Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவரை நினைவு இருக்கிறதா?

Featured Replies

.இன்று நாகேஷின் பிறந்தநாள்! சிவனை மறந்தாலும் புலவர் தருமியை உலகம் மறக்க முடியாமல் இருக்க செய்த கலைஞன்.. அவரின் நினைவுகளை தாங்கி..

நாகேஷ் தமிழில் செய்த சாதனைகள் மற்ற நகைச்சுவை நடிகர்கள் நெருங்க முடியாதது.

நாகேஷ் கால்சீட் இருந்தால்தான் எம்ஜியார் கால்சீட் வாங்க முடியும்.

அந்தளவுக்கு கொடி கட்டி பறந்தார்.

நாகேஷ் தனது முதல் நாடகத்திலேயே மிகச்சிறந்த நடிப்புக்கான பரிசை பெற்றவர்.

“முதல் தடவையாக மேடை ஏறப்போகிறோம் என்கிற சந்தோசம்...

ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்கிற பயம்...இப்படி ஒரு கலவையான உணர்வுடன் மேடையின் பக்கவாட்டில் காத்துக்கொண்டிருந்தேன்.

‘அடுத்த பேஷண்ட்’என்று டாக்டர் சொல்ல,காட்சி ஆரம்பித்தது.

‘சட்டென்று உள்ளே போ’என்று என்னை லேசாகத்தள்ளினார் டைரக்டர்.

‘டாக்டர் கூப்பிட்டவுடன் உள்ளே போவதற்க்கு நான் என்ன கம்பவுண்டரா சார்!

பேசண்ட்!

அதுவும் வயிற்று வலியால் துடிக்கிற பேசண்ட்!

எப்படி என்னால்,கிடுகிடுவென்று நடந்து போக முடியும்?என்று லேசான குரலில் ஆனால் அழுத்தமாக பதில் சொல்லிவிட்டு,

‘டாக்டர்’ என்று வீரிட்டு அலறியபடி மேடைக்குள் நுழைந்தேன்.

தீடிரென்று இப்படி ஒரு வீரிடும் குரலை எதிர்பார்க்காத பார்வையாளர்கள்

சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

நிஜமாகவே வயிற்று வலியால் துடிக்கிற நோயாளி போல் உடலை வளைத்து நெளித்து கைகளால் வயிற்றை பிடித்துக்கொண்டே போய் நடந்து,

டாக்டருக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் போய் ஒரு வழியாக உட்கார்ந்தேன்.

என்ன உடம்புக்கு? என்று டாக்டர் கேட்க,

நான் அதை சட்டையே பண்ணாமல்.வயிற்றை பிடித்துக்கொண்டே ‘அம்மா’ என்று துடித்தேன்.

என் கையில் ஒரு சீட்டு இருந்தது.

அதை டாக்டரிடம் நீட்டினேன்.

அதை அவர் வாங்குவதற்க்கு தன் கையை கொண்டு வந்த போது,

சட்டென்று என் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு,உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி,

ம்மா... ஆஆஆ...என்றேன்.

மறுபடி சீட்டை கொடுக்க நீட்டினேன்.

டாக்டர் வாங்க வரும்போது,கையை பின்னால் இழுத்துக்கொண்டு அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.....என்று கத்தினேன்.

ஒன்றரை நிமிடங்களுக்கு...விதவிதமான ஏற்ற இறக்கங்களை குரலில் கொண்டு வந்து அம்மா என்றலறி;துடித்து கதறினேன்...

யாரடா இவன்!தீடிரென்று வந்து இப்படி அமர்க்களப்படுதுகிறானே!என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்!

கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

முதல் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்து கொண்டிருந்த செக்கச்சிவந்த மனிதர் கை தட்டி என் நடிப்பை மிகவும் ரசித்ததை பார்த்தேன்.

அவர்தான் தலைமை விருந்தினர்.

நாடகம் முடிந்ததும் மைக்கை பிடித்த அவர்,

நாடகம் நன்றாக இருந்தது.ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து,

ந்ம் அனைவரையும் கவ்ர்ந்து விட்டார்அந்த தீக்குச்சி மனிதர்.

அவருக்குத்தான் முதல் பரிசு...

என பரிசு கோப்பையை வழங்கினார்.

அன்று என்னை பாராட்டி பரிசளித்த விஐபி யார் தெரியுமா?

மக்கள் திலகம் எம்ஜியார்.

நேற்றும் இன்றும் நாளையும் சிரிப்பை வாரி வழங்கும்

காதலிக்க நேரமில்லை....

பாலையாவுக்கு கதை சொல்லும் காட்சி...

எப்படி எடுப்பது என்று இயக்குனர் ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும் பேசிக்கொண்டிருந்தனர்.

காக்கா கிழவிகிட்ட வடையை திருடின கதையை வைத்துக்கொள்ள்லாமா?

என கோபு கேட்க,

ஸ்ரீதர் நிராகரித்து,

“கதை சொல்லணும்;ஆனா அது கதை போல இருக்கக்கூடாது”என்றார்.

“டைரக்டர் தாதா மிராஸி சீன் சொல்லுவாரே அது மாதிரியா”என்றார் கோபு.

ஐடியா பிரமாதம் எனப்பராட்டினார் ஸ்ரீதர்.

டைரக்டர் தாதாமிராஸி கதை சொல்கிற பாணியே தனிதான்.

ஹீரோ நடந்து வந்துகிட்டு இருக்காரு...

தட்...தட்...தட் சப்தம்,

தீடிரென்று மழை...

ஹீரோவுக்கு பயம்.

மனசு திக்...திக்...திக்..னு அடிச்சுக்குது.

ஊ....ஊ....ஊ...தீடிரென்று மரத்திலிருந்து சப்தம்.

ஒரு கணம் கதிகலங்கி போகிறார் ஹீரோ.

ஜல்...ஜல்...ஜல்...கொலுசு ஒசை.

இருட்டில் பயந்தபடி வருகிறார் ஹீரோயின்...

இந்த ரீதியில் பின்னணி இசையுடன் அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போவார்.

அதன்படி நான் நடித்தக்காட்சிதான் இன்றும் மக்களால் பேசப்படுகிறது.

திருவிளையாடல் தருமி நாகேசின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.

"தருமி மேக்கப் போட்டு ரெடியாக இருந்தேன்.

சிவாஜி வரவில்லை .லேட்டாகும். என்றார்கள்.

சிவாஜி வரும் வரை சோலாவாக என்னை வச்சு கொஞ்சம் எடுக்கலாமே என்றேன் இயக்குனர் ஏ.பி.என்னிடம்.

அவர், “படத்தின் சீன் இது ..நீ உன் இஷ்டப்படி இம்ப்ரவைஸ் பண்ணீக்கோ” என முழு சுதந்திரம் கொடுத்தார்.

அந்த சமயம் செட்டில் இருவர், “சிவாஜி இப்போ வந்திடுவார்,

இல்ல..இல்ல..

வரமாட்டார்.லேட்டாகும்”

என தங்களுக்குள் பேசிகொண்டிருந்தது காதில் விழுந்தது.

அதையே துவக்கமாக எடுத்துக்கொண்டேன்.

வர மாட்டான்...வரமாட்டான்..

அவன் நிச்சயம் வர மாட்டான்.

எனக்குத்தெரியும்..அவன் வரமாட்டான்...

என புலம்பியபடி ஒரே ஷாட்டில் முடித்தேன்.

பிரமாதம்...ரொம்ப பிரமாதம் எனப்பாராட்டினார் ஏ.பி.என்.

சில நிமிடங்களில் பரமசிவனாக மேக்கப்போட்டபடி சிவாஜி கம்பீரமாக நுழைந்தார்.

இருவருக்கும் காட்சியை விளக்கினார் இயக்குனர்.

புலவரே...என்ன புலம்புகிறீர்?என்றார் சிவாஜி.

ம்...இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல...

பேசும் போது,ரொம்ப இலக்கணமா பேசு!

பாட்டெழுதும் போது கோட்டை விட்டுரு! என்றேன்.

சிவாஜி, “என்ன ஏபிஎன்...நாகேஷ் பேசுறது புதுசா இருக்கு?என்று கேட்க ,

“நீங்க பரமசிவன் சார்...

அவர் அன்றாடங்காச்சி புலவர்.

அவர் லெவல் அவ்வளவுதான்,

ஏதோ புலம்பட்டும்...விட்டுடுங்க”என்றார் ஏபிஎன்.

thiruvilayadal006.jpg

சூட்டிங் முடிந்து டப்பிங் தியேட்டரில் சிவாஜி நான் நடித்த மொத்தக்காட்சியையும் பார்த்தார்.

“மீண்டும் இந்த சீனைப்போடுங்க”எனச்சொல்லி மீண்டும் பார்த்தார் சிவாஜி.

எதற்க்காக இந்தக்காட்சியை பார்க்கணும் என சிவாஜி சொல்றார்!அவ்வளவுதான் இந்தக்காட்சி...

பிடிக்கவில்லை.....

தூக்கிவிடுங்கள் எனச்சொல்வாரோ என்ற பயத்தில்...துக்கத்தில் தொண்டை அடைத்தது.

சிவாஜி ஏ.பி.என்னை அழைத்து,

இந்த மாதிரி நடிப்பை நான் பார்த்தது இல்லை.

நாகேஷ் நடிப்பு ரொம்ப்ப்பிரமாதம்.

இந்தக்காட்சியில ஒரு அடி கூட கட் பண்ணிடாதீங்க...

எல்லோரும் பாராட்டுவாங்க..

அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்..

அவன் பொறுப்பில்லாத பயல்.

டப்பிங் கரெக்டா பேச வைங்க..

ஒழுங்கா பேசலன்னா வெளிய விடாதீங்க”என்றார்.

கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மிகவும் சந்தோசம்.

சிவாஜி மாபெரும் நடிகர் மட்டுமல்ல...மிகச்சிறந்த ரசிகர்...எனவும் புரிந்து கொண்டேன்.”

நாகேஷ் இப்புத்தகத்தில் நாம் திரையில் இன்றும் ரசிக்கும் அத்தனை காட்சிகளும் உருவான பின்னணியை கூறி அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

ஸ்ரீதர்,பாலச்சந்தர்,

கிருஷ்ணன் -பஞ்சு,எஸ்.எஸ்.வாசன்,ஏவிஎம்,கண்னதாசன் போன்ற ஜாம்பவன்களுடன் நாகேசுக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை சுவைபட கூறி உள்ளார்.

நாகேஷ் தமிழ் சினிமாவில் நிரப்ப முடியாத பக்கம்

http://worldcinemafan.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான

சகல திறமைகளும் கொண்ட கலைஞன்.

நன்றி பதிவுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான,அற்புதமான நடிகர் நாகேஸ்...இணைப்பிற்கு நன்றி

  • தொடங்கியவர்

1995ல் திரு.நாகேஸ் அவர்களை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்யச்சந்தித்தேன்.வெளிநாடு செல்வதாகக்கூறி மறுத்தார்.சூழ்நிலை புரியாமல் வற்ப்புறுத்தினேன்.செய்தித்தாளை தூக்கிப்போட்டு ,இந்தச்செய்தியில் நீயோ..உன் சொந்தக்காரங்களோ இருந்திருந்தால் இங்கு வந்திருக்கமாட்டாய் என கோபித்தார்.செய்தித்தாளை காலையிலேயே படித்து விட்டுத்தான் சென்றிருந்தேன்.

செய்தி...பெட்ரோல் டேங்கர் லாரி மீது மணமகள் குடும்பத்தார் சென்ற வண்டி மோதி அனைவருமே மரணம்...மணமகளை தவிர...

இச்செய்தியின் பாதிப்பில் நாகேஸிருந்தார்..நான் இல்லை..

வெளிநாடெல்லாம் அவர் செல்லவேயில்லை என்பதை பிற்பாடு தெரிந்து கொண்டேன்

http://worldcinemafan.blogspot.com/2010_10_01_archive.html

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவை நடிகர் நாகேஷின் குணச்சித்திர வேடங்களையும் ரசித்திருக்கின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்

நாகேஸ் இல்லாமல் நகைச்சுவை இல்லை என்ற காலம் இருந்தது

இப்போதும் பார்த்து ரசிக்கக் கூடிய அவரின் நகைச்சுவை நடிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

Quote"நாகேஷ் தமிழ் சினிமாவில் நிரப்ப முடியாத பக்கம்" நன்றி வீணா இணைப்பிற்கு

  • கருத்துக்கள உறவுகள்

1965ம் ஆண்டு பாலச்சந்தரின் இயக்கத்தில் நாகேஸ் நடித்து வெயிவந்த படம்

நீர்க்குமிழி

மிகவும் சோகமான படம் கறுப்பு வெள்ளை என்றபடியால் இப்போது பாரக்க வெறுப்பாக இருக்கும்

http://awardakodukkaranga.wordpress.com/2009/02/08/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF/

ஒருசிலர்போலவே....டக்குன்னு சிரிப்பும்.. சடுதியா அழுகையும் எனக்கு வர்றதில்ல !!

இந்த நடிப்பு முதலைகளில் ,, யார் நடிப்பு ஒருபடி மேலே?

யாராச்சும் முயற்சி செய்ஞ்சு சொன்னா......

எவ்ளோ சந்தோசமாயிருக்கும் மனசுக்கு?! :)

http://www.youtube.com/watch?v=ul9Xvjt83eI&feature=results_main&playnext=1&list=PL7D1FF83FE4A76D5A

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி, கமலின் ரசிகன் போல,

நீங்க இப்படி கேட்டா நாங்க என்னத்தை சொல்ல, நாங்க நாகேஸூன் காமடியை நிரப்பதான் ஆள் இல்லை என்று சொன்னம்,

நீங்க குண சித்திர நடிப்பிற்கு யார் என்ற கேள்வி போடுறிங்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.