Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆணும்,பெண்ணும் திருமணம் செய்யும் போது வயதை கவனத்தில் எடுக்க வேண்டுமா?

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவு ஆரோக்கியமாக போய் கொண்டு இருக்கிறது...நான் எதிர் பார்க்காத வகையில் நடுத்தர‌ வயதை சேர்ந்த பலர் தங்கள் கருத்தை தைரியமாக சொல்லியுள்ளார்கள்...என்ன ஒரு கவலை என்டால் இது வரை ஒரு பெண் கூட‌ தங்கள் கருத்தை இந்தப் பதிவில் வந்து எழுதவில்லை

Edited by ரதி

  • Replies 56
  • Views 29k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்கம் மிகுந்த எங்கள் சமுதாயத்தில் திருமணம்

என்று வரும்போது யதார்த்தமான சூழ் நிலையில்

ஆணை விடப் பெண்ணுக்கு வயது குறைவாக இருத்தல்

சாலவும் சிறந்தது.

50 வயதைத் தாண்டிய ஆணுக்கு 30ஐத் தாண்டாத பெண்

என்பதெல்லாம் பேச்சுக்கு வேண்டுமென்றால் நன்றாக இருக்கும்.

நீண்டகால வாழ்க்கைக்கு உகந்ததல்ல.

வாத்தியார் நீங்கள் கொஞ்சம் பக்குவமாக கருத்துப் பகிரக் கூடியவர் என்ற வகையில் உங்களிடம் நான் வினவும் வினாவுக்கு நீங்கள் விளங்கிக் கொண்டுள்ள மட்டில் ஒளிவுமறைவின்றி பதில் தாங்கோ. அது இங்கு பலரின் உள்ளக் கிடக்கைகளுக்கு பதில் தர வசதி செய்யும்.

50 வயதைத் தாண்டிய ஆண் 30 ஐ தாண்டாத பெண்ணை திருமணம் முடிப்பதால்.. நீண்ட கால வாழ்க்கைக்கு அது எந்தெந்த வகையில் உதவாது என்பதை பட்டியல் செய்வீர்களா..???!

500,000 ஆண்டு கால மனித இன வரலாற்றில் திருமணம் என்ற சடங்குமுறை வாழ்வியல் நாகரிகம் தோன்றி ஒரு 1000 வருடங்கள் போய்விட்டதாக கருதிக் கொள்வோமே..??! இந்தத் திருமணம் என்ற சடங்கின்றி மனிதன் 499000 ஆண்டுகள் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்து வந்துள்ளான். அதிலும் இந்த வயசுக் கணக்கு பார்த்து திருமணம் செய்வது வந்து எவ்வளவு காலம்.. ஒரு 100 ஆண்டுகள்..???!

இந்த 100 ஆண்டுகளில்.. உந்த வயசுக் கணக்கு பார்த்து திருமணம் செய்து எத்தனை குழந்தைகள்.. குறைபாடோடு பிறந்துள்ளன.. எத்தனை திருமணங்கள் முறிந்து போயுள்ளன. அதுவும் இன்றைய நவீன மருத்துவ உலகில்.. அறிவியல் உலகில்.. சட்டப்பாதுகாப்புள்ள உலகில் இவை நடந்துள்ளன.

எங்க பாட்டிட காலத்துக்கு முந்திய தலைமுறையில் கூட பால்ய திருமணம் கூட இருந்தது. காந்தி அடிகள் பால்ய விவாகம் செய்த ஒருவர். இன்றும் இந்தியாவில் மாமனை அத்தை மகளுக்கு கட்டிக் கொடுக்கும் வழக்கம் உள்ளது. அங்கு வயசு வித்தியாசமா பார்க்கினம்.. பரம்பரை நோய்கள் பற்றிக் கூட பார்ப்பதில்லை.

இலங்கைத் தமிழ் பெண்களைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகளில் அவர்கள் "வெளிநாட்டு மாப்பிள்ளை" என்ற ஒரே காரணத்திற்காக.. போதிய கல்வி அறிவற்ற.. வெளிநாடுகளில் புலமைத்துவம் அவசியமற்ற துறைகளில் கூலி வேலை செய்பவர்களை திருமணம் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள.. பல இடைவெளிகளை சகித்து வாழ்கின்றனர். ஆனால் இதையே 30 ஆண்டுகளுக்கு முன்னாள்.. போய் பாருங்கள்.. கவுன்மேந்து உத்தியோகத்தில் மாப்பிள்ளை பிடித்தார்கள். எங்கள் வரலாற்றில்.. சமூகத்தில்.. திருமணத்தை கிட்டத்தட்ட ஒரு விபச்சாரமாகவே நடத்துகிறார்கள். எமது பெண்கள் விசாவிற்காக எவரோடும்.. உறவு கொள்ள தயாராகனவர்களாக வளர்க்கப்பட்டுள்ளனர். இப்படியான கேடு கெட்ட ஒரு சமூகம்.. வயசை காட்டி.. மற்றவர்களை வசைபாடுவது வெட்கத்துக்கிடமானது.

அதேபோல்.. வெளிநாடுகளிற்கு வந்தவர்களின் வாரிசுகள்.. அவர்கள் இன்னொரு தளத்திற்கு இப்போ நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஒரு மாணவனை கேட்டேன். ஏன் நீ இந்த யுனிக்கு படிக்க வந்தனி. உன்னுடைய தராதரத்திற்கு ஒக்ஸ்பேர்ட்.. கேம்பிரிஷ் கிடைக்குமே என்று. அதற்கு அவன் சொன்ன பதில்.. அங்க தமிழ் பெட்டையள் இல்லை. இங்கு தான் அதிகம் என்று. ஆக.. மீண்டும்.. தாயகத்தில் எப்படி பெட்டை சிந்தனை கலியாணக் கனவை ஊட்டி மேற்படிப்பு படிக்க வைச்சினமோ.. அதையே வெளிநாடுகளில் பிறந்ததுகளிடத்திலும் திணித்து வருகின்றனர். அதனால் தான் எவ்வளவோ வசதிகள் இருந்தும் தமிழ் மாணவர்களில் ஒரு சிறிய சதவீதத்தினரே கல்வியில் பிரகாசிக்கின்றனர். மற்றவர்கள் இடைநிலை.. கடைநிலையில் நிற்கின்றனர். ஆனால் தாயகத்தில் இருந்து கேம்பிரிஷ்சுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் சிங்களவர்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்களில் அநேகர் திருமணத்திற்கு அப்பால் கல்வியை ஒரு வாழ்க்கையின் அம்சமாக நோக்குவதை காண முடிகிறது.

ஏனெனில் மேற்படிப்பு கல்வி அறிவுள்ள ஒரு சமூகத்தில் இருக்கும் விழிப்புணர்வு... இடைநிலைக் கல்வி அறிவை கொண்ட சமூகத்திடம் இருக்க வாய்ப்பில்லை. எம்மவர்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பெற்றோர்களில் அநேகர் இடைநிலைக் கல்வி அறிவை தாயகத்தில் அல்லது வெளிநாட்டில் பெற்றுவிட்டு குடும்பம் நடத்த வந்தவர்களாகவே உள்ளனர். கல்வி அறிவுள்ள ஒரு சமூகத்திடம் உள்ள அந்த விழிப்புணர்வு இன்று எம்மத்தியில் அருகிப் போய் வெறும் உணர்ச்சிப் பிளம்புகளாக எமது சமூகம் விளங்க இதுவும் ஒரு காரணம்.

இந்த இடத்தில்.. இவை குறித்தும் நாம் பேச வேண்டியவர்களாக இருக்கிறோம்..??! நவீன கல்வி அறிவென்பது.. ஒரு சமூகத்தில் வாழ்வியலை தீர்மானிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நீங்கள் கொஞ்சம் பக்குவமாக கருத்துப் பகிரக் கூடியவர் என்ற வகையில் உங்களிடம் நான் வினவும் வினாவுக்கு நீங்கள் விளங்கிக் கொண்டுள்ள மட்டில் ஒளிவுமறைவின்றி பதில் தாங்கோ. அது இங்கு பலரின் உள்ளக் கிடக்கைகளுக்கு பதில் தர வசதி செய்யும்.

50 வயதைத் தாண்டிய ஆண் 30 ஐ தாண்டாத பெண்ணை திருமணம் முடிப்பதால்.. நீண்ட கால வாழ்க்கைக்கு அது எந்தெந்த வகையில் உதவாது என்பதை பட்டியல் செய்வீர்களா..???!

500,000 ஆண்டு கால மனித இன வரலாற்றில் திருமணம் என்ற சடங்குமுறை வாழ்வியல் நாகரிகம் தோன்றி ஒரு 1000 வருடங்கள் போய்விட்டதாக கருதிக் கொள்வோமே..??! இந்தத் திருமணம் என்ற சடங்கின்றி மனிதன் 499000 ஆண்டுகள் வாழ்ந்து இனப்பெருக்கம் செய்து வந்துள்ளான். அதிலும் இந்த வயசுக் கணக்கு பார்த்து திருமணம் செய்வது வந்து எவ்வளவு காலம்.. ஒரு 100 ஆண்டுகள்..???!

இந்த 100 ஆண்டுகளில்.. உந்த வயசுக் கணக்கு பார்த்து திருமணம் செய்து எத்தனை குழந்தைகள்.. குறைபாடோடு பிறந்துள்ளன.. எத்தனை திருமணங்கள் முறிந்து போயுள்ளன. அதுவும் இன்றைய நவீன மருத்துவ உலகில்.. அறிவியல் உலகில்.. சட்டப்பாதுகாப்புள்ள உலகில் இவை நடந்துள்ளன.

பெண்ணின் பாதுகாப்பு குடும்ப வருமானம் தாம்பத்திய உறவு குடும்ப வாரிசுகூட்டுக் குடும்பம்முப்பதுக்குள் வயதிருக்கும் பெண்ணிற்கு ஐம்பதிற்கு மேற்பட்ட வயதையுடைய ஒரு ஆணால் எத்தனை காலங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.?குடும்ப வருமானத்தை இவரால் எவ்வளவு காலங்கள் சுமக்க முடியும்.?ஐம்பதைத் தாண்டியவர்களில் எத்தனைபேருக்கு 30 ஐத் தாண்டாத பெண்களுக்கு தாம்பத்திய உறவில் சந்தோசத்தை அளிக்க முடியும்?அவர்களில் எத்தனைபேருக்கு குழந்தை பெறும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன?மனைவியின் தாய் தந்தை சகோதரர்கள் என்று உறவுகள் இருந்தால் இவரால் அவர்களுக்கு உதவி என்று வரும் போது (அதாவது பெற்றோர் நோய் நோடியால் தாக்கப்படும் போது வரும் செலவுகள்சகோதரியின் திருமணச் செலவுகள் தம்பியின் படிப்புச் செலவுகள் ) இவரால் அவர்களுக்கும் சேர்த்து அந்த வயதிலும் உழைக்க முடியுமா ? இப்படியான பிரச்சனைகள் வராமல் அவர்களின் வாழ்க்கை இருக்குமா?சில பிரச்சனைகளுக்கு செயற்கையான மருத்துவ முறையிலான தீர்வுகள் இருக்கலாம் .இயற்கையுடன் இயற்கையாகவே வாழத் துடிக்கும் பலருக்கு செயற்கையான உந்தல்களும்ஊக்கங்களும் திருப்தியாக அமையுமா?கூட்டுக் குடும்பமாக வாழப் பழகிய பல மனிதர்கள் மத்தியில் இவர் அன்னியராக இருந்தால் அது குடும்பமே இல்லை என்றாகி விடாதா? ஆய்வுகள் மூலமும் கருத்துக் கணிப்புக்கள் மூலமும் மக்களின் நிலைமையைஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியுமே தவிர அவற்றை வைத்து ஒட்டு மொத்த மனிதர்களினது வாழ்க்கையே இதுதான் என நிர்ணயிப்பது கடினம்.அதேபோல மேலே நான் கூறிய கேட்ட கேள்விகளும் எல்லோருக்கும் பொருந்தும் என்பதும் சரியல்ல.எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு சமுதாயத்தில் நிலவும் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் யதார்த்தமான இயல்பான இயற்கைக்கு மாறாக இல்லாத வாழ்க்கையை வாழத் துடிக்கும் மனிதர்களுக்கு இல்லறம் என்பது திருமணத்தில் ஆரம்பிக்கின்றது.அவர்கள் வாழும் வரை அந்த இல்லறம் நீடிக்க வேண்டுமென்றால் ஆண் பெண் வயது வித்தியாசம் என்பது மிகவும் முக்கியம் :D

நீஙகள் சொல்வது பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வதற்க்காக..அல்லது வேறு ஏதேனும் பொருளாதார எதிர்பார்ப்புடன் கட்டியவர்களுக்குப் பொருந்தலாம்..ஆனால் அவர்கள் கூட திருமணத்தின் பின் ஒருவரைஒருவர் புரிந்துகொண்டு வாழ்க்கையை பழகினால் நிம்மதியான வாழ்வு தொடரலாம்..இவை எதுவுமின்றி பரஸ்பர புரிந்துணர்வுடன் பழகியவர்கள் சேர்ந்து வாழும்போது இவை எல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை..புரிந்துணர்வு இல்லாதவர்களுக்கு வயதானால் என்ன வயது இருந்தால் என்ன சந்தேகம்,பிரச்சினைகள் எப்பவும் வரலாம்,எப்படியும் வரலாம்..எத்தனை வயதுப் பொருத்தம் பாத்துக்கட்டின கலியாணங்கள் பாதியிலையே பிச்சுக்கிட்டு கோட்டிற்க்கு வருகின்றன..அதே போல மனமொத்து நடக்கும் வயது வித்தியாசமான பல திருமணத்தம்பதிகள் கடைசிவரை இனிமையாக நிறைவாக வாழ்கிறார்கள்..எனவே இவற்றுக்கு எல்லாம் தடையாக இருப்பது மனமும் சமூகமுமே அன்றி வேறொன்றுமில்லை..மாற்றங்கள் மனதிலேயே அன்றி வயதில் அல்ல..சிந்தனைகள்தான் வாழ்க்கையை தீர்மானிக்கவேண்டும்..வயதுகள் அல்ல..எண்ணங்கள்,சிந்தனைகள்,எதிர்பார்ப்புக்கள்தான் பொருந்தவேண்டும்..வயதுகள் அல்ல..தங்கள் எதிர்பார்ப்புகளுக்குள் வயதுகளை எதிர்பார்ப்பவர்கள் அப்படிப் பாத்துக்கட்டலாம்..இவை தனிப்பட மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுகின்றன..ஆனால் //வயசுபோனவங்களுக்கு வாழ்க்கைப்பட்டா... எப்பவுமே சந்தேகம்,, திருப்தியின்மைனு...

ஒரே களேபரம்தான் ஆகும் லைவ்! //அப்படின்னு சொல்வது தவறான ஒருகருத்து..இதில் இருக்கிற எப்பவுமே எண்ட வார்த்தை தவறானது..எப்பவாவது யாராவது சிலருக்கு நடந்திருக்கலாம்..அதைவைத்து ஒட்டு மொத்த திருமணங்களையும் அளவிடுவது எவ்வளவு தவறான ஒரு பார்வை..இங்கைதான் எங்கட சமூகம் முன்னேறமாட்டேன் இந்த பர்வையை மாத்திக்க மாட்டேன் என்று முரண்டு பிடிக்கிறது..ஒட்டுமொத்த வயது வேறுபாடான திருமணங்களையும் ஒரே தராசில் அளவிடும் இந்த இடத்தில் எங்கட சமூகத்தின்ர பிற்போக்குத்தனம் வெளிச்சமாகத்தெரிகிறது..

சுபேஸுக்குன்னு ஒரு மரியாதை யாழ்ல இருக்கு,,, அதால,,

நானு ஏதாச்சும் ரூட்(rude) ஆ எழுதபோனா கலவரம் வருமோ? என்னை யாருக்கும் எகைன் புடிக்காதோ?

ஆனாலும் சுபேஸ்....... ஒண்ணு சொல்லி ஆகணுமே...........

காதல் பண்ணுறவங்களுக்கு வயசு முக்கியம் இல்ல....

அரேஞ்ச் மேரேஜ் பண்ணுறவங்களுக்கு ........... வயசு வெரி இம்பார்ட்டண்ட்!

கல்யாணம் எங்கிறது ,, யஸ்ட் படுக்கையை ,, ஷேர் பண்ணிக்குறதா?

வாழ்க்கையையும் !!

வாடா மாப்ள வாழைப்பழ தோப்புல எஙுகுறதா லைவ்??

அதுக்கு பின்னால, அவங்களுக்கு பொறக்குற குழந்தைகளை எவா கவனிப்பா??

சம நிலை இல்லாத வயசுல கல்யாணம் பண்ணி வைக்கப்படுறவங்க...

ஒருவருக்கு முதல் யாராச்சும் செத்துடுவாரே... முதுமையால...

அப்போ... அவங்க துயரத்தை கவனிப்பது யார் சுபேஸ்? :)

அறிவுக் கண்ணா !! எவ்வளவு இடைவெளில கலியாணம் செய்யவேணும் எண்டதை சொல்லேலையே பிறதர் ?? அதுக்குமேல லவ்ஸ்சுக்கு வயசு தேவையில்லை எண்டிறியள் , கொமடி இல்லைத்தானே . ரெண்டின்ர றூட்டும் சந்தோசமான வாழ்கைக்கு தானே அப்புச்சி . எவ்வளவு காலம் லவ்ஸ்சிச்சினம் , கலியாணம் கட்டீச்சினம் எண்டதில்லை மாற்றர் கண்ணா ? குறுகின காலம் எண்டாலும் , எப்படி அந்தவாழ்கையை அணு அணுவாக அனுபவித்தார்கள் எண்டுறதுதான் மாற்றர் மாமு :D:D:D .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

சரி எல்லாருமாகச் சேர்ந்து என்னதான் முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கள்.. :rolleyes:

சுபேஸூக்குதானே பதில் சொன்னேன்........

கோமகனுக்கு என்னாச்சுன்னு தெரியலியே! :unsure:

லவ்ஸ்க்கு வயசு வேணாம்னு நானு சொன்னேனா?

லவ் பண்ணுறவ மனச பொறுத்தது அதெல்லாம்னு சொன்னேன்..! :)

சரி எல்லாருமாகச் சேர்ந்து என்னதான் முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கள்.. :rolleyes:

இப்படிச் சொன்னால் எப்படி ????????? நீங்களும் தெளியப்பண்ணுறது அக்கையாரே :):):) .

சுபேஸூக்குதானே பதில் சொன்னேன்........

கோமகனுக்கு என்னாச்சுன்னு தெரியலியே! :unsure:

லவ்ஸ்க்கு வயசு வேணாம்னு நானு சொன்னேனா?

லவ் பண்ணுறவ மனச பொறுத்தது அதெல்லாம்னு சொன்னேன்..! :)

ஐய்........ டார்லிங் அறிவு தம்பி !!!! நீங்களும் , நாங்களும் குட் பிறெண்ட்ஸ் . நோ பைற் :lol::lol::D .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொன்னால் எப்படி ????????? நீங்களும் தெளியப்பண்ணுறது அக்கையாரே :):):) .

இப்படிக் கேட்டால் எப்படி?

பெரியவர்களாக இருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தானே பெண்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.... மற்றவர்கள் திணிக்கும் முடிவுகளுக்கு தலையாட்டி ஆட்டியே எங்களை மாட்டுப்பெண் ஆக்கிவிட்டார்கள் இப்போது மட்டும் கருத்து சொல்லி என்ன ஆகப்போகிறது? :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நட‌ந்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம் அப்படித்தான் சுபேஸ்,நெடுக்ஸ்சின் எழுத்துக்கள் உள்ளன ஆனால் இப்படித் தான் நடக்கிறது,இது தான் யதார்த்தம் என வாத்தியார்,அறிவினி போன்றோரின் எழுத்துக்கள் உள்ளன...காதலித்து திருமணம் செய்யும் போதோ அல்லது பேசித் திருமணம் செய்யும் போதோ பெண்ணுக்கு ஆணை விட ஒர்,இரு வயசு கூட இருந்தால் பரவாயில்லை என நினைக்கிறேன் ஆனால் அதை விட வயது அதிகமாய் இருந்தால் கட்டுவது நல்லதில்லை காரணம் பெண்களுக்கு ஆண்களை விட முதிர்ச்சியும்,அனுபவமும் கூட என்பதால் அதிக வித்தியாசத்தில் கட்டினால் பாதிப்பு ஏற்படும்.

ஆண்களோ/பெண்களோ திருமண செயும் போது குறைந்த பட்சம் பத்து வயது வித்தியாசத்தில் செய்யலாம் அதிலும் குறைந்த வயதுப் பெண்ணை ஆணும்,அதிலும் வயது கூடியவரை பெண்ணும் கட்டினாலே பிரச்சனை ஏற்படும்...காதலித்து திருமணம் செய்பவர்கள் மாத்திர‌ம் மனசு பொருந்தினால் போதும் மற்றதைப் பற்றி கவலைப்பட‌ மாட்டார்கள் ஆனால் அவர்கள் கூட‌ திருமணத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் திருப்தி படுத்த முடியா விட்டால்[தனிய செக்ஸ்சை மட்டும் சொல்லவில்லை] குடும்பம் பிரிகின்ற அளவிற்கு வழி வகுக்கும்...தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் மற்ற உறவுகளைப்[சகோதர‌,சகோதரிகள்,உற‌வுகள்] பற்றி கவலைப் படாதவர்கள் வயசு வித்தியாச‌ம் பாராமல் திருமணம் செய்வார்கள் என நினைக்கிறேன்.

சகாரா அக்கா கட்டாயம் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அழகு, பணம்.. :rolleyes:

இந்த இரண்டுமோ அல்லது குறைந்தபட்சம் இரண்டில் ஏதாவது ஒன்றோ அதிகமாக வாய்க்கும்போது பெண்களால் தமக்கேற்ற துணையை அமைத்துக்கொள்ள முடியும். :rolleyes:

துரதிர்ஷ்டவசமாக எமது சமுதாய அமைப்பில், குறிப்பாக தாயகத்தில், பெண்கள் தங்களை அழகாக வைத்திருப்பது குறைவு..! :icon_mrgreen: படிப்புக்கான வாய்ப்புகளும் குறைவு..! :(

அப்படியே படித்தும், அழகாகவும் விளங்கினாலும் பல சமயங்களில் சமுதாயம் என்கிற பெயரில் யார் தலையிலாவது கட்டிவிடுவார்கள்..! :o

புலம்பெயர் சமுகத்தில், சமுதாய ஆதிக்கம் குறைந்து வருகிறது. இளைய தலைமுறைப் பெண்கள் ஆதிக்கவலையில் வீழ்வதும், ஐயோ போச்சே என்று அழுவதும் குறைவாக உள்ளது.! :wub:

என்னுடைய இரண்டு சதங்கள்..! (My two cents.. :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸுக்குன்னு ஒரு மரியாதை யாழ்ல இருக்கு,,, அதால,,

நானு ஏதாச்சும் ரூட்(rude) ஆ எழுதபோனா கலவரம் வருமோ? என்னை யாருக்கும் எகைன் புடிக்காதோ?

யாரும் யாரைப் பற்றியும் தனிப்பட்ட விடயங்களை இழுத்துப் பேசாத வரைக்கும் யாழில் யாருக்கிடையிலும் எந்தப் பிரச்சினையும் வரப்போறதில்லை அறிவிலி...எனவே கவலையை விடுங்கள்..இது பொது வெளி..எனவே கருத்துக்களை நாகரீகமாக வைத்துவிட்டு தெருவில் நண்பர்களாக கைகளை வீசிச் செல்வோம்...எங்களுக்குள் மாறுபட்ட சிந்தனைகள் இருக்கலாம்..அவற்றைத்தான் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்..வெறுப்பையும்,பகைமையையும் அல்ல..நாங்கள் ஒரு நாற்பது பேர்தான் உரையாடுகிறோம்..ஆனால் அதை ஒரு நானூறு பேர் பார்க்கிறார்கள்..எங்கள் கருத்துக்களை படித்து சிந்திக்கிறார்கள்..அவர்களைச் சிந்திக்கத் தூண்டுகிறோம்..பிழையானவற்றையும் சரியானவற்றையும் இணங்கண்டு சரியானதை அவர்கள் தெரிந்தடுக்க எங்கட கருத்துக்களும் ஒரு சிறு உதவியாக அமையலாம் அல்லவா..?எனவே தயக்கமின்றி உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள்...

கல்யாணம் எங்கிறது ,, யஸ்ட் படுக்கையை ,, ஷேர் பண்ணிக்குறதா?

வாழ்க்கையையும் !!

கண்டிப்பா...

வாடா மாப்ள வாழைப்பழ தோப்புல எஙுகுறதா லைவ்??

அதுக்கு பின்னால, அவங்களுக்கு பொறக்குற குழந்தைகளை எவா கவனிப்பா??

சம நிலை இல்லாத வயசுல கல்யாணம் பண்ணி வைக்கப்படுறவங்க...

ஒருவருக்கு முதல் யாராச்சும் செத்துடுவாரே... முதுமையால...

அப்போ... அவங்க துயரத்தை கவனிப்பது யார் சுபேஸ்? :)

வயசுப் பொருத்தம் பாத்து மனப்பொருத்தம் பாக்காமல் செய்து வைக்கப்பட்ட எத்தனை குடும்பங்களில் மரணம் சம்பவிக்கிறது...எங்கள் தாயகத்திலையே எத்தனை விதைவைகள் இருக்கிறார்கள்..அவர்களுடைய வாழ்க்கை வண்டி நின்றுபோகாமால் ஏதோ ஒரு விதத்தில் ஓடுகிறதுதானே...மரணம் என்பது மனிதர்களுக்கு விதிக்கப்பட்டது..அதைப்பற்றியே எல்லாவற்றிலும் சிந்திப்பீர்களானால் எதையும் செய்யமுடியது..எதிர்காலத்திற்க்கு என்று சொல்லி எந்தத்திட்டங்களும் இருக்கமுடியாது..எதிர்காலத்தை விடுங்கள்..நாளை என்பதே நிரந்தரமற்றதாகத் தெரியும்..விரும்பியவர்கள் விரும்பிய,தாங்கள் நேசிக்கும் அந்த வயது வித்தியாசமான உறவை செய்யலாம்..நிம்மதியாக வாழலாம்..அது தவறு என நினைக்கும் அல்லது சமூகத்திற்க்குப் பயப்படும் அவர்களின் நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும்....அது தவறு என்று பார்க்கும் சமூகத்தின் பார்வை மாறவேண்டும்..அதே போல் சமூகத்தில் இருக்கும் எல்லாரும் அப்படி வயசு வேறுபாடாத்தான் செய்யவேண்டும் என்று சொல்வதல்ல இந்த விவாதத்தின் நோக்கம் :o ...அந்தத் தெரிவை விரும்புவர்களை அல்லது எதிர்காலத்தில் அப்படி ஒரு உறவை தங்கள் வாழ்வில் வரிந்துகொள்பவர்கள் சலனமின்றி தெளிவுடன் மகிழ்வாக அந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும்...அது ஒட்டு மொத்தமாகத் தவறு என நினைக்கும் இந்த சமூகத்தின் பார்வையில் மாற்றம் வேண்டியுமே இந்தப்பதிவு இங்கு நீள்கிறது..

(நானும் ஒரு கதையின்ர ஒண்டரைப் பக்கத்தை எழுதிப்போட்டு மிச்சத்தை எழுதுவம் எண்டு மேசைக்கு முன்னாடி இருந்தா எங்க மனங்கேட்டாத்தான..யாழுக்கை போய் ஏதாவது எழுதெண்டு சொல்லிக்கொண்டே இருக்கு..கதையும் பாதியிலையே நிக்குது.. :lol: )

Edited by சுபேஸ்

பொதுவாக இருவர் கூடி வாழ்வதற்கு மனப் பொருத்தத்துடன் கூடிய உடல் பொருத்தம் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தம் உடலிலும் வேண்டும்

புரிந்தவன் துணையாக வேண்டும்

தெளிவாச் சொல்லியிருக்கு. எதுக்கும் இன்னொரு தடவை நியூ மூவி :wub: பாருங்களேன். :lol: :lol: :lol:

Edited by புலி

ரதி, இதைப் பற்றிய எண்ணம் ஊருக்கு ஊர், சந்தர்ப்ப சூழ்நிலைகள், மற்றும் வயதிற்கேற்ப மாறுபடும். நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் சூழ்நிலையில் எப்படியாவது தனக்கு ஒரு துணை அமைந்தால் போதும் என்ற சூழ்நிலையிலேயே எடுக்கப்பட்டது. அதற்கு அந்த ஆண் காட்டிய கரிசனம்தான் காரணம் என நான் நினைக்கிறேன். அந்தப் பெண், அந்த ஆணை விரும்பிச் செய்வதாகவே எனக்குப் படுகிறது. அந்தப் பெண்ணின் அனுபவத்தில் அவரது வயதை ஒத்தவர்கள் காட்டிய கரிசனத்தைவிட இவர் அதிக கரிசனம் காட்டியிருக்கலாம். அதேபோல், ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு வருவதற்கு வயது ஒரு தடையே இல்லை. ஆனால், எமது சமூகத்தில் அப்படி வயது வித்தியாசத்தில் அன்பு வந்தால், அதனைத் தவறாகத்தான் பார்க்கிறார்கள். கையாள்கிறார்கள். அந்தப் பெண்ணின் விடயத்தில் அவர் அந்த ஆணை மணமுடிப்பதையே விரும்புகிறேன்.

எனது வாழ்வைப் பொறுத்த வரையில் திருமண வயதின் ஆரம்பகாலப் பகுதியில், எனக்கு என்னைவிட ஐந்து வயதிற்கு அதிகமானவராக (கட்டாயமாக) இருக்க வேண்டுமென விரும்பினேன். பின்னர், அது குறைந்து கொண்டே வந்து இப்போது வயது வித்தியாசம் முக்கியமில்லை, அவர்களது அறிவுத்திறன், அறிவு முதிர்ச்சி, மற்றும் கொள்கையே முக்கியமாகப் படுகிறது. எனக்குத் தெரிந்து பல மூத்த நன்றாகப் படித்தவர்கள் அறிவு முதிர்ச்சி இன்றியும் யதார்த்தம் இன்றியும் இருப்பதை அவதானித்திருக்கிறேன். அதே நேரத்தில், ஓரளவு படித்தவர்களில் சிலர் மிகவும் அறிவுபூர்வமாகவும் யதார்த்தமாகவும் இருப்பதை அவதானித்திருக்கிறேன். எனவே என்னைப் பொறுத்தவரை எனக்கு வயது முக்கியமில்லை. அவரது அறிவுத்திறன், அறிவு முதிர்ச்சி, யதார்த்தம், மற்றும் அவரது கொள்கைகள் போன்றவையே எனக்கு மிகவும் முக்கியம்.

நிறைய வயது வித்தியாசத்தில் செய்யப்படும் திருமணங்கள் நிறைவைக் கொடுக்கும் என்பது உண்மைதான். பெண்கள் தங்களைவிட ஏழெட்டு வயது வித்தியாசத்தில் திருமணம் செய்வது சிறந்தது. அது காதலாக இருந்தாலும் சரி. பேசிச் செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி போடு அரிவாளை :):) .

இது இல்லாமல்

இது நடக்காது.. :icon_idea:

இது தான் பிரச்சினை

வயது வந்தவர்கள் அல்லது அனுபவம் உள்ளவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்பதைக்கூட கேட்க அல்லது கிரகிக்க முடியாத இந்த நீங்கள் கூறும் அடுத்த கட்ட சந்ததியால் எதனையும் போட்டு உடைக்கமுடியுமே தவிர முன்னேற அல்லது உதாரணமாக இருக்க முடியாது. முதலில் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் தன்னை புடம்போடவே எத்தனிக்கவில்லை. தனது சுயமான வெறும் சுயநலத்துக்கே முக்கியம் கொடுக்கும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த பழையவைகளை கேட்கக்கூடாது என்பதற்காக அவற்றை கேலி செய்துடன் அவற்றை ஒதுக்கியும் வருகிறது.

இது தான் உலகம் என்றும் இவையே நாளைய சந்ததி என்றும் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் மொத்த சனத்தொகையில் எத்தனை வீதம். அதிலும் நீங்கள் சொல்வது போல் சிந்திக்கக்கூடியவர்கள் எத்தனைபேர்.

உலக சுற்றத்தொடங்கி இது வரை சில வரைமுறைகளுக்குள்ளேயே அது நகர்கிறது. தேவையான மாற்றங்கள் ஏற்றுக்கெகாள்ளப்பட்டுள்ளன. தேவையற்றவை ஒதுக்கப்பட்டுடுள்ளன. இன்னும் சில ஆராய்ச்சியிலும் அடுத்த கட்ட நகர்வுக்காகவும் காத்திருக்கின்றன. அவை சமூக நன்மைகளுக்கு பங்கம் விளைவிக்காதபோது நடைமுறைக்கு வரும். அதை ஒரு சந்ததி மட்டும் மாற்றிவிடும் என்பது நகைப்புக்குரியது.

குறிப்பு :: இதே சந்ததி தனது இந்த வயதெல்லையைக்கடந்து திருமணம், பிள்ளைகள் .....என்று வந்ததும் நடைமுறையிலுள்ள சமூகவளையத்துக்குள் தானாகவே வந்து அந்த வட்டத்துக்குள் நின்றுவிடும். இதுதான் இதுவரையும் நடந்தது. நடக்கும்

Edited by விசுகு

நீங்கள் கூறும் இந்தக் கருத்து இநத சந்ததி வரைதான் சரி விசுகு. ஏனெனில், இதுவரை இருந்த சந்ததிகள் குறிப்பிட்டதொரு சமூக அமைப்புக்குள்ளேயே இருந்தது. ஆனால், இப்போது நாம் பல சமூக அமைப்புக்களைக் கொண்டதொரு சமூகத்திற்குள் இருக்கிறோம். ஆகவே, அடுத்த சந்ததிக்குள் பல மாற்றங்கள் வந்துவிடும்.

50 வயதைத் தாண்டிய ஆண் 30 ஐ தாண்டாத பெண்ணை திருமணம் முடிப்பதால்.. நீண்ட கால வாழ்க்கைக்கு அது எந்தெந்த வகையில் உதவாது என்பதை பட்டியல் செய்வீர்களா..???!

இருவரின் வயதும் ஒரு 3- 4வித்தியாசம் இருக்கலாம் அல்லது.இருவரும் சேர்ந்து வெளியில் செல்வதிலிருந்து பிரச்சனை ஆரம்பிக்கும்.எனது கருத்துப்படி கள்ளக்காதலையும் ஊக்குவிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிப்போட்டு போத்து மூடிக்கட்டியபடி இங்கு திரிபவர் பல ஆயிரம்???

60 வயது ரஜனிக்காந்த் 25 வயசு நயனோட மேக்கப்போட்டு காதலனா நடிக்க முடியுமாம்.. அதை விசிலடிச்சு ரசிப்பினமாம்.. ஆனால் 54 வயதான ஒருவர் 25 வயது பெண்ணோட வெளில போறதை எங்கட மக்கள் ஊனக்கண்ணோட பாப்பினமாம். அது கள்ளக் காதலை ஊக்குவிக்குமாம். ஏதோ கள்ளக் காதல்.. 20.. 25 வயசில கலியாண முடிக்கிறவையிட்ட இல்லாத மாதிரி எல்லோ இருக்குது.16 - 20 வயசில நாளுக்கு ஒருத்தனோட திரியுற பல பெட்டையள எங்கும் காண முடிகிறது. அதை எந்தக் கோணத்தில பார்க்கிறீங்க..!

ஊர் ஊனக்கண்ணோட பார்க்கிறது ஊரோட தப்பே தவிர.. அந்த ஆணினதும் பெண்ணினதும் தனிமனித சுதந்திரத்தில் தலையிட சமூகத்திற்கு ஒரு அருகதையும் கிடையாது. அவரவர் தனிப்பட்ட முறையில் தம்மால் வாழ முடியும் என்று எண்ணும் நிலையில் இவ்வாறு திருமணம் செய்தவை தடுக்க ஊருக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஏன் சட்டத்திற்கு கூட அந்த அதிகாரம் இல்லை..! இதில ஊர் ஒரு கேடு. ஏதோ ஊரில உள்ளவை புனிதர்களாக்கும். அவை பார்த்து சான்றிதழ் கொடுத்தாத்தான் தனி மனிதர்கள் வாழ முடியுமோ. இது ஒரு முட்டாள் தனமான சிந்தனை. தனிமனிதன் தன் வாழ்வை தான் தான் தீர்மானிக்கனும் தவிர ஊர் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

கட்டிப்போட்டு போத்து மூடிக்கட்டியபடி இங்கு திரிபவர் பல ஆயிரம்???

:o:o:o:o .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படத்தில ஒரு நடிகன் சின்ன பெட்டையோட நடிப்பதும்[அதையே சகிக்கேலாமல் இருக்குது],நிஜ வாழ்க்கையில் வாழ்வதும் ஒனறா?

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில ஒரு நடிகன் சின்ன பெட்டையோட நடிப்பதும்[அதையே சகிக்கேலாமல் இருக்குது],நிஜ வாழ்க்கையில் வாழ்வதும் ஒனறா?

உங்களால் (சமூகத்தவர்கள்) சகிக்க முடியவில்லை என்பது அது உங்கட மனநிலையில். அதற்காக அவர்கள் தமக்குள் சகித்துக் கொண்டு வாழ்வதை.. உங்களுக்காக கைவிட முடியுமா..??! அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் நீங்களா அருகிருக்கப் போகிறீர்கள் இல்லையே. அந்த தனிமனிதர்கள் தானே அதனையும் சமாளிக்க வேண்டும். அத்தனையையும் சமாளிக்கத் தெரிந்தவர்களுக்கு தங்கள் சொந்த இன்ப துன்பத்தை சமாளிக்க தெரியாதா என்ன. ஊரின் கண்ணாக இருக்கிறவை பழி.. வம்பு.. பேசுவினமே தவிர.. யாரேனினதும் வாழ்வை வாழ வைக்க உதவினமா இல்லையே. அப்புறம் எதற்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அவன் கவலைப்படனும்.

நீங்கள் (சமூகத்தவர்கள்) கவலைப்படுறீங்க.. ஏன் ரஜனி இப்படி எல்லாம் நடிக்கிறார் என்று எத்தனையோ விமர்சனங்கள் வந்தும்.. அந்தத் தனிமனிதன்.. தனது விருப்புக்கு செயற்படுகிறார்.. நீங்களும் அதை விமர்ச்சிச்சுக் கொண்டே ரசிக்கிறீர்கள். ஆனால் அதனை ரஜனி அல்லாத மனிதர்கள் தம் சொந்த வாழ்வில் செய்ய அனுமதிக்க மறுக்கிறீர்கள். உங்களின் அனுமதிக்காக எப்படி ரஜனி காத்திருக்கவில்லையோ.. அதேபோல் அந்த மனிதர்களும் காத்திருக்காத போது அவர்களும் வாழ்வில் வெற்றி பெறுவார்கள்..! ஊரைப் பற்றி கவலைப்பட்டால் நிச்சயமா அந்த மனிதனின் வாழ்வில் சுதந்திரத் தன்மையும் மகிழ்ச்சியும் இழக்கப்பட்டு விடுவதை தடுக்க முடியாது. மனிதர்கள் தமக்காக வாழ வேண்டுமே தவிர ஊர் சொல்லி வாழக் கூடாது. விலங்குகளில் கூட இல்லாத இந்த அடிமைத் தனம் தமிழர்களில் பற்றிப் பிடித்திருப்பது ஒரு சமூகப் பீடை. :):icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.