Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு ஆண்மை நீக்கமே சரியான தண்டனை! - புதுடெல்லி நீதிமன்றம் கருத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

order-200212-150.jpg

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனை என்று புதுடெல்லி விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த 30 வயதுள்ள நந்தன் என்கிற காமக்கொடூரன், 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் முன் வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி,

குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனை. ஆனால், இந்தியாவில் அதற்கு சட்டத்தில் இடமில்லை. இதுபோன்ற மிருகங்கள், சமூகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குழந்தை இதுவரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அரசு சார்பில் அந்த குழந்தைக்கு உடனடியாக ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள், வாழ்நாள் முழுவதையும் சிறையில் தான் கழிக்க வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு ஒரு முன் உதாரணமாக அமையும் என்று நம்புகிறேன்.இவ்வாறு நீதிபதி ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நாளுக்கு நாள் இந்தியா வில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குழந்தைகளை பாலியல் கொடுமை செய்யும் காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற நீதிபதியின் கருத்து, சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுவாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களால்தான் பாலியல் தொந்தரவுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். இந்தியாவில் 53 சதவீத குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பதும், குறிப்பாக 5 முதல் 12 வயதுள்ள சிறுவர் சிறுமிகளே இதுபோன்ற கொடுமைக்கு பெரிதும் ஆளாக்கப்படுகின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் காமக்கொடூரன்களுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம் செய்ய, சட்டபூர்வமாக சில நாடுகள் அனுமதிக்கின்றன.

அமெரிக்காவில் கலிபோர்னியா, புளோரிடா, ஜியார்ஜியா, லூசியானா, மோன்டேனா, ஓரிகான், டெக்சாஸ் மற்றும் விஸ்கான்சின் போன்ற 8 மாகாணங்களில் இதுபோன்ற தண்டனைக்கு சட்டத்தில் இடம் உள்ளது.

தென்கொரியா, கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. அதில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு இதுபோன்ற தண்டனை வழங்க அனுதிக்கப்பட்டு உள்ளது.

போலந்து நாட்டில், குழந்தைகள், குடும்பத்தினரிடம் தகாத முறையில் நடந்து பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆண்மை நீக்கம் செய்ய சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

செக் குடியரசில் இதுபோன்ற குற்றம் செய்பவர்களுக்கு, இந்த கடுமையான தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 2009ம் ஆண்டு வரை 394 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

http://www.seithy.co...&language=tamil

இதை நான் வரவேற்கிறேன். நலமடித்தல் தான் சரியான தீர்ப்பு.இதை முழு உலகிற்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தம்பி தமிழரசு!

இதன் ஆங்கில மூலத்தை எனக்கு தனிமடலில் அனுப்பி விடவும்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் நீதிபதி அவர்களிடம் ஒரு கேள்வி இதில் ஈடுபடும் பெண்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்? நீங்கள் சொல்லுவதை பார்க்க ஆண்கள் மட்டுமே குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக கருதுவது போல் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா

எதற்கெடுத்தாலும் அங்கு ஏன் குறிவைக்கிறீர்கள்? :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா

எதற்கெடுத்தாலும் அங்கு ஏன் குறிவைக்கிறீர்கள்? :lol::D :D

இல்லை விசுகண்ணா அண்மையில் தான் இரண்டு ஆசிரியைகள் ஒரு ஆறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய செய்தியை அறிந்தேன்.இந்திய சட்டத்தில் பெண்கள் என்பதால் அதாவது பெண் என்ற வார்த்தை சட்ட புத்தகத்தில் இந்த குற்றத்துக்கு இல்லாதபடியால் அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை தான் கிடைக்குமாம் என்று எனது நண்பர் ஒருவர் கூறினார் அதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

மைனர்க் குஞ்சைச் சுடவேண்டிய இடத்தில சுட்டா எல்லாம் சரியாயிடும்.... :D

Edited by சுபேஸ்

கடந்த டிசம்பர் 26 அன்று 4 வயது பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முனைந்து பின் அயலவர்களால் உடனடியாக குழந்தை மீட்கப்பட்ட போது தப்பிஓடிய ஒரு வெள்ளை இனத்தவரை நேற்று கனடிய பொலிசார் தேடிக் கைது செய்துள்ளனர்...உலகம் எங்கும் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது

பிளேட்டால் பென்சில் சீவுவதைப் போன்றுதான் அணு அணுவாக இவர்களது ஆண் குறியை சீவித் தள்ள வேண்டும்..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு ஆண்மை நீக்கமே சரியான தண்டனை! - புதுடெல்லி நீதிமன்றம் கருத்து.

பழிவாங்கும் புத்தி அதிகரிக்க நல்லவழி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இந்திய இராணுவம் விதிவிலக்கா என கனம் நீதிபதி கூறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இந்திய இராணுவம் விதிவிலக்கா என கனம் நீதிபதி கூறவேண்டும்.

:lol: :lol: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நலமடிக்கப் பட்ட நாய்கள், பெண் நாய்களைக் கலைத்துக் கொண்டு திரிவதைக் கண்டிருக்கின்றேன்!

ஆண்மை நீக்கம், இவர்களது செயல்களை கட்டுப்படுத்தும் என்பதற்கு, விஞ்ஞான ஆதாரம் இருக்கின்றதா?

நெடுக்கர்! களத்திற்கு வரவும்!!!

என்ன தமிழ் நாட்டு சினிமா கதாநாயகர்கள் இந்திய கை கோட் ஜட்ஜுக்களுக்கு கோமேடியில் கெலித்தவர்களா. வெளுத்து வங்கிவிடுகிறார்கள். கோட்டிலை பார்த்தா என்ன, தியேட்டரிலை பார்த்தா என்ன. யஸ்ட் சேம்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு எப்பவாவது நடந்த குழந்தை பாலியல் வக்கிரங்கள், கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளதாக எண்ணுகின்றேன்.

பத்திரிகைகளிலோ, தொலைக்காட்டிகளிலோ... இரண்டு கிழமைக்கு ஒரு முறை இப்படியான செய்திகள் வருவது, நிலைமை மோசமாக உள்ளதை உணர்த்துகின்றது. சம்பந்தப்பட்டவர்களை வெளியே... வர முடியாதபடி தூக்கி உள்ளே போட வேண்டும்.

முன்பு எப்பவாவது நடந்த குழந்தை பாலியல் வக்கிரங்கள், கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளதாக எண்ணுகின்றேன்.

பத்திரிகைகளிலோ, தொலைக்காட்டிகளிலோ... இரண்டு கிழமைக்கு ஒரு முறை இப்படியான செய்திகள் வருவது, நிலைமை மோசமாக உள்ளதை உணர்த்துகின்றது. சம்பந்தப்பட்டவர்களை வெளியே... வர முடியாதபடி தூக்கி உள்ளே போட வேண்டும்.

இதுதவறு என்றுதான் நினைக்கிறேன்.எமது சிறுவர்களுக்கு இதைபற்றிய அறிவு குறைவு . அதனால் வெளியே தெரிவது இல்லை. சிறுவயதில் இப்படியான பாதிப்புக்கு உள்ளானோர் மனப்பாதிப்பு அடைவது திண்ணம்.கிராமங்களில் உங்களால் சரியாக விசாரிக்க முடியுமானால், உங்களுக்கு ஆச்சரியம் தரக்கூடிய அளவு இதன் பாதிப்பு இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். எல்லோரும் இன்றைய தலைமுறை குற்றம் சாட்டுவதை கொஞ்சம் தவிர்க்கலாம். சிறுவர்கள் படுக்கும் அதே அறையில் அவர்கள் தூக்கமா இல்லையா எனப்பார்க்காமல் புணர்வதும் ஒரு வகையில் பாலியல் பலாத்காரமே.

Edited by kssson

பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு ஆண்மை நீக்கம் செய்யும் நடை முறை ஏற்கனவே ஜெர்மனியில் இருக்கிறதாக தெரிகிறது. செக் குடியரசிலும் நடைமுறையில் இருப்பதாக தெரிகிறது.

Germany criticized for castration of sex offenders

he Associated Press

Date: Wednesday Feb. 22, 2012 6:21 AM ET

BERLIN — The Council of Europe's anti-torture committee is pressuring Germany to do away with the practice of surgical castration of sex offenders.

In a report released in Strasbourg, France, on Wednesday, the committee says the use of castration to prevent convicted sex criminals from reoffending is "quite rare," with fewer than five cases annually in Germany. But it says it's an "irreversible intervention ... (that) could easily be considered as amounting to degrading treatment."

In its reply, Germany says it's debating whether to review the issue, but cites a study indicating it's effective and notes it's voluntary and only performed after all implications have been explained.

The committee has also criticized the Czech Republic, which uses the procedure more frequently.

Read more: http://www.ctv.ca/CT.../#ixzz1n7h63PK6

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.