Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொடைத்தாக்குதலுக்கு தயாரான அமெரிக்க விமானப்படை வீரர்கள்

Featured Replies

தற்கொடைத்தாக்குதலுக்கு தயாரான அமெரிக்க விமானப்படை வீரர்கள்

முதலில் இரட்டைக்கோபுரம் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட விமானத்தின் விமானியின் தவறால் ஏற்பட்டது என நம்பப்பட்டு பின்னர் அது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் என உணரப்பட்டது.

அந்த வேளையில் மேலும் விமானங்கள் கடத்தப்பட்டு அமெரிக்காவின் தலைநகரை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தலாம் என அறியப்பட்டபொழுது, அமெரிக்கா போர்விமானங்கள் அந்த விமானங்களுடன் மோதி தற்கொடைத்தாக்குதலையும் நடாத்த தயாராகி இருந்தன என இப்பொழுது தகவல்கள்

வெளியாகியுள்ளன.

விமானத்திற்கு தேவையான குண்டுகளை பொருத்த நேரம் காணாமல் இருந்ததாகவும், அவை பொருத்திய விமானங்கள் அடுத்தகட்டமாக பறக்க இருந்தவேளையில் ஒருகட்ட விமானிகள் தமது போர் விமானங்களை கடத்தப்பட்ட விமானங்களுடன் மோதி, தேவையெனில் தம்மையும் அழிக்கத்தயாராக இருந்தனராம்.

இந்த தற்கொடைக்கு தயாராக இருந்த வீரர்களை வர்ணித்து அமெரிக்கா மிகவும் பெருமை கொள்கிறது.

I'd be a kamikaze pilot: Fighter pilot recalls her would-be 'suicide' mission to take down United 93 - and the heroes who did it for her

Read more: http://www.dailymail.co.uk/news/article-2035704/9-11-anniversary-Heather-Penneys-suicide-mission-United-93.html#ixzz1XkuMHMyz

Kamikaze: F-16 pilots planned to ram Flight 93

When the pilots of the 121st Fighter Squadron of the D.C. Air National Guard got the order to intercept Flight 93, the hijacked jet speeding toward the nation's capital, they figured there was a decent chance they would not come back alive.

That's because the F-16 jets they were rushing to get airborne were largely unarmed, recalls one of the pilots, then-Lt. Heather Penney, leaving them one option to take out the wayward plane: a kamikaze mission.

"We wouldn’t be shooting it down. We would be ramming the aircraft, because we didn’t have weapons on board to be able to shoot the airplane down," Penney told C-SPAN.

http://www.msnbc.msn.com/id/44459345/ns/us_news-9_11_ten_years_later/t/kamikaze-f--pilots-planned-ram-flight/

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இது பயங்கரவாதம் இல்லையா? :unsure: விமானத்தில் இருக்கும் அப்பாவிப் பயணிகளைக் கொல்வது பயங்கரவாதம்தானே..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தங்கட தேசத்தை காப்பாற்ற தற்கொலை தாக்குதல் செய்ய இருந்தவர்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இது பயங்கரவாதம் இல்லையா? :unsure: விமானத்தில் இருக்கும் அப்பாவிப் பயணிகளைக் கொல்வது பயங்கரவாதம்தானே..! :rolleyes:

Philadelphia இல் விழுந்த விமானத்தில் இருந்தவர்களின் தியாகத்தினால்தானே வாஷிங்டன் தாக்குதலில் இருந்து தப்பியது.

பல்லாயிரம் மக்களையும் சொத்துக்களையும் காக்க சில நூறுபேரைப் பலி கொடுக்கத்தான் வேண்டும் என்று எத்தனை படங்களில் தேசபக்தியைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது என்பது தெரிந்தும் இப்படிக் கேட்கலாமா!

  • தொடங்கியவர்

வென்றவனால், வல்லவனால் தான் 'பயங்கரவாதம்' எது? என்பது நிர்ணயிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக, பயங்கரமான எதிரிக்கெதிரான பயங்கரவாதம், தியாகமாகின்றது!!!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

Philadelphia இல் விழுந்த விமானத்தில் இருந்தவர்களின் தியாகத்தினால்தானே வாஷிங்டன் தாக்குதலில் இருந்து தப்பியது.

பல்லாயிரம் மக்களையும் சொத்துக்களையும் காக்க சில நூறுபேரைப் பலி கொடுக்கத்தான் வேண்டும் என்று எத்தனை படங்களில் தேசபக்தியைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது என்பது தெரிந்தும் இப்படிக் கேட்கலாமா!

ராஜீவ் காந்தியை விட்டுவைத்திருந்தால் இன்னும் பல்லாயிரம் தமிழர்களும் அவர் உடமைகளுடன் அழிந்து போயிருப்பர்..

காமினி திசநாயக்கவை விட்டுவைத்திருந்தால் ஊரிலுள்ள ந்நுலகங்களையெல்லாம் எரித்திருப்பார்..

சிறிசபாரத்தினத்தை விட்டுவைத்திருந்தால் இன்னும் பல சகோதரப் படுகொலைகளை நிகழ்த்தியிருப்பார்..!

:icon_mrgreen:

நாம் பயங்கரவாதிகள் அல்ல. நமது விடுதலைப்போராட்டத்தை யாரோ கொச்சை படுத்தி பயங்கரவாதமாக காட்டிவிட்டாரகள் என்பதற்காக தியாகங்களை மறுத்து பயங்கரவாதமென்பதாலோ, அல்லது உண்மைப் பயங்கரவாதங்களை நியாயப்படுத்த முயன்றாலோ நமக்கும் கெடுதல் கூட்டத்திற்கும் உள்ள பேதம் இல்லாமல் போய்விடும்.

9/11 பயங்கர வாத நிகழ்ச்சிகளை சந்திரிக்கா நன்கு பயன் படுத்தினார். ஆனால் அவர் கட்டிய கோட்டைக்குள் இன்று அவரே நுழையமுடியாமலிருக்கிறார். இந்த ஒன்றே சந்திரிக்கா பிழையென்று எடுத்து காட்டுகிறது. உண்மைப் பயங்கரவாதிகளை வெளிக்கொணர நாம்தான் முன்நிற்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியை விட்டுவைத்திருந்தால் இன்னும் பல்லாயிரம் தமிழர்களும் அவர் உடமைகளுடன் அழிந்து போயிருப்பர்..

காமினி திசநாயக்கவை விட்டுவைத்திருந்தால் ஊரிலுள்ள ந்நுலகங்களையெல்லாம் எரித்திருப்பார்..

சிறிசபாரத்தினத்தை விட்டுவைத்திருந்தால் இன்னும் பல சகோதரப் படுகொலைகளை நிகழ்த்தியிருப்பார்..!

:icon_mrgreen:

மேலே கூறப்பட்டவைக்கும் தேசபக்திக்கும் ஒரு சம்பந்தமில்லை என்பது 20-25 வருடங்கள் கழிந்த பின்னரும் தெரியாவிட்டால்.....

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கூறப்பட்டவைக்கும் தேசபக்திக்கும் ஒரு சம்பந்தமில்லை என்பது 20-25 வருடங்கள் கழிந்த பின்னரும் தெரியாவிட்டால்.....

அப்ப, உப்புச் சத்தியாக்கிரகம் செய்வது தான்... தேசபக்தி போலை... கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, உப்புச் சத்தியாக்கிரகம் செய்வது தான்... தேசபக்தி போலை... கிடக்குது.

ஆமாம். இந்தியாவில் அதுதான் தேசபக்தியாக நாட்டை ஒருமைப்படுத்த உதவியது. <_<

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கூறப்பட்டவைக்கும் தேசபக்திக்கும் ஒரு சம்பந்தமில்லை என்பது 20-25 வருடங்கள் கழிந்த பின்னரும் தெரியாவிட்டால்.....

என்ன கிருபன்.. தெற்கில் நடந்த தற்கொடைத் தாக்குதல்கள் தேச பக்திக்காக அல்லாமல் கூலிக்காகச் செய்யப்பட்டது என்கிறீர்களா? விளங்கவில்லையே? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஜனநாயக மாயக்குள்ளும்.. முதலாளித்துவத்துக்குள்ளும் மனிதர்களை மந்தைகளாக்கி வைத்திருக்கிறது. அதன் ஆயுத.. பொருண்மிய பலத்தால்.. அது தான் நினைத்தை எல்லாம் கொள்கையாக வகுத்து திணித்து வருகிறது. தனது.. நலனுக்காக அது மனிதர்களைக் கொல்லலாம்.. வன்முறையை தூண்டலாம்.. நேட்டோவை ஏவி விட்டு.. செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யலாம்.. அது பயங்கரவாதம் கிடையாது. அமெரிக்க நலனை பாதிக்கக் கூடிய மற்றவர்கள் செய்யும் செயல்களே பயங்கரவாதமாகும்.. குற்றமாகும்.

பலசாலி சொல்லுறதுதான் எடுபடும்.. இந்த உலகில்.. ஏனெனில்.. அவனிடம்.. மற்றைய மனிதர்களை அடக்கி வைக்கக் கூடிய பலம்.. எதிர்ப்புக்காட்டுவதை தடுக்கக் கூடிய பலம் உண்டு. அது இருக்கும் வரை அமெரிக்கா என்ன.. அதன் பாதையில் பயணிக்கும்.. பஞ்சசீலர்களுக்கும்.. இந்த வக்கிர எண்ணம் வருவதில் குறை இருக்க வாய்ப்பில்லை..! :):icon_idea:

  • தொடங்கியவர்

அன்று அமெரிக்க இருக்கவில்லை, ஆனால், சோழன் இருந்தான். தமிழ் நாடுகள் இருந்தன.

பல சாம்ராஜ்யங்களை ஆண்டான். இறுதியில் மனிதாபிமானம் என்ற பெயரில் அவற்றை விட்டுக்கொடுத்தான். சாம்ராஜ்யங்களை இழந்தான். நாடுகளை இழந்தான்.

இன்று ஏதிலியாக, அடிமையாக, வேண்டப்படாதவனாக உலகில் அலைகிறான்.

ஒருவன் வந்தான். எமக்காக வீரத்துடன் போராடினான். இழந்த நாட்டை மானத்தை மக்களை காக்க போராடினான். இறுதியில் அவனை பயங்கரவாதி என்று பொய் உரைத்து அழித்துவிட்டார்கள். சோழனையும் எல்லாளனையும் ஏமாளிகளாக்கி விட்டார்கள். நாம் ஏமாந்துவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கிருபன்.. தெற்கில் நடந்த தற்கொடைத் தாக்குதல்கள் தேச பக்திக்காக அல்லாமல் கூலிக்காகச் செய்யப்பட்டது என்கிறீர்களா? விளங்கவில்லையே? :unsure:

எனது முந்தைய பதிவு தங்களது பட்டியலில் உள்ளவற்றைக்கு மாத்திரம்தான்; தெற்கில் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்துக்குமல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

எனது முந்தைய பதிவு தங்களது பட்டியலில் உள்ளவற்றைக்கு மாத்திரம்தான்; தெற்கில் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்துக்குமல்ல!

"போர் என்றால், போர் தான்....." என்ற ஜே. ஆர் ஜெயவர்தனா ஆயுதபலமற்றிருந்த ஈழத்தமிழர்களை நோக்கி கொக்கரித்ததை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அல்லது விதண்டா வாதம் செய்ய விரும்புகின்றீர்களா கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

..இன்று ஏதிலியாக, அடிமையாக, வேண்டப்படாதவனாக உலகில் அலைகிறான்.

ஒருவன் வந்தான். எமக்காக வீரத்துடன் போராடினான். இழந்த நாட்டை மானத்தை மக்களை காக்க போராடினான். இறுதியில் அவனை பயங்கரவாதி என்று பொய் உரைத்து அழித்துவிட்டார்கள்.சோழனையும் எல்லாளனையும் ஏமாளிகளாக்கி விட்டார்கள். நாம் ஏமாந்துவிட்டோம்

இந்த 'புண்ணிய கைங்கரிய'த்தில், சில ஈழ அமைப்புகளும், தமிழ் மக்களும், தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டு அழிய பேருதவியாக நினறனர் என்பதையும் இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

கண்கெட்டபின் 'சூரிய(தேவன்) வணக்கம்' பயன் தராது! :blink:

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானிலும் தலபான்கள் குறிப்பாக அமெரிக்கர்களுக்கு எதிராக பல தற்கொலை தாக்குதல்களை செய்கிறார்கள்.அமெரிக்கர்களும் பதிலுக்கு அவர்கள் மீது தற்கொலை தாக்குதலை செய்யலாமே.ஏன் இப்படி படம் காட்டுகிறார்கள்.(philadelphia)வில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட விமானம் அமெரிக்க விமானப்படை தான் சுட்டு வீழ்த்திவிட்டு விமானத்தில் இருந்த பயணிகளை மாவீரர்கள் ஆக்கியதை அமெரிக்க மக்களில் பலர் அறிவார்கள்.

ஆப்கானிஸ்தானிலும் தலபான்கள் குறிப்பாக அமெரிக்கர்களுக்கு எதிராக பல தற்கொலை தாக்குதல்களை செய்கிறார்கள்.அமெரிக்கர்களும் பதிலுக்கு அவர்கள் மீது தற்கொலை தாக்குதலை செய்யலாமே.ஏன் இப்படி படம் காட்டுகிறார்கள்.(philadelphia)வில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட விமானம் அமெரிக்க விமானப்படை தான் சுட்டு வீழ்த்திவிட்டு விமானத்தில் இருந்த பயணிகளை மாவீரர்கள் ஆக்கியதை அமெரிக்க மக்களில் பலர் அறிவார்கள்.

அவர்களுடைய Navy Seals யதார்த்தமாக தற்கொலைப்படைகள்தான். ஆனால் அமெரிக்கர் அகில உலகத்திலும் ஆயத்தங்களை வைத்திருப்பதால், இவர்கள் தாம் விரும்பியதை செய்துவிட்டு இடங்களுக்கு திரும்பி விடுகிறார்கள்.

Flight 93 பயணிகள் மாவீரர்களாக காட்டப்படுவது, அவர்கள்தான் பிளேனை விழுத்தினார்கள் என்பதால்த்தான். இந்த பிளேன் Washingtonனை தாக்கவிருந்ததால், Air Force அதை தாக்கி அழித்ததாக நம்புவார் உளர் ( புஸ் உள்ளே இருக்கவில்லை). விசாரணை குழுக்கள் அரசாங்கத்தினது என்பதால் சுயாதீனமாக உண்மையை கண்டறிய வாய்ப்பில்லை. ஆகாயத்தில் நடந்ததை இன்னொரு party அவதானிக்ககூடியதென்றால் அது ரூசியா. அவர்கள் இந்த வாதத்தில் பங்கு பற்றவில்லை.

இதில் ஏற்றுகொள்ள சங்கடமாயிருக்கும் பகுதி, மக்களுக்கு ஒலிபரப்ப பட்ட கறுப்பு பெட்டி நாடாக்கள் போலி என்பது. Flight -93 சுடப்பட்டதற்காக காட்டபடும் பலமான அறிகுறி அதிலிருந்து சிதறல்கள் பறந்திருந்தன என்பதுதான். இந்த வாதம் சரியென்றால், பிளேனைத்துரத்தி வந்த Air Force விமானங்கள் பிளேன் வெடித்துசிதறிய விதத்தை பதிவாக்கியிருப்பார்கள், தளங்களுக்கு வர்ணனை அனுப்பியிருப்பர்கள். இதை அறிந்த விசாரணைகுழு, வேண்டுமென்றுதன்னும், விமானம் தரை தட்டிய பின்னர்தான் வெடித்தது என்று விளக்கமளிக்க போயிருக்க மாட்டார்கள். எளிமையாக விமானம் உள்ளிருந்த கடத்தல் காரர்களினால் குண்டுவைத்து சிதறப்பண்ணப்பட்டது என்றிருக்கலாம்.

விசாரணைகுழுவின் நிலைப்பாடு விமானம் தரையில் மோதித்தான் சிதறியது என்பதுதான்.

உடனடி நிகழ்வு, flight -93 தொலந்து விட்டதாக கூறி தேடினார்கள். பின்னர் வயல்வெளியில் விழுந்திருப்பதாக கூறினார்கள். எனக்கு நேரங்கள் ஞபகமில்லை. ஆனால் குண்டு பொருத்திய விமானகள் பயணிகளுடன் வைத்து சுடும் படியான உத்தரவுடன் பறப்பதாக வந்த செய்திகள் மதியத்திற்கு கிட்டத்தான் வந்திருக்க வேண்டும். இந்த இடைவெளியில் New Jerseyயிலிருந்து கிழம்பிய Patrol பறக்கும் விமானங்கள்தான் மோதியழிக்க தயாரானவை. இது விமானிகளின் முடிவாக இருந்தேயன்றி கட்டளைகளாக இருத்தாக அந்த நேரம் பேசிக்கொண்ட ஞாபகம் இல்லை. மேலும் பயணிகளுடன் வைத்து சுட உத்தரவு வழங்கியவர்கள் விமானம் சுடுபட்டு விழுந்த பின்னர் கதையை மாற்றுகிறார்கள் என்பதும் அர்த்தமுள்ள வாதாட்டம் போல்படவில்லை..

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

தமது தேசிய நலனுக்காக அமெரிக்கா தனது முதலாவது பிரசையைக்கூட கொலைசெய்தது என்கிறார்கள் ( ஜோன் எப் கெனடி). அந்த வகையில் இந்த விமானத்தை வீழ்த்துவது என்பது சாத்தியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

றம்ஸ்வெல்ட் தவறுதலாக தன் வாயால் உண்மையை உளறிவிடுவதை கவனிக்கலாம்.

விக்கி பீடியவிலிருந்து:

The hijackers breached the aircraft's cockpit and overpowered the flight crew approximately 46 minutes after takeoff. Ziad Jarrah, a trained pilot, then took control of the aircraft and diverted it back toward the east coast of the United States. Although the evidence remains inconclusive, it is widely presumed the intended target was the United States Capitol in Washington, D.C.[1]

நுனாவிலான்: றம்ஸ் ஃப்ல்ட் பேச்சை மேற்கோள் காட்டுவதை பார்த்திருக்கிறன். உங்களுக்கு தெரியும் அது பிழையாக மேற்கோள் காட்டபடுகிறதென்பது. flight -93 வாசிங்டனுக்கு சென்றது. இவர் பெண்டகன் ஆள். இவர் சொல்வது பிழை. இவர் சொல்லும் உதாரணங்களுடன் அமெரிக்கா பிளேனைச்சுடுவது எப்படி பொருந்தும்? (பிளேனை கடத்தியவர்கள் உள்ளே வைத்து சுட்டர்கள் என்று விளக்கமெடுத்தால் பொருந்தும்) எனக்கு நம்பிகை இல்லமல் பண்ணிய விடயம், இறந்தவர்களின் குரலை கறுப்பு பெட்டி நாடாகளில் போலி பிரதி பண்ணி உறவினர்களை நம்பவைத்து ஏய்த்தார்கள் என்பது.

அகுதா: நல்லாயிருக்கிறது கேட்பதற்கு. கென்னடியை கொன்றார்கள். ஆகவே பிளேனையும் சுட்டிருப்பார்கள்! மேலே போய் கென்னடியை சுட்ட CIA கள் தான் ரஜிவையும் கொண்டார்கள் என்ற உண்மையையும் எழுதியிருக்க வேண்டும்.

தாங்கமுடியாதவர்கள் தலைமீது பழிகளைப்போடாமல், உரத்தவர்களான CIA, சப்பிறமணிய சாமி போன்றவர்களின் தலைமீது பழிகளைப்போட்டால் எனக்கு படிக்க நல்லாய் பிடிக்கும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

"போர் என்றால், போர் தான்....." என்ற ஜே. ஆர் ஜெயவர்தனா ஆயுதபலமற்றிருந்த ஈழத்தமிழர்களை நோக்கி கொக்கரித்ததை நீங்கள் அறிந்திருக்கவில்லையா? அல்லது விதண்டா வாதம் செய்ய விரும்புகின்றீர்களா கிருபன்.

நான் விதண்டவாதம் செய்யவில்லை. அத்தோடு நீண்ட விளக்கம் கொடுக்க நேரமுமில்லை!

விடுதலைப் போராட்டம், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவைகளுக்கு நூலிடை இடைவெளிதான் உண்டு. ஒரு சில செயற்பாடுகள்/தாக்குதல்கள் உலகநாடுகளின் பார்வைகளில் அர்த்தங்களை மாற்றிவிடும் என்பதை அறிய தமிழர்களது விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சம்பவங்கள் காரணங்களாக உள்ளன. இப்படியான சம்பவங்களால் தமிழர்கள் இழந்தது அதிகம். இறுதியில் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தரக்கூடிய வல்லமையுடன் இருந்த காத்திரமான தலைமைகள்கூட இழக்கப்பட்டு, இன்று உதிரிகளாக இருப்போரில் யார் எமது இரட்சகராக வருவார் என்று பார்க்கவேண்டிய நிலைக்கு வந்தாயிற்று.

ஜே.ஆர். "போர் என்றால் போர்" என்று சொல்லியதுபோல் தற்போது மகிந்த சொல்லவேண்டிய தேவை இல்லை. அப்படிச் சொன்னாலும் வாலைச் சுருட்டிக்கொள்ளவேண்டியதுதான் நிலைமை!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி

வெளியில் நின்று வெழுத்துக்கட்டவும் ஒரு தில் வேண்டும்

நடக்கட்டும் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.