Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வார்த்தைகளைத் தாண்டி ஒரு வடக்கயிறு தோன்றாதா?

Featured Replies

பசுமை தளிர்த்து கனியும் கிடைத்து நிலைக்கும் என நினைக்கையில்

இலைகள் உதிர்ந்து காம்பும் கறுத்துப் பட்டதாய் நின்றது

பின் பனியுந்தூற, பட்டை பிளந்து பஞ்சாய்ப்போனதுபோல்

பழ மரம் பருத்திச் செடியாய்க் காட்சியளித்தது.

புதிதாய்த் தூவிக்கிடந்தது பனி

அதில் புதிதாய் ஏதோ பிராணியின் தடம்

இதுவரை எதுவும் நடக்காத கிரகத்தின் முதற்சுவடுகள்...

மனதுள் பிரமை நிஜமாய்த் தெரிந்தது.

ஜக்கட்டுக்குள் நுளைந்து குளிரோடு பொருதும் பிறவும் பூண்டு

பின்வளவுக் காட்சி மனதில் இருக்க முன்கதவால் இறங்கித் தெருவில் நடந்தேன்.

கோடையில் எனது போதியாய் விளங்கும் காட்டுக்குள் புகுந்தேன்

பட்டனவாய் நின்ற நெடிதுயர்ந்த விருட்சங்கள் மூச்சின்றி நிமிர்ந்து நின்றன.

கிளையாய்ப் பிரிந்தது பாதை

இரண்டிலும் ஏகத்தில் பயணிக்க ஒருவனால் எப்படி முடியும்?

ஏதோ ஒரு கிளையில் என் பனிச்சறுக்கலின் நீட்சி

கிளைகள் சந்திக்கும் என்பது உள்மனது அறியும்.

பனியின் போர்வைக்குள் காடு புதிதாய்த் தெரியினும்

அடியில் கிடந்த கதைகள் செவ்விந்தியனின் தரிசனங்களாக வந்துதான்போயின.

முளைக்கவிருக்கும் விதையும் அதற்கு உரமாகும் சருகும் கூடியே கிடந்தன

நாக்கிளி வகையறாவும் இதர பல உயிரிகளும் பிழைக்கப்பழகியபின் உறங்குகின்றன

முன்பொரு இரவில் வீட்டின் கூடத்தில் தொலைக்காட்சி காட்டியதொரு காட்சி

காட்டின் நிசப்த்தத்தில் மூளையின் ஏதோ ஒரு மடிப்பிருந்து மீள விரிந்தது

'எண்பத்தைஞ்சில் ஜேர்மன் போய் தொண்ணூறில திருப்பினது...இப்ப இங்க'

பொக்கை வாய் அநாதையாகிப்போன ஜேர்மன் கொண்ட முதியவர் குரல் வலித்தது.

முன்பொரு கோடையில் இதே காட்டில் நெடிதுயர்ந்த மரங்களின் கீளிருந்து

பாசறையொன்றில் நிற்பதாய்க் கற்பனையில் தனித்திருந்த ஞாபகம்

அன்று நானமர்ந்த மரக்குத்தி அது அப்படியே அங்குதான் கிடக்கிறது

'வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து... வரியுடைகள் மீளத் தோன்றுமா...'

புதிதாகப் பனி தூவிக்கொண்டிருக்கிறது. அனுபவங்களை அமத்திப் புதுமை படர்கிறது

இன்னும் பிராணிகள் வராததால் கிளையாய்ப்பிரிந்த பாதைகள் புதிதாய்க் கிடக்கின்றன

நடப்பதற்கு யாரேனும் வாராரா?

பயப்படுத்தும் காட்டிற்குள் பாதைகள் மீண்டும் கன்னிகளாகிக் காத்துக் கிடக்கின்றன.

கால் பதித்த மாத்திரத்தில் படிவுகள் தட்டுப்படும்.

பனியின் கீழ்க் கிடப்பவை கனிமமாகுமளவிற்குக் காலம் ஓடிவிடவில்லை.

கன்னிப் பாதைகளாய்த் தெரியினும் பாதைகள் அனுபவம் பொதிந்தவை

நடத்திச் செல்ல நடந்தவர்கள் தேவை, நாம் முன் நடந்தகதை தேவை

நடந்தவர்கள் அனைவரையும் கூட்டி ஒரு மாநாடு நடவாதா?

பிரிந்து பொருதுபவர்கள் கக்கித்துப்பிக் கரைந்து கத்தியபின் கட்டித்தழுவாரா?

சிறிய தீவின் சிறுத்த இனத்திற்குள் ஒன்றிணைவு தேறாதா?

வருகின்ற வருடத்தில் வார்த்தைகளைத் தாண்டி ஒரு வடக்கயிறு தோன்றாதா?

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லும் 'வடக் கயிறு' எங்களுக்குக் கிடைத்தாலும், அதைக்கூட வகிர்ந்து நூலாக்கி விடுவார்கள், எங்கள் அரசியல் வாதிகள்!

பனியின் போர்வைக்குள் காடு புதிதாய்த் தெரியினும்

அடியில் கிடந்த கதைகள் செவ்விந்தியனின் தரிசனங்களாக வந்துதான்போயின.

முளைக்கவிருக்கும் விதையும் அதற்கு உரமாகும் சருகும் கூடியே கிடந்தன

உங்கள் சிந்தனைகள், அழகாக இருக்கின்றன!

தொடருங்கள், இன்னுமொருவன்!>

  • கருத்துக்கள உறவுகள்

கால் பதித்த மாத்திரத்தில் படிவுகள் தட்டுப்படும்.

பனியின் கீழ்க் கிடப்பவை கனிமமாகுமளவிற்குக் காலம் ஓடிவிடவில்லை.

கன்னிப் பாதைகளாய்த் தெரியினும் பாதைகள் அனுபவம் பொதிந்தவை

நடத்திச் செல்ல நடந்தவர்கள் தேவை, நாம் முன் நடந்தகதை தேவை

தமிழர்களை நடத்திச் செல்ல சிறந்த கொள்கைகள் மட்டும் உள்ளவர்களால் முடியாது.

தமிழர்களைக் கவரச் சொல்லிலும் செயலிலும் நேர்மையுடனும் தற்துணிவுடனும் உள்ள ஒரு வசீகரமான தலைவர்தான் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தவர்கள் அனைவரையும் கூட்டி ஒரு மாநாடு நடவாதா?

பிரிந்து பொருதுபவர்கள் கக்கித்துப்பிக் கரைந்து கத்தியபின் கட்டித்தழுவாரா?

சிறிய தீவின் சிறுத்த இனத்திற்குள் ஒன்றிணைவு தேறாதா?

வருகின்ற வருடத்தில் வார்த்தைகளைத் தாண்டி ஒரு வடக்கயிறு தோன்றாதா?

தமிழர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பெருங்கனவாகக் கிடக்கும் ஏக்கம்கள் இவை இன்னுமொருவன்..கிருபன் அண்ணா சொன்னதுபோல் சிந்தனையுடன் மட்டும் நின்றுவிடாமல் செயலிலும் நடைமுறைப் படுத்தக்கூடிய ஒருவன் தேவை..சிந்தனைகளை மட்டும் கொண்ட தலைவர்கள் எங்களிடம் நிறைய இருக்கிறார்கள்..ஆனால் அதனால் ஒரு பிரயோசனுமும் இல்லை..

" புதிதாகப் பனி தூவிக்கொண்டிருக்கிறது. அனுபவங்களை அமத்திப் புதுமை படர்கிறது

இன்னும் பிராணிகள் வராததால் கிளையாய்ப்பிரிந்த பாதைகள் புதிதாய்க் கிடக்கின்றன

நடப்பதற்கு யாரேனும் வாராரா?

பயப்படுத்தும் காட்டிற்குள் பாதைகள் மீண்டும் கன்னிகளாகிக் காத்துக் கிடக்கின்றன. "

:) :) :) 3 .

பசுமை தளிர்த்து கனியும் கிடைத்து நிலைக்கும் என நினைக்கையில்

இலைகள் உதிர்ந்து காம்பும் கறுத்துப் பட்டதாய் நின்றது

பின் பனியுந்தூற, பட்டை பிளந்து பஞ்சாய்ப்போனதுபோல்

பழ மரம் பருத்திச் செடியாய்க் காட்சியளித்தது.

நாம் நட்டது வேண்டும் என்றால் கனி கிடைக்க கூடிய மரம் என்று நினைத்து நட்டதாக இருக்கலாம். ஆனால் நடும் போதே பருத்திப் பழம் போல் வெடித்து பஞ்சாய் பறக்கக் கூடிய மரபு குணங்களுடன் தானே நாம் செடியை நட்டு வைத்தோம். அதுதான் பெருத்து ஊதி பெரும் மாயம் காட்டி இறுதியில் பருத்திச் செடியாக காட்டிற்று

கிளையாய்ப் பிரிந்தது பாதை

இரண்டிலும் ஏகத்தில் பயணிக்க ஒருவனால் எப்படி முடியும்?

ஏதோ ஒரு கிளையில் என் பனிச்சறுக்கலின் நீட்சி

கிளைகள் சந்திக்கும் என்பது உள்மனது அறியும்.

கிளைகள் என்பதே விருட்சத்தின் அடியின் மிகக் கீழ் சென்ற ஒரு வேரின் தொடர்ச்சி தானே. அதில் பயணிக்கும் போது பல நூறாக கிளைகள் பிரிவினும் அதன் உணர்வு நீட்சியில் ஒன்றாகவே சந்திக்கும்

முன்பொரு இரவில் வீட்டின் கூடத்தில் தொலைக்காட்சி காட்டியதொரு காட்சி

காட்டின் நிசப்த்தத்தில் மூளையின் ஏதோ ஒரு மடிப்பிருந்து மீள விரிந்தது

'எண்பத்தைஞ்சில் ஜேர்மன் போய் தொண்ணூறில திருப்பினது...இப்ப இங்க'

பொக்கை வாய் அநாதையாகிப்போன ஜேர்மன் கொண்ட முதியவர் குரல் வலித்தது.

'தமிழ் வண்' இன் மூன்றாம் பார்வை. அநாதையாகிப் போனது பொக்கை வாய் அல்ல, பெரியோர்களை கனம் பண்ணுவதே தமிழன் பெருமை எனும் பம்மாத்து கோசமும் தான்

புதிதாகப் பனி தூவிக்கொண்டிருக்கிறது. அனுபவங்களை அமத்திப் புதுமை படர்கிறது

இன்னும் பிராணிகள் வராததால் கிளையாய்ப்பிரிந்த பாதைகள் புதிதாய்க் கிடக்கின்றன

நடப்பதற்கு யாரேனும் வாராரா?

பயப்படுத்தும் காட்டிற்குள் பாதைகள் மீண்டும் கன்னிகளாகிக் காத்துக் கிடக்கின்றன.

புரியவில்லை இன்னுமொருவன்

பாதை என்பதே பிராணிகள் வரலாறை முன்னோக்கி இழுத்துச் சென்ற வழிகள் தானே? மனிதனாயிட்டும், சின்ன வண்டு ஆயிற்றும் அது நடந்த வழி தானே பிற்காலத்தில் பாதை ஆயிற்று? அப்படி இருக்கையில் பிராணிகள் வராததால் எப்படி கிளையாய் பிரிந்த புதிய பாதைகள் புதிதாகக் கிடைத்தன?

கால் பதித்த மாத்திரத்தில் படிவுகள் தட்டுப்படும்.

பனியின் கீழ்க் கிடப்பவை கனிமமாகுமளவிற்குக் காலம் ஓடிவிடவில்லை.

கன்னிப் பாதைகளாய்த் தெரியினும் பாதைகள் அனுபவம் பொதிந்தவை

நடத்திச் செல்ல நடந்தவர்கள் தேவை, நாம் முன் நடந்தகதை தேவை

முன் சொன்ன வரிகளுடன் பொருத்திப் பார்க்கையில் மயக்கம் தருகின்றன இந்த வரிகள்.

பனி என்பதே வரலாறு தானே. வரலாற்றை முன் நகர்த்த நடந்தவர்கள் தேவையா அல்லது வரலாற்றில் இருந்து வரலாற்றின் போக்கை தீர்மானிக்கும் புதியவர்கள் தேவையா?

நடந்தவர்கள் அனைவரையும் கூட்டி ஒரு மாநாடு நடவாதா?

பிரிந்து பொருதுபவர்கள் கக்கித்துப்பிக் கரைந்து கத்தியபின் கட்டித்தழுவாரா?

சிறிய தீவின் சிறுத்த இனத்திற்குள் ஒன்றிணைவு தேறாதா?

வருகின்ற வருடத்தில் வார்த்தைகளைத் தாண்டி ஒரு வடக்கயிறு தோன்றாதா?

வருகின்ற வருடம் மட்டுமல்ல அடுத்த ஆயிரம் ஆண்டுகால வருடப் பிறப்பிலும் விடுதலைக் கான வடக் கயிறு தோன்றாது

இன்று வரை எம் இனத்தின் கயிறு எல்லாம் எம் மக்களின் கழுத்தைச் சுற்றிய வடக் கயிராகவே இவ்வளவு நாளும் அமைந்தன. கயிற்றின் ஒவ்வொரு கழுத்தைச் சுற்றும் முனையிலும் இன்னொரு தமிழனே இருந்தனர். அந்தக் கயிற்றின் பலமான முடிச்சுகளாக சாதித் திமிர், வர்க்கத் திமிர். Gender திமிர், பிரதேசவாதத் திமிர், மதவாதத் திமிர் என்பனவற்றுடன் கண்ணுக்கு புலப்படாத நுண்ணங்கி தோற்றத்துடன் இலட்சக்கணக்கான திமிர்கள் கொண்டே இந்த தமிழ் இனம் வாழுது

இப்படிப் பட்ட இனத்திற்கு ஒரு போதும் விடுதலைக் காண வடக் கயிறு தோன்றாது. இந்த இனத்தை கடவுளால் மட்டுமல்ல சாத்தான். ஏலியனால் கூட காப்பாற்ற முடியாது

  • தொடங்கியவர்

புங்கையூரான், கிருபன், சுபேஸ் கோமகன், நிழலி உங்கள் அனைவரது கருத்துக்களிற்கும் நன்றி

நிழலி,

உங்களது கேள்விக்கு நன்றிகள். உங்கள் கேள்விக்குள் செல்லுமுன்னர், சுருக்கமாக ஒன்றைப் பேசத் தோன்றுகின்றது. என்னைப் பொறுத்தவரை, எதையேனும் எழுதவேண்டுமே என்று ஒரு போதும் கணனி முன் அமர்வதில்லை. ஏதோ ஒன்று உள்ளுர அரிக்கத்தொடங்கியபின் கணனி முன்னிருந்து உள்ளுக்குள் பட்டதைப் பகிர்வது மட்டுமே நானும் செய்வது. வாழ்வு தேடல் மிகுந்ததாக விழிப்புணர்வுடனும் ரசனையுடனும் பயணிப்பின், எழுதவேண்டியன அடிக்கடி தோன்றிக்கொண்டே இருக்கும் என்றே படுகிறது—தோன்றுவதை எல்லாம் எழுதமுடியுமா, எழுதுவதை எல்லாம் பகிரமுடியுமா என்பது வேறு கதை. மாறாக, எதையேனும் எழுதணுமே என்று வலுக்கட்டாயமாக கணனி முன்னிருப்பின் பின் அதுவும் ஒரு வேலையாகி விடும்-- பின்னர், தமிழ்ச்செல்வனின் 'அப்பாவின் பிள்ளை' சிறுகதை பேசியதைப் போன்று, 'யம்மா கதவைத் தொறந்து தொலை' என்று முரட்டுத் தனமாகக் கதவைத் தட்டத்தான் தோன்றும். ஒரு திரைப்படம் பற்றிய பார்வையாகட்டும், இலக்கியம் பற்றிய வாசிப்பாகட்டும் எல்லாமே தானாகப் பழுத்து விழுந்தால் மட்டுமே எடுத்து உண்டுகொண்டிருக்கிறேன். அந்தவகையில், இந்தத் தலைப்பும், தானாகத் தோன்றியதால் பதிவாகியது. இதில் பிரச்சினைகளிற்கான தீர்வுகளைப் பேசும் அறிவுக்கான இடம் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஏக்கம் ஏக்கமாக மட்டும் வெளிப்பட்டுள்ளது. ஏன் இந்த ஏக்கம் பிறந்தது என்றும் நான் ஆராயவில்லை. இனி உங்கள் கேள்விகளிற்குள் செல்லின்:

பாதை என்பதே யாரோ பயணித்து விட்டதால் (அது பௌதீகமான பயணமோ மானசீகமான அறிவுசார்ந்த பயணமோ ஆரோ பயணித்து விட்டதால் தான் பாதை பிறந்தது) தானே பாதை ஆயிற்று பின்னெப்படிப் பிராணிகள் வராததால் புதிய பாதை கிடைத்தது என்ற உங்களின் கேள்வி நியாயமானது. நீங்கள் ஏற்கனவே அவதானித்துள்ளதைப் போல, உங்களது இந்தக் கேள்விக்கான நான்கு வரிகளும் அடுத்தநான்கு வரிகளும் சேர்த்தே பார்;க்கப்படவேண்டியன. பாதை ஏற்கனவே இருந்தது தான் என்பது மட்டுமன்றி, நாங்கள் மட்டுமன்றிப் பலரும் ஏற்கனவே பயணித்ததும் தான். ஆனால் புதிதாய் பனி தூவி, பனிதூவியபின் பிராணி ஏதும் இன்னமும் நடந்து விடாததால் இவை எவருமே எப்போதும் பயணித்திராத புதியபாதைகள் போன்று எமது அனுபவங்கள் அனைத்தயையும் அமத்திக் காட்சியளிக்கின்றன. இரண்டாம்; பந்தியிலேயே இந்த பழசு புதுசாசப் பிரமை தாருகின்ற விடயம் பேசப்பட்டுள்ளது—'இதுவரை எதுவும் நடந்திராத கிரகத்தின் முதற்சுவடுகள்...மனதுள் பிரமை நிஜமாய்த்தெரிந்தது'. இருந்த பாதை நாங்கள் நடந்த பாதை புதியபாதைகளாகக் காட்சி தருவது பிரமை என்று மனம் அறிந்தபோதும், நாங்கள் நிற்கின்ற நிலையில் ஒரு புதிய துவக்கத்திற்கான ஏக்கமும் அத்தோடு நாங்களாகக் கற்பனை செய்து கொள்ளும் 'புதியன' சார்ந்து ஒரு உற்சாகமும் பிறக்கவே செய்யும். இயலாமையின், கையாலாகத்தனத்தின், விரக்தியின் விளிம்புகளில் புதியன நோக்கிய ஏக்கமும் புதிசாய்த் தெரிபவைகளிற்கான இந்த வீரியமும் இருக்கத்தான் செய்யும். அந்தவகையில் நமது மனம் பல பிரமைகளை நிஜமென்று நம்மை நம்பச் செய்யும்.

பனி என்பது இங்கு வெறும் மூன்றாண்டு கால நீட்சிக்கான குறியீடுமட்டுமே. முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்த மூன்றாவது ஆண்டாக நீளப்போகும் காலம் என்றவகையில் சில விடயங்கள் மறந்துபோயுள்ளன. அதாவது, பங்களிப்புக் கேட்டுக் கதவுதட்டியவர்களிற்குக் காசு குடுக்காது சமாளிப்பதற்காய் கூறிய பொய்கள், நாசமறுவாங்கள் திருப்ப வாறாங்கள் என்பது போன்ற புலத்திற்குப் பரிட்சயமான அசௌகரியங்களாகட்டும், போரின் வடுக்கள் சார்;ந்த ஊரின் துன்பங்களாகட்டும் மூன்றாண்டு ஓய்வில் பலரிற்கு மறந்துபோயுள்ளமை அவதானிக்கப்படக்கூடியது. மனிதனின் பலமும் பலவீனமும் ஆக விளங்கும் விடயங்களில் ஒன்று மறதி. மூன்றாண்டு அமைதி மறதி என்ற கருவி மூலம் பல விடயங்களைப் புதிதாய்த் தோன்றச் செய்யும். எனினும் பனி அனுபவத்தை மறைத்துப் புதிதாய்க் காட்டிக்கொண்டிருக்கின்ற பாதைகளில் நடக்கத் தொடங்கிய மாத்திரத்தில் பல பழைய விடயங்கள் மற்றும் அசௌகரியங்கள் என்பன ஞாபகம் வரும். வசனம் பேசுவோம் பங்களியோம், இணையத்தில் கொடுக்காதவனைப் பற்றிப் பழிப்போம் எங்கள் வீட்டின் கதவு தட்டப்படுகையில் உள்ளிற்குள் ஒளிந்துகொள்வோம், கவிதை எழுதுவோம் கைகொடுக்கோம் போன்ற அடிப்படைகள் திரும்ப எதிர்கொள்ளப்படும். அது மட்டுமன்றி, கடந்த காலத் தோல்விகள் அனைத்தையும் பாதைகளின் பிழையாக மட்டும் பார்;த்துவிடவும் முடியாது. ஒரு இனமாக எங்களின் தன்மைகள்--நாங்கள் நாங்களாக இருப்பதற்கான எங்களின் நாடென்று முனைகையில் எங்களின் குணங்களும் பலவகையில் மாறாது இருக்கும் என்றும் எதிர்பார்த்துத் தான் முனைய முடியும-சார்ந்தும் அவதானிப்புக்கள் அவசியம். இந்நிலையில் தான் நடந்தவர்கள் வேண்டும் நாம் நடந்தகதை வேண்டும் என்ற உணர்வு பிறக்கிறது.

உலகில், மனிதன் நடந்த பாதைகள் என்பன எண்ணற்றனவாய்த் தோன்றினும் உண்மையில் மனிதன் இன்றுவரை நடந்துவிட்டபாதைகளில் பல ஒற்றுமைகள் அவதானிக்கப்படக்கூடியன. முன்னர் ஒரு பதிவிலும் நான் குறிப்பிட்டிருந்ததைப் போல, உலகில் எத்தனையோ மொழிகள் இருப்பினும் மனிதனாகப் பிறந்தவன் உருவாக்கும் மொழிகளிற்கான அடிப்படை இலக்கணம் என்ற ஒரு அடிப்படை சுரவரிசை மனிதனோடு இன,மொழி,பிரதேச,கால வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து கூடவே பிறக்கிறது என்றும் இந்த அடிப்படைக்குள் தான் இத்தனை மொழியும் உருவாக்கப்படுகின்றன என்பதும் மொழியியலின் தந்தை என்ற அளவிற்கு வர்ணிக்கப்படும் நோம் ச்சாம்ஸ்க்கியின் கண்டறிதல். அதுபோன்றதே மனிதன் இதுவரை நடந்த பாதைகளும். இன்றைய பிரச்சினைகளிற்கு, இதுவரை நடந்து விடாத பாதைகள் மூலம் நடப்பதால் மட்டும் தான் தீர்வுகள் பெறப்படலாம் என்றில்லை. அதுபோன்றே ஏற்கனவே நடந்து தவறிப்போன பாதைகளில் தீர்வுகள் எட்டப்படாது என்றும் இல்லை. ஒரு பாதை சிலரிற்கு இலக்கைக் காட்டி சிலரைத் தவறித் தவிக்கவிட்டது என்கையில், தோல்விக்கான காரணங்கள் பாதையைப் படிப்பதால் மட்டும் கண்டறியப்படக்கூடியனவல்ல. திருப்பத்திருப்ப சில்லுகளைப் புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க முடியாது. எதனால் வண்டி குடைசாய்ந்தது என்பது வண்டி ஓட்டிகளிற்குப் பட்டறிவு. பாடப்புத்தகத்தில் வரலாறைப் படித்தறிந்தவனும் பட்டறிந்தவனும் ஒரே வரலாற்றை ஒரே வாறு வாசிக்கப்போவதில்லை. அந்தவகையில் இளையவர்கள் புதியவர்கள் எல்லாத்தையும் வெட்டி விழுத்திவிடுவார்கள் என்று கூறிவிடமுடியவில்லை. அறுபது வருடத்தின் பின் உயர்த்திக்காட்ட ஒன்றுமில்லை என்ற போதும், அறுபது வருடமும் வீணாகத் தான் போகவேண்டும் என்பதில்லை. உலகில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் முதலாளித்துவம் தோற்றுப்போன நிறுவனங்களைப் பெரும்பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருப்பது மடமையினால் அல்ல.

இன்னுமொரு கோணத்தில் பார்த்தால், நடந்தவர்கள் என்பவர்கள் விதிவிலக்குகள் மட்டுமே என்று நாம் கூறிவிடமுடியாது. தோற்றுப்போன நடவடிக்கைகளை நடந்தவர்கள் தலைகளில் மட்டும் கட்டிவிடவும் முடியாது என்பதற்குமேல் நடந்தவர்களில் காணப்படுவதும் நாங்கள் தான். எங்களிற்கான வீட்டைக் கட்டுவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் அந்த வீட்டிற்குள் வாழப்போகும் எங்களின் தன்மைகள் பற்றியும் பேசியே ஆகவேண்டும். இல்லாது போயின், கட்டப்பட்டவீடு நாங்கள் வாழத்தொடங்குகையிலும் இடிந்துபோகும் ஆபத்து எழலாம். எனவே நடந்தவர்கள் தேவை என்பது எங்களை நாங்கள் படிப்பதற்காகவும் தான். பலரை செல்லவேண்டிய இடம்சேர்த்தபாதைகள் எங்களை அறுபது வருடம் கடந்தும் தவிக்கவிட்டன என்கையில் எங்களைப் பற்றியும் நாங்கள் எண்ணியே தீரவேண்டும். என்னைப் பொறுத்தவரை, நடந்தவர்கள் அனைவரும்; அவசியம் என்றே படுகிறது. நடந்த கதைகளும் அனைத்தும் அவசியம் என்றே படுகிறது.

இறுதியாக, கிருபனும் சுபேசும் கூறும் தலைமையின் அவசியம் மறுப்பதற்கில்லை. எனினும் ஒன்றைக் கூறத்தோன்றுகின்றது. உதாரணமாக Theoretical physics போன்ற ஒரு துறையை எடுத்தால் அதில் ஏகப்பட்ட கணிப்பீடுகளையும் கணிதங்களையும் செய்து கருத்தியல் ரீதியான விடயங்களை நிறுவுவதற்கோ மறுதலிப்பதற்கோ என ஒரு பக்கமும் அடிப்படைகளையும் இன்ன பிறவற்றையும் கருத்தியல் ரீதியாக நோக்கவும் விளங்கிக்கொள்ளவும் ஆரயவும் என்று இன்னுமொரு பக்கமும் உள்ளது. இது வாழ்வின் அனைத்து அம்சங்களிற்கும் பொருந்தும். Theoretical physicsல் இருந்து கோடம்பாக்கத்துக்குத் தாவின் திரைப்பட இயக்குனர் சங்கர் அடிக்கடி கூறும் ஒரு விடயம், கதை எழுதும் போதும் போது இதை எனக்குச் செய்யத்தெரியாதே என எனது கற்பனைகளை நான் தடைப்படுத்திக்கொள்வதில்லை. எனக்கு விரும்பிய கதை வந்த பின்னர் அதில் என்னென்னத்தை எவர்எவர் அதிசிறப்பாகச் செய்ய வல்லவர் என்று தேடிக் கண்டுகொள்வேன் என்பது. இதுபொலத் தான் நாவலாசிரியர்கள் எழுத்தாளர்கள் என்போரும். எங்கள் இனத்தில் பலர் எழுத்தாளர் தான் எழுதியதைப் போன்று வாழ்கிறாரா என்பதைச் சரிபார்த்து;ககொள்ளும் துடிப்பில் எழுதப்பட்டதையே அனுபவிக்காது இருந்ததுவிடுபமை நடப்பது வழமை. இந்த அடிப்டையில் எமக்குள் மாற்றம் தேவை என்பது எனது அபிப்பிராயம். சொல்பவர் தான் செய்யவேண்டும் செய்பவர் தான் சொல்லவேண்டும் என்றால், அத்தகைய ஒரு ஓல்றவுண்டர் அரிதாகப் பிறக்கும் சந்தர்ப்பங்கள் வரை வாழாதிருப்பதே சாத்தியப்படும். வெற்றிபெற்ற சந்தைப் பொருளாதார நிறுவனங்களில் நிலைக்குத்தாக அனைத்தையும் ஒருவரே செய்துமுடிக்கும் கலாச்சாரம் மாற்றப்பட்டுக் குறுக்குவெட்டு வேலை பிரிப்புக்கள் நடக்கின்றன. நாமும் செய்பவர் தான் சொல்ல வேண்டும் சொல்பவர் தான் சொல்லவேண்டும் அப்படியான ஒரு ஓல்றவுண்டரை மீளக்காணும்வரை ஏங்கிக்கிடப்போம் என்றிருக்கத்தேவையில்லை என்றே படுகிறது. சொல்லமட்டுமே தெரிந்தவர்கள் சொல்வதை அதிசிறப்பாகச் சொல்லட்டும். செயல்வீரர்கள் சொல்வதை அதிசிறப்பாகப் புரிந்து செயற்படுத்தட்டும். இவ்வாறு முனைகையில் எங்களிற்குள் ஒரு இனமாக ஒற்றுமையாகச் செயற்படும் பண்பு அதிகரிப்பதோடு, உதைக்கின்ற விடயங்கள் உணரப்படுவதும், அத்திவாரத்தின்போதே பிரச்சினைகள் சீர்செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் என பல நல் விளைவுகள் ஏற்படும் என்றே தோன்றுகின்றது.

இவை எனது அபிப்பிராயம் மட்டுமே.

:):):icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது

உடைப்புக்கள் தானாகத் தோன்றும்.

எழுத்துக்கும் விளக்கத்திற்கும் நன்றி இன்னுமொருவன்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பொரு இரவில் வீட்டின் கூடத்தில் தொலைக்காட்சி காட்டியதொரு காட்சி

காட்டின் நிசப்த்தத்தில் மூளையின் ஏதோ ஒரு மடிப்பிருந்து மீள விரிந்தது

'எண்பத்தைஞ்சில் ஜேர்மன் போய் தொண்ணூறில திருப்பினது...இப்ப இங்க'

பொக்கை வாய் அநாதையாகிப்போன ஜேர்மன் கொண்ட முதியவர் குரல் வலித்தது.

முன்பொரு கோடையில் இதே காட்டில் நெடிதுயர்ந்த மரங்களின் கீளிருந்து

பாசறையொன்றில் நிற்பதாய்க் கற்பனையில் தனித்திருந்த ஞாபகம்

அன்று நானமர்ந்த மரக்குத்தி அது அப்படியே அங்குதான் கிடக்கிறது

'வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து... வரியுடைகள் மீளத் தோன்றுமா...'

இரண்டையும் தொடுத்த விதம் அருமை. இரண்டையும் தொடுத்தது ஒரு புள்ளிதான். உயிர் வாழ்தல் அல்லது பிளைத்தல் . இல்லையேல் பிழைத்தல்.. ஒரேயெழுத்து அர்த்தத்தை மற்றிவிடுதல் போல.பனியின் கீழ் கிடப்பவை கன்னிமம் ஆகா விட்டாலும் கூட காலத்தின் சுழற்சியில். தாழப் புதைக்கப்பட்ட தமிழர்கள். காலத்திள் சுழற்சி கனிமமாகலாம். அதனை அனுபவிக்கப் போவது காலத்தின் சுழற்சியில்.

ஒன்றுபடவேண்டிய சத்திகள் அனைத்து தமிழர் தரப்பிலும் இருந்தும் ஒன்றுபடாமல் போனது எமது அரசியல் தோல்விக்கு முக்கிய காரணம்.எமது போராட்டம் அதை சாத்தியமில்லாத ஒரு நிலைக்கு தள்ளிவிட்டிருந்தது.

இனி வருங்காலம் நிதானமாக உண்மையான ,நேர்மையான ,விட்டுகொடுக்கும் மனப்பங்குள்ளவர்கள் தமிழனின் விடிவு என்ற பொதுநோக்கோடு ஒன்றுசேருவார்களானால் வடக்கயிறு இழுப்பது மிக மிக சாத்தியமே ,அதற்கு இப்போ இருக்கும் அனைத்து அமைப்புகளையும் விட்டு புதிதாத ஒரு அமைப்பு இன்றிருக்கும் தொழில் நுட்ப வசதியினால் முழு தமிழர்களுக்குள்ளும் இருந்து உருவாகவேண்டும்.

நல்லதொரு கவிதை புத்தாண்டில் படித்தது சந்தோசமாக இருந்தது.

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இனத்திலும் எல்லாமும் இருக்கின்றன. நாம் அவர்களாக இல்லாததனால் எம்மால் அறியமுடியவில்லை. ஒவ்வொரு கயிற்றையும் சுற்றும்போதும் கழற்ற முயலாமல் அல்லவா நாமிருந்தோம். விடுதலை மட்டுமே அனைவர்க்கும் சொந்தமாகலாமே தவிர அதற்க்கான பாதையும் அதில் தொடர்ந்து பயணிப்போரும் எவ்வரலாற்றிலும் சொற்பமே. அதற்காக ஆயிரமாண்டுகள் ஆனாலும் வடக்கயிறு தோன்றாது என்பது உங்களுக்கே உங்கள்வார்த்தைகளின் நம்பிக்கை அற்ற நிலையைக் காட்டுவதாகவே இருக்கிறது நிழலி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.