Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச் செயலகம் என்பது தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த செயலகமே. அதை வேறுபெயர்களில் எவரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் - சு.பரமேஸ்வரன்

Featured Replies

பரமேஸ்வரன் அறிக்கை - தேசியத்திற்கு எதிராக செயற்படுவோர்களது செயற்பாடுகள் உடைத்தெரியப்படும்

[பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழப்பங்களுக்குசில விளக்கங்களோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.]

இன்று தோன்றியுள்ள இறுக்கமான காலகட்டத்தில் எதிரி மிக தந்திரமாக எமக்குள்ளேயே நடமாடத் தொடங்கியுள்ளான்.

அவன் எம்மை விட தேசியப் பற்றுள்ளவனாக தன்னை அடையாளப்பபடுத்திக்கொண்டு பல சந்தர்ப்பவாதிகளை தம்முடன்இணத்துக்கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளான். அவனது குறிக்கோள் புலம் பெயர் மக்களை பல குழுஉடைத்துப்போடுவதுதான். தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவரும் மிக விரைவில் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் பலவிடயங்களில் நாம் வெகு நாட்களாக பொறுமைகாத்து வருகின்றோம்.

ஆனால் துரோகங்கள் வெளிப்படையாக அரங்கேறுகின்றன. தெரிந்தும் தெரியாமலும் தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக நிற்பவர்கள்அனைவரும் ஒதுங்கிக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். கால ஓட்டத்தில் அனைவருடைய முகங்களும் வெளிச்சத்திற்கு வரும் அப்போது அவமானப்பட்டு நிற்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றோம். பொய்கள் பல காலம் தாக்குப்பிடிக்க முடியாது உண்மைகள்உடைத்துக்கொண்டு வெளிவரும் நாட்கள் தொலைவில் இல்லை.

உண்மையான போட்டிகள் என்பது எதிரியை வீழ்த்துவதில்தான் இருக்க வேண்டும். தமிழர்கள் முளுவதும் பரந்து வாழும் அனைத்துநாடுகளிலும் எதிரி மாற்றத்தை விரும்புகின்றான். அதை நிறைவேற்ற பலர் தெரியாமலும் சிலர் தெரிந்தும் களம் இறங்கியுள்ளார்கள்.அவன் விரும்பும் மாற்றத்தை நிறைவேற்றினால் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் எதிரி தப்பிவிடுவான். எம்மை வைத்தேஎமது கண்னை குத்த எதிரி தீர்மானித்து விட்டான். யார் யாரே விட்ட பிழைகளை சாதகமாக்கிக்கொண்டு உலகெங்கிலும் எமதுதேசியத் தலைவரால் வளர்த்தெடுக்கப்பட் கட்டமைப்பை அனைத்து நாடுகளிலும் உடைத்தெரிய எதிரி வெறிகொண்டுவலைவீசுகின்றான்.

எதிரி மிகச்சரியாக கணக்குப்போட்டு எவனை விலைக்கு வாங்க வேண்டும் எவனை அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்பதுபல துரோகிகள் ஊடாக அறிந்து வைத்துள்ளான். அவைகள் அப்பட்டமாக அரங்கேற்றப்படுகின்றன. செயற்பாட்டாளர்கள் பிழைவிட்டிருந்தால்?! நன்றாக அறிந்துகொள்ளுங்கள் பிழைகள் என்றும் திருத்தக்கூடியவைகள். ஆனால் எதிரியின் வஞ்சக வலைக்குள்விழுந்து துரோகிகளாகி விடாதீர்கள் வீழ்ந்துபோனால் காலம் என்றும் உங்களை மன்னிக்காது.

தமிழர்களின் பொது எதிரியாக சிங்களத்தை வீழ்த்த இன்று தேசியம் பேசுபவர்களிடம் ஏதாவது தொலைநோக்கு அல்லது குறுகியநோக்கு திட்டங்கள் உண்டா? இனி ஜனநாயகம் இனி எல்லாம் வெளிப்படை என ஒக்காலமிடும் இவர்களிடம் எதிரிக்கு எதிரானவெளிப்படையான திட்டம் என்ன? எதிரியை அழிக்க, குற்றவாளிக் கூண்டில் ஏற்ற இவர்களிடம் உள்ள திட்டங்கள் என்னென்ன?எவருக்காவது தெரியுமா? கணக்கு, அதற்கு இருக்கா கணக்கு, இதற்கு இருக்கா கணக்கு!. மக்களிடம் பணம் சேகரித்தேன்விடுதலைப்புலிகளுக்கு கடந்தகாலங்களில் பணம் ஒரு ரூபாய் அனுப்பினதாக ஒப்புக்கொண்டாலும் அவன் நாளை சிறைதான் செல்லவேண்டும், பணம் என்றால் பிணம் கூட எழும்பி வரும் என எதிரியின் கணக்கு அதனாலேயே செயற்பாட்டாளர்கள் மீது பண மோசடிஎன அவனது திட்டத்தை யார் யார் ஊடாகவே செயற்படுத்த முனைகின்றான்.

ஒரு நாட்டில் ஒரு செயற்பாட்டாளர்கள் அல்லது இருவர் என்றால் சிரிது யோசிக்கலாம் ஆனால் சொல்லி வைத்தாற் போல்உலகின் அனைத்து நாடுகளிலும் ஒரே பாணியையே கையாளப்படுகின்றது. கணக்கு கேள் காட்ட மாட்டார்கள் காரணம் பணம்விடுதலைப்புலிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது, கணக்கு காட்டினால் சிறை காட்டாவிட்டால் துரோகி பணத்தை அடித்துவிட்டான் எனஓரங்கட்டிவிடாலம் இதுதான் இதுவேதான் எதிரியின் தந்திரமாக கணக்கு மக்களே பல ஆண்டுகள் கடந்த பின்பே எதிரியின்சூட்சுமத்தை புரிந்துகொள்ள முடியும் எவ்வளவு சொன்னாலும் சில விடயங்கள் மட்டும் விளங்கவே விளங்காது.

இறுதியாக மக்களே சற்று நிறுத்தி ஆழமாக உங்களுக்குள்ளேயே அக்கேள்விகளை கேளுங்கள். குழப்பி விடுவதற்கு பலர் வருவார்கள்அவதானமாக இருங்கள். அழுத்தமாக கூறுவதானால் பழைய செயற்பாட்டாளர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் புதிதாகஎவரையும் அனுமதிக்காதீர்கள், ஆதரிக்காதீர்கள் அதுவே நீங்கள் தேசியத்திற்கு செய்யும் நன்மை. யார் உண்மையாகவேலைத்திட்டங்களுடன் வருகின்றார்கள் என மட்டும் பாருங்கள் எதிரிக்கு வெளிப்படையாக திமிராக எவன் சவால் விடுகின்றார்கள்என மட்டும் பாருங்கள் அத்திட்டங்களுக்கு மட்டும் முளுமையாக அறிந்துகொண்டு உதவி செய்யுங்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச் செயலகம் என்பது தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த செயலகமே. அதை வேறுபெயர்களில் எவரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அப்படி பயன்படுத்துபவர்களை தேசத்திற்கு எதிரானவர்களான மட்டுமேபாருங்கள்.

மேலும் பல ஆதாரங்களுடன் உங்கள் முன் விரைவில் வருவேன்.

நன்றி

என்றும் உங்களுடன்

சு.பரமேஸ்வரன்

11/11/2011

.. நன்றிகள் அகோதா இணைப்பிற்கு ...

  • Replies 62
  • Views 5.6k
  • Created
  • Last Reply

பரமேசுவரன் அண்ணாச்சி நீங்கள் இந்தியாவில் இருந்த காலத்தில் இருந்தே உங்களது மேன்மை தங்கிய தேசிய சேவைகளை???? நான் அறிவேன்.

உங்களுடைய பொப்புலாரிட்டிக்கு நீங்கள் சாரசரி அரசியல் வாதிகள் மாதிரி அறிக்கை எல்லாம் விடலாமா? எச்சல் மண்டபத்துக்கு முன்னால் அனைவரும் ஒன்றுமைப்படும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலாமே?

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச் செயலகம் என்பது தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த செயலகமே. அதை வேறுபெயர்களில் எவரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அப்படி பயன்படுத்துபவர்களை தேசத்திற்கு எதிரானவர்களான மட்டுமேபாருங்கள்.

தலைமைச் செயலகம் என்ன என்பது பற்றி விளக்கம் கொடுக்க தாங்கள் யார்? இணையத்தளம் கிடைத்தவுடன் தகுதியற்ற விமர்சனங்களை வைப்பது நியாயமாகாது.

விடுதலைப்புலிகளின் பிரிவுகளிற்குட்பட்ட பிரச்சனையை அவர்களே தீர்க்கட்டும், அதை ஊதிப் பெருதாக்கி, குளிர்காய வேண்டாம். மாவீரா் நாள் நெருங்கும் வேளையில் தேவையில்லாத உமது சார்பு அறிவுக்கருத்துக்களை போட்டு வீணடிப்பது தவறு.

உண்ணாவிரதம் இருந்தவன் என்பதற்காக புலிகளின் கட்டமைப்புத் தொடர்பாக கொள்கை விளக்கம் கொடுக்க வேண்டாம். அது தரமற்ற செயற்பாடு. அதற்கான தகுதியும் உங்களிடம் இல்லை.

வராலாறுகள், தலைமை பற்றித் தெரியாமல் அவதுாறான கருத்துக்களைச் சொல்ல வேண்டாம். ஒருவனைத் துரோகி என்று சொல்வதற்கு முன் எனக்குள்ள தகுதியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அதைவிட அந்தக் கருத்தின் நியாயத் தன்மை பற்றி யோசிக்க வேண்டும்.

யார் தவறானவர்கள் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தலைவருக்கு மட்டுமே உரியது.

”சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்

பருக்கை உலர்ந்த வாயா! - திருக்குடந்தைக்

கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி

போட்டாளே, வேலையற்றுப் போய்!” -காளமேகப்புலவர்-

  • கருத்துக்கள உறவுகள்

யார் தவறானவர்கள் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை தலைவருக்கு மட்டுமே உரியது.

இந்தப் பிரமாஸ்திரத்தைத்தான் எல்லாத் தரப்பினரும் மிகுந்த நம்பிக்கையுடன் பாவிக்கின்றார்கள்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காளமேகம் அண்ணாக்கு ஒரு பச்சை.

நாளைக்கு தெருவிலை போற சொறிநாய் ஒன்று அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. முந்தநாள் பெய்த மழைக்கு முளைச்ச காளான்கள் எல்லாம் கொள்கை வகுப்பு எடுக்கிற காலமப்பா.. ^_^:wub:

இந்த அறிக்கையை எழுதியவர்,அல்லது கூறியவர் என்பது விடயமல்ல ,இவர் யார் என்பது இன்னும் சிலநாட்களில் வரலாறு நமக்கு இனம் காட்டும். இதுதான் சாதாரண நியதி, வரலாறு.ஆனால் இந்த நேரத்தில் ,இந்தகாலத்தின் தேவைக்கு ஏற்றது போல் உண்மையான சில விடயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது சாதரணமாக எல்லோருக்கும் விளங்கும். ஆகவே அவற்றை எடுத்து சிந்தித்து எமக்கு ஏற்பட்டுள்ள பல குழப்பங்களை தீர்க்க முயற்சிப்போம். நன்றி

இன்று தோன்றியுள்ள இறுக்கமான காலகட்டத்தில் எதிரி மிக தந்திரமாக எமக்குள்ளேயே நடமாடத் தொடங்கியுள்ளான்.

மிகச்சரியாக கணக்குப்போட்டு எவனை விலைக்கு வாங்க வேண்டும் எவனை அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்பதுபல துரோகிகள் ஊடாக அறிந்து வைத்துள்ளான். அவைகள் அப்பட்டமாக அரங்கேற்றப்படுகின்றன. செயற்பாட்டாளர்கள் பிழைவிட்டிருந்தால்?! நன்றாக அறிந்துகொள்ளுங்கள் பிழைகள் என்றும் திருத்தக்கூடியவைகள். ஆனால் எதிரியின் வஞ்சக வலைக்குள்விழுந்து துரோகிகளாகி

விடாதீர்கள் வீழ்ந்துபோனால் காலம் என்றும் உங்களை மன்னிக்காது.

இறுதியாக மக்களே சற்று நிறுத்தி ஆழமாக உங்களுக்குள்ளேயே அக்கேள்விகளை கேளுங்கள். குழப்பி விடுவதற்கு பலர் வருவார்கள்அவதானமாக இருங்கள். அழுத்தமாக கூறுவதானால் பழைய செயற்பாட்டாளர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் புதிதாகஎவரையும் அனுமதிக்காதீர்கள், ஆதரிக்காதீர்கள் அதுவே நீங்கள் தேசியத்திற்கு செய்யும் நன்மை. யார் உண்மையாகவேலைத்திட்டங்களுடன் வருகின்றார்கள் என மட்டும் பாருங்கள் எதிரிக்கு வெளிப்படையாக திமிராக எவன் சவால் விடுகின்றார்கள்என மட்டும் பாருங்கள் அத்திட்டங்களுக்கு மட்டும் முளுமையாக அறிந்துகொண்டு உதவி செய்யுங்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைச் செயலகம் என்பது தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த செயலகமே. அதை வேறுபெயர்களில் எவரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அப்படி பயன்படுத்துபவர்களை தேசத்திற்கு எதிரானவர்களான மட்டுமேபாருங்கள்.

தமிழீழ தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த செயலகம் தலைமைச் செயலகம்.

தமிழீழ தேசியத் தலைவரின் கட்டுப்படுத்தப்பட்ட செயலகம் அனைத்துலக தொடர்பகம்.

நாடு கடந்த தமிழீழ அரசைச் சிதைத்து அனைத்துலக தொடர்பகம் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றி தேசியத் தலைவரிற்கு மதிப்பளித்துள்ளது.

மாவீரர் நாளை குழப்பி தலைமைச் செயலகம் விடுதலைக்காக தம்மை கொடுத்த புனிதர்களை இழிபடுத்தப்பார்க்கிறது.

தேசியத் தலைவருக்கு இரு செயலகங்களும் நல்ல மரியாதை கொடுக்கிறார்கள்.

Edited by மின்னல்

  • தொடங்கியவர்

ஒரு பச்சை.

.. சொறிநாய் . ^_^:wub:

பச்சை .. ஜீவாவிற்கு ... சொறிநாயிற்காக!

தலைமைச் செயலகம் என்ன என்பது பற்றி விளக்கம் கொடுக்க தாங்கள் யார்? -காளமேகப்புலவர்-

விளக்கம் தெரிந்தவர்கள் சொல்லட்டும் .. எந்தக்காலத்தில் உந்த தலைமைச்செயலகம் புலம்பெயர் நாட்டுக்கு வந்து வேலை செய்யப் போகிறதென்று தலைவர் சொன்னார் என்பதை????

புலி இளைத்தால் பூனைதான் ராஜவாம் அண்ணன் பரமேசு நீங்கள் uk வந்த கடன் காசெ குடுக்காமல் அந்தகுடும்பம் சாகக்கிடக்கு நீங்க இங்கு sound விட வேண்டாம் uk ல் உங்களின் பழைய வேலை பற்றி எழுத வேண்டி வரும் அனைத்துலகம் தலைமை அது அவர்களின் indoor பிரச்சினை நீங்கள் sound குடுக்க வெளிக்கிட்டால் :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

விளக்கம் தெரிந்தவர்கள் சொல்லட்டும் .. எந்தக்காலத்தில் உந்த தலைமைச்செயலகம் புலம்பெயர் நாட்டுக்கு வந்து வேலை செய்யப் போகிறதென்று தலைவர் சொன்னார் என்பதை????

விடுதலைப்புலிகள் அமைப்பின் துறைசார் கட்டளைகள் தலைவருக்கும் அவரோடு பயணித்தவர்களுக்கும் இடையிலான பரிவர்த்தனை. இதில் அடி முடி தெரியாது மூக்கை நுழைப்பது

அநாகரீகம். விமர்சனங்கள் வரலாம், ஆய்வுகள் எழுதலாம் . ஆனால் ஒரு அமைப்பின் கொள்கை ரீதியாக மறுக்கும் உரிமை யார் கொடுத்தது?

எதையும் எழுதலாம் என்றில்லை. எழுத்திற்கும் ஒரு எல்லையுண்டு.

தலைமைச் செயலகம் ஏன் உருவாக்கப்பட்டது? அதில் யார் இருப்பார்கள்? என்ற எந்த சுற்றறிக்கையும்

விடப்படவில்லை. அதற்கான தேவையுமில்லை. அது அமைப்பு ரீதியானது

தலைமைச் செயலகமோ அனைத்துலகமோ எல்லாமே தலைவரால் உருவாக்கப்பட்டவை. தற்போதைய நிலையில் உள்ளக முரண்பாடுகள் உண்டு. மறுப்பதற்கில்லை. ஆனால் இது அவர்களால் தீர்க்கப்பட வேண்டியவை.

ஒவ்வொருவருக்கும் ஒரு வரையறை உண்டு. எமக்கான எல்லைகளை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்க்கலாம்.

ஒருவருமே நூறு வீதம் 'சுத்தம்' என நூறுவீத மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். இன்றைய நிலையில் சொன்னவரை பற்றி ஆழமாக அலசுவதைவிட என்ன சொல்லவருகிறார் என்பதை அலசுவது எமது சமூகத்திற்கு தேவையானதாக உள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ; இறுதி முடிவு எடுப்பது என்பது தேசியத்தலைவர் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.அதேபோல சில தீர்மானங்களை எடுக்கும் உரிமையும் சில உயர் மட்ட தளபதிகளுக்குதான் உண்டு.அதுவும் தலைவருடைய அனுமதியோடை தான். இது தான் விடுதலைப்புலிகளின் மரபும் கூட.

இண்டைக்கு என்னடா எண்டு பார்த்தால் ஒரு கணனியும் அதில் தமிழ் எழுத்துருவும் இருந்து அதில் தட்டச்சு செய்யத் தெரிந்தவன் எல்லாம் முடிவெடுக்கலாம்.

அதை போல ஒரு பத்து யுரோவுக்கு டொமைன் எடுத்து இணையத்தளம் தொடங்கிவிட்டு அகத்தியன் அதியமான் சோரம்போன மான் சோடைபோனமான் மயிர்மான் மட்டை மான் மலம் சலம் சாணி சாக்கடை எண்ட பெயருகளிலை எழுதறிவன் எல்லாம் விடுதலைப்புலிகளின்ரை அசைவியக்கத்தையும் கொள்கைகளையும் தீர்மானிக்கிறவன் ஆகியிட்டான்.

போரிலை அனைத்தையும் இழந்தவன் துரோகி போரை வைச்சு பிழைப்ப நடத்தினவன் எல்லாம் தியாகி என்ன கொடுமை இது?

தலைமைச் செயலகம் துரோக அமைப்பு அதிலுள்ளவர்கள் எல்லாம் துரோகிகள் எண்டு சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது . அதை தீர்மானிக்க வேண்டியவர் தலைவர். அவர் இருக்கிறார் வருவார் எண்டு நம்புறியள் -சொல்லறியள் தானே! அப்ப அவர் அதை பார்த்துக்கொள்ளுவார். தலைமைச் செயலகத்தில உள்ளவங்கள் துரோகிகள் எண்டால் அவர் அதற்குரிய தண்டனையை அவங்களுக்கு கொடுப்பார்.

அவற்றை வேலையை பார்க்கிறதுக்கு நீங்கள் யார்?

மாவீரர் தினத்துக்காகத் தானே இவ்வளவு குத்தி முறியிறியள். 17 ஆயிரம் மாவிரர் குடும்பங்களுக்கு உதவி தேலைப்படுகுது.8 அயிரம் மாவீரர் குழந்தைகளுக்கு ஆதரவும் அரவணைப்பும் தேவைப்படுகுது.

மாவீரர் தினத்துக்கு இன்னும் இரண்டு கிழமை இருக்குத்தானே! அதுக்குள்ளே தேசியத்தின் பேராலை நீங்கள் பங்கு புறிச்சு வைச்சிருக்கிற சொத்துக்களை போட்டு மாவீரர் நிதியம் ஒன்றை தொடங்குங்கோ!குறைந்த பட்சம் 500 குழந்தைகளுக்காவது முதல்மாத கொடுப்பனவை அனுப்புங்கோ.

துரோகிகள் மாவீரர் தினம் செய்கிறார்கள் சிறீலங்கா அரசு கைக்கூலிகள் மாவீரர் தினம் செய்கிறார்கள்;கேபி குழு மாவீரர் தினம் செய்யுது என்று நீங்கள் குய்யோ முறையோ எண்டு குத்தி முறிய வேண்டாம்.

தேசியத் தலைவர் இருக்கிறார் வருவார் எண்டு மக்களுக்கு உறுதியாக சொல்லும் நீங்கள் அவர் இதையெல்லாம் பார்ப்பார் முடிவெடுப்பார் எண்டு விடுங்கோ.அவரை கேவலப்படுத்தாதையுங்கோ

Edited by navam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி !!!

நீங்கள் தமிழ் மக்களுக்கு விளக்கம் தரத்தேவையில்லை.இன்னும் இரண்டு வாரங்களில் மக்களே முடிவெடுப்பார்கள். முடிந்ததல் கோத்தபாயாவிடம் போய் சொல்லுங்கோ.

... இதில் என்னத்தை கூட்டிக்கழித்து சொல்ல வருகிறீர்கள்... ..

* தலைவர் தான் உந்த கும்பலை ஐரோப்பாவிற்கு அனுப்பி வைத்துள்ளார் என்றா???

* தலைவர் சொல்லித்தான் இந்தமுறை மாவீரர்நாள் செய்ய ஐரோப்பா வந்திருக்கிறார்கள் என்றா???

* தலைவர் தான் உருவாக்கிய இன்னொரு கட்டமைப்பை உடைக்க இக்கும்பலை புலமெங்கும் அனுப்பினார் என்றா???

* தலைவர் கேட்டதால், உந்த கும்பலின் அட்டகாச அரசியலை ஐரோப்பிய தேசங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது என்றா ??

* தலைவர் கேட்டதனால், ஐரோப்பா எங்கும் கேட்டு கேள்வியில்லாமல் திரிய விட்டிருக்கிறார்கள் என்றா????

* .....???

விட்டால் ஏறி இருந்து மொட்டை அடித்து சந்தனம் தடவி பூவும் குத்தி ஆலாத்தியும் எடுப்பீயள்!!!!???? உதில் சிம்பதி தேடுவதற்கு 17 ஆயிரம் மாவீரர் குடும்பங்களையும், 17 ஆயிரம் மாவீரர் குழந்தைகளுமா??? ... ஆட்டுக்குள் மாட்டை விடாதையுங்கோ!!!!!

பத்திரிக்கைகள் போட்ட பொய்ச் செஇதிக்கு எதிராக கேஸ்போட்ட காசைவைச்சு எதும் வாழுற வழியை பாக்கவேண்டும்....

ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாத மோட்டுச் புலத்து செயற்ப்பாட்டாளர்களுக்கு இது எல்லாம் எடுபடாது,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைமைச்செயலகம் என்பது தலைமையேற்ற தலைவரது செயலகம், தலைவரே இல்லை என்ற பின்னர் செயலகம் மட்டும் எப்படி தப்பி வெளிநாட்டுக்கு வந்தது, அல்லது அனுப்பி வைக்கபட்டதா?

"எப்பொருள் யார் வழி கேட்பினும் அப்பொருள், மெய்பொருள் காண்பது அறிவு"

Edited by சித்தன்

***

அப்ப நீங்கள் அண்ணை இல்லை என்று செல்லுறீங்களா.... அப்போ அனைதுலக தொடர்பக காரரை பகிரங்கமாக அதை சொல்லச் செல்லுங்கோ.

தலைமைச் செயலகம் 2009 முன்னும் வெளிநாட்டிலேயும் இருந்தது. தலைமைச் செயலகம் என்றது அண்ணையின் வழிகாட்டலில் விடுதலைப்புலிகளை இயங்க வைத்த அதி உயர் நிர்வாக கட்டமைப்பு.இயக்கத்தினுடையை செயற்பாடுகள் எங்கே எல்லாம் இருந்ததோ அங்கே எல்லாம் தலைமைச் செயலகத்தின் செயற்பாடும் இருந்து.பாலா அண்ணை எல்லாம் தலைமை செயலகத்தை வழிநடத்தி செயற்பட்டவர்.அவர் ஒன்றும் ; லண்டனிலை இருந்து கொண்டு அனைத்துலக செயலகத்துக்கு கீழ் இயங்கவில்லை. விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்று தகட்டு இலக்கம் உடைய 6 பேர் தான் அனைத்துலக செயலகத்தின் சார்பில் வெளிநாட்டில் இருந்தவர்கள். அவர்களுக்கும் இயக்கம் சம்பந்தமா முடிவெடுக்கிற அதிகாரம் இருக்கவில்லை.அவை தங்கடை பிரச்சனையை கஸ்ரோ அண்ணைக்கு சொல்லுற அதிகாரம் தான் அவைக்கு இருந்தது.கடந்த காலத்திலை கூட அண்ணை தலைமை செயலகத்துக்கு உத்தரவிட அது அரசியல் துறைக்கு உத்தரவிட அரசில்துறை தன்னுடைய நிர்வாகத்தின் கீழ்; இருந்த மாவீரர் நடுவத்துக்கு ஊடக தன்னுடைய துணை நிர்வாகப்பிரிவான அனைத்துலகச் செயலகத்தால் வெளிநாடுகளில் மாவீரர் தினம் நிகழ்த்தப்பட்டது.மாவீரர் தின அறிக்கை என்பது அண்ணையின் பெயரில் தலைமை செயலகத்தால் தான் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும்.கடந்தகாலத்தில் வெளிநாடுகளில் நிகழ்த்தப்பட்ட மாவிரர் நிகழ்வுகள் தலைமை செயலகத்தின் கீழ் தான் நிகழ்த்தப்பட்டன.

விடுதலைப்புலிகள் இயகக்த்துக்குள் உள்ள முரண்பாட்டை இயக்கம் தீர்த்துக் கொள்ளும் .அது தான் இயக்க வரலாறு.வெளியிலை இருந்து ஒருதரும் பிரச்சனைகளுக்கு சாம்பிறாணி போட்டு ஊதிப் பெருக்கி குளிர்காய வேண்டாம்.

அண்ணை இருக்கிறாரோ இல்லையோ எண்ட விவாதமும் வேண்டாம்.

அண்ணை என்பது தாயக விடுதலைக்காக உண்மையாக உழைக்கிற ஒவ்வொருவரையும் வழிநடத்திற மாபெரும் சக்தி;. 47 ஆயிரம் மாவீரர்களில் முக்கால்வாசி பேருக்கு மேல் அண்ணையை நேரில் பார்த்திருக்க மாட்டார்கள்.அவருடையை தலைமைத்துவத்தை வழிகாட்டலை ஏற்றுத்தான் மாவீரர்கள் தாயக விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கியவர்கள்.

அண்ணையின் மோலான நம்பிக்கை அவரின் பெயரைச் சொல்லி எடுத்த உறுதிமொழி. அண்ணையின் வழியில் அவரது தலைமையை ஏற்று நாங்கள் நடப்போம் என்று நம்புகிறவர்கள் எல்லாம் இந்த ஊதிப் பெருக்கி பிழைப்பு நடத்தும் கூட்டத்தை கணக்கிலை எடுக்காமல் வேலைகளைச் செய்வேம்.

Edited by இணையவன்

தலைமைச் செயலகம், அனைத்துலகச் செயலகம் ஆகியவற்றை ஒவ்வொரு நாடுகளிலும் நடத்துபவர்கள், அவற்றின் உறுப்பினர்கள், தலைவர்கள், அவர்களின் செயலகங்கள், இணையத் தளங்கள், தொலைபேசி இலக்கங்கள் ஆகிய விபரங்களை யாராவது தர முடியுமா ?

ஆமாமா தருவாய்ங்க தருவாய்ங்க...!

தரையில நடக்குற போருக்கு தலைமை செயலகம் இருக்கும்/இருந்திச்சு!

இணையத்துல நடக்குற போருக்கு தலமை செயலகம் ..

பூட்டிய அறையும் ,அவனவன் கீ போர்ட்டும்தானே!

கீபோர்ட்டுக்கு ஏது விலாசம் ,, போன் நம்பர்?

உண்மைல ,, ஒழுக்கமான தலைவரின் தலைமையை வெறுத்தது,,,

சிங்களவனோ , ஹிந்திக்காரனோ இல்ல,,,

அப்டி அவங்க வெறுத்திருந்தாலும்..ஆச்சரியப்படுறதுக்கும் ஒண்ணும் இல்ல...!

ஏன்னா அவனுக்கு எங்கள புடிக்காது!

அந்த ஆற்ற்ல் உள்ளவரின் பின் நல்லவர்போல் மெளனியாக நின்னுட்டு...

இன்னு ஏலம்போட்டு . அனைத்தையும் விற்கும் இந்த கூட்டத்தைவிட,,,

எதிரிகள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள்,,, ஏன்னா... அவங்களுக்கும் எங்களுக்கும், ஒண்ணே ஒண்ணுதானே வேறுபாடு...

ஒண்ணு...நீ சாவாய்... இல்லை நான் சாவேன்!

மரணத்தின் பின்பும் எங்களை கொல்ல அவனால் முடியாது..

ஆனால் எம்மால் முடியும்,,,

அததானே இப்போ பண்ணிகிட்டு இருக்கோம்,, ஆல்மொஸ்ட் எல்லாருமே!

  • கருத்துக்கள உறவுகள்

.....எதிரிகள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள்,,, ஏன்னா... அவங்களுக்கும் எங்களுக்கும், ஒண்ணே ஒண்ணுதானே வேறுபாடு...

ஒண்ணு...நீ சாவாய்... இல்லை நான் சாவேன்!

மரணத்தின் பின்பும் எங்களை கொல்ல அவனால் முடியாது..

ஆனால் எம்மால் முடியும்,,,

அததானே இப்போ பண்ணிகிட்டு இருக்கோம்,, ஆல்மொஸ்ட் எல்லாருமே!

23_30_106.gif

ஒப்பிரேசன் ஒக்ஸ்போர்ட் - யாதவன்

ஒப்பிரேசன் ஒக்ஸ்போர்ட்டின் முழுநோக்கமும் பிரிப்பதும் சிதைப்பதுமே ஆகும். இவை இரண்டையும் ஒழுங்காக செய்துவிட்டால் அடுத்த வேலைத் திட்டமான அழிப்பது என்பதை சிங்களமே செய்ய வேண்டிய தேவை இருக்காது. தானாகவே தமிழரின் விடுதலைக்கான போராட்ட குரல் அழிந்துவிடும் என்பதுதான் சிறீலங்காவினது சமன்பாடாக இருந்துவருகின்றது.

எனவே அவர்கள் இந்த நடவடிக்கையில் பிரிப்பு என்பதை மிகவும் ஆழமாகவும் பாதிப்புகளை எல்லா மட்டங்களிலும் நிகழ்த்த கூடியதாகவும் நடாத்துவதற்கே முயலுகின்றார்கள். விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவான மக்களுக்கிடையில் பிரிப்பு என்பது விடுதலைப் போராட்டம் முனைப்புடனும் வீச்சுடனும் இருக்கும் காலங்களில் சாத்தியமாவது கிடையாது. ஆனால் அந்தப் போராட்டம் பாரிய பின்னடைவை சந்தித்திருக்கும் பொழுதில், தளங்களை இழந்துவிட்டிருக்கும் நிலையில் சோர்வைச் சந்தித்திருக்கும் மக்களுக்கிடையில் ஏராளம் சந்தேகங்களையும், கேள்விகளையும் விசமாக விதைப்பதன் மூலம் சாத்தியமாக்கலாம் என்பதை ஆக்கிரமிப்பாள சிங்களம் நன்கு அறிந்திருக்கிறது.

Mahinda%20and%20gotha.jpg

இதற்காக அது புதிய ஊடகங்களை ஆரம்பித்து முதலில் இருந்து ‘அ’, ‘ஆ’ சொல்லி தனது பிரிப்பு வேலையை நடாத்த முயல ஆரம்பிக்கப் போவதில்லை. இருக்கின்ற ஊடகங்களையோ, ஊடகங்களின் முடிவெடுக்கும் திறன் உள்ளவர்களையோ, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையோ, நிகழ்ச்சி நடாத்துபவர்களையோ தனக்குச் சார்பாக மாற்றி அவர்களுக்கூடாகவே தனது கருத்துகளை மக்கள் மனம் என்ற களத்துக்குள் புக வைக்கும். இதற்காக நிறைய விலைகளையும் சலுகைகளையும் எலும்புத்துண்டுகளையும் சிங்களம் அள்ளி வழங்கி தனதுக்குச் சாதகமாக்கியது.

‘ஓப்பிரேசன் ஒக்ஸ்போர்ட்’ நடவடிக்கையின் முதுகெலும்பே கருத்துகள்தான். கருத்துகளை மக்களுக்குள் செலுத்துவது. விடுதலைப் புலிகளின் கடந்தகாலங்களை பற்றி மீளாய்வு என்ற பெயரில் விடுதலைப்புலிகள் செய்த தவறுகளால்தான் போராட்டம் அழிந்ததான கதைகளை நிறுவது. இந்த வேலைக்கான ஊடகவியலாளர்களை தேர்தெடுப்பதில் ஒப்பிரேசன் ஒக்ஸ்போர்ட் மிகவும் சாணக்கியமாகவும் சாதுரியமாகவும் நடந்துகொண்டது. சிங்களத்தின் மேசையில் புலம்பெயர் ஊடகங்களின் முழுவிபரங்களும் இருந்தன. அவை ஒன்றும் கடினமான காரியமாக இருக்கவில்லை. இப்போதைய தகவல் தொழில்நுட்ப பதிவும் அதனை மற்றவர்கள் அறிவதற்குமான உரிமையும் மலையளவாக இருக்கும்பொழுதில் இவற்றை பெறுவதில் எப்படி சிரமம் இருக்கமுடியும்.

இலத்திரனியல் ஊடகங்களில் கருத்தும் ஆய்வும் எழுதுபவர்களில் இருந்து வானொலியில் குரல் கொடுப்பவர்கள், தொலைக்காட்சிகளில் முகம் காட்டுபவர்கள் வரை அனைவர் பற்றிய விபரங்களும் அலசப்பட்டன. ஆளும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விசயம் நன்கு தெரியும். எழுதுபவர்களில் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் எழுதுவதில் சமரசம் கொள்வதில்லை. எழுதுபவர்களில் அனைவரும் அவர்கள் எழுத்துடன் நு£று சதவிகிதம் உடன்பாடாக இருப்பதும் இல்லை. ஒரு விடயத்தில் ஆத்மார்த்தமான பிடிப்பும் ஈடுபாடும் கொண்டவர்கள் எழுதுவதற்கும், ஒரு விடயம் பற்றி எழுதினால்தான் மக்களிடம் தன்னை அடையாளம்காட்ட முடியும் என்று நினைத்து எழுதுபவர்களின் எழுத்துக்கும் நீண்ட வேறுபாட்டை எங்களைவிட எதிரி ஆழமாக அறிவான்.

விடுதலைப் போராட்ட எழுத்துகளுக்கும் இதுவே பொருந்தும். விடுதலைப்புலிகள் அமைப்பை மனதின் ஆழத்துக்குள் நேசித்து அதன் வெளிப்பாடாக எழுதியவர்களையும், விடுதலைப் புலிகள் மட்டுமே போராட்டத்தில் முன்னிற்பதாலும், வேறு மார்க்கம் எதுவும் இல்லாததால் விடுதலைப் புலிகளுக்காக உதட்டளவில் எழுதியவர்களையும் பிரித்தறியும் காலகட்டம் மிக இலகுவாகவே 2009 மே 18க்கு பின்னர் வந்துசேர்ந்தது. இவர்களில் பலரை சுலபமாகவே தமது பிரிப்பு வேலைக்கு சிங்களம் பயன்படுத்த ஆரம்பித்தது. எதிரிகள் போன்றும் துரோகிகள் போன்றும் இல்லாமல் தமிழினத்தில் அக்கறை கொண்டவர்கள்போன்ற முகமூடிகளுடன் இவர்கள் ஒளி, ஒலி ஊடகங்களில் 2010 டிசம்பர் மாதத்துக்கு பின்னர் மிகவும் செறிவாக இறக்கிவிடப்பட்டனர்.

டக்ளஸ் அண்மையில் சொன்ன ‘தமிழர்களுக்கு உணவும் உடுப்புகளும் போதும்’ என்ற கருத்தையே வேறுவிதத்தில் அந்த கருத்தின் மீது தேசிய இனிப்பை தடவி இவர்கள் மூலம் ஏற்றப்பட ஆரம்பித்தது. மகிந்தர் ஒக்ஸ்போர்ட்க்கு வந்து ஓடிப்போன பின்னர் 2010 டிசம்பர் முதல்வாரத்துக்கு பின்னர் தொடங்கி இன்றுவரை தொலைக்காட்சி சிலவற்றிலும் சில ஊடகங்களிலும் வந்த கருத்துகளை சுருக்கமாக பாருங்கள்.

1) புலிகள் போராடியதால்தான் இந்த அழிவு வந்தது

2) புலிகளுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை

3) புலிகளும் மக்களை கொன்றார்கள், சுட்டார்கள்.

4) புலிகளுக்கு உலக அரசியல் தெரியவே இல்லை

5) தேசியகொடி பிடித்தால் நாம் சொல்வதை மேற்குலகம் கேட்காது.

தினமும் வேறுவேறு தலைப்புகளில் வேறுவேறு முகங்களை வைத்து ஒரே விதமாக கடந்த 30 மாதங்களாக இந்த நஞ்சு ஊட்டப்படுவது ஒன்றும் தற்செயலாக நடப்பது அல்ல உறவுகளே. நாம் தற்செயலாக நினைத்துக்கொண்டிருக்கும் எல்லாமே எதிரியால் மிக நுணுக்கமான முறையில் திட்டமிட்டவையே.

உதாரணத்துக்கு, இன்று விடுதலைப் புலிகளின் தலைமையை பற்றியும் அதன் தவறுகள் பற்றியும் நாசுக்காக தொலைக்காட்சியில் தோன்றி கருத்துகள் கூறும் ஒரு ஊடகவியலாளனை பொதுமக்கள் என்ன கோணத்தில் பார்ப்பார்கள்? இவரும் கடந்த காலத்தில் 2009 மேமாதத்துக்கு முன்னர் விடுதலைப் புலிகளை உலகின் வெல்லமுடியாத போர்ச்சக்தி என்றும் தேசியத் தலைவரை சூரியதேவன் என்றும் வர்ணித்து உவமான, உவமேயங்கள் சொல்லி நின்றவர்தானே, ஏன் இப்போது மாறினார் என்ற கேள்வியே சாதாரண பொதுமக்களிடம் எழும். அப்படி எழுவது இயல்பானதே.

ஆனால் அத்தகைய ஊடகவியலாளன் ஏதோ ஒரு காலகட்டத்தில் விடுதலைக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து பாசிசபுலிகள் என்றும் தனிமனித வழிபாடு செய்யும் புலிகள் என்றும் தாக்கிவிட்டு ஓடும் புலிகள் (Hit and Run) என்றும் தனது குரலில் கருத்து சொன்னதை ஆக்கிரமிப்பாளன் நினைவு வைத்திருந்து தோற்றிருக்கும் இந்த காலகட்டத்தில் அவனை மிகச்சுலபமாக தமக்குச் சாதகமான கருத்துகளை பரப்புவதற்குப் பாவிக்கின்றான் என்பது பொதுமக்களுக்கு தெரியவர நீண்ட மாதங்களாகும்.

இதனைப்போலவே ஒரு பிரச்சார படையணியாகவே நிறையப் பேர் மாற்றப்பட்டார்கள். இதுபோதாது என்று ஒருசிலர் நேரடியாகவே சிங்கள தேசத்தில் இருந்தும் இறக்கப்பட்டார்கள். இவ்வளவு செய்தாலும் சிங்களத்துக்கு இந்த ‘ஒப்பிரேசன் ஒக்ஸ்போர்’டின் வெற்றியில் அவ்வளவு நம்பிக்கை இருக்கவில்லை. கருத்துகளை ஊடகங்களுக்குள்ளாக சொல்வது ஒரு

புறம் இருக்க இதே கருத்துகளை போராளிகள் என்ற பேர்வழிகள் மூலம் மக்களுக்குள் செலுத்தினால் இன்னும் பிரிப்பது சுலபமாகிவிடும் என்று முடிவானது.

ஒரு ஒடுக்கப்பட்ட மக்கள் இனத்தின் அபிமானமான வார்த்தை எதுவாக இருக்கமுடியும்? ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டிருக்கும் இனமொன்றின் ஆதர்ச மனிதர்கள் யாராக இருக்க முடியும்? போராளிகள் என்பதே விடுதலைக்கு ஏங்கும் மக்களின் அபிமான வார்த்தை ஆகும். இந்த உளவியலை புரிந்து கொண்டே அதற்குள்ளாக எமது மனதுக்குள் அசிட் எறிந்து எம்மைப் பிரித்து சிதைக்க சிங்களம் முடிவெடுத்தது.

சிங்களதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளாக வேலை பார்த்தவர்களையும், இறுதிநேர காட்டிக் கொடுப்புகளில் ஈடுபட்டவர்களையும், சிறைகளுக்குள் இருக்கும்போது கே.பியை அனுப்பி மூளைச்சலவை செய்யப்பட்டவர்களையும் போராளிகள் என்ற பெயரில் அனுப்பிவைக்க திட்டமானது.

ஓப்பிரேசன் நெப்டியூன் என்ற சங்கேத நடவடிக்கைப் பெயருடன் நடந்த நோர்மண்டி தரை இறக்கம்போல இல்லாமல் இந்தப் போராளிகள் என்று பெயர் சூட்டப்பட்டவர்களை ஐரோப்பியாவுக்குள் தரை இறக்கும் நடவடிக்கை பல முனைகளில் நடந்தேறியது. உங்களுக்கு நினைவிருக்கலாம், 2009க்கு பின்னர் இத்தாலியில் வந்திறங்கிய மூன்று இளைஞர்களை அந்த நாட்டு கடற் பாதுகாப்பு அணி கைது செய்தபோது அவர்கள் தங்களை கோத்தபாய ராஜபக்சதான் அனுப்பிவைத்ததாக சொல்லி இருந்தார்கள். நாம் அனைவரும் இது தற்செயலான ஒரு நிகழ்வு என்று விட்டுவிட்டு மறந்தும் போனோம் இல்லையா? அது தற்செயலானதோ சாதாரணமானதோ இல்லை என்பதற்கு இன்னும் சில ஆதாராங்கள் இருக்கின்றன..

(ஒப்பரேசன் அடுத்த வாரமும் தொடரும்)

நன்றி: ஈழமுரசு / புலத்தில்

http://www.pathivu.com/news/19146/57//d,article_full.aspx

அகா அற்புதம் அபாரம் சிங்களமுரசு தன்னைதானே சுயவிமர்சம் செய்து எழுதும் தான் விலை போன கதையை எழுதும் உண்மைக் கட்டுரையை யாழ் களத்தில் இணைத்த நண்பருக்கு நன்றி. சனல் 4 ன் இரண்டாவது ஆவணக்காட்சிப்படம் வெளியாகும் நந்தவனத்த நந்தனாரின் காட்டிக் கொடுப்புகள் அதை வைத்து சிறிலங்கா அரசு புலத்தில் நடத்தும் உளவியல் யுத்தம் எல்லாம் காணெளிக்காட்சியாக அம்பலத்துக்கு வரும். அதை வெளியிடாமல் தடுக்க நடக்க பணப்பேரம் பற்றிய தகவலும் செவ்விகளாக வெளிவரலாம் அன்றைய தினம் நந்தவனத்த இளவரசரால் நடத்த்தபடும் சிங்களமுரசு சிங்களப்பதிவுகளின் முகமூடி கிழியும் அது வரை பொறுத்திருப்போம்

ஒருத்தரை ஒருத்தர் பழி சுமத்தி பிரிந்து நின்று தனித்தனிய அழிவம்.

  • தொடங்கியவர்

... புலிகள் மீள செயற்பட முனைகிறார்கள்/கட்டி எழுப்ப முயல்கிறார்கள்/.. போன்ற நொண்டிச்சாட்டுகள் சர்வதேசத்துக்கு சொல்வதற்கும், அங்கு எம்மக்களை தொடர்ந்து அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்கும், மனித உரிமை மீறல்களில் இருந்து தப்பிப்பதற்கும் சிங்களம் தலை கீழாக நின்று செயற்படுகின்றது!

... நம்ம புலத்தில் தோன்றிய புதுப்புலிகளோ அதனை உண்மை என்று நிரூபிக்க, தலைமைச்செயலகத்தை புலத்துக்கு குறிப்பாக ஐரோப்பாவிற்கு நகர்த்தி அற்புதமாக நிரூபிக்க முயல்கின்றனர்???

இங்கு கேள்வி ... இந்த தலைமைச்செயலகத்தை புலத்துக்கு நகர்த்தியது யார் என்பதே??? ... ஒன்று மட்டும் உண்மை, அது புலிகள் அல்ல!

புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து போர்க்களத்தில் குதிக்கவும் முயற்சி; முன்னாள் போராளிகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது என்கிறார் ஜனாதிபதி

மேற்குலக நாடுகளில் உள்ள புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து போரில் குதிக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆதரவாளர்கள், அனுதாபிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசுகிறார்கள், ஒருங்கிணைய முயற்சிக்கிறார்கள். இதை நாங்கள் அறிவோம். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சார்க் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவில் வைத்து ரைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரில் சரணடைந்த முன்னாள் புலிகள் இயக்க போராளிகள் மூலம் இதுகுறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அளித்த செவ்வியின் விவரம் வருமாறு

கேள்வி : விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் பணம் வலித்து வருகிறது எனவும், மீண்டும் தலைதூக்க முயற்சிக்கிறார்கள் என்றும், போராளி களின் உணர்வுகளை அப்படியே தக்க வைக்க முயற்சிக்கின்றனர் எனவும் உளவுத் தகவல்கள் கூறுகின்றன. அது உங்களுக்கும் தெரியுமா?

பதில் : பிரிட்டனிலும் சரி, கனடாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, அல்லது உலகின் பிற நாடுகளிலும் சரி, விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், அனுதாபி கள் பணம் வலிக்கிறார்கள், ஒருங்கிணைய முயற்சிக்கிறார்கள், இரகசியமாக சந்தித்துப் பேசுகிறார்கள். இதை நாங்கள் அறிவோம்.

எங்களிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் மூலம் இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. புலி அனுதாபிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். மீண்டும் போரில் குதிக்கவும் அவர்கள் முயற்சிக் கிறார்கள். புலிகளின் பிரசாரம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

கேள்வி : தமிழர் பகுதிகளில் மீள்குடியமர்த்தல், புனர்நிர் மாணம் உள்ளிட்டவை குறித்து பேசி வருகிறீர்கள். இதுதொடர்பாக உங்களுக்கு உதவி வரும் நட்பு நாடான இந்தியா, இது குறித்த நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைந்துள்ளதா?

பதில் : நாங்கள் என்ன செய்து வருகிறோம் என்பதை அங்கு வந்து பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவும் சரி, பிறநாடுகளும் சரி எங்களது பணிகளைப் பார்த்து சென்றுள்ளனர். அனைவருக்கும் இதில் திருப்தியே.

கேள்வி : தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா இலங்கை விவகாரத்தில் தீவிர அக்கறை காட்டுகிறார். அவர் உண்மை நிலையை அறிய இலங்கைக்கு வரவிரும்பினால் நீங்கள் வரவேற்பீர்களா?

பதில் : கண்டிப்பாக, நிச்சயம் வரவேற்போம். அவர் தாராளமாக வந்து அங்கு என்ன நடக்கிறது? உண்மை நிலைவரம் என்ன என்பதை நேரிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. தமிழர் பகுதிகளில் நாங்கள் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படுகிறேன். இதை ஜெயலலிதாவும் நேரிலேயே அறிந்து கொள்ளலாம்.

கேள்வி : சீனா, இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து அங்கு ஆழமாக நிலை பெற்று வருவதாக ஒரு குற்றச் சாட்டு உள்ளது. இதனால் இந்தி யாவுடனான இலங்கையின் உறவில் மாற்றம் வருமா?

பதில் : நான் ஆரம்பத்திலிருந்தே ஒன்றை உறுதியாக சொல்லி வருகிறேன். இந்தியா எங்களது தொப்புள் கொடி உறவு. இந்தியாவுக்குப் பிறகுதான் சீனா. இந்தியா எங்களது உறவினர் என்றால் சீனா எங்களது நண்பர். நாங்கள் மட்டு மல்ல ஐரோப்பிய யூனியனும் கூட சீனாவின் உதவியை நாடு கிறது.

எங்களது நாட்டில் துறைமுகம், விமான நிலையம், மின் நிலையம் ஆகியவை அமைக்கும் பணியில் ஈடுபட நாங்கள் முதலில் இந்தியாவைத்தான் நாடினோம். இந்தியாவுக்குத் தான் வாய்ப்பளித்தோம். பிறகுதான் சீனாவிடம் சென்றோம்.

எங்களைப் பொறுத்தவரை இந்தியாதான் முதலில். பின்னர் தான் சீனா. சீனா மட்டுமல்ல, அமெரிக்காவும் கூட இலங்கை யில் முதலீடுகளைச் செய்துள் ளது.

சீனாவுடனான எங்களது நட்பால், இந்தியாவுடனான உறவு கெடாது. அதற்கான வாய்ப்பில்லை. அதற்கான உறுதி மொழியை நாங்கள் இந்தியாவிடம் ஏற்கனவே கொடுத்துள் ளோம் என்றார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=66728645413603737

http://184.107.230.1...728645413603737

இந்த முள்னாள் பேராளிகள் நந்தவனத்து நண்டு அன் கொம்பனி என்பது விரைவில் காணெளி ஆதாரத்துடன் சர்வதேச ஊடகங்களில் வெளிவரும் நண்பா ! உனக்கு ஒரு விசயம் தெரியுமா ஒரு நாட்டின் இறையாண்மை எல்லைக்குள் இன்னொரு நாடு உளவு நடவடிக்கையில் ஈடுபடுவது கிறிமினல் குற்றத்துக்கு மேலான தேசத்துரோக குற்றம்!சிறீலங்கா அரசு புலம்பெயர்ந்த நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று நீ உட்டபட பலர் உங்களுடைய ஊடகங்களில் எழுதிவருகிறீர்கள்.இதனுடைய அர்த்தம் என்னவென்றால் உங்களுக்கு அது பற்றிய தகவல் தெரியும் என்று நீங்கள் உறுதிப்படுத்தி வருகிறீர்கள் என்பதாகும்.

ஆனால் விடயம் சிகலாகும் போது இதை நிரூபிக்கும் படி யுரோபோல் காவல்துறை கேட்கும் நிலை வரும்.இது சும்மா மொட்டைக் கடுதாசி எழுதுகிற விடயம் இல்லை.ஊடகங்களில் வெளிவருகிற ஒவ்வொரு விடயமும் மேற்குலக காவல்துறையினரால் கவனமாக அவதானிக்கப்படுகிறது என்பதை நீங்கள் உணரவில்லை

நண்டு கஸ்ரோ அண்ணையின் பங்கரை காட்டிக் கொடுக்கும் காணெளியையும் வன்னியிலுள்ள சிறீலங்கா இராணுத்தளபதிகளுடனும் டக்ளசுடனும் நிற்கும் காணொளியை நான் என் கண்ணாலை பார்த்திருக்கிறேன்.

Edited by athiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.