Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண இளம் குமரிகளின் இராணுவத்துடன் சேர்ந்து பூங்காவில் குத்தாட்டம்! (Video in )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kuthu-150x150.jpg

இறுதி யுத்தம் என்ற பெயரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் எம்மினப் பெண்கள்பாலியல் வக்கிரம் கொண்ட சிங்கள இராணுவக் காடையர்களால் கதறக் கதறக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது நீங்கள் அறிந்த ஒன்று.

இவ்வாறான இராணுவக் காடேறிகள் முன்னிலையில் குத்தாட்டம் போடுகின்றனர் யாழ்ப்பாண இளம் குமரிகள்.

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மகிழ்வரங்கு ஒன்று நடைபெற்றது.

முழுக்க முழுக்க இராணுவ மயமாக்கப்பட்ட இம் மகிழ்வரங்கில் தமது பாடல்களுக்கு தமிழ் இளம் குமரிகளை ஆடவிட்டு அழகு பார்த்தது சிங்களம்.

http://youtu.be/7HMz5H1sMxc

இவ்வாறு ஆடும் தமிழ்ப் பெண்களை இரகசியமான முறையில் தமது வீடியோக் கமராவினால் வித்தியாசமான பதிவுகளைச் செய்தமையையும் காணக் கூடியதாக இருந்தது.

இதேவளை தமது இளம் பெண் பிள்ளைகளை இராணுவக் களியாட்டத்தில் கலந்து கொள்ள விட்டுவிட்டு அருகில் நின்று கைதட்டி உற்சாகப்படுத்தும் பெற்றோர்களை நினைக்கும் போது நெஞ்சு வெடிக்கின்றது.

காலப் போக்கில் கைதட்டிய இரு கைகளாலும் தமது கண்ணீரைத் துடைக்கும் காலம் வெகுவிரைவில் வரும் என்பதை அறியாதிருக்கும் பெற்றோர்களே யாழ்ப்பாணத்தில் அரங்கேறும் அனைத்து கலாசாரச் சீரழிவுகளுக்கும் காரணமானவர்கள் ஆவர்.

இவ்வாறு களியாட்டத்தில் கலந்து கொள்ள விட்டு விட்டு, பின்னர் எனது பிள்ளையை ஏமாற்றி விட்டு கருவையும் சுமக்க விட்டுவிட்டான் என கதறி அழுவதும் நீங்கள்தான்.

எனவே பிள்ளைகளைப் பொறுப்புடன் அவர்களின் இனத்தின், மதத்தின் கலாசாரத்திற்கேற்ப வளர்த்து ஆளாக்குவதை விடுத்து அந்நியனுடன் ஆட விட்டுக் கூத்துப் பார்க்கும் நீங்கள்தான் அவர்கள் தப்பான வழிக்குப் போவதற்குக் காரணம் ஆகின்றீர்கள்.

தமிழினத்தின் தனிநாட்டுக்காக எத்தனையோ இளம் பிள்ளைகள் தங்களின் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய இனத்தில் பிறந்தவர்களா இவர்கள் எனச் சந்தேகப்பட வைக்கின்றது.

தமிழ்த் தேசியத்தின் உணர்வலைகளை அறுக்கும் ஒரு கபட நோக்கத்துடன் சிங்களம் மேற்கொள்ளும் இவ்வாறான நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிப்பது காலத்தின் தேவையாகும்.

இதேவேளை புலம்பெயர் தேசத்தில் இருந்து தமிழீழம் காணத் துடித்துக் கொண்டிருக்கும் உறவுகளே! யாழ்ப்பாணத்தில் நடக்கும் குத்தாட்டங்களைப் பாருங்கள்.

அங்கிருந்து கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து பலதரப்பட்ட வட்டமேசை மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், கனவு காணும் தமிழீழத்தில் தற்போது என்ன நடக்கிறது என்பதை சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

தமிழிழனத்தை அழிக்க சிங்கள இராணுவம் இலகுவான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது. அதனை தடுக்க முயற்சி செய்யுங்கள்.

அதைவிடுத்து நீங்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு பதவிக்காகவும், கௌரவத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, தமிழினத்தை அழிக்க சிங்களம் போடும் திட்டத்திற்கு நீங்கள் சல்லாரி போடுவது போன்று இருக்கின்றது.

http://www.tamilthai.com/?p=28225

உதை ஏன் எங்களுக்குச் சொல்லுறியள்? யோ கோகர்ணண் அண்ணையே இது நல்ல விசயம் எண்டு சொல்லி நல்ல கதை எழுதி இருகிறார். பிறகு நாங்க எதாவது சொல்லி அதுக்கும் ஒரு கதை எழுதுவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா.... வடக்கின்வசந்தம் ஆமிகளுடன்...... புல்லரிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

யோ கர்ணண் ஷோபா சக்தி மாதிரி எழுத முயற்சி செய்யிறார்..ஆனால் வருதில்ல............

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனத்தை வைத்தே ஒருவன் 30 வருடம் ஒரு போராட்டத்தை நடத்தினான் என்றால் அது அதிசயம் இல்லை அதற்கு அப்பால் என்னவோ

கூடுதலான விபரங்கள் தேவை:

இது எந்த நிகழ்வு சம்பந்தமானது?
இந்த பெண்கள் யார்?
இவர்கள் வற்புறுத்தப்பட்டனரா?

எமது மக்களை சுற்றி ஒரு வெறிகொண்ட இராணுவ ஆட்சி நடக்கின்றது. அதை இல்லாமல் ஒழிப்பதே அவர்களின் சுயகௌரவத்தை மீட்டுத்தரும்.

முப்பது வருட அடக்குமுறைக்குள், போருக்குள் இருந்ததின் பிரதிபலிப்பு .

இவை எல்லாம் விளங்கும் நிலையிலா நீங்கள் இருக்கின்றீர்கள் ?.

முப்பது வருட அடக்குமுறைக்குள், போருக்குள் இருந்ததின் பிரதிபலிப்பு .

இவை எல்லாம் விளங்கும் நிலையிலா நீங்கள் இருக்கின்றீர்கள் ?.

முள்ளிவாய்க்காலில் எதிரி 'போர்' என்ற போர்வையில் அழித்து , இப்பொழுது 'ஆக்கிரமிப்பு' என்ற போர்வையில் அழிக்கிறான்.

நித்திரை கொள்பவன் மாதிரி நடிப்பவனை எழுப்பலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் எதிரி 'போர்' என்ற போர்வையில் அழித்து , இப்பொழுது 'ஆக்கிரமிப்பு' என்ற போர்வையில் அழிக்கிறான்.

நித்திரை கொள்பவன் மாதிரி நடிப்பவனை எழுப்பலாமா?

நடிப்பவனை? குடித்துவிட்டு தன் இனத்துக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் உளறும் வாய்

இந்தப் பெண்களின், அதை ஊக்குவிக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்ட பெற்றோரின் முயற்சி எனக்குள் எந்த கோபத்தையும் கிளறவில்லை

நாம் எப்பொழுதும் சமரசம் செய்தே வாழப் பழகியவர்கள். எம்மில் அநேகம் பேர் எம்மை விட பலமானவருடன் சமரசம் செய்தே வந்திருக்கின்றோம். தமிழினம் என்பதே தன்னை விட அதிகாரம் கொண்டவர்களுடன் சமரசம் செய்தே வாழப் பழகிய இனம். அதிகாரம் கொண்டவர்களிடம் தனக்கான உரிமைக்காக போராடாது சமரசம் செய்தவர்களின் எண்ணிக்கை, அதிகாரத்துடன் முரண்பட்டு அடிமைத் தளையை அறுக்க முனைப்புற்றவர்களின் எண்ணிக்கையை விட மிக மிக மிக அதிகம்

இனக் கலவரம் என்று கொன்றழித்த அதே சிங்களவருடன் தான் நாம் சமரசம் கொண்டு (நான் உட்பட) வடக்கு கிழக்குக்கு அப்பால் இலட்சக்கணக்கில் சிங்களவருடன் ஒன்றாக வாழ்ந்தோம்

போராட்டத்துக்கு புறப்பட்ட தோழர்களை விட்டு எம் சாதாரண வாழ்வுக்கான ஆசையுடன் சமரசம் செய்தே இலட்சக்கணக்கில் வெளிநாடுகள் வந்து சேர்ந்தோம். தமிழீழப் போரட்டமா இல்லை வெளிநாடு வந்து சகோதரங்களையும் எம்மையும் உயர்த்துவதா என வரும் போது தமிழீழ கனவுடன் சமரசம் செய்தோம்

ஊரில் கக்கூஸ் கழுவுகின்றவர்களை, சிகை அலங்காரம் செய்பவர்களை, உடுப்பை தோய்த்து தருபவர்களை சாதி சொல்லி பிரித்து கீழாக நடத்திய நாம் தாம் அதே வேலையை வெளிநாடுகளில் வந்து வெள்ளைகளுக்கு செய்தால் தவறில்லை என்று எம் சாதித் திமிறையையே சமரசம் செய்து வாழப் பழகிக் கொண்டோம்

ஊரின் ஒவ்வொரு வீடு தோறும் சிங்கள இராணுவத்தால் அட்டூளியம் நடக்கும் போதும், அவர்களுடன் சமரசம் செய்து தமிழரை ஆட்டுவிக்கும் அதிகாரத்தை பெறுவதற்காக காட்டிக் கொடுத்த எம் சக தமிழ் இளைஞர்களாலான இயக்கங்களும் பல பல, அதிகாரிகளும் ஊர் விதானைகளும் பல பல

எம்மை அடிமையாக்கிய அதிகாரத்துக்கு எதிராக போராட முற்பட்டவர்களை விட அந்த விடுதலை உணர்வுடன் சமரசம் செய்து, படித்து பின் வெளிநாடு வந்த அல்லது உழைக்க வந்தவர்களின் எண்ணிக்கை பல் நூறு மடங்கு

இந்த போக்கில் தாம் விடுதலை வீரர்களை விட துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை எம் மண்ணில் அதிகமாகியது

................ ஆனால் தம் இருப்புக்காக சமரசம் செய்ய முனையும் யோ.கர்ணணையும், இராணுவத்தின் இசைக்கு ஆடும் பெண்களையும் எமக்கு பிடிக்காமல் விடுகின்றது. நாம் செய்த அதே சமரசத்தைதான் இவர்களும் இன்னொரு விதத்தில் செய்கின்றனர். ஆனால் எமக்கு அது மட்டும் நெஞ்சில் நெருப்பாய் வழிகின்றது. ஏனெனில் எம்மில் இருப்பதில் எதை நாம் எமக்குத் தெரியாமல் வெறுக்கின்றோமோ அதனை அவர்கள் வெளிப்படையாக செய்கின்றனர். ஒரு மனோவியல் குழப்பத்தில்; எம்மீதான் குற்றவுணர்வில் இன்று இவர்களை குற்றம் சொல்கின்றோம். நானும் நீங்களும் இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவம் தன் நிகழ்வுக்கு கூப்பிட்டு இருந்தால் இதை விட கும்மாம் குத்து ஆடி எம் வாழ்வின் உயர்ச்சிக்காக சமரசம் செய்து இருப்போம்

Edited by நிழலி

அதே மண்ணில் இன்னும் பல மானமுள்ள தமிழர்கள் விடுதலை உணர்வோடு இருக்கிறார்கள், அவர்களுக்கு உங்கள் பதில் இதுதானா,

ஒரு சிறுவனுக்கு இருக்கும் உணர்வு கூட இவர்களுக்கு இல்லை என்றால் இவர்களை என்ன சொல்வது, வெத்தலைப் பெட்டியா?

..ஆக உங்களுக்கு அவனது செயலைப் போல ஒன்றைத் தான் ஊரில் இருக்கும் எல்லாரிடமும் எதிர்பார்க்கின்றீர்கள். அதாவது நீங்கள் சமரசம் செய்து கொழும்பு வந்து சிங்கள ஊரில் இருந்து தப்பித்து ஈழ கனவுடன் சமரசம் செய்து வாழ்வு உயரவேண்டும் என்று வாழும் போதும் கூட அந்த சிறுவனைப் போன்ற பலியாடுகள் தான் தேவையாக இருக்கின்றது. அப்படி செய்யாவிடின் உங்களைப் போல அவர்களையும் வெத்தலைப் பெட்டிகள் என்பீர்கள்?

அந்த அப்பாவிச் சிறுவனை உதாரணம் காட்டாதீர்கள். உங்கள் வாழ்வில் நீங்கள் ஈழக் கனவுடன் சமரசம் செய்யாது வாழுகின்றீர்களாயின் அதை உதாரணமாக சொல்லுங்கள். எல்லாப் பக்கமும் எதிரிகளின் துப்பாக்கி முனைகள் முளைத்து இருக்கும் ஒரு தேசத்தில் இருந்து உங்கள் உதாரண புருசர்களை காட்டாதீர்கள்

இன்றைய இராணுவச் சூழலில் வாழ்கின்ற சக தமிழ் பெண்களின் ஒரு வீடியோவை பார்த்தவுடனேயே அவர்களை வெத்தலைப் பெட்டிகள் எனும் போதே நீங்கள் பெண்கள் மீது எத்தகைய வக்கிர அபிப்பிராயத்தை கொண்டிருகின்றீர்கள் என்று புலனாகின்றது. உங்களின் பார்வைக்கும் இராணுவத்தின் பார்வைக்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லை உடையார்

Edited by நிழலி

kuthu-150x150.jpg

இறுதி யுத்தம் என்ற பெயரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் எம்மினப் பெண்கள்பாலியல் வக்கிரம் கொண்ட சிங்கள இராணுவக் காடையர்களால் கதறக் கதறக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது நீங்கள் அறிந்த ஒன்று.

இவ்வாறான இராணுவக் காடேறிகள் முன்னிலையில் குத்தாட்டம் போடுகின்றனர் யாழ்ப்பாண இளம் குமரிகள்.

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மகிழ்வரங்கு ஒன்று நடைபெற்றது.

முழுக்க முழுக்க இராணுவ மயமாக்கப்பட்ட இம் மகிழ்வரங்கில் தமது பாடல்களுக்கு தமிழ் இளம் குமரிகளை ஆடவிட்டு அழகு பார்த்தது சிங்களம்.

http://youtu.be/7HMz5H1sMxc

இவ்வாறு ஆடும் தமிழ்ப் பெண்களை இரகசியமான முறையில் தமது வீடியோக் கமராவினால் வித்தியாசமான பதிவுகளைச் செய்தமையையும் காணக் கூடியதாக இருந்தது.

இதேவேளை புலம்பெயர் தேசத்தில் இருந்து தமிழீழம் காணத் துடித்துக் கொண்டிருக்கும் உறவுகளே! யாழ்ப்பாணத்தில் நடக்கும் குத்தாட்டங்களைப் பாருங்கள்.

அங்கிருந்து கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து பலதரப்பட்ட வட்டமேசை மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், கனவு காணும் தமிழீழத்தில் தற்போது என்ன நடக்கிறது என்பதை சற்றுத் திரும்பிப் பாருங்கள்.

தமிழிழனத்தை அழிக்க சிங்கள இராணுவம் இலகுவான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது. அதனை தடுக்க முயற்சி செய்யுங்கள்.

அதைவிடுத்து நீங்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு பதவிக்காகவும், கௌரவத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, தமிழினத்தை அழிக்க சிங்களம் போடும் திட்டத்திற்கு நீங்கள் சல்லாரி போடுவது போன்று இருக்கின்றது.

http://www.tamilthai.com/?p=28225

இதுக்கு ஒண்ணுதான் ஒரே வழி ..!

பேசாம உங்க இணைய தளத்த இழுத்து பூட்டிடுங்க,, இல்லைனா,, தமிழ் நாய்கள் .காம் னு பேரை மாத்திடுங்க!!

'

ஏம்பா மெண்டல்,,, கதற கதற ...(...)....... எங்கிற வார்த்தை , நாங்க பயன்படுத்துவதே இல்லையே.......... நீங்க யாரு?

பைதவே ,, அதில ஆடுறவங்க உங்களூக்கு குமரிகள்போலவா தெரியுது?

அப்போ

குமரிகளை ஆமி முன் ஆடவைச்சு , அழகு பார்க்கிறாங்க,, அவங்க தாய் தந்தைன்னு சொல்ல வர்றியா? அப்போ என்னதான் சொல்லவர்றீங்க ,, யாழ்ல இருக்குறவங்க பெற்றோர் பத்தி..........?

ரகசிய கமெராக்கள் வைச்சு பதிவு செய்ஞ்சாங்கன்னு சொல்றிங்களே......பப்ளிக்காதானே ,, நீங்களும் படம்பிடிச்சு இருக்கா, அவனும் படம் புடிக்குறான்....... இதுக்கு இடைல எதுக்குடா இன்னுமொரு இரகசிய கமெரா??

உங்க கவலை புரிய கூடியதாகவே உள்ளது!! , அது .. எப்டியாவது ,,, சிங்களவனை மறந்திட்டு எமக்குள் நாமே சிக்கி சின்னாபின்னமடைஞ்சு ,, அவனுக்குள்ள தற்போதைய நெருக்கடியை , சமாளிக்க உதவுவது!!

அடப்பாவி அறிவிலி....கட்சில என்னையும் நோக்கு பச்சை குத்த வைத்துட்டுறீரே)

  • கருத்துக்கள உறவுகள்

தப்புதான் அந்த சிறுவனை உதாரணம் காட்டியது,

Edited by உடையார்

நிழலி எல்லோரும் எதோ ஒரு வகையில் வாழ்க்கையில் சமரசம் செய்கிறார்கள்.ஆனால் சிங்கள இராணுவம் மனிதர்களை எவ்வாறு அடிமைகளாக வைத்திருக்கப் பயன் படுத்துகிறது என்பதைக் கூட விளங்காமல் அதனையும் சமரசம் என்று சொல்கிறீர்கள்.ஆகவே எல்லோரும் தொடர்ந்தும் அடிமைகளாக இருப்போம்.அதனையே எல்லோரும் ஊக்குவிப்போம்.

நித்தா கொள்ளாமல் கொட்ட கொட்ட முழிச்சிருந்து, என்னடா இவன் பதில் போடுவான் என்று நீங்க நினைச்சா........, அது ஒருத்தன் கஞ்சா கறுப்போட எடுத்த படத்தை அவதார போட்டே அவனின் ஒருவத்தை மனசில கிற முடியாத நீங்க, உங்களுக்கு என்னுடைய வக்கிர உணரவை ஒரு எழுத்தில் வைத்து கண்டு பிடித்துவிட்டீர்கள்,

நீங்கள் மட்டுறுத்தினரா? அப்ப அந்த சொல்லில் தப்ப ஏதாவது இருந்த வெட்டியிருக்கலாமே? இந்த சொல்லை ஆண்களுக்கும் பாவிக்கிறது என்பது உங்களுக்கு தெரியாம இருக்கிறதையிட்டு ........

தப்புதான் அந்த சிறுவனை உதாரணம் காட்டியது,

என் கேள்விக்கு பதில் எழுத முற்படும் போது கூட இன்னுமொரு சக யாழ் உறவின் அவதாரை கீழ்த்தரமாக சொல்லும் அளவுக்குத் தான் நீங்கள் பதில் சொல்லும் தரம் இருக்கின்றது. தன் இனப் பெண்களில் சிலரை (வாழ்வில் ஒரு போதும் கண்டிராத பெண்களை) ஒரே ஒரு வீடியோ பார்த்து 'வெத்தலை பெட்டி' என வக்கரிக்கும் உங்களிடம் வேறு எந்த தரத்தை எதிர்பாக்க முடியும்?

என் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவிடத்து 'நான் ஒரு மட்டுறுத்தினர் ' என வலிந்து எனக்கு வலியுறுத்தி என்னைக் கட்டிப் போட முயலாதீர்கள். பல நேரங்களில் ஒருவரின் உண்மை (சுய) ரூபம் தெரிய அவரின் கருத்துகளை ({அது எவ்வளவு மோசமெனிலும்) அப்படியே விட்டு மற்றவர்கள் பார்த்து அவரைப் பற்றி அறிய விடுவதே சிறந்த உத்தி என நான் நம்புகின்'றேன்....................

நிழலி எல்லோரும் எதோ ஒரு வகையில் வாழ்க்கையில் சமரசம் செய்கிறார்கள்.ஆனால் சிங்கள இராணுவம் மனிதர்களை எவ்வாறு அடிமைகளாக வைத்திருக்கப் பயன் படுத்துகிறது என்பதைக் கூட விளங்காமல் அதனையும் சமரசம் என்று சொல்கிறீர்கள்.ஆகவே எல்லோரும் தொடர்ந்தும் அடிமைகளாக இருப்போம்.அதனையே எல்லோரும் ஊக்குவிப்போம்.

நீங்கள் நினைக்கின்றீர்களா ஊரில் உள்ளவர்கள் இதனை அறியாது இப்படியான விழாக்களில் கலந்து கொள்கின்றார்கள் என? அல்லது அவர்களுக்கு விளங்கவில்லை ஆகவே பாடம் நடத்தி விளங்கவைப்போம் என்கின்றீர்களா? சனம் தன் நிம்மதிக்காக, தன் அடுத்த கட்ட வாழ்வின் படிக்காக நிச்சயம் சமரசம் செய்தே ஆகும். நாம் செய்த சமரசத்துக்கும் அவர்கள் செய்யும் சமரசத்துக்கும் ஆயிரம் அடி அகல நீள வித்தியாசங்கள் இருக்கலாம். அதை புரியாது அந்த ஒன்றை மட்டும் தூக்கிப் பிடித்து அப்படி செய்பவர்களை கேவலமாக விமர்சிக்க முடியுமா?

நாம் விமர்சிப்பது எந் நேரமும் துப்பாக்கிகளின் முனையில் இருத்தி வைக்கப் பட்டு இருக்கும் ஒரு இனம் பற்றி என்ற புரிதல் மனசின் ஆழத்தில் இருந்தால் ஒற்றை வீடியோவினை பார்த்தோ அல்லது ஒரு பிழைப்புவாதியின் இலக்கியம் பார்த்தோ முடிவு எடுக்க மாட்டோம்

அதுகள் எல்லாம் தமிழ்ப் பிள்ளைகள் தானா? (பார்ப்பதற்கு சிங்களப் பிள்ளைகள் போலவும் இருக்கு).

நாகரிக தாக்கத்துக்கு இவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?

காலஞ்செல்லச் செல்ல என்னும் என்னென்ன மாற்றம் வருமோ?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தாங்கள் ஏதோ சுதந்திர வேட்கையின் மிகுதியோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக கற்பனை பண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில்.. சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து தங்கள் பிழைப்பைப் பார்த்தவர்களில் அவர்களே முதன்மையானவர்கள் என்பது வெளிப்படை உண்மை.

தமிழர்கள் உலகெங்கும் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே வாழ்கின்றனர். அதற்கு அவர்கள் நன்கு பழகிக் கொண்டு விட்டார்கள். அதில் பூரண திருப்தியும் காண்கிறார்கள். இந்த நிலையில் சிறீலங்காவிலும் அதை அவர்கள் எதிர்பார்ப்பதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

2006ம் ஆண்டு மாவிலாறில் யுத்தம் தொடங்கிய போது.. திருமலையில் இருந்து எழுந்த குரல்கள் இப்படிச் சொன்னன.. நாங்கள் இங்க நல்ல ஒற்றுமையாக இருக்கிறம்.. அமைதியா இருக்கிறம்.. எதுக்கு சண்டை என்று...??!

ஆக.. தமிழர்கள் ஆண்டாண்டுகளாக அடிமையாக வாழ்ந்து பழகிவிட்டார்கள். அடுத்தவன் காலடியில் பட்டுக் கோவணம் கட்டுவதே அவர்களின் வாழ்வியல் உச்ச ஆசை.. ஏன் அதுவே அவர்களின் இப்பிறவி பேறு. இப்படியான இனத்தில் இருந்தும் சில பிரபாகரன் தோன்றி மறைவது காலத்தின் விதியே தவிர.... இந்த இனத்தின் மீட்சிக்கு அவை போதுமானவை அல்ல.

புகலிடத்தில்.. பப்பில குத்தாட்டம் என்றால்.. அங்கே சுப்பிரமணியம் பூங்காவில்.. கொழும்பில் விகாரமாதேவி பூங்காவில்.

எம்மினத்திடம் உள்ள அடிமைத் தனத்திலும் அமைதியாக.. சுழியன்களாக.. பெறுவதைப் பெற்று தமக்குத் தாமே உசத்தி என்று வெட்டிப் பந்தா காட்டி.. வாழ்ந்து முடிப்பது என்ற சிந்தனை இருக்கும் வரை.. (அடிமைகளிடம் அந்த எண்ணமே பலம் பெற்றிருக்கும்.. காரணம்.. அவர்களுக்கு இந்த உலகில் வாழ உள்ள ஒரே ஒரு மார்க்கமும் அதுவே... ).. நாங்கள் புழுக்களை விட கேவலமாக நெளிஞ்சு சுழிஞ்சு வாழுவம்..! அது தவிர்க்க முடியாத ஒன்று..! அதில் இப்படியான விடயங்கள் சின்னஞ் சிறியன. இதைவிட எவ்வளவோ விடயங்கள் கமராக்களுக்கு எட்டாமலே நடந்து கொண்டுதான் உள்ளன.

நாங்கள்.. ஆற்றுப் படுக்கையில் புரண்டோடும் வெள்ளத்தில்.. தலை குனிந்த.. நாணலின் வளைந்து கொடுக்கும் கதை சொல்லி வளர்க்கப்பட்ட இனம்..! அதன் பிரதிபலிப்புக்களில் அடிமைத்தனமா.. விவேகமா.. என்ற பட்டிமன்றம்.. கூட எம்மால் முடியும்.. ஆனால்.. விடுதலை பெற்ற இனம் என்றது எங்களுக்கு ஒரு கசாயம்..! :)

Edited by nedukkalapoovan

யுத்தம் எவ்வளவு கொடுரமான விளைவுகளை,கலாச்சார சீர்கேடுகளை கொண்டுவரும் என்று வியட்னாம்,தாய்லாந்து,பிலிப்பைன்ஸ் (அமெரிக்கன் தளம் அமைத்த நாடுகள் கூட) பார்த்தால் தெரியும்.அதற்காக நாம் போராடாமல் இருந்திருக்க வேண்டுமென்பதல்ல முப்பது வருடம் மிக மிக நீண்டது ,இதன்பின் வரும் தாக்கங்களையும் உணர்ந்தே செயற்பட்டிருக்க வேண்டும்.

அழிப்பது மிக இலகுவானது அதை திரும்ப மீள்கட்டுவதுதான் கஷ்டம் ,கலாச்சாரமும் அதற்கு விதிவிலக்கல்ல .

உங்கள் கருத்து நியாயக் களத்தை தொடாத ஒன்று.

வியட்னாம்.. தாய்லாந்து.. பிலிப்பைன்ஸ்.. கம்போடியா எல்லாவற்றையும் உற்று நோக்கிய ஒரு தேசிய தலைவர் இருந்த போது.. 30 வருட போராட்ட காலம்... பலமான சமூக ஒழுக்கத்தை மக்கள் பின்பற்ற வைத்தது.

பள்ளிக்கூடம் விட்டதும் றோட்டில நீங்கள் செய்யுற குழப்படிகளுக்கு அதிபரைக் குற்றம்சாட்ட முடியாது. அதுபோலவே தேசிய தலைவரின் தலைமைத்துவம் இழக்கப்பட்ட பின்.. நடக்கும் நிகழ்வுகளுக்கு அவரோ அவருடைய இயக்கமோ பொறுப்பேற்க முடியாது. அவரின் தலைமைத்துவத்தை அழிக்க கங்கணம் கட்டி நின்றவர்கள் தான் இவற்றிற்குப் பொறுப்பாளிகள் என்ற உண்மை உங்களில் பலருக்கு புரியாமல் இருப்பதுதான் வேடிக்கை... விநோதம்.

போராட்ட காலத்திற்கு முந்திய ரவுடிசீயம்.. இன்றுள்ளது. போராட்ட காலத்திற்கு முந்திய.. கொலைகள்.. சாரதாம்பாக்கள்.. வழக்குகள்.. இன்று மீண்டும்..!

ஆக... மொத்தத்தில் யாழ்ப்பாணம்.. 1983 களுக்கு முன்னான காலம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறதே தவிர.. ஏதோ இல்லாதது புதிசா முளைச்ச கணக்கா கதைவிடாதேங்கோ. இன்றைய கலாசார மாற்றம்.. போராட்ட காலத்தில் வாழ்ந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு மிரட்சியை கொடுக்கலாம். அது ஏதோ போராட்டத்தை அந்த மக்கள் மதிக்கவில்லை என்ற தோற்றப்பாட்டை காட்டலாம். ஆனால் அதே காலப்பகுதிகளில் கொழும்புக்கும் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் (குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு) இடம்பெயர்ந்த எம்மவர்கள்.. வாழ்ந்த வாழ்க்கை ஏறக் குறைய இதற்கு ஒப்பானதே. வெளிநாடுகளுக்கு ஓடி வந்தவர்களும் இந்த வாழ்க்கையே வாழ்கின்றனர். ஆக.. போராட்டம் என்பது இதற்கு ஒரு காரணியல்ல..! இது தமிழர்களின் பாரம்பரிய அடிமைப் புத்தியின் வெளிப்பாடே அன்றி வேறல்ல..!

போர்.. விதவைகளை.. ஊனமுற்றவர்களை.. சொத்திழந்தவர்களை.. கல்வி இழந்தவர்களை.. உறவிழந்தவர்களை.. வீடு வாசல் இழந்தவர்களை உருவாக்கி இருக்கலாம். அதுவும் எதிரியின் பலமான எதிர் நடவடிக்கைகளால் நிகழ்ந்தவையே அதிகம். அதில் இருந்து மீட்சிப்படுத்த வேண்டியவர்கள்.. எமக்கு ஆயுதத்தைத் தந்து போராட தூண்டியவர்களும்.. எதிரிக்கு துணை நின்று இந்தப் போரை நடத்திய சர்வதேசத்தினருமே. ஆனால் அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது எங்கும் கண்டிக்கப்படவில்லை...!

30 வருட போராட்ட காலத்தில்.. புலிகள்.. ஒரு பெண்ணை வன்புணர்ந்து கொன்றார்கள்.. புலிகள் நிகழ்ச்சியில் பெண்கள் கூத்தாட்டம் என்று வந்ததாக நான் அனுபவிக்கவும் இல்லை.. காணவும் இல்லை.

1990 இன் முற்பகுதியில்.. முத்தமிழ் விழா வை புலிகள் யாழில் நடத்திய போது இலட்சக்கணக்கான மக்கள் வந்து போயினர். அங்கு ஒரு குத்தாட்டமும் போடப்படவில்லை. மக்கள் தேசத்தின் பெருமையை கட்டிக்காத்தார்கள். அன்றைய நிலையில் தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா போன்ற தென்னிந்திய கலைஞர்கள்.. தேச விடுதலைப் பாடல்களைப் பாடி மக்களை விடுதலையின் தேவையின் பால் கவனமீர்க்கச் செய்தனர்.

இன்று நிலைமை அப்படியல்ல. இன்று விடுதலை என்ற பேச்சே எழக்கூடாது என்ற எதிரிகளும்.. துரோகிகளும் மக்களை ஆளுகின்றனர். இந்த நிலையில்.. பாலியலும்.. குடியும் கூத்தும்.. கலாசாரமாவது ஒன்றும் உலகில் புதிதல்ல. கிட்லரும் இதையே செய்தார்..! மகிந்தவும் அதையே செய்கிறார்.

பிரச்சனை இந்த நிலையை நாம் எவ்வாறு சேதாரங்களைக் குறைத்து கடந்து வருவது என்பதில் தான் உள்ளதே அன்றி.. வேறில்லை..! நிச்சயம் அதை சித்தார்த்தனாலோ.. சங்கரியாலோ.. டக்கிளசாலோ.. வரதராஜப் பெருமாளாலோ.. செய்ய முடியாது. காரணம்.. அவர்களும் கடந்த 25 ஆண்டுகளாக இதையே இந்திய மற்றும் சிங்கள எதிரிகளோடு சேர்ந்து சொந்த மக்களைச் சீரழிக்க செய்து வருகின்றனர். அந்த வகையில்.. இந்த நிலையை கட்டுக்குள் கொண்டு வர.. யாழ் மற்றும்.. வடக்குக் கிழக்கு கல்விச் சமூகம் மட்டுமே தகுதி கொண்டுள்ளது. அது அச்சுறுத்தல்களைக் கடந்து செயற்பட தயங்கும் இன்றைய இந்த நிலையில்.. பலர் மனம் குமுறியபடி வேடிக்கை பார்க்க வேண்டிய நிலையில் நிற்கிறார்களே தவிர.. இது தொடர இடமளிப்பார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

போராட்டத்தை எதுக்கும் குற்றம் பிடிக்கும் உங்கள் தலையை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு.. அதற்கு முன்னரும் பின்னருமான நிஜங்களை கொஞ்சம் அலசிப் பார்ப்பது நன்று. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இன்னமும் இலங்கைத்தீவில் வாழ்கிறானென்றால் அதற்குக் காரணமும் இந்த சமரசப் புத்தியே..! சிங்களத் தளங்களில் அவர்களுடன் உரையாடும்போதெல்லாம் தெரியவரும்..! இந்த சமரச புத்திதான் அவனையும் சினங்கொள்ள வைக்கிறது. :rolleyes:

நிலைமைகள் மாறினால் பழைய வட்டத்துக்குள் வந்துவிடப் போகிறார்கள்..! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் எவ்வளவு கொடுரமான விளைவுகளை,கலாச்சார சீர்கேடுகளை கொண்டுவரும் என்று வியட்னாம்,தாய்லாந்து,பிலிப்பைன்ஸ் (அமெரிக்கன் தளம் அமைத்த நாடுகள் கூட) பார்த்தால் தெரியும்.அதற்காக நாம் போராடாமல் இருந்திருக்க வேண்டுமென்பதல்ல முப்பது வருடம் மிக மிக நீண்டது ,இதன்பின் வரும் தாக்கங்களையும் உணர்ந்தே செயற்பட்டிருக்க வேண்டும்.

அழிப்பது மிக இலகுவானது அதை திரும்ப மீள்கட்டுவதுதான் கஷ்டம் ,கலாச்சாரமும் அதற்கு விதிவிலக்கல்ல .

அர்ஜுன் எங்கட தலைவருக்கு உதெல்லாம் விளங்காமல் 30 வருடங்கள் போராடிவிட்டார் நான் உட்பட பெரும்பான்மையான தமிழர்களும் அவர்பின்னால் ஆதரவளித்திருந்தோம் எமது போராட்டம் வெற்றி பெறவில்லை என நீங்கள் சொல்கின்றீர்கள், எமக்கு தெரியாது போய்விட்டது உங்களுக்கோ உங்களின் தலைவர்க்கும் இந்த பிரச்சனை தீர்க்க எதோ வைச்சிருக்கிறியள் போல இருக்கின்றது அதைப்பாவிச்சு மக்களுக்கு தீர்வை பெற்று தாருங்கள் இப்போது இது உங்களுக்கான காலம் நீங்கள் போகும் வழி சரியானது என உணரும் பட்சம் மக்கள் உங்கள் பின்வருவார்கள் அதை விட்டுவிட்டு சும்மா எழுதிக்கொண்டு நேரத்தை வீண் அடிக்கின்றீர்கள்.

அர்ஜுன் அண்ணா அதைச் செஞ்சு இதோ நாளைக்கே தமிழீழத்தைக் கொண்டு வந்திடுவார்..! :huh: ஆனால் நீங்கள்தான் அவருக்குப் பின்னால போகமாட்டேனெண்டு அடம்பிடிக்கிறீங்கள்..! :(

அண்ணா.. நீங்கள் கவலைப்படாமல் செயலில இறங்குங்கோ..! உங்களுக்குப் பின்னால வர நாங்கள் ரெடி..!! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.