு 250 ஆயிரம் ஆண்கள் போகக் கூடும். ஆக அடிப்படையில் ஒரு விபச்சாரி.. ஒரே ஆணுடன் பல தடவைகள் தனது உடலை விற்கிறாள். இந்த அடிப்படையில் நோக்கினால்.. விபச்சாரிகளால் ஆண்கள் கவரப்படுவதே அதிகம் நிகழ்கிறது. இருந்தும் பல மில்லியன் ஆண்கள் கட்டுப்போட்டோடு தான் வாழ்கின்றனர். அவர்களை தான் நாம் அதிகம் கவனத்தில் எடுத்துப் பாராட்ட வேண்டும். :)

-------------------------------------------------------

இங்கு சிலர் சொல்கிறார்கள்.. சோத்துக்கு அவள் உடலை விற்கிறாள்.. சில பேர் 20 யூரோவில் பசுமதி அரிசியில் வாழ்ந்து கொண்டு அதிகம் பேசினம் என்று. சொந்த உழைப்பில் 20 யூரோவில் பசுமதி அரசி வாங்கி கஞ்சி குடிக்கிறவன்.. உடலை விற்று ஐந்து நட்சத்திர விடுதி வாழ்க்கை வாழ்பவளைக் காட்டிலும் சமூகத்திற்கு மிகவும் பாதுகாப்பானவன். அது தான் மனித சமூகத்துக்கு அவசியமே அன்றி.. ஆடம்பர வாழ்க்கைக்காக சமூகத்தை சீரழிப்பது அல்ல அவசியம்.! இதுவே எனது நிலைப்பாடு. உண்மையான சமூக அக்கறை உள்ள எந்த மனிதனும் இப்படித்தான் சிந்திப்பான். சிலபேர் ஊருக்கு நல்லா உபதேசிப்பினம்.. அவையே தங்கட குடும்பங்களை விபச்சாரத்துக்கு அனுப்பி பிழைப்பினமோ..??! அங்கு அதனால் எழும் சமூகப் பிரச்சனைகளை சந்திக்க அவை தயாராமோ.. அடுத்தவனை படுகுழியில் தள்ளிவிட்டு.. அதற்கு வியாக்கியானம்.. கதைக்க ஆயிரம் பேர் கியூவில நிப்பினம்.. ஆனால் பாவம் படுகுழியில் விழுந்தவன்.. தவிக்கும் தவிப்பை இவர்கள் உணரச் செய்யப் போவதும் இல்லை.. அவர்களின் துயர் இவர்களுக்கு தெரியப் போவதும் இல்லை. இதே நிலை தான் விபச்சாரத்திலும்.. அப்படியாகவே சமூக ஆய்வுகள் இனங்காட்டியுள்ளன. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, பிரித்தானியாவில் பல பாடசாலைப் சிறுமிகள் பெற்றோர் தங்களுக்குக் கைசெலவிற்குப் பணம் கொடுப்பதில்லை என்பதற்காக, போதைப் பொருட்கள் வாங்குவதற்காக என்று சிறிய வயதிலையே விபச்சாரத்தில் அதன் கெடுதல்கள், பின்விளைவுகள் முழுதும் தெரியாமல் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மையே! அதே போல் பல கிழக்கு ஐரோப்பிய நாடுப் பெண்கள் முக்கியம் போலந்து, ரசிய நாடுகளில் இருந்து வரும் பெண்கள் திருமணமாகி குடும்பம் இருந்தும் பதவி உயர்வுக்காக (குறுக்கு வழியில் அடைய நினைக்கும் சிலர்) மட்டும் மேலதிகாரிகளின் கவனத்தை தம்பக்கம் ஈர்த்து, பதவி உயர்வு பெறுகிறார்கள். இதுவும் ஒரு வகை விபச்சாரம் தான்! இவர்களை யார் கட்டாயப் படுத்துவது?

இது குறுக்குப் பார்வை குட்டி. போதைவஸ்து பாவிக்கும் பாடசாலை மாணவர்கள் மிகச் சிறுபான்மையினர். அத்தோடு கிழக்கு ஐரோப்பியப் பெண்கள் "ஈஸியாக மடங்குபவர்கள், வளமான வாழ்க்கைக்கு தங்களை விற்கத் தயங்கமாட்டார்கள்" என்பதும் சிறுபான்மையினருக்குத்தான் பொருந்தும் (எல்லாச் சமூகத்திலும் இப்படியானவர்கள் உள்ளனர்).

தமிழில மாமா வேலை என்று சொல்லினமே. அப்புறம் எதுக்கு இது. மாமாக்கள் விபச்சாரிகளை உருவாக்குவதிலும்.. விபச்சாரிகளின் ஏஜெண்டுகளாக இருந்து அவர்களுக்கு ஆண்களை வளைச்சுக் கொடுக்கிற பேர் வழிகளே தவிர.. வேறு எதுவும் இல்லை. மேற்கு நாடுகளில் வறுமையில் விபச்சாரம் செய்பவர்கள் குறைவு.. இல்லை எனலாம். மேலதிக பணம்.. போதைவஸ்துக்கு.. பணக்கார ஆண்களை கவர.. சமூகத்திற்கு மாறாக.. உடல் தேவைகளை பூர்த்தி செய்ய என்று விபச்சாரம் செய்யும் பெண்களே அதிகம். :):lol:

நீங்கள் சரியாக ஆராயவில்லை. வெறும் "ஆராய்ச்சிக்கு" மட்டும் இப்படியான இடங்களிற்குப் போய் சரியான தகவல்களைச் சேகரிக்க முயலுங்கள். <_<

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெண்கள் இலகுவாக காசு பார்க்க.. உடல் தேவைகளை தீர்க்க.. இன்னும் இன்னும் பிற தேவைகளுக்காக.. ஆண்களைக் கவர்ந்து விபச்சாரம் செய்கிறார்கள்.. என்றால்.. நீங்கள் ஆண்கள் கவரப்படுவதால் தானே பெண்கள் அப்படிச் செய்யினம் என்கிறீர்கள். நானோ பதிலுக்கு பெண்கள் கவர்வதால் தான் ஆண்கள் அப்படி நினைக்கினம் என்று சொல்கிறேன்.

நுகர்வுக் கலாச்சாரத்தைப் பற்றிய விளக்கம் நன்றாக இருக்கின்றது.

ஆண்களைக் கவரும் வழிகளை அறிந்துகொள்ளப் பெண்கள்தான் அதிகம் நீலப் படங்களைத் தயாரிக்கின்றார்கள்/நடிக்கின்றார்கள் ஏன் பார்க்கின்றார்கள் என்றும் நீங்கள் சொன்னாலும் சொல்லுவீர்கள்! :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தலைப்பையும்,கட்டுரையும் வாசித்து விட்டு பின்னர் உங்கள் கருத்துகளை எழுதுங்கள் என்று நான் எத்தனையோ தரம் சொல்லி விட்டேன் ஆனால் நீங்கள் அதை சாட்டை செய்யவே இல்லை...இந்த கட்டுரையாளர் சந்தர்ப்பம் கிடைத்தால் ஆண்கள் பிழை விடுவார்கள் என சொல்கிறாரே தவிர அவர்கள் விபச்சாரியிடம் போய் தான் பிழை விடுகிறார்கள் என சொல்லவில்லை...ஒர் ஆணுக்கு யாரோடு படுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அவர்களோடு படுத்து எழும்புவான்[கிருபன் ஏற்கனவே எழுதின மாதிரி சில ஆண்கள் மன வக்கிரங்களை மனதிற்குள் அமுக்கி கொள்கிறார்கள்.]...அது அவனது நண்பியாக இருக்கலாம்,கூட வேலை செய்பவளாக இருக்கலாம்,பப்பிற்கு[pub] வாறவளாக இருக்கலாம்....இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம் அதற்குள் ஒரு பகுதியினராக விபச்சாரிகளும் அடங்குவர்...உடனே நீங்கள் ஓடி வந்து ஆண்கள் கூப்பிட்டவுடனே பெண்கள் ஏன் படுக்கப் போவான் என்ட சின்னப் பிள்ளைத் தனமான வாதங்களை முன் வைத்து விவாதத்தை திசை திருப்ப வேண்டாம்...ஒன்றும் அறியாத பால்குடிக்கு சொல்கிற மாதிரி திரும்ப,திரும்ப என்னால் சொல்லிக் கொண்டு இருக்க முடியது.

நீங்கள் திரும்ப,திரும்ப ஆண்கள் உத்தமர்கள் என சொல்வதால் அது உண்மையாகி விடாது...தனியே புத்தகப் படிப்பையும்,கணணி படிப்பையும் விடுத்து வெளியே வாருங்கள்...இந்த உலகத்தில் என்ன நடக்குது என்று கண்களை திறந்து கொண்டு பாருங்கள்...உலகத்தை படியுங்கள் அதற்காக விபசாரியிடம் போங்கோ என நான் சொல்லவில்லை.

குட்டி பள்ளிக் கூடம் செல்லும் சிறுமிகள் போதைவஸ்து பாவனைக்காக விபச்சாரம் செய்கிறார்கள் என எழுதி இருந்தீர்கள் அது யாருடைய பிழை? பெற்றோர் முழுமையாக கவனித்து இருந்தால் ஏன் சிறுமிகள் இப்படி கெடப் போகிறார்கள்...இந்த புலம் பெயர் நாட்டில் நல்ல வசதி இருக்கு,அரசு கவனித்துக் கொள்கிறது அப்படி இருந்தும் ஏன் பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள் எனக் கேட்டால் அதற்கு பல காரணங்கள் உண்டு...பொருளாதார பிரச்சனை, வேலையில்லாத் திண்டாட்டம் அதனால் கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பெண்களுக்கு[அவர்களுக்கு குடும்ப பொறுப்பு இருக்கு] இந்த வேலை சுலபமாக கிடைப்பதால் அதாவது செக்ஸ்க்காக அலையும் ஆண்கள் தங்கள் மனைவியையும்,குழந்தைகளையும் மறந்து இவர்களிடம் போவதால் இந்த தொழிலை செய்கிறார்கள்;...அடுத்து அரசு உதவி செய்கிறது தானே பிறகேன் இந்த தொழிலை செய்வான் என்பவர்களுக்கு அரசு கொடுக்கும் காசு வீட்டு வாடகைக்கும்,சாப்பாட்டுக்கும் தான் போதுமாய் இருக்கும் இதர செலவுகளுக்கு?...ஒரு பெண்ணும் குழந்தைகளும் தனித்து விடப்பட்டால் அந்தப் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் போது மற்றப் பிள்ளைகள் என்ன எல்லாம் வைத்திருக்குதோ அதை எல்லாம் தாமும் ஆசைப்படுவார்கள் அதற்காக அந்த தாயும் விபச்சாரத்தில் ஈடுபடலாம்...ஆசைகளை அடக்க வேண்டும் என்று சும்மா இணையத்தில் வந்து எல்லோரும் எழுதலாம் ஆனால் எத்தனை பேர் அதைக் கடைப் பிடிக்கிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்...இந்தக் கலவரத்தில் கடை எல்லாம் உடைத்து களவு எடுத்தது ஏன்?

விபச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ட நோக்கம் இருந்தால் முதலில் ஆண்களாகிய நீங்கள் அவர்களை நாடிப் போகாமல் இருந்தாலே இந்தத் தொழில் தன்னாலே ஒழியும்...நெடுக்ஸ்சுக்கு விபச்சாரத்தை இல்லாமல் செய்யும் நோக்கம் இருந்தால் முதலில் ஊருக்குப் போய் வன்னி யுத்தத்தினால் பாதிக்கப் பட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்காக இந்தத் தொழிலை செய்பவர்களை காப்பாற்றவும் அதன் பின் புலம் பெயர் நாடுகளை கவனிக்கலாம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.