Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய ஆண்டும் யாழும்

Featured Replies

இது ஒரு ஆரம்ப யோசனை. மாற்றங்கள் இன்னமும் வரலாம். அத்துடன் உங்கள் ஒவ்வொருவரது ஆலோசனைகளும் தேவை.

அனைவருக்கும் வணக்கம்,

மீண்டும் ஒரு புதிய ஆண்டில் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

எம்மக்கள் படும் துயரங்களால் மனசு நிறைய வலிகள் இருந்தாலும் யாழை கொண்டு நடாத்துவதால் சில விடயங்களை தற்காலிகமாக மறக்க முடிகின்றது. எனினும் மிக நீண்ட காலமாக தள முகப்பில் புதுப்பித்தல்கள் எதுவும் செய்யப்படவில்லை. வரும் புதிய ஆண்டில் இருந்து சில மாற்றங்களைக் கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.

களத்தினைக் கொண்டு நடாத்த நிழலி மற்றும் இணையவன் ஆகியோரது ஒத்துழைப்புக்களால் தான் களத்தினை இன்னமும் ஓரளவுக்காவது கட்டுப்பாடுடனும், நேர்த்தியுடனும் கொண்டு நடாத்த முடிகின்றது. அத்துடன் கள உறுப்பினர்களாகிய உங்களால் இந்தக்களம் உயிர்ப்புடன் திகழ்கின்றது. அனைவருக்கும் நன்றிகள்.

இதுவரையும் தளத்தின் பெரும் செலவினை நான் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பெடுத்திருந்தாலும் (அவ்வப்போது விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெற்றது சொற்ப தொகையே) விளம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. வருங்காலங்களிலும் தளத்திற்கான செலவினை நான் தனிப்பட பொறுப்பெடுத்துக் கொண்டாலும் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என நினைக்கின்றேன். இந்த விளம்பரங்கள் மூலம் வரும் அனைத்து பணமும் தாயக மக்களுக்கான உதவியாக வழங்கலாம் எனவும் உத்தேசித்துள்ளேன். எனது புதிய வேலை காரணமாக அதிக நேரம் யாழுடன் இணைந்திருக்க முடியாத ஒரு நிலை உள்ளது என்பதையும் அறியத் தருகின்றேன்.

ஆரம்பக்கட்டமாக சில யோசனைகள். இதனை மெருகேற்க உங்கள் ஒத்துழைப்புத் தேவை.

1. களத்தில் சிலரினை இணைத்து ஒரு குழு ஒன்றினை அமைத்து அவர்களே விளம்பரங்களைப் பெற்றுக் கொள்வார்கள். இந்தக்குழு நாடுவாரியாக உப குழுக்களை அமைத்து அவர்களை விளம்பரங்கள் பெற்றுக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. இந்த முதன்மைக்குழுவே விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை எவ்வாறு தாயக மக்களுக்கு வழங்குவது என்பதைத் தீர்மானிக்கும். (இந்தக் குழுவில் நான் இருக்கமாட்டேன். அத்துடன் எனது தலையீடு எதுவும் இருக்காது.)

3. எவ்வகையான விளம்பரங்கள் இணைக்கலாம் அதற்குரிய பணம் எவ்வளவு என்பதையும் குழுவே தீர்மானிக்கும்.

4. பணம் பெறுவதற்கான பொதுவான ஒரு paypal கணக்கு ஒன்றினை இந்தக் குழு உருவாக்க வேண்டும். தற்காலிகமாக தேவைப்படின் எனது கணக்கினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

5. கிடைக்கப்பெறும் பணம் அது வழங்கப்படும் முறை தொடர்பான விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். பணம் தொடர்பான அனைத்து விடயங்களும் குழுவினையே சாரும்.

முதன்மைக்குழுவிற்கு பின்வருவோரை இணைக்க நான் யோசித்துள்ளேன்.

அகோதா

இசைக்கலைஞன்

வல்லை சகாறா

நிலாமதி

நுணாவிலான்

சுகன்

கறுப்பி

ஏனைய பல கள உறுப்பினர்கள் நாடுவாரியாக விளம்பரங்கள் பெற்றுக் கொள்ள உதவலாம்.

இந்தத் திட்டம் இந்த வருடத்திற்குரியதே(2012). எதிர்வரும் கால நிலைமைகளைக் கருத்திற் கொண்டு தேவைப்படின் தொடர முடியும்.

குறிப்பு: இணைய வழங்கி மற்றும் script புதுப்பித்தல் என வருடாந்தம் யாழுக்கு ஆகும் செலவு அண்ணளவாக 1400 அமெரிக்க டொலர்கள் ஆகும். ஆகையால் தனிப்பட ஒரு விளம்பரத்திற்குரிய பகுதி மேலதிக பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாது எனக்கும் ஒதுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன். :) தற்போது இந்த இணைய வழங்கி யாழுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தாலும் எனது தனிப்பட்ட பாவனைக்கு என வேறு தளங்களை இணைக்க முடியும் என்பதையும் தெரிவிக்கின்றேன் :)

  • Replies 54
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அனேகமானவர்கள் வந்து போகும் களம் என்பதால் மரண அறிவித்தல் பிறந்தநாள் விளம்பரங்களை குறிவைத்து செயெற்படுவது பெரும் பயனனைத்தரும் என்பது எனது கருத்து . வர்த்தக விளம்பரங்களை போட்டிட்டு பணத்திற்கு நாhய் அலைந்த பேப்பர் அனுபவங்களை வைத்து சொல்கிறேன்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

மோகனுக்கு இதயம் கலந்த புத்தாண்டு வாழ்த்துக்களும், நன்றிகளும்!

இது மிகவும் வரவேற்கத் தக்க யோசனை என்பது எனது கருத்தாகும்!

ஆறாயிரம் அங்கத்தவர்களையும், அதை விடப் பல மடஙகு வாசகர்களையும் கொண்ட தளமாக யாழை, நீங்கள் வளர்த்து விட்டீர்கள்.

யாழ் களத்தின் தனித்துவமும், அதன் இணை சாரா நிலையும் பாதிக்கப் படாத விதத்தில், விளம்பரங்கள் இணைக்கப் படுமாயின், இவை களத்தை முன்னோக்கியே நகர்த்தும் என்பது எனது கருத்து!

எமது உறவுகளின் அடிப்படைத் தேவைகளான 'மரண அறிவித்தல்' போன்றவைக்குக் கூட அந்நிய தளங்களை நாட வேண்டிய நிலையிலேயே நாம் இப்போது உள்ளோம்!

ஆனால், பதிவுகளை வாசிக்கும் போது, flash போல இடை நடுவில் வந்து, எரிச்சலூட்டாத முறையில் விளம்பரங்களை இணைத்தால் நல்லது என்பதும் எனது பணிவான கருத்தாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சர்ச்சைகள் இல்லாமல் பொதுவாக கருத்தெழுதும் வேறு சிலரின் பெயர்கள் எனக்கு தெரிந்து தப்பிலி. புங்கையூரான்.இன்னுமொருவன்.அலைமகள்;சஜீவன். போன்றவர்கள். இவர்கள் வௌ;வேறு நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் விளம்பரம் மூலம் பெற்றுக் கொள்ளும் பணத்தை நிர்வாகத் தேவைக்கும், மேலதிக பணத்தை தாயக மக்களுக்கு அனுப்ப... மோகன் அண்ணா முடிவு செய்திருப்பதை வரவேற்கின்றேன். யாழ் களத்திற்கு பின் ஆரம்பித்த பல இணையங்கள், சாத்திரியார் குறிப்பிட்டுள்ளதைப் போல... மரண அறிவித்தல், ஆண்டு நினைவு கூரல், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மூலம் குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெறுகின்றார்கள். யாழைத் திறந்தவுடன் இடதுபக்கத்திலோ.... வலது பக்கத்திலோ... இவ் விளம்பரங்கள் வரும்படி பார்த்துக் கொண்டால், இதற்கு வரவேற்பு அதிகம் இருக்கும். அத்துடன் இங்கு கருத்து எழுதுபவர்களும்... கட்டாயமில்லாமல், மனமுவந்து மாதாந்த தொகையாக 5 € கொடுக்க முன் வருவார்களானால், இந்தத் திட்டம் நிச்சயம் பெரும் பலனைத் தரும். 5 € யாழ் உறவுகளுக்கு பெரிய காசு அல்ல, ஒரு கோழி வாங்கிற காசு.

Edited by தமிழ் சிறி

எனக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இருந்தது ஏன் யாழால் "சிறி" அண்ணையை போல வாணிக நோக்கோடு செயற்படுத்த முடியவில்லை என...

ஆனால் மீண்டும் பொதுக் குழு ஊருக்கு உதவி என்று ஆளுக்கு ஆள் தொடங்fகுவது மட்டும் எரிச்சலாக இருக்கு.

என்னை பொறுத்த மட்டில் யாழை சுயநலம் சார்ந்த பொதுன் நலத்தோடு கொண்டு செல்வதே நல்லது என நினைக்கிறேன்....

பி.கு: இது எனது சொந்தக் கருத்து இதற்க்கும் எனது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் அண்ணா

நன்றி தங்களது முன் மொழிதலுக்கும் எம்மீதான கரிசனைக்கும்

நீங்க சொல்லுங்கோ

நாங்க செய்கின்றோம்

  • தொடங்கியவர்

யாழில் சர்ச்சைகள் இல்லாமல் பொதுவாக கருத்தெழுதும் வேறு சிலரின் பெயர்கள் எனக்கு தெரிந்து தப்பிலி. புங்கையூரான்.இன்னுமொருவன்.அலைமகள்;சஜீவன். போன்றவர்கள். இவர்கள் வௌ;வேறு நாடுகளிலும் வாழ்கிறார்கள்.

நன்றி, நிறையப்பேரை இங்கு தெரிவு செய்ய முடியும். முதன்மைக்குழுவுக்குள் பலரை இணைப்பது சிலவேளை சிக்கலாக்கும். அதனால் ஒரு சிலரை மட்டும் இங்கே குறிப்பிட்டேன். அவர்கள் நாடுகளுக்கு என்று சிலரை இங்கு உள்ள களஉறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்யலாம் என்று நினைக்கின்றேன்.

எனக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இருந்தது ஏன் யாழால் "சிறி" அண்ணையை போல வாணிக நோக்கோடு செயற்படுத்த முடியவில்லை என...

ஆனால் மீண்டும் பொதுக் குழு ஊருக்கு உதவி என்று ஆளுக்கு ஆள் தொடங்fகுவது மட்டும் எரிச்சலாக இருக்கு.

என்னை பொறுத்த மட்டில் யாழை சுயநலம் சார்ந்த பொதுன் நலத்தோடு கொண்டு செல்வதே நல்லது என நினைக்கிறேன்....

பி.கு: இது எனது சொந்தக் கருத்து இதற்க்கும் எனது கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

முக்கியமாக இரண்டு காரணங்களைக் குறிப்பிடலாம். யாழில் வரும் செய்திகளில் 99% மானவை ஏனைய தளங்களில் வரும் விடயங்கள். ஒருவகையில் ஏனையவர்களின் உழைப்பு. அவர்களைச் சுரண்டி உழைப்பதில் நன்றில்லை. :) அடுத்தது தாயக மக்களின் அவலங்கள் தான் இங்கு பெரும்பாலான செய்தி விடயங்களாக உள்ளது. அதனால் அதனால் அந்தப்பணம் அந்த மக்களையே போய்ச் சேரட்டும்.

வணக்கம் மோகன் அண்ணா

நன்றி தங்களது முன் மொழிதலுக்கும் எம்மீதான கரிசனைக்கும்

நீங்க சொல்லுங்கோ

நாங்க செய்கின்றோம்

நீங்கள் அனைவரும் முன்னின்று செய்யுங்கள் என்று தான் இந்தத் தெரிவு

எமது நிறுவனம் சந்தா பணம் கொடுக்கும் ஒரு வெப்சைட். http://www.flickr.com/upgrade/ நீங்களும் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

vanakkam mokanukkum marrum anaiththu uravukalukkum. ellorukkum naththaar, puthu varuda vaalththukal.

unkal seyal thiddankalukku naanum ennaal mudintha alavu poorana oththulaippu valankuven!

( kanani vairasaal seyalilanthu viddathu. ippa thamil enke eduppathu ena maranthiddan.

athai mudinthaal therivikkavum)

  • கருத்துக்கள உறவுகள்

( kanani vairasaal seyalilanthu viddathu. ippa thamil enke eduppathu ena maranthiddan.

athai mudinthaal therivikkavum)

http://www.google.com/transliterate/

தற்காலிகமாக, இங்கு எழுதி, பிரதி எடுத்து... யாழில் இணையுங்கள் சுவி.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல திட்டம்..! யாழுக்கும், அவளின் உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

சாத்திரி அண்ணா சொன்னது போல மரண அறிவித்தல், மற்றும் நிகழ்வுகளுக்கான அறிவித்தல்கள் (பழைய மாணர்வர் ஒன்றுகூடல் போன்றவை) போன்றவற்றுக்கு ஒரு கட்டணம் அறவிடலாம். இதைச் செய்வதற்கு யாழின் வீச்சு என்ன என்பதற்கான தரவுகள் தேவைப்படும்.

திட்டங்கள் வெற்றிபெற எனது முன்கூட்டிய வாழ்த்துக்கள்..!

மோகன் அண்ணாவுக்கும் மற்றும் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். உங்களின் முடிவுகளுக்கு எங்கள் ஆதரவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும்...... ஒரு யோசனை, இப்போ.... தான் உதித்தது.

மாதாந்திர சந்தாவாக, விரும்பிக் கட்டும் 5 € வை அவர்கள் தங்கள் நாட்டிலிருக்கும் பெறுமதி மூலம், ரூபாயாகவோ, டொலராகவோ, பவுண்ஸ் ஆகவோ, தினாராகவோ கட்டினால் நல்லது என நினைக்கின்றேன். ஏனெனில் தாங்களும் இதில் பங்கு பற்றுகின்றோம் என்னும் ஆர்வம் வரும். காசு கட்டியவர்களின் பெயர்களை... எல்லோரும் பார்க்கும் படி, இணைத்தால்.... தாங்கள் காசு, கட்டாமல் கருத்து எழுதுகிறோமே... என்று கூச்சப் பட்டு, மற்றவர்களும் காசு கட்டுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும்...... ஒரு யோசனை, இப்போ.... தான் உதித்தது.

மாதாந்திர சந்தாவாக, விரும்பிக் கட்டும் 5 € வை அவர்கள் தங்கள் நாட்டிலிருக்கும் பெறுமதி மூலம், ரூபாயாகவோ, டொலராகவோ, பவுண்ஸ் ஆகவோ, தினாராகவோ கட்டினால் நல்லது என நினைக்கின்றேன். ஏனெனில் தாங்களும் இதில் பங்கு பற்றுகின்றோம் என்னும் ஆர்வம் வரும். காசு கட்டியவர்களின் பெயர்களை... எல்லோரும் பார்க்கும் படி, இணைத்தால்.... தாங்கள் காசு, கட்டாமல் கருத்து எழுதுகிறோமே... என்று கூச்சப் பட்டு, மற்றவர்களும் காசு கட்டுவார்கள்.

தமிழ்சிறி.. உங்களுக்கு வெள்ளந்தி மனசு.. :icon_mrgreen: அதால இப்பிடிச் சொல்லுறீங்கள்..! :lol:

ஆனால் காசு நேரடியாக வாங்க வெளிக்கிட்டால் யாழின் உரிமையாளர் தாங்கள்தான் எண்டு ஒரு நினைப்பு சிலருக்கு வந்தாலும் வரலாம்..! :o அதான் மோகன் அண்ணை பயப்பிடுறார்போலை..! :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகன் அண்ணாக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஒரே பிகரை எத்தனை நாளைக்கு தான் அண்ணா பார்க்க முடியும்?

ஒரு சேஞ்ச் வேண்டாமா???? :rolleyes: :lol:

முகத்தை..சே... முகப்பை மாத்தி விளம்பரங்களையும் போட்டால் கண்ணுக்கும் குளிர்ச்சியா இருக்கும்

நாலு காசு வந்து அதை கஸ்டபட்ட மக்களுக்கு உதவினதாகவும் இருக்கும். :)

என்னை பொறுத்தவரைக்கும் மரணஅறிவித்தல்,நினைவுநாட்கள்,பிறந்தநாள் வாழ்த்துக்களை இணைக்கலாம் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை இணைக்கும் போது

தேசியத்தூண்களுக்கு ஆதவரவா இல்லை மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் விளம்பரங்களை இணைத்துள்ளார்கள் என்று வரும். அதனால் யாழின் தற்சிறப்பு கெடாத வகையில் விளம்பரங்களை இணைத்தால் நல்லது. இது எனது தனிப்பட்ட கருத்தே :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் மோகன் அண்ணா. முன்னரைப் போன்று ஆரம்பித்துவிட்டு அப்படியே கிடப்பில் போட்டமாதிரி இந்தமுறையும் செய்யாமல், கொஞ்சம் முயற்சி எடுத்துச் செயற்படுத்தவேண்டும். முதன்மைக் குழுவில் இருப்பவர்களுடன் ஒத்துழைத்துச் செயற்படுத்த இயன்றளவு முயற்சி செய்கின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி.. உங்களுக்கு வெள்ளந்தி மனசு.. :icon_mrgreen: அதால இப்பிடிச் சொல்லுறீங்கள்..! :lol:

ஆனால் காசு நேரடியாக வாங்க வெளிக்கிட்டால் யாழின் உரிமையாளர் தாங்கள்தான் எண்டு ஒரு நினைப்பு சிலருக்கு வந்தாலும் வரலாம்..! :o அதான் மோகன் அண்ணை பயப்பிடுறார்போலை..! :unsure:

இசை,

மாதாந்திரச் சந்தா கட்டினால்... தாங்கள் யாழுக்கு உரிமையாளராகலாம், எந்தக் கருத்தையையும் எழுதலாம் என்னும்.... நினைப்பு, எம்மவர்க்கு வரத்தான் செய்யும். அதற்குத்தானே... காத்திரமான மட்டுறுத்தினர்களும், முதன்மைக் குழுவும் உள்ளது. மோகன் அண்ணா பயப்பட வேண்டிய, அவசியம் இல்லை. எந்தத் திட்டமும் முதலில், ஆரம்பிக்கும் போது... சிறிது அச்சத்தை தரும். காலப் போக்கில்... எல்லாவற்றையும் சரிப் பண்ணிவிடலாம். இப்படிப் பயந்தால்... ஒரு, திட்டங்களையும் செயற் படுத்த முடியாது. :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் மோகன் அண்ணா.என்னாலான பங்களிப்பு நிச்சயம் உண்டு.

யாழ் களத்தில் விளம்பரங்களை போட தெரியப்படுத்துவதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கு ஒரு விளம்பரம் தேவை.அதனை யாழ் கள உறுப்பினர்களை கொண்டோ அல்லது வேறு வழியிலாயினும் எப்படி செய்யலாம் என யாழ் கள உறுப்பினர்கள் தான் சொல்ல வேண்டும்.

கூகிள் இணைய தளம் சில விளம்பரங்களை சொடுக்குவதால் பணம் வழங்குகிறார்கள்.அவற்றை கூட யாழில் இணைத்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

வணக்கம் மோகன் அண்ணன். உங்கள் திட்டங்களுக்கு எனது ஆதரவு இருக்கும்.

அத்துடன் தனிப்பட்ட காரணங்களால் பங்குபற்ற முடியாமல், களத்திற்கு உதவி செய்ய விரும்புவர்களுக்கு 'paypal' மூலம் பணம் செலுத்த வசதிகள் ஏற்படுத்துவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மோகனுக்கு புதுவருட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நீங்கள் குறிப்பிட்டது நல்ல விடயம். வரவேற்கத்தக்கது.

தாயகமக்கள் துயர்தீர எடுக்கும் முயற்சி வெற்றிபெற வாழ்த்திக்கொண்டு.........

யாழ்களம்

பலவித விடயங்களைத்தாங்கி வரவேண்டும்.

யாழ்முகப்பு கவரும் விதத்தில் அமையவேண்டும்.

மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துகள் இணைத்துக்கொள்ளலாம்.

விளம்பரங்களை தேடுவதில் சிரமங்களை எதிர்பார்க்கலாம் காலப்போக்கில் யாழ்களத்துக்கான நிர்ந்தர விளம்பரங்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் யாழ்களம் தனக்கென ஒர் இடத்தை பிடித்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா / தம்பி,

மாவீரர்களையும் , மண்ணின் மைந்தர்களையும் கொச்சைப்படுத்தாமல் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு என்னுடைய முழுமையான ஆதரவும் செயற்பாடும் இருக்கும். அந்த வகையில் நீங்கள் முன்மொழிந்துள்ள இத்திட்டத்திற்கு என்னுடைய முழு ஒத்துழைப்பும் இருக்கும்.

மோகன் அண்ணாவின் இந்த திட்டங்களை வரவேற்பதுடன் என்னாலான உதவிகளையும் செய்வேன்.

ஒரு சிறு குறிப்பு: மரண அறிவித்தல்கள், வேறு சில அறிவித்தல்கள் என்பன உடனடியாகவும் கிரமமாகவும் வெளியிடப்பட வேண்டியவை. அவற்றை உடனடியாக வெளியிடப்படுவதற்கான மனித வளத்தையும் கருத்திற் கொண்டு முடிவெடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மோகனுக்கும் யாழ் கள உறவுகள் ஒவ்வொருவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் இளைப்பாறும் ஆல மரத்துக்கு (யாழுக்கு ) என்னால் இயன்ற ஒத்துழைப்பு இருக்கும்............தனித்து சிலவிடயங்கள் செய்ய முடியாது போனாலும் நண்பி சகாராமூலம் என்னால் ஒத்துழைக்க முடியும் . என்னையும் மதித்து குழுவில் சேர்த்துக் கொண்டமைக்கு மோகனுக்கு என் நன்றிகள்.

எமது நிறுவனம் சந்தா பணம் கொடுக்கும் ஒரு வெப்சைட். http://www.flickr.com/upgrade/ நீங்களும் செய்யலாம்.

இதிலும் விளம்பரமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.