Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகான கதாநாயகர்களை அறிமுகப்படுத்துங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதில் அர்ஜுன் அண்ணாவின் பெயரும் இருக்கு..! :wub:என்ன கமராவா? :D

இல்லை வசனமாக(யாவும் கற்பனை) இருக்கும் :lol::D :D

  • Replies 102
  • Views 9.6k
  • Created
  • Last Reply

விட்டால் உலகிற்கே படம் காட்டுவான் இலங்கை தமிழன். மணிரத்தினம்,சுகாசினி இவர்களை விட மிக கேவலமான நடிகர்கள் நீங்கள் தான் .

அவர்கள் இந்தியர்கள், இந்திய ஒருமைப்பாடு பற்றித்தான் தான் படம் எடுப்பார்கள் .நாட்டில் பிரச்சனை என்றவுடன் காகம் பறந்த மாதிரி நாட்டைவிட்டு பறந்துவிட்டு அனைத்து சவுகரியங்களுடனும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு தேசியம் என்று வெறுமன இணையத்தில் வந்து வெட்டி விழுத்தும் உங்களை விட சிறந்த நடிகர்கள் யாருமில்லை .உங்களுக்கு தொழிலே அதுவாகத்தான் போய்விட்டது .

உங்களை நீங்களே புழுகி ஆளுக்கு ஆள் பச்சை புள்ளி குத்திக்கொண்டு இருங்கோ ,ஆக மிஞ்சி ஒரு கொஞ்ச நிதிஉதவி செய்திருப்பீர்கள் அதைவிட்டு நாட்டுக்கு என்ன செய்து கிழித்தீர்கள் .

மணிரத்தினம் வியாபாரியோ பொறுக்கியோ "கன்னத்தில் முத்தமிட்டால் "எமது அவலத்தை இந்தியாவின் பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சென்றது .

உங்களுக்கு உதைவிட வேறு எதுவும் சரிவராது இணைய போராளிகளே .

வெளிநாட்டிற்கு ஓடி வந்தவர்கள் கதைக்க கூடாது என்றால் நீங்களும் கதைக்க கூடாது அண்ணாச்சி. முதலில் கருத்துக்கு பதில் கருத்து எழுதும் பழக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் கருத்தாளர்களை விமர்சிக்காமல்.

மற்றவன் கதைக்க வேண்டாம் ,கருத்து எழுத வேண்டாம் என்று சொல்ல நான் என்ன புலியா ?

இங்கு பலர் காட்டும் படங்கள் ரொம்ப ஓவர்.இதே திரியயையே திருப்பி வாசித்தால் புரியும் .

மணிரத்தினம் என்ன இந்தியன் ஆமியை துரோகியாகவும் கஷ்மீர் புரட்சியாளர்களை வீரர்களாகவும் காட்டிய படம் எடுக்கவேண்டும்,எத்தனை ஆயிரம் ஆங்கில படம் பார்க்கின்றோம் அமெரிக்கன் தான் செய்வது தானே சரியென்று படம் எடுக்கின்றான் .

கருத்திற்கு கருத்து எழுதுவதுதான் யாழில் நடக்கின்றதா ? என்று முதல் இந்த நடைமுறை .

மற்றவன் வாயை மூடி தனது கருத்தை திணிக்க முற்பட்டதால் எமக்கு இந்த நிலை வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அதில் எழுதியிருக்கும் நான்கு பேரும் நடிகர்களாக இருக்கும்.

அரவிந் சுவாமி கௌதம் கார்த்திக் சமந்தா

ஆக்ஸன் கிங் அர்ஜுன்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணாவிற்கு சிறிலங்கா கிரிக்கெட் பிடிக்கும், மணிரத்னம் படம் பிடிக்கும் என வெளிப்படையாக சொல்லியுள்ளார் ஆனால் உங்கள மாதிரியும் யாழில் உள்ள பல பேர் மாதிரியும் வெளிப்படையாக அவர்களை கூடாமல் விமர்சித்துக்[எழுதிக்] கொண்டு கிரிக்கெட்டும்,பட‌மும் பார்க்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகள் எம்மைத் தேடி வருவதில்லை

எதிரிகளை நாங்களே தேடிக்கொள்கின்றோம் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவன் கதைக்க வேண்டாம் ,கருத்து எழுத வேண்டாம் என்று சொல்ல நான் என்ன புலியா ?

இங்கு பலர் காட்டும் படங்கள் ரொம்ப ஓவர்.இதே திரியயையே திருப்பி வாசித்தால் புரியும் .

மணிரத்தினம் என்ன இந்தியன் ஆமியை துரோகியாகவும் கஷ்மீர் புரட்சியாளர்களை வீரர்களாகவும் காட்டிய படம் எடுக்கவேண்டும்,எத்தனை ஆயிரம் ஆங்கில படம் பார்க்கின்றோம் அமெரிக்கன் தான் செய்வது தானே சரியென்று படம் எடுக்கின்றான் .

கருத்திற்கு கருத்து எழுதுவதுதான் யாழில் நடக்கின்றதா ? என்று முதல் இந்த நடைமுறை .

மற்றவன் வாயை மூடி தனது கருத்தை திணிக்க முற்பட்டதால் எமக்கு இந்த நிலை வந்தது.

இப்ப என்ன நடந்துட்டுது உங்களுக்கு?????? :rolleyes:

மணிரத்தினம் இந்தியன் ஆமியை தியாகிகளாகக் காட்டட்டும், அதில் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் அதை நம்பிக்கொண்டுவந்து இங்கே குப்பை கொட்டுவதுதான் பிரச்சினை. ஆனால் காஷ்மீரில் நடப்பது இந்திய பயங்கரவாத அரசின் கூலிப்படைகளாக இயங்கிய முன்னால் சோத்துப் பாசல்களுக்குத் தெரியாவிட்டாலும், உலகிற்கு மிகவும் நன்றாகத் தெரியும். நாடு பிடிக்கும் கூலிப்படைகளாக இயங்கினால் மட்டும் இயங்கினால் போதாது, உலக சரித்திரமும் தெரிந்து வைத்திருக்க வேணும். காஷ்மீர் ஒன்றும் இந்திய நாய்களின் தேசம் கிடையாது. பாதுகாப்புத் தருகிறோம் என்கிற போர்வையில் ஒரு குட்டி ராச்சியத்தை இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் கூறுபோட்டுக்கொண்டு மக்களைக் கொன்று குவிக்கின்றன. இதில் உரிமை கேட்டு ஓலமிட்ட காஷ்மீரிகளை 1990 களில் இருந்து இதுவரையில் 12,000 பேர்வரை இந்திய தியாகிகளின் இராணுவம் கொன்று தள்ளியிருக்கிறது. இதில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காஷ்மீரிய பெண்களின் எண்ணிக்கை சொல்லி மாளது. இந்த லட்சணத்தில் மணிரத்தினம் இந்தியத் தியாகிகளை படம் எடுப்பாராம், கூலிப்பட்டாளம் அதற்கு வக்காலத்து வாங்குமாம், நல்லாயிருக்குக் கதை.

அது எப்பிடி, கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் எமது போராட்டத்தை தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பரப்பியதா??/ எப்பிடி, புலிகளை வன்முறை விரும்பிகளென்றும், சிங்கள ராணுவத்தை " மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்திவிட்டு புலிகளை மட்டுமே தாக்கும் மனிதாபிமான ராணுவமாகக் காட்டடியதாலா?? அப்போ முள்ளிவாய்க்காலில் "பாதுகாப்பு வலயங்கள் என்று தான் அறிவித்த பகுதி மீதே கொத்துக்குண்டுகளையும்,இரசாயனங்களையும் பாவித்து சிங்களம் தாக்குதல் நடத்தியதெல்லாம் சும்மாவா?? இல்லை அப்படி நடக்கவேயில்லை, எல்லாம் கட்டுக்கதை என்று மணிரத்தினம் சொல்லுவாரோ என்னவோ, விசுவாசிக்கே வெளிச்சம் ! தெரியாமல்த்தான் கேட்கிறேன், மணிரத்தினத்தின் படத்திற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஈழப்பிரச்சினை என்றால் என்னவென்று தெரியாமலா இருந்தார்கள்?

ரோஜாவிலும், உயிரேயிலும் மணிரத்தினம் காட்டிய பக்கத்திற்கு பின்னால் இன்னொரு பக்கமும் உண்டென்பதை கூலிப்பட்டாள விசுவாசிக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ரோஜாவில் மணிரத்தினம் மறைத்தது கஷ்மீரில் நாள்தோறும் சிந்தப்படும் அந்த மண்ணின் மைந்தர்களின் ரத்தத்தை, உயிரேயில், இந்திய காட்டுமிராண்டி நாய்களின் அடாவடித்தனத்திற்கு பழிவாங்க ஒரு பெண் தன்னையே உயிராயுதமாகியதை வெறும் வன்முறை விரும்பிகளாக மணிப்பூர் நாகலாந்து மக்களைக் காட்டி தனது வக்கிரத்தை தீர்த்துக்கொண்டான் அவன்.

அமெரிக்கன் படங்களைப் பற்றிய விமர்சனம் இருக்கட்டும், பிளட்டூன் (PLATOON) என்று ஒரு படம் வந்தது, அதைப் பார்த்தால் தெரியும் உண்மையான திரைப்படம் என்றால் என்னவென்று. அமெரிக்க ராணுவ வெறியர்களின் முகத்தைக் காட்டிய இன்னொரு படம், "கஷுவல்டீஸ் ஒஃப் வோர்"(CASUALTIES OF WAR).

மணிரத்தினம் ஒரு போலி இந்தியத் தேசியத்தின் புழுகன். ரோஜா, மும்பாய் முதல் உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் வரையில் அவனின் படங்கள் கிந்திய தேசியத்தைக் கட்டிக் காக்கும் நோக்கில் எடுக்கப்பட்டவை.

அவற்றை ஆகா ஓகோ என்று மெய்சிலிர்த்து மகிழ நாங்கள் ஒன்றும் இந்திய நாய்களின் கூலிச் சேவகர்கள் கிடையாது.

மணிரத்தினம் இந்தியன் ஆமியை தியாகிகளாகக் காட்டட்டும், அதில் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் அதை நம்பிக்கொண்டுவந்து இங்கே குப்பை கொட்டுவதுதான் பிரச்சினை.

அதே தான்! நாங்கள் இந்த குப்பை மட்டுமல்ல, எல்லாவிதமான குப்பைகளையும் இரு கை நீட்டி ஏற்க முன் வருவது தான் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு ஒரு பழக்கமுண்டு

உப்பின் அருமை அது இருக்கும்வரை அறியார்

எப்பொழுதுமே அக்கரை பச்சையென்பார்.

உலக மொழியெல்லாம் படித்ததாக புலம்புவார்

படிக்க பிடிக்காதது தன் தாய் மொழி என்பதில் பெருமைப்படுவார். :( :( :(

ஒரு இந்தியனாக மணிரத்தினம் அப்படித்தான் படம் எடுப்பார் என்பதையே விளங்கி கொள்ளாத உங்களால் உலக அரசியல் எங்கே விளங்கிக்கொள்ளபடபோகின்றது.ஒரு சின்ன குண்டுசட்டிக்குள் குதிரையை முப்பதுவருடமாக ஓட்டி ஒரு இனத்தின் இருப்பையே அரைவாசி அழித்துவிட்ட பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் எவ்வளவோ திறம் அண்ணை .நான் சொல்லவில்லை உலகமே சொன்னது பயங்கரவாதிகள் என்று,இன்றும் பொதுமக்களை அழித்ததற்குத்தான் விசாரணை ஒழிய பயங்கரவாதிகளை அழித்ததற்கு அல்ல. பயங்கராவாதிகளுக்கு என்ன அருகதை இருக்கின்றது அடுத்தவனை பார்த்து பயங்கரவாதி என்று சொல்ல.

இந்திய இராணுவம் மட்டும் அநியாயம் செய்யவில்லை உலகத்தில் அனைத்து இராணுவமும் தான் அநியாயம் செய்கின்றது,உலக அரசியல் தெரியாமல் அனைவரையும் எதிரியாக்கி அப்பாவி மக்களை கொன்றோழித்ததை விட வேறு என்னைதை செய்தீர்கள் .

OLIVER STONE இன் அநேக படங்கள் அப்படியானவைதான் ,பிளட்டூன்,போர்ன் ஒன் போத் ஒப் யூலை போன்றவை ,அமெரிக்காவில் படம் எடுப்பதுபோல் முன்றாம் உலகநாடுகளில் படம் எடுக்கமுடியாது .

உலகத்தை படிக்காதததால் தான் நாம் அழிந்தோம் என்பது மறக்கமுடியாத உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

.

உலகத்தை படிக்காதவன் ஒரு இனத்தை அழித்ததாக போர்க்குற்றத்துக்கு ஆதாரம் தேடித்தந்துள்ளான்

உலகைப்படித்த தங்களுக்கு இன்னும் போர்க்குற்றம் என்றால் என்னவென்றே புரியவில்லை.

இதுவும் எங்கள் விதியண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இந்தியனாக மணிரத்தினம் அப்படித்தான் படம் எடுப்பார் என்பதையே விளங்கி கொள்ளாத உங்களால் உலக அரசியல் எங்கே விளங்கிக்கொள்ளபடபோகின்றது.ஒரு சின்ன குண்டுசட்டிக்குள் குதிரையை முப்பதுவருடமாக ஓட்டி ஒரு இனத்தின் இருப்பையே அரைவாசி அழித்துவிட்ட பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் எவ்வளவோ திறம் அண்ணை .நான் சொல்லவில்லை உலகமே சொன்னது பயங்கரவாதிகள் என்று,இன்றும் பொதுமக்களை அழித்ததற்குத்தான் விசாரணை ஒழிய பயங்கரவாதிகளை அழித்ததற்கு அல்ல. பயங்கராவாதிகளுக்கு என்ன அருகதை இருக்கின்றது அடுத்தவனை பார்த்து பயங்கரவாதி என்று சொல்ல.

இந்திய இராணுவம் மட்டும் அநியாயம் செய்யவில்லை உலகத்தில் அனைத்து இராணுவமும் தான் அநியாயம் செய்கின்றது,உலக அரசியல் தெரியாமல் அனைவரையும் எதிரியாக்கி அப்பாவி மக்களை கொன்றோழித்ததை விட வேறு என்னைதை செய்தீர்கள் .

OLIVER STONE இன் அநேக படங்கள் அப்படியானவைதான் ,பிளட்டூன்,போர்ன் ஒன் போத் ஒப் யூலை போன்றவை ,அமெரிக்காவில் படம் எடுப்பதுபோல் முன்றாம் உலகநாடுகளில் படம் எடுக்கமுடியாது .

உலகத்தை படிக்காதததால் தான் நாம் அழிந்தோம் என்பது மறக்கமுடியாத உண்மை.

ஆக, ஆரம்பித்த இடத்துக்கே வந்தாச்சுது. "புலிகள் பயங்கரவாதிகள், உலகமே சொல்லுது, ஆகவே அழித்தது சரிதான்". இதைத்தானே இங்கே சொல்ல வந்தீர்கள், நல்லது. உங்கள் நோக்கம் நிறைவேறியதா??" ஒரு பயங்கரவாதி இன்னொருவனை பயங்கரவாதி என்று சொல்ல முடியாது", அதைத்தான் நானும் சொல்கிறேன், உங்களுக்கு அந்த அருகதை கிடையாது. சொந்த நாட்டின் விடுதலை விற்று மூன்றாம் நாடு பிடிக்க இரண்டாம் நாட்டின் கூலிப்படைகளாக கப்பலேறியவர்கள் "சுதந்திரப் போராளிகள், நாட்டில் நின்று மக்களுக்காகப் போராடியவர்கள், பயங்கரவாதிகள்", நல்லாயிருக்கு, நீர் உப்பிபடியே சொல்லிக் கொண்டிரும்.

மணிரத்ததினம் இந்திய தேசியத்துக்கான படங்களை எடுக்கட்டும், அதில் தவறில்லை, அதை நீர் ஆகா, ஓகோ என்று புகழ்வதுதான் தவறு. நீரும் கிந்திய தேசிய அபிமானி என்று சொன்னால், நீர் அதைச் செய்வதிலும் தவறில்லை. எங்களைப் பொறுத்தவரை நீரும் ஒண்டுதான், மணிரத்தினமும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவின் தலைப்புக்கும்,இப்ப நடக்கிற கருத்தாடலுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கின்றதா?...பேசாமல் திரியை இழுத்து பூட்டுவது நல்லது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இந்தியனாக மணிரத்தினம் அப்படித்தான் படம் எடுப்பார் என்பதையே விளங்கி கொள்ளாத உங்களால் உலக அரசியல் எங்கே விளங்கிக்கொள்ளபடபோகின்றது.ஒரு சின்ன குண்டுசட்டிக்குள் குதிரையை முப்பதுவருடமாக ஓட்டி ஒரு இனத்தின் இருப்பையே அரைவாசி அழித்துவிட்ட பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் எவ்வளவோ திறம் அண்ணை .நான் சொல்லவில்லை உலகமே சொன்னது பயங்கரவாதிகள் என்று,இன்றும் பொதுமக்களை அழித்ததற்குத்தான் விசாரணை ஒழிய பயங்கரவாதிகளை அழித்ததற்கு அல்ல. பயங்கராவாதிகளுக்கு என்ன அருகதை இருக்கின்றது அடுத்தவனை பார்த்து பயங்கரவாதி என்று சொல்ல.

இந்திய இராணுவம் மட்டும் அநியாயம் செய்யவில்லை உலகத்தில் அனைத்து இராணுவமும் தான் அநியாயம் செய்கின்றது,உலக அரசியல் தெரியாமல் அனைவரையும் எதிரியாக்கி அப்பாவி மக்களை கொன்றோழித்ததை விட வேறு என்னைதை செய்தீர்கள் .

OLIVER STONE இன் அநேக படங்கள் அப்படியானவைதான் ,பிளட்டூன்,போர்ன் ஒன் போத் ஒப் யூலை போன்றவை ,அமெரிக்காவில் படம் எடுப்பதுபோல் முன்றாம் உலகநாடுகளில் படம் எடுக்கமுடியாது .

உலகத்தை படிக்காதததால் தான் நாம் அழிந்தோம் என்பது மறக்கமுடியாத உண்மை.

நான் நினைச்சனான் சோத்து பாசலை வாங்கி இறுக்கி போட்டு போத்து மூடிகொண்டு தூங்கி கொண்டு இருந்தீங்க என்று, இப்பதான் தெரியுது, போர்வைக்குள்ள உலகத்தை படிச்சு கொண்டு இருந்தியல் என்று, வயிறுமுட்ட சோறு சாப்பிட்டால் நித்திரை வரும் என்று சொன்னார்கள் நீங்க எப்படி உலகத்தை படிச்சீங்க. :) :) :)

Edited by சித்தன்

ஒரு சின்ன குண்டுசட்டிக்குள் குதிரையை முப்பதுவருடமாக ஓட்டி ஒரு இனத்தின் இருப்பையே அரைவாசி அழித்துவிட்ட பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் எவ்வளவோ திறம் அண்ணை .நான் சொல்லவில்லை உலகமே சொன்னது பயங்கரவாதிகள் என்று,இன்றும் பொதுமக்களை அழித்ததற்குத்தான் விசாரணை ஒழிய பயங்கரவாதிகளை அழித்ததற்கு அல்ல. பயங்கராவாதிகளுக்கு என்ன அருகதை இருக்கின்றது அடுத்தவனை பார்த்து பயங்கரவாதி என்று சொல்ல.

இந்திய இராணுவம் மட்டும் அநியாயம் செய்யவில்லை உலகத்தில் அனைத்து இராணுவமும் தான் அநியாயம் செய்கின்றது,உலக அரசியல் தெரியாமல் அனைவரையும் எதிரியாக்கி அப்பாவி மக்களை கொன்றோழித்ததை விட வேறு என்னைதை செய்தீர்கள் .

OLIVER STONE இன் அநேக படங்கள் அப்படியானவைதான் ,பிளட்டூன்,போர்ன் ஒன் போத் ஒப் யூலை போன்றவை ,அமெரிக்காவில் படம் எடுப்பதுபோல் முன்றாம் உலகநாடுகளில் படம் எடுக்கமுடியாது .

உலகத்தை படிக்காதததால் தான் நாம் அழிந்தோம் என்பது மறக்கமுடியாத உண்மை.

ம்ம் அர்ஜுன் அண்ணா.....அவனவன் விண்வெளிலதான் ரொக்கெற் விடுவான்,, நீங்க என்னடான்னா,, கொஞ்சம் ஏமாந்தா,, அடுத்தவன் காலுக்கு இடைலயும் ரொக்கெற் விடுறீங்க... !!

முப்பது வருஷமா அவங்க குதிரை, குண்டு சட்டிக்குள்ள ஓட்டினாங்களா?

அந்த முப்பது வருசத்துக்குள்ள ,, நீங்க நேசிச்ச இயக்கம் இருக்கவே இல்லையா?

இல்லைனா,, ஏன் அவங்க இருக்கல? இருந்திருந்தால்,,, அவங்க ,,,,என்ன சட்டியுக்க என்ன ஓட்டினாங்க அர்ஜுன் அண்ணா ? நாலும் நாங்களும் அறியணுமா இல்லியா??

உலகம் புலியையா,, இல்ல... ஆயுதம் ஏந்தி அரசுகளுக்கு எதிரா போராடுபவர்களையா பயங்கரவாதிகள் எங்கிது அர்ஜுன் அண்ணா? தெளீவா சொல்லணுமே நீங்க!

புலியைமட்டுமே சொல்லுதுன்னா...உங்களை ஏன் சொல்லல?

இரண்டுபக்கமுமே ஆயுதம் தானே இருந்திச்சு!

ஓ ...மக்கள் அழிவிற்கு அவங்க காரணம் ..அதால பயங்கரவாதிகள் அப்டி சொன்னீங்க இல்லியா?

சரி அர்ஜுன் அண்ணா,, ஒருவேளை புலிகள் உங்களால் அழிக்கப்பட்டிருந்தா,,,,

நீங்க சிங்களவனுடன் சேர்ந்து,, பயங்கரவாதிகள் எங்கிற பட்டம் பெறாம,, இனத்தை காப்பாத்தி இருப்பிங்களா?

அவனோட சேர்ந்து இனத்தை காப்பாத்தலாம்னா,, எதுக்கு அவனுக்கெதிரா ஆயுதம் எடுத்தீங்க?

உலகுல எல்லா இராணுவமுமே அநியாயம் பண்ணுதுன்னா.........

அவங்க நியாயத்துக்கு எதிராய் ஏதோ பண்ணுறாங்க என்னுதானே அர்த்தம் அர்ஜுன் அண்ணா,!

Finally....... அர்ஜுன் அண்ணா உலகத்தை படிக்காததால்.. பாதி இனம் அழிஞ்சுதுன்னா.....

உலகத்தை படிச்சதால,,, நீங்க என்ன பெரிதாய் வாழ்ந்திட்டீர்கள் எங்கிறத ,, பப்ளிக்கா சொன்னா...........

உலகமே தெரியாம வாழுற பலகோடி மக்களூக்கு அது வழிகாட்டியா இருக்குமில்லையா?

ப்ளீஸ் எனக்காவது சொல்லுங்க அர்ஜுன் அண்ணா ,, இல்லைனா...... ஓவென்னு அழுவேன்.....

உலகத்தை படிச்சதால ,, பயங்கரவாதிகள இனம் கண்டு தப்பிச்சதால,,, நீங்க ,,

எப்பிடி ஓஹோன்னு வாழுறீங்க? :)

இந்தப் பதிவின் தலைப்புக்கும்,இப்ப நடக்கிற கருத்தாடலுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கின்றதா?...பேசாமல் திரியை இழுத்து பூட்டுவது நல்லது

சூப்பர்... இப்போலாம், இது ஒரு ஃபாஷனா போச்சு...

ஆஹ் ஊன்னா.... திரியை பூட்டு டயலாக்!

தலைப்புக்கும் சுஹாசினிக்கும் சம்பந்தம் இல்லை,, எங்கிறதுதானே மேட்டர்!

இவ்ளோ சண்டை.........!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பதிவின் தலைப்புக்கும்,இப்ப நடக்கிற கருத்தாடலுக்கும் எதாவது சம்மந்தம் இருக்கின்றதா?...பேசாமல் திரியை இழுத்து பூட்டுவது நல்லது

செத்தவீட்டிலை போய் செத்தவனிப்பற்றியே நெடுக கதைக்கிறம்?.....கலியாணவீட்டிலை போய் மாப்பிளைபொம்புளையப்பற்றியே கதைக்கிறம்?......பிறந்தநாள்கொண்டாட்டத்துக்கு போய்......பிறந்தநாள்வாழ்த்து சொல்லாமலே போன அலுவலை முடிச்சுக்கொண்டு வெளியிலை வரேல்லை?.... கோயில் திருவிழாக்களுக்கு போய்....எங்கடை வண்டவாளங்களை தண்டவாளம் மாதிரி நிமித்தி நிமித்தி சேக்கஸ் காட்டேல்லை!!!!!!!! ....எங்கடை குறிக்கோள் ஒண்டு ஆனால் போற பாதையள்தான் வித்தியாசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு இந்தியனாக மணிரத்தினம் அப்படித்தான் படம் எடுப்பார் என்பதையே விளங்கி கொள்ளாத உங்களால் உலக அரசியல் எங்கே விளங்கிக்கொள்ளபடபோகின்றது.ஒரு சின்ன குண்டுசட்டிக்குள் குதிரையை முப்பதுவருடமாக ஓட்டி ஒரு இனத்தின் இருப்பையே அரைவாசி அழித்துவிட்ட பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் எவ்வளவோ திறம் அண்ணை .நான் சொல்லவில்லை உலகமே சொன்னது பயங்கரவாதிகள் என்று,இன்றும் பொதுமக்களை அழித்ததற்குத்தான் விசாரணை ஒழிய பயங்கரவாதிகளை அழித்ததற்கு அல்ல. பயங்கராவாதிகளுக்கு என்ன அருகதை இருக்கின்றது அடுத்தவனை பார்த்து பயங்கரவாதி என்று சொல்ல.

இந்திய இராணுவம் மட்டும் அநியாயம் செய்யவில்லை உலகத்தில் அனைத்து இராணுவமும் தான் அநியாயம் செய்கின்றது,உலக அரசியல் தெரியாமல் அனைவரையும் எதிரியாக்கி அப்பாவி மக்களை கொன்றோழித்ததை விட வேறு என்னைதை செய்தீர்கள் .

OLIVER STONE இன் அநேக படங்கள் அப்படியானவைதான் ,பிளட்டூன்,போர்ன் ஒன் போத் ஒப் யூலை போன்றவை ,அமெரிக்காவில் படம் எடுப்பதுபோல் முன்றாம் உலகநாடுகளில் படம் எடுக்கமுடியாது .

உலகத்தை படிக்காதததால் தான் நாம் அழிந்தோம் என்பது மறக்கமுடியாத உண்மை.

கிணத்து தவளையளை குண்டுச்சட்டியெண்டுறியள்...சரியண்ணை அதை விடுவம்......உந்த பலஸ்தீன்காறங்கள் எந்தச்சட்டீக்கை எத்தினை குதிரையை ஓட்டுறாங்கள்?????அதைப்பத்தி ஒரு சிமோல் வசனம் எடுத்து விடுங்கோவன். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இந்தியனாக மணிரத்தினம் அப்படித்தான் படம் எடுப்பார் என்பதையே விளங்கி கொள்ளாத உங்களால் உலக அரசியல் எங்கே விளங்கிக்கொள்ளபடபோகின்றது.ஒரு சின்ன குண்டுசட்டிக்குள் குதிரையை முப்பதுவருடமாக ஓட்டி ஒரு இனத்தின் இருப்பையே அரைவாசி அழித்துவிட்ட பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் எவ்வளவோ திறம் அண்ணை .நான் சொல்லவில்லை உலகமே சொன்னது பயங்கரவாதிகள் என்று,இன்றும் பொதுமக்களை அழித்ததற்குத்தான் விசாரணை ஒழிய பயங்கரவாதிகளை அழித்ததற்கு அல்ல. பயங்கராவாதிகளுக்கு என்ன அருகதை இருக்கின்றது அடுத்தவனை பார்த்து பயங்கரவாதி என்று சொல்ல.

இந்திய இராணுவம் மட்டும் அநியாயம் செய்யவில்லை உலகத்தில் அனைத்து இராணுவமும் தான் அநியாயம் செய்கின்றது,உலக அரசியல் தெரியாமல் அனைவரையும் எதிரியாக்கி அப்பாவி மக்களை கொன்றோழித்ததை விட வேறு என்னைதை செய்தீர்கள் .

OLIVER STONE இன் அநேக படங்கள் அப்படியானவைதான் ,பிளட்டூன்,போர்ன் ஒன் போத் ஒப் யூலை போன்றவை ,அமெரிக்காவில் படம் எடுப்பதுபோல் முன்றாம் உலகநாடுகளில் படம் எடுக்கமுடியாது .

உலகத்தை படிக்காதததால் தான் நாம் அழிந்தோம் என்பது மறக்கமுடியாத உண்மை.

பன்றியோடு சேர்ந்த கன்றும் பவ்வி தின்னும் என்ற பழமொழிக்கு இணங்க,

உமாமகேஸ்வரனினதும், அவரது கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரு பகுதி இராணுவப் பிரிவினராலும் எமக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டதோடு, ஏனைய இயக்கங்களுடன் நட்புறவை வளர்த்தல் அவசியம் என உணர்ந்த நாம் அவர்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்தி தொடர்ச்சியாக பேசுவதென்று முடிவெடுத்ததன் அடிப்படையில், ஏற்கனவே எம்முடன் உறவிலிருந்த தமிழ்மக்கள் ஜனநாயக முன்னணி(NLFT) மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம்(TELO), ஈழமக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி(EPRLF), ஈரோஸ் (EROS), தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை போன்ற அமைப்புக்களுடன் பேசுவதென முடிவானது. அத்துடன் உமாமகேஸ்வரன் குறித்தும், அவரால் தலைமை தாங்கப்படும் புளொட் குறித்தும் நாம் எத்தகைய போக்கைக் கடைப்பிடிப்பது, என்ன நிலைப்பாட்டை கொண்டிருப்பது என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில் நாம் புளொட்டிலிருந்து வெளியேறி “தீப்பொறி” குழுவாக செயற்பட்டுக் கொண்டிருந்த போதும், உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்பிரிவும், தளத்தில் உமாமகேஸ்வரனின் துதிபாடும் ஒரு கூட்டமும் எம்மை அழித்தொழிப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இத்தகையதொரு நிலையில் உமாமகேஸ்வரன் குறித்தும், புளொட் குறித்தும் நாம் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பானதே. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் செயற்குழுவில் முன்வைக்கப்பட்டன. “புளொட்டினுள் நடைபெற்ற அனைத்துக் கொலைகளுக்கும் உத்தரவிட்ட உமாமகேஸ்வரனை நாம் உயிருடன் விட்டுவைத்தால் எம்மை உமாமகேஸ்வரன் அழித்தொழித்துவிடுவார்; இதனால் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதன் மூலம்தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்; இது தான் எமக்கிருக்கும் ஒரே வழி” என காந்தன் (ரகுமான் ஜான்) தனது கருத்தை முன்வைத்தார்.

பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்புக்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு உமாமகேஸ்வரன் தடைவிதித்தது மட்டுமல்லாமல் தனது அராஜகத்தை பயிற்சி முகாம்களில் கட்டவிழ்த்துவிட்டிருந்ததுடன், புளொட்டின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக முன்னின்றுழைத்து புளொட்டை வளர்த்தெடுத்தவர்களையும் புளொட்டுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கென முகாம்களில் தங்கியிருந்தவர்களையும் தனது கொலைக்கரம் கொண்டு அவர்களது குரல்வளையை நெரித்து வந்தார்.

“சந்ததியாரின் சதி” என்ற பெயரில் தானே உருவாக்கி ஊதிப் பெருப்பித்த ஒரு பிரச்சனையை, அந்த “சதி”யின் பேரில் வெளிப்படையாகவே தனக்குச் சாதகமாக்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்த உமாமகேஸ்வரன், ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்து புளொட்டுடன் இணைந்து பணியாற்றிவர்கள் மத்தியில் சந்தேகங்களையும், நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்திவிட்டிருந்தார்.

அமைப்புக்குள் உள்ளவர்கள் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்க்கும் ஒருநிலையும், நம்ப மறுக்கும் ஒரு நிலையும் உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது.உமாமகேஸ்வரனின் செயற்பாடுகள் குறித்தோ அல்லது அவரது உளவுப்படையின் செயற்பாடுகள் குறித்தோ கேள்வி எழுப்புதல், விமர்சனம் செய்தல், கடுமையான தண்டனைக்குரிய ஒரு குற்றமாக கருதப்பட்டது. உமாமகேஸ்வரனின் கருத்துக்களுடனோ, செயற்பாடுகளுடனோ முரண்பட்ட கருத்தைக் கொண்டிருந்தால், சிவனேஸ்வரன், அகிலன், பவான் போன்றோர் போல் மரணத்தைத் தழுவ வேண்டியதாகவோ, மத்தியகுழு உறுப்பினர் கண்ணாடிச்சந்திரன் போல் சித்திரவதை முகாமான “B” காம்பில் சித்திரவதையை அனுபவிக்க வேண்டியதாகவோ அல்லது பயிற்சி முகாம்களில் சித்திரவதைகளை முகம் கொடுத்து மரணத்தை தழுவ வேண்டியவர்களாகவோ இருந்தனர்.

மத்தியகுழு உறுப்பினர்களும் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களும் கடைப்பிடித்து வந்த நீண்ட மௌனமும் கூட தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற பலத்தை உமாமகேஸ்வரனுக்கு கொடுத்திருந்ததுடன், மத்தியகுழு உறுப்பினர்களையும் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர்களையும் தனது ஏவல் பணியாட்களாகவே கருதிச் செயற்பட்டார்.

புளொட்டின் இராணுவப் பிரிவையும், தன்னால் உருவாக்கப்பட்ட உளவுப்படையையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த உமாமகேஸ்வரன் அனைத்து அதிகாரங்களையும் கூட தன் வசமாக்கிக் கொண்டிருந்தார்.

santhiyayar.jpg

அரசியற்துறைச் செயலர் வசந்தன் - சந்ததியார்

http://www.ndpfront.com/?p=29086

Edited by nunavilan

செத்தவீட்டிலை போய் செத்தவனிப்பற்றியே நெடுக கதைக்கிறம்?.....கலியாணவீட்டிலை போய் மாப்பிளைபொம்புளையப்பற்றியே கதைக்கிறம்?......பிறந்தநாள்கொண்டாட்டத்துக்கு போய்......பிறந்தநாள்வாழ்த்து சொல்லாமலே போன அலுவலை முடிச்சுக்கொண்டு வெளியிலை வரேல்லை?.... கோயில் திருவிழாக்களுக்கு போய்....எங்கடை வண்டவாளங்களை தண்டவாளம் மாதிரி நிமித்தி நிமித்தி சேக்கஸ் காட்டேல்லை!!!!!!!! ....எங்கடை குறிக்கோள் ஒண்டு ஆனால் போற பாதையள்தான் வித்தியாசம்.

இதுக்குத் தான் கு.சா வேணும் என்று களம் தேடியது! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவன் கதைக்க வேண்டாம் ,கருத்து எழுத வேண்டாம் என்று சொல்ல நான் என்ன புலியா ?

இங்கு பலர் காட்டும் படங்கள் ரொம்ப ஓவர்.இதே திரியயையே திருப்பி வாசித்தால் புரியும் .

மணிரத்தினம் என்ன இந்தியன் ஆமியை துரோகியாகவும் கஷ்மீர் புரட்சியாளர்களை வீரர்களாகவும் காட்டிய படம் எடுக்கவேண்டும்,எத்தனை ஆயிரம் ஆங்கில படம் பார்க்கின்றோம் அமெரிக்கன் தான் செய்வது தானே சரியென்று படம் எடுக்கின்றான் .

கருத்திற்கு கருத்து எழுதுவதுதான் யாழில் நடக்கின்றதா ? என்று முதல் இந்த நடைமுறை .

மற்றவன் வாயை மூடி தனது கருத்தை திணிக்க முற்பட்டதால் எமக்கு இந்த நிலை வந்தது.

என்ன அண்ணா மாறி மாறி பிதட்டுறீன்கள்?

பொதுவாகவே நீங்கள் அடிக்க முன்பு. அடித்த பின்பு என்று யாருக்கும் விளங்காமல் ஏதும் எழுதுவீங்கள். இது அதைவிட மோசமா இருக்கு.

இப்ப என்ன சொல்லவாறீங்கள்?

அமெரிக்கன் பிழை செய்கிறான் ஆனால் படம் காட்டும் போது தான் செய்தது சரியென்று காட்டுறான்?

அப்படியே இந்தியனும் செய்யிறான்...............

இதைத்தானே அண்ணே இவளவு நாளும் நாங்கள் எழுதிவாறோம். நீங்கள்தான் இல்லை புலிதான் புல்தான் என்று (உங்களின் பாசையில் சொன்னால்) ஊளை இடுவீர்கள்.

இப்போ எதையோ புதுசா காட்டுற மாதிரி இவளவு நாளும் நாங்கள் எழுதினதே எங்களுக்கே எழுதி காட்டுறீங்கள்.

எதோ மணிரத்னம் இந்திய மேலாதிக்கதிற்காகவும், பிராமணனுக்காகவும் படம் எடுப்பது போல் அல்லவா எல்லாறும் இங்கே நடக்குது சரி மணிரத்னம் இந்தியாவில் இருக்கும் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர், இவர் இயக்கத்தில் எத்தனை சிறந்த திரைப்படங்கள் வந்தன நான் கீழே குறிப்பிடும் படங்களில் பிராமணம், இந்திய தேசியம் எங்கு இருக்கு என்று சொல்ல முடியுமா?

1.பல்லவி அனு பல்லவி(கன்னடா) - திருமணமானமாகி விவாரத்து ஆன பெண்ணூக்கும் அவரை விட வயது குறைந்த பெண்ணுக்கும் இடையிலான உறவை கதையாகக் கொண்ட படம்

2.உனரு(மலையாளம்)- தொழிற்சங்கங்கள் பற்றிய திரைப்படம்

3.மவுன ராகம்- காதலனை இழந்து, பிடிக்காத திருமணத்தில் சிக்குன்ட பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் இடையிலான உறவைப் பற்றிய திரைப் படம்

4. நாயகண்- மும்பாயில் உண்மையில் இருந்த தாதாவான வரதராஜ முதலியார் பற்றிய திரைப் படம்

5. தளபதி- அனாதை ஒருவனுக்கும் அவனது நண்பனுக்கும் இடைலான நட்பை பற்றிய படம், இதில் நாயகன் விதவை ஒருவரை திருமணம் செய்வார் எங்கே போனது உங்கள் பிராமணம்.

6.கீதாஞ்லி (தெலுகு)- மரணிக்கப் போகும் இருவருக்கிடைலான காதல் கதை,

7.அக்கினி நட்சதிரம்- 2 மனைவிகளின் மகன்மாருக்கு இடைலான பிரச்சனைகளைப் பற்றிய படம்

8 அஞ்சலி- மன வளர்சி குறைந்த குழந்தையை பற்றிய படம்

9.திருடா திருடா- இரு சில்லறை திருடர்கள், கோடிகணக்கன பணத்துடன் வில்லன் கூட்டத்டிடம் மாடி அவர்கள் படும் அவஸ்த்தையை நகைச்சுவையாக காட்டிய படம்

10.இருவர்- கருணாநிதி வாழ்க்கை வரலாறு பற்றிய படம்

11.அலைபாயுதே- விளயாட்டக திரிந்த வாலிபனுடைய காதல் படம்,மிக மிக யதார்த்தமா எடுத்த படம் பார்க்க பார்க்க சலிக்கத படம்

12.ஆயுத எழுத்து- வாழ்க்கையில் 3 வேறு திசைகளில் சென்றவர்கள் ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து அவர்களில் ஏற்படும் மாற்றங்களை காட்டிய பட்ம்

இப்படி எத்தனையோ பிராமணம், இந்திய தேசியவாதம் கலக்காத படங்கள் இருக்க ஒரு சில படங்களை மட்டும் ஏன் ஆராய்கிறீர்கள்

மணிரத்னம் ஒரு மிக்ச் சிறந்த இயக்குனர், அதை மலினப் படுத்த வேண்டாம் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மணிரத்னம் ஒரு மிக்ச் சிறந்த இயக்குனர்

இதில் எந்தவித மாற்றுக்கருத்தும கிடையாது.

நீங்கள் பட்டியலிட்ட படங்களில் 75 வீதமானவை தமிழ் மொழிப்படங்கள் கிடையாது. அவர் தமிழருக்குச் சொல்ல வருகிற சேதி வேறு. மற்றையவர்களுக்குச் சொல்ல வருகிற சேதி வேறு.

சரி, நீங்கள் கேட்டீர்கள் என்பதற்காக எழுதுகிறேன். ஆயுத எழுத்தில் அரசியல்வாதியாக வரும் கதாப்பாத்திரத்தின்மூலம் மணிரத்தினம் காட்ட முனைந்தது யாரை என்று நினைக்கிறீர்கள்? எங்களுக்குத் தெரிந்தாலும் கூட, இன்னும் தமிழகத்தில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் " தமிழ்க் காவலர் " என்கிற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் கருநாநிதியைத்தான். அவரின் கதாப்பாத்திரம் மூலம் " வடக்கு பெருத்திருக்கிறது தெற்குச் சுருங்கியிருக்கிறது" என்று முழு மூட்டாள்த்தனமான வசனம் பேசும் அரசியல்வாதியையும், அதன் அர்த்தம் தெரியாமலேயே கைதட்டும் மக்களையும் நிஜ வாழ்க்கையில் இருக்கும் அரசியல்வாதிகளையும், தமிழகத்து மக்களையும் அவர் கிண்டலடிக்கிறார்.

உங்களுக்கு புரிகிறதோ இல்லையோ, எங்களுக்கு நன்றாகவே புரிகிறது. ஆரியம் திராவிடம் என்று பிரிக்கும் கருத்தாடல்கள் அவர் படங்களில் இருந்தே வருகிறது. இராவணன் படமே அதற்குச் சாட்சி.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு அவல் பதம். மணிரத்தினத்துக்கு, ரோஜா, மும்பாய், குருதிப்புணல், கன்னத்தில் முத்தமிட்டால், உயிரே போன்றவையே போதும், அவர் யாரென்பதைக் காட்ட. அவரின் எல்லாப் படங்களளையும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

ஆனாலும், ஒரு கலைஞனாக அவரின் படைப்புகள் தரமானவைதான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவ்வளவுதான்.

கேட்கிறேன் என தப்பாய் நினைக்க வேண்டாம் உங்களப் பொறுத்த வரை மணி இந்தியா மேலாதிக்கத்திற்காக பட‌ம் எடுக்கிறார் என்டால்,அவர‌து பட‌ங்களை பிடிக்கவில்லை என்டால் ஏன் திரும்ப,திரும்ப அவர‌து பட‌த்தைப் பார்த்து அவருக்கு வருமானத்தையும்,உங்களுக்கு நோயையும் தேடிக் கொள்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.