Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணும்,பெண்ணும் திருமணம் செய்யும் போது வயதை கவனத்தில் எடுக்க வேண்டுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது ஒருஆணும்,பெண்ணும் பார்த்து ,பேசி,விரும்பி,ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு செய்வது தான் நல்லது என்பது என் கருத்து.

இன்றைய நவீன காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி விட்டது....ஆணோ ,பெண்ணோ 45,50 வயதிலும் கூட இளமையாக்,சுறு,சுறுப்பாக இருக்கினம்.இந்த வயதிலும் கூட அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.

பொதுவாக் எமது சமுதாயத்தில் திருமணம் செய்யும் போது[வெள்ளையளை விடுவம்] ஆணுக்கு பெண்ணை விட எது அதிகமாய் இருக்குதோ இல்லையோ வயது கட்டாயம் அதிகமாக இருக்க வேண்டும்...பொதுவாக எனக்குத் தெரிந்து ஆண் தன்னிலும் 10,15 வயசு குறைவான பெண்களை கட்டி இருக்கிறார்கள் அதில் சிலர் சந்தோசமாய் இருக்கிறதை கண்டு இருக்கிறன்,சிலர் கஸ்டப்படுவதையும் கண்டு இருக்கிறேன் ஆனால் இதே நேர‌த்தில் பெண் திருமணம் செய்யும் போது தன்னை விட‌ வயது கூடினவராகவோ,தன்னை விட‌ ஒரு,இரு வயது குறைந்தவரைத் திருமணம் செய்வதைக் கண்டு இருக்கிறேன்...ஒரு ஆண் தன்னை விட‌ இருபது,இருபத்தைந்து வயது குறைந்தவரை கட்டலாம் என சொல்வார்கள் கார‌ணம் அவர்கள் ஆண் பிள்ளை.பெண்கள் குழந்தை பெத்துக் கொடுக்க வேண்டிய மெசின் என்பதால் அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு இளமையாக இருக்கிறதோ[வயசு குறைவாக இருக்கிறது] அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்பார்கள்...பெண் தன்னை விட‌ ஓர்,இரண்டு வயசு குறைந்த ஆண்களை கட்டுவதே சாத்தியமில்லை...எங்கட‌ சமுதாயத்தில் நாங்கள் ஒரு வயது கூடிக்,குறைந்தாலே நாங்கள் அக்கா,அண்ணா,தம்பி உறவு வைத்துக் கொண்டாடுவோம்...இந்த சமுதாயம் பெண்கள் தங்களை விட‌ ஒர்,இரு வயசு குறைந்த ஆண்களை திருமணம் செய்ய அனுமதிக்குதோ,இல்லையோ என்பதற்கப்பால் பெண்களால் அப்படித் திருமணம் செய்ய முடியுமா என்பது தான் கேள்வி?...தங்களை விட‌ ஓர்,இரு வயசு குறைந்த ஆண்களையே திருமணம் செய்ய முடியாத பெண்களால் எப்படி தன்னிலும் பத்து,இருபது வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்ய முடியும்?

தயவு செய்து இந்த பதிவில் யாதாத்தத்திற்கு அதிகமான கற்பனைகளை தவிர்த்து யதார்த்தமான பதில்களை தாருங்கள்...சாந்தி அக்காவின் கதையினை ஒட்டி வந்த பதிவு ஆரோக்கியமான விவாதமாக இருக்க வேண்டும் என்பதால் தனிப் பதிவாக்கி உள்ளேன்.

  • Replies 56
  • Views 29k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ ரீதியான.. சட்ட ரீதியான காரணங்களைத் தவிர வேறு எதனையும் இட்டு அதனைக் கருத்தில் எடுக்க வேண்டிய தேவையை இன்றைய அறிவியல் உலகம்.. மனித இனத்திற்கு ஏற்படுத்தித் தந்துள்ளது. :icon_idea::)

தனுசும் ரஜனியின் மகளை அப்படித்தான் மணம் முடித்தவர்.பணம் பத்தும் செய்யும்.வண்டியும் மாடும் ஒத்துழைத்தால் எல்லாம் சாத்தியம்.மாட்டைவிட வண்டி கெதியாக பழுதடைவதால் மாட்டை வேறு வண்டியில் பூட்டும் அபாயமும் உண்டு.எப்போதும் ஏட்டு சுரக்காய் கறிக்குதவாது.

திருமணமே ஒரு வேஸ்ட்டு, அதில எத்தினையில வயதில, யாரைக்கட்டினாலென்ன...

திருமணம் முடித்தால் அவருடன் தான் வாழ வேண்டுமா? அவர் புலம் வரலாம் வந்து அவருக்கு பிடிக்காவிட்டால் அல்லது ஒருவர் எழுதியதைப் போல் கூப்பிட்டவர் இறந்தால் அவர் ஏன் மறுமணம் செய்ய முடியாது? எதோ திருமணம் என்பது புனிதமானது அது ஒருவருடம் மட்டுமே என்பதெல்லாம் காலவதியான கருத்து.

இந்தச் சமூகம் அதற்காகப் போராடியவர்களைப் பாதுகாக்க வலு வற்ற நிலையில் அவர்கள் தங்களுக்குக்குக் கிடைக்கும் ஒரு சிறு சந்தர்ப்பத்தையும் பயன் படுத்துவது சரியானதே.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது, இரு மனங்களின் சங்கமம்!இருபரிடமும் புரிந்துணர்வும், விட்டுக் கொடுப்பும் இருந்தால், எந்த வயதிலும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

எனக்குத் தெரிந்த ஒரு எண்பத்திரண்டு வயது முதியவர் ஒருவர், தனது மனைவியை ஒரு கதிரை வண்டியில் வைத்து, மேடு பள்ளமான இடம் எல்லாம், ஒவ்வொரு நாள் காலையிலும் தள்ளிக் கொண்டு போவார்! அவரிடம் ஒரு நாள் கதை கொடுத்த போது, அவர் சொன்னது, அவரது மனைவி அவரை விட ஐந்து வருடங்கள், மூப்பு, என்று! நாங்கள் தான் தேவையில்லாத, எழுத்தில் எழுத முடியாத பொருத்தமேல்லாம் பார்த்துக் கொண்டு, இரண்டு முன் பின் அறியாதவர்களை, அவர்கள் சம்மதம் கூடக் கேட்காது, ஒரே அறையில் வைத்துப் பூட்டி விடுகின்றோம்! வடிகட்டிய பிற்போக்குத் தனம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணமே ஒரு வேஸ்ட்டு, அதில எத்தினையில வயதில, யாரைக்கட்டினாலென்ன...

உங்களுக்கு பச்சை குத்தின மூன்றாவது ஆள் நான் தான். :rolleyes:

வயது என்பது பொருட்டே இல்லை ஆனால் பெண்கள் வயசு குறைந்த ஆணை திருமணம் செய்ய தயங்குவார்கள் என் அனுபவத்திலிருந்து

எனது அப்பாக்கு அம்மாவினை விட ஒரு வயசு குறைவு அவர்களின் திருமணம் பெற்றோர்கள் பேசி செய்து வைத்த திருமணம் இப்போது அப்பாக்கு ஐம்பது அம்மாக்கு ஐம்பத்து ஒன்று இது வரை எனக்கு தெரிந்த அளவில் கருத்து வேற்றுமை வந்தது இல்லைஅதே மாதிரி தம்பிக்கு அவனின் மனைவியை விட ஒரு வயசு குறைவு காதல் திருமணம் சந்தோசமாக இருக்கிறார்கள்... மனசு ஒத்து போகுமாக இருந்தால் வயசு என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது

எனக்கு என்னிலும் விட வயசு கூடின பெண்ணை திருமணம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை ... எனக்கு தெரிஞ்சு பிரபலம்களில் சச்சின் தன்னிலும் விட வயசு கூடின பெண்ணையே திருமணம் செய்துள்ளார் அதே மாதிரி அனில் கும்ளே தன்னிலும் விட வயசு கூடின பெண்ணை தான் திருமணம் புரிந்துள்ளார்

எனது நண்பன் தன்னிலும் விட 2 வயசு கூடின பெண்ணை விரும்பினான் அவள் வயசை காரணம் காட்டி இறுதியில் மாட்டன் என்று சொல்லிட்டாள்..

திருமணம் என்பது ஒருஆணும்,பெண்ணும் பார்த்து ,பேசி,விரும்பி,ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு செய்வது தான் நல்லது என்பது என் கருத்து.

இன்றைய நவீன காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி விட்டது....ஆணோ ,பெண்ணோ 45,50 வயதிலும் கூட இளமையாக்,சுறு,சுறுப்பாக இருக்கினம்.இந்த வயதிலும் கூட அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.

பொதுவாக் எமது சமுதாயத்தில் திருமணம் செய்யும் போது[வெள்ளையளை விடுவம்] ஆணுக்கு பெண்ணை விட எது அதிகமாய் இருக்குதோ இல்லையோ வயது கட்டாயம் அதிகமாக இருக்க வேண்டும்...பொதுவாக எனக்குத் தெரிந்து ஆண் தன்னிலும் 10,15 வயசு குறைவான பெண்களை கட்டி இருக்கிறார்கள் அதில் சிலர் சந்தோசமாய் இருக்கிறதை கண்டு இருக்கிறன்,சிலர் கஸ்டப்படுவதையும் கண்டு இருக்கிறேன் ஆனால் இதே நேர‌த்தில் பெண் திருமணம் செய்யும் போது தன்னை விட‌ வயது கூடினவராகவோ,தன்னை விட‌ ஒரு,இரு வயது குறைந்தவரைத் திருமணம் செய்வதைக் கண்டு இருக்கிறேன்...ஒரு ஆண் தன்னை விட‌ இருபது,இருபத்தைந்து வயது குறைந்தவரை கட்டலாம் என சொல்வார்கள் கார‌ணம் அவர்கள் ஆண் பிள்ளை.பெண்கள் குழந்தை பெத்துக் கொடுக்க வேண்டிய மெசின் என்பதால் அவர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு இளமையாக இருக்கிறதோ[வயசு குறைவாக இருக்கிறது] அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்பார்கள்...பெண் தன்னை விட‌ ஓர்,இரண்டு வயசு குறைந்த ஆண்களை கட்டுவதே சாத்தியமில்லை...எங்கட‌ சமுதாயத்தில் நாங்கள் ஒரு வயது கூடிக்,குறைந்தாலே நாங்கள் அக்கா,அண்ணா,தம்பி உறவு வைத்துக் கொண்டாடுவோம்...இந்த சமுதாயம் பெண்கள் தங்களை விட‌ ஒர்,இரு வயசு குறைந்த ஆண்களை திருமணம் செய்ய அனுமதிக்குதோ,இல்லையோ என்பதற்கப்பால் பெண்களால் அப்படித் திருமணம் செய்ய முடியுமா என்பது தான் கேள்வி?...தங்களை விட‌ ஓர்,இரு வயசு குறைந்த ஆண்களையே திருமணம் செய்ய முடியாத பெண்களால் எப்படி தன்னிலும் பத்து,இருபது வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்ய முடியும்?

தயவு செய்து இந்த பதிவில் யாதாத்தத்திற்கு அதிகமான கற்பனைகளை தவிர்த்து யதார்த்தமான பதில்களை தாருங்கள்...சாந்தி அக்காவின் கதையினை ஒட்டி வந்த பதிவு ஆரோக்கியமான விவாதமாக இருக்க வேண்டும் என்பதால் தனிப் பதிவாக்கி உள்ளேன்.

கூறுகெட்ட மன ஊனமுள்ள சமூகத்தின் ஆவேசக்குரலாகப் பதிவு செய்த ரதியக்காவுக்கு மிக்க நன்றிகள் . திருமண உறவு இருவகையான முகங்களைப் பிரதிபலிக்கின்றது . இந்த உறவு பல குடும்பங்களை உள்வாங்கி , ஓர் இனத்தின் பண்பாட்டுக் கண்ணாடியாக விசுபரூபம் எடுக்கின்றது . இந்தப் பண்பாட்டுக் கண்ணாடிக்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற நாங்களும் , தாயகத்தில் உள்ளவர்களும் என்ன பங்களிப்பைச் செய்தோம் ??என்ற கேள்வியை இந்தப்பதிவினூடாக முன்வைக்கின்றேன் . ஆணியத் தத்துவங்களிலேயே முழ்கி எழும்பிய எமது ஜீன்கள் , பெண்களை என்றுமே தமக்கு நிகரான உணர்வு , உணர்சியுள்ள உயிரியாக ஏற்றுக்கொள்ள மறுக்குன்றன . அதற்கு வறட்டுத்தனமான தேற்றங்களையும் , நிறுவல்களையும் போட்டு தங்களைத் தாங்களே சொறிந்து களிப்படைகின்றன . இத்தகைய போக்குகளுக்கு ஓரு சில பெண்களும் தெரிந்தோ , தெரியாமலோ உறுதுணையாகின்ற அவலங்களும் இல்லாமல் இல்லை . புலம்பெயர் வாழ்கையில் இருந்து கொண்டாலும் , < அரைஅவியல் முட்டைக் கலச்சாரம் > தான் முனைப்புப் பெறுகின்றது . பிறக்கின்ற பெண்பிள்ளைகளை அவர்கள் பருவ வயதை அடைந்த சூட்டுடனயே , திருமணம் பேசுகின்ற அறிவிலியான பெற்றோர்களைப் பார்கின்றோம் . அங்கு வயது வித்தியாசம் எல்லாம் இரண்டாம்பட்சமே . அவர்கள் படித்து முனேறி தமது கால்களில் நிற்பதை நினைக்காது , ஒருதிருமண உறவில் தள்ளுவதை , ஒரு பெண் உயிரியை தொடர்தும் நவீன நசுக்கலில் தள்ளுவதாகவே எடுக்கின்றேன் . திருமணம் தனிமனித உணர்வுகளை உள்ளடக்கியது என்பது மறுக்க முடியாது தான் . எனவே ரதி கேட்பது போல ஒரு பெண் தன்னிலும் மிக இளையவரை திருமணம் செய்யமுடியுமா ? என்ற கேள்வி நியாமானதும் சர்சைக்குரியதே .

Edited by komagan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் இன்னுமொரு கருத்தை சொல்ல வேண்டும்...ப்ரசன் சொல்வது மாதிரி ஒரு பெண் தன்னை விட ஒர்,இரு வயது அதிகமானவரை திருமணம் செய்து இருப்பதைக் கண்டு இருக்கிறேன்...ஆனால் தன்னை விட நாலைந்து வயது குறைந்த ஆண்களை பெண்கள் திருமணம் செய்து சந்தோடமாய் இருக்கிறார்களா தெரியவில்லை சச்சின் போன்ற பிரபல்யங்களை விடுவோம் அவர்களது வாழ்க்கை முறையும்,எங்களதும் வித்தியாசம்...அப்படி பெண் தன்னிலும் நான்கு,ஜந்து குறைந்தவரைக் கட்டினால் சில நேரத்தில் அந்த ஆணுக்கு அந்த பெண்ணின் வயதில் அக்காவோ,அண்ணாவோ அல்லது அந்த பெண்ணுக்கு அந்த ஆணின் வயதில் தம்பியோ,தங்கச்சியோ இருந்தால் அவர்கள் திருமணம் செய்யும் போது அவர்களை பாதிக்காதா? இது குறித்து எனது நண்பி ஒருவர் சொன்னார் திருமணம் செய்த பின் அவரவர் தனிக் குடும்பம் பிறகு எப்படி அது அவர்களை பாதிக்கும் என்றார்.இது பற்றிய உங்கள் கருத்தையும் தாருங்கள்.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என சொல்லும் நீலப் பறவையும்,நார‌தரும் தாங்கள் ,தங்கட‌ பிள்ளைகளை இப்படியான திருமணம் செய்ய அனுமதிப்பீர்களா?...இந்தப் பதிவில் பல பேர் தங்கள் கருத்தை வந்து எழுதவில்லை.எழுதின சிலரில் ப்ர‌ச‌னை தவிர‌ வேறு ஒருவரும் தாங்கள் இப்படி தங்களை விட‌ வயசு கூடின பெண்களை கட்டுவதில் பிர‌ச்ச‌னை இல்லை என எழுதவில்லை...எல்லோரும் மற்றவர் செய்யும் போது ஊக்குவிப்பார் அல்லது ஊக்குவிப்பது மாதிரி எழுதுவர் ஆனால் தனக்கு,தனக்கு என வரும் போது செய்வதில்லை என்பது என் கருத்து ஒரு சில விதி விலக்கு இருக்கு அதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஒரு பெண் தன்னை விட 20,25 கூடியவரைக் திருமணம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை .இது எல்லாம் அவசரத்தில் அநேகமாக வெளி நாட்டுக்கு வந்து தாங்களும் மற்றவர்கள் மாதிரி சந்தோசமாய் இருக்க வேண்டும் என்ட அவசரத்தில் எடுக்கிறது...அவருக்கு வயது அதிகம் என்பதால் மண்டையை போட்டூடுவார் அதற்கு பிற்கு அந்த பெண் தனித்து போய் விடுவார் என்பதற்காக சொல்லவில்லை...அவர் இறந்தாலும் அந்தப் பெண்ணுக்கு பொருளாதார சிக்கல் இல்லை அந்தப் பெண் மீண்டும் திருமணம் செய்ய விரும்பா விட்டாலும் தனித்து இருக்கலாம் அதுவும் பிரச்சனை இல்லை ஆனால் அவர்களால் இவ்வளவு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து குடும்பத்தை சிறப்பாக நடத்த முடியுமா என்பது தான் கேள்வி?...உடலுறவுகளுக்கப்பால் மன ரீதியாக பல பிரச்சனைகள் இருவருக்கிடையே உருவாகும் அது குடும்பத்தை சீர‌ழிக்கும் நிலைக்கு இட்டு செல்லும் என்பது என் கருத்து

திருமணமே ஒரு வேஸ்ட்டு, அதில எத்தினையில வயதில, யாரைக்கட்டினாலென்ன...

இந்த சிந்தனை கூட‌ கல்யாணம் கட்டி வாழ்க்கையை கொஞ்ச‌ம் அனுபவித்த பின்னர் தானே வருகுது :D

உங்களுக்கு பச்சை குத்தின மூன்றாவது ஆள் நான் தான். :rolleyes:

ஜீவாத் தம்பி இந்தியாவிற்கு போய் வந்த பிறகு பேச்சு,எழுத்து எல்லாம் ஒரு மார்க்கமாகவே இருக்கிறது :unsure:

ரதிக்கு எப்டி இப்டி எல்லாம் ஐடியா வருது?

என்னோட கமெண்ட் சொல்லணுமே....

கல்யாணம் பண்ண கண்டிப்பா வயசு தேவை!

மத்தும்படி...வயசு குறைந்த பொண்ணை ,, கட்டிக்குற ஆணோ......

இல்ல............ வயசு கூடின ஆணை கட்டிக்குற பொண்ணோ.........

இல்ல ரொம்ப தூரம் தள்ளீ நிக்குறவனுகளுக்கோ.......

இவங்க பின்னால ஏதோ ஒரு கதை இருக்கும்!

பொருளாதார நிலமை,,, ஆண்மை/பெண்மை ....குறைபாடு...

குடும்பம்.... காதல் தோல்வின்னு கப்ஸா...அப்பிடீன்னு!

பாதிக்கப்பட்ட ஒரு ஜீவன் யாரையும் மரி பண்ண.. வயசுபத்தி கவலை படாம இருக்கலாம்...

ஆனா....... Future ல

வயசுபோனவங்களுக்கு வாழ்க்கைப்பட்டா... எப்பவுமே சந்தேகம்,, திருப்தியின்மைனு...

ஒரே களேபரம்தான் ஆகும் லைவ்!(இது என்னோட கருத்து மட்டும்தேன்) :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலியின் கருத்து தான் எனதும்,பச்சை குத்தினதும் நான் தான்...சில பேர் வயசு,வித்தியாசம் பாராமல் திருமணம் செய்து உள்ளார்கள் ஆனால் அது எல்லோருக்கும்,எல்லா சூழ்நிலையிலும் பொருந்தாது என்பது தான் என் கருத்தும்...எனக்கு தெரிஞ்சு பத்து வயசு வித்தியாசத்தில் கட்டினவர்களே கஸ்டப்படுகிறார்கள்.

அறிவிலி இத் தலைப்பு சாந்தியக்காவின் கதையை ஒட்டி எழுதப்பட்டது[போரால் பாதிக்கப்பட்ட 24 வயசுப் பெண்ணுக்கு புலம் பெயர் நாட்டில் வாழும் 52 வயதானவர் வாழ்க்கை கொடுக்கப் போகிறராம் என சுகன் எழுதி இருந்தார்.] அதைப் பார்த்த பின்பே இப்படி ஒரு தலைப்பை தொடங்கினேன்

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க பின்னால ஏதோ ஒரு கதை இருக்கும்!

பொருளாதார நிலமை,,, ஆண்மை/பெண்மை ....குறைபாடு...

குடும்பம்.... காதல் தோல்வின்னு கப்ஸா...அப்பிடீன்னு!

இவற்றைத்தாண்டி மனசு எண்ட ஒன்றால இணைஞ்சவங்களும் இருக்காங்க...

நான் 3வயது மூப்பானவரைத்தான் கட்டினேன், இன்னும் ஒரு பிரச்சினையுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட ஒரு ஜீவன் யாரையும் மரி பண்ண.. வயசுபத்தி கவலை படாம இருக்கலாம்...

ஆனா....... Future ல

வயசுபோனவங்களுக்கு வாழ்க்கைப்பட்டா... எப்பவுமே சந்தேகம்,, திருப்தியின்மைனு...

ஒரே களேபரம்தான் ஆகும் லைவ்!(இது என்னோட கருத்து மட்டும்தேன்) :)

நீஙகள் சொல்வது பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்க்காக..அல்லது வேறு ஏதேனும் பொருளாதார எதிர்பார்ப்புடன் கட்டியவர்களுக்குப் பொருந்தலாம்..ஆனால் அவர்கள் கூட திருமணத்தின் பின் ஒருவரைஒருவர் புரிந்துகொண்டு வாழ்க்கையை பழகினால் நிம்மதியான வாழ்வு தொடரலாம்..இவை எதுவுமின்றி பரஸ்பர புரிந்துணர்வுடன் பழகியவர்கள் சேர்ந்து வாழும்போது இவை எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை..புரிந்துணர்வு இல்லாதவர்களுக்கு வயதானால் என்ன வயது இருந்தால் என்ன சந்தேகம்,பிரச்சினைகள் எப்பவும் வரலாம்,எப்படியும் வரலாம்..எத்தனை வயதுப் பொருத்தம் பாத்துக்கட்டின கலியாணங்கள் பாதியிலையே பிச்சுக்கிட்டு கோட்டிற்க்கு வருகின்றன..அதே போல மனமொத்து நடக்கும் வயது வித்தியாசமான பல திருமணத்தம்பதிகள் கடைசிவரை இனிமையாக நிறைவாக வாழ்கிறார்கள்..எனவே இவற்றுக்கு எல்லாம் தடையாக இருப்பது மனமும் சமூகமுமே அன்றி வேறொன்றுமில்லை..மாற்றங்கள் மனதிலேயே அன்றி வயதில் அல்ல..சிந்தனைகள்தான் வாழ்க்கையை தீர்மானிக்கவேண்டும்..வயதுகள் அல்ல..எண்ணங்கள்,சிந்தனைகள்,எதிர்பார்ப்புக்கள்தான் பொருந்தவேண்டும்..வயதுகள் அல்ல..தங்கள் எதிர்பார்ப்புகளுக்குள் வயதுகளை எதிர்பார்ப்பவர்கள் அப்படிப் பாத்துக்கட்டலாம்..இவை தனிப்பட மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுகின்றன..ஆனால் //வயசுபோனவங்களுக்கு வாழ்க்கைப்பட்டா... எப்பவுமே சந்தேகம்,, திருப்தியின்மைனு...

ஒரே களேபரம்தான் ஆகும் லைவ்! //அப்படின்னு சொல்வது தவறான ஒருகருத்து..இதில் இருக்கிற எப்பவுமே எண்ட வார்த்தை தவறானது..எப்பவாவது யாராவது சிலருக்கு நடந்திருக்கலாம்..அதைவைத்து ஒட்டு மொத்த திருமணங்களையும் அளவிடுவது எவ்வளவு தவறான ஒரு பார்வை..இங்கைதான் எங்கட சமூகம் முன்னேறமாட்டேன் இந்த பர்வையை மாத்திக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறது..ஒட்டுமொத்த வயது வேறுபாடான திருமணங்களையும் ஒரே தராசில் அளவிடும் இந்த இடத்தில் எங்கட சமூகத்தின்ர பிற்போக்குத்தனம் வெளிச்சமாகத்தெரிகிறது..

Edited by சுபேஸ்

இங்கே ஒரு விடையத்தை மறந்து விடுகின்றீர்கள் சுபேஸ் . மனமாற்றத்திற்கு தடையாக இருப்பது சமூகம் என்கின்றீர்கள் . மேலும் , திருமண வாழ்கையை வயது தீர்மானிக்காது , சிந்தனைகள் தான் தீர்மானிக்கவேண்டும் என்கின்றீர்கள் . ஒருவாதத்திற்கு வைப்போம் , ஒரு பெண் தனது வயதைவிட 25 வயது கூடிய ஆணுடன் திருமண உறவை வைத்து , சிறிது காலத்தின்பின்பு இயற்கை மரணமாகும் பொழுது , இந்தப் பெண்ணுக்கு இந்தசமூகம் உளவியல்ரீதிலான பாதுகாப்பை வழங்கத்தயாராக இருக்கின்றதா ??? ஆனால் , இதே சமூகம் ஒரு ஆண் அந்தப் பெண்ணின் இடத்தில் வரும்பொழுது , மறுமணம் என்றபோர்வையில் உளவியல்பாதுகாப்பை உடனடியாகவே அங்கீகாரம் செய்கின்றது . ரதியினுடைய கேள்வியும் இதனூடாகவே ஊடறுத்துப்பாய்கின்றது . எமக்காகச் சமராடிய பெண்போராளிகளுக்கு வாழ்வு கொடுப்பதிலேயே பலமுரண்களை கொண்டிருக்கின்ற எமது சிங்கங்கள் , எப்படி ரதி அக்காவின் கேள்வியை இலகுவாக எடுப்பார்கள் ?என்னைக் கேட்டால் திருமண உறவில் ஆண்செய்கின்ற அதே நிலையைப் பெண் செய்யும் பொழுதும் இலகுவாக இந்த சமூகம் எப்போது எடுக்கின்றதோ , அப்போதுதான் ரதியின் கேள்வியும் சாத்தியமாகும் !!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

காதலித்துச் செய்யும் திருமணங்கள் எப்படியும் இருக்கும். அது அவர்களின் மனப் பொருத்தத்தைப் பொறுத்தது.

பேசிச் செய்யும் திருமணங்களில் வயசு , உயரங்கள் போன்றவற்றைப் பார்க்கத்தான் வேண்டும். அப்பத்தான் அந்தத் தம்பதிகள் சோடியாக வெளியிலே போய் வரும் போது பார்க்க அழகாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தனது வயதைவிட 25 வயது கூடிய ஆணுடன் திருமண உறவை வைத்து , சிறிது காலத்தின்பின்பு இயற்கை மரணமாகும் பொழுது , இந்தப் பெண்ணுக்கு இந்தசமூகம் உளவியல்ரீதிலான பாதுகாப்பை வழங்கத்தயாராக இருக்கின்றதா ???

அதுதான் மேல சொல்லிட்டனே..சமூகமே பிற்போக்காம்..பிறகேப்படி அந்தச் சமூகத்திடம் இருந்து ஆதரவு கிடைக்கப்போகிறது..?சமூகத்தின் பார்வையில் மாற்றங்கள் தேவை..அந்த மாற்றங்களை உருவாக்குபவர்கள் நாங்களாக இருக்க வேண்டும்..பெண்கள் சமூகத்தில் தங்கியிருக்கத்தேவையில்லாத நிலையை அவர்களே உருவாக்கவேண்டும்...சமூகத்தின் தங்கள் மேலான பார்வையில் மாற்றம்களை உருவாக்குபவர்கள் பெண்களாக இருக்கவேண்டும்..

என்னைக் கேட்டால் திருமண உறவில் ஆண்செய்கின்ற அதே நிலையைப் பெண் செய்யும் பொழுதும் இலகுவாக இந்த சமூகம் எப்போது எடுக்கின்றதோ , அப்போதுதான் ரதியின் கேள்வியும் சாத்தியமாகும் !!!!!!!!

இந்த சமுதாயம் பெண்கள் தங்களை விட‌ ஒர்,இரு வயசு குறைந்த ஆண்களை திருமணம் செய்ய அனுமதிக்குதோ,இல்லையோ என்பதற்கப்பால் பெண்களால் அப்படித் திருமணம் செய்ய முடியுமா என்பது தான் கேள்வி?...தங்களை விட‌ ஓர்,இரு வயசு குறைந்த ஆண்களையே திருமணம் செய்ய முடியாத பெண்களால் எப்படி தன்னிலும் பத்து,இருபது வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்ய முடியும்?

இதுதான் ரதியின் கேள்வி..ஆம் என்பதுதான் என் கருத்து...சமூகம் எதையாவது அங்கீகரிக்கும் அப்புறம் நங்கள் செய்வம் எண்டிருந்தீர்களானால் உங்கள் பேரனுக்குத்தான் அது சிலவேளைகளில் சாத்தியமாகலாம்...புரட்ச்சிகள் எங்களிடமிருந்து ஆரம்பிக்கவேண்டும்...விருப்பமானவர்கள் செய்யுங்கள்..அதில் எந்தத்தவறுமே இல்லை..இந்த முட்டாள் சமூகத்தை பாத்துக்கொண்டிருந்து உங்கள் விருப்பங்களை அரை அவியலாக வெந்து போகவிடாதீர்கள்..விரும்பிய வாழ்க்கையை வாழ்வது உங்களுடைய தெரிவாக இருக்கவேண்டும்..விரும்பியவர்கள் மாறும்பொழுது மாற்றம் தானாகவே சமூகத்தில் மெல்லமெல்ல நடக்கத்தொடங்கும்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆரோக்கியமான விவாதம் என்றாலும்

இங்கு ஒரு விடயத்தை முதலில் விளக்கணும்

நீங்கள் திருமணம் என்பதை எதுவாக வரைவிலக்கணம் செய்கிறீர்கள்?

அன்பை பகிர்ந்துக்க

இருவரும் சேர்ந்து ஒருவருக்கு துணையாக மற்றவர் வாழ

உடல் பசியைப்போக்கிக்க....

என்றால் வயது பார்க்க தேவையில்லை.

ஆனால்

நீண்டநாள் ஒன்றாக வாழ

பிள்ளை பெத்துக்க

பெத்துக்கும் பிள்ளைகளுக்கு நீண்டநாள் உறுதுணையாக இருக்க

ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க.....

என்றால் வயது முக்கியம்

வயது பார்க்கணும்

எம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் என்னும் கருத்தை இங்கு சிலர் கொண்டிருக்கினம். அதையும் ஆராயலாமே?

படித்த நெடுக்கு போன்றவர்களும் இதை ஆராயாமல் எழுதுவது வேதனை தருகிறது.

அடுத்த சந்ததியை நினைக்க பயமாக இருக்கிறது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அன்பை பகிர்ந்துக்க

இருவரும் சேர்ந்து ஒருவருக்கு துணையாக மற்றவர் வாழ

உடல் பசியைப்போக்கிக்க....

இது இல்லாமல்

நீண்டநாள் ஒன்றாக வாழ

பிள்ளை பெத்துக்க

பெத்துக்கும் பிள்ளைகளுக்கு நீண்டநாள் உறுதுணையாக இருக்க

ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க.....

இது நடக்காது.. :icon_idea:

இது இல்லாமல்

இது நடக்காது.. :icon_idea:

அப்பிடி போடு அரிவாளை :):) .

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூக அமைப்பில், உள்ள மிகவும் முக்கியமான குறைபாடு, எங்கள் பார்வை!

எங்கள் குழந்தைகளை, புறக் காரணிகளின் பாதிப்புக்களிளிருந்து பாதுகாக்கவே எப்போதும் முனைகின்றோம்!

அவர்களைப் புறக் காரணிகளுடன் போராடுவதற்கு நாம் எப்போதும், அவர்களை அனுமதிப்பதில்லை!

அவர்களது திருமணங்களில் கூடப், புறக்காரணிகளை நாங்கள் கட்டுப் படுத்த முயல்கின்றோம்!

மருமகன் ஏதாவது கதைத்தால், மாமன்காரன் கொடுக்குக் கட்டுகின்றார். இதுவே புறக்காரணம் என்று நான் குறிப்பிடுவது ஆகும்!

இது எமது வருங்காலத் தலைமுறை, சிப்பிக்குள் வளரும் முத்துப் போல வளர வைக்கின்றது!

சிப்பியின் காலம் முடிந்து போகும் போது , முத்துக்கள் சிதறிப்போகின்றன!

வெளிநாடுகளின் நடக்கும், இளைய தலைமுறைகளின் தற்கொலைகளில் இருந்தும், நாம் பாடங்கள் படிப்பதில்லை!

ஒரு ஆரோக்கியமான விவாதம் என்றாலும்

இங்கு ஒரு விடயத்தை முதலில் விளக்கணும்

நீங்கள் திருமணம் என்பதை எதுவாக வரைவிலக்கணம் செய்கிறீர்கள்?

அன்பை பகிர்ந்துக்க

இருவரும் சேர்ந்து ஒருவருக்கு துணையாக மற்றவர் வாழ

உடல் பசியைப்போக்கிக்க....

என்றால் வயது பார்க்க தேவையில்லை.

ஆனால்

நீண்டநாள் ஒன்றாக வாழ

பிள்ளை பெத்துக்க

பெத்துக்கும் பிள்ளைகளுக்கு நீண்டநாள் உறுதுணையாக இருக்க

ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க.....

என்றால் வயது முக்கியம்

வயது பார்க்கணும்

எம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் என்னும் கருத்தை இங்கு சிலர் கொண்டிருக்கினம். அதையும் ஆராயலாமே?

படித்த நெடுக்கு போன்றவர்களும் இதை ஆராயாமல் எழுதுவது வேதனை தருகிறது.

அடுத்த சந்ததியை நினைக்க பயமாக இருக்கிறது.

முன்னோர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று யார் சொன்னார்கள் விசுகர் ? சொல்லப்போனால் , முன்னோர்கள் விதைத்த நல்ல விதைகளையும் , கெட்ட விதைகளையும் ஒரேசேர அறுவடை செய்கின்றோம் . இதில் கெட்ட விதைகளுக்கு மாற்றாக வீரியம் உள்ள புது விதைகளைப் பதியம் போடுவதில் என்ன பிழை இருக்கின்றது ?உங்களுக்கு புத்தி சொல்விற்கு எதுவித தகுதி தராதரமும் என்னிடம் கிடையாது . பழையன கழிந்து புதியன வரும் பொழுது பழையன எதிர்கவே செய்யும் . காரணம் , அது அவர்களது இருப்பு சம்பந்தமானது . மாற்றம் என்பதே மாற்றங்களுக்கு உட்படாதது :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் மிகுந்த எங்கள் சமுதாயத்தில் திருமணம்

என்று வரும்போது யதார்த்தமான சூழ் நிலையில்

ஆணை விடப் பெண்ணுக்கு வயது குறைவாக இருத்தல்

சாலவும் சிறந்தது.

50 வயதைத் தாண்டிய ஆணுக்கு 30ஐத் தாண்டாத பெண்

என்பதெல்லாம் பேச்சுக்கு வேண்டுமென்றால் நன்றாக இருக்கும்.

நீண்டகால வாழ்க்கைக்கு உகந்ததல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

படித்த நெடுக்கு போன்றவர்களும் இதை ஆராயாமல் எழுதுவது வேதனை தருகிறது.

அடுத்த சந்ததியை நினைக்க பயமாக இருக்கிறது.

என்னிடம் கேட்டீங்கன்னா.. மனிதன் ஒரு biological machine என்பதைத் தவிர சொல்ல ஏதும் இல்லை. அந்த இயந்திரத்தை கையாள அறிவியலுக்கு நம்ம சமூக பட்டறிவை விட அதிக அறிவு உண்டு.

பிள்ளை பெத்துக்க.. ஆணும் பெண்ணும் சேரனும் என்பது அந்தக் காலம். இப்ப அறிவியல் அதை மிக இலகுவாக ஆய்வு சாலையில் செய்கிறது.

பிள்ளை பெறும் இயந்திரங்களாக பெண்களை நோக்கும் சமூகத்தில் வயசு.. குட்டை.. நெட்டை எல்லாம் பார்ப்பினம்.

என்னைப் பொறுத்தவரை தமிழர்களிடையே திருமணம் செய்வதே வேஸ்டு..! அவர்களுக்கு படிப்பறிவையும் சரியாக விளங்கிக் கொள்ளும் தன்மை இல்ல.. பட்டறிவையும் சரியாக பாவிக்கும் தன்மை இல்ல.

இதில கனபேர் வந்து எழுதினம்... வயதான ஆணை திருமணம் செய்யும் பெண்கள் சந்தோசமாக இருக்க மாட்டினம் என்று. அப்ப ஏன் சம வயதுள்ள ஆண்களை திருமணம் அல்லது காதலிக்கும் பெண்கள் மண முறிவை சந்திச்சு நிக்கினம். அதுக்கு எவருக்கும் விளக்கம் சொல்ல வழியில்ல..!

உங்கள் பலரின் கருத்துக்கள் வெறும் சமூகக் கூப்பாட்டுத் தளத்தில் நின்று எழுகிறதே தவிர.. கேள்வி ஞான அடிப்படைகளில் இருந்து எழுகிறதே தவிர அறிவியல் சார்ந்து அல்ல. 74 வயது பாட்டி குழந்தை பெற முடிகிற காலம் இது. தாயே இல்லாமல் குழந்தை வளரக் கூடிய சூழல் இன்று. எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் பெற்றோர் இருந்தும் அனாதைகளாக விடப்பட்டு வாழ்கின்றனர். எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் பெரியவர்களின் தவறால் கருவில் அழிக்கப்படுகின்றன. ஆனால் இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாத ஒரு சமூகம்.. ஒரு பெண் வயதான ஒரு ஆணை புரிந்துணர்வோடு மணம் முடிப்பதில்.. சிக்கல் இருப்பதாக நினைக்கிறார்கள்.. காட்ட முனைகின்றனர்.

அதற்கு பாலியல் சார்ந்த பிரச்சனை இருக்கும் என்பதே இங்கு பலரும் வெளிப்படையாக சொல்ல முடியாது முக்கித் திணறி முன் வைக்கும் காரணம். திருமணம் என்பது வெறும் பாலியல் சார்ந்தது என்றால்... இன்றைய நவீன உலகில்.. அதை செய்வதே வேஸ்டு..! அதை முதலில் புரிஞ்சுக்குங்கோ.

இன்று நவீன முறையில் தேர்வு செய்து குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது. நெட்டைக்கு நெட்டை.. வெள்ளைக்கு வெள்ளை.. என்று முட்டைகளும்.. விந்துகளும் வங்கிகளில் கிடைக்கின்றன. பணத்தைக் கொடுத்து பரம்பரை இயல்பை வாங்கக் கூடிய நிலை இன்று. அவற்றை ஆய்வுசாலையில் கருக்கட்ட வைத்து... வாடகைக் கருப்பையில் பதித்து வளர்க்கும் முறை இருக்கிறது. இங்கு குழந்தை பெற திருமணம் என்ற நிகழ்வே அவசியமில்லை.

ஒரு விந்தும் ஒரு முட்டையும் போதும்.. ஒரு குழந்தையை உருவாக்க என்ற அளவிற்கு அறிவியல் வந்து நிற்கிறது. 50 வயதில் இயற்கையாக நிற்கக் கூடிய மாதவிடாய் வட்டத்தை பெண்களில் 80 யும் தாண்டி நீடிக்க வைக்கும் ஓமோன் சிகிச்சை முறைகள் உள்ளன. 80 வயதிலும் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் உள்ளன. அதேபோல் ஆண்களிலும்.

20 வயதில் பாலுணர்வு குறைந்த பெண்ணும் உள்ளாள். குழந்தை பெற்றுக் கொள்ள அஞ்சும் பெண்ணும் உள்ளாள். 20 வயதில்.. உடற் குறைபாடோடு உள்ள பெண்ணும் உள்ளாள்.. 50 வயதில் இயற்கையாகவே கருத்தரிக்கக் கூடிய பெண்களும் உளர். எல்லாவற்றிற்கும் சாத்தியப்பாடு எல்லா இடத்திலும் உண்டு. இதுதான் திறம் என்று சொல்ல இயலாது. குறைந்த வயதில் திருமணம் செய்யும் பெண்களின் குழந்தைகளிலும் குறைபாடுள்ள குழந்தைகள் உண்டு.. கூடிய வயதில் திருமணம் செய்யும் பெண்களிடத்தில் நல்ல வளமான குழந்தைகளும் உண்டு. இன்று குறைபாடுள்ள குழந்தைகளை முளைய நிலையிலேயே கண்டறிந்து.. பெற்றோர் விருப்புக்கு ஏற்ப.. கலைக்க.. வளர்க்க வகை செய்யும் மருத்துவ உபகரணங்கள் உள்ளன.

பெற்றோர் விருப்பின்றி அல்லது இயலாத பெற்றோர்களிற்கு பிறக்கும் குழந்தைகளை அரசுகள் பொறுப்பெடுத்து வளர்க்கும் நிலை இன்று பல நாடுகளில் இருக்கிறது. இந்த நிலையில்.. விசுகு அண்ணாவின் இந்தக் குற்றச்சாட்டு சரியானதல்ல. இங்கிலாந்தில் தமிழர்கள் சிலரின் பிள்ளைகளை அரசு பெறுப்பெடுத்துச் சென்று சிறுவர் காப்பகத்தில் வைத்து வளர்க்கும் நிலையை கண்டிருக்கிறேன். அந்தக் குழந்தைகளோடு பேசி இருக்கிறேன். அந்தக் குழந்தைகள் வைக்கும் முதன்மைக் குற்றச்சாட்டு அப்பா அம்மா வீட்டில் சண்டை. தங்களை கவனிப்பதில்லை என்பதே. மற்றையது.. ஒரே படி படி என்று அழுத்தம் கொடுப்பதாகவும்.. படிக்க என்று சொல்லி விளையாட்டு உபகரணங்களை வாங்கித் தந்துவிட்டு அவற்றை பறித்து வைப்பதும் அடித்துத் துன்புறுத்துவதும் என்று அந்தக் குழந்தைகள் காரணம் சொல்கின்றன. இன்னும் சில பெண் குழந்தைகள்.. பெற்றோரின் கவனிப்பில்லாமல்.. விபச்சாரிகளாக தமிழர்களாலே நடத்தப்படும் கொடுமை நடந்துள்ளது.

இப்படியான ஒரு சமூகத்தில் நின்று கொண்டு.. இங்கு அறிவியல் சார்ந்து கதைக்க முடியாது. ஏன்னா அதை ஏற்கக் கூடிய பக்குவப்பட்ட மனிதர்கள் இங்கில்லை. இவர்கள் அனைவரும்.. ஒரு குமரியை கட்டித்தான் பிள்ளை பெத்துக்குவம் என்கின்ற பேர்வழிகள்..! அதுக்காகவே கலியாணம் முடிக்கிற ஆக்கள்..! அடுத்தவன் காதலி.. பொண்டாட்டி இளமையா இருந்திட்டா அதையும் பறிச்சுக் கொண்டு போய் கட்டி குடும்பம் நடத்துவார்களே அன்றி.. அறிவியலை நம்பமாட்டாத மிருகங்களை விட மோசமான பாலியல் வெறி பிடித்த நினைவில் உள்ள கூட்டத்தோடு நாம்.. அறிவியல் பற்றி கதைப்பது பிரயோசனம் அற்றது.

திருமணம் என்பது குழந்தை பெற்றுக்கிறதிற்கான ஒரு சடங்கு என்று நினைக்கும் ஆண்களையும் பெண்களையும் வைச்சுக் கொண்டு.. இல்ல அது ஆணும் பெண்ணும் கூடி சமூக வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தம் என்று சொன்னால் அதை ஏற்க எவரும் முன் வரமாட்டார்கள். ஆனால் அதையே விவாகரத்து என்று போய் நீதிமன்றில் நின்று வாங்கும் போது.. மெய்சிலிர்த்துப் போவார்கள்.

இப்படியான உணர்வுள்ள ஜென்மங்கள் மத்தியில் அறிவியல் அரைவேக்காடாகவே இருக்கும். அதைப் பகிர்ந்து கொள்வதிலும்.. பேசாமல் நித்திரை செய்தால் மூளைக்காவது ஓய்வு கிடைக்கும். :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.