Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

எமது வாசகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நாம் சனல் – 4 இணையம் வெளியிடும் கொலைக்களம் பகுதி -2 எமது இணையத்திலும் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளோம். எனவே அனைத்து நாடுகளிலும் எமது இணையத்தின் மூலமாக பிரித்தானிய நேரம் இரவு 10 .55 மணிக்கு நேரடியாக காணலாம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். இதில் வரும் காட்சி அனைத்தும் சனல் -4 ஆல் தயாரிக்கப்பட்டவை.

நேரலை சரியாக பிரித்தானிய நேரம் : இரவு 10 .55 ஆரம்பமாகும்.

தமிழீழம் மற்றும் தமிழக நேரம் 15 .03 .2012 அதிகாலை 4 .25 மணிக்கு.

நேரடி ஒளிபரப்பை பார்வையிட...

http://thaaitamil.com/?p=12528

Edited by கருத்து கந்தசாமி

  • Replies 58
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி ஐயா!

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு, நன்றி கருத்து கந்தசாமி.

  • கருத்துக்கள உறவுகள்

Online link...

http://www.tvcatchup.com/

தகவலுக்கு நன்றி............

  • தொடங்கியவர்

Online link...

http://www.tvcatchup.com/

Sorry ...

Unfortunately, your country is not currently supported.

At this time, TVCatchup is available only in the United Kingdom.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் பார்க்க முடியாது.

Edited by கருத்து கந்தசாமி

மிக்க நன்றி...

தகவலுக்கு மிக்க நன்றிகள்.

http://www.livestream.com/tamil24news

ஐ.நா. தரவுகளை பாவித்து மக்களை கொன்றது சிங்களம் - சனல் நாலு

கொத்தாவுக்கும் பொன்சேகாவுக்கும் தூதரங்கள் ஊடாக தகவல்கள் பரிமாறப்பட்டன.

முகம் மறைக்கப்பட ஒரு பெண், ஆண் தமிழில் சாட்சியம் வழங்குகிறார்கள். எவ்வாறு பாதுகாப்பு வலயத்தில் உணவு, மருந்து தடைகள் - சர்வதேச விதிமுறைகளை மீறி - தடைசெய்யப்பட்டது .

விக்கிலீக்ஸ் தகவலின் படி அமெரிக்கா மக்களின் எண்ணிக்கயை பிழையாக கணித்தது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அகூதா. தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

இந்த ஆவணத்தில் மகிந்தா - கோத்தா - சரத் முக்கிய போர்குற்றவாளிகளாக (Command Responsibility) ஆதாரத்துடன் குறிப்பிடப்படுகின்றார்கள்

- மக்கள் தொகை பற்றி மகிந்தா பொய் கூறினார் 5000 - 10000 !

- புதுமாத்தளன் தாக்குதல் பற்றி கூறப்படுகின்றது

- மக்களை பாதுகாக்கும் மனிதாபிமான நடவடிக்கை என்ற பெயரில் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

- நந்திக்கடல் அவலங்கள் கூறப்படுகின்றது

- எந்த குடிமகனும் கொல்லப்படவில்லை - சிங்களம்

- சர்வதேச செஞ்சிலுவை வேண்டுகோள் சிங்களத்தால் நிராகரிக்கப்படுகின்றது

-தாமே காப்பாற்றுகின்றோம் என வந்த சிங்களம் மக்களை இழுத்து சுட்டுக்கொன்றதாக ஒருவர் சாட்சியம்

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் இளைய மகனைக் காட்டுகிறார்கள்

பகுதி நாலில் பன்னிரண்டு வயது சிறுவன் படுகொலை

சிங்கள இராணுவ அதிகாரியின் தகவலின் படி அப்பாவின் இருப்பிடம் கேட்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்

இவர் சண்டையில் கொல்லப்படவில்லை - பிரித்தானிய ஆய்வாளர்

சிறுவன் துன்புறுத்தப்பட்ட அடையாளம் இல்லை. ஆனால் இவரின் கண்கள் மறைக்கப்பட்ட சாத்தியம் இல்லை. ஆனால் இவரை சுற்றி ஐந்து ஆண்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். அது அந்த சிறுவனுக்கு சித்திரவதை ஆகும்.

சிங்களம் ஊடாக கிடைத்த தலைவரின் உடலை ஆராயும் ஆய்வாளர் அந்த தலைக்காயம் அருகில் இருந்தே சுடப்பட்டது என உறுதிப்படுத்துகின்றார்.

எல்லா படுகொலைகளும் திட்டமிட்டே செய்ததாக கூறப்படுகின்றது !

பகுதி ஐந்து: சர்வதேசம் அதன் இராஜதந்திரம் குறை கூறப்படுகின்றது

அன்றைய பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் கருத்தும் எவ்வாறு சிங்களம் இலாவகமாக கையாண்டது எனவும் கூறப்படுகின்றது.

அன்றைய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பலரும் கண்களை மூட விரும்பினார்கள் :icon_mrgreen:

இந்தியா பற்றியும் அதன் ஆதரவு பற்றியும் கூறப்படுகின்றது.

மகிந்தாவின் ஐ.நா. உரை பற்றியும் அதை எழுதிய பிரித்தானிய நிறுவனம் பற்றியும் கூறப்படுகின்றது

சிங்களத்தின் ' பொய்கள் ஏற்கப்பட்டன' (Lies Agreed Upon) படம் பற்றியும் கூறப்படுகின்றது

எவ்வாறு இந்த வைத்தியர்கள் பேச வைக்கப்பட்டனர்? பயங்கரவாத தடைச்சட்டம், கேள்விகள்- பதில்கள் தரப்பட்டன.

சிங்கள ஊடகவியலார் அரச பயங்கரவாதம் பற்றி கூறுகிறார்

தமிழர்களின் இன்றைய நிலை பற்றி கூறுகின்றார்

எவ்வளவு மக்கள் இறந்தனர் எனத்தெரியாது.

ஆனால், யார் இந்த கொலைகளை செய்தனர் என்பது தெரியும்.

சவெந்திர சில்வா ஐ.நா. பதவி , இன்னுமொருவர் ஐ.நா. பதவியில்....சர்வதேச இராஜதந்திர காப்புரிமை?

இவர்கள் தொடர்ந்தும் காப்பாற்றப்படுவார்களா? ஐ.நா. அதன் மனித உரிமை தொடர் ஏதாவது செய்யுமா??

சிங்களத்தின் சனல் நாலு மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி கூறப்பட்டது.

அவிஸ்திரேலியா காமன்வெல்த் கொட்டம் பற்றி பேசப்பட்டது. எவ்வாறு தாம் தப்பிவிட்டோம் என அவர்கள் எண்ணியிருப்பார்கள் என பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த 40000 மக்களின் படுகொலை செய்தி மறைக்கப்படாது, மறக்கப்படாது !!

--- முடிவு -----

..சிங்களவன் எமக்கு தந்த அவலங்களை சனல்4 உலகிற்கு எடுத்து காட்டியிருக்கிறது! ... நாம் கைமாறாக சிங்களவனுக்கு எவற்றை செய்யப்போகிறோம்?????? .........

முக்கிய என்னொமொரு குற்றவாளி லண்டன் கைகொமிசனில் தலைவராக இருக்கிறார், இவரை எதற்காக இங்கு விட்டு வைத்திருக்கிறோம்??

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட நாங்கள் வெளி உலகிற்கு சொல்ல வேண்டிய பெரும்பாலான விடயங்களை உள்ளடக்கி உள்ள காணொளி. நிச்சயம் சனல் 4 க்கு நன்றிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

1. பசி.. பேராயுதம்.. போராயுதம்.. படுகொலைகள்.. என்று பாவிக்கப்பட்ட அனைத்துவகை மிலேச்சத்தனங்களும்..

இந்திய.. மற்றும் ஐநாவின்.. சர்வதேசத்தின் பாராமுகமும்.. புலிகள் விரைந்து தோற்றால் சரி என்ற சர்வதேசத்தின் நிலைப்பாடும்.. என்று நிறைய விடயங்கள் குற்றங்களாகி நிற்பதோடு..

சிங்கள அரசுத் தலைமைகள்.. இராணுவத் தலைமை.. கள நிலை தளபதிகள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டிருப்பதுடன்.. போர்க்குற்றவாளிகள் ஐநாவில்.. உயர் பதவி வகிக்க.. அனுமதிக்கப்பட்டது வரை.. நிறைய விடயங்கள்.. எமக்காக.. சனல் 4 தனது குரலில்.. பதிவு செய்துள்ளது.

சீனத் தூதரும் வந்து போகிறார். ஐநா பிரதிநிதியும்.. மகிந்தவின் வாக்குறுதிகளோடு திருப்திப்பட்டது தப்பென்று உணர்கிறார்.

இறுதியில் மகாராணியின் மகிந்தவுடனான கைலாகும்.. பீரிஸின் சிவப்பு வைன் நக்கலும்.. வந்து போகிறது. இறுதிப் போரில் நிகழ்ந்தவற்றை.. யாரும். மறக்க முடியாது செய்துள்ளது இந்தக் காணொளி..!

4 பிரதான போர்க்குற்ற தடயங்கள் அலசி ஆராயப்பட்டுள்ளன. யுத்த சூனியப் பிரதேச சுத்துமாத்தும்.. வைத்தியர்களை வைத்து பொய் சொல்ல வைத்த சிங்கள அரசின் அப்பட்டமான பொய்களும் வெளிவந்துள்ளன.

LLRC அறிக்கையின் போர் தொடர்பான குறைபாடுகள் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் வடக்குக் கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற பதம் பாவிக்கப்பட்டிருப்பதோடு.. அது இராணுவ மயமாகி உள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழக சொந்தங்களின் பலம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

ஓடி ஒளிக்க இடமின்றிய நிலையில் ஐநாவும்.. சர்வதேசமும்.. குறிப்பாக இந்தியாவின்.. தூதர்கள் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளனர்..!

நன்றி சனல் 4... மற்றும் மனித உரிமை அமைப்புக்கள். அம்னாஸ்ரி இன்ரனஷனல்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய என்னொமொரு குற்றவாளி லண்டன் கைகொமிசனில் தலைவராக இருக்கிறார், இவரை எதற்காக இங்கு விட்டு வைத்திருக்கிறோம்??

வாரா வாரம் பார்ட்டி வைக்கத்தான் போய் தண்ணியடிப்பமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனல்4ற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளிகளை உலகத்திற்கு ஆதாரங்களுடனும் ஆய்வுகளுடனும் சனல்4 தெரிவித்திருக்கிறது.இந்த உலகம் என்ன செய்யப்போகின்றது.தமிழருகு;கு நீதி கிடைக்க இனியாவது உலகத்தமிழினம் வேற்றுமைகளை மறந்து ஒன்றாக ஓருமித்த குரலில் எமது நிலைப்பாட்டைச் சர்வதேசத்திற்கு தெரிவிக்க வேண்டும். சனல் 4 இற்கு நன்றி.

எங்கே அகூதா சனல் 4 இற்கு நன்றிக் கடிதம் தயார்பண்ணி இங்கே பதிவிடுங்கள்.

நன்றி அகூதா. என்னால் தொடக்கம் பார்க்க முடியவில்லை. சிறிது நேரத்தின் பின் காட்டியது அனைத்தும் பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சனல் 4.

சனல் 4 தொலைக்காட்சியில் இந்த ஓளிபரப்பு வர முன்பு தமிழ் ஊடகங்களில் சில அவசரப்பட்டு சனல் 4 தொலைக்காட்சியை துரோகத்தொலைக்காட்சியாக எழுதியிருந்தன. இந்த ஊடகங்களின் பின்னால் இருப்பவர்கள் யார் என்பது சந்தேகமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சனல் 4.

சனல் 4 தொலைக்காட்சியில் இந்த ஓளிபரப்பு வர முன்பு தமிழ் ஊடகங்களில் சில அவசரப்பட்டு சனல் 4 தொலைக்காட்சியை துரோகத்தொலைக்காட்சியாக எழுதியிருந்தன. இந்த ஊடகங்களின் பின்னால் இருப்பவர்கள் யார் என்பது சந்தேகமாக இருக்கிறது.

வேறையார்??அதி தீவிர தேசியவாகளும். லங்காசிறி தமிழ்வின் சிறிதரன் கும்பல்தான் செய்திகளை பாத்தாலே தெரியுமே .எண்டாலும் உங்கடை சொந்தக்காரர் யாராவது மண்டையை போட்டால் அங்கைதான் விளம்பரம் குடுங்கோ

தலைவரின் இருப்பை அறியும் முயற்சி - ஏகன்

இது ஒரு பல்கூட்டு முயற்சி. முடிந்துபோய்விட்டதாக சிறீலங்காஅரசு உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னரும் அந்த இயக்கத்தின்மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை கொஞ்சம்கூட குறைந்து போய்விடவில்லை.

ANNai%201.JPG

அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் கடந்த 34 மாதங்களாக பகிரங்கமாக எதுவுமே நடைபெறாத போதும் இன்னும் தமிழ் மக்கள் அந்த இயக்கத்தின்மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிறிதளவேனும் குறைந்ததாக இல்லை. இன்றும்கூட அந்த இயக்கத்தின் மீள்வருகையையும் அதன் போராளிகளின் முகங்களையுமே தமிழ் மக்கள் வழிமேல் விழிவைத்து பார்த்து இருக்கின்றார்கள்.

இந்த உளவியல் உறுதியை என்றுமே கணக்கெடுக்கவும் கணித்துவிடவும் ஆளும் தரப்பால், ஆக்கிரமிப்பாளர்களால் முடிந்ததில்லை. முடிவதுமில்லை. இதற்கு ஒரு முடிவு காணும் முயற்சியாக சில நடவடிக்கைகளை, சில காட்சிப்படுத்தல்களை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள் சிறீலங்கா இனவெறி அரசும், அதனுடைய பங்காளிகளான பிராந்திய வல்லாதிக்கமும் தள்ளப்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளுக்கும் இதனை ஒத்த தேவைகளும் இருக்கின்றன. மேற்கின் கதவுகளை இப்போது ஜனநாயக முறைப்படி தட்டிக்கொண்டிருக்கும் தமிழர்கரங்கள், அந்த வேண்டுகோள்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால் இதே மென்முறையிலேயே தொடர்வார்கள் என்பதற்கு எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை. மேற்குலகுக்கும் இந்த உணர்வை சிதைக்கவேண்டிய கட்டாயமும் அவசியமும் மிக அதிகமாகவே தேவை.

இவர்களுடைய தேவைகைள் ஒருபுறம் இருக்க. இன்னொரு பக்கத்தில் ஊடகத்தின் தேவை என்றும் ஒன்றுள்ளது. ஊடகம் தன்னை நடுநிலையாளனாக காட்டுவதற்காக தமிழர் தரப்பையும் குற்றஞ்செய்ததாகவும் காட்டவேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் அவர்களுக்கு நடுநிலை ஊடகம் என்ற நற்சான்றிதழ் (?) கிடைக்க வாய்ப்பிருக்கும்.

இது முழுக்க முழுக்க ஊடகம் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும் தன்னுடனான போட்டி தொலைக்காட்சிகளை வென்றுவிடவும் செய்யும் பலவித முயற்சிகளில் ஒன்று. இசைப்பரியாவின் படுகொலையை கடந்தமுறை காட்சிப்படுத்திய தொலைக்காட்சி அதன்போது இசைப்பிரியாவின் உயிரற்ற உடலை காட்டியதுடன் அடுத்த காட்சியில் இசைப்பிரியா உயிருடன் இருந்த காலத்தின் காட்சி ஒன்றை ஒளிபரப்பும்போது இசைப்பிரியா கரும்புலி உடையுடன் பாடல் பாடுவதாகவே காட்டி இருந்தது.

இசைப்பிரியா புடவையுடன் செய்தி வாசிக்கும் காட்சிகளும், சாதாரண பெண்போல இருக்கும் காட்சிகளும் ஏராளம் இருக்கும்போது கரும்புலி உடையுடன் காட்சிப்படுத்தவேண்டிய தேவை என்ன? எந்தவொரு மேற்கின் ஊடகமும் முழுக்க முழுக்க எமக்கும் எமது சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்கும் ஆதரவானதாக இருந்ததில்லை. இருக்கபோவதுமில்லை. சில வேளைகளில் எமக்கு ஒரு சில மனித உரிமை தளங்களில் உதவக்கூடியவர்களாக இருப்பார்கள். அவ்வளவுதான்.

அத்துடன் தலைவரின் இருப்பை பற்றிய எந்தவொரு தகவலும் இன்னும் வெளிவராத நிலையில் தலைவரை பற்றிய கீழ்தரமான காட்சிப்படுத்தலை வெளிப்படுத்துவதன் மூலம் அதற்கு மறுப்பாக தலைவரின் இருப்பு சம்பந்தமான ஒளிப்பதிவு ஏதும் வெளிவரக்கூடும் என்றும் முகர்ந்து திரியும் வல்லாதிக்க புலனாய்வின் முயற்சிதான் தலைவரை பற்றிய பிழையான தகவல் கசிவுகள்.

இந்த ஒரு காட்சிப்படுத்தலின் விளைவாக ஒரு தலைகீழ் மாற்றத்தை எதிர்பார்த்து பல சக்திகள் காத்திருக்கின்றன. வரப்போகும் காட்சிப்படுத்தலை பார்த்துவிட்டு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு முகம்புதைத்து கிடக்கப்போகின்றோமா? இல்லை.

நந்திக்கரை ஓரத்தில் 2009 மே மாதத்தில் சிங்களஅரசு காட்டி எதனை சாதிக்க நினைத்ததுவோ அதனை இப்போது சில புலம்பெயர் தமிழ் பினாமிகளை வைத்து தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்து அதன் மூலம் மீண்டும் சாதிக்க எடுக்கும் முயற்சி என்று புரிந்துகொண்டு எழப்போகின்றோமா?

http://www.lankasri....b6eEIcQ372.html

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.