Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் தாலிகளைப் பறிகொடுக்கும் தமிழ் பெண்களின் அவலம்! ருசி கண்ட பூனைகளாக அலையும் தாலி அறுப்பார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Tuesday, 2011-10-11 20:41:32]

thali01_150seithy.jpg

பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களில் 3 தாலிக்கொடி அறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சில சம்பவங்கள் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பவுனின் விலை முன்னெப்போதும் இல்லாது உயர்வடைந்துள்ளது. இதனை சர்வதேச தொலைக்காட்சிகள் பலவும் நாளாந்தம் ஒளிபரப்பி வருகின்றது. பல தமிழ் பெண்கள் தமது தாலிக்கொடியை எந்நேரமும் அணிந்திருப்பது இல்லை. கோயில் அல்லது நல்ல காரியங்களுக்குச் செல்லும்போதே அதை அணிவது வழக்கம்.

ஆனால் சில பெண்கள் தாலிக்கொடியை எப்போதும் அணிவது வழக்கம். அவர்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்லும் போது கூட அதனை அணிந்தே செல்கிறார்கள். இவர்களையே தற்போது ஒரு கும்பல் குறிவைத்துள்ளது என நம்பப்படுகிறது.

தனியா வரும் தமிழ் பெண்களை இவர்கள் மிரட்டியும் மற்றும் அடித்தும் தாலிக்கொடியை அறுத்துச் செல்கிறார்கள். தமிழ்பெண்கள் வழமையாக அணியும் தாலிக்கொடியின் ஆகக்குறைந்த மதிப்பு சுமார் 3000 பவுன்சுகள் இருக்கும். எனவே திருடங்களுக்கும் இது போன்று திட்டமிட்டு செயல்படும் குழுக்களுக்கும் பெரும் பணம் கிடைக்கிறது. சமீபத்தில் வால்த்தம்ஸ்ரோ பகுதியில் குழந்தை ஒன்றை தள்ளுவண்டியில் தள்ளிவந்த தாய் ஒருவரை இக் கும்பல் குறிவைத்துள்ளது. திட்டமிட்ட ரீதியில் குழந்தையின் நகைகளை திருட முனைய அதனைத் தடுக்கும் நோக்கில் அவர் குனிந்தவேளை பின் புறத்தில் நின்றவர் தாயின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துள்ளார்.

இதன்போது ஏற்பட்ட போராட்டத்தில் அத் தமிழ் பெண் மீது இக் கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. ஈவிரக்கமற்ற வகையில் மூக்கு மற்றும் கண்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மூக்கில் இருந்து ரத்தம் சிந்த அப்பெண் நிலத்தில் வீழ்ந்திருக்கிறார்.

இதே போல மற்றுமொரு சம்பவம் என்பீல்ட் பகுதியில் நடைபெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின் படி ஆபிரிக்க நாட்டவர்கள் சிலரே இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=50704&category=TamilNews&language=tamil

இதே போல மற்றுமொரு சம்பவம் என்பீல்ட் பகுதியில் நடைபெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின் படி ஆபிரிக்க நாட்டவர்கள் சிலரே இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுத்தப்பொய்........... நாமே நமக்கு திருடர் இது நான் வசிக்கும் நாட்டிலிருந்து என் அனுபவம் நல்ல ஓர் இனம் ஆபிரிக்க இனம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வால்த்தம்ஸ்ரோ பகுதியில் குழந்தை ஒன்றை தள்ளுவண்டியில் தள்ளிவந்த தாய் ஒருவரை இக் கும்பல் குறிவைத்துள்ளது. திட்டமிட்ட ரீதியில் குழந்தையின் நகைகளை திருட முனைய அதனைத் தடுக்கும் நோக்கில் அவர் குனிந்தவேளை பின் புறத்தில் நின்றவர் தாயின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துள்ளார்.

வால்த்தம்ஸ்ரோ பகுதியில் நடைபெற்றதாக சொல்லப்படும் திருட்டை ஈஸ்ட் ஐரோப்பியர் தான் இந்த திருட்டை செய்ததாக எனது நண்பர் கூறினார்.

தெரியாமல் தான் கேட்கிறேன், சாதாரணமா வெளிய போகும் போது கூட தாலிக் கொடி போட்டுக் கொண்டு போறவையள் மற்றவர்களுக்கு என்னத்தை வெளிப்படுத்தினம்? தாங்கள் திருமணமானவர்கள் என்ற செய்தியா? :huh:

அடுத்தவன் கண்களை உறுத்த வேண்டும் என்று தங்க நகைகள் போடுறது... பிறகு ஆபிரிக்காக் காரான் அறுத்தான், ஐரோப்பியாக் காரான் அறுத்தான் என்று ஒரு சாட்டு வேற <_<

(கிலோ கணக்கில தாலிக் கொடியைச் செய்து கட்டுறவையாள சொல்லோனும்... :rolleyes:)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்படியான சம்பவங்களை வரவேற்கிறேன். அந்நிய நாடுகள் எங்கனும் அடைக்கலம் புகுந்து.. வெட்டிப் பந்தா காட்டும் ஒரு அடிமைப்பட்டுள்ள.. இனம்.. அதை உணராமல்.. திமிர் எடுத்து உலகம் பூராவும் அலைந்து திரிவதை உணர்த்த இதுபோன்ற சம்பவங்கள் நம்மவருக்கு மிக அத்தியாவசியம்.

வெட்டிப் பந்தா காட்டும் தமிழ் அடிமைகளிடம்.. எதை எவர் புடுங்கினாலும்.. அவர் வாழ்க..! :icon_idea:

Edited by nedukkalapoovan

முள்ளிவாய்க்கால் அவல நேரம் ஒரு இத்தாலி நாட்டு உணவக உரிமையாளர் தனது ஈழத்தமிழரை பார்த்து கேட்டாராம்: 'உனது மக்கள் அங்கு தண்ணீருக்கும் உணவுக்கும் அலையும் பொழுது உன்னால் எப்படி ஒரு பணக்கார கனேடியனாக வாழ முடிகின்றது" என்று. [ அவரும் கையில் மோதிரங்கள், கழுத்தில் சங்கிலிகள், புதிய ஜீப் (எல்லாம் கடனில்) ]

அது தான் நினைவுக்கு வந்தது இதை வாசிக்கும் பொழுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை இல்லாத தாலியறுப்பு,சங்கிலியறுப்பே இஞ்சை பெரிசாய் நடக்குது?.....இருந்தாலும்....சம்பந்தாசம்பந்தமில்லாமல்......நாணயக்கயிறு மொத்தத்திலை தாலிக்கொடிகட்டி பந்தா காட்டுறவைக்கு இது வேணும்......என்ன ஒண்டு வாறகிழமை அறுத்ததைவிட...கொஞ்சம் மொத்தமான தாலிக்கொடியோடை திரிவியள்...அவ்வளவுதான்...வேறை என்ன....திருந்தாதுகள். :(

  • கருத்துக்கள உறவுகள்

தோழரே !.. அவர்கள் உழைத்து சம்பாதித்தாக கூட இருக்கலாம் .. ஒரு பவுன் 22.000 ரூபாய் ஆக குறைந்தது 5 பவுன் இல்லையென்றால் எவனும் கல்யாணம் கட்டவே வருவதில்லை.. போகட்டும் .. ஆனால் உழைக்காமல் பெட் ரெஸ்ட் எடுத்த மாறியே சிலது இருக்குதுகள் அதுகளுக்கு இது கரெக்ட்..

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தோழரே 5 பவுண் என்டு சீப்பா சொல்லீட்டிங்க இங்க குறைஞ்சது 100 பவுனாவது இருக்கணும்.....

தாலி மட்டும் 20 க்கு மேல..............

  • கருத்துக்கள உறவுகள்

நூறு பவுனா எப்பா சாமி ஒரு நடுத்தர குடும்பதிற்கு இங்கிட்டு உள்ள நிலமை 30 பவுன் + ஒரு டுவீலர் + சான்ரோ காரு + மிக்ஸி கிரைண்டர் கட்டில் பீரொ எக்ஸ்ட்ரா(சீர் வரிசை) + கையில 2 லட்ச ரூபா கிந்திய பணம்...

டிஸ்கி:

வெளிநாடு என்பதால் கொஞ்சம் கூட கொறைய இருக்கலாம்.. :( :(

நான் இப்படியான சம்பவங்களை வரவேற்கிறேன். அந்நிய நாடுகள் எங்கனும் அடைக்கலம் புகுந்து.. வெட்டிப் பந்தா காட்டும் ஒரு அடிமைப்பட்டுள்ள.. இனம்.. அதை உணராமல்.. திமிர் எடுத்து உலகம் பூராவும் அலைந்து திரிவதை உணர்த்த இதுபோன்ற சம்பவங்கள் நம்மவருக்கு மிக அத்தியாவசியம்.

வெட்டிப் பந்தா காட்டும் தமிழ் அடிமைகளிடம்.. எதை எவர் புடுங்கினாலும்.. அவர் வாழ்க..! :icon_idea:

மிஸ்டர் நெடுக்ஸ் எந்தரீதியில அலை/அடை களம் புகுந்தாலும், அந்த நாட்டுக்காரன் பார்வைல எல்லாருமே,, தன்னாட்டில் வந்து கிடக்குற அகதிகளே! வேணும்னா எமக்குள் நாமளே பீத்திக்கலாம்,, நாம படிக்க வந்தோமாக்கும்னு!

முள்ளிவாய்க்கால் அவல நேரம் ஒரு இத்தாலி நாட்டு உணவக உரிமையாளர் தனது ஈழத்தமிழரை பார்த்து கேட்டாராம்: 'உனது மக்கள் அங்கு தண்ணீருக்கும் உணவுக்கும் அலையும் பொழுது உன்னால் எப்படி ஒரு பணக்கார கனேடியனாக வாழ முடிகின்றது" என்று. [ அவரும் கையில் மோதிரங்கள், கழுத்தில் சங்கிலிகள், புதிய ஜீப் (எல்லாம் கடனில்) ]

அது தான் நினைவுக்கு வந்தது இதை வாசிக்கும் பொழுது.

அகூதா ரொம்ப தப்பு! எல்லாம் கடனில் இருந்தாலும், தாலியையும், நகைகளையும், க்ரெடிற்காட்டில காசு அடிச்சுகூட ,, போராட்டத்துக்கு கொடுத்தவர்களும்,, எம்மில் மிக மிக அதிகம் !!

பழசை மறக்கவே கூடாது!!

எம்மில் சிலபேருக்கு இதுவே பொழைப்பா போச்சு,,,

அது என்னான்னா, எங்காவது ஒரு சமூககுற்றங்கள் நடந்தாகூட, உடனே அத தாயகபோராட்டங்களோட ஒப்பிட்டு ஆவேசமா கருத்து எழுதுறது!

சமூககுற்றங்கள் இலண்டன்ல இருக்குற வால்தம்ஸ்ரோ பகுதில மட்டுமில்ல,

நாங்க நேசிக்குற ..ஈழத்து வல்லைவெளியிலயும் நடந்தே கொண்டு இருப்பவை!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் ஒரு வீட்டில் திருடு போனது பல சாமன்கள் கார் உட்பட, அவன்கள் தாலிக்கொடியை மட்டும் பத்திரமா எடுத்து மேசையில் வைத்துவிட்டு போய்விட்டார்கள், தாலிக்கு மருவதா கொடுத்த ரெம்ப நல்ல தமிழ் திருடன்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தாலி :

மஞ்சள் தாலி கொடி உனக்கு வேலியடி பெண்ணே அன்று

பொன் தாலி கொடி உனக்கு பாரமென்றடி பெண்ணே அறுத் தெடுத்திருவாரடி இன்று

தாலி கொடி உனக்கு ஏனென்று என்னவென்று கேட்பாயடி பெண்ணே நாளை

தெருவில போகும் பெண்களிடம் நகை பறிக்கிறவர்கள் சாதா திருடர்கள். அதில் பல இனத்தவரும் அடக்கம்.

அதைவிட தமிழர்களின் வீடுகளில் விசேடங்கள் நடக்கும் பொழுது அவர்களின் உறவினர்களின் வீடுகளில் நகைகள் களவு போகின்றன. வைபவங்கள் நடக்கும் நேரங்களில் வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் இருக்கும் நகைகளை எடுத்து

உச்சியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் நகைகளால் அலங்கரித்துக் கொண்டு அலைவார்கள். அந்த நேரங்களிலேயே வீட்டில் களவுகள் நடக்கின்றன. இந்தக் களவுகளில் தமிழர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம்.

நம் யாழ் கள உறவு புறோக்கர் முன்பொருதடவை ஒரு காணொளியை இணைத்திருந்தார். செல்வச்சந்நிதி கோயிலில் இந்த தமிழ் பொலிஸ் சிங்கம் தாலி அறுப்பு திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அப்படியானால் இவரையே லண்டனுக்கு அழைத்து மெற்ரோபொலிற்றனில் வேலைக்கு அமர்த்தினால், நமது தமிழ்ப்பெண்கள் லண்டனில் பொன்னகையுடன் புன்னகைக்கலாம்.

சிரிச்சு சிரிச்சு உன்னை சிறையில் வைப்பேன்....... கன்னம் பழுக்கப் பழுக்க ................. கள்ளிகளே!!!! கள்ளர்களே!!! காணொளியைப் பாருங்கள்!!! எதுக்கடி நகைகளைப் போட்டு எங்களைச் சித்திரவதை பண்ணுறீங்கள்

http://newjaffna.com/index.php

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் நெடுக்ஸ் எந்தரீதியில அலை/அடை களம் புகுந்தாலும், அந்த நாட்டுக்காரன் பார்வைல எல்லாருமே,, தன்னாட்டில் வந்து கிடக்குற அகதிகளே! வேணும்னா எமக்குள் நாமளே பீத்திக்கலாம்,, நாம படிக்க வந்தோமாக்கும்னு!

பிரச்சனை நீங்க மொஸ்கோக்கால வந்தியளோ.. இல்ல பாரீஸுக்குள்ளால.. இல்ல ஆபிரிக்காவுக்குள்ளால வந்தியளோ.. இல்ல கட்டுநாயக்காவுக்குள்ளால வந்தியளோ என்பதல்ல..!

பிரச்சனை.. தான் ஒரு அடிமை என்பதை உணராத மந்தைகளாக வெட்டி பந்தா காட்டிக் கொண்டு அலைவது தான். அதனால் தான் அவை இலகுவாக இரையாகின்றன..!

இதை நீங்க முதலில சரியான விளங்கிக் கொள்ளனும். நான் என்ன சொல்ல வாறன் என்பதை உணர்ந்து கொள்ளனும்..! :):icon_idea:

ஆமாமா தெளிவா புரிஞ்சிடுச்சு!!

மானம் கெட்ட அடிமைங்க அவங்க............மாஸ்கோ , பாரீஸ் ன்னு எல்லாம் போறாங்க.........!

,பொதுவாகவே...படித்த அடிமைங்க,, கட்டு நாயக்காவில் ஏறி,, ஹீத்ரோவில் , இறங்குறவங்க!!

பைதவே- இந்த கூட்டத்துல ,,நீங்க யாரு?

மந்தையா, அகதியா, நெடுக்ஸ்?? :)

சொன்னாலும் சொல்லாட்டிலும் அநேக புலம்பெயர் தமிழர்களின் நிலை இது தாங்க..!

பைதவே.. நான் இந்தக் கூட்டத்தைச் சார்ந்தவனல்ல..! பந்தா இல்லாத... அடிமை என்ற உணர்வை உணர்கின்ற.. அதில் இருந்து விடுபட வேண்டும் என்ற வேட்கை கொண்ட தமிழ் மொழி அறிந்த மனிதன்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

அகூதா ரொம்ப தப்பு! எல்லாம் கடனில் இருந்தாலும், தாலியையும், நகைகளையும், க்ரெடிற்காட்டில காசு அடிச்சுகூட ,, போராட்டத்துக்கு கொடுத்தவர்களும்,, எம்மில் மிக மிக அதிகம் !!

பழசை மறக்கவே கூடாது!!

எம்மில் சிலபேருக்கு இதுவே பொழைப்பா போச்சு,,,

அது என்னான்னா, எங்காவது ஒரு சமூககுற்றங்கள் நடந்தாகூட, உடனே அத தாயகபோராட்டங்களோட ஒப்பிட்டு ஆவேசமா கருத்து எழுதுறது!

சமூககுற்றங்கள் இலண்டன்ல இருக்குற வால்தம்ஸ்ரோ பகுதில மட்டுமில்ல,

நாங்க நேசிக்குற ..ஈழத்து வல்லைவெளியிலயும் நடந்தே கொண்டு இருப்பவை!

இன்று எம்மில் பலரும் பழையதை மறந்து, தாயாக உறவுகளுக்கு போதிய உதவிகள் செய்யாமல் வாழும் கைவிரலுக்கு மீறிய வாழ்க்கை முறையே இவ்வாறான களவுகளுக்கு வழிவகுக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.