Jump to content

கருத்துக் களத்தில் நான்


Recommended Posts

பதியப்பட்டது

வாசக நண்பர்கள்,கருத்தினை பதிவோர்கள்,ஏனையோர் பதிந்ததை கொள்முதல் செய்வோர்கள்,ஆக்கங்களை சமைப்போர்கள் அனைவருக்கும் என் வணக்கம்!

கருத்துக்களத்தில் இணைந்து கொள்வதற்கு நான் பட்ட​ கஷ்டங்கள் கொஞ்சமல்ல​., சொன்னால் நம்ப​ மாட்டீர்கள்,

அதனால் சொல்லாமலே இடம் விட்டு நகர்கிறேன்.

அங்கு போ, இங்கு போ என்று கொஞ்ச​ நாட்களாக​ இந்தக் கருத்துக்களம் என்னை பக்கம் பக்கமாக​ விரட்டியது.

அதுவும் அரிச்சுவடியில் இருந்து வந்தால் தான் உன்னை உள்ளேயே விடுவேன் என்று வேறு மிரட்டியது.

என்றாலும் நான் ஓய்ந்து போய் விடவில்லை. காரணம் என்ன​ என்று யாரோ கேட்பது போல் தெரிகிறது சொல்லி விடுகிறேன்.

வேறு என்ன​? இந்தத் தளம் எனக்கு மிகவும் பிடித்து விட்டமை தான். வெளிப்படையான​ சட்ட​ திட்டங்கள்!கொள்கைகள்!

அதிகம் ஏன் வாசகர்கள் கூட​ மற்றத் தளங்களினின்றும் சற்று வேறு பட்டுத் தெரிந்தார்கள்.

சரி இன்னும் ஓர் முறை வேறு கருத்துடன் வரும் வரை

தமிழில் அகர​ வரிசையில் எனக்கு பிடித் த​ மூன்று வார்த்தைகள் 'அம்மா,அன்பு,அமைதி'

பதிந்து விடை பெறுகிறேன்.

நிருபா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நிருபா,

வருக வருக என வரவேற்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நிரூபா .............உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் . தொடர்ந்து இணைந்து இருங்கள்

Posted

இப்போதைக்கு இது தான் நான்...!

மனதின் மறைவில்

மகிழும் உணர்வில்

எழுதும் பொருளில்

எண்ணங்கள் முடிவில்

ஈழ விடுதலை -அன்றி

வேறு எண்ணமில்லை

உண்ணும் போதும்

உறங்கும் போதும்

நிற்கும் போதும்

நடக்கும் போதும்

தமிழின் விடுதலை -அன்றி

தனியாய் எதுவுமில்லை.

நன்றி நிலாமதி,தமிழரசு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

218650470.gif

உங்களது நீண்ட போராட்டத்தின் பின் கருத்துக்களத்தில் எம்முடன் இணைந்து கொண்டமைக்கு நன்றிகள் நிருபா.

யாழ்களம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நிருபா தடைகள் பல கடந்து வந்த உங்களை

வரவேற்பதில் மகிழ்ச்சி

Posted

வணக்கம் நிருபா, வரவேற்கிறோம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஆரம்பத்தில் எனக்கும் பல இடர்ப்பாடுகள்

ஏற்பட்டன.அவைகளைக் கடந்து ஒருவாறு உள்நுழைந்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனதின் மறைவில்

மகிழும் உணர்வில்

எழுதும் பொருளில்

எண்ணங்கள் முடிவில்

ஈழ விடுதலை -அன்றி

வேறு எண்ணமில்லை

உண்ணும் போதும்

உறங்கும் போதும்

நிற்கும் போதும்

நடக்கும் போதும்

தமிழின் விடுதலை -அன்றி

தனியாய் எதுவுமில்லை....!

நல்வரவு

Posted

வணக்கம் வாருங்கள், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Posted

வடக்கு கிழக்கு இணைந்த​ தமிழர் தாயகத்தில் தொண்ணூற்றைந்தாயிரம் பெண்கள் விதவைகள்.

..ஏற்றுக் கொள்ள​ முடிகிறதா உங்களால்? என்னால் முடியவில்லை!

விடுதலை தேசமெங்கும் விதவைகள்...!

அவர்களின் வாழ்வு பற்றிய​ எண்ணங்களும் கனவுகளும் கருகிப் போயுள்ளன​,

எதிர்காலம் பற்றிய​ எந்த​ நம்பிக்கைகளும் இன்றி,

வெட்ட​ வெளியினூடே,வெறித்த​ பார்வை நிலைத்து நிற்க​, தொலைத்தவை தேடி நினைவுகள் மறுபடி தொலை​ய,

இவர்களின் கண்களில் வழியும் கண்ணீரை நிறுத்த​ முடியாது -

காரணங்கள் நிரம்பி வழிகின்றன....​...

எப்போதாவது தொலைதூரத்தில் ஒரு வெளிச்சம் தெரியாதா என்கிற​ உயிரற்ற​ ஒற்றை நம்பிக்கையுடன் காத்திருக்கும் இவர்களுக்கு,

இந்த​ சமூகம் தரப்போகும் பதில் என்னவாக​ இருக்கும்?

நாம் இனியொரு விதி செய்ய​ வேண்டாமா? ???????????

தமிழின் பெயரால் களத்தில் நுழைந்த​ எனக்கு இத்தனை வரவேற்பா..? மனதில் சின்ன​ புளகாங்கிதம்..

அர்த்தம்; நிறைய​ நல்லவர்கள் இருக்கின்றீர்கள் என்பது..!.நம்பிக்கை துளிர்க்கிறது...

நன்றி என்று வெறுமே ஒற்றை வார்த்தையால் தான் என்னால் சொல்ல​ முடிகிறது..

நான் பட்ட​ சிரமம் உங்களில் சிலருக்கும் இருந்திருக்கிறது,சின்னதாய் ஒரு ஆறுதல்.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.நான் பட்ட​ சிரமம் உங்களில் சிலருக்கும் இருந்திருக்கிறது,சின்னதாய் ஒரு ஆறுதல்.....

ம்ம்ம்

Posted

வணக்கம் நிருபா,

யாழ்களம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துகள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எல்லோருக்கும் வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் மதியழகன் ...........நல் வரவு

Posted

வணக்கம் மதியழகன், தங்கள் வரவு நல்வரவாகுக! தமிழர்கள் நல்வாழ்விற்காக ஒன்றுபட்டு

உழைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நிருபா வாருங்கள்.

உங்கள் பெயரைப்பார்த்தவுடன் எனக்கு ஒருவரை ஞாபகத்திற்கு வருகிறது

இவரா நீங்கள்?

கனடாவில் நிரூபா என்று ஒரு பத்திரிகையாளர் இருந்தார். "பொதிகை" என்பது அப்பத்திரிகையின் பெயர். அப்பத்திரிகை 90களின் மத்திய காலத்தில் பலரைக் கிலி கொள்ளவும் கொதிப்படையவும் வைத்திருந்தது அதனை நிரூபா என்ற பெண்மணியே இயக்கி வந்தார். துணிச்சல்காரி.

Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வரவேற்ற அன்புள்ளங்களுக்கு எனது நன்றிகள்!

அன்புடன்

ப.மதியழகன்

வரவேற்ற அன்புள்ளங்களுக்கு எனது நன்றிகள்!

அன்புடன்

ப.மதியழகன்

Posted

வணக்கம் நிருபா வாருங்கள்.

உங்கள் பெயரைப்பார்த்தவுடன் எனக்கு ஒருவரை ஞாபகத்திற்கு வருகிறது

இவரா நீங்கள்?

கனடாவில் நிரூபா என்று ஒரு பத்திரிகையாளர் இருந்தார். "பொதிகை" என்பது அப்பத்திரிகையின் பெயர். அப்பத்திரிகை 90களின் மத்திய காலத்தில் பலரைக் கிலி கொள்ளவும் கொதிப்படையவும் வைத்திருந்தது அதனை நிரூபா என்ற பெண்மணியே இயக்கி வந்தார். துணிச்சல்காரி.

சகாறா....! நான் அவரில்லை. ஆனாலும் என் மனதிலும் நீண்டபெரும் கனவுகள் என் தேசம் பற்றியும்,என் மக்கள் பற்றியும்; நினைத்தவுடன் மாற்றங்கள் நிகழ்ந்து விடாதா என்கிறஆதங்கம் நிறைந்தஎண்ணங்களுடன் வாழும் ஒரு சராசரி மனிதப் பூச்சி நான்..!

Posted

காற்றின் திசையில்

கடந்த​ வெளியில்

வெண் முகில் வானில்

அலை கடற் பரப்பில் -என்

விழி தொடும் முடிவின் ​

தூரம் வரையில் ....

விளங்காத​ கேள்விகளுக்காய்

இன்னமும் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.