Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சைவம் வளர்த்த கேதீஸ்வரம்

Featured Replies

கள உறவுகளே !!!!!!

நான் சிறுவயதில் யாழ் இந்துவில் படித்துக் கொண்டிருந்தபொழுது , எமது ஆசிரியர் புண்ணியலிங்கம் ( புண்ணி ) தலைமையில் திருக்கேதீஸ்வரம் போவோம் . அப்போது அந்தப் பயணம் எங்களுக்கு ஒரு சுற்றுலா போலவே இருக்கும் . நாங்கள் சிறியவர்கள் ஆகையால் திருக்கேதீஸ்வரத்தின் அருமை பெருமைகளை அந்தநேரத்தில் எனக்குத் தெரியாமல் போய்விட்டது . இப்பொழுது திருக்கேதீஸ்வரம் சம்பந்தமாக நான் வாசித்த நூல்களின் அடைப்படையில் , இந்தக் கோயிலைப்பற்றி எனது பார்வையில் மீளாய்வு செய்கின்றேன் . இந்த ஆய்விலே ஏதாதாவது குறைகள் இருந்தால் உரிமையுடன் சுட்டிக் காட்டுங்கள் திருத்திவிடுகின்றேன் :):):) .

37816031142133555835510.jpg

ஈழத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் , மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துளதே திருக்கேதீஸ்வரமாகும். நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள்.

கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதீஸ்வரமாக வந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரபத்மனின் மனையாளின் பேரனார் துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். அவர் துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் , காலப் போக்கில் அவர் முயற்சியால் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது.

திருக்கேதீஸ்வரத்தில் அமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இந்தப் பாலாவியில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி தோசம் போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம்.

இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இந்தத் திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத் திருக்கோயிலில் ஆற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்டது திருக்கேதீஸ்வரம் என வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபணம் செய்கின்றனர் .

கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமும் இதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் திருக்கேதீஸ்வரம் சுட்டப்பட்டிருக்கிறது.

திருக்கேதீஸ்வரத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்கள் இருந்ததிற்கான அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. திருக்கேதீஸ்வரம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் , பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் , சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

40645031141756889206510.jpg

திருக்கேதீச்சரத் திருத்தலத்திற்கு அருகாக வங்காலை என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவும் இருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் காணலாம். அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன

பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேஸ்வர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது.

போத்துக்கீசரால் தகர்க்கப்பட்ட இவ்வாயக் கற்களையுஞ் சிற்பங்களையும் கொண்டு மாதோட்டத்தில் கட்டப்பட்ட முதலாவது தேவாலயத்திற்கு அடிக்கலாகப் பயன்படுத்தப்பட்டதே உண்மை வரலாறாகும்.

அழித்துச் சிதைக்கப்பட்டிருந்த இந்த இடத்தை , சைவசமயத்தவர்களின் பெருமையும் , புகழும் நிலைக்கவேண்டும் என்ற விருப்பத்தினால் தூண்டுதல் செய்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்த பெருமை ஆறுமுநாவலர் அவர்களையே சாரும். ஆறுமுநாவலரின் ஆசையை நிறைவுசெய்ய முயன்ற பெரியார்கள் கொழும்பு தம்பையா முதலியார், சுபைதார் வைத்திலிங்கம், புகையிரத தபால் ஒப்பந்தக்காரர் மாத்தளை ஆசைப்பிள்ளை ஆகியோரின் அருமுயற்சி அப்போதைய அரசின் அடாத் தன்மையால் நிறைவுபெறவியலாது போயிற்று. தொடர்ந்து 1890இல் தகைசான்ற சைவப்பெரியார்களின் பெருமுயற்சியால் அக்காலத்து அரச அதிபர் அந்நிலத்தை சைவர்கட்கே வழங்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டார்.

காலப்போக்கில் இத்திருகோயிலிற்கென ஓர் சபை உருவாக்கப்பட்டு அதன் முதலாவது தலைவராக சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களும் பொதுச் செயலாளராக நீராவியடி பண்டிதர் அ.சிற்றம்பலம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு உயர்ந்த பல குறிக்கோளுடன் சபை செயற்பட யாப்பு அமைக்கப்பட்டது

1.சைவக் கொள்ககட்கு அமைய மறுசீரமைக்கப்படுதல். ஆலயத்தையுஞ் சொத்துக்களையும் யாதொரு குறையுமின்றிப் பாதுகாத்தல்.

2.மேற்கூறிய கொள்கை கோட்பாடு வரையறைகட்கு மாறில்லாத வகையில் செயற்படுதல். ஏனைய இறை வணக்கத் தலங்களை உருவாக்குதலும் துணைபுரிதலும்

3.மக்கள் தங்குமடங்கள், கல்விக் கூடங்கள், சமூக நிலையங்கள் போன்ற அன்றாட வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்தல் போன்ற பல அரிய செயல்க்ளைப் புரியச் சபையத் தயார்படுத்தல் போன்ற உயரிய செயல்களை விரைந்து நடைமுறைப்ப்படுத்த முயற்சிப்பதென உறுதி பூணப்பட்டது .

10 பெப்ரவரி 1951இல் பொது உடமைச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சபையாகத் திகழ்ந்தது. சபையாகப் பதிவுசெய்யப்பட்டதன் பின்பும் கோயில் உருமைகள் நாட்டுக்கோட்டை நகரப் பெரியார்களிடமே இருந்து வந்தது. காலப்போக்கில் 14 செப்ரம்பர் 1951இல் நாட்டுக்கோட்டை நகரத்தார் உளமகிழ்வுடனும் நல் இணக்கத்துடனும் திருப்பணிச் சபையாரிடம் பரிபாலனம் கைமாற்றப்பட்டது.

பொறுப்புக்கள் கையேற்கப்பட்ட காலம் முதல் அரிய பெரிய திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொழும்பு பழைய, புதிய கதிரேசன் கோயில் திருப்பணிச் சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர் அறங்காவலர்களாகவும் (ஐவர்) பஞ்சாயத்தவர்களாகவும் நியமனம் பெற்று சபையை நடாத்திவரத் திருக்கேதீச்சரத் திருப்பணிப் பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

இச்சபையின் தீர்மானப்படி காசிவாசி சிவஸ்ரீ ஈசான சிவாச்சாரியார், அச்சுவேலி சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்கள், சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம், கட்டடக்கலைஞர் வி.நரசிம்மன் ஆகியோரின் ஆகம விதிகளுக்கமைவான அறிவுறுத்தல்களுடன் தமிழ்நாடு திருவாளர்கள் செல்லக்கண்ணு ஸ்தபதியார், மு.வைத்தியநாத ஸ்தபதியார் ஆகியவர்களால் முறைப்படி சுவாமி, அம்பாள் கருவறைகள் கருங்கல்லாலும், சுதை, காரைகளாலும் விமான வேலைகளும் கோபுரங்களும் உலக சைவப்பெருமக்களின் பேருதவி கொண்டு அமைக்கப்பட்டது. இத்திருத்தலம் உருவாக அருள்வாக்கு நல்கிய நல்லூர் திருப்பெருந்திரு ஆறுமுகநாவர் ஐயா அவர்கள்

"திருக்கேதீச்சரம் எனுந் தேன்பொந்து ஒன்று உளது. அங்கு மருந்தொன்று மறைந்துள்ளது. அதனைச் சென்றடையுங்கள்"

என அருள்ஞானசம்பந்தர் சுட்டிக்காட்டியது போல அறிவுறுததருளினார்.

ஐயா அவர்களின் அறிவுறுத்தல் மேற்கொண்டு விடத்தல்தீவு வேலுப்பிள்ளை அவர்களும், முதல் குரல் கொடுத்த சைவபரிபாலன சபையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முன்பு ஆலயமிருக்கும் திருவிடத்தை சைவசமயத்தவர்கள் கையகப்படுத்த விரும்பாதநிலை மாறி மாவட்ட அதிபரின் முன்மொழிவுக்கமைய ஏலத்தில் விடப்பட்டு காடுமண்டிய நிலத்துடன் 43 ஏக்கர் 3 றூட் 33 பேச் காணி நாட்டுக்கோட்டை நகரத்துச் செம்மல் சைவச் சான்றாளர் ராம அரு.அரு.பழனியப்பச் செட்டுயாரான பெருமகனாரால் யாழ் செயலகத்தில் 3, 100/= ரூபாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டாமை சைவர்களின் பெருமைக்குரியதொன்றாயிற்று.

1894ஆம் ஆண்டு வண்ணைச் சைவப்பெரியார் சித.மு.பசுபதிச் செட்டியார், திருவாளர்கள் இ.இராமுப்பிள்ளை வைத்தியர் வை.ஆறுமுகம் பிள்ளை, தா.இராகவப்பிள்ளை ஆகியோரின் அயராத முயற்சியினால் 13 ஜூன் 1894 அன்று பழைய ஆலயம் இருந்த திருவிடமும், தீர்த்தக் கிணறும் முன் நிறுவப்பட்டிருந்த லிங்கம் ஒன்றும் திருநந்தி சோமாஸ்கந்தர், கணேசர் ஆகிய மூர்த்திகளின் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. இவற்றை நிறுவிப் பூசை அர்சனை அபிடேகங்கள் இயற்ற வேண்டி இன்றுள்ள கோயிலிருக்குமிடத்தில் சிறு கோயிலமைத்து கண்டெடுக்கப்பட்ட மூர்த்திகளை உரிய இடங்களில் நிறுவி 28 ஜூன் 1903 ஆம் ஆண்டில் நல்வேளையில் முதலாவது குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுச் சிறப்பாகச் செய்யப்பட்டது.

மூலக் கருவறையில் எழுந்தருள வைக்கப் பெற்ற சிவலிங்கம் காசியிலிருந்து வருவிக்கப்பட்டதென திரு இராமேச்சர வரலாற்றுத் தரவினாலறிய முடிகின்றது

இதனைத் தொடர்ந்து பல திருப்பணிகளாற்றப்பட்டு 1920ஆம் ஆண்டிலும் மற்றோர் திருக்குடமுழுக்கு விழாச் செய்யப்பட்டது.

புதிதாக அமைக்கப்பட்ட ஆலயம் காடடர்ந்து அழிந்த நிலைகண்டு நாட்டின் சைவப் பெருமக்களின் உள்ளத்தை விழிப்படைவும் பழைய உயர் நிலைக்குத் திருக்கோயில் வளரவும் வேண்டுமென்ற நினைப்பினாலும் உந்துதலினாலும் 1948 ஆம் ஆண்டு இத்திருவிடத்தில் ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டத்தினரால் சைவப் பெரு மாநாடொன்று கூட்டப்பட்டது. இம் மாநாட்டைக் கூட்ட முன்னின்று உழைத்த பெருமக்கள் வரிசையில் வேலைணையூர் வி.கே. செல்லப்பாச் சுவாமியார், திருவாசக முதல்வர் சி.சரவணமுத்து அடிகள், சட்டத்தரணி சு.சிவசுப்பிரமணியம் ஆகியோராவர்

கூடிய சைவப்பெருமாநாடு ஆலயத்தை மறுசீரமைத்து வளம்பல பெற வைக்க வேண்டுமென்ற சிந்தனையை உருவாக்கத் தவறவில்லை. இம்மகாநாட்டைத் தொடர்ந்து பம்பலப்பிட்டி நகரத்தார் கதிரேசன் ஆலயத்தில் உருவாக்கப்பட்ட சபையே இன்றுலகளாவிய பெருமையுடன் திகழ்கின்ற திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை.

இத்திருக்கோயிலில் நிறுவப்பெற்றுள்ள கருங்கல் திருப்படிகங்களில் பெரும்பாலான படிமங்கள் மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலைக் கல்லூரியில் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்திருக்கோயிலில் 1952லும் 1960லும் ஆண்டிலும் திருவுருவப்படங்கள் நிறுவப்பட்டு இருமுறை குடமுழுக்காட்டப் பெற்றது. அதனைத் தொடர்ந்து முடிந்தவரை பல்வகைத் தொல்லைகட்காளாகிய நிலமையையும் பொருட்டாக நினைக்காது முயன்று தம்மையே ஈசற்கீந்து அரும்பாடுபட்டு இத்திருக்கோயிலை எடுத்த பெருமை சிவமணி சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களையும் மண்மேடாகவும் சேறாகவுமிருந்த பாலாவித் தீர்த்தக் குளத்தை வெட்டி அணையிட்டு செம்மையுறச் செய்திட்ட நீர்ப்பான பொறியியலாளர் அருளாளர் எஸ்.ஆறுமுகப் பெருந்தகையையும் சைவ உலகு என்றும் மறவாது

திருக்கேதீசரத்திற்குச் செல்லும் அடியவர்களின் வசதிகள் உளத்தில் கொண்ட அருளுள்ளத்தினர் பெருந்தனவந்தர்கள், அரச நிறுவனங்கள் ஆலயச் சூழலில் திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், நகரத்தார் மடம், நாவலர் மடம், அம்மா சத்திரம், திருப்பதி மடம், திருவாசக மடம், மகாசிவராத்திரி மடம், பொன்னாவெளி உடையார் மடம், நாதன் சத்திரம், மலேசியா மடம், கதிர்காமத் தொண்டர் மடம், மகாதுவட்டா மடம், பூனகரி மடம், அடியார் மடம், நீர்பாசன மடம், சிவபூசை மடம், நரசிங்கர் மடம், கட்டடத்திணைகள மடம் என பல்வேறு திருமடங்களை நிறுவி அடியார்கட்காறுதலளித்த பெருமைகளாயின.

அது மட்டுமா? ஒரு நகரத்தை அழகுசெய்வதற்குரிய மருந்தகம், மக்கள் நலம் பேணகம், ப.நோ.கூ. சங்கம், கி.மு.சங்கம், கி.அ.சங்கம், கிராமோதய சபை, நீர்வழங்கல் சபை, அஞ்சலகம், அங்காடிகள் போன்ற மிகமிக அவசியமான அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தமை கண்கூடு.

ஏதுங் குறையிவின்றி எல்லாமமைந்து தன்னிறைவு பெற்றிருந்த திருக்கோயிற் திருவிடம் திருக்கோயிலைத் தவிர்ந்த அனைத்து வளங்களும் அழிந்து போய் பழமை நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளமை கவலைக்குரிய விடையமாகும்.

1976ஆம் ஆண்டு வெகு சிறப்புடன் திருக்கோயில் திருக்குடத் திருமுழுக்குப் பெருஞ்சாந்தி விழா நிகழ்த்தப் பெற்று 1990ஆம் ஆண்டுவரை நித்திய நைமித்திய பெருவிழாக்கள் நடைபெற்று வந்நதன

1990க்குப் பின் பூசையோ பெருவிழாக்களோ நடைபெறமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுக் காடு மண்டிக் களையிழந்து காட்சிதருவது கண்கூடு

இக்கால எல்லையில் ஐந்து திருத்தேர்கள் முயன்று உருவாக்கப்பட்டு வீதி வலம் வந்தகாட்சிதனை அருளடியார்கள் மறந்திருக்கமுடியாது. முதற்பெருந் தேரில் உலாவர உலகிலேயே பெரிய சோமாஸ்கந்த தெய்வத்திருவுருவம் வடிக்கப்பட்டு உலாவந்த காட்சி அருளாளர்களால் என்றும் மறக்ககமுடியாத காட்சியாகும்.

புதுமியான சிற்பங்களைக் கொண்ட திருக்கோயிலையுந் திருத்தேர்களையும் அமைத்த பெருமை தமிழ்நாடு மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கலைக் கல்லூரி வினைஞர்களையும் பழனி சிற்பக்கலாவல்லுனர்களையும் யாழ் திருநெல்வேலி ஆறுமுகம் சீவரத்தினம் எனும் சிற்பக்கலா வல்லுனர்களையும் சார்ந்ததென்றால் அது மிகையாகாது.

இத்துணை சிறப்புக்கள் அமைந்ததாகவும், எந்தக்குறையுமில்லாத எல்லாமடங்கிய தன்னிறைவு பெற்ற பெருங்கோயிலாக அமைக்க வேண்டுமென்ற ஆர்வங்கொண்டு அல்லும் பகலும் கோயிலே தன் சிந்தையாகக் கொண்டு கோயில் பற்றிய தரவுகளைக் காட்டும் நூல்களை நுணுகி ஆராய்து சிவாகம நடைமுறை பிழையாது அமைத்திட நாளும் பொழுதும் சிந்திதிதுச் செயலாற்றிய ஆற்றி வருகின்ற சட்ட வல்லுனர் சைவப் பெரியார் இ.நமசிவாயம் அவர்தம் சேவையையும் அவருடன் உறுதுணையாய் பணியாற்றும் அன்பர்களின் பணிகளையும் நன்றியுள்ள சைவ உலகம் என்றுமே மறவாது .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாது பாதுகாக்கபட வேண்டிய தளங்களிலிதுவும் ஒன்று

.........பகிர்வுக்குனன்றி

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கோயிலின் படத்தையும் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்..இணைப்பிற்கு நன்றி.

  • தொடங்கியவர்

கோயிலின் படத்தையும் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்..இணைப்பிற்கு நன்றி.

உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கோமகன்...எனக்கும் இந்த கோயிலுக்கு ஒருக்கால் போக வேண்டும் என ஆசை பார்ப்போம் எப்ப போக கிடைக்குமோ தெரியாது

சைவம் வளர்த்த திருக்கேதீஸ்வரச் சிவன் அதனை பின்பற்றியவர்கள் படுகொலை செய்யப்படுகையில் மோனத் தவமிருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்

சைவம் வளர்த்த திருக்கேதீஸ்வரச் சிவன் அதனை பின்பற்றியவர்கள் படுகொலை செய்யப்படுகையில் மோனத் தவமிருந்தார்

சிவன் மட்டுமல்ல அல்லா.. ஜேசு எல்லாரும் தான். புத்தர் கதறக் கதற கொலை செய்தவனுக்கு பக்கத்தில இருந்து கச்சாமி ஓதிக் கொண்டா இருந்தவர்...??!

காதலன் எப்படி காதலியிடம் (அல்லது மறுதலையாகக் கூட) தன்னைப் பற்றி ஒரு பிள்டப்ப ஏற்படுத்திறானோ.. அதுபோலவே மக்களிடம் கடவுளைப் பற்றிய ஒரு பிள்டப் ஏற்படுத்திறது தான்... பிழைப்புக்கு வழி.

முள்ளிவாய்க்காலில் செத்தவனும் மனிதன் சாகடித்தவனும் மனிதன்... இது அகண்ட பார்வையில். குறுகிய பார்வையில்.. செத்தவன் தமிழன்.. சாகடித்தவன் சிங்களவன்..! :unsure::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பல தடவைகள் இந்தக் கோவிலுக்குப் போயிருக்கின்றேன், கோமகன்!

பாலாவித் தீர்த்தத்திலும் நீராடியிருக்கின்றேன்!

அந்தக் காலத்தில் நல்ல அன்னதான மடங்களும் இருந்தன!

கடைசியாகச் சென்ற போது, கோவில் முகப்பிலுள்ள வளைவை ஆமிக்காரன் படமெடுக்க விடவில்லை!

பின்பு மேலதிகாரியிடம் அனுப்பப் பட்டேன்!

இந்த வளைவின் படம், எந்த விதத்தில் உங்கள் பாதுகாப்பைப் பாதிக்கும் எனக் கேட்டேன்?

கடைசியாகப் படமெடுக்க விட்டான்!

பின்பு அவனிடம் படத்தைக் காட்டினேன்!

கழுவாமல், காயவிடாமல் படமெடுக்க முடியும் என்று தனக்குத் தெரியாமல் போய் விட்டது என்று சிரித்தான்!

இது நடந்தது, சில வருடங்களின் முன்பு!!!

பதிவுக்கு நன்றிகள், கோமகன்!!!

சிவன் மட்டுமல்ல அல்லா.. ஜேசு எல்லாரும் தான். புத்தர் கதறக் கதற கொலை செய்தவனுக்கு பக்கத்தில இருந்து கச்சாமி ஓதிக் கொண்டா இருந்தவர்...??!

எனக்கு யேசு பற்றித் தெரியாது ஏனெனில் ஒரு போதும் அவரைப் பற்றி கற்றதும் இல்லை, சிலுவையில் அறைந்த பின் உயிர்த்து எழுவார் என்று நம்பியதும் இல்லை

சிங்களவர்கள் கொலை செய்யும் போது அது புத்தர் தான் செய்கின்றார் என்று அடி முட்டாள் சிந்திப்பது போன்று சிந்தித்ததும் இல்லை.

எனக்கு தெரிந்து முதலாம் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை கற்றது இந்து சமயம் பற்றித்தான். அப்பாவும் அம்மாவும் அப்புச் சாமி என்று கும்பிடச் சொன்னதும் இந்த மத தெய்வங்களைத் தான்.

சூலை நோய் வந்த கோயில் எடுபிடியை காப்பாற்றிய, கடலில் எறிந்த பின்னும் கோயில் எடுபிடியை காப்பாற்றிய சிவன், அவனது கோயில், அவனது மூன்றாவது உருப்படாத கண் எல்லாம் என் சனம் கொத்து கொத்தாக அமில குண்டுகளுக்கு இரையாகும் போதும் காப்பாற்றாமல் போனதில் தான் என் கவனம். எனக்கு சின்ன வயதில் இருந்து அறியப்பட்ட போலி பிம்பம் மீது தான் என் கேள்வி. சனத்தை காப்பாற்றாமல் போன கடவுளைப் பற்றி எழுதும் இடம் எல்லாம்.. "ஏன்டா எம் மக்களை காப்பாற்றவில்லை என்று கேட்டுக்கொண்டே இருப்பேன்

எனக்கு தெரிந்து அரியை பரியாக்கிய அதே சிவன்தான் கேடு கெட்டத்தனமாக புலியை புண்ணாக்காக்கி சனத்தின் மீது இராணுவம் அட்டூளியங்களை ஏவும் போது பங்கரிற்குள் ஒழிந்து கொண்ட கடவுளர்.

நான் இந்து என்பதால் எனக்கு சிவன் மேல் கோபம். நேர்மையான கிறிஸ்தவனுக்கு இயேசின் மேல் கோபம்

இதே கேள்வியை மற்ற மதத்தினரும், நெஞ்சில் நேர்மை இருந்தால் தத்தம் கடவுளரிடம் கேட்பார்கள் என்பது நிச்சயம்

Edited by நிழலி

பல தடவைகள் இந்தக் கோவிலுக்குப் போயிருக்கின்றேன், கோமகன்!

பாலாவித் தீர்த்தத்திலும் நீராடியிருக்கின்றேன்!

அந்தக் காலத்தில் நல்ல அன்னதான மடங்களும் இருந்தன!

கடைசியாகச் சென்ற போது, கோவில் முகப்பிலுள்ள வளைவை ஆமிக்காரன் படமெடுக்க விடவில்லை!

பின்பு மேலதிகாரியிடம் அனுப்பப் பட்டேன்!

இந்த வளைவின் படம், எந்த விதத்தில் உங்கள் பாதுகாப்பைப் பாதிக்கும் எனக் கேட்டேன்?

கடைசியாகப் படமெடுக்க விட்டான்!

பின்பு அவனிடம் படத்தைக் காட்டினேன்!

கழுவாமல், காயவிடாமல் படமெடுக்க முடியும் என்று தனக்குத் தெரியாமல் போய் விட்டது என்று சிரித்தான்!

இது நடந்தது, சில வருடங்களின் முன்பு!!!

பதிவுக்கு நன்றிகள், கோமகன்!!!

2002 இல் மீண்டும் கும்பாவிசேஷம் செய்யும் போது கொழும்பில் இருந்து 10 நண்பர்களுடன் சென்று, தேர் முட்டியில் இரவிரவாக படுத்து விடிய பூசை பார்த்த பக்தன் நான். தள்ளாடி இராணுவ முகாமின் கடைசி காவலரண் பாலாவி கரையின் இறுதி எல்லையில் இருந்தது என்று சொல்லி ஆமி எம்மையும் படம் எடுக்கவிடவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களின் கலைகளில் சிறந்த சிற்பக்கலைக்கு

இப்படியான ஆலயங்களே ஆதாரம்.

பாதுகாக்கப்பட வேண்டிய ஆதாரங்கள்.

புண்ணியலிங்கம் ஆசிரியர் மிகுந்த கடவுள்பக்தி கொண்டவர்.

திரு நீறு அணியாமல் அவரைப் பார்ப்பது அரிது.

எங்களுக்கு விஞ்ஞானம் கற்பித்தவர்.

இணைப்பிற்கு நன்றி கோமகன்

  • தொடங்கியவர்

இந்துக்களின் கலைகளில் சிறந்த சிற்பக்கலைக்கு

இப்படியான ஆலயங்களே ஆதாரம்.

பாதுகாக்கப்பட வேண்டிய ஆதாரங்கள்.

புண்ணியலிங்கம் ஆசிரியர் மிகுந்த கடவுள்பக்தி கொண்டவர்.

திரு நீறு அணியாமல் அவரைப் பார்ப்பது அரிது.

எங்களுக்கு விஞ்ஞானம் கற்பித்தவர்.

இணைப்பிற்கு நன்றி கோமகன்

புண்ணியலிங்கம் மாஸ்ரர் கடவுள் பக்தியில் மட்டுமா பக்தி கொண்டவர் ?தடியிலும் தான் பக்தி கொண்டவர் :lol: :lol: . அதால தான் இண்டைக்கு நாங்கள் நெஞ்சை நிமித்தி நெம்பிக் கொண்டு இருக்கிறம் :D:D .

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கோமகன்! நல்ல தகவல்களைப் பதிவிட்டு இருக்கின்றீர்கள்!

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி கோமகன்! நல்ல தகவல்களைப் பதிவிட்டு இருக்கின்றீர்கள்!

மிக்க நன்றிகள் சுவி உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கேதீஸ்வரம் பல முறை சென்றுள்ளேன்.கோயிலுக்கு அருகில் எனது மச்சான்மார் இருந்ததால் அடிக்கடி விடுமுறைக்கு செல்வதுண்டு. இப்போ கடவுளை நினைத்தாலே ஏதோ கையாலாகாதவரை நினைப்பது போன்ற ஒரு வெறுமை உணர்வு.

இணைப்புக்கு நன்றி, கோமகன்.

  • தொடங்கியவர்

திருக்கேதீஸ்வரம் பல முறை சென்றுள்ளேன்.கோயிலுக்கு அருகில் எனது மச்சான்மார் இருந்ததால் அடிக்கடி விடுமுறைக்கு செல்வதுண்டு. இப்போ கடவுளை நினைத்தாலே ஏதோ கையாலாகாதவரை நினைப்பது போன்ற ஒரு வெறுமை உணர்வு.

இணைப்புக்கு நன்றி, கோமகன்.

மிக்க நன்றிகள் நுணாவிலான் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யேசு பற்றித் தெரியாது ஏனெனில் ஒரு போதும் அவரைப் பற்றி கற்றதும் இல்லை, சிலுவையில் அறைந்த பின் உயிர்த்து எழுவார் என்று நம்பியதும் இல்லை

சிங்களவர்கள் கொலை செய்யும் போது அது புத்தர் தான் செய்கின்றார் என்று அடி முட்டாள் சிந்திப்பது போன்று சிந்தித்ததும் இல்லை.

எனக்கு தெரிந்து முதலாம் வகுப்பில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை கற்றது இந்து சமயம் பற்றித்தான். அப்பாவும் அம்மாவும் அப்புச் சாமி என்று கும்பிடச் சொன்னதும் இந்த மத தெய்வங்களைத் தான்.

சூலை நோய் வந்த கோயில் எடுபிடியை காப்பாற்றிய, கடலில் எறிந்த பின்னும் கோயில் எடுபிடியை காப்பாற்றிய சிவன், அவனது கோயில், அவனது மூன்றாவது உருப்படாத கண் எல்லாம் என் சனம் கொத்து கொத்தாக அமில குண்டுகளுக்கு இரையாகும் போதும் காப்பாற்றாமல் போனதில் தான் என் கவனம். எனக்கு சின்ன வயதில் இருந்து அறியப்பட்ட போலி பிம்பம் மீது தான் என் கேள்வி. சனத்தை காப்பாற்றாமல் போன கடவுளைப் பற்றி எழுதும் இடம் எல்லாம்.. "ஏன்டா எம் மக்களை காப்பாற்றவில்லை என்று கேட்டுக்கொண்டே இருப்பேன்

எனக்கு தெரிந்து அரியை பரியாக்கிய அதே சிவன்தான் கேடு கெட்டத்தனமாக புலியை புண்ணாக்காக்கி சனத்தின் மீது இராணுவம் அட்டூழியங்களை ஏவும் போது பங்கரிற்குள் ஒழிந்து கொண்ட கடவுளர்.

நான் இந்து என்பதால் எனக்கு சிவன் மேல் கோபம். நேர்மையான கிறிஸ்தவனுக்கு இயேசின் மேல் கோபம்

இதே கேள்வியை மற்ற மதத்தினரும், நெஞ்சில் நேர்மை இருந்தால் தத்தம் கடவுளரிடம் கேட்பார்கள் என்பது நிச்சயம்

நிழலி அரியைப் பரியாக்கியதாகவா படித்தீர்கள்???? :lol:

நான் நரியைப் பரியாக்கியதாகத்தான் படித்தேன் :icon_mrgreen:

Edited by valvaizagara

நிழலி அரியைப் பரியாக்கியதாகவா படித்தீர்கள்???? :lol:

நான் நரியைப் பரியாக்கியதாகத்தான் படித்தேன் :icon_mrgreen:

இதுக்குத் தான் சமயம் சம்பந்தமாக கனக்க நான் எழுதக் கூடாது என்று நினைப்பது

தவறு என்னில் தான்..அது நரியை பரியாக்கியதென்றே வர வேண்டும்....

...ஆனாலும் என்ன, நீங்கள் மெத்த கவனமாக படித்த சிவன் தானா புலியை புஸ்வாணம் ஆக்கியவர்களுக்கு துணை நின்றது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.