Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈ.பி.டி.பியின் ஆடும் வாலை ஒட்ட நறுக்குவோம் – றோயல் கல்லூரி பிரதி அதிபர் எச்சரிக்கை!

Featured Replies

ஈ.பி.டி.பியின் ஆடும் வாலை ஒட்ட நறுக்குவோம் – றோயல் கல்லூரி பிரதி அதிபர் எச்சரிக்கை!

Published on March 6, 2012-10:04 am

ganapathy-pillai-150x150.jpgயாழ். தீவகத்தில் அராஜகம் தொடர்ந்தால் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவாக செயற்படும் ஈ.பி.டி.பியின் வாலை ஒட்டநறுக்குவோம் என கொழும்பு றோயல் கல்லூரி பிரதி அதிபர் எம்.கணபதிப்பிள்ளை எச்சரிக்கை விடுத்தார்.

கொழும்பில் நடைபெற்ற புங்குடுதீவு வாழ்வும் வளமும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கணபதிப்பிள்ளை இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

சுற்றுலா அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு யாழ். தீவகத்தின் பாரம்பரிய கலாசாரத்திற்கும் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் மக்கள் கொதித்தெழுவார்கள். புரட்சி வெடிக்கும்.

அரசாங்க ஆதரவு பெற்ற சில உள்ளுர் அரசியல்வாதியும், அவரின் குழுவை சேர்ந்தவர்களும், கலாசார சீரழிவுகளிலும், பாலியல்பலாத்காரம், படுகொலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல சம்பவங்கள் மறைக்கப்பட்ட போதிலும் அண்மையில் நெடுந்தீவில் பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட அவலம் இறுதியாக இருக்க வேண்டும். இல்லையேல் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள் என்றும் கணபதிப்பிள்ளை எச்சரிக்கை விடுத்தார்.

நான் கொழும்பில் இருந்தாலும் தீவுப்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை தினமும் அறிந்து வருகிறேன். இந்த இழிவான செயலை ஈ.பி.டி.பி உடனடியாக கைவிட வேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த தீவுப்பகுதி மக்களும் இணைந்து தக்க பதில் தருவார்கள்.

அப்பாவி மக்களை படுகொலை செய்து கொண்டு ஜனநாயகம் பேசிக்கொண்டிருக்கும் உங்களின் வாலை மக்கள் ஒட்ட நறுக்குவார்கள் என்றும் கொழும்பு றோயல் கல்லூரி பிரதிஅதிபர் கணபதிப்பிள்ளை எச்சரிக்கை விடுத்தார்.

http://www.thinakkathir.com/?p=31918

  • தொடங்கியவர்

செந்தில்வேலவருக்கு இருக்கும் துணிவு தில்லைநாதனுக்கு வருமா?

Published on March 6, 2012-4:35 pm ·

Senthil-velavar.jpgநெடுந்தீவில் மாணவி ஈ.பி.டி.பியினரால் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து கொழும்பு றோயல் கல்லூரி பிரதி அதிபர் எம்.கணபதிப்பிள்ளை ஆற்றிய உரையை தலைப்பு செய்தியாக வெளியிட்ட தினகரன் யாழ்ப்பதிப்பு ஆசிரியர் செந்தில்வேலவருக்கு இருக்கும் துணிவு தினகரன் தினசரி பத்திரிகையின் ஆசிரியர் தில்லைநாதனுக்கோ, அல்லது கொழும்பில் இருக்கும் ஏனைய பத்திரிகை ஆசிரியர்களுக்கோ வருமா என்ற கேள்வி பலராலும் எழுப்பபடுகிறது.

அரச பத்திரிகையாக இருந்தாலும் தினகரன் யாழ் பதிப்பின் ஆசிரியர் செந்தில்வேலவர் தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு மிகக்கொடூரமான அநீதி ஒன்றை, மனித உரிமை மீறல் ஒன்றை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

இதில் ஒரு துளி துணிவோ அல்லது ஊடகவியலாளருக்கு இருக்கும் பொறுப்போ இன்றி வெறுமனே அலரிமாளிகையில் உள்ளவர்களின் அடிவருடியாக இருக்கும் தினகரன் ஆசிரியர் தில்லைநாதனுக்கு இச்செய்தி மிகப்பெரிய செருப்படியாகும்.

இருந்தால் செந்தில்வேலவர் போல துணிவோடு மனித உரிமை மீறல்களையும், ஈ.பி.டி.பியினரின் ஈனச்செயல்களையும் வெளிப்படுத்த வேண்டும், அதற்காக குரல் கொடுக்க வேண்டும்,

பந்தம் பிடித்து வாழ்வதை விட லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் வெள்ளைத்துணியை விரித்துக்கொண்டு பிச்சை எடுக்கலாம்.

துணிந்தவருக்கு பாராட்டுக்கள்!

எக்கணத்திலும் எச்சரிக்கையாக செயற்பட்டால் இன்னும் நிறைய சாதிக்கலாம்!!

இப்படியான சமூக விரோத செயல்களை சமூகவிரும்பிகள் ஆதாரத்துடன் மேற்குலக தூதுவராலயங்கள், ஐ.நா. , உட்பட்ட மனித உரிமை ஆர்வலர்களுக்கு அனுப்பி வைக்கவும்வேண்டும்.

இப்படியான சமூக விரோத செயல்களை சமூகவிரும்பிகள் ஆதாரத்துடன் மேற்குலக தூதுவராலயங்கள், ஐ.நா. , உட்பட்ட மனித உரிமை ஆர்வலர்களுக்கு அனுப்பி வைக்கவும்வேண்டும்.

சட்ட ஆவணங்களுடன் விரைவில் அனுப்பப் படும்!

இதில் சம்பந்தப்பட சிங்கள ராணுவ பயங்கரவாதிகளின் விபரங்களும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு!

Edited by ஆராவமுதன்

ஜெஸ்டின் அண்ணை சொன்னது போல் , இதோ அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு மாறாக மாற்று அமைப்பு ரெடி.

ஜெஸ்டின் அண்ணை சொன்னது போல் , இதோ அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு மாறாக மாற்று அமைப்பு ரெடி.

நயவஞ்சகக் கனவுகள் நிறைவேறாது!

கொழும்பு றோயல் கல்லூரி பிரதி அதிபருக்கும் நெடுந்தீவு பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?

இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தார் இந்த அறிக்கை வள்ளல்?

கொழும்பு றோயல் கல்லூரி பிரதி அதிபருக்கும் நெடுந்தீவு பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?

இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தார் இந்த அறிக்கை வள்ளல்?

ஈ.பி.டி.பி. கழுத்தைக் கயவர்களை தேடிக் கொண்டிருந்திருப்பார்! :D

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு றோயல் கல்லூரி பிரதி அதிபருக்கும் நெடுந்தீவு பிரச்சனைக்கும் என்ன தொடர்பு?

இவ்வளவு நாளும் எங்கே போயிருந்தார் இந்த அறிக்கை வள்ளல்?

அவரது சொந்த ஊராக இருக்கலாம் அல்லது பாதிக்கப் பட்டது அவரது நெருங்கிய உறவாக இருக்கலாம்.

இவ்வளவு நாளும்... பொறுத்துப் பார்த்திரிப்பார். இனித் தாங்க முடியாது என்னும் கட்டத்தில்... தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கலாம்.

எப்படியிருந்தாலும்... றோயல் கல்லூரி உப அதிபர் பாராட்டுக்குரியவரே.

  • கருத்துக்கள உறவுகள்

அது மகிந்தவின் வால், கவனம்

நயவஞ்சகக் கனவுகள் நிறைவேறாது!

யாரின் கனவு?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனையத்தில் வந்த அந்தச் சிறுமியின் புகைப்படம்.

http://lankaenews.com/English/files/news/2087nadunthivu_girl_murder_J.jpg

ஈ.பி.டி.பியின் ஆடும் வாலை ஒட்ட நறுக்குவோம் – றோயல் கல்லூரி பிரதி அதிபர் எச்சரிக்கை!

. தீனர். பல சம்பவங்கள் மறைக்கப்பட்ட போதிலும் அண்மையில் நெடுந்தீவில் பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட அவலம் இறுதியாக இருக்க வேண்டும். இல்லையேல் மக்கள் உங்களை சும்மா விடமாட்டார்கள் என்றும் கணபதிப்பிள்ளை எச்சரிக்கை விடுத்தார்.

ஏனபா மூதெவிகளே அபஇத பேசாமவிட போறீன்களா???????????????

2087nadunthivu_girl_murder_J.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு 10,000 பேரைக் கொல்லும் வரைக்கும் காத்திருங்க சார். போங்கையா.. நீங்களும் உங்கட வாய் சவடாலும். சூளை மேட்டில தொடங்கி.. இன்று வரைக்கு டக்கிளஸ் இதையே தான் பண்ணிக்கிட்டு இருக்கிறான். என்னத்தப் புடுங்கினீங்க. அவனுக்கு இராணுவ பாதுகாப்பும் ஆயுதமும் வழங்கி பாதுகாத்து வைச்சிருக்கிறதும் நீங்கள் தானே..! இல்ல அந்த வெறி நாய் எப்பவோ செத்துத் தொலைஞ்சிருக்கும். எத்தனையோ அப்பாவிகள் காக்கப்பட்டிருப்பார்கள்.

அப்புறம் எதுக்கு.. இந்த வாய்சவடால். பிரதி அதிபர் அடுத்த முறை சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் நிற்கப் போறார் போல..! :(:rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி பிள்ளை பிடிக்குது,கட்டாய ஆட்சேர்ப்பு செய்யுது என்று எல்லாம் விண்ணாணம் கதைக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எல்லாம் ஏன் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை,ஒரு கண்டனம் கூட சொல்லவில்லை?

யாழில் உலவும் அவர்களுக்கு இந்த திரி தெரியவில்லையா?

ஏன் 1988 - 1990 வரை அவை பிள்ளை பிடிக்கல்லையோ. இந்தியன் ஆமிக்கென்று TNA க்கு என்று பிள்ளை பிடிச்சுக் காட்டினதே அவை தானே. அவையின்ர அகராதியில் இதுகள் எல்லாம் புலிகள் செய்தால் தான் குற்றம். தாங்கள் செய்தால் அது நியாயம்..! :lol::D

அதுகளும் அதுகளின்ர மாற்றுக் கருத்தும். எவன் கேட்கிறான்.. கோத்தா.. மகிந்த.. ரணில்.. சம்பிக்க.. தினேஷ்... கேப்பாங்களோ.. இவையின்ர மாற்றுக் கருத்தை. லண்டனிலையும் கனடாலையும் சுவிஸிலையும் உள்ள எங்கட ஆக்கள் தான் அதையும் விழுந்து விழுந்து கேப்பினம். அதுதான் ஜனநாயகத்துக்கு அழகென்று தற்சான்றிதழ் வேற கொடுப்பினம்..! வேறு ஒருத்தரும் ஏன் என்றும் கேட்க மாட்டாங்கள்..! எனி அவைக்கு மாமா மாணிக்கங்கள் என்று பெயர் வைக்கிறது தான் சரி. சிங்களவனுக்கு.. வட இந்தியனுக்கு மாமா வேலை பார்க்கிறதை விட வேற என்ன அவையிண்ட மாற்றுக் கருத்து..! :icon_idea::rolleyes:

அவைக்கு மட்டுமல்ல.. புலிகள் சிறுவர் படையணி வைச்சிருக்கினம் என்று ஓடி ஓடி உளவு பார்த்த யுனிசெப்புக்கு.. அதுக்கு கடிதம் எழுது விருது வாங்கின சங்கரிக்கு... உதுகள் எதுவும் தெரியுறதில்ல. பிபிசி க்கு கூட உதுகள் போறதில்லை. கந்தளாயில சிங்களவன் குழிக்க விழுந்து சாதனை செய்யப் போய் செத்தது மட்டும் தெரியும்..! இவங்கள் எல்லாம் உலகிற்கு ஜனநாயகமும்.. மனித உரிமைகளும் போதிப்பதுதான் இன்னும் வேடிக்கை..! :rolleyes::o

Edited by nedukkalapoovan

2087nadunthivu_girl_murder_J.jpg

.... முள்ளிவாய்க்காலுக்கு பின், எம்மை அந்த நிலைமைக்கு எடுத்து வர ஒரு காரணமாக இருந்தது "சகோதர படுகொலைகள்" என நொந்ததுண்டு!

ஆனால் ..

... இனி யாராவது ... எந்த மூலையில் இருந்தாவது ... உந்த "சகோதர படுகொலைகளோ" அதனை ஆரம்பிப்பார்களாயின் ... உந்த ஈபிடிபியினரை தெருத்தெருவாக இழுத்து வந்து கொழுத்துவார்களாயின் ... அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்!!!

அவரது சொந்த ஊராக இருக்கலாம் அல்லது பாதிக்கப் பட்டது அவரது நெருங்கிய உறவாக இருக்கலாம்.

இவ்வளவு நாளும்... பொறுத்துப் பார்த்திரிப்பார். இனித் தாங்க முடியாது என்னும் கட்டத்தில்... தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கலாம்.

எப்படியிருந்தாலும்... றோயல் கல்லூரி உப அதிபர் பாராட்டுக்குரியவரே.

நான் நினைத்ததும், அறிந்ததும் இதுதான்..

வாய் இருந்தும் ஊமையாக இருக்கும் பலரில் றோயல் கல்லூரி உப அதிபர் ஒரு அறிக்கையாவது விட்டது அந்தச் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஒரு சிறு ஆறுதலாக இருக்கக் கூடும்...

  • கருத்துக்கள உறவுகள்

புலி பிள்ளை பிடிக்குது,கட்டாய ஆட்சேர்ப்பு செய்யுது என்று எல்லாம் விண்ணாணம் கதைக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எல்லாம் ஏன் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை,ஒரு கண்டனம் கூட சொல்லவில்லை?

யாழில் உலவும் அவர்களுக்கு இந்த திரி தெரியவில்லையா?

அவர்கள் ஒருநாளும் நியாத்துக்காக குரல் கொடுப்பது கிடையாது அவர்களுக்கு புலிகளின் மேல் உள்ள வெறுப்பே அவர்கள் மேல் ஏதாவது குற்றம் சுமத்தி கொண்டே இருக்கவேண்டும் அதில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அது அவர்களுக்கு பிரச்சனை கிடையாது ....

இதுவும் ஒருவகை நோயேதான் இது முற்ற முன் நல்ல மருத்துவரை நாடுவது நன்று.

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி பிள்ளை பிடிக்குது,கட்டாய ஆட்சேர்ப்பு செய்யுது என்று எல்லாம் விண்ணாணம் கதைக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எல்லாம் ஏன் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை,ஒரு கண்டனம் கூட சொல்லவில்லை?

யாழில் உலவும் அவர்களுக்கு இந்த திரி தெரியவில்லையா?

ஊர் உலகத்திலை நடக்காதவிசயமே???இதுக்குப்போய் அலட்டுறதுக்கு மாற்றுக்கருத்து மாணிக்கவாசகர்களுக்கு நோ ரைம்.......ஆனால் புலியளை பற்றி பஞ்சபுராணம் படிக்கவும் எண்டு ஒருக்கால் சொல்லிப்பாருங்கோ.....ஈசல் மாதிரி நாலுபக்கத்தாலையும் வருவினம்.

ஈபி டி பி மேல் துப்பினால எனது துப்பல் தான் ஊத்தையாகிவிடும்.எனவே நான் அவர்கள் மேல் துப்புவதில்லை.

புலிகளை உங்களில் பலர் ஏதோ ஒரு பிழையும் விடாத தேவர்கள் போல எழுதுவதால் தான் அவர்கள் விட்ட பிழைகளையும் எழுத வேண்டிக்கிடக்கு.

அவர்கள் ஒருநாளும் நியாத்துக்காக குரல் கொடுப்பது கிடையாது அவர்களுக்கு புலிகளின் மேல் உள்ள வெறுப்பே அவர்கள் மேல் ஏதாவது குற்றம் சுமத்தி கொண்டே இருக்கவேண்டும் அதில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அது அவர்களுக்கு பிரச்சனை கிடையாது ....

இதுவும் ஒருவகை நோயேதான் இது முற்ற முன் நல்ல மருத்துவரை நாடுவது நன்று.

உங்களுக்கு இருப்பது ஒரு விதமான நோய் என நினைக்கிறேன்.

தமிழ்கூட்டமைப்பு இந்த கொலை பற்றி ஒன்றும் கூறவில்லையே?

ஏன் நாடுகடந்த அரசும் ஒன்றும் கூறவில்லையே?

ஏன் எனில் டக்கிளசின் ஆக்கள் இதை செய்வது முதல்தடவையும் இல்லை வடக்கு கிழக்கில் இருந்து அவர்களை கலைக்கும்வரை செய்யாமல் இருக்க போவதும் இல்லை.............

தமிழ்கூட்டமைப்பை குறை கூறலாம் அவர்கள் தவறான அர்சியல் செய்தால். புலிகளையும் குறை கூறலாம் ஏன் எனில் ஈழபோராட்டத்தில் முக்கிய பங்கும் பொறுப்பையும் அவர்கள் எடுத்து இருந்தார்கள் . ஆனால் டக்கிளசை ஏன் குறைகூறவேண்டும் அவன் என்னத்தை செய்து கிழித்தான் இதை மட்டும் கண்டிக்க? டக்கிளசும் ,கருணாவும் செய்வதுக்கு எல்லாம் குறை கூறிக் கொண்டு இருந்தால்!? வாழ்நாள்முழுவதும் அதை தான் செய்து கொண்டு இருக்கவேண்டும்ம்ம்ம். நெடுத்திவில் ஓட்டு போட்ட மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் தான் தூக்கி வைத்து இருந்தார்கள் இப்போது அவர்களாகவே அடிக்க வெளிகிட்டு இருக்கிறார்கள் அடிக்கட்டும்.

சும்ம ஒருதன் ஒன்றும் சொல்லைவில்லை என்றதும் ப்ளேட்டை மாத்தி போடக் கூடாது........

அமெரிக்க தாக்குதலை புலிகள் உடனே கண்டிக்கவில்லை என்றதும் பின்லெடனை புலிகள் ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தபடுமா? :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.