Jump to content

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது கருத்தும் கோமகனது கருத்து தான்..நான் நேற்றே வந்து யாழில் எழுத வேண்டும் என நினைத்தனான் ஆனால் ஒழுங்காக எந்த வித ஆக்கத்தையோ அல்லது உருப்படியான கருத்தையோ எழுதாத நான் வந்து முதலில் எழுதி இருந்தால் நான் வந்து போட்டி,பொறாமையில் சொல்கிறேன் என்பார்கள் அதனால் தான் பேசாமல் இருந்தேன்...யாழில் ஒரு கருத்து எழுதினால் எல்லோருக்கும் அது பிடிக்க வேண்டும் என்று இல்லை மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் எழுத வேண்டியதில்லை.எங்களுக்கு எது சரி எனப்படுகிறதோ அதை நாங்கள் எழுதுகின்றோம்.

ஒரு கருத்து உங்களுக்கு பிடித்திருந்தால் அதை ஆதரிக்கிறதிற்கு தான் பச்சை குத்தும் முறை இருக்குதே [அது கூட‌ எனக்குப் பிடிக்கவில்லை என்பது வேற விச‌யம்] பத்தாதற்கு வருட‌த்திற்கு ஒரு முறை விருது கொடுக்கிறோம்...இத் திரியால் யாழில் உறுப்பினர்களிடையே சண்டை,சச்சர‌வுகள் தான் வரும்.இத் தொட‌ங்கியவர் யாழிக்குள் பிர‌ச்ச‌னை உருவாக்க வேண்டி வேறு பெயரில் வந்தவுட‌ன் இத் திரியைத் தொட‌ங்கி உள்ளார்...முதலில் நிர்வாகத்திற்கு நகர்த்திய இணையவன் பிறகு என்ன கார‌ணத்திற்காக திரும்ப இணைத்தாரோ தெரியவில்லை.

சகாரா அக்கா எப்படி இத் திரிக்கு ஆதர‌வு கொடுத்தாரோ தெரியவில்லை...யாழிற்கு புதிதாக வருபவர்களைளோ அல்லது நன்றாக எழுதுபவர்களையோ அத் திரியும் போய் பாராட்டி ஊக்கப்படுத்தி,பச்சை குத்தி எழுத வைக்கிறோம் அதற்கு மேல் இது எதற்கு?...ஏற்கனவே பல பேர் பல திரிகளில் மோதுப்பட்டு,பிரிவு பட்டு அவர்களுக்குள் ஒருவர் என்ன நல்லது எழுதினாலும் மற்றவர் ஆதர‌வு கொடுப்பதில்லை...அதை விட‌ ஒரு உதார‌ணத்திற்கு இந்த மாதம் சிறந்த கருத்தாளாராக ஒருவரை தெரிவு செய்கின்றோம் என வைப்போம் அடுத்த மாதமும் இதை விட‌ சிறந்த ஆக்கத்தை அந்த கருத்தாளார் எழுதுகின்றார் அல்லது தான் நன்றாக எழுதியுள்ளேன் என அவர் நினைக்கிறார் ஆனால் தகுதியில்லாத ஒருவருக்கு அந்த விருது போகிறது அவருக்கு எப்படி இருக்கும்?...எல்லாவற்றையும் விட‌ இவர் தான் இந்த மாதம் சிறந்த கருத்த‌ளார் என ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை எந்த அடிப்படையில் ஒருவருக்கு வழங்கலாம்?

ஆகவே மோகன் அண்ணாவும்,நிர்வாகமும் தயவு செய்து இத் திட்ட‌த்தை நிராகரிக்கும் படி அன்பாக கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • Replies 306
  • Created
  • Last Reply
Posted

கேம் ஓவர் ரதியக்கா :o :o , என்ரை பச்சை மை முடிஞ்சு போச்சுது :lol::icon_idea: 1 .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேம் ஓவர் ரதியக்கா :o :o  ,  என்ரை பச்சை மை முடிஞ்சு போச்சுது :lol::icon_idea:  1 .

நாம இருக்கிறமில்ல குத்தியாச்சு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேம் ஓவர் ரதியக்கா :o :o , என்ரை பச்சை மை முடிஞ்சு போச்சுது :lol::icon_idea: 1 .

ரதி அக்காவா?

இது ரொம்ப ரொம்ப கொலைவெறி................ :D:icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

*

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர் மோகன் உடனே போக்குவரத்தின் இதை போல ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பது தங்கள் கடமை ஆகிறது.. பச்சை ஒரு மூலையில இருந்தாலும்(பச்சைக்கு யாரும் மெடல் குடுக்க போவது இல்லை..)

.. ஆக்க பூர்வமாக கருத்து எழுதுபவர்கள்(எதற்காக மிஸ் ஆச்சு என மேலும் தங்களை மெருகேற்றி கொள்ள உதவும்...) அதனால் பல நல்ல படைப்புகளை தர இயலும்.. வந்து சும்மா

அண்டார்க்காவில் பெண் கொடுமை..

அதனை தடுப்பதற்கு யாருக்கும் இல்லையே ஒரு திறமை..

வரதட்சணை கொடுமை யால் அங்கங்கு கேஸ் ஸ்டவ் வெடிக்கிறது...

அதை கேட்டு கேட்டு எனக்கு இதயமே வெடிக்கிறது..

(லாஜிக் பிறகாரம் இதயம் வெடிச்சா யாராவது உயிரோட இருக்க முடியுமா..?)

என ஒரு கோஸ்டியும்..

அவள் என்னை பார்த்தால் அன்று பர்ஸ் காலி..

அவள் சிநேகிதி இன்று என்னை பார்த்தால் என் ஏ.டி.மே காலி ...

பொண்னுங்க எல்லாம் நம் வாழ்வின் சாபம்...

அடிடா அவள உதடா அவளா...

என ஒரு கோஸ்டியும்..

டிஸ்கி:

எல்லாம் அண்டார்டிக்கா கிளம்பபோவது இல்லை... சும்மா இங்க அப்புடியே கோர்த்து எழுதி போட்டு திரியவேண்டியதுதான்..

தோழர் போக்குவரத்து நல்ல கருத்தாளர்களுக்கு ஏதோ பரிசு பொருள் எல்லாம் கொடுப்பதாக சொல்லி இருக்கார்...

அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் :) :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்ணனுக்கு நித்திரைக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு இங்கு வந்து எழுதுவது எப்படி தகும் தம்பி புரட்சி :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

களத்திற்கு மீண்டும் வந்த போது நீங்கள் வரவேற்கவே இல்லை .. போகட்டும்..

ஓட்டல் காரன் பினாயிலில் புரோட்டோ தட்டி போட்டான் எனக்கும் தூக்கம் வரல.. நடுவில் சில உதவாத கருத்துகளை பார்க்கும் போது .. வந்து போக தோன்றியது.. அதற்கெல்லாம் கோவிக்காதீங்கோ தோழர் விசுகு... அடுத்த மாதம் (வீட்டு எஜமானி அம்மா) வந்ததில் இருந்து எல்லாம் நார்மலாகி விடும் :D :D

Posted

இந்த விடயத்தில் நல்லா யோசிக்க வேண்டியது யார் என்பது பெரிய கேள்வி.

இதில் இருக்கும் நன்மை, தீமைகளை விளங்கவேண்டிய, விளக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் யார் என்பதும் அதன் பின்விளைவுகள் என்பவற்றினை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியவர்கள் யார் என்பதும் தெளிவாக தெரிந்தாலும்,

அவர்களின் முடிவினைத் தீர்மானிப்பது உறுப்பினர்களுடைய வரவேற்பினைச் சார்ந்தது.

என்னைக் கேட்டால், ஒரு கருத்தாளனுக்கு அவனது எழுத்துக்கு வரும் கருத்துக்கள், விமர்சனங்கள் என்பவைதான் உயரிய பரிசு. அதைவிட பணமோ ஒருமாத உச்சாணிக் கொப்போ இல்லை.

இது தேவையா தேவையில்லையா என்பதனை,

பொறுத்திருந்து பார்ப்போமே.

உறுப்பினர்கள் எல்லாரும் என்ன சொல்கின்றார்கள் என. :rolleyes::)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் என்ரத்தமாக வந்திருந்தால் நிச்சயம் வரவேற்றிருப்பேன்.

நான் மார்வாடிகளின் ரத்தமில்லையே புரட்சி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை சிக்னேச்சர் மாத்துறேன் தோழர் விசுகு... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுதுதுதுதுதுதுதுதுதுதுது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது நீங்களும் எங்கள் ரத்தம் புரட்சி

மாற்ற வைத்த விசுகு அண்ணாவிற்கும்

மாற்றிய புரட்சிக்கும் நன்றிகள் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு உங்கள் திட்டம் விளங்கவில்லை.

50 டொலர் பெறுமதியான பரிசு கருத்தாளருக்கு என அறிவித்துள்ளீர்கள்.

அதை ஏன் கருத்தாளரின் பெயரால் பணமாகா யாழுக்கு நீங்கள் வழங்கக் கூடாது.

அல்லது நிர்வாகம் அதை ஏற்கவில்லையா?

உங்கள் வெகுமதியை உலகம் பூராகவும் பயன்படுத்தலாமா?

விளக்கம் தாருங்கள் போக்கு வரத்து.

Posted

நன்றி உங்கள் கேள்விகளுக்கு வாத்தியார்;

1-கருத்தாளர்கள் இங்கு பங்காளிகள். கருத்தாளர்கள் இல்லா விட்டால் கருத்து களம் இல்லை. எனவே கருத்தாளர்களிற்கு வழங்கப்படும் சன்மானம் யாழிற்கு கிடைப்பதாகவே கருதலாம்.

2-எமது நிறுவனம் வேறு ஒரு பகுதியில் நேரடியாக யாழுக்கு வழங்குவதற்கு ஒரு அனுசரணையை செய்கிறது. அங்கு கிடைக்கும் பங்களிப்பு உங்கள் சார்பாக யாழுக்கு வழங்க படும் ( 'உங்களால் முடியுமா?' ஒரு அறிவுரை = 1 டாலர் = http://www.yarl.com/forum3/index.php?showtopic=96339 ).

3-12*50 = 600 டாலர்கள் தொகையை நேரடியாக விளம்பர கட்டணமாக ( for front page Ads ) கொடுப்பதை விட இவ்வாறான ஒரு அனுசரணையை வழங்கும் போது யாழ் களத்தின் எல்லா பங்காளிகளுக்கும் அதிகளவு அனுகூலங்கள் ஏற்படும் என நாம் கருதுகிறோம்.

4-இங்கு இணைவதற்கோ அல்லது கருத்துகளை பகிர்வதற்கோ யாழ் கள பொறுப்பாளர் திரு.மோகன் அவர்கள் எம்மிடம் எதுவித கட்டணமும் கேட்கவில்லை. ஆனால், ஒரு வியாபார நிறுவனம் எனும் வகையில் எமது மனச் சாட்சிப்படியும் , யாழை வர்த்தக ரீதியாக கொண்டு செல்வதற்கு உதவும் முகமாகவும் ( புதிய ஆண்டும் யாழும் = http://www.yarl.com/forum3/index.php?showtopic=96237) நாமாக முன் வந்து இந்த அனுசரணையை சிறிய உதவியை செய்கிறோம். இதன் மூலம் பல வித அனுகூலங்கள் யாழுக்கு ஏற்படும் என நினைக்கிறோம்.

5-ஆம்,எமது வெகுமதியை உலகம் பூராகவும் பயன் படுத்தலாம். அன்பளிப்பு சான்றிதழ் Gift Certificate online மூலமாக இலகுவில் வாங்க முடிவதோடு இலகுவில் அதை பெற்று கொள்பவர் பயன்படுத்தவும் முடியும். இதற்கு பயன்படுத்துபவரின் பெயர், விபரம் ஒன்றும் தேவை இல்லை. மின்னஞ்சல் முகவரி ஒன்றே போதும். தாம் தாம் வாழும் நாட்டில் உள்ள நிறுவனங்களில் வெகுமதியை பயன்படுத்துவதற்காக பயன்படுத்துபவரின் நாட்டு விபரமும் தேவை படும். உ+ம் இங்கு கனடாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயன்படுத்த கூடிய அன்பளிப்பு சான்றிதழை இந்தியாவில் பயன்படுத்த முடியாது. எனவே இந்தியாவில் உள்ள வியாபார நிறுவனம் ஒன்றின் அன்பளிப்பு சான்றிதழை online மூலமாக நாம் வாங்கி அதை பயன்படுத்துபவருக்கு வழங்க வேண்டும்.

நன்றி

Posted

இருதரப்பு வாதங்களையும் ,ஒளிச்சு நின்னு பார்த்து ஆராய்ந்ததில்...

கனம் கோட்டார் அவர்களே........ ஐ...மீன் போக்குவரத்து அவர்களே...

கருத்துக்கு எப்பிடிதான் பரிசு கொடுப்பீங்க? ஒரு நாளைக்கு ஒருவர் பதியுற கருத்துக்களே ஏராளம்,, இதுல ஒரு மாசத்துல அவர் எழுதின சிறந்த கருத்துக்கள் எதுன்னு எப்பிடி , ஒருவர் தீர்மானிக்க முடியும்? & எத்தனை பேரின் ஒருமாத கருத்துக்களை ஆராய்ந்து ஒருவரை தெரிவு செய்ய முடியும்?

கருத்துக்கள் என்பது ஒரு விடயத்தில்... ஒருவர் கொண்டுள்ள வித்யாசமான பார்வைதானே

கருத்துக்கள் என்பதில சிறந்த கருத்து எது.. கன்றாவி கருத்து எதுன்னு எப்பிடி கப்புன்னு ஒரு முடிவுக்கு வாறதாம்?

இதனை நேரமெடுத்தும்& ஒரே ஒரு நடுவர் செய்து முடிப்பதும் நடைமுறை சாத்தியமே இல்ல!

வேணும்னா ஒருவரின் மிக சிறந்த சுய ஆக்கத்திற்கு , பரிசு கொடுக்கலாம்,,,!!

அதனை தெரிவு செய்ய ,,, வெவ்வேறு சிந்தனை போக்குடைய கருத்தாளர்களிலிருந்து ,,,

ஒரு நடுவர் குழுவை அமைக்கலாம்!, அதால

தனி ஒருவர்மீது ஏற்றப்படும் சுமையும் குறையும்,,, அன்ட் ....

தெரிவு செய்யப்பட்டமைக்கான ,,,

காரணங்களும் பெரும்பாலும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாகவும் இருக்கும்!

அது: மற்றவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதாகவும் அமையும்,,,

அதே நேரம்,,, ஒரு ஆக்கத்தை நேரமெடுத்து உருவாக்கிய ஒரு எழுத்தாளனை கெளரவபடுத்தியகதாகவும் அமையும்!!

பைதவே - இது நானு டமுக்கட்டி திங் பண்ணின சொந்த கருத்து, இதுல எந்தப்பக்கமும் சார்போ /எதிர்ப்போ இல்ல,

கனம் கோட்டார் அவர்களே! :)

Posted

உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி அறிவிலி.

சிறந்த சுய ஆக்கத்திற்கு வெகுமதி கொடுப்பதும் நல்ல தொரு ஊக்கமாக அமையும். சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் சுய ஆக்கத்தை படைத்தவருக்கு ஊக்கம் கொடுக்கலாம். ஆனால் தினமும் எழுதுகின்ற கருத்தாளர்களில் ஏத்தனை பேர் இங்கு சுய ஆக்கம் படைக்கிறார்கள்.?

ஒரு நிறுவனம் எனும் வகையில் சிந்தனைகள் idea க்கு அதிக முக்கியத்துவம் செலுத்த விரும்புகிறோம். அவை தனிநபர்களோ வியாபார நிறுவனங்களோ முன்னேறுவதற்கு உதவும் வகையில் அமைந்தால் நல்லது. எனவே தான் மிக சிறந்த சமூக/தனிநபர்/வியாபார முன்னேற்றத்துக்கு உதவும் கருத்துக்கள் என கூறப்பட்டது. இது ஒரு பரீட்சார்த்த முயற்சி.

மற்றவர்களும் உங்கள் ஆலோசனைகளை சொல்லுங்கள்.

நன்றி

Posted

ஒரு திரியில் 9 டிம் கோட்டன்களில் களவு போனதாகச் செய்தி. திரி கொட் ஆக மாறியிருக்கிறது. இன்னொரு திரியில் வியகலா படித்தவர்களுக்கு வேலை என்று பேசமுயல்வதை தடுக்கிறார்கள். கதை அவரின் கணவரின் கொலையிலும்......... முடிகிறது. இன்னொரு திரியில் மகிந்தா நேசக்கரம் நீட்டுகிறாராம். தேவானந்தா அந்த செங்குருதி சொட்டும் கையை த.தே.கூ அமைப்பு பற்ற வில்லை என்று குறைப்படுகிறார்.

புத்தாண்டு வாழ்த்துடன் ஆரம்பிக்கும் இன்னொரு திரியில் இப்படி சில விடையங்கள் காணப்படுகின்றன.

"அனைவருக்கும் வணக்கம்,

மீண்டும் ஒரு புதிய ஆண்டில் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எம்மக்கள் படும் துயரங்களால் மனசு நிறைய வலிகள் இருந்தாலும் யாழை கொண்டு நடாத்துவதால் சில விடயங்களை தற்காலிகமாக மறக்க முடிகின்றது.

வருங்காலங்களிலும் தளத்திற்கான செலவினை நான் தனிப்பட பொறுப்பெடுத்துக் கொண்டாலும் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என நினைக்கின்றேன்.

2. இந்த முதன்மைக்குழுவே விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை எவ்வாறு தாயக மக்களுக்கு வழங்குவது என்பதைத் தீர்மானிக்கும். (இந்தக் குழுவில் நான் இருக்கமாட்டேன். அத்துடன் எனது தலையீடு எதுவும் இருக்காது.)"

வீர வணக்கம்.. வீரவணக்கம்... என்று முடிகின்றன வேரோடு விழுத்தப்பட்ட வீர வேங்கை களுக்கு வணக்கம் தெரிவிக்கும் சில திரிகள்.

நேசக்கரம் கை நீட்டும் திரிகள் சில. சுபா சுந்தரலிங்கம் உதவிக்கு கோரிக்கை விடும் திரி ஒன்று.

போழுது போக்கு தளமான யாழில் திரிகள் பலவிதம். திரிக்கு திரி கருத்துகள் பலவிதம்.

எத்தனை வகைத்திரிகள் இருந்தாலும் யாழ் ஈழவிடுதலையில் தனது கடமையை சரியாக செய்கிறது. இது நிர்வாகத்தாலும் கருதாளர்களாலும் தான் செய்து முடிக்கப் படுகிறது.

நான் ஒன்றும் பகிடி எழுதவில்லை. இப்படி பணம் கொடுப்பது கருத்தாளர்களை கையீனாக்கள் ஆக்கும். தளம் இன்னும் சில காலம் விடுதலைக்கு உழைக்க வேண்டும்.

இதை வேண்டுவோர் பிரேரிக்க வேண்டுவோர் ஏற்றுக்கொள்ளட்டும்.

"Jan 2012 மாதத்திற்கான சிறந்த கருத்தாளரை தெரிவு செய்வதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு மல்லையூரான் அவர்களையும்"

போக்குவரத்து: இப்படி நீங்கள் விடும் அழைப்பை என்னால் சிநேக பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது. எப்போதாவது ரொறொண்ட்டொ வரும்போது முடிந்தால் போக்குவரத்து ஆபிசில் சந்திக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மூன்று கருத்துக்களை மட்டும் வைத்து ஒருவரைச்

சிறந்த கருத்தாளர் எனத் தெரிவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.

அதைவிட தனி நபர்களே அவர்களைத் தெரிவு செய்வதும் நல்லதல்ல.

இதுவரை இப்படியான தெரிவுகள் இல்லாமலேயே பல நல்ல

கருத்தாளர்களை உருவாக்கிய களம் யாழ் களம்.

Posted

இந்த முயற்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுதப்பட்ட கருத்துக்களை சீர் தூக்கி பார்த்தால் ஆதரவான கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை விட மேலதிகமாக ஒன்பது பச்சடிகள் (நாம் பச்சடிகள் போட இல்லை) விழுந்துள்ளன (Jan 12, 2012 கனடா நேரம் பி.ப 2.10 வரை).

யாழ் நிர்வாகமும்//கருத்து கள பொறுப்பாளர் இந்த முயற்சிக்கு தடை போடும் விதமாக ஒன்றும் சொல்லவில்லை.

அதாவது எதிர்ப்போரை விட ஆதரிப்போர் அதிகம் ஆக உள்ளனர் / மற்றவர்கள் அமைதியாக உள்ளனர்.

இந்த முயற்சியை எப்படி பயனுள்ள வகையில் மேற் கொள்ளலாம், சாத்தியமாக்கலாம் என தொடர்ந்து சிந்திக்கின்றோம்.

நன்றி

Posted

சிறந்த கருத்துக்கள் என்றால் என்ன? என்பதை வரையறுத்தால் - பின்னர் அதற்கேற்ப வழங்கப்படும் சிறந்த கருத்துக்களுக்கு பரிசு வழங்கலாம். காரணம் - பலவேறு உறுப்பினர்களுக்கு வெவ்வேறு திறமைகள் உள்ளன, அதனால் அவரவர் கருத்துக்கள் அந்தந்த இடங்களில் உயர்வாக இருக்கும்.

அதாவது இந்த களத்திலும் பல பிரிவுகள் உள்ளன. உதாரணத்திற்கு அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்கள், கலை/கலைச்சாரம் தொடர்பான கருத்துக்கள், அறிவியல் கருத்துக்கள் என இன்னும் பல பிரிவுகள் உள்ளன.

எனவே அவற்றை பிரித்து மூன்று பரிசுகளை வழங்கலாம். உதாரணத்திற்கு முதல் மாதத்தில் ஒரு மூன்று பிரிவுகளையும் அடுத்த மாதத்தில் வேறு மூன்று இல்லை முன்னையதில் ஒன்றும் புதிதாக இரண்டும் என இணைக்கலாம்.

இந்த அணுகுமுறை எல்லா துறைசார்ந்த கருத்துக்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இதில் கோமகன் அண்ணா,மல்லையூரான் அண்ணா,ரதி அக்காவின் கருத்தே எனதும்.

யாழை வர்த்தக நோக்கோடு பாவிப்பின் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அதை விட்டு சிற்ந்த கருத்துக்கு காசு குடுப்பதென்பது ஒரு கருத்தாளனை விலைக்கு வாங்குவது போன்றது.

பலர் குறுகியநோக்கோடு தான் பார்க்கிறார்கள் நீண்ட நோக்கில் இதை பார்க்கின் இதுவும் எம்மை பிரித்தாளும் தந்திரம் தான். இன்னும் தேசியத்துக்காக உழைக்கும் தளம் என்றால் யாழ் தான் இல்லை தேசியத்தை,மக்களை நேசிப்பவர்கள் அதிகம் இருப்பதும் இணைந்திருப்பதும் கூட யாழினூடு தான்.

இந்த செய்ற்பாடுமூலம் அவர்களுக்குள்ளும் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாகவே எனக்கு படுகிறது.

காசுக்காக கருத்தெழுதும் சிலர்,உரிமைக்காக எழுதும் சிலர் என்று பிரிந்து நிற்கும்,யாழைப்பூட்டவேண்டிய நிலை கூடவரலாம். ஆக மொத்தம் யாராக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துபாருங்கள் நோக்கம் புரியும். சின்ன விடயமாக இருந்தால் கூட அதில் பல உட்பொருட்கள் அடங்கி இருக்கின்றன என்பது அடிப்படை எதுவாக இருந்தாலும் சிந்தித்து செயற்படுங்கள். :icon_idea:

இது எனது கருத்தே தவிர யாரையும் புண்படுத்தவல்ல. :)

Posted

இதில் கோமகன் அண்ணா,மல்லையூரான் அண்ணா,ரதி அக்காவின் கருத்தே எனதும்.

யாழை வர்த்தக நோக்கோடு பாவிப்பின் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அதை விட்டு சிற்ந்த கருத்துக்கு காசு குடுப்பதென்பது ஒரு கருத்தாளனை விலைக்கு வாங்குவது போன்றது.

பலர் குறுகியநோக்கோடு தான் பார்க்கிறார்கள் நீண்ட நோக்கில் இதை பார்க்கின் இதுவும் எம்மை பிரித்தாளும் தந்திரம் தான். இன்னும் தேசியத்துக்காக உழைக்கும் தளம் என்றால் யாழ் தான் இல்லை தேசியத்தை,மக்களை நேசிப்பவர்கள் அதிகம் இருப்பதும் இணைந்திருப்பதும் கூட யாழினூடு தான்.

இந்த செய்ற்பாடுமூலம் அவர்களுக்குள்ளும் ஒரு பிளவை ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாகவே எனக்கு படுகிறது.

காசுக்காக கருத்தெழுதும் சிலர்,உரிமைக்காக எழுதும் சிலர் என்று பிரிந்து நிற்கும்,யாழைப்பூட்டவேண்டிய நிலை கூடவரலாம். ஆக மொத்தம் யாராக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்துபாருங்கள் நோக்கம் புரியும். சின்ன விடயமாக இருந்தால் கூட அதில் பல உட்பொருட்கள் அடங்கி இருக்கின்றன என்பது அடிப்படை எதுவாக இருந்தாலும் சிந்தித்து செயற்படுங்கள். :icon_idea:

இது எனது கருத்தே தவிர யாரையும் புண்படுத்தவல்ல. :)

இளையவர்களுக்கு உள்ள அறிவு கூட பலருக்கு இங்கு இல்லை ^_^ ^_^ :icon_idea: 1.

Posted

சிறந்த கருத்துக்கள் என்றால் என்ன? என்பதை வரையறுத்தால் - பின்னர் அதற்கேற்ப வழங்கப்படும் சிறந்த கருத்துக்களுக்கு பரிசு வழங்கலாம். காரணம் - பலவேறு உறுப்பினர்களுக்கு வெவ்வேறு திறமைகள் உள்ளன, அதனால் அவரவர் கருத்துக்கள் அந்தந்த இடங்களில் உயர்வாக இருக்கும்.

அதாவது இந்த களத்திலும் பல பிரிவுகள் உள்ளன. உதாரணத்திற்கு அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்கள், கலை/கலைச்சாரம் தொடர்பான கருத்துக்கள், அறிவியல் கருத்துக்கள் என இன்னும் பல பிரிவுகள் உள்ளன.

எனவே அவற்றை பிரித்து மூன்று பரிசுகளை வழங்கலாம். உதாரணத்திற்கு முதல் மாதத்தில் ஒரு மூன்று பிரிவுகளையும் அடுத்த மாதத்தில் வேறு மூன்று இல்லை முன்னையதில் ஒன்றும் புதிதாக இரண்டும் என இணைக்கலாம்.

இந்த அணுகுமுறை எல்லா துறைசார்ந்த கருத்துக்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் :D

ஆம், வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு ஆற்றல்கள் உள்ளன என்பது உண்மை. ஆனால், கீழ் வரும் களங்களை மட்டுமே உள்ளடக்க வேண்டும்.

செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

கோடிப்பாலை [அறிவியற்களம்]

விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

இவற்றில்

கோடிப்பாலை [அறிவியற்களம்]

விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

ஆகிய இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம்.

சிறந்த கருத்தாளர் எனும் சொற்பதத்தை மாற்றி வேறு ஒரு பதத்துடன் உ+ம்: 'பயனுள்ள ஆக்கம் / கருத்து' ஊக்கம் அளிக்கலாம்.

உங்கள் ஆலோசனைக்கு நன்றி akootha.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இங்குள்ள கருத்துக்களைப் பார்க்கும்போது தலையில் அடித்து சிரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை

இங்கு பதிவிட்டவர்கள் தேசியம் என்கிறார்கள் பிரிவினை என்கிறார்கள் பச்சைப்புள்ளி என்கிறார்கள் இந்தக்கருத்துக்களத்தில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்களை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்குத் தெரியும் எப்படி எப்படியெல்லாம் முதுகு சொறியலாம் என்பது...!

ஒரு சின்ன உதாரணம் கருத்துப்பதிவுகளை அவதானித்தால் பச்சைப்புள்ளி போடுபவர்கள் அப்படியே வரிசையாகப் பதிவிடுவார்கள் என்னுடைய பச்சை முதலாவது என்னுடைய பச்சை இரண்டாவது.... அதைப்போல அப்படி பச்சை போடுபவர் தன்னை விளம்பரப்படுத்தாவிட்டால் பச்சை நிற எழுத்துக்களால் குறிப்புக் காட்டிக் கொள்வார்...

அடுத்தது தேசியம் என்று அதிகமாக அலட்டுபவர்களைப் பார்த்தால் அவர்கள்தான் அதிகமாக மற்றவர்களமேல் தனிமனிதத்தாக்குதல் நடாத்துபவர்களாக இருக்கிறார்கள் அதே நேரம் தாக்குதலுக்கு முகங்கொடுக்கும் மற்றவர்கள் கூட தமது தனிமனித தாக்குதல்களையும் தாமே சரி என்ற வாதத்தினையும் வைப்பதற்கும் இந்தக்களத்தைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை.

பிரிவினை வரும் என்று பீற்றிக் கொள்கிறார்கள். மனிதர்களை மனிதர்களாக நடாத்தும் பண்புள்ளவர்களிடம் பிரிவினை உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படிப்பார்த்தால் இங்கு அக்கருத்தை முன்மொழிபவர்கள் தங்களால் தங்களை ஆளமுடியாதவர்கள் என்றுதானே அர்த்தம்.

அடுத்தது இங்கு இந்தத் திரியைத் திறந்த போக்குவரத்திற்கும் கூற வேண்டிய விடயங்கள் இருக்கின்றன.

இங்கு உங்கள் கருத்திற்கு உடன்பாடற்றவர்களை சிறந்த கருத்தாளர்ர்களைத் தெரிவு செய்ய முன்மொழிந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று அவர்கள் உங்கள் கருத்திற்கு இப்படிச் செய்யலாம் அப்படிச் செய்யலாம் என்று ஏதாவது ஆலோசனை வழங்கியிருந்தால் அப்பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கப்படுவது ஏற்புடையது ஆனால் அவர்கள் முழுமையாக எதிர்க்கிறார்கள் அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி தன்னிச்சையாக அவர்களிடம் அத்தகைய திணிப்பை மேற் கொள்வீர்கள்?

ஒரு நீண்ட காலமாக இந்தக்கருத்துக்களத்தை அவதானித்து வருபவளாக என்னுடைய கருத்து....இங்கு ஒரு கருத்துப்பதிவை நடாத்தி ஒரு பொதுத்தளத்திற்கான விடயத்தை முன்னெடுப்பது என்பது இந்தக்களத்தில் குதிரைக் கொம்புக்கு ஒப்பானது.

திரு. மோகன் அவர்களுக்கு தளத்தை விரிவுபடுத்துவதும் தொடர்ந்து நடாத்துவதும் நீங்கள்தான். வித்தியாசமான முறையில் யாழ் கருத்துக்களம் வளர்க்கப்படும் நேரத்தில் அது பல தளத்திலும் பிரவேசிக்கவேண்டும். கடந்தகாலங்களில் இங்கு எத்தனையோ கருத்தாளர்கள் வந்தார்கள் போனார்கள் நிலையாக நிற்பவர்கள் மிகச் சொற்பம். நானறியவே நிறைய இலக்கியவாதிகள் இங்கு வந்து அவர்களுக்குச் சரியான தளம் அமையாததால் இதிலிருந்து விடுபட்டு வலைப்பூக்களில் தம்மை அசைக்கமுடியாத அளவுக்குத் தடம் பதித்துள்ளார்கள். இங்கிருக்கும் பலர் அறிவர். அவர்களுக்கு ஏன் இந்தக்களம் சரியாக அமையவில்லை என்று யாருமே வினவியதில்லை. அண்மையில்கூட இங்கு நின்று கருத்தெழுதும் ஒருவர் திண்ணையில் தான் இனிமேல் வலைப்பூவிலேயே என்னுடைய கவனத்தைச் செலுத்தப்போகின்றேன் இங்கு நிற்பது வீண் என்று அங்கலாய்த்துக் கொண்டார். எப்போது என்று பார்த்தால் தனக்கு உடன்பாடாக யாழ்க்கருத்துக்களம் அமையவில்லை என்ற அதிருப்தியில் சொல்லப்பட்டது. ஆகவே எனக்கு, என்னுடைய ஏகோபித்த விருப்பிற்கு யாழ் அமையவில்லை என்றால் வெளிநடப்புச் செய்யும் மனோநிலையில் உலவும் பலருடைய இப்போதைய கருத்தைப் பார்க்கும்போது குமட்டுகிறது.

இங்கு எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கருத்துக்களில் தரம் பிரித்து சிறந்த கருத்து என்று தெரிவு செய்வது... என்ன தனிமனிதத் தாக்குதல்களுக்குக் குத்தப்படும் பச்சைப்புள்ளிகள் என்று நினைத்துவிட்டீர்களா?

அண்மையில் விசுகு அண்ணா நிழலியின் கவிதைக்கு இட்டிருந்தார் அப்படி ஒரு சிறந்த கருத்து. அதற்காக மற்றவர்களுக்கு எழுதத் தெரியாதென்பதல்ல மற்றவர்கள் எழுத எத்தனிக்கவில்லை என்றுதான் அர்த்தம். எல்லோருக்குள்ளும் திறமைகள் இருக்கின்றன. கருத்துக்களத்தில் எழுதவந்தவர்களிடம் எழுத்து ரீதியான திறமைகள் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும்.அதை இன்னும் ஓங்கச் செய்வதற்கு ஒரு உந்து சக்தி வேண்டும். அந்த உந்து சக்தியாக இந்த போக்குவரத்தின் சிந்தனையில் உதயமாகிய இந்தப்போட்டி அமையலாம் என்பது என்னுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை. இந்தப்போக்குவரத்து இந்தப்போட்டியினை நிகழ்த்துவதால் பிரிவினை வந்துவிடும் என்று பயப்படுவது சுத்த முட்டாள்தனம்.

விளம்பர நிறுவனம் ஒரு போட்டி நிகழ்ச்சியை நடாத்துகிறது என்று நாங்கள் பங்குபற்ற மாட்டோம் என்றால் அந்த நிறுவனத்திற்கு "தயவு செய்து எங்களை உங்களுடைய போட்டி நிகழ்வில் சேர்க்கவேண்டாம். அதற்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை" என்று அறிவிக்கலாம் அதைவிட்டுவிட்டு அந்த நிறுவனம் இந்தப்போட்டியை நடாத்தினால் நாங்கள் பிரிவினைப்படுவோம் நாங்கள் பணத்திற்காக எழுதவில்லை என்று காரமாக மோதுவதால் யாழ் தன்னுடைய வளர்ச்சிப்படிகளை குறுக்கிக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

இப்போது இந்த விடயத்திற்காக மட்டுமில்லை பலவிடயங்களில் தனித்துவம் தனித்துவம் என்று யாழ் தன்னை குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தி வைத்திருக்கிறது. இங்கு கருத்திடும் பல கருத்தாளர்கள் இன்னும் சற்று திறமையாக எழுத முற்பட்டதும் இந்த யாழ் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நிற்கிறது என்று அவர்கள் பெரிய வட்டத்தைத் தேடிச் செல்வார்கள். அப்போது மீண்டும் இந்தப்பதிவை இங்கு நின்று நிலைக்கக்கூடிய கள உறவுகள் தூசுதட்டிப்பார்க்கக்கூடும்... இதற்கு மேல் ஒன்றும் எழுத விரும்பவில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.