Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குத்துவிளக்கை தாங்கள் தான் ஏற்றுவோம் என்று சாத்திரியாரும், குமாரசாமியாரும் அடம்பிடித்ததால்....

அவர்களுக்கு கார் பாக்கில் வைத்து இரண்டு குத்துவிளக்கை கொடுத்து கொழுத்தச் சொன்னதில், அவர்களும் சந்தோசமாக கொழுத்தினார்கள்.thumb_Kuththuvilakku.jpg

  • Replies 464
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இதோ அடுத்த விருதிற்கானவரோடு.. <_< .. மன்னிக்கவும். அடுத்த விருதை பெறப்போகும் நண்பரைப்பற்றிய தகவல்களுடன் நான் உங்களுடன் ......

விரலிடுக்கில் தகவலா அது கணனிக்குள் இருக்கிறது என்பது பழைய கதை

கணனிக்கும் தெரியாத தகவல்கள் யாருக்குத் தெரியும்?

தமிழீழத்தின் மூளை முடுக்கு எல்லாவற்றிலும் புரண்டு, உருண்டு காலநதிகளில் பயணித்து

கண்ணுக்குள் நுழைந்ததெல்லாம் களஞ்சியப்படுத்தி

எந்த ஊர் பற்றி உங்களுக்குத் தெரியவேண்டும்?

எந்த நிகழ்வு பற்றி உங்களுக்குத் தெரியவேண்டும்?

எந்தப்போராளிகள் பற்றி நீங்கள் அறியவேண்டும்.

எந்த எதிரி முகாம்களின் சூட்சுமங்கள் அறியவேண்டும்?

இவையெல்லாம் கணனிக்குள் கிடைக்குமா?

கிடைக்கவே கிடைக்காது.

ஆனால் யாழ்க்கருத்துக்களத்தில் உலவும் இவரிடம் கிடைக்கும்.

அட்ட அவதானி பார்த்தால் நம்ப மாட்டீர்கள்...

ஏனென்றால் உங்கள் பார்வைக்கெல்லாம் புலப்படாதது இவரின் நினைவாற்றல்.

அற்புதமான தகவல் களஞ்சியம் அவர் யார்?.... அவர்........

.......... அவர்தான் லண்டன் மாநகரத்தின் கில்லாடி தயா.

இதோ அவருக்கான விருதினை வழங்க மோகன் தன்னுடைய மட்டுறுத்தினர்களில் ஒருவரான வெட்டுக்கிளியை தெரிவு செய்து விட்டுள்ளார்.

மன்னிக்கவும் உங்களுக்கு இந்த வெட்டுக்கிளி பரிச்சயமானவர்தான் வேறு யாருமல்ல நிழலி அவர்கள்தான்........

நிழலி அவர்களில் முகத்தில் லேசான கலவரம் நிழலாடினாலும் நடுங்கும் கால்களைக் கட்டுப்படுத்தி :D :D மிக மிக மகிழ்ச்சியாக தயா அவர்களுக்கான விருதோடு காத்திருக்கிறார்

வாருங்கள் "தகவல் களஞ்சியமே" தமிழுலகம் போற்றக் காத்திருக்கும் பெருமகனே.

திருமதி குமாரசாமி அவர்களே கொஞ்சம் வழியை விட்டுக் கொடுத்தீர்கள் என்றால் எங்களுடைய தகவல் களஞ்சியம் விருதைப் பெற மேடைக்கு வரமுடியும் :lol:

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

இவன் குமாரசாமிஜெர்மனியிலை இருந்து வரேக்குள்ளை பிரான்சிலை எங்களயும் ஏத்திக் கொண்டு வாறனெண்டவன். கு சாவின்ரை காரிலை நாங்கள் வந்து கொண்டிருக்கிறம் டோவரிலை நிக்கிறம் கெதியிலை வந்திடுவம். டேய் குசா கெதியா கெதியா..

car.jpg

காரை ஓடுபவர் கு;சா. அருகில் நான் பின்னால் சுபேசும் கோமகனும். முதுகை காட்டியபடி இருப்பவர் லண்டன் வாற செலவை சமாளிக்க பாதி காசை தரச்சொல்லி பாரிஸ் ஸ் ரேசனிலை ஜெர்மன் போக நிண்ட ஒருத்தரையும் ஏத்திக கொண்டு வாறம். நிகழ்ச்சி முடிஞ்சு போகேக்குள்ளை கு.சா அவரை ஜெர்மனியிலை இறக்கி விடுவார்.

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நன்றிகள் அக்கா..

அடுத்தது.. தற்போதைய சூழலில்.. எழுச்சி என்றால் அது தமிழகத்தில்தான்.. அத்தகைய தமிழகத்தின் செய்திகளையெல்லாம் அல்லது அச்செய்திகளை மட்டும் பூந்து விளையாடி களத்தில் இணைப்பதில் மன்னன் இவர்.." :rolleyes:

"கந்தப்பு அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. அவருக்கு விருது வழங்க அதே தமிழகத்திலிருந்து.. திரு ராஜவன்னியன் அவர்கள்.. எங்கிருந்தாலும் மேடைக்கு வாருங்கள்.." :)

(ராஜவன்னியனும் கந்தப்புவும் மேடைக்கு வருகிறார்கள்..)

"தமிழக செய்திப்பிரிவாளர் விருதை இதோ ராஜவன்னியன் அவர்கள் கந்தப்புவிற்கு வழங்குவார்கள்..!"

(கரவொலி) :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் கூட்டத்திற்கு ஆட்களை சேர்த்த மாதிரி கவனிச்சிருந்தா நாமளும் வந்திருப்பமில்ல.

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்விற்கு வருகை தந்து கொண்டிருப்பவர்கள் பலரது படங்களும் சட்டிலைற் தொழில் நுட்பத்துடன் எடுக்கபட்டு இங்கு இணைக்கப்படும். நன்றி

அந்த வரிசையில்

யெர்மனியிலிருந்து சாந்தி அவரது கணவருடன் ..

Funny-Amazing-Travelling.jpg

வீணா அவரது செல்லப் பிராணியுடன்

pinky2085970.jpg

.தமிழகத்திலிருந்து புரட்சிகர தமிழ் தேசியன் அவரது உற்றார் உறவினர்களுடன்.

Train2.jpg

மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன தொடரும்....சட்டிலைற் படங்கள் யாரிற்காவது மனசங்கடத்தை ஏற்படுத்தினால் அறியத்தரவும் நீக்கி விடுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை, :)

அடுத்த விருதிற்கானவரை அறிமுகப்படுத்தமுன் என்னை இங்கு முதன் முதல் நேரலையில் வர்ணனை செய்ய அழைத்ததற்கும் இந்த ஒலிவாங்கியை என்னைப்போன்றவர்களிடம் :icon_mrgreen: நம்பித் தருவதற்கும்.... ஒரு மனம் இருக்கவேண்டும் அல்லவா... திருவாளர் மோகனிடம் சிபார்சு செய்து எனக்கு இந்நிகழ்வில் இத்தகைய மகிழ்வை உருவாக்கியதற்கும்.... நிகழ்ச்சி முடிவில் நன்றி சொல்லிக் கொள்ள சந்தர்ப்பம் இருக்குமோ தெரியவில்லை இப்போதே எனது மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். <_<

(இசையின் காலைத் தொட்டு எழமுன் இசை துள்ளிப்பாய்ந்து விலகி கொள்கிறார்காலை வாரிவிடுவேன் என்ற பயம்போல)

சரி உறவுகளே அடுத்த விருதிற்கானவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதென்றால் சரியான கோபக்காரன்.

இங்கு கூடியிருக்கும் பலருக்கு அவரைத் தெரியும் அவர் மிகவும் தூய்மையான இளைஞர்.

நான் அறிந்தவரைக்கும் மிகுந்த குழந்தைத்தனம் உண்டு.

தூய்மை குழந்தைத்தனம், கோபக்காரன் என்ற முகங்களுக்கு அப்பால் இந்த இளைஞனுக்கு ஒரு முகம் இருக்கிறது.

எதிர்காலம் பற்றிய தூரநோக்கு.

அநேகமாக யாழ்க்கருத்துக்கள உறுப்பினர்களை அதிகமாக சந்தித்த ஒருவராகக்கூட இவ்விளைஞரை கூறலாம்.

இப்போது அவரை இங்கு அழைக்கப்போகிறேன். நீங்கள் நேரில் பார்த்தால் நம்ப மாட்டீர்கள் :unsure: அப்படியான அப்பிராணி என்று சொல்வார்களே ..... தோற்றம் அப்படி

தோற்றத்தில் வெகுளியாக இருப்பவர்களிடம்தான் சிந்தனை செதுக்கி வைத்த சிற்பம் போன்று நேர்த்தியாக இருக்கும்போல் :rolleyes:

ஆமாம் யாழ்க்கருத்துக்கள விருதுவிழா 2011 இன் "சிந்தனைச்சிற்பி"யாக தெரிவு செய்யப்பட்ட அந்த இளைஞன் வேறு யாருமல்ல தூயவன்........

தூயவன் அச்சமடையாமல் மேடைக்கு வாருங்கள். உங்களுக்கான விருதை வழங்க தசமத் தலையர் கதாயுதத்துடன் வருகை தந்துள்ளார் :lol:

நிகழ்விற்கு வருகை தந்து கொண்டிருப்பவர்கள் பலரது படங்களும் சட்டிலைற் தொழில் நுட்பத்துடன் எடுக்கபட்டு இங்கு இணைக்கப்படும். நன்றி

அந்த வரிசையில்

யெர்மனியிலிருந்து சாந்தி அவரது கணவருடன் ..

Funny-Amazing-Travelling.jpg

வீணா அவரது செல்லப் பிராணியுடன்

pinky2085970.jpg

.தமிழகத்திலிருந்து புரட்சிகர தமிழ் தேசியன் அவரது உற்றார் உறவினர்களுடன்.

Train2.jpg

மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன தொடரும்....சட்டிலைற் படங்கள் யாரிற்காவது மனசங்கடத்தை ஏற்படுத்தினால் அறியத்தரவும் நீக்கி விடுகிறேன்.

முடியல :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

லண்டன்காரர்கள் நாங்கள் இருக்கிறோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்க்கு விருந்தினர்களாக வந்த நீங்கள் பேசாமல் சாப்பிட்டு விருதை வாங்கிகொண்டு போங்கள்... வயதான காலத்தில் கஸ்ரப்படவேண்டாம்.. :icon_mrgreen:

அதானே

வெஸ்ட்மினிஸ்டர் இல் வந்து வேளாண்மை செய்யிறாங்கள்.

சுத்துப்பட்டி பதினெட்டுக் Council இலும் இருந்து BMW இல் வாரம் மக்கா. ஒரு கை பார்த்திடுவம். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஈழப்பிரியன்.. உங்களுக்கு அதே பாணியில் செக் அனுப்பப்பட்டு நீங்களும் லண்டனில நிக்கிறீங்கள்.. :wub: என்ன பகிடி விட்டுக்கொண்டு.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
laugh.gifrolleyes.gifbiggrin.gif
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்............இன்று ஞாயிறு சர்ச்க்கு போய் வர நேரமாகிவிட்டது. தமிழன் விழாவுக்கு மணிநேரம்பிந்தி வருவது சகஜமாகி விட்டது வெள்ளைக்காரனிடம் நேரம் தவறாமையை கற்க வேண்டும். "தங்கச்சி யாயினி " என் நீலச்சேலை எடுப்பாக இருக்கிறதா ? உரிமையோடு சகாராவிடமிருந்து மைக்கை வாங்கி ....பாடுகிறார்....."இது தானா எதிர்பார்த்த அந்நாளுமிதுதானா ? " பலத்த கரகொஷத்தின் மத்தியில் விடைபெறுகிறார்...

..

.

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நன்றிகள் அக்கா..

அடுத்த விருதுக்குச் சொந்தக்காரர் மிகப் பிரபலமானவர்.. அவருக்கு விருது வழங்க தமிழகத்திலிருந்தே ஒரு விஐபி வந்திருக்கிறார்.." :rolleyes:

"அகூதா அவர்கள்.. மேடைக்கு வாருங்கள்..!" :D

"அவருக்கு விடாக்கண்டன் விருதினை வழங்க.. தமிழகத்திலிருந்து தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்..!" :wub:

(கலைஞர் கையால் அகூதா விருதினை வாங்குகிறார்..)

"இப்போது கலைஞர் அவர்கள் சிறு உரை ஆற்றுவார்கள்.."

"கழக உடன்பிறப்புக்களே.. கண்மணிகளே.." :(

"இந்த விருதை என்கையால் இந்தத் தம்பிக்கு வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்..!" :unsure:

"உடன்பிறப்பே.. எனது வலதுகை ஆற்காடு என்னுடன் முரண்டு பிடிப்பதால் தம்பி யுவகிருட்டிணன் என்கிற லக்கிலுக் இப்போது வலம் மற்றும் இடக்கைகளாக உள்ளான்.. அவன் திட்டி அனுப்பியதால் இவ்விருதை வழங்க இங்கே வந்தேன்.." :(

"தந்திக்குத் தந்தியாக அனுப்பிக்கொண்டிருந்த எனது வேகத்தை மிஞ்சிய வேகத்தை தம்பி அகூதாவிடம் காண்கிறேன்.. அவர் மென்மேலும் சிறப்புற வளர வாழ்த்துக்கள்..!" :unsure:

"ஸ்பெக்ட்ரம் நாமம் வாழ்க.. நன்றி வணக்கம்..! " :(

"நன்றிகள் கலைஞர் ஐயா.. அடுத்த விருதை அக்கா அவர்கள் அறிவிப்பார்கள்..!" :wub:

  • கருத்துக்கள உறவுகள்

விழா மண்டபத்தை கண்டு பிடிக்க முடியாமல் தப்பிலி

images-7.jpg

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்..இசை மைக்கை தலைகீழாய் பிடித்திருக்கிறார் என நினைக்கவேண்டாம். இது புது மொடல்

isai.jpg

தொகுப்பாளர் சகாரா இந்த மைக்கும் புது மொடல்தான் இப்பிடி தூர பிடிச்சுத்தான் கதைக்கவேணும்.

saka.jpg

மக்கா எல்லாம் நான் நைச்சபடி நடக்குது!!!!!!!!!!!!!! இந்தக் குசா வேற கவுண்டு போச்சு , :lol: சாத்து எடப்பா வண்டில :D :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக யார் யாரென்று உங்களுக்கெல்லாம் இப்போது ஆவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த இனிய பொழுதில் ......

எங்களுக்கும் தெரியாது அவர் யாரென்று? :unsure:

ஒரு செய்தியை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த செய்தியைப் போட்டு சாம்பாராக எங்களுடைய மூளையை ஆக்கிவிடக்கூடியவராம். :o

யாரைய்யா அந்தாள் என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது.

வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்.... தெரிந்தால் சொல்ல மாட்டேனா..... இனிமேல்தான் அவர் யாரென்று அறியப் போகிறோம். :icon_mrgreen:

ஒருவேளை எங்களிடம் இருந்து அவரைக் காப்பற்றவோ :lol: அல்லது அவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றவோ :D விழா ஏற்பாட்டாளர்கள் முயற்சி எடுத்திருக்கிறார்கள் போல் இருக்கிறது.

சரி விடயத்திற்கு வருவோம்.

உடனுக்குடன் செய்திகளைக் யாழின் செய்திக்களத்தில் குவிக்கும் புண்ணியவான்???? புண்ணியவாணி :blink: ....... ஆமாம் அவர் ஆணா, பெண்ணா, அல்லது அர்த்த நாரியா இன்னும் மூடுமந்திரமாகவே இருக்கிறது. சரி நதிமூலம், ரிசிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் விட்டுவிடுவோம். இந்தச் "செய்திக்கருவூலம்" யாரென்று நாமெல்லாம் அறிய ஆவலாக இருக்கிறோம் அல்லவா எங்கே அவர்? (இசை வந்து காதில் முணுமுணுத்துவிட்டுச் செல்கிறார்)

ஆமாம் அதோ விழா மண்டபத்தில் வாசல் வழியாக இப்போது அவர் மிடுக்காக நடந்து வந்து கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல நியூஸ் போட் எங்கே உங்கள் விசிலடிப்பும் கரவொலியும்......

எங்கே சூரிய விளக்குகளை மேடையைவிட்டு மண்டப வாயிலுக்கு திருப்பிப் பாய்ச்சுங்கள் ஒளியமைப்பாளர்களே. :icon_mrgreen:

இதோ அவருக்கான விருதை வழங்க மேடையில் நிற்கிறார் நமுட்டுச்சிரிப்புடன் தமிழ்சிறீ :wub:

Edited by valvaizagara

பார்வையாளர்களை குஷி படுத்த குத்தாட்டம் ஒண்டும் இல்லையோ ... தொடர்ந்து விருதுகள் வழங்கி கொண்டிருபதிலும்

விட ஒரு கலைநிகழ்ச்சிக்கு பிறகு விருதுகள் வழங்கும் நிகழ்வை தொடரலாமே.. இசை அண்ணா சகாரா அக்கா..

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஒரு சின்ன இடைவேளை விருது வழங்கும் விழா என்பது கண்களுக்கும் விருந்தளிக்கும் நிகழ்வாகவே அமைக்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் இந்கு ஒரு மேற்கத்தைய நடனம் இடம்பெற உள்ளது. இதில் ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது இதில் ஆடுபவர்களை சரியாக அடையாளம் கண்டு சொல்பவருக்கு ஒரு பெறுமதிமிக்கப்பரிசு ஒன்று காத்திருக்கிறது :icon_idea:&amp;nbsp;&amp;nbsp;ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விடையைக் கண்டுபிடிக்குமிடத்து குலுக்கல் முறையில் அப்பரிசு வழங்கப்படும். :rolleyes:

&amp;nbsp;

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

மண்டபத்தின் ஒரு மூலையில்.....

Edited by nunavilan

வணக்கம்!!!!!!!!!!! எல்லாருக்கும் என்னை தெரியுது தானே ?ஆ......... அதே .......கோ கோ கோ மகன் :icon_mrgreen: :icon_mrgreen: இப்ப உங்களுக்கு சுண்டல் அடம் பிடிச்சு நிண்டு காசை காசெண்டு பாராமை இந்தியால இருந்து குத்தாட்டத்துக்கு இறக்கி இருக்கிறான் ஏக் மினிட் :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உவன் நிழலி தான் போகேக்குள்ளை என்னையும் கூட்டிக்கொண்டு போறனெண்டவன் காய் வெட்டிப்போட்டானோ..காத்திருக்கிறார் நிலாமதி

nila.jpg

கருத்துக்களத்திலை வெட்டிக்கொண்டிருந்ததிலை நேரம் போய் விட்டதால் நிலாமதியை ஏற்றிபோக விரையும் நிழலி

nilali.jpg

அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் புறப்படும் ஈழப் பிரியன்.

ealap.jpg

அவரிட்டை மட்டும்தான் தனி விமானம் இருக்கா எங்களிட்டையும் இருக்கு என்றபடி ஒஸ் ரேலியாவிலிருந்து தனி விமானங்களில் புத்தனும் கந்தப்புவும்;

kanthapu.jpg

ஆமாம் ஒரு சின்ன இடைவேளை விருது வழங்கும் விழா என்பது கண்களுக்கும் விருந்தளிக்கும் நிகழ்வாகவே அமைக்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் இந்கு ஒரு மேற்கத்தைய நடனம் இடம்பெற உள்ளது. இதில் ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது இதில் ஆடுபவர்களை சரியாக அடையாளம் கண்டு சொல்பவருக்கு ஒரு பெறுமதிமிக்கப்பரிசு ஒன்று காத்திருக்கிறது :icon_idea:&amp;nbsp;&amp;nbsp;ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விடையைக் கண்டுபிடிக்குமிடத்து குலுக்கல் முறையில் அப்பரிசு வழங்கப்படும். :rolleyes:

&amp;nbsp;

இசைக்கலைஞனும் கவிதாயினி வல்வை சகாராவும் :unsure:

Edited by தப்பிலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.