Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா ரகசிய கனடா பயணம்

Featured Replies

கருணா ரகசிய கனடா பயணம்

விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா கனடாவிற்கு இலங்கை அரசு தரப்பிலான பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 27ம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவின் நெருங்கிய ஆலோசகர் ஒருவருடன் இணைந்து மேற்கொண்ட இப் பயணத்தின் போது விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு அழைத்து அதனுடன் அதிகாரப்பூர்வ சந்திப்புக்களை கனடா மேற்கொண்டதையடுத்து இந்த விஷயத்தில் இலங்கை விழிப்பாகச் செயற்பட்டு வட-கிழக்குத் தமிழர்கள் இணைந்து வாழ்தல் சாத்தியமல்ல என்ற கருத்தை கருணா மூலம் கனடாவின் முடிவெடுக்கும் தரப்புக்களிடம் பரப்பியுள்ளதாகத் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

http://tamil.webduni...120103007_1.htm

Edited by akootha

  • தொடங்கியவர்

மேலே உள்ள செய்தி உண்மையா என உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் இவ்வாறான நடவடிக்கைகளில் சிங்களம் ஈடுபடலாம் என்பது உண்மை. அதற்கேற்ப எமது நடவடிக்கைகளும் அமையவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் என்று தமக்குள்ளே புடுங்குப்பட்டுக் கொண்டிருப்போர் களவாகக் கருணாவைச் சந்தித்து தமிழர்களுக்கு நன்மை செய்யும் வகையில் ஏதாவது உருப்படியான விடயங்களைச் செய்யும்படி கேட்டுப் பார்த்தால் நல்லது!

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு அழைத்து அதனுடன் அதிகாரப்பூர்வ சந்திப்புக்களை கனடா மேற்கொண்டதையடுத்து இந்த விஷயத்தில் இலங்கை விழிப்பாகச் செயற்பட்டு வட-கிழக்குத் தமிழர்கள் இணைந்து வாழ்தல் சாத்தியமல்ல என்ற கருத்தை கருணா மூலம் கனடாவின் முடிவெடுக்கும் தரப்புக்களிடம் பரப்பியுள்ளதாகத் இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இவரின் கருத்தை கனடா கணக்கில் எடுக்குமா ?

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இவர்மீது பெருமளவு குற்றச்சாட்டுகள் இருக்கும் போது இவருக்கு கனடாவுக்குள் செல்ல விசா கனடா அதிகாரிகள் எவ்வாறு வழங்கினார்கள் ?

திரைமறைவில் வேறு எதோ ஒன்று நடந்துள்ளது வெகு விரைவில் உண்மைகள் வெளிவரும்.

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

ஷூ வுக்கு தேவை களிம்பு..

சீன் காட்டுவோருக்கு தேவை பிலிம்பு..

அல்லர் உருவோருக்கு தேவை காப்பாற்ற ஒரு துரும்பு..

தெரு நாய்க்களுக்கு தேவை நல்ல எலும்பு..

டிஸ்கி:

ஆளுக்கு அஞ்ச பத்த கலெக்ட் பண்ணி.. இவனை கரெக்ட் பண்ணி...

ரகசியமாக போட்டோ சூட் எடுத்து ராஜ பக்சே க்கு அனுப்பிவையுங்கப்பா..

***

இந்த அல்லக்கைக்காக மகிந்த ரிஸ்க் எடுக்க மாட்டார்... :) :)

Edited by இணையவன்

  • தொடங்கியவர்

இவரின் கருத்தை கனடா கணக்கில் எடுக்குமா ?

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இவர்மீது பெருமளவு குற்றச்சாட்டுகள் இருக்கும் போது இவருக்கு கனடாவுக்குள் செல்ல விசா கனடா அதிகாரிகள் எவ்வாறு வழங்கினார்கள் ?

திரைமறைவில் வேறு எதோ ஒன்று நடந்துள்ளது வெகு விரைவில் உண்மைகள் வெளிவரும்.

அமெரிக்கா என்றால் நிச்சயம் இவருக்கு அனுமதி கொடுக்காது.

அதேவேளை ஆட்சியில் உள்ள பழமைவாத அரசும் கொடுக்கும் சாத்தியங்கள் இல்லை. அதனால் தான் 'யார்' என்பதை விட அவர்கள் நோக்கம் ( வட-கிழக்குத் தமிழர்கள் இணைந்து வாழ்தல் சாத்தியமல்ல ) பற்றி நாம் கவனமாக இருக்கவேண்டும்.

இந்த கருத்தில் எனக்கும் மாற்று கருத்துகள் கிடையாது.

Edited by தமிழரசு

கருணாவின் கனடா பயணமும் நடக்கும் பேச்சுவார்த்தையும்

உலகத்தின் உந்துதலால் முன்னகர்த்தப்படும் கூட்டமைப்பு - சிறீலங்கா பேச்சுவார்த்தை இதுவரையும் முறிவடையாமல் தொடர்வதன் பின்னணியை புலம் பெயர் தமிழர் சமூகம் சரி வரப் புரிந்துகொண்டுள்ளதா? ஆமெனின், அது தனது சமகால குறைந்தபட்ச கடமையையாவது செய்கிறதா? போன்ற இன்னோரென்ன கேள்விகள் அவசிய அவசரமானவை.

60 ஆண்டு காலமாக நடாத்தப்பட்ட பேச்சுக்கள் முறிவடைந்து அல்லது ஏமாற்றத்தின் நிமித்தம் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் இந்தத் தடவை அதற்கான சாத்தியங்கள் மிகவும் அரிதாகவே உள்ளதால்> இதன் விளைவாக சென்றடையப்படும் முடிவுபற்றி அதிகமாக அக்கறை கொள்ளவேண்டிய நிலையே தமிழராகிய நம் முன் எழுந்து நிற்கிறது.

இம் முறைபேச்சுக்கள் பேச்சளவிலாவது ஒரு முடிவை எட்டாது குழப்பநிலைக்கு செல்லாதவாறு இரு தரப்பிற்கும் அழுத்தங்கள் கொடுபடுவதால் கூட்டமைப்பினரிற்கு வேண்டிய கருத்து வெளிப்பாட்டு ஆதரவையாவது வெளிநாட்டுத் தமிழர் வழங்கவேண்டும்.

கூட்டமைப்பினர் கோருவது போதாது என்ற கோசம் கூட தமிழர் தரப்பை வலுப்படுத்தும். அதைவிட கூட்டமைப்பினரின் குறைந்தபட்சக் கோரிக்கைகளையும் ஆளும் தரப்பு நிராகரித்தாலோ, அன்றில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் என்ற போர்வையில் கூட்டமைப்பினரின் ஆகக் குறைந்தகோரிக்கைளிலும் மேலும் அதிகாரங்களைக் குறைத்தாலோ,

தமிழராகிய நாங்கள் மீண்டும், சேர். பொன். இராமநாதனின் ஐக்கிய நிலைப்பாட்டிலிருந்து, பாகிஸ்தானை பிரித்துக் கேட்ட ஜின்னாவின் நிலைக்குதள்ளப்படுவோம் என்று தமிழர் ஊர்ச் சங்கங்கள் வெளியிடும் அறிக்கைகள் நிச்சயம் உதவும்.

இது கூட்டமைப்பினர் அடம் பிடிக்கவில்லை தேவையான பிரிவினையைக் கூட கேட்கவில்லை என்ற யதாரத்தத்தை உலக இராஜீக மட்டத்திற்கு இலகுவாக உணர்த்த உதவும்.

கூட்டமைப்பினர் புலிகள் போல் விடாப்பிடியாக உள்ளனர் என்ற சாட்டைச் சொல்லி தவறிலிருந்து மகிந்த அரசு தரப்பிக்கும் வாய்ப்பையும் இவ்வாறான அறிக்கைகள் அறவே தவிர்க்க பயன்படும்

பேச்சுவார்த்தைகள் முகாம் தாக்குதலை அல்லது போர் முனையைப் போன்ற ஆபத்துக்களையும் பின்விளைவுகளையும் கொண்டனவே.

இதற்கும் மக்களின் நேரடிமற்றும் பின்புல ஆதரவுகளும் அவசியம். கண்ணிற்கு புலப்படாத இராஜீகப் போரென்று சர்வதேச தளத்தில் நிகழ்வதை தமிழினம் கண்டுகொண்டு தமிழர் தரப்பாக உலகால் கருதப்படுபவர் யாராயினும் இவ்வாறான பின்புலப் பலங்களை தமிழ் மக்கள் தங்கள் அமைப்புக்கள் வாயிலாகவே வழங்கவேண்டும்.

இவ்வாறான பின் புலமக்கள் ஆதரவை தனது பங்குதாரக் கட்சிகளான தீவிர இன வாதக் கட்சிகளிடமிருந்தும், மதபீடங்களிலிருந்தும் மகிந்த அரசுபெற்றுக் கொள்கிறது. சிங்கள தரப்பு ஒற்றுமையாக செயற்பட்டாலும் வெவ்வேறு கொள்கைகளுடன் வெவ்வேறு நாடுகளுடன் சாய்ந்திருப்பதும் இதற்காகவே.

உலகமே பலகுழுக்களாக நகரும் வேளையில் கொழும்பு பிரிந்து நின்றுஆடும் தந்திரமிது. உலகத்துடன் தொடர்பில் இருந்த ஒரே ஒரு பாலா அண்ணரைப் போல் இன்று உலகுடன் தொடர்பில் இருப்பது கூட்டமைப்புமட்டுமே.

உலகத்துடன் தொடர்பற்ற நிலை தமிழரிற்கு நல்லதல்ல. வெறுப்பிருந்தும் மகிந்த அரசு இந்தியாவுடன் தொடர்பை பேணுவதுடன் இந்தியாவே தனதுமுதல் நன்பண் என்று பாசாங்கு செய்வது ஏன் என்பதையும் வெளிநாட்டுத் தமிழர்கள் கருத்திற் கொள்ளவேண்டும்.

இந்தப் பேச்சில் வெற்றிபெறாதது மட்டுமல்ல பேச்சிலிருந்து வெளியேறுவதும் கூட எதுவுமற்ற வெறுமைத் தோல்வியையே தரும் என்பதை தமிழர் சமூகம் உணரத் தவறக் கூடாது.

புலிகளின் பழைய தளபதி கருணா எனப்பட்ட முரளிதரனை கனடாவிற்கு மகிந்த அரசு அனுப்பியுள்ளதாக வந்த செய்தி தமிழினத்தை சிந்திக்க தூண்டவேண்டும். முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு முன்பும் இதேகருணா இந்தியாவிற்கு சென்றமையையும் சற்றுபொருத்தி யோசிக்கவேண்டிய இடம் இது.

இரகசியங்கள் மறைவிடங்கள் மற்றும் புலிகளின் இயல்பானதந்திரங்கள் உபாயங்கள் ,சிந்தனை ஓட்டங்களை ஊகிக்க வல்லகருணா போரில் சிறீலங்டகா தரப்பினரால் ஒருபலமான கருவியாகப் பயன்படுத்தப்பட்டவர்.

திரைமறைவில் விரைந்து வேகமாகவும் விவேகமாகவும் சிறீலங்காவின் தூதர்களும் இராஜ தந்திரிகளும் ஊடகங்களும் புத்திஜீவிகளும் செயற்படுவதன் ஒரு அங்கமே கருணாவை கனடாவிற்கு அனுப்பியமை என்பதை புலம் பெயர் தமிழர் தரப்பு உணர்ந்து கொண்டு வெளிநாடுகளில் செயற்படவேண்டும்.

நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரின் இறுதி அறிக்கையைத் தொடர்ந்து, மேற்படிகருத்துக்களை ஒத்த வேறு தமிழ்ப் பொதுமக்களின் அழுத்தங்களும் அவசியமானவை. அமெரிக்கா என்ற ஒருதலைமையின் கீழிருந்த ஒருமுனை உலகத்தில் சீனா இந்தியா போன்ற நாடுகள் முன்னேறிவருகையில் நிகழம் சமகாலமாற்றங்கள் மற்றும் எதிர்காலமாற்றங்கள் போனறவற்றை உத்தேசசித்து நகராவிடின் தமிழினம் தப்பிப்பிழைப்பதே கடினம்.

இன்று தமிழினம் சந்திக்கும் அரசியலானது உலகமட்டத்திலானது. அதுபெங்களுரையும் திம்புவையும் தாண்டி உல கநகரங்கள் எல்லாவற்றையும் தாண்டி சர்வதேச உயர் மட்டத்திற்கு வந்துவிட்டது. இந்த அரசியலில் கட்சிகள் போல நாடுகளே உள்ளன.

போர்க் குற்றங்களிலிருந்து தப்பிக்க மகிந்த ஒருதீர்வைக் கொடுக்க எத்தனிக்கும் போது நாம் தூங்குவது நிரந்தரமாகியும் விடலாம். உறங்குபோல விற்பிடித்த காலதூதர் கையிலே உறங்காது உலகத் தமிழினம் விழித்தெழவேண்டிய நேரமிது. ஒன்றாக ஒருகொடியின் கீழ் வருவதை விடபொதுவான இன விடயங்களில் மற்றைய வெளிநாட்டுஅமைப்புக்கள் இவ்வாறுபின் புலஆதரவை அளிப்பதும் இன ஒற்றுமையின் ஒருஅங்கமாகும். அங்கங்கள் சகலதும் பங்களித்தாலே வடிவம் முழுமையடையும்.

kuha9@rogers.com

http://news.lankasri.com/view.php?20cILp20e1jQK4ebiGpNcbdF928ddc8293bc41pG2e43oQj3023PLI32

கருணா கனடாவிற்கு இரகசிய விஜயம்! முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டார்?

தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாக இருந்தவரும் நோர்வேஜியப் அனுசரணையுடனான பேச்சுவார்த்தையின் போது விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவுபடுத்தியவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா கனடாவிற்கு சிறீலங்கா அரச தரப்பிலான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மாதம் 27ம் திகதி சிறீலங்கா ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகர் ஒருவருடன் இணைந்து மேற்கொண்ட இப் பயணத்தின் போது விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகிறது.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு அழைத்து அதனுடன் உத்தியோகபூர்வ சந்திப்புக்களை கனடா மேற்கொண்டதையடுத்து இது விடயத்தில் சிறீலங்கா விழிப்பாகச் செயற்பட்டு வட-கிழக்குத் தமிழர்கள் இணைந்து வாழ்தல் சாத்தியமல்ல என்ற கருப்பொருளை கருணா மூலம் கனடாவின் முடிவெடுக்கும் தரப்புக்களிடம் பரப்பியுள்ளதாகத் தெரியவருகிறது.

மனிதவுரிமை மீறல்கள், சிறார்களைப் படையில் இணைத்தல் மற்றும் யுத்தக்குற்ற மீறல்களில் சம்பந்தப்பட்ட கருணாவிற்கு வீசா வழங்கப்பட்ட செய்தியானது கனடிய மனிதவுரிமை அமைப்புக்களை கனடாவின் போக்குக் குறித்த கரிசனைக்கு இட்டுச் சென்றுள்ளது.

போராளிகளாக இருந்து அரசியலில் பிரவேசித்தவர்கள் மீது கடும்போக்கைக் கடைப்பிடித்து வந்த கனடா கடந்த காலத்தில் கருணா வீசாவிற்கு விண்ணப்பித்திருந்த போது அதனை நிராகரித்திருந்தது. அதுபோலவே டக்ளஸ் தேவானந்தாவின் வீசா விண்ணப்பத்தையும் நிராகரித்திருந்தது.

இருந்த போதும் இப்போது நிகழ்ந்துள்ள இம் மாற்றத்திற்கு மகிந்த ராஜபக்சவினது நேரடித் தலையீடும் அவரது ஆலோசகர்களின் செயற்பாடுகளுமே காரணம் எனத் தெரியவருகிறது. ராஜபக்சவின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் காரணத்தால் இராஜதந்திரக் கடவுச்சீட்டைக் கருணா கொண்டிருந்தாலும்,

அவர் லண்டனிற்கு நவம்பர் 2007 விஜயம் செய்த போது லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு போலியான இராஜதந்திரக் கடவுச்சீட்டில் பயணம் செய்ததற்காக ஒன்பது மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இந்தக் கடவுச்சீட்டு தனக்கு கோத்தபாய ராஜபக்சவால் வழங்கப்பட்டதாக அப்போது பிரித்தானிய நீதிமன்றில் கருணா தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்டு பொதுநலவாய நாடொன்றில் சிறை வைக்கப்பட்ட ஒரு நபருக்கு பொதுநலவாய நாடுகளில் முக்கியமானதான கனடா வீசா வழங்கியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஈழப்போர் இரண்டின் ஆரம்பத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் பணியாற்றிய பொலிசாரை சுற்றி வளைத்து போது அவர்களை புலிகளிடம் சரணடையுமாறு பிரேமதாசா அரசு கேட்டிருந்தது. அதன்படி சரணடைந்த 600 பொலிசார் யூன் 11, 1990ல் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அதற்காக காரணமாகக் கருணாவை குற்றஞ்சாட்டும் மேற்படி பொலிசாரின் குடும்பத்தினர் இந்த விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டுமெனவும் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் இரு வாரங்களிற்கு முன்னர் மகிந்தவின் அரசைக் கேட்டிருந்த நிலையிலேயே கருணாவின் கனடாவிற்கான இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

http://news.lankasri.com/view.php?203oQjHdbcdF92q34e0cILp3023RpGibddcaGp1420eTPLIkbe4c82934cbe1jQK32

  • தொடங்கியவர்

நன்றி இணைப்புக்கு இறைவன். பல நல்ல தகவல்களை எழுதுயுள்ளார் இந்த உறவு. உண்மையில் கூட்டமைப்பு இதுவரை சிங்களத்தின் ஏமாற்று வித்தையை நன்றாக கையாண்டு வருகின்றது. அதேவேளை அதற்கு புலம்பெயர் மக்களும் முடியுமான வழிகளில் பலம் சேர்க்கவேண்டும், சர்வதேச நாடுகளில் சிங்களத்தின் கபடங்களை அம்பலப்படுத்தவேண்டும்....

இதற்கும் மக்களின் நேரடிமற்றும் பின்புல ஆதரவுகளும் அவசியம். கண்ணிற்கு புலப்படாத இராஜீகப் போரென்று சர்வதேச தளத்தில் நிகழ்வதை தமிழினம் கண்டுகொண்டு தமிழர் தரப்பாக உலகால் கருதப்படுபவர் யாராயினும் இவ்வாறான பின்புலப் பலங்களை தமிழ் மக்கள் தங்கள் அமைப்புக்கள் வாயிலாகவே வழங்கவேண்டும்.

கருணாவின் கதையை யாரும் கேட்கப்போவதில்லை; கருணாவின் சகாக்கள் அடங்கலாக. கருணாவின் அதிகமான சகாக்கள் பிள்ளையான் போன்றவர்களே. இவர்கள் எல்லோரும் மற்றயவரின் இடங்களைப்பிடித்து கொள்ள அவர்களின் அழிவு எப்போது என்று காத்திருப்பவர்களே. அவனுக்கும் அது தெரியும். சகாகளுக்கும் அவனுக்கு அது தெரியும் என்பதும் தெரியும். "Dog eat dog". இந்த நிலையில் கருணா வெளியில் வந்து செய்ய தக்கது எதுவும் இல்லை. எழுத வாசிக்க தெரியாதா கருணா அப்படி ஒன்றும் பெரிய பிரச்சர பீரங்கி இல்லை என்பதும் எட்டுமட்டும் படிச்ச மகிந்தாவுக்கும் தெரியும்.

கருணாவை கோபத்தபயா கனடா அனுப்புவது ஆறு நித்திரையா அல்லது விளிப்பா என்று பார்க்கவே. சவேந்திர சில்வா அமெரிக்கவுக்கு; கருணா கனடாவுக்கு. திருடன் கடிக்க வருகிற நாயிற்க்கு போடவென்று இறைச்சி துண்டுகளை கைபையில் கொண்டு செல்வது வழமை. இறைச்சி துண்டை தூக்கி எறிய, கடிக்க வருகிற நாய் அந்த இறைச்சி துண்டை கடித்து சாப்பிட தொடங்கி திருடனை கடிக்க மறந்து விடும்.

கருணா சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வாழ்ந்துவிட்டான். இப்போது கர்ணன் மாதிரி அவனுக்கு செஞ்சோற்று கடன் தீர்க்க வேண்டிய காலம் கிட்ட கிட்ட வருகிறது. அவனுக்கும் தெரியும் தான் முடிவில் தலையை கொடுத்துத்தான் இந்த கடனை அடைக்கவேண்டி வரும் என்று. அவனுக்கு உயிர் பிச்சை போட்டு காபாற்றியவங்கள் அதை கேட்கிறார்கள். "இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா? போனால் போகட்டும் போடா" என்று கனடா போக கருணா துணிந்து விட்டான்"

Edited by மல்லையூரான்

Duo12.jpg

Duo600.jpg

Vinayagamoorthy Muralitharan and his wife were among those dawning 2012 at the Ramada Colombo. Pix by Waruna Wanniarachchi

  • கருத்துக்கள உறவுகள்

கருணா என்கின்ற முரளீதரனை இன்னும் எம்மில் பலர் விடுதலைப் புலி என்று தான் நினைச்சுக் கிட்டு இருக்காங்க. அவரை விடுதலைப்புலிகள் அமைப்பே விட்டுத்தள்ளி கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகப் போகிறது. அதுவும் இன்றி விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் சர்வதேச ஒத்துழைப்போடு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள இந்த நிலையில்.. இந்த முரளீதரன் பற்றிய செய்திகள் அதீத தாக்கத்துக்குரியன அல்ல. அப்படி தமிழர்கள் கருதுவார்கள் என்றால்.. தமிழர்கள் கொள்கை ரீதியில் பலவீனமாக உள்ளனர் என்பதையே அது உலகிற்கு காட்டும்.

ஜெயசிக்குறு எதிர்ப்புத் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் ஆயுத இருப்புப் பற்றிக் கூட தெரியாத ஒரு தளபதியே கருணா. இவனைக் கண்டு புலம்பெயர் தமிழர்கள் நடுக்கினம் என்றால்.. அது கருணாவின் பலம் அல்ல.. புலம்பெயர் தமிழர்களின் பலவீனம் மட்டுமே ஆகும்..! :lol::icon_idea:

கருணா.. முரளீதரன் பொண்ணுக்கும் பொருளுக்கும் தேசத்தைக் காட்டிக் கொடுத்த தமிழர்களின் வரிசையில் நிற்கின்றானே தவிர.. வேறெதுவும் அவனை பற்றி சொல்லிக்க வேண்டியதில்லை..! கருணா வழியில் போக.. எம்மில் பல நூறு பேர் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றனர்.. என்ற அடிப்படையில் இருந்து கொண்டு தான் நாம் உரிமைக்காகப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். இது எமது சமூகத்தில் உள்ள ஒரு பிரச்சனை மட்டுமல்ல.. முதலாளித்துவ.. பாகுபாட்டு உலகில் இது சகஜமே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் என்று தமக்குள்ளே புடுங்குப்பட்டுக் கொண்டிருப்போர் களவாகக் கருணாவைச் சந்தித்து தமிழர்களுக்கு நன்மை செய்யும் வகையில் ஏதாவது உருப்படியான விடயங்களைச் செய்யும்படி கேட்டுப் பார்த்தால் நல்லது!

:lol: :lol: :lol:

நல்லாத்தான் அவிக்கிறீர்கள் புட்டு இரண்டு வருடம் புளோட்டில் இருந்து 25 வருடங்களுக்கு முன் விட்டு விலத்திய நாங்களெல்லாம் இப்பவும் புளொட் ,சோத்துபாசல்.

கிழக்கின் தளபதி ,வெளிநாட்டிற்கு பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டவர்,ஜெயசுக்குறுவால் புலிகளையே பிழைக்க வைத்த கருணா புலி இல்லை . நேரத்திற்கு நேரம் கூத்துஆடவும் வேஷம் போடவும்தான் நீங்களெல்லாம் லாயக்கு.

மல்லையூரான் "எழுத வாசிக்க தெரியாத கருணா " என எழுதியுள்ளீர்கள் .அடேல் பாலசிங்கத்தின் எழுத்துக்கள் வாசிக்கவில்லையா ? அல்லது பீ.பீ.சீ ஒரு நாளும் கேட்டதில்லையா ? துரோகியாக இருந்தாலும் கருணா வலு விபரமான ஆள் என்பதுதான் உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்

போட்டீங்களே ஒரு போடு சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் என்று தமக்குள்ளே புடுங்குப்பட்டுக் கொண்டிருப்போர் களவாகக் கருணாவைச் சந்தித்து தமிழர்களுக்கு நன்மை செய்யும் வகையில் ஏதாவது உருப்படியான விடயங்களைச் செய்யும்படி கேட்டுப் பார்த்தால் நல்லது!

அப்படி கருணா செய்ய என்ன இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி கருணா செய்ய என்ன இருக்கிறது?

தமிழர்களுக்குச் செய்ய ஒன்றுமில்லையா?

தமிழரின் தாயகம் சிங்களவர்களால் கபளீகரம் செய்யப்படுவதை நிறுத்தலாம்.

சரணடைந்த போராளிகளை விடுவித்து அவர்களை சமூகத்துடன் இணைக்கும் திட்டங்களைச் செயற்படுத்தலாம்.

தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கலாம்

இது எல்லாம் அவருக்குச் செய்யமுடியாவிட்டால், எல்லாத் தமிழ்மக்களையும் கப்பல்களில் ஏற்றி ஐரோப்பா, அமெரிக்கா, கனடா அவுஸ்திரேலியா என்று அனுப்பக் கேட்டுப் பார்க்கலாம்!!

இவைகள் மனிதருக்கு சாத்தியமானவை..............

பொம்மைகளுக்கு? யாரவது மனிதர் வைன் கொடுக்கணுமே? அந்த சாவி கொத்தாவிடம்தான் இப்போ.

இலங்கையில் இருந்து மந்திரி கருணா ரகசியமாக கனடா பயணம்: தமிழர்களை பிளவுபடுத்த சதி

Colombo செவ்வாய்க்கிழமை, ஜனவரி 03, 11:14 AM IST

d9e091ff-058a-42b6-890b-48608c4f6576_S_secvpf.gif

கொழும்பு, ஜன. 3-

விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன். சிங்களர்கள் கொடுத்த பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இவர் விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவுபடுத்தி ஈழத்தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்தார். துரோகத்துக்கு பரிசாக இவருக்கு ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்தார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, சிங்கள படைகளுக்கு உதவியாக இருந்தார். தற்போது அவரை தங்களது சதி செயல்களுக்கு ராஜபக்சே பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஈழத் தமிழர்கள் ஒன்றுப்பட்டு நாடு கடந்த தமிழீழத்தை உருவாக்கியுள்ளனர். அதை உடைக்கும் குள்ளநரி வேலையில் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.இதற்கு அவர் தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாவை பயன்படுத்துகிறார்.

ஈழத் தமிழர்கள் மிக அதிக அளவில் கனடாவில் வசித்து வருகிறார்கள். கனடா நாட்டு அரசும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ராஜபக்சே, தற்போது கருணாவை கனடாவுக்கு அனுப்பியுள்ளார்.

ராஜபக்சேயின் ஆலோசகருடன் மிக, மிக ரகசியமாக கருணா கனடா சென்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கனடா அரசாங்கத்திடம், வடக்கு-கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்கள் இணைந்து வாழ்வது சாத்தியம் அல்ல என்பதை வலியுறுத்த கருணா அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உலக அளவில் ஈழத் தமிழர்களிடம் பெரும் பிளவை உண்டாக்கும் வகையில் கருணாவை முன் நிறுத்தி இந்த சதி நடப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு கருணா பல தடவை அனுமதி கேட்டும், கனடா அவரை தன் நாட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. இதனால் ராஜபக்சே சில நாடுகள் துணையுடன் கனடாவுக்கு நெருக்குதல் கொடுத்து கனடாவில் கருணாவுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. கருணா மேலும் மேலும் துரோக செயலில் ஈடுபடுவது, சர்வதேச ஈழத் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

http://globalpeacesu...-to-Canada.aspx

பி.கு:கனேடிய உறவுகள் இவரை அங்கே மாட்ட பார்க்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

Duo600.jpg

Vinayagamoorthy Muralitharan and his wife were among those dawning 2012 at the Ramada Colombo. Pix by Waruna Wanniarachchi

பார்வையால் சகுந்தலையின் பிறப்பை காவியம் வடிக்கும் கருணாவும் மனைவியும்?

Stop bitching karuna. We don't know karuna, infact we dont know any of the LTTE leaders. Not every bread and butter can become like col.karuna. He is special, in good way or other.

As someone mentioned here.. Something is going on..

No matter what we done, all failed to get noticed, even though we staged one of the world biggest protests in very unlikely places. there is nothing els we can do. Let the game go on it course. And hope for the best.

Take this... There is No WW1,WW2 and the Cold War...

A conflict started in 1914 ended in 1991.

.

  • கருத்துக்கள உறவுகள்

Duo12.jpg

Duo600.jpg

Vinayagamoorthy Muralitharan and his wife were among those dawning 2012 at the Ramada Colombo. Pix by Waruna Wanniarachchi

இவளுக்கு வர இருக்கின்ற இனிசியல் பிரச்சனை தீர்க்கத்தான் சிங்களத்தால் கருணா அனுப்பி வைக்க பட்டிருப்பார் போல...

டிஸ்கி:

இவ்வளவு அமளிதுமளியிலும் ஒருத்தன் அசையாம மிக்சர் தின்னுட்டிருக்கான் பார்...

:icon_mrgreen: :icon_mrgreen:

இது இப்போது பல்லு புடுங்கின பாம்பு பார்ப்பவர் பயப்படுமளவுக்கு இத்திட்ட ஒன்றுமில்லை வெகு விரைவில் நடுரோட்டில் ராயர் ஏறிய பாம்பு போல் அடிபட்டு கிடக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.