Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பலநாள் காத்திருப்பு வீண்போகவில்லை .தொடருங்கள்....

  • Replies 303
  • Views 61.1k
  • Created
  • Last Reply

நீங்க உங்க அனுபவங்கள சொல்றீங்க :) . அப்புறம் ஏங்க தயங்கிறீங்க சாத்திரி அண்ணன் :) ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரும் சிங்காரிகளும்(காமம்)

இலங்கையில் பிரேமதாசா அரசுடன் புலிகள் நடத்திய இரகசிய பேச்சுக்கள் உத்தியோக பூர்வ பேச்சு வார்தையாக மாற்மடைந்து கொண்டிருந்த காலகட்டம். சிங்கப் பூர் விமான நிலையத்தில் உலகின் பல பகுதிகளிலும் இருந்த வந்திருந்த புலிகள் அமைப்பை சேர்ந்த பலரும் பயணிகள் விமானம் மாறுவதற்காக காத்திருக்கும் மண்டபத்தில் ஒரு மணி நேரத்தில் சந்தித்து விட்டு பின்னர் வெவ்வேறு பகுதிகளிற்கு பிரிந்து செல்லும்படியாக விமானப் பதிவுகள் செய்யப்பட்டிருந்தது அப்படி பதிவு செய்யப் பட்டி ரிக்கற் ஒன்று அவனிற்கும் கிடைத்திருந்தது. அவன் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் இறங்கிய நேரம் புலிகள் அமைப்பின் மூளை எனப்படுபவர் தனது மனைவியுடன் வந்திருந்தார் . இன்னொரு பெண் இரண்டு குழந்தைகளுடன் சுவீடனிலிருந்து வந்திருந்தார்.

நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்த அனைவரும் கலகலப்பாக கதைத்துக்கொண்டிருக்கும் போதே தாய்லாந்திலிருந்த வந்த விமானத்தில் புலிகளின் முதுகெலும்பு என வர்ணிக்கப் பட்டவர் வந்து இறங்கியிருந்தார்.அதேயளவு சம நேரத்தில் இந்தோனிசியாவிருந்து வந்த விமானத்திலும் ஒருவர் வந்திறங்குகிறார்.முதுகெலும்பை கண்டதுமே அனைவரது முகங்களும் இறுகி சீரியசாகின்றது. வந்தவர் நேரடியாக மூளையிடம் போய் கைகொடுத்து மற்றவர்களிடமும் நலம் விசாரித்துவிட்டு மூளையை தனியாக அழைத்தக்கொண்டு கதைப்பதற்காக ஒரு லோஞ்சிற்குள் நுளைந்து விடுகிறார். அவரை அவன் நேடியாக பார்ப்பது இது இரண்டாவது தடைவை அவனை ஒரு வினாடி பார்த்து விட்டு பேசாமல் போய்விட்டார். அவர் தனக்கும் கை தந்து கதைப்பார் என்று சில வினாடிகள் எழுந்து நின்று காத்திருந்தவனிற்கு ஏமாற்றம். ஒரு நாளைக்கு என்னை தேடி வந்து கதைக்கிறமாதிரி செய்யிறன் என்று மனதிற்குள் சவால் விட்டபடியே போசமல் மீண்டும் அமர்ந்து அங்கு கிடந்த மகசீன் ஒன்றை எடுத்து பெர்பியூம் விளம்பரத்து அரை குறை அழகியொருத்தியின் படத்தை அங்குலம் அங்குலமாக ஆாய்ந்து கொண்டிருக்கும்போது அவனிற்கு முன்னால் ஒருவர் நின்று எப்பிடி சுகம் என்றார் நிமிர்ந்து பார்தான்.

நெடிய கறுத்த உருவம் சுருள் முடி கோட் சூட் அணிந்து நின்றவர் என்னோடை வாரும் என்று இன்னொரு லோஞ்சிற்குள் அழைத்து சென்றவர் என்ன குடிக்கிறீங்கள் என்றார். பிளேன் ரீ என்றதும். ஓடர் கொடுத்து விட்டு நான்தான் உதயன் என்று தன்னை அறிமுகம் செய்தவர். உம்மடை கால் எப்பிடியிருக்கு காது எல்லாம் சரியாயிட்டுதா என்று அவனை விசாரித்த பொழுதே அவனது அத்தனை விபரங்களும் அவர் கையில் உள்ளது என்று அவனிற்கு புரிந்து போனது மட்டுமல்ல அவரை பற்றி அவரது சாகசங்கள் பற்றியெல்லாம் அவன் கேள்விப் பட்டிருக்கிறான். பல மொழிகள் சரளமாக பேசக்கூடியவர். இந்த உலகப்பந்தில் அவர் கால்படாத இடங்களே இல்லையென்று சொல்லாம்.இப்பொழுது அவரே அவனிற்கு முன்னாலிருந்து கதைப்பது அவனாலேயே நம்ப ஆச்சரியமாக மட்டுமில்லாது மகிழ்ச்சியாகவும் இருந்தது. பிரெஞ்சு கதைக்க பழகிட்டியா என்று பிரெஞ்சிலேயே கேட்டார். ஓமென்றவனிற்கு பிரெஞ்சிலேயே அவன் செய்யவேண்டி விடயங்கள் பற்றி விபரித்து கையில் கொஞ்ச டெலர்களையும் கொடுத்து விட்டு கவனமாய் செலவழிக்கவேணும் அடிக்கடி கேக்கக்கூடாது என்றுவிட்டு ஒருவரின் விலாசத்தை கொடுத்து அவரை போய் சந்திக்கும்படி சொல்லி விடை பெற்றார். பின்னர் அங்கு சந்தித்த அனைவருமே பல்வேறு நாடுகளிற்கு பிரிந்து பயணிக்க அவன் மட்டும் சிக்கப்பூரில் வெளியேறினான். சிங்கப்பூர் விமான நிலையத்தில் வெளியேறும் போது நல்வரவு என்று தமிழில் எழுதி தொங்கவிடப் பட்டிருந்த பதாதகையை பார்த்தவன்.

விரைவிலை எங்கடை விமான நிலையத்திலையும் இப்பிடி தமிழிலை எல்லாம் எழுதும் காலம் வருமென்று நினைத்தபடி வெளியே வந்து பஸ்சில் ஏறி அமர்ந்தவன் யன்னல் வழியே கண்களால் சிங்கப்பூரை மேய்ந்தான்.இங்கு வருவது இரண்டாவது தடைவை முதல் தடைவை வந்தபொழுது நாலு நாட்கள் வைத்தியசாலையில் இரண்டு நாட்கள் விடுதி ஒன்றில் ஓய்வு பின்னர் நாட்டைவிட்டு போய்விட்டிருந்தான். இனித்தான் சிங்கையை அனுபவித்து பார்க்கப் போகின்றான் என்பது மட்டுமல்ல அவனது வாழ்க்கையில் பல அனுபவங்களையும் பெறப்போகும் இடம்.சிங்கப்பூரிற்கு 1819 ம் ஆண்டு பிரித்தானியர் ராபல்ஸ் என்பவர் வரும்போது மலேசியாவில் இறந்து போனவர்களை புதைக்கும் சுடுகாடாகத்தான் பெரும்பாலும் சிங்கை இருந்ததாம். பிறகு 1965 ம் ஆண்டு அங்கு நடந்த தேர்தலில் லீ குவான் யூ தேர்தல் அறிக்கையாக தான் ஆட்சிக்கு வந்தால் சிங்கப் பூரை சிலோன் போல் மாற்றுவேன் என்று உறுதிகொடுத்திருந்தாராம். ஆனால் சிறிலங்கா இன்று சுடுகாடாகமாறிப்போய் இருக்கிறது சிங்கப்பூர் எங்கையயோ போய்விட்டது.

சிங்கைக்கு தலைநகரம் கிடையாது அதன் பிரதான இடம் என்று அழைக்கப்படும் ஒச்சார்ட் வீதியில் இருந்த விலாசத்தை தேடிப்போயிருந்தான் அது பலமாடிகளை கொண்டதொரு வர்த்தக நிலையம். அதன் மாடிப்பகுதி ஒன்றிலிருந்த பாரிய எலெக்றோனிக் கடை ஒன்றுதான் அவன் தேடிப்போயிருந்த விலாசம். அங்கிருந்த பணியாள் ஒருவரிடம் அலி அகமத் என்று கேட்டதும் கடைக்குள் இருந்த கண்ணாடி அலுவலகத்தை காட்டினான்.மத அடையாளங்களுடன் சிறு தாடிசிவந்த தடித்த மனிதரொருவர் அமர்ந்திருந்தார். அலுவலகத்தினுள் நுளைந்தவன் தன்னை அறிமுகம் செய்ததும் தயாராய் வைத்திருந்த சில பத்திரங்களை எடுத்து நீட்டியவர் நிரப்பி கையெழுத்து போட்டு குடுங்க தம்பி என்றார். சிங்கையில் நீண்ட நாட்கள் தங்கவேண்டுமானால் ஒன்று வேலை அல்லது மாணவ விசா தேவை அவன் வேலை எதுவும் செய்தாயில்லை எனவேதான் மாணவ விசாவிற்கான அனுமதி பத்திரமும் எலொக்றொனிக் பொறியியல் படிப்பதற்கு தனியார் கல்வி நிறுவனமொன்றின் நுளைவு அனுமதி பத்திரங்களும் இருந்தது தனது கடவு சீட்டை எடுத்து அதில் இருந்த விபரங்களை பதிந்து கையெழுத்திட்டு நீட்டினான்.போட்டோ என்றார் எடுத்து நீட்டினான். சரி தம்பி ஒரு வாரத்திலை வாங்க எல்லாம் வந்திடும் என்ன தேவையென்னாலும் போனடிக்காதீங்க நேரடியாவே வாங்க நான் இல்லேன்னா அதே அந்த பெண்கிட்டை விடயத்தை சொல்லிட்டு போங்க என்று கடையில் கல்லாவில் இருந்த பெண்ணை காட்டியவர். ஒரு விசிட்டிங் கட்டை எடுத்து நீட்டி இவரை போய் பாருங்க இவர் உங்களுக்கான அடுத்த ஒழுங்ககளை செய்து தருவார் என்று சொல்லி அங்குபோவதற்கான வழி முறையையும் சொல்லியவர். எப்பிடி போவிங்க என்றார். பஸ்சிலைதான் என்றதும் அவ்வளவு சிரமபடவேண்டாம் என்றவர் யோசித்து விட்டு இருபது வெள்ளியை எடுத்து நீட்டி ரக்சிலையே போயிடுங்க என்றார். விடைபெற்றான்.

விசிட்டிங் காட்டில் விலாசம் தோ பா யோ (toa payoh) என்றிருந்தது ரக்சி காரனிடம் காட்டிவிட்டு ஏறி அமர்ந்தான். சில நிமிடங்கள் ஓடிய ராக்சி ஒரு சீன விடுதி ஒன்றின் முன்னால் நின்றது ரக்சிகாரனின் கணக்கை தீர்த்துவிட்டு உள்ளே நுளைந்து வரவேற்பு பகுதியில் நின்றிருந்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் அலி அகமத் அனுப்பினார் என்றான் . அவள் ஒரு பெட்டியை எடுத்து நீட்டினாள் ஒரு கைத் தொலைபேசி மோட்டோரேலா மொடல் பற்றியுடன் சேர்த்து குறைந்தது ஒன்றரை கிலோ வரும். இப்ப உள்ளவைகள் போல இடுப்பில் செருகவோ பொக்ற்றில் வைக்கவோ முடியாது அதை தனியாக ஒரு பையில்தான் தூக்கி கொண்டு போகவேணும்.

5-2.jpg

இப்ப உள்ள மாதிரி சிம்காட் சிஸ்ரம்வேறை இல்லை அதாலை வேறை நாட்டுகாரர் சிங்கையில் இணைப்பு எடுக்க முடியாது யாராவது சிங்கப்பூர் காரரின் பெயரில்தான் இணைப்பை எடுக்கலாம். அந்த விடுதி சீனரின் பெயரில்தான் இணைப்பு எடுக்கப்பட்டிருந்தது . கைத்தொலைபேசியை உருட்டி பார்த்துக்கொண்டிருந்தவனிடம் நீங்கள் போகலாமென்றாள் .

எங்கை போறது ??

அதைப்பற்றி எனக்கு தெரியாது .ஆனால் இங்கு தங்க முடியாது

மலிவான விடுதி ஏதாவது இங்கை கிடைக்குமா??

வெளியேறி வலப்பக்கமாக நடந்து போ 500 மீற்றரிலை ஒரு லொட்ச் வரும் அங்கு இடமிருக்கா என்று கேட்டுப்பார். போய்வா என்றாள்

லொச்சில் இடமிருந்தது அதுவும் ஒரு சீனனின் லொச்தான் அவன் அறையை காட்டினான் ஒண்டரை மீற்றர் அகலம். இரண்டு மீற்றர் நீளம் .சிறிய கட்டில் மேலே இரண்டு அறைக்கு பொதுவாக ஒரு காத்தாடி . குளியலறை கழிவறை எல்லாமே பொதுதான். நாளிற்கு ஏழு வெள்ளியென்றான்.சிங்கை ஒரு பொதுவுடைமை நாடு என்பதும் அப்பொழுதான் அவனிற்கு புரிந்தது. அது மட்டுமல்ல அங்கு அப்படியானதொரு இன்னொரு உலகம் இருப்பதும் அப்பொழுது தான் அவனிற்கு தெரியும். கைத் தொலைபேசியை சார்ச்சரில் வைத்துவிட்டு கொண்டு வந்த பொதியை கட்டிலுக்கு கீழே தள்ளிவிட்டு படுக்கையில் சாய்ந்தபொழுது கை தொலைபேசி அடித்தது வாழ்நாளில் முதன் முதலாக கைத் தொலைபேசியில் பேசப் போகின்றான் எடுத்து காதில் வைத்து கலோ என்றதும். நான் உதயன் என்றது குரல்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

ஏதும் தலைபோற அவசரம் எண்டால் மட்டுமதான் இந்த போனை பாவிக்கவேணும் மற்றபடி நாளைக்கு உனக்கு வசதியான சனம் அதிகம் இல்லாத இடமாய் இருக்கிற ஒரு பொது போன் பூத் ஒன்றிலை போய் பாத்து அதுகின்ரை நம்பரை எனக்கு தந்துவிடு மற்றாக்களிற்கும் அந்த நம்பரையே குடுத்துவிடு இனி அந்த நம்பரிலை தொடர்பிலை இருப்பம் என்று விட்டு தொடர்பை துண்டித்து விட்டார்.

அடுத்தநாள் தோ.பா யோ சந்தைக் கட்டிடப் பகுதியில் போய் சுற்றிப்பார்த்தான் அது இரவும் பகலும் சனம் நிறைந்து கலகலப்பாக இருக்கும் ஒரு இடம். அங்கு ஒரு ஓரமாய் வயதான மலே இனத்தவரின் புத்தகக் கடை ஒன்று அங்கு பத்திரிகைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் விற்கும் கடை மாலையில் பூட்டிவிடுவார். அதற்கு அருகில் ஒரு தொலைபேசிக்கூடு இருந்தது அருகிலேயே சீமெந்து வாங்கும் ஒன்றும் இருந்ததால் அந்த தொலைபேசிக் கூண்டை தெரிவு செய்து அதன் இலக்கத்தை குறித்தக்கொண்டான். அதற்கு பின்னர் தேவைக்கேற்ப அந்த இலக்கத்திற்கு அழைப்புக்கள் வரும். அவனும் வகுப்பிற்கு போக ஆரம்பித்திருந்தான் காலை இரண்டு அல்லது மூண்டு மணிநேரம்தான் வகுப்பு அது முடிய மதியம் அளவு சாப்பாடு ஆசையாய் ஒரு பியர் குடிக்க நினைத்தால் அளவு சாப்பாடை கைவிட்டு 50 சதத்திற்கு வெள்ளைச்சோறும் 50 சதத்திற்கு பருப்பு சாம்பாரும் பொலித்தீன் பையில் கட்டித்தருவார்கள்.மிச்சக் காசில் ஒரு பியர் வாங்கலாம் சாப்பிட்டு விட்டு லாச்சில் ஒரு குட்டித் தூக்கம் மாலையில் வந்து அந்த சீமெந்து வாங்கில் குந்தினால் இரவு பத்து அல்லது அதற்கு மேலும் நித்திரை வரும்வரை அங்கேயேதான் சுற்றிக்கொண்டிருப்பான். அது அவனது வெளிவேலைகளின் ஆரம்ப காலம் என்தால் அதிக வேலைகளும் கொடுக்கப் பட்டிருக்கவில்லை. பொழுதை போக்குவதற்காக றேடியோவுடன் கூடிய வோக்மன் ஒன்று வாங்கியிருந்தான். அதற்குப் பின்னால் ஒரு வில்லங்கமே வரப் போகிறதென்று தெரிந்திருந்தால் அதனை வாங்காமலேயே விட்டிருப்பான் ஆனால் என்ன செய்ய விதி.

சிங்கப்பூர் தமிழ் வானொலியில் இரவு நல்ல நிகழ்ச்சிகள் போடுவார்கள். அவை பெரும்பாலும் இலங்கை வானொலியை ஒத்ததாகவே இருக்கும்.அதிலொரு நிகழ்ச்சிதான் நேயர் விருப்பம்.நேயர்கள் விரும்பிய பாடல்களை தொலைபேசி மூலம் கேட்டதும் ஒலிபரப்புவார்கள். இருவர் நடத்தும் அந்த நிகழ்ச்சியில் தேவராஜ் என்பவர் இலங்கையில் மூளாயை பூர்வீகமாக கொண்டவர். ஆனால் அவர் இலங்கைக்கு பேனதே கிடையாது.சிங்கையில் உள்ளுர் தொ.பே கட்டணம் மிக மலிவு 10 சதம் போட்டு விட்டு அதிக நேரம் பேசலாம். அவனும் விரும்பிய பாடலை கேட்பதற்காக போனடித்திருந்தான் அவனது கதையிலேயே யாழ்ப்பாணத்தவன் என அடையாளம் கண்டுகொண்ட தேவராஜ் நீங்கள் சிலோன்தானே என்றார் பின்னர் ஊரை விசாரித்தார் அவனும் வாயில் வந்த புன்னாலைக் கட்டுவன் என்று சொல்லி வைத்தான். பின்னர் ஒவ்வொரு இரவும் அவன் அந்த நிகழ்ச்சியை தவற விடுவதில்லை பாடல் கேட்பதற்காக போனடிக்கத் தொடங்கியிருந்தவன் இன்னொன்றையும் கவனிக்கத் தொடங்கியிருந்தான் ஒரு பெண் ஒவ்வொரு நாளும் சோகப் பாடல்களையே தொர்ந்தும் கேட்பார்.

தான் விரக்தியில் இருப்பதாக நிகழ்ச்சி நடத்துபரிடமும் சொல்லியிருந்தாள். அன்றைய காலகட்டத்தில் தான் வானொலியில் இன்னொரு நிகழ்ச்சியையும் இரவு 11 மணிக்கு பின்னர் அறிமுகப் படுத்தியிருந்தனர். அந்த நிகழ்ச்சி மேலைத்தேய வானொலிகளில் நடக்கும் நிகழ்ச்சி போல் ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகளை குடும்ப பிரச்சனைகளையும் வானொலியில் பெயரை குறிப்பிடாமலோ அல்லது குறிப்பிட்டோ சொல்லுவார். அந்த நிகழ்ச்சியை ஒரு பெண்ணும் ஆணும் அதோடு ஒரு மன நல ஆலேசகர் ஒருவருடன் இணைந்து நடத்திக்கொண்டிருந்தனர். பிரச்சனைகளை சொல்பவர்களிற்கு மன நல ஆலோசகரும் ஏதாவது உப்பு சப்பில்லாத ஆலோசனைகள் உதாரணமாக எல்லாரிடமுமே தியானம் செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பார். அது மட்டுமல்ல நேயர்களும் போனடித்து தங்கள் ஆலோசனைகளை ஆறுதலை சொல்லலாம் அடுத்தவனின்ரை பிரச்சனையை கேட்பதென்றால் எல்லாரிற்குமே ஒரு ஆர்வம்தானே அதனால் அவனும் அந்த நிகழ்ச்சியை கேட்பதுண்டு பெரும்பாலும் பெண்களே பிரச்சனைகளோடு வருவார்கள். அப்படியானதொரு நாளில் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த பெண்குரலை உற்று கேட்டுக்கொண்டிருந்தான்.அந்தப் பெண் தழுதழுத்த குரலில் தனது கணவனின் பெண் தொடர்புகள் பற்றியும் அவர் வீட்டிற்கே வருவது இல்லையென்றும் தனக்கு ஒரு பெண் குழந்தையும் இருப்பதாக கூறி தனக்கு தற்கொலை செய்யவேண்டும் போல் உள்ளது என்று சொல்லி முடித்தாள்.

ஒவ்வொரு நாளும் சோகப் பாடல்கள் கேட்கும் அதே பெண்குரல்தான் அடையாளம் கண்டு பிடித்துவிட்டான். உடைனையே வானொலி நிலையத்திற்கு பேனடித்தவன் தியானம் செய்யச்சொல்லிக்கெண்டிருந்த உளவியல் ஆலோசகரிடம் வணக்கம் சொன்னவன் என்னங்க இப்பிடி எல்லாரிட்டையும் தியானம் செய்யுங்கள் எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறீங்களே கடைசியில் சிங்கை பெண்கள் சாமியார் மடமாயிடுமே என்றதும். அவரே சிரித்துவிட்டார். உங்கள் ஆலோசனைதான் என்ன என்றார்? தினமும் இப்பிடி கனபேர் பிரச்சனைகளோடை வருகிறார்களே அதற்கு சிங்கையின் அதிக வேலை. தனிமை என்பன முக்கிய காரணங்கள். இப்படி பிரச்சனைகளோடு வருபவர்களிடையே நீங்களே ஒரு தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் தங்களிற்குள் மனம் விட்டு பேசினாலே மன அழுத்தம் குறைந்து விடும் என்றவன் தற்சமயம் கதைத்த பெண்ணிற்கும் தனிமை தான் பிரச்சனை என்று தெரிகின்றது எனது தொ.பே இலக்கத்தை தருகிறேன் விரும்பினால் அவர் தொடர்பு கொள்ளலாம் தாராளமாக மனம்விட்டு கதைக்கலாம் என்று சொல்லி இலக்கத்தையும் கொடுத்தான். வீதியோரத்து இலக்கம்தானே யார் போனடிச்சா அவனுக்கென்ன ?

மறுநாள் வழைமைபோல சோகப்படல் ஒன்றை ஒலிபரப்ப கேட்டுவிட்டு போயிருந்தாள். வானொலிக்கு போனடித்தவன் வாழும்வரை போராடு என்கிற பாடலை சற்றுமுன் சோகப் பாடல் கேட்டவரிற்கு சமர்ப்பிக்கிறேன் அதனை ஒலி பரப்புங்கள் என்று கேட்டிருந்தான். பாடல் போய்க்கொண்டிருக்கும் போதே கூண்டு தொலைபேசி ஒலித்தது. காதில் வைத்து கலே என்றான். நமஸ்காரங்க என்றது பெண்குரல்.

வணக்கம் அப்பாடா இப்பவாது போனடிச்சீங்களே மகிழ்ச்சி.

றெம்ப நன்றிங்க

எதுக்கு ??

எனக்காக பாட்டு போட சொன்னதற்கு.

அதுசரி உங்களோடை பேர்தான் என்ன?

தனலக்சுமி

தனம் ரெம்ப இருக்குமோ?

அதெல்லாம் றெம்ப இருக்குங்க ஆனா மனசுலை நிம்மதிதான் இல்ல என்று அவனது கேள்வியின் முழு அர்தமும் புரியாமல் அப்பவியாய் பதில் சொன்னாள். அன்று சில நிமிடங்கள் மட்டுமே நடந்த உரையாடல் முடிவிற்கு வர மறுநாள் மீண்டும் தொலைபேசியடித்தது. உங்களோடை சோகத்திற்கு காரணம் தான் என்னங்க நேரடியாகவே கேட்டுவிட்டிருந்தான். அது ரெம்ப பெரிய கதைங்க உங்களிற்கு ஏதாவது வேலையிருக்கும் எதுக்கு என்னோடை கதையெல்லாம் என்றாள். அவனிற்கு அந்த சீமெந்து வாங்கில் இருந்து தேய்ப்பதைத் தவிர வேறை முக்கியமான வேலை எதுவும் இல்லை. பரவாயில்லீங்க சொல்லுங்க என்றான். சொல்லத் தொடங்கினாள். பல மணி நேரமாக அவள் சொன்ன கதையை சுருக்கமாக சொல்லி விடுகிறேன். அவள் கணவர் ஒரு தொழில் அதிபர் சிங்கையிலும் கொங் கொங்கிலும் மும்பையிலும் அவரிற்கு அலுவலகங்கள் இருந்தது அதுவும் சினிமாத்துறையில். அவரது நிறுவனம் தான் பாடல் இசை தட்டு வெளியிடும் முன்னணி நிறுவனம். அது மட்டுமல்ல இந்திய படங்களின் வெளிநாட்டு வினியோகம் .

இந்தி தமிழ் மொழி படங்களையும் தயாரித்திருந்தார்கள். அவரிற்கு சிங்கையிலும் கொங்கொங்கிலும் சீன பெண்களோடு உறவும் அதனால் குழந்தைகளும் உண்டு அதைவிட சினிமாத் துறையில் பல பெண்களோடும் தொடர்புகள். அதனால் தங்கள் மகனை வழிக்கு கொண்டு வரலாமென நினைத்தும் தங்களிற்கு குடும்ப வாரிசு வேண்டும் என்கிற காரணத்தாலும் அவரின் தாய் தந்தையர் தமிழ் நாட்டின் நெய்வேலிக்கு சென்று தங்கள் உறவில் பொருளாதாரப் பிரிவில் படித்துக்கொண்டிருந்த கிராமத்து சூழலில் வளர்ந்த தனலக்சுமியை பேசி முடித்திருந்தனர். அவள் சங்கீதமும் நடனமும் கூட கற்றிருந்தாள். வெளிநாடு வசதியான இடம் சீர் வரிசை எதுவும் இல்லை இருபது வயதுகள் வித்தியாசம்.அவளின் படிப்பு இடை நிறுத்தப் பட்டது . தாய் தந்தையரின் வற்புறுத்தலா அல்லது அவளின் அழகா ஏதோவென்றில் அவனும் தாலி கட்டிவிட்டிருந்தான். அவள் சிங்கை வந்து மகளும் பிறந்த பொழுதுதான் கணவன் வீட்டிற்கு வராத காரணங்கள் புரிந்தது அதனை ஆராய்ந்த பொழுது அடிக்கடி சண்டைகள். எப்போதாவது வீட்டிற்கு வரத்தொடங்கியிருந்தான். மாமா மாமியின் அன்பான கவனிப்பு வசதியான வாழ்க்கை அவள் குழந்தையின் சிரிப்பு அவளை வாழவைத்துக்கொண்டிருந்தது . இதெல்லாம் இல்லாட்டி நான் எப்பவோ செத்திருப்பேனுங்க என்று முடித்திருந்தாள்.

அந்த தொழிலதிபரின் மனைவியா என அவனிற்கும் ஆச்சரியமாகவே இருந்தது. அதன் பின்னர் நாளிற்கு நாள் நிமிடங்கள் அதிகரித்து மணித்தியாலங்களை விழுங்கத் தொடங்கியிருந்தது. அவள் பாட்டு படித்து காட்டுவாள் அவனும் ஆரம்பத்தில் அம்புலிமாமா ஜோக்கில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அந்தமாதிரி ஜோக்குகள் சொல்ல ஆரம்பித்திருந்தான் அவளிற்கும் பிடித்திருந்தது விழுந்து விழுந்து சிரித்தபடி அப்புறம் என்பாள். அவனிற்கு நின்றுகதைப்பதால் கால்வலியெடுத்து குந்தியிருந்து கதைக்கத் தொடங்கினான். வயர் கொஞ்சம் நீளமாக இருந்தால் சீமெந்து வாங்கில் படுத்திருந்தபடியே கதைக்கலாமெண்டு நினைப்பும் வந்தது .

ஏனுங்க எத்தனை நாளிற்குத்தான் இப்பிடி போனிலையே பேசிறது நேரிலை பாக்கவே முடியாதா?

அவன் அப்படி கேட்க மாட்டான ??என எதிர் பாத்திருந்தவள் போல் நாளைக்கு பாக்கலாமே என்றாள்.

எங்கை பாக்கிறதாம்.

நான் அதிகமா தனியா எங்கையும் வெளிலை போனதில்லீங்க இங்கை பக்கத்திலையே West Coast Plaza வந்திடுங்களேன். அங்க முதல் மாடியிலை உள்ள கோப்பிக்கடையிலை பாக்கலாமே.

எனக்கும் சிங்கப்பூர் அவ்வளவா தெரியாது அது எங்கைங்க இருக்கு?

யுரோங் பக்கமுங்க.

எப்பிடியோ தேடிப்பிடிச்சு வந்துடறேன் ஆனா எப்பிடி உங்களை அடையாளம் கண்டு பிடிக்கிறதாம்.?

நான் சுடிதாரிலை இருப்பேன்.

றெம்ப முக்கியமான அடையாளம் சிங்கப்பூரிலை சீனாக்காரிகூடத்தான் சுடிதார் போடுறாங்க.

வெள்ளை சுடிதார் மேலை சிகப்பு சோல் போட்டு வாறேன் அது உங்களிற்கு ஈசியா இருக்கும் நீங்க?

எப்பவாவது தோய்க்கிற கறுப்பு ஜுன்ஸ் மேலை சிகப்பு ரீசேட் ஓகேயா?

சரிங்க நாளைக்கு சந்திப்பம்..

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

ஆனாலும் அவனிற்கு ஒரு சந்தேகம் உண்மையிலேயே அது அப்பாவிப் பெண்தானா அல்லது ஏதாவது வேறை மாதிரி கும்பலாயிருக்குமோ என்பததான் அது .எதக்கும் நேரத்தோடையே போய் மறைந்திருந்து நோட்டம் விடுவது என்று தீர்மானித்திருந்தான். அவன் சொன்னது போல் சிவப்பு ரீ சேட் போடாமல் வெள்ளை ரீ சேட்டுடன் போனவன் முதலாம் மாடியில் இருந்த துணிக்கடை ஒன்றில் இருந்து நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். அவள் சொன்ன நேரத்திற்கு ஓடும் மாடிப்படிகளில் ஒரு சோடி தனங்கள் தெத்திவிழையாட ஓடிவந்துகொண்டிருந்தது ஒரு வெள்ளைச் சுடிதார். அவள்தான் தனலக்சுமியா இருக்கலாமென முடிவெடுத்திருந்தாள். பெத்தாங்களா இல்லை அளவெடுத்து செய்தாங்களா என்று அதிசயிக்கும் அங்கங்கள் அளவாகவும் அழகாகவும் அசைந்துகொண்டிருந்தது.அவள் அழகிற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் கொட்டிக்கொடுத்து விட்டு காலடியிலேயே காத்திருக்கலாம். அப்படியிருக்க ஒரு கோடீஸ்வரன் தாலியை கட்டிட்டு அப்பப்ப வந்து தொட்டுட்டு போறானே என்று அவனிற்கு கோவமும் வந்தது. கோப்பிக் கடையருகில் வந்தவள் பதட்டத்தோடு சுற்றிவர பாத்துக்கொண்டிருந்தபோதே அவளோடு யாரும் வரவில்லையென உறுதி செய்தவன் அவளருகில் வந்து வணக்கமுங்க மன்னிச்சுங்க சிகப்பு ரீசேட் அழுக்காயிட்டுது அதுதான் வெள்ளையிலை வரவேண்டியதாயிட்டுது என்றான்.

உங்க பேச்சை பாத்தா பெரியாளா இருப்பிங்க என்று நினைச்சன் ஆனா சின்ன பையனா இருக்கிறீங்களே என்றாள்

உலகமகா அவமானம். நானும்தான் உங்களை வயசான கிழவியா இருப்பீங்க எண்டு நினைச்சன் ஆனால் சின்னப் பெண்ணா இருக்கிறீங்கள் என்றான்.

வெட்கத்தோடு சரிங்க யாராச்சும் பாத்தாலும் நான் போயிடுறேனே?

என்னது இதுக்கா இவ்வளவு தூரம் வந்தனான் சரி வாங்க கடைஉள்ளை போய் ஓரமாய் உக்காந்து கூலாய் ஏதாவது குடிக்கலாம்.

சில நிமிட சந்திப்புத்தான் அவள் பயந்தவளாகவும் படபடப்போடுமே இருந்தாள். அந்த சில நிமிடங்களிலேயே அவள் இருக்கும் குடியிருப்பு எத்தனையாம் மாடி என்ன இலக்கம் எப்போது தனியாக இருப்பாள் என்கிற விபரமெல்லாம் தெரிந்து கொண்டிருந்தான். விடைபெற்றவளிடம் என்னங்க இனி எப்போ சந்திக்கிறதாம் என்றான்.

எனக்கு இப்பிடி வெளிலை சந்திக்க றெம்ப பயமா இருக்கு எங்க மாமா மாமி யாராவது பாத்தா பெரிய பிரச்சனையாயிடும்.

அப்போ சந்திக்கபோறதேயில்லையா?

மெளனமானாள்.

சரிங்க இரவு பேனிலையே பேசலாம் விடைபெற்றான்.

அன்றிரவு போனடித்துக்கொண்டேயிருந்தது அவன் எடுக்கவேயில்லை அந்தப் பக்கமாய் வந்த ஒரு சீனன் ஒருவன் எடுத்து காதில் வைத்து கலோ என்றான் அதற்கு பிறகு போனடிக்கவில்லை அவன் சிரித்துக்கொண்டான்.

அடுத்தநாள் அவளது குடியிருப்பை தேடிப்பிடித்து போயிருந்தான் வசதியானவர்கள் வாழும் இருபது மாடிகளைக் கொண்ட ஆடம்பரக்குடியிருப்பு காவலாளிகள் பாதுகாப்பு கமறாவெல்லாம் பூட்டியிருந்தது. முதல் மாடியில் பல அலுவலகங்கள் இருந்ததால் இலகுவாக உள்ளே புகுந்துவிட்டிருந்தவன் லிப்ற்றில் ஏறி 16 வது மாடிக்கு வந்தவன் அவனது வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். துவாரம் வளியாக பார்த்தவள் ஆச்சரியத்துடன் கதைவை திறந்து நீங்களா என்றவள் உள்ளை வாங்க பரபரப்பானாள். எப்படி வீட்டை கண்டு பிடிச்சிங்க?

அதுதான் நேற்றே சொல்லிட்டிங்களே

நல்லவேளை இப்பதான் மாமி வந்து மகளை எடுத்துக்கொண்டு போனாங்க

அதுவும் நேற்றே சொல்லிட்டிங்களே

ஓ அதுதான் புடுங்கி புடுங்கி கேட்டீங்களா? அதுசரி எதுக்கு நேத்து போன் எடுக்கலை?

காத்திருக்கிறது மட்டுமில்லை காக்க வைக்கிறதிலையும் ஒரு சுகம் இருக்கு

என்வோ போங்க எனக்குத்தான் மனசே சரியில்லை. என்ன சாப்பிடுறீங்க என்றவாறு பரபரப்பானவள் இன்னிக்கு மதியம் சாப்பிட்டுதான் போகணும் சமையலில் இறங்கியவள் நான் வெஜுரேரியன் காய் மட்டும்தான் சமைக்க தெரியும் பரவாயில்லையா?

நானும் வெஜுரேரியன்தான் நான் (non) வெஜுரேரியன் ..பசிக்கு எது இருக்கோ எல்லாமே சாப்பிடுவேன்.

சமைத்து முடித்தவள் மேசையில் அவனிற்கு மட்டும் பரிமாறிவிட்டு காத்திருந்தவளிடம்.ஏன் உங்களிற்கு பசிக்கலையா

அதில்லை ஆம்பிளைங்களிற்கு பரிமாறிவிட்டு அவங்க சாப்பிட்டப்புறம் சாப்பிடறதுதான் எங்க ஊர் வழக்கம்.

மற்றவங்க பசியோடை பாத்துக்கொண்டிருக்க சாப்பிட்டால் வயித்தை வலிக்குமாம் அதலை சேந்து சாப்பிடுறது எங்க ஊர் வழக்கம் எனக்கு வயித்து வலிவேண்டாம் சும்மா உங்காருங்க

சாப்பாட்டை போட்டு விட்டு அமர்ந்தவளிற்கு ஒரு பிடி உணவை எடுத்து வாயருகே நீட்டிளான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டாள் ஆனாலும் கண் மூடி வாய்திறந்தாள் தொண்டைவளியே உணவு உள்ளிறங்கும் போது கண்கள் கலங்கியிருந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் போனடித்து மாமியார் அப்போதைக்கு வரமாட்டார் என்பதை உறுதி செய்தாள் அவர்களும் அதே மாடிக்குடியிருப்பில் வேறு பகுதியில் தான் குடியிருந்தார்கள்.போவதற்கு புறப்பட்டவனிடம் உங்களிற்கு ஏதாவது அவசர வேலையிருக்கா என்றவளிடம்.

எனக்கென்ன வேலை அவசரம் ஒண்டும் கிடையாது சோபாவில் அமர்ந்தான்

அப்ப கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாமே அமர்ந்தாள் அதே சோபாவில்தான் கொஞ்சம் இடைவெளி

ஏதாவது ஜோக் சொல்லுங்களேன்.

ம்ம்ம்...ஜோக் வேண்டாம் அது போனிலை சொல்லுறன்.இப்ப ஒரு சின்ன விடுகதை

விடை சரியா சொன்னா என்ன குடுப்பீங்க

என்ன வேணுமானாலும்..என்னை வேணுமானாலும். ஆனா தோத்திட்டா எனக்கு இங்கை ஒரு முத்தம் குடுக்கவேணும் தன் உதடுகளை காட்டினான்.

சீய்ய்ய்..செல்லமாய் கோபித்தவள் சரி சொல்லுங்க

வென்றாலும் தோற்றாலும் இலாபம்தான் எனவே ஈசியாய் ஒரு விடுகதை ..எல்லா ஆங்கில எழுத்தக்களிலும் றெம்ப கூலாக இருக்கும் எழுத்து எது??

ம்ம்...கொஞ்சம் யோசித்தவள் விடை தெரிந்திருக்கலாம். ஆனாலும் தெரியாது உதட்டை பிதுக்கினாள்.

சரி தோத்திட்டாய் எங்கை குடு.. உதட்டை காட்டினான்

முதல்லை விடையை சொல்லுங்க

B தான் ஏனெண்டா அதுதானே Aக்கும் C க்கும் இடையிலை இருக்கு

அட ஆமால்ல

எங்கை குடு குடு ஊம்ம்ம்..

அங்கையெல்லாம் முடியாது கன்னத்திலைதான்

சரி ஏதோ பரவாயில்லை கன்னத்தை காட்டினான்.

உதட்டை குவித்து கிட்ட நெருங்கியவனிள் கண்கள் முடிக்கொள்ள அவன் சட்டென கன்னத்தை திருப்பி தன்உதடுகளை அவள் உதடுகளோடு ஒட்டினான் அவளிற்கோ பிரிக்க விருப்பமில்லை சோபவில் சரித்தான்.மெல்ல அவன் கைகளை விலக்கியவள் மெல்லிய குரலில் இங்கை வேணாம்.

விசாலமான படுக்கையறை துள்ளிவிழுந்தால் தூக்கியெறியும் சொகுசு பஞ்சுமெத்தை. ஆரம்பிக்கும் ஆனந்த சயனத்தில் அவன். அவள் யன்னல் திரைகளை இழுத்தாள் பகல் இரவானது அவிழ்த்தஅவள் அங்கு நிலவானாள்.அலுமாரியை திறந்து காற் சலங்கைகளை கால்களில் மாட்டிக்கொண்டாள். அவள் மேனியில் அச் சலங்கைகள் மட்டுமே ஆடையாக

என்ன இது ??

எனக்கு மகிழ்ச்சியோ கவலையோ சலங்கையை கட்டிக்கொள்வேன்.இப்போ நான் றெம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இப்ப இது றெம்ப முக்கியமாக்கும் என நினைத்தவன் கையை நீட்டினான். அவன் கைகளில் அவள் வீணையானாள் மீட்டத்தொடங்கினான். முத்தத்தை நெற்றியில் தொடங்கியவன் உதட்டை கடந்து கழுத்துவழியிறங்கி இடையை தொட்டபோதுதான் ..றெம்ப பெரிய இடத்திலை வாயை வைக்கிறமோ? ஏதாவது பிரச்சனை வந்தால் ???. சே முழுக்க நனையிறதெண்டு முடிவெடுத்தாச்சு மொட்டாக்கு இனியெதுக்கு.முன்னேறினான். அவள் சலங்கை ஒலிக்க ஆரம்பித்தது. இந்தநேரம் சீர்காளியின்ரை ஒரு மணிக்கொருமணி எதிர் எதிர் ஒலித்திட எண்டிற பாட்டை சிங்கப்பூர் வானொலியிலை போட்டால் எப்பிடியிருக்கும். .. பலநாள் பாலைவனத்தில் தாகத்தோடு தண்ணியின்றி அலைந்த ஒரு ஒட்டகம் பசும் சோலையில் நீர் நிலையை கண்டது போல் தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினாள்.அடித்து ஒய்ந்தது சலங்கை அவன் அணைப்பில் அவள்.

ஏய் ...

ம்...

றெம்ப சூடயிருக்கே

எது ??

அறைதான்

ஏசியை கொஞ்சம் கூட்டிவிடேன்.

குளிரை கூட்டியவள் மீண்டும் கூடினாள்.

அன்ரிரவு வானொலிக்கு போனடித்து மகிழ்ச்சியான பாடல் ஒன்றையும் கேட்டிருந்தாள் நிகழ்ச்சி நடத்தியவரிற்கே ஆச்சரியம்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

இரண்டு மாதங்கள் அவனிற்கு அனேகமாக ஒவ்வொரு நாளுமே அவள் வீட்டில் விருந்துதான் இப்பொழுதெல்லாம் அவனிற்கு சாப்பாட்டு காசு மிச்சம் அது மட்டுமல்ல தாரளமாக பியரும் அடிக்க அவள் அவ்வப்பொழுது அவன் சட்டைப் பையில் வைக்கும் பணம் உதவியது. இப்பொழுதெல்லாம் சிங்கப்பூர் வானொலிக்கு இரண்டு நேயர்கள் குறைந்து போய்விட்டிருந்தனர். ஆனால் அவனிற்கு வேலைகள் அதிகரித்திருந்தது மட்டுமல்ல அடிக்கடி வெளிநாடுகளிற்கும் பயணிக்க வேண்டியிருந்தது கொள்வனவு பொருட்களை சேகரித்து வைப்பதற்காக தனியாக ஒரு வீடும் தேடிக்கொண்டிருந்தான் அப்படியானதொரு நாளில்தான் அவள் வீட்டிற்கு சென்றிருந்தவனை

என்னங்க கொஞ்சம் இங்கை வாங்களேன். முதன் முதலாக சாமியறைக்குள் அழைத்து சென்றவள் அங்கு தட்டில் இருந்த இரண்டு மெட்டிகளை அவன் கையில் கொடுத்து இதை மாட்டிவிடுங்களேன்..

என்னது ?

மெட்டி இது கூட தெரியாதா?

அது தெரியிது இப்ப எதுக்கு இதைமாட்டி விடணும்.

தெரிஞ்சோ தெரியாமலே பிடிக்காத தாலியை கட்டிக்கிட்டேன். ஆனா அதை கழற்ற மனசு இல்லை அதாலை மெட்டியை கழற்றிட்டு மனசுக்கு பிடிச்சவர் கையாலை போட்டுக்கபோறன்.அவன் கைகளில் திணித்தாள்.

நிலைமையின் விபரீதம் இப்பொழுதுதான் அவனிற்கு புரியத் தொடங்கியது. சங்கடமான நிலைமை சரி தாலியா கட்டப் போறம் மெட்டிதானே மாட்டி விடுவம். மாட்டி விட்டான்.அன்று அவன் அணைப்பில் இருந்தவள் ..என்னங்க எனக்கு இப்பிடியே செத்துடணும் போல இருக்கு..ஏய் லூசு என்ன உளறுறாய்?? வீட்டு அழைப்பு மணி அடித்தது.. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தவள் போய் துவாரம் வளியாக பாத்தவள் ஜயையோ மாமியும் மகளும் அவளிற்கு காத்தாலை லேசா உடம்பு சரியில்லை என்றவள் .திரும்ப ஓடிவந்து அவனை குளியலறைக்குள் தள்ளி கதவை சாத்தி விட்டு போயிருந்தாள்.

அப்பொழுதான் அவன் மண்டையில் உறைத்தது ஜயோ வசல்லை செருப்பை கழட்டி விட்டிருந்தனே கவனிச்சிருப்பாங்களோ?? என்ன செய்யலாம்.

குளியலறை யன்னலை திறந்து எட்டிப்பார்த்தான் 16 ம் மாடி தலை சுத்தியது குதிச்சால் எலும்புகூட மிஞ்சாது. என்ன செய்யலாம்.?? அப்பதான் அவனிற்கு ஊர் பிள்ளையாரின் ஞாபகம் வந்தது மருதடியானே உனக்கு சின்ன வயசிலை தேங்காயெல்லாம் உடைச்சு கற்பூரம் கொளுத்தியிருக்கன் என்னை காப்பாத்து. அவள் மாமியாரை சமாளித்து அனுப்பி விட்டிருந்தாள். உடைகளை அவசரமாய் எடுத்து அணிந்தவன் வெளியேறியபோது அவள் குழந்தை அவனை பார்த்து புன்னகைத்தது அந்தப் புன்னகை அவனை ஊடுருவி மனதில் என்னவோ செய்தது. இனி அவளிடம் போவதில்லை முடிவெடுத்தான் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினான்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

அப்பொழுது அவன் அடிக்கடி மலேசியாவிற்கும் போய் வருவதால் ஈசூன் (yishn)பகுதியில் வீடு எடுத்திருந்தான். வானொலியில் அவள் மீண்டும் சோகப் பாடல்கள் கேட்கத்தொடங்கியிருந்தாள். அவன் பாடல் எதுவும் கேட்பதில்லை. அவனது குடியிருப்பிற்கு கீழே உள்ள கோப்பிக்கடையில் தினமும் பத்திரிகையை கையில் எடுத்தபடி பிளேன் ரீ குடிப்பது அவனது வழைமை. அன்றும் அப்படி பத்திரிகையை புரட்டியவன் ..மாடியில் இருந்து குதித்து இளம் தாய் தற்கொலை படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. மனது லேசாய் வலித்தது நானும் ஒரு காரணமோ . யோசித்தான். சே இதையெல்லாம் யோசிச்சு கொண்டிருந்தால் அடுத்த வேலை நடக்காது.

இப்பொழுதெல்லாம் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்கள். ஆனாலும் அங்கு நிற்கும் போது வழைமையாக பத்திரிகையை எடுத்தபடி பிளேன்ரியோடு அமர்ந்தவன் முன்னால்

காய்.யு ஆர் ரமிலியன்.??

சிங்கையில் இப்பிடித்தான் ஆங்கில அகராதியிலேயே இல்லாத சொற்கள் எல்லாம் கேட்கலாம்.

நிமிர்ந்து பார்த்தான் சப்பை முகம் பழுப்பு நிறம்.மலே பெண்போல தெரிந்தாள் கைகளால் மார்போடு கட்டியணைத்த பைபிள்.

நோ நான் ஜப்பானிஸ் ஆனா தமிழ்பேப்பர் படிப்பன்.

யூ ஆர் வெரி பனி'funny) லா...ஜ ஆம் போலின் வலக்கையை நீட்டினாள்.

தொடரும் ஆனால் இப்போதைக்கில்லை.....

Edited by sathiri

விசிட்டிங் காட்டில் விலாசம் தோ பா யோ (toa payoh) என்றிருந்தது .

ஆஹா........................ நல்ல இடத்துக்குத்தான் போறியள் . விடாமல் தொடருங்கோ .

தொடருங்கள் சாத்திரி.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் , இன்னும் எவ்வளவோ எதிர்பார்க்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், சாத்திரியார்!

இந்த மொபைல் போனுக்காகவே, அந்த நாளில எங்கட கொம்பனியில ஒருத்தர் வேலைக்குச் சேர்ந்தது, இன்றும் நினைவிருக்கின்றது!

அவர் அந்த போனை, இடுப்பில் கொழுவியபடி நடக்கும் போது, ஒரு ஆண் மயிலொன்று, தலையை நிமிர்த்தி நடக்கும் கம்பீரம், அவருக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், சாத்திரியார்!

இந்த மொபைல் போனுக்காகவே, அந்த நாளில எங்கட கொம்பனியில ஒருத்தர் வேலைக்குச் சேர்ந்தது, இன்றும் நினைவிருக்கின்றது!

அவர் அந்த போனை, இடுப்பில் கொழுவியபடி நடக்கும் போது, ஒரு ஆண் மயிலொன்று, தலையை நிமிர்த்தி நடக்கும் கம்பீரம், அவருக்கு! :D

:D:lol:lol.gifrofl.gif

ஹலோ....................... எண்டதோடை நிக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ..... அண்ணை......இருக்கிங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையிலை கத்தி விழக்கூடாது எண்டதற்காக சில திருத்தங்கள் செய்து கொண்டிருக்கிறன் விரைவில் இணைக்கிறேன். தேடிய கோ..மற்றும் சுண்டிலிற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

விறுவிறுப்பு படம் பாத்தமாதிரி இருக்கு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையை படிப்பதற்கு இலகுவாக மேலே சேர்த்துள்ளேன்.நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

Superb

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனசைப்பிசைந்த்தது . தனத்தின் முடிவு .ஆனாலும் தனத்திற்கான உங்களின் பொருட்சொல் , நான் இரவு நித்திரை கொண்டமாதிரித்தான் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள், சாத்திரியார்!

இந்த மொபைல் போனுக்காகவே, அந்த நாளில எங்கட கொம்பனியில ஒருத்தர் வேலைக்குச் சேர்ந்தது, இன்றும் நினைவிருக்கின்றது!

அவர் அந்த போனை, இடுப்பில் கொழுவியபடி நடக்கும் போது, ஒரு ஆண் மயிலொன்று, தலையை நிமிர்த்தி நடக்கும் கம்பீரம், அவருக்கு! :D

எனக்கும் அதை இடுப்பிலை கெழுவ விருப்பம் இருந்தது ஆனால் ஜுன்ஸ் கழண்டு விழுந்து விடும் எண்டு பயத்திலை கொழுவிறதில்லை. :lol: கருத்திற்கு நன்றிகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

அத மாதிரி வோக்கி கொழுவீட்டு திரிறதிலையும் ஒரு கிக் இருக்கு :D

நன்றாக போகிறது தொடருங்கள்....

நன்றாக இருக்கிறது. தனலட்சுமிதான் பாவம்.

பி.கு.

புதிய அத்தியாயத்தை பழைய அத்தியாயத்துடன் இணைப்பதால், இடப்படும் கருத்துக்கள் குழப்பமாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மனசைப்பிசைந்த்தது . தனத்தின் முடிவு .ஆனாலும் தனத்திற்கான உங்களின் பொருட்சொல் , நான் இரவு நித்திரை கொண்டமாதிரித்தான் :D

தனத்தின் முடிவு எனக்குள் இன்னமும் மனதில் குற்றஉணர்வை கொண்டேயிருக்கின்றது.என்ன செய்ய விழையாட்டுப் புத்தி. :( கருத்திற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை பாற்றா....அந்தநேரம் மன்மதக்குஞ்சுதான் போல..ஆனாலும் மனசு நெருடலாக இருக்கு கடைசிப்பகுதியை வாசிக்க..இப்பிடி எல்லாம் செய்தவர்கள் சொல்லும்போது இப்பிடி எல்லாம் செய்யக்கூடாது என்று மனதுகுள் சபதம் எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கு..விளையாட்டுத்தனத்திலும்,இளமையின் வேகத்திலும் வரும் சிந்தனைகளை செயலாக்கினால் பின்னாளில் அவைஎவ்வளவுதூரம் மனத்தை உறுத்தும் என்பதை உங்கள் கதையூடு உணரக்கூடியதாக இருக்கு..நன்றி அண்ணா தொடர்ந்து பகிருங்கள் உங்கள் அனுபவங்களை..அவை எம்மைப் போல் பலருக்கு சரியான பாதையில் போய்க்கொண்டிருக்க விளக்காக உதவி செய்யும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது. தனலட்சுமிதான் பாவம்.

பி.கு.

புதிய அத்தியாயத்தை பழைய அத்தியாயத்துடன் இணைப்பதால், இடப்படும் கருத்துக்கள் குழப்பமாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

தனியாக இணைக்கலாமெனத்தான் நினைத்தேன் ஆனால் இந்த தொடரே என்னையும் எனது அனுபவங்களையும் மையமாக வைத்தே நகருவதால் இங்கு தொடர்ந்தும் இணைக்கலாமென நினைத்து இணைத்திருந்தேன். குழம்பி தெளிவதுதானே அனுபவம் எனவே எல்லாருமே அனுபவப்படட்டும் என்கிற நல்லெண்ணம்தான் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக போகிறது தொடருங்கள்....

எதை?? கதையை தானே தொடருறன் நன்றிகள் :lol:

சாத்திரி தொடர்ந்து எழுதுங்கள். நான் உங்கள் கதைகளின் ரசிகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கை பாற்றா....அந்தநேரம் மன்மதக்குஞ்சுதான் போல..ஆனாலும் மனசு நெருடலாக இருக்கு கடைசிப்பகுதியை வாசிக்க..இப்பிடி எல்லாம் செய்தவர்கள் சொல்லும்போது இப்பிடி எல்லாம் செய்யக்கூடாது என்று மனதுகுள் சபதம் எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கு..விளையாட்டுத்தனத்திலும்,இளமையின் வேகத்திலும் வரும் சிந்தனைகளை செயலாக்கினால் பின்னாளில் அவைஎவ்வளவுதூரம் மனத்தை உறுத்தும் என்பதை உங்கள் கதையூடு உணரக்கூடியதாக இருக்கு..நன்றி அண்ணா தொடர்ந்து பகிருங்கள் உங்கள் அனுபவங்களை..அவை எம்மைப் போல் பலருக்கு சரியான பாதையில் போய்க்கொண்டிருக்க விளக்காக உதவி செய்யும்..

என்ரை கதையை வாசிச்சு நீங்கள் சரியான பாதையிலை போகப் போறீங்களா?? உருப்பட்ட மாதிரித்தான் :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.