Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாதிய அடையாளங்களைத் தாண்டிய தமிழ் அடையாளம் ஒன்றை நாம் ஏற்பதற்கான பொதுப் பண்பாட்டுவெளி ஏதும் இருப்பதாக கருதுகிறீர்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இக்கேள்வியின் அரசியல், தமிழ் அடையாளம் சாதிய அடையாளத்தை தாண்டியதல்ல அல்லது தமிழ் அடையாளமே சாதிய அடையாளம்தான் என்பது. தமிழ் என்ற இனம்சார் அடையாளத்தை சாதியம் என்ற குழுசார் அடையாளமாக மாற்றமுனையும் அரசியல் குறுக்கநிலை அல்லது அத்தகைய வேலைத்திட்டத்தின் பகுதியாக எழுந்துள்ள சிந்தனை. சாதியம் என்ற இனக்குழுசார் அடையாளத்தை, தமிழ் என்ற இனம்சார் அடையாளத்துடன் இணைத்து பார்ப்பது. சாதியம் இனக்குழுச் சமூகத்தின் குழுஅமைப்புகளை குறிக்க பிறந்த சொல்லாடல். தமிழ் “இனம்“ என்பதை குறிக்கும் நவீன முதலாளித்துவ வளர்ச்சியுடன் உருவான சொல்லாடல். சாதிய அடையாளம் இனக்குழு வரலாற்றின் உடலரசியல்நிலை, தமிழ் அடையாளம் முதலாளித்துவ சமூகத்தின் கற்பிதக் கருத்தாக்கமான இனவரலாற்றின் உணர்வரசியல்நிலை. இனஅடையாளம் என்பது அதிகாரப்போட்டியில், ஆதிக்க சக்தி தனக்கு பின்னால் மக்களை திரட்டமுனையும் கற்பிதக் கருத்தாக்கமே. முழுமையாக இனமாக வளர, வாழ, வழியற்ற சமூகஅமைப்பில் ஏற்கனவே இயங்கிவரும் சாதிய குழு அடையாளத்தில் உயர்சாதி தன்னை தமிழாக அடையாளப்படுத்திக் கொள்வது வரலாற்றின் ஒரு தவிர்க்கவியலா தீங்காக அமைந்துவிட்டது. தமிழ் என்பதில் தனிமனிதனை திரட்டமுடியாத ஆதிக்க சக்தி, சாதிய குழுக்களை தமிழ் என்பதற்குள் ஒழுங்கமைக்கிறது. தமிழ் அதனுடன் சேர்ந்த சைவ அடையாளமாக மாறிவிடுகிறது. அல்லது தமிழை உயர்சாதி சைவஅடையாளமாக வரலாற்றில் கதையாடச் செய்வதன்மூலம், சாதியமுறையை காத்துவரும் பார்ப்பனியம், தமிழ் என்பதை இந்துத்துவ மதவாதத்திற்குள் இருத்துவதற்கும், தமிழ் என்கிற கருத்துருவத்தை சாதிய அடையாளமாக குறுக்கிவைத்து செய்யும் அரசியலாகவும் உள்ளது. இந்துமதம் வரலாற்றில் தமிழ்மதமாக இல்லை என்பதால், சைவத்தின் வழியாக தமிழ் என்கிற கருத்துருவம் இந்துமதமாக மாற்றி வைக்கப்பட்டு உள்ளது. தமிழ் இந்துவாக, இந்துமதமாக, இந்து உணர்வாக புரிந்துகொள்ளும்படி செய்யப்படுகிறது. சமீபத்தில் தமிழ்தேசியம் பேசமுனையும் தலைவர்கள் பார்பனியர்களுடன் கைகோர்ப்பதும், மறத்தமிழனாக தன்னை அடையாளப்படுத்தும் சாதிகள், பார்ப்பனியர்களை அழைத்து ஜெயந்தி கொண்டாடுவதும் நடைபெறுகிறது. திராவிடம் என்பது தமிழ் என்பதற்கான மாற்றாக இருந்ததை அரசியல் நீக்கம் செய்து, தமிழை சாதியமாக மாற்றமுனையும் போக்கும் உருவாகி வருகிறது. தமிழ் என்பதற்குள் பார்ப்பனியர்களை அடக்க முடியும், திராவிடத்தில் முடியாது என்பதும் இந்த அடையாள அரசியல் விளையாட்டின் ஒரு விளைவு. ஆக, இக்கேள்வி மதவாத-சாதிய மனநிலையின் வெளிப்பாடாகவே வந்துள்ளது.

இக்கேள்வியில் சிக்கலான இரண்டு கருத்தாக்கங்கள் உள்ளன. ஒன்று அடையாளம் மற்றது பொதுப்பண்பாட்டுவெளி. அடையாளம் நவீனத்துவத்தின் கண்டுபிடிப்பு. சமூகத்தன்னிலைகளை வடிவமைப்பதற்கான அரசியல் சொல்லாடல். சாராம்சமானது, பிறப்படிப்படையிலானது, வம்சாவழியானது போன்ற மரச்சிந்தனை வரலாற்றின் அடிப்படையில் நிலையான தன்மை கொண்டதைப்போல காட்டப்பட்டாலும், அடையாளம் என்பது ஒரு மிதக்கும் குறிப்பான் எனலாம். அது எந்த சூழலில் எங்கு நிலைபெறும் என்பதை அதன் எதிர்மையே தீர்மானிக்கும். அவ்வகையில் மற்றமையின் எதிர்கொள்ளலில்தான் சாதியம், இனம், பால் போன்ற குறிப்பீட்டு அடையாளம் உருவாகுகிறது. ஆணற்ற இடத்தில் பெண் அடையாளம் செயல்பாடற்றது, தேவையுமற்றது. எனவே, அடையாளம் மற்றதை விலக்கி தன்னை கட்டுவதால் உருவாகுகிறது. இது எப்போதும் எதிர்மையை அழிப்பது அல்லது அடக்குவது என்கிற வன்முறை சார்ந்த ஒன்று. போர் எந்திரத்தின் கட்டமைப்பான இருமை எதிர்வில் உருவானது. அதனால் சாதிய மற்றும் தமிழ் அடையாளம் என்பது, வரலாற்றின் தேவைக்கு ஏற்ப செயல்படக்கூடிய அரசியல் சார்ந்தவை என்பதால் அதை தாண்டிய ஒரு பொதுபண்பாட்டுவெளி சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. அடையாள அரசியலின் எதிர்விளைவே பொதுப்பண்பாட்டுவெளி பற்றிய ஏக்கமாக உள்ளது. இதில் எது பொதுவானது? யாருக்கு பொதுவானது? பொது என்பதை தீர்மானிப்பது எது? என்கிற கேள்விகள் உள்ளன. அடையாளம் என்பது மற்றமைக்கு எதிராக நங்கூரமிடப்பட்ட மனித தன்னிலை என்பதால், அது தனி பொது என்கிற வெளியின் அவசியத்தை கோருவதன் வழியாக தொடர்ந்து அரசியல் விளையாட்டை நிகழ்த்துவதாக உள்ளது. தமிழ் அடையாளம் உயர்சாதிய ஆதிக்க சக்திகளால் அதன் அறிவு உற்பத்திக்கருவிகளால், சாதிய அடையாளத்தை தாண்டிய பொதுப்பண்பாட்டுவெளியாக கண்டுபிடித்து கட்டமைக்கப்பட்டதுதான். எனவே, பொதுஅடையாளம் சாத்தியமற்றது என்றால், பொதுப்பண்பாட்டுவெளியும் சாத்தியமற்றதே.

- ஜமாலன் (20௧1௨011) jamalan.tamil@gmail.com

- உயிர்மை 100வது சிறப்பிதழ் டிச. 02 2011

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்

இந்தக்கேள்விக்கு எவருமே பதில் தரவில்லை

இதுவே போதும் எம்மை நாம் அளவிட.

இதையும் மீறி நான் வேறு இடங்களில் எழுதியவற்றை சிலர் கற்பனை என விட்டுவிட்டனர்.

அல்லது உன் பிள்ளையை என்ன செய்வதாக உத்தேசம் என்ற முடிவு என் கையில் இல்லாததற்கான கேள்வி தான் வருகிறது.

எனவே பிரச்சினையின் ஆழத்தை நாம் தவறாக கணிக்கின்றோம்.

தலைவர் அதில் சில விட்டுக்கொடுப்புக்களைச்செய்தார் என்றால் அதன் ஆழத்தை அனுபவ அடிப்படையில் அவர் உணர்ந்திருந்தார் என்றுதான் அர்த்தமே தவிர அது ஒரு சிறுவிடயம் அதை தள்ளிப்போடலாம் என்பதனால் அல்ல.

இன்னும் சொல்லப்போனால் இயக்கத்தின் தோல்விக்கு இதற்குள் போனதும் ஒரு காரணம் என்று சொல்வோரும் எம்மிடமுண்டு. அத்துடன் தமிழ்ச்செல்வன் அண்ணா பற்றி வன்னியில் இதை வைத்தே தான் அதிகம் விமர்சித்தார்கள். அதை நான் நேரில் கண்டேன்.

இதிலிருந்து வெளியில் வருவது என்ற கேள்விக்கு பதில்

கலப்புத்திருமணங்களால் இது ஒரு அளவே சாத்தியம்.

வெள்ளையைக்கட்டிக்கொண்டால் பிள்ளை வெள்ளையாக வரும் என்ற அடிப்படை எவ்வளவு திருட்டுப்புத்தி கொண்டதோ அதைப்போலத்தான் இதுவும்.

படிப்பு பொருளாதார உயர்வே இதற்கு ஒரே வழி.

அதற்கு எம்மாலான உதவிகளைச்செய்வதே இது போன்றவற்றை அழிக்க நினைப்போர் இன்று செய்யவேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்த வரையில் சாதியை ஒழிப்போம்,சாதியை ஒழிப்போம் என சொல்லிக் கொண்டு தாழ்ந்த சாதியினர் என சொல்லப்படுபவர்கள் கூட தங்களை விட உயர்ந்த சாதியில்[என சொல்லப்படுபவரை] தான் திருமணம் முடிக்க நினைக்கின்றனரே தவிர தங்களை விட குறைந்த சாதியில் இல்லை...தலைவரை விடுங்கோ அவர் காதலித்தார் சாதி பார்க்காமல் கட்டினார் ஆனால் அவர் தமிழ்செல்வன் போன்றோருக்கு செய்து வைத்த திருமணம்?...ஏன் அவரால் த.செனின் சாதியிலும் குறைந்த சாதிப் பெண்ணை கட்டி வைக்க முடியாமல் போனது?...எல்லோரும் சாதியை ஒழிப்போம் என சொல்லிக் கொண்டு தங்களை விட உயர்ந்த சாதியில் கட்ட நினைக்கிறார்களே தவிர தாழ்ந்த சாதியில் இல்லை.

இன்னும் ஒன்றையும் நான் கேள்விப்பட்டேன் சாதிக்கும்,பழக்கவழக்கங்களுக்கும் தொடர்பு இருக்குமாம்.அதாவது ஒருவருடைய பழக்கவழக்கங்களை வைத்து அவர் இன்ன சாதி என சொல்லலாமாம் இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.

என்னைப் பொறுத்த வரை காதலித்து திருமணம் செய்தாலே தவிர மற்றப் படி சாதியை ஒழிக்க முடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே சாதியம் உருவாகும் மைய இடங்களாக இருக்கின்றன,பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாதொழியும்போது சாதியமும் காற்றில் அடிபட்ட சருகுபோல காலத்துடன் அடிபட்டுப் போய்விடும் என்றுதான் நானும் முதலில் நம்பினேன்...ஆனால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற புலம்பெயர் சூழலிலும் சாதியம் புலம்பெயர்ந்து வந்த முதல் தலைமுறையிடம் உயிர்வாழ்வதைக் கண்களால் கண்டபோது அந்த நம்பிக்கை தகர்ந்தது மட்டுமன்றி ஊரில் இருந்து வந்த அந்தத் தலைமுறையிடம் மிக வக்கிரமாக மண்டிக்கிடந்த பிற்போக்குத்தீவிர சிந்தனைகளையும் பாலில் விழுந்திருந்த கரும்புள்ளிகள் போல் புலம்பெயர் சூழலில் இன்னொரு முன்னேறிய சமூகத்துடன் ஒப்பிட்டுக் கண்டுகொள்ளக்கூடியதாக இருந்தது..ஆனால் எமது சமூகத்தின் முன்னேறிய சமூக வேறுபாடுகள் அற்ற ஒரு சூழலில் பிறந்து வளர்ந்த அடுத்தடுத்த தலைமுறைகளிடம் அவை துளியும் இல்லாமல் இருந்ததைக் கண்டபோதுதான் சமூகம் இப்படிப் பட்ட பிற்போக்குத்தனங்களை ஈழத்தில் எப்படி ஊட்டிஊட்டி தலைமுறைகளைப் பிரசவிக்கிறதென்பதை நடைமுறையில் உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மிகவும் சிக்கலான விடயம்!

சாதீயம் எல்லா இனங்களிலும் இருக்கின்றது! ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் பொருளாதார ரீதியாகவும்,சமூக ரீதியாகவும், மேலாண்மை செய்ய, இந்தச் சாதீயம் பயன்படுத்தப் படுகின்றது. பிறப்பால் மட்டும் இது ஏற்படுவதில்லை. படித்தவர்கள், படிக்காதவர்களை மட்டம் தட்டுவதும், ஒரு விதத்தில் சாதீயத்தின் வடிவமே! உடுப்புத் தோயப்பவனை, வண்ணான் என்கிறோம். ஆனால் அவனே, அதை ஒரு வியாபாரமாக்கி, ஒரு 'dry cleaning; நிறுவனமாக்கும் போது, அவனது சாதி மறைந்து போகின்றது.அவனது குடும்பத்தினருடன் உறவு கொள்ளப் பலர் முன்வருகின்றார்கள்! அதை நியாயப் படுத்த விளக்கமும் கொடுப்பார்கள். கல்வியும், பொருளாதாரமும் வளரும்போது, சாதீயம் தானாக உடையும்.ஒருவன் மற்றவன் மீது, ஆதிக்கம் செலுத்துவதைக் குறைக்கும் போது, சாதீயம் தானாகச் சாகும். காலம் காலமாகக், கட்டி வளர்க்கப் பட்ட, தாழ்வு மனப்பான்மையை, உடைக்க உதவுவோமாயின், சாதியொழிப்பின், முதல் தடையுடையும்! 'வருணாச்சிர தர்மமே' இன்னும் சாதியை உயிர் வாழ வைத்திருக்கின்றது. ஒருவரின் மரணத்தின் பின்பு கூட, அவரின் மரண அறிவித்தலில், இரு மரபும் துய்ய, என்றே இன்னும் எழுதுகின்றோம். எதற்காக? இலங்கைப் பிறப்புச் சான்றிதழ்களில் கூடச் சாதி இருந்ததாக ஞாபகம்! தொழில் முறைச் சாதீயம் மறைகையில், ஒரு சாதியினர் ஒன்றாகக் கூடி வாழ்வது மறைகையில்,சாதீயமும் மறையும்!

பலர் தங்களை அறியாமலே, சாதியத்தை ஊக்குவிக்கின்றார்கள்!

வேதம் புதிது, படத்தில், ஒரு பிராமணப் பையன், 'பாலுத் தேவரில் ' உள்ள தேவர் நீங்கள் படித்து வாங்கிய பட்டமா? என்று ஒரு கேள்வி கேட்கின்றான்! அதன் பிறகே , பாலுத்தேவர்' வெறும் பாலு ஆகின்றார்!

நம்மையறியாமலே, இந்தத் தடிப்பு, எம்மில் பலரிடம் ஊறிப் போய் உள்ளது என்பதே உண்மை!

பாரதி காலத்திலிருந்தே, ஔவையார் காலத்திலிருந்தே, இது தொடர்ந்து வருகின்றது!

இல்லாவிட்டால், சாதியிரண்டொழிய வேறில்லை' என்று ஔவையார் பாடியிருக்க மாட்டார்!

இனியாவது, அடுத்துவரும் தலைமுறைகளாவது, திருந்தட்டும்!

இணைப்புக்கு நன்றிகள், சுபேஸ்!

Edited by புங்கையூரன்

என்னதான் மழை எங்கமேல பெய்ஞ்சாலும்,,

திரும்பி நிற்கவோ... இல்ல திருந்தி வாழவோ விரும்பாம ........

நாங்க அசையாம நிக்குற லூசு ஜாதி!

எங்களுக்கெல்லாம் விடுதலை ஒரு கேடு! :)

எங்கள் ஆட்கள் தங்கள் பிள்ளைகளை மற்ற இனத்தவர்களைத் திருமணம் செய்ய அனுமதிப்பார்களே தவிர வேறு சாதியில் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். சாதியம் ஒழிய நாம் இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளைத் தாண்ட வேண்டும். ஏனெனில் தமது பிள்ளைகளுக்கும் இந்தப் பழக்கத்தை நன்றாக விதைத்து விட்டார்கள்.

நான் பார்த்த வரையில் சாதியை ஒழிப்போம்,சாதியை ஒழிப்போம் என சொல்லிக் கொண்டு தாழ்ந்த சாதியினர் என சொல்லப்படுபவர்கள் கூட தங்களை விட உயர்ந்த சாதியில்[என சொல்லப்படுபவரை] தான் திருமணம் முடிக்க நினைக்கின்றனரே தவிர தங்களை விட குறைந்த சாதியில் இல்லை...தலைவரை விடுங்கோ அவர் காதலித்தார் சாதி பார்க்காமல் கட்டினார் ஆனால் அவர் தமிழ்செல்வன் போன்றோருக்கு செய்து வைத்த திருமணம்?...ஏன் அவரால் த.செனின் சாதியிலும் குறைந்த சாதிப் பெண்ணை கட்டி வைக்க முடியாமல் போனது?...எல்லோரும் சாதியை ஒழிப்போம் என சொல்லிக் கொண்டு தங்களை விட உயர்ந்த சாதியில் கட்ட நினைக்கிறார்களே தவிர தாழ்ந்த சாதியில் இல்லை.

இன்னும் ஒன்றையும் நான் கேள்விப்பட்டேன் சாதிக்கும்,பழக்கவழக்கங்களுக்கும் தொடர்பு இருக்குமாம்.அதாவது ஒருவருடைய பழக்கவழக்கங்களை வைத்து அவர் இன்ன சாதி என சொல்லலாமாம் இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.

என்னைப் பொறுத்த வரை காதலித்து திருமணம் செய்தாலே தவிர மற்றப் படி சாதியை ஒழிக்க முடியாது

அம்மா ரதி உங்களுக்கு TS இன் திருமணம் மட்டும் தான் தெரியும் போல.....எத்தனையோ தளபதிகளுக்கு அவர்களது சாதியை விட குறைந்த சாதியை உடையவர்களுக்கு தலைவரால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

Edited by Donkey

  • கருத்துக்கள உறவுகள்

<p>

அம்மா ரதி உங்களுக்கு TS இன் திருமணம் மட்டும் தான் தெரியும் போல.....எத்தனையோ தளபதிகளுக்கு அவர்களது சாதியை விட குறைந்த சாதியை உடையவர்களுக்கு தலைவரால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அப்படியா யார் அவர்கள் என எழுதினால் நாங்களும் தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்

<p>அப்படியா யார் அவர்கள் என எழுதினால் நாங்களும் தெரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்

உங்களுக்காக சில குடும்பத்தினரது தனிப்பட்ட விடயங்களை எழுத முடியாது. அவரிடம் மன்னிப்பை கேட்டுக் கொண்டு......... Juliet Michael என்ற குறியீட்டில் இருந்த இந்த தளபதி தலைவரின் தலமையில் மன்னாரை சேர்ந்த ஒரு பெண் போராளியை கரம் பிடித்தார்.மன்னிக்கவும் ஏனையவர்கள் தொடர்பாக எழுத முடியாது.

50 போராளிகள் அதில 40 ஆயிரம் மாவீரர்கள் அதில ஒருவரின் பெயரைத் தான் உங்களால் சொல்ல முடிகிறது...

ஏன் என்றால் உங்களால் உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை

புலிகள் இல்லை அனைத்து இயக்கங்களும் அப்படி தான் இந்த விடயத்தில்

புலிகளோ அல்லது ஒட்டுக் குழுக்களோ வேறுபட்டவர்கள் இல்லை............

புலிகள் சாதி ஒழிப்பை ஒரு கொள்கையாக எடுக்கவில்லை அது போராட்டத்துக்கு பின்னடைவாக போகும் என்று அதே நேரம் கடும் சாதி போக்களைர்களை ஒடுக்கியும் வைத்தார்கள். புலிகள் இருந்த சூழ்நிலையின் சாதிடை கொஞ்சம் தட்டி தட்டி உறங்க வைத்தார்கள் அத்தோடு புலிகள் மைப்புக்குள் சாதி வேற்றுமையை வளரவிடவில்லை .

அதுக்காக தமிழ்மக்களிடம் சாத்தியை ஒழித்தார்கள் அல்லது அதை மறக்க பன்னினார்கள் என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்..............

சாதி விடையத்தில் புலிகள் நடந்து கொண்டது ஓரளவுசரியாக்வே பட்டது...... இல்லை என்றால் சாதியாலையே புலிகள் அமைப்புக்குள் எப்போதே பிரிவுகளை உருவாக்கி இருப்பார்கள்.

நான் பார்த்த வரையில் சாதியை ஒழிப்போம்,சாதியை ஒழிப்போம் என சொல்லிக் கொண்டு தாழ்ந்த சாதியினர் என சொல்லப்படுபவர்கள் கூட தங்களை விட உயர்ந்த சாதியில்[என சொல்லப்படுபவரை] தான் திருமணம் முடிக்க நினைக்கின்றனரே தவிர தங்களை விட குறைந்த சாதியில் இல்லை...தலைவரை விடுங்கோ அவர் காதலித்தார் சாதி பார்க்காமல் கட்டினார் ஆனால் அவர் தமிழ்செல்வன் போன்றோருக்கு செய்து வைத்த திருமணம்?...ஏன் அவரால் த.செனின் சாதியிலும் குறைந்த சாதிப் பெண்ணை கட்டி வைக்க முடியாமல் போனது?...எல்லோரும் சாதியை ஒழிப்போம் என சொல்லிக் கொண்டு தங்களை விட உயர்ந்த சாதியில் கட்ட நினைக்கிறார்களே தவிர தாழ்ந்த சாதியில் இல்லை.

இன்னும் ஒன்றையும் நான் கேள்விப்பட்டேன் சாதிக்கும்,பழக்கவழக்கங்களுக்கும் தொடர்பு இருக்குமாம்.அதாவது ஒருவருடைய பழக்கவழக்கங்களை வைத்து அவர் இன்ன சாதி என சொல்லலாமாம் இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.

என்னைப் பொறுத்த வரை காதலித்து திருமணம் செய்தாலே தவிர மற்றப் படி சாதியை ஒழிக்க முடியாது

அது தெரியா ஆனால் ஊரில் சில பெடியங்கள் முக்க மடிப்பு கையை விட்டுக் கொண்டு தலையைஉம் 2 பக்கமும் பின் பக்கம் சிவிக் கொண்டு நடுவை நெற்றி நோக்கி சீவி விட்டு போடுற சேட்டௌ கலரில் வைத்து இவர் இன்னார் என்று சொல்லுவார்கள்.......... அதே போல பேச்சு வழக்கத்திலும் கண்டு பிடிப்பார்கள். ஆனால் நான் வன்னியில் நிக்கும் போது ( மல்லாவி ,துனுக்காய், மாங்குளம், ஓட்டிசுட்டான் , கண்டாவளை , விசுவமடு) பக்கம் என்னமோ தெரியா சாதியை பற்றி என்ன தோன்றவில்லை.

எங்கள் ஆட்கள் தங்கள் பிள்ளைகளை மற்ற இனத்தவர்களைத் திருமணம் செய்ய அனுமதிப்பார்களே தவிர வேறு சாதியில் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். சாதியம் ஒழிய நாம் இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளைத் தாண்ட வேண்டும். ஏனெனில் தமது பிள்ளைகளுக்கும் இந்தப் பழக்கத்தை நன்றாக விதைத்து விட்டார்கள்.

அது பறவாய்யில்லை ஊரில ந்ஆங்கள் பழகும் போது தெரியாத ஒருவரை நீ என்ன சாதி என்று நேரடியாக கேக்க மாட்டோம் ,

அவரின் ஊரைக் கேட்டு அவரை தெரியுமா இவரை தெரியுமா என்று ஆயிரத்தொட்டு கேள்வி கேட்டு கண்டு பிடிப்போம் ஆனால் இங்கை எம் எச் எனில் நேரடியாக கேட்டுவிடுகிறார்கள்... அதுவும் காதல் கலியானம் என்றுவரும் போது தான்......

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் கேட்கப்பட்ட பொதுபண்பாட்டுவெளி சாத்தியமானது. வேறுபாடுகளை கொண்டாடும் பண்பாடு இந்த வெளிக்கு தேவையானதாகும். கனேடிய, அமெரிக்க நகரங்களில் பல்லின மக்களின் பண்பாட்டு விழாக்களில் பெருமளவு பல்லின மக்களும் கலந்து கொண்டு களிப்படைகிறார்கள். தமிழர் பண்பாடும் இவ்வாறாக கொண்டாடப்படுகிறது.

மொழி, உடை, விழாக்கள், உணவுவகைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இனக் குழுமங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இனங்களுக்குள்ளும் பிரதேசரீதியாக வேறுபட்ட பண்பாடுகள் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள தமிழரின் பல பண்பாட்டு விழுமியங்கள் ஈழத்தமிழரின் பண்பாட்டு விழுமியங்களில் இருந்து வேறுபட்டு இருக்கின்றன. சிங்கப்பூர் தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் தமிழ்நாட்டு மற்றும் ஈழத்தமிழரின் பண்பாட்டு விழுமியங்களில் இருந்து வேறுபட்டுள்ளன.

ஈழத்தமிழரின் பண்பாட்டு விழுமியங்களும் பிரதேசரீதியாக வேறுபடுகின்றன. யாழ்ப்பாணத்தில் பாஷையூர் தமிழரின் சில சொற்கள் அந்த பிரதேசத்துக்குரிய தனித்துவமானவை. மட்டக்களப்பு மக்களின் சில உணவுவகைள் அந்த பிரதேசத்துக்குரிய தனித்துவத்தை கொண்டிருக்கின்றன.

சாதி குழுமங்கள் தொழில்சார்ந்து அமைந்த குழுமங்கள். கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் தமக்கென தனித்துவமான உணவுவகைகளை கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள தனித்துவமான பிரச்சினைகளை வெளிப்படுத்தும் கலைகளும் இருக்கின்றன. அவ்வாறாகவே பனம்பானம், தென்னம்பானம் தயாரிக்கும் தொழில் செய்பவர்கள் இந்த பானங்களை அடிப்படையாக கொண்ட சுவையான குடிவகைகளை தமது உணவுத்தயாரிப்பில் தனித்துவமாக கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான வேறுபாடுகளை கொண்டாடும் பண்பாடு மக்கள் மத்தியில் உருவாக, பொதுவாக பொருளாதார சமநிலை தேவையாக இருக்கிறது. இன்று அமெரிக்காவிலும், கனடாவிலும் பல்லின பண்பாடுகள் கொண்டாடப்படுவதற்கு இவ்வாறாக பொருளாதார சமநிலை இருப்பதும் ஒரு காரணமாகும். பொருளாதார சமநிலை மக்களுக்கு அரசியல் பலத்தில் சமநிலையை வழங்க வல்லது. இதற்கு காரணம் அரசியல்வாதிகள் வெற்றி பெற பணம் தேவை. அரச செல்வாக்கும் பொருளாதார தேவைகளும் மக்களை ஒருவருடன் ஒருவர் நெருங்கி பழக வைக்கிறது. காலப்போக்கில் சாதிய அடக்குமுறைகளும் ஒதுக்குமுறைகளும் மறைந்து சாதிய வேறுபாடுகளை மக்கள் கொண்டாடும் நிலை உருவாகும்.

இன்று யாழ்ப்பாணத்தில் கூலிவேலை செய்வதற்கும், கட்டுமான தொழில், தச்சு தொழில் போன்றவற்றுக்கும் தொழிலாளருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. வன்னியில் இருந்தும் கிளிநொச்சியில் இருந்தும் வருபவர்களை யாழ்ப்பாண மக்கள் வேலைக்கு அமர்த்த தயங்குகிறார்கள். சிங்களவர்களே இந்தவிதமான வேலைகளுக்கு வருகிறார்கள். அதே வேளை யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பெரும்தொகையாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த வேலைகளை செய்ய தயாராக இ;ல்லை. வெளிநாட்டு பணம் வருவதால் அவர்களுக்கு விருப்பமில்லாத வேலையை செய்ய வேண்டிய தேவையும் இல்லை. இவ்வாறாக அடக்குமுறைக்கு உள்ளான சாதிய குழுமங்களுடன் அடையாளம் காணப்பட்ட வேலைகளை செய்ய இன்றைய இளைஞர்கள் தயாராக இல்லை. காலப்போக்கில் தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இந்த வேலைகளில் பெருமளவு வருமானம் கிடைக்கும். செல்வத்தை சேர்ப்பதில் ஆற்றல் உள்ள புலம்பெயர்ந்தவர்களும், சிங்களவர்களும், இந்தியர்களும், சீனர்களும் சாதிய குழுமங்களுடன் அடையாளம் காணப்பட்ட தொழில்களை நிறுவனமயப்படுத்தி, உயர்வருமானம் கொண்ட தொழில்துறைகளாக மாற்றிவிட, அடுத்த தலைமுறை சாதிய வரைமுறைகளை கடந்து இந்த தொழில்களில் ஈடுபடுவார்கள். இது யாழ்ப்பாணத்தில் தம்மை உயர்சாதியினராக கருதியவர்கள் கனடாவில் உயர் வருமானம் காரணமாக கழிவகற்றும் தொழிலில் ஈடுபடுவது போன்றதான ஒரு செயற்பாடாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட யாழ் களமும் சும்மா இல்ல.. சாதி.. என்று தலைப்புப் போட்டாலே.. நிறைய கருத்துக்களை உள்வாங்கி.. வெளிக்கொணருது. அடிப்படையில் சாதிய எண்ணக்கரு.. சமூக.. வெட்டிக் கெளரவ சின்னமாக.. எமக்குள் நல்லாவே படர்ந்து கிடக்குது. படரவும் செய்யப்படுது. அதை சிலர் சாதி எதிர்ப்பு.. அழிப்பு என்ற போர்வையில் பரப்புகின்றனர்.. பலர் வெளிப்படையாக நீ அது நான் இது என்று பரப்புகின்றனர். எல்லோருக்குள்ளும் அடிப்படையில் சாதி பேசுவதில் பார்ப்பதில்.. வேறுபாடில்லை.

இல்லாத ஒன்றைப் பற்றி எதுக்கு இவ்வளவு அக்கறை செலுத்தினம்..??! சாதியை இனங்காட்ட முடியுமா.. இல்ல. சாதிக்கு என்ன வடிவம்.. என்ன ஒருவம்.. அது என்ன நிற சட்டை போட்டிருக்குது..???! ஏய்யா.. சும்மா இல்லாத ஒன்றுக்கு உருக்கொடுத்து.. அதை அழிக்கிறம் என்ற போர்வையிலும்.. காட்டீனம் என்ற போர்வையிலும் நீட்டி முழக்கி.. அதுக்கு உயிர் கொடுக்கிறீங்க. இல்லாத ஒன்றுக்கு சங்கம் வைக்கிறான்.. தலித்து என்றான்.. மாநாடு போடுறான்.. அட மனுசங்களா.... மனிதன் என்றதையே மறந்து போய் ஆட்டம் போடுறீங்ளே.. அடுக்குமா..??!

நீங்கள் இதைப் பற்றி பேசாமல் விட்டாலே போதும்.. அது காணாமல் போயிடும். ஆனால் நீங்கள் தான்.. அதை விடமாட்டியளே. விட்டால்.. உங்கள்.. வெட்டிப் புகழ் வளர்ப்பது எப்படி..???! சமூகக் கெளரவம் பேணுவது எப்படி..??! தலித்து என்று ஒரு கூட்டம்.. புகழ் வளர்க்குது.. இன்னொரு கூட்டம்.. சாதி ஒழிக்கிறன் என்று புகழ் வளர்க்குது... இடையில் புகுந்து மற்றவன் அரசியல் செய்து தன் பிழைப்பை பார்த்துக்கிறான். கேட்டால் பேச்சுரிமை என்றான். கூப்பிட்டு வைச்சு நாலு சாத்து சாத்திட்டு.. அதைப் பற்றி வரிக்கு வரி விபரிக்கிறதிற்கு பெயர் பேச்சுரிமை..! அதுபோலத்தான்.. சாதி சாதி என்று எழுதிக் கிழிச்சுட்டு.. அழிக்கிறம் என்று முடிவில போடுறது.. சாதி ஒழிப்பு.. சா.. தலித்து ஜனநாயகம்..!

கேட்டா சொல்லுறான்.. வேளாண்மை செய்யுறவன்... பூசாரிக்கு தலித்தாம்.. முடி வெட்டுறவன் வேளாண்மை செய்யுறவனுக்கு தலித்தாம்.... மரத்தில ஏறி தேங்காய் பறிக்கிறவன்.. முடிவெட்டுறவனுக்கு.. தலித்தாம். விட்டா.. Philips trimmer க்கு Panasonic trimmer தலித்து எண்டுவாங்கள் போல கிடக்குது..! Apple க்கு blackberry தலித்து எண்டுவாங்கள் போல கிடக்குது. :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

50 போராளிகள்  அதில 40 ஆயிரம் மாவீரர்கள் அதில ஒருவரின் பெயரைத் தான் உங்களால் சொல்ல முடிகிறது...

ஏன் என்றால் உங்களால்   உண்மையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை

புலிகள் இல்லை அனைத்து இயக்கங்களும் அப்படி தான் இந்த விடயத்தில்

புலிகளோ அல்லது ஒட்டுக் குழுக்களோ வேறுபட்டவர்கள் இல்லை............

புலிகள் சாதி ஒழிப்பை ஒரு கொள்கையாக எடுக்கவில்லை அது போராட்டத்துக்கு பின்னடைவாக போகும் என்று அதே நேரம் கடும் சாதி போக்களைர்களை ஒடுக்கியும் வைத்தார்கள். புலிகள் இருந்த சூழ்நிலையின் சாதிடை கொஞ்சம் தட்டி தட்டி உறங்க வைத்தார்கள் அத்தோடு புலிகள் மைப்புக்குள் சாதி வேற்றுமையை வளரவிடவில்லை .

அதுக்காக தமிழ்மக்களிடம் சாத்தியை ஒழித்தார்கள் அல்லது அதை மறக்க பன்னினார்கள் என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்..............

சாதி விடையத்தில் புலிகள் நடந்து கொண்டது ஓரளவுசரியாக்வே பட்டது...... இல்லை என்றால் சாதியாலையே புலிகள் அமைப்புக்குள் எப்போதே பிரிவுகளை உருவாக்கி இருப்பார்கள்.

அது தெரியா ஆனால்  ஊரில் சில பெடியங்கள் முக்க மடிப்பு கையை விட்டுக் கொண்டு  தலையைஉம் 2 பக்கமும்  பின் பக்கம் சிவிக் கொண்டு நடுவை நெற்றி நோக்கி சீவி விட்டு  போடுற சேட்டௌ கலரில் வைத்து இவர் இன்னார் என்று சொல்லுவார்கள்.......... அதே போல பேச்சு வழக்கத்திலும் கண்டு பிடிப்பார்கள். ஆனால் நான் வன்னியில் நிக்கும் போது ( மல்லாவி ,துனுக்காய், மாங்குளம், ஓட்டிசுட்டான்  , கண்டாவளை , விசுவமடு) பக்கம்  என்னமோ தெரியா சாதியை பற்றி  என்ன தோன்றவில்லை.

அது பறவாய்யில்லை ஊரில ந்ஆங்கள் பழகும் போது  தெரியாத ஒருவரை நீ என்ன சாதி என்று நேரடியாக கேக்க மாட்டோம் ,

அவரின் ஊரைக் கேட்டு அவரை  தெரியுமா  இவரை  தெரியுமா என்று ஆயிரத்தொட்டு கேள்வி கேட்டு கண்டு பிடிப்போம் ஆனால் இங்கை எம் எச் எனில் நேரடியாக கேட்டுவிடுகிறார்கள்... அதுவும் காதல் கலியானம் என்றுவரும் போது தான்......

மற்றவர்களின் சாதி பற்றி ஆராய முன்னர் உங்களது உண்மையான பெயர், சாதியை பகிரங்கப்படுத்த முடியுமா? சாதியத்ததை அழிப்பதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?இளைஞர்கள் தமிழீழம் அமைப்பதற்கே ஆயுதம் தரித்தார்கள் சாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டா சொல்லுறான்.. வேளாண்மை செய்யுறவன்... பூசாரிக்கு தலித்தாம்.. முடி வெட்டுறவன் வேளாண்மை செய்யுறவனுக்கு தலித்தாம்.... மரத்தில ஏறி தேங்காய் பறிக்கிறவன்.. முடிவெட்டுறவனுக்கு.. தலித்தாம். விட்டா.. Philips trimmer க்கு Panasonic trimmer தலித்து எண்டுவாங்கள் போல கிடக்குது..! Apple க்கு blackberry தலித்து எண்டுவாங்கள் போல கிடக்குது. :):lol::icon_idea:

அத்தனையும் உண்மை.

Edited by விசுகு

சாதி என்ற ஒரு விடயத்தில் உலகமே அழிந்தாலும் நாம் மாறமாட்டோம்.அவ்வளவு இறுக்கமாக தடித்தது யாழ்ப்பாணியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைகிறேன் இதற்கு ஏதாவது அடிப்படையான காரணம் இருக்கும் என்று.

இது ஒரு உணர்வு, செயற்பாடு, ஏதாவது விதத்தில் என்னில்/என்னிலும் எளியவனை அடயாளம் காணும் செயல். அன்றில் ஏன் நெடுக்கு சொன்ன மாதிரி, பிராமணனுக்கு வெள்ளாளன் தலித்தாகவும் அதே வெள்ளாளனுக்கு பள்ளன் தலித்தாக வேண்டும். இது இன்னுமொரு இடத்தில் விசு சொன்ன மாதிரி - விசு விகடம் இல்லாமல் பேசுவதால் எடுத்தேன் தனியே எந்த வித குரோதமும் இல்லை- "எனது அப்பாவின் பிறப்பாலும் இன்ன பிற செயற்பாடுகளாலும் " மற்றவர்கள் அவரை கண்டால் கை கட்டி நிற்பார்கள் என்பது, இங்கே யாரும் தமக்கு இலகுவாக கிடைத்த "கவரவத்தை, தகுதியை, மற்றவர்களை விட நான் பெரியன் என்னும் " உரிமையை விடத்தயாராக இல்லை. அது சாதியைத்தாண்டி, உத்தியோகம், செல்வந்தம்...........போன்ற பல காரணிகளிலும் பரந்துள்ளது. இதிலே இன்னுமொன்று சேர்க்க கூடியது எங்களுடைய இன விடுதலை, இப்போது நாங்கள் எல்லோரும் சம்பதந்தனுக்கு தலித்து. அவர் ஐயா என்ன சொன்னாலும் அதற்கேற்றமாதிரி எங்கள் கற்பனைகளை வளர்த்து விளக்கம் சொல்லுவோம், சொல்ல வேண்டும். ஏனெனில் நாங்கள் தலித்துக்கள். ஆனால் சம்பதணும் தலித்தே, ஆனால் அது யாருக்கென்று தான் தெரியவில்ல- தமது வழக்கமான இந்திய எஜமானர்களை விட.

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னுமொரு இடத்தில் விசு சொன்ன மாதிரி - விசு விகடம் இல்லாமல் பேசுவதால் எடுத்தேன் தனியே எந்த வித குரோதமும் இல்லை- "எனது அப்பாவின் பிறப்பாலும் இன்ன பிற செயற்பாடுகளாலும் " மற்றவர்கள் அவரை கண்டால் கை கட்டி நிற்பார்கள் என்பது, இங்கே யாரும் தமக்கு இலகுவாக கிடைத்த "கவரவத்தை, தகுதியை, மற்றவர்களை விட நான் பெரியன் என்னும் " உரிமையை விடத்தயாராக இல்லை. அது சாதியைத்தாண்டி, உத்தியோகம், செல்வந்தம்...........போன்ற பல காரணிகளிலும் பரந்துள்ளது.

இனம் காட்டினால் இப்படி சொல்கிறீர்கள்

காட்டாவிட்டால் இப்படிஎழுதுகிறீர்கள். :(

மற்றவர்களின் சாதி பற்றி ஆராய முன்னர் உங்களது உண்மையான பெயர், சாதியை பகிரங்கப்படுத்த முடியுமா? சாதியத்ததை அழிப்பதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?இளைஞர்கள் தமிழீழம் அமைப்பதற்கே ஆயுதம் தரித்தார்கள் சாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கல்ல.

  • நீங்கள் எல்லோரும் சாதிபற்றி கதைக்கிறீர்கள் எனக்கு 2 மாதத்துக்கு முன்னர் என்னுடைய கட்டுரை ஒன்றுக்கு எழுதிய பின்னூட்டம் இது.....

    தேன்மொழி
    நவம்பர் 15, 2011 at 8:50 மு.பகல்

    ஐந்தாம் வகுப்பு அறிவே இல்லாத பண்ணாடை பரதேசி நீ எல்லாம் ஏண்டா பதிவு எழுதிறாய்.நாயே போய் சோத்துப்பாசல் வாங்கிச் சாப்பிடடா.உனக்கெல்லாம் ஊடவியலாளன் என்டு சொல்ல என்னடா தகுதி இருக்கு?நீங்கள் எல்லாம் வெளிநாட்டக்கு வந்தாபோல பெரியாக்கள் ஆகியிட்டீங்களா?எப்பவடா நீங்கள் கொம்யூட்டரை கண்டனீங்கள்.கீ போட்டிலை தட்டுறதை விட்டுட்டு ஊருக்கு போய் கொப்பன்ரை தொழிலை செய்யடா?
    (தொகுக்க)
    பதில்

    • http://s0.wp.com/img...&resize=70%2C70
      Jaya Palan
      நவம்பர் 16, 2011 at 5:50 பிற்பகல்

      யார் இந்த தேன்மொழி என்ற பெயரில் மறைந்திருக்கும் ஜாதிவெறி பிடித்த கோழை? சின்ன வயசுகலில் ஜாதி வெறியர்பலருக்கு அடித்த செருப்பு இன்னமும் என்னிடம் இருக்கு. உன்னை என்வாழ்வில் என்றாவது சந்தித்தால் நிச்சயமாக செருப்பால் அடிப்பேன் – வ.ஐ.ச.ஜெயபாலன்
      (தொகுக்க)
      பதில்

    • http://0.gravatar.co...d=identicon&r=G
      sivasinnapodi
      நவம்பர் 16, 2011 at 6:48 பிற்பகல்

      தேன்மொழி என்ற பெயரில் உம்முடைய மனதில் ஆழமாக பதிந்திருக்கும்
      சமூக அழுக்கை இத்தகைய கீழ்தரமான வசைபாடல்கள் மூலம் வெளிப்படுத்திய மேன்மை தங்கிய சிமானுக்கு அல்லது சீமாட்டிக்கு இது எனக்கு ஒன்றும் புதிதல்ல.
      ஓரு வகையில் நான் உம்மை பாராட்டுகிறேன்.முகத்துக்கு முன்னால் சிரித்து முதுகுக்கு பின்னலால் ‘ஆய்வு ‘ நடத்தும் கோழைகளைப் போல இல்லாமல் வெளிப்படையாக உம்முடைய கருத்தை நீர் சொன்னதற்காக!
      சாதி என்பது ஒரு அதிகார வர்க்க சிந்தனை. அது அமைப்பு ரீதியாக மட்டுமல்லாமல் கலாச்சார ரீதியாவும் நமது சிந்தனைத் தளத்தை ஆக்கிரமித்திருக்கிறது.
      உன்னைவிட நான் பெரியவன் என்ற இந்த சாதிய சிந்தனை சாதியால் உயர்ந்தவன் என்று செல்லிக் கொள்பனிடம் மட்டுமல்லாமல் சாதிரீயாக ஒடுக்கப்படுபவனிடமும் இருக்கிறது.
      ஓரு மனநோய் போல நமது இனத்தை பீடித்திருக்கும் இந்த சிந்தனையின் வெளிப்பாடே துரோகம் காட்டிக்கொடுப்பு ஒற்;றுமையின்மை என்று அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது.
      முள்ளிவாய்கால் பேரவலத்திற்கு பின்பு நடந்தேறும் கூத்துக்களை பார்த்து உடலாலும் மனத்தாலும் சோர்வடைந்திருந்த என்னை தட்டி எழுப்பியதற்கு நன்றி
      (தொகுக்க)
      பதில்

    [*]

    http://0.gravatar.co...d=identicon&r=G

    Gobinath Pannirselvam

    நவம்பர் 15, 2011 at 9:29 மு.பகல்

    அடிவாங்குபவன் மறுதலித்து எழுந்து அடிப்பவனை திருப்பி அடிக்காதவரை அடிப்பவன் அடித்துக்கொண்டே இருப்பான் !!!

    (தொகுக்க)

    பதில்

    [*]

    http://0.gravatar.co...d=identicon&r=G

    ravikumar

    நவம்பர் 15, 2011 at 12:45 பிற்பகல்

    அன்பு சிவா

    உங்கள் பதிவுக்குக் கிடைத்திருக்கும் மறுமொழி இன்னும் இத்தகைய பதிவுகள் ஏராளமாக வரவேண்டும் என்பதையே காட்டுகிறது. இத்தகைய மனோவியாதிக்காரர்கள் இருக்கும்வரை தமிழர் மேம்பாடு கானல் தான்

    ரவிக்குமார்

நவத்தாரே என்னை நினைவிருக்கா ?.

மனைவி ,மகள் ,மகன் எப்படி இருக்கின்றார்கள்.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எழுதும் தேன்மொழியா?

யாழில் எழுதும் தேன்மொழியா?

அவரது பெயரில் தான் இது வந்தது.அனால் இதை தான் எழுதவில்லை என்று அவர் மறுத்திருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்

அவரது பெயரில் தான் இது வந்தது.அனால் இதை தான் எழுதவில்லை என்று அவர் மறுத்திருந்தார்

நவத்தார் தேன்மொழி அல்லது சுமங்காளா பெயர்களில் வருபவரிடம் அண்டைக்கே ஜயரின்ரை வண்டிலை கெழுத்தின ஆக்கள் எண்டு சொல்லியிருக்கலாமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் நானொரு வெள்ளாளன்.இது என்ரை அறிமுகம்.நான் ஊரிலை இருக்கேக்கையே உந்தவிசயத்திலை பழம்திண்டுகொட்டையும் போட்டுட்டன்.சின்ன வயசிலை கூட்டாளியளோடை கூடிச்திரிஞ்சு கும்மாளம் போட்ட என்னை சொந்தக்காரரும் ஊர்பெரியவையளும் என்னை ஒதுக்கி வைச்சிச்சினம்...காரணம் என்னவெண்டால் நான் நளம் பள்ளம் வீடுவளியை திண்டு கொண்டு திரியிறனாம்...இதாலை இப்பவும் ஒருசில ஆக்களுக்கு என்னை கண்ணிலையும் காட்டக்கூடாது.அவையளெல்லாம் அய்யர் குடும்பம் மாதிரியாம்.ஆனால் அவையின்ரை பிள்ளையள் வெளிநாடுகளிலை இருந்துகொண்டு செய்யுற வேலையளை நேர பாத்தினமெண்டால் கட்டினவேட்டி உரிஞ்சதுக்குசமன்...சரி அதை விடுவம்.....

நான் வந்தநாள் தொடக்கம் கிச்சினிலைதான்(மரியாதை கெட்டவேலை) வேலை செய்யுறன்.இது அப்ப, இப்ப லண்டனிலை இருக்கிற என்ரை மனுசியின்ரை ஆக்களுக்கு(லண்டன் வந்து பத்துவருசம்,சொந்தவீடுவளவுகளாம்)நான் செய்யுற வேலை லோகிளாஸ் செய்யுற வேலையாம்.இப்ப ஒரு பங்சன் பார்ட்டி எண்டு போகேக்கை என்னை இவர் இன்ன வேலைசெய்யுறார் எண்டு சொல்லி இன்ரடியூஸ் (நாசமறுப்பு அதுவும் வாய்க்கை வருதில்லை)பண்ணேலாமல் இருக்காமெல்லே?????ஆனால் இவையள் சண்ரிவி கலைஞர்ரிவியிலை வாற சமையல்நிகழ்ச்சியளை கொசு வாய்க்கை போறதும் தெரியாமல் ஆஆஆஆ...வெண்டு அண்ணாந்து பாத்துக்கொண்டு இருக்கிறது வேறை விசயம்.அட நானும் தேவையில்லாமல் அலம்பிப்போட்டன் போலை கிடக்கு...

அதாகப்பட்டது நான் சொல்ல வாறது என்னெண்டால்........இனவெறி,மதவெறி,நாட்டுவெறி,மொழிவெறி,நிறவெறி எண்டு கனக்க இருக்கேக்கை சாதிவெறியை எந்த கொம்பனாலையும் அழிக்கேலாது.சொந்தங்களுக்குள்ளையே லெவல் பாக்கேக்கை.....சாதி ஒரு தூசு.

எண்டைக்கு மனிசனை மனிசன் மனிசனாய் மதிக்கிறானோ அண்டைக்குத்தான் எல்லாம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எண்டைக்கு மனிசனை மனிசன் மனிசனாய் மதிக்கிறானோ அண்டைக்குத்தான் எல்லாம். :icon_idea:

மனிசனை மனிசனாய் மனிசன் மதிக்கமாட்டான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.