Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகா கவி சுப்ரமணிய பாரதியார் (11-12-1882)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு பெருங்கடல்.

உரை நடைக்கவிதைகளின் பிதாமகர். மகா கவி பாரதியின் ஆக்கங்கள் மற்றும் அவரைப்பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை இங்கு இணைத்து அந்த மாபெரும் கவிஞனை பெருமை செய்வோம்.

ஆரம்பமாக....

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்



Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

Edited by யாயினி

மனதில் உறுதி வேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்?

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்?

என்றெமதின்னல்கள் தீர்ந்து பொயாகும்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?....

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?

பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?

பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?

தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?

தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?

தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?...

நெஞ்சினில் உரமின்றி நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனை சொல்வாராடி கிளியே

வாய்ச் சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றலன்றி

நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே

நாளில் மறப்பாரடி

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?..

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

குயில் பாட்டு

1. குயில்

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே

நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்

மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா

வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி

வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5

செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்

மேற்கே, சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை,

நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்

வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை;-

அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, 10

வேடர் வாராத விருந்துத் திருநாளில்,

பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்

வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற

ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,

சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க் 15

காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,

இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,

மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்

வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்

இந்தவுரு வெய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போல், 20

இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைகளை

முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்

பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்

நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே - கண்டேன் யான்.

கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர் 25

இன்னிசைப் பாடடினிலே யானும் பரவசமாய்,

"மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?

இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,

காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?

நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?" 30

என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்,

அன்றுநான் கேட்டது, அமரர்தாங் கேட்பாரோ?

குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே

தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;

அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; 35

விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்!

2. குயிலின் பாட்டு

ராகம் - சங்கராபரணம்

தாளம் - ஏகதாளம்

ஸ்வரம்- "ஸகா-ரிமா-காரீ

பாபாபாபா-மாமாமாமா

ரீகா-ரிகமா-மாமா"

சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க.

காதல், காதல், காதல்,

காதல் போயிற் காதல் போயிற்

சாதல், சாதல், சாதல். (காதல்)

1. அருளே யாநல் லொளியே;

ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின்,

இருளே, இருளே, இருளே. (காதல்)

2. இன்பம், இன்பம், இன்பம்;

இன்பத் திற்கோ ரெல்லை காணில்,

துன்பம், துன்பம், துன்பம். (காதல்)

3. நாதம், நாதம், நாதம்;

நாதத் தேயோர் நலிவுண் டாயின்,

சேதம், சேதம், சேதம். (காதல்)

4. தாளம், தாளம், தாளம்;

தாளத் திற்கோர் தடையுண் டாயின்,

கூளம், கூளம், கூளம். (காதல்)

5. பண்ணே, பண்ணே, பண்ணே;

பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்,

மண்ணே, மண்ணே, மண்ணே. (காதல்)

6. புகழே, புகழே, புகழே;

புகழுக் கேயோர் புரையுண் டாயின்,

இகழே, இகழே, இகழே. (காதல்)

7. உறுதி, உறுதி, உறுதி;

உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,

இறுதி, இறுதி, இறுதி. (காதல்)

8. கூடல், கூடல், கூடல்;

கூடிப் பின்னே குமரன் போயின்,

வாடல், வாடல், வாடல். (காதல்)

9. குழலே, குழலே, குழலே;

குழலிற் கீறல் கூடுங்காலை,

விழலே, விழலே, விழலே. (காதல்)

http://www.moderntamilworld.com/illakiyam/bharathiyar-kuilpattu.asp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

" தேடிச் சோறு நிதம் தின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் மெய்தி

கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போல

நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ "

384143_10150461197287490_812997489_8461644_1553197155_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு சகாரா

  • கருத்துக்கள உறவுகள்

... சில சமயங்களில் நினைப்பதுண்டு ... அன்றே இந்த பாரதி போன்றோர் .... சிறிது காலத்துக்கு பின் வந்த ஜின்னா போன்றோர் பாகிஸ்தான் தனிநாட்டுக்காக குரல் கொடுத்து வென்றதை போன்று ... கிளந்தெழுந்திருந்தால் ... இன்று தமிழின அடிமைச்சாசனம் என்று ஒன்று அன்றே உடைத்தெறியப்பட்டிருக்கும்!

... போதாததற்கு ... சிங்கள தீவினிற்கோர் பாலமமைப்போம்!!!!!!!!!!!!!!!! ... தமிழினம் என்று ஒன்று இலங்கை தீவில் வாழுவது கூட அவனுக்கு தெரிந்திருக்கவில்லை??????????? இல்லை, ஈழத்தமிழினம் என்றோ ஓர்நாள் நிச்சயம் அழித்தொழிக்கப்பட்டுவிடும், அதன்பின் பாரதமாதாவின் தேசம் சிங்கள தேசத்துக்கு பாலம் அமைக்கட்டும்???????? ........ என்று பாடினானா???????????????????

......... அடிமைக்கவிஞன்!

  • கருத்துக்கள உறவுகள்

... சில சமயங்களில் நினைப்பதுண்டு ... அன்றே இந்த பாரதி போன்றோர் .... சிறிது காலத்துக்கு பின் வந்த ஜின்னா போன்றோர் பாகிஸ்தான் தனிநாட்டுக்காக குரல் கொடுத்து வென்றதை போன்று ... கிளந்தெழுந்திருந்தால் ... இன்று தமிழின அடிமைச்சாசனம் என்று ஒன்று அன்றே உடைத்தெறியப்பட்டிருக்கும்!

... போதாததற்கு ... சிங்கள தீவினிற்கோர் பாலமமைப்போம்!!!!!!!!!!!!!!!! ... தமிழினம் என்று ஒன்று இலங்கை தீவில் வாழுவது கூட அவனுக்கு தெரிந்திருக்கவில்லை??????????? இல்லை, ஈழத்தமிழினம் என்றோ ஓர்நாள் நிச்சயம் அழித்தொழிக்கப்பட்டுவிடும், அதன்பின் பாரதமாதாவின் தேசம் சிங்கள தேசத்துக்கு பாலம் அமைக்கட்டும்???????? ........ என்று பாடினானா???????????????????

......... அடிமைக்கவிஞன்!

நெல்லை, ஒன்றை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்!

பாரதியார் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவரது, ஆரம்பக் கல்வி அக்கிரகாரங்களிலேயே நடந்தது!

உங்களுக்கும், எனக்கும் தெரியும் அவருக்கு எவ்வாறான போதனைகள், வழங்கப் பட்டிருக்கும் என்று!

ஆனால், தனது பிற்காலத்துப் பாடல்களில் தன்னை மாற்றிக்கொண்டிருக்கின்றார் அல்லது முயற்சித்து இருக்கின்றார்.

ஒரு இடத்தில், பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே' என்று கூட மனமுடைந்து பாடுகின்றார்! அதன் பின்பு அவர் அக்கிரகாரத்தில் இருந்து துரத்தப்பட்டார்!

அவர் இறந்த போது, அவரது நிறை வெறும் அறுபது ராத்தல்கள்!

அவரது மரண ஊர்வலத்தில் போனவர்கள் வெறும் பதினோரு பேர்.( தூக்குபவர்கள் உட்பட!)

'அச்சமில்லை, அச்சமில்லை !

அச்சமென்பதில்லையே!

உச்சி மீது வானிடிந்து,

வீழுகின்ற போதினும்,

'அச்சமில்லை, அச்சமில்லை !

அச்சமென்பதில்லையே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=dcIlfF4KLeE

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக் கரியவிழி கண்ணம்மா வானக் கருமை கொள்ளோ

பட்டுக் கருநீலப் புடவை படித்த நல் வைரம்

நட்ட நடு நிசியில் தெரியும் நட்சத்திரங்களடி

சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகைதான்

நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி

வாழைக் குமரியடி கண்ணம்மா மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் சாத்திரம் ஏதுக்கடி

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தம் ஒன்று

  • 11 months later...

போதாததற்கு ... சிங்கள தீவினிற்கோர் பாலமமைப்போம்!!!!!!!!!!!!!!!! ... தமிழினம் என்று ஒன்று இலங்கை தீவில் வாழுவது கூட அவனுக்கு தெரிந்திருக்கவில்லை??????????? இல்லை, ஈழத்தமிழினம் என்றோ ஓர்நாள் நிச்சயம் அழித்தொழிக்கப்பட்டுவிடும், அதன்பின் பாரதமாதாவின் தேசம் சிங்கள தேசத்துக்கு பாலம் அமைக்கட்டும்???????? ........ என்று பாடினானா???????????????????

......... அடிமைக்கவிஞன்!

 

 

பாரதி என்ற கவிஞனின் படைப்புகள் தமிழுக்கு பெருமை சேர்ப்பன.ஆனால் அவனின் தனிப்பட்ட வாழ்வு பல விமர்சனங்களுக்கு உட்பட்டது. அரசியல் களத்தில் அவன் ஒரு இந்தியனாக பண்பாட்டு தளத்தில் அவன் ஒரு தீவிர பார்ப்பணனாக வாழ்ந்தான். 

 
அச்சமில்லை, அச்சமில்லை என்று பாடிய கவிஞன் தான் சுதேசமித்திர இதழின் மீது வெள்ளையர்கள் வழக்குப் போட்டபின் நான் இனிமேல் வெள்ளையருக்கு எதிராக எழுத மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதியவன். 
 
தன தந்தை வியர்க்க வேலை செய்து பிழைக்க நேர்ந்ததனால் பார்ப்பன குலம் கெட்டு கலி காலம் வந்தது எனப் பாடியவன்.
 
"பார்ப்பனக் குலம் கெட்டழிவு எய்திய
பாழடைந்த கலியுகம் ஆதலால்
வேர்ப்ப வேர்ப்ப பொருள் செய்வதொன்றையே
மேன்மை கொண்ட தொழில் எனக்கொண்டனன்"
 
நால்வருணத்தைக் கெடுத்து விட்ததாக அவன் பாடும் மற்றுமொரு பாடல் 
"நாலு குலங்கள் அமைத்தான் - அதை
நாசம் உறப்புரிந்தனர் மூடமனிதன்"
 
இதே விவாதத்துடன் யாழில் முன்னொரு த்ரி ஓடியது. அவனை விமர்சிப்பது என் நோக்கமல்ல. வரலாற்றை தெளிந்துணர்ந்து அவனது படைப்புகளில் உள்ள தமிழை வாழ்த்துவோம்.

 

எனக்குப் பிடித்த பாரதி பாடல்
 
பாயும் ஒளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;

தோயும் மது நீ எனக்குக் தும்பியடி நானுனக்கு; 

 
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
 
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
 
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
 
காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
 
நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
 
தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;

Edited by ஆதித்ய இளம்பிறையன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.