Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரிந்துகொள்ளும் புரியாத மொழிகள்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் சொன்னது

வழிந்தோடும் என் இளமைக்கால

நினைவுகளை மேய்ந்தபடிபோகும்

வயல்க்கரை மாடுகளின் பாசைகளைப்

புரிய முடியாதென்று...?

யார் சொன்னது

நான் தொலைத்துவிட்ட சிறுவன்

நடந்துதிரிந்த வீதிகளில்

எஞ்சியிருக்கும்

புறாக்களினதும் புலுனிகளினதும்

கவலைப் பாட்டினை

விளங்கமுடியாதென்று....?

யார் சொன்னது

வெட்டைக் காணிகளின்

சம்புப் புற்களுக்கிடையே

அங்கொன்றும் இங்கொன்றுமாகக்

குந்தியிருக்கும் தும்பிகளின்

இறக்கைகளில் இருந்துதொடங்கும்

என் பால்யகாலக் கவிதைகளைப்

படிக்க முடியாதென்று...?

அவைகளின் மொழிகள்

உனக்கெப்படித் தெரியுமென்ற

வியாக்கியானங்களை விலத்திவையுங்கள்...

அவைகளின் மொழிகளில்தான்

மீட்டிக்கொள்கிறேன்

கிழித்து வீசப்பட்டதால்

பொருளை இழந்துபோன

கவிதைபோலக்

காலம் கடந்துபோகக்

காலாவதியாகிக்கிடக்கும்

என் மழலைக்காலங்களை...

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவில் வாழும் மழலைக் காலங்கள் ..........

....அழகான கவி வரிகள் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனிய Nostalgia!

  • கருத்துக்கள உறவுகள்

இளமைப் பிராயத்தின் ஏக்கங்களால் கவிதையை

அழகாக வரைந்துள்ளீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைகளில், எப்போதுமே ஒரு மண்வாசனை மணக்கும்!

நாம் இழந்து கொண்டு வரும், எமது அடையாளங்கள் என நாம் குறிப்பிடுவதும் இவையே!

வெறும் கோவில்களும், அர்த்தமிழந்த ஆரியச் சடங்குகள் மட்டுமே எமது வரலாறு என்று புலத்துக் குழந்தைகள் நம்பி வளர்ந்து வருகின்றன!

நாங்களும் மண்ணை விட்டு வெகு தூரம் விலகி, இந்த அப்புசாமிக் கதைகளை அவர்களுக்குச் சொல்வதை விட்டு, அவர்களுக்கு எமது மண்ணைக் காட்ட வேண்டும்!

அவர்கள் புரிந்து கொள்வார்கள்!

ஏனெனில் அவர்களும் எம்மைப் போல, அடையாளம் இல்லாதவர்களே!!!>>>

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான வரிகள் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலுனிகள் என்டால் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலுனிகள் என்டால் என்ன?

எண்ட குருவாயூரப்பா.. :o:lol:

நிச்சயமாக. எல்லோரது மழலைக்காலங்களும் அர்த்தம் கொண்டவையே. நாம் தான் அதை அறியுமுன்னர் வளர்ந்து விட்டோம்.

பாராட்டுக்கள்..... மழலைகளின் ஏக்க வரிகளிற்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்

<p>

புலுனிகள் என்டால் என்ன?

புலுனிகள் ஒரு சிறியவகைக் குருவிகள் இவை ஒரு கூட்டமாகவே எப்போதும் பறந்து திரிபவை.

என் பால்ய காலத்தின் நினைவுகள் சிலவற்றைக் மீண்டும் கொண்டுவந்த கவிதை. குறிப்பாக அந்த புலுனிக் குருவிகள்.

இன்றுதான் மீண்டும் ஞாபகப்படுத்தினேன் தங்கள் வரிகளிலிருந்து.

நன்றி சுபேஸ். கவி அருமை!:)

  • கருத்துக்கள உறவுகள்

சுபேசு அருமையான கவிதை

சுபேசுக்குள் முக்குளித்துக் கிடக்கிறான் அற்புதமான கவிஞன். வெளியே இழுத்துவந்து சுதந்திரமாகப் பேசவிடுங்கள். பேசுவான். அப்போது தெரியும் கவிஞனின் வலிமை.

இன்று சொல்கிறேன்.... இன்னொரு பொழுதில் உனக்குள் புதைந்திருக்கும் அற்புதக்கவிஞன் தன்னை முழுமையாக வெளிப்படுத்திய பொழுதில், என் வார்த்தைகள் நிசமாகும் அத்தருணத்தில், இந்த அக்காவையும் நினைத்துக்கொள் கவிஞனே. :)

  • கருத்துக்கள உறவுகள்

புலுனிகள் என்டால் என்ன?

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் "பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்" கவிதைத் தொகுப்பு புலுனிகளைப் பற்றிப் பேசுகின்றது!

The Yellow-billed Babbler or White-headed Babbler (Turdoides affinis) is an Old World babbler endemic to southern India and Sri Lanka. The Yellow-billed Babbler is a common resident breeding bird in Sri Lanka and southern India. Its habitat is scrub, cultivation and garden land. This species, like most babblers, is not migratory, and has short rounded wings and a weak flight and is usually seen calling and foraging in groups. It is often mistaken for the Jungle Babbler, whose range overlaps in parts of southern India, although it has a distinctive call and tends to be found in more vegetated habitats.[2]

yellow_billed_babbler_2ad.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புலுனிகள் என்டால் என்ன?

மேலதிக தகவலிற்கும், படத்திற்கும் நன்றி கிருபன்.

முன்பொருமுறை... ஒரு தேவைக்காக, புளினியின் படத்தை இணையத்தில் தேடிக் களைத்துவிட்டேன்.

ரதி...

புலுனி, செம்பகம் போன்றவை....

பயிர்கள், தாவரங்களிலுள்ள பூச்சி, புழுக்களை தின்று, கமக்காரருக்கு நன்மை விளைவிக்கும் பறவைகள்.

இப்போது கமக்காரர் எல்லோரும், தாவரங்களிலுள்ள பூச்சி, புழுக்களை அழிக்க நச்சுவகை கிருமி நாசினிகளைப் பாவிப்பதால்...

தாவரத்தில், கிருமி நாசினியால்... பாதிக்கப் பட்டு, குற்றுயிராகவோ..., இறந்தோ... உள்ள புழுக்களை சாப்பிட்டதால்...

புளினியும், செம்பகமும் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. முன்பு, இவை சாதாரணமாக வீட்டு முற்றத்தில், மரங்களில் வந்து உட்காரும்.

நாம் பார்க்க... உலக மாற்றத்தில், மனிதனால்... அழிக்கப் பட்ட பறவைகளில் புளினியும், செம்பகமும் அடங்கும்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.