Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறைகளை கைவிடச் சொல்லி புலிகளைக் கேட்டேன் - அவாகள் தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர்! சுமந்திரன் கூறினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sumanthiran-J_MP_tna150.jpg

தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்து உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன். இவர் இது குறித்து முக்கியமாக தெரிவித்து இருப்பவை வருமாறு:

புலிகளை தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்க முடியாது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி இந்நிலைப்பாட்டில் இருக்கவில்லை. புலிகள் பயங்கரவாத அமைப்பு ஒன்றை போல செயல்பட்டனர். இலங்கைக்குள் தனி நாடு ஒன்றை நிறுவ முயன்றனர்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளை தொடர்ந்து இலங்கையில் இருந்து தப்பிச் சென்றவர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர். இது சரியான செயல் ஆகாது. வன்முறைகளை கைவிடச் சொல்லி எழுத்துமூலம்கூட புலிகளிடம் கேட்டு இருந்தேன். புலிகளின் உதவிகளை நான் எப்போதும் பெற்று இருக்கவில்லை.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றிய முழுவிபரங்களையும் எவராவது இணைக்கமுடியுமா?

கடி தாங்கமுடியல.... :( :(

அவரின் அறிக்கையைப் பார்த்தால் பெரிசா எதையோ எதிர் பார்க்கிறார் போலகிடக்கு.

இப்ப குடுக்கிற நிலையிலையா ராசபக்ச இருக்கிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பற்றிய முழுவிபரங்களையும் எவராவது இணைக்கமுடியுமா?

கடி தாங்கமுடியல.... :( :(

நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி?? அவர் நீங்கள் ஆதரிக்கும் கூட்டமைப்பைச் சேர்ந்தவரல்லவா??? அவர் என்ன சொன்னாலும் நீங்கள் அதரித்தே தீரவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் மீதான எனது பார்வை வேறு

அதற்காக கூட்டமைப்பிலிருக்கும் எல்லோரையும் அதே பார்வைக்குள் வைத்திருக்கவேண்டும் என்ற போர்வை கிடையாது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் மீதான எனது பார்வை வேறு

அதற்காக கூட்டமைப்பிலிருக்கும் எல்லோரையும் அதே பார்வைக்குள் வைத்திருக்கவேண்டும் என்ற போர்வை கிடையாது. :icon_idea:

வேறு யாரைத்தான் நீங்கள் கூட்டமைப்பில் நம்புகிறீர்கள்?? சம்பந்தனையா, மாவையையா?? என்னைப்பொறுத்தவரை இப்போதிருக்கும் எவருமே நம்பத்தகுந்தவர்களில்லை. தலைவர் கை காட்டிய ஒரே காரணத்துக்காகத்தான் இவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். அது எல்லாவற்றையும் மறந்து பேசும் இவைகள் ***.

நீங்கள் தாராளாமாக ஆதரியுங்கள், அதில் தவறில்லை. ஏனென்றால் இன்றைக்கும் புளொட், ஈ.பீ. டீ.பீ , ஈ. என்.டீ.எல்.எப் ,ஆனந்த சங்கரி போன்றவர்களை ஆதரிக்கவும் ஆட்கள் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எலியெல்லாம் புலிக்கு அட்வைசு.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் அறிக்கையைப் பார்த்தால் பெரிசா எதையோ எதிர் பார்க்கிறார் போலகிடக்கு.

இப்ப குடுக்கிற நிலையிலையா ராசபக்ச இருக்கிறார்?

இப்ப குடுக்கிற நிலமையில தமிழ்மக்களும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தாராளாமாக ஆதரியுங்கள், அதில் தவறில்லை. ஏனென்றால் இன்றைக்கும் புளொட், ஈ.பீ. டீ.பீ , ஈ. என்.டீ.எல்.எப் ,ஆனந்த சங்கரி போன்றவர்களை ஆதரிக்கவும் ஆட்கள் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

தேவையுடன் ஆதரிக்கிறார்கள். 

ஒ. எல். பெயில் பண்ணின மகளுக்கு டீச்சர் வேலை வாங்க. 

பக்கத்து காணியை வளைத்து போட. 

ஏதாவது வியாபாரம் தொடங்க. 

மற்றும் மேல் சொன்ன இந்திய கொங்கிரசின் மாபியா குழுக்களால் கடத்தப்பட்ட நாயை மீட்க. 

  • கருத்துக்கள உறவுகள்

வேறு யாரைத்தான் நீங்கள் கூட்டமைப்பில் நம்புகிறீர்கள்?? சம்பந்தனையா, மாவையையா?? என்னைப்பொறுத்தவரை இப்போதிருக்கும் எவருமே நம்பத்தகுந்தவர்களில்லை. தலைவர் கை காட்டிய ஒரே காரணத்துக்காகத்தான் இவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். அது எல்லாவற்றையும் மறந்து பேசும் இவைகள் ***.

நீங்கள் தாராளாமாக ஆதரியுங்கள், அதில் தவறில்லை. ஏனென்றால் இன்றைக்கும் புளொட், ஈ.பீ. டீ.பீ , ஈ. என்.டீ.எல்.எப் ,ஆனந்த சங்கரி போன்றவர்களை ஆதரிக்கவும் ஆட்கள் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

என்னையும் இதற்குள் சேர்த்தது வருத்தம் தரவில்லை.

ஆனால் உங்களது சொற்களில் இருக்கும் கொந்தளிப்பை நான் ஆதரிக்கவில்லை என்பதை மட்டும் பதிவு செய்கின்றேன்.

நான் கேட்டது ஒருவர் பற்றிய விமர்சனங்களுக்கு முன் அவர் பற்றி எனக்குத்தெரியாதவற்றை அறிந்து கொள்ளவே. அதைத்தருவது முடியாதுவிடின் பதில் அளிப்பதையாவது தவிர்த்திருக்கலாம் ரகு.

நன்றி.

மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கேட்கும் ஆளைப்பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அன்றாடம் வரும் செய்திகளின்படி நீங்கள் கேட்கும் ஆள் தமிழரின் நலனுக்கு எதிரானவர் என்பது மட்டும் தெளிவாகிறது.

அதுதான் சொன்னேனே , நீங்கள் யாரையும் ஆதரிக்கலாம் என்று, அதில் தவறேயில்லை. சிலவேளை கூட்டமைப்பை மற்றைய குழுக்களுடன் ஒப்பிட்டது தவறென்று நினைக்கிறீர்களோ என்னவோ??!!! அந்தளவிற்கு கூட்டமைப்பு இன்னும் இறங்கவில்லை என்றுதான் நானும் நினைக்கிறேன்.

ஒருவரை ஆதரிப்பது என்று முடிவாகிவிட்டால், அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நியாயப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுவிடுவது தவிர்க்க முடியாதது. நீங்கள் மட்டுமல்ல, நானும் இதைப் பலமுறை செய்திருக்கிறேன்.

இறுதியாக, எனது கொதிப்பு உங்கள் மேல் திரும்பியதற்குக் காரணம், நீங்கள் ஆதரதிக்கும் ஆள் சொல்லிய செய்திதான். புலிகள் ஏக பிரதிநிதிகள் கிடையாது என்பதும் அவர்கள் பயங்கரவாதிகள் என்பதும் யாருடைய வசனங்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்??? இப்போது இந்த வசனங்கள் வரவேண்டியதன் அவசியம் என்ன?? முக்கியமாக போர்க்குற்ற, மனிதவினத்திற்கெதிரான குற்ற விசாரணைகள் பற்றி உலகம் பேசிக்கொண்டிருக்கும்போது???

தமிழரின் தேசியத்தைக் குழிதோண்டிப் புதைத்து, தனக்குச் சார்பான கொலைகார ஏவல் நாய்களையும் தமிழரின் பிரதிநிதிகள் என்று உலகிற்குக் காட்டச் சிங்களம் "புலிகள் ஏக பிரதிநிதிகள் இல்லை" என்று எப்போதுமே சொல்லிவருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாகவே மகிந்தவீட்டின் எச்சக்கலை நாயான சுமந்திரன் சொல்வதையும் நான் பார்க்கிறேன்.

அவரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லவேன்டியதில்லை, நீங்களே அவரைப்பற்றி இதுவரை வந்த செய்திகளைப் படித்தீர்களென்றால் புரியும்.

இங்கிலாந்துப் பயணத்திலிருந்து இதுவரை இவர் செய்துவருகிற சொல்லிவருகிற செயல்களையும், பேச்சுக்களையும் நின்று நிதானமாக அலசுங்கள், சிலவேளை உங்களுக்குப் புரிந்தாலும் புரியும்.

இப்ப குடுக்கிற நிலமையில தமிழ்மக்களும் இல்லை.

புடுங்கத் திரியிரவங்களுக்கு இது புரியிதில்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவரின் அறிக்கையைப் பார்த்தால் பெரிசா எதையோ எதிர் பார்க்கிறார் போலகிடக்கு.

இப்ப குடுக்கிற நிலையிலையா ராசபக்ச இருக்கிறார்?

அதுதான் கழுவுறதுக்கு இப்போது கனபேர் இருக்கினம், இவர் எதுக்கு அவசரப்படுகின்றார். :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகு

தங்களது கொதிப்புக்கான காரணமே நானும் அவர் பற்றிய தரவுகளைக்கேட்டதற்கு காரணம் என தங்களால் ஊகிக்கமுடியாதது நான் இன்னும் இங்கு அதிகம் பயணிக்கணும் என்ற தரவை எனக்கு தருகிறது.

அவருக்கான எதிர்ப்பும் அவரது நடவடிக்கைகளுக்கான எதிர்வினையும் தாயகத்திலுள்ளவர்களால் ஏற்கனவே காட்டப்பட்டு உலகுக்கு தெரியப்படுத்தியாகிவிட்டது என்று நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளின் தொல்லை தாங்க முடியுதில்லை ஊரில் இருக்கும் யாராவது ஏதாவது செய்து இந்தாளின் வாயை அடிக்கின்றார்கள் இல்லையே ........

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகு

தங்களது கொதிப்புக்கான காரணமே நானும் அவர் பற்றிய தரவுகளைக்கேட்டதற்கு காரணம் என தங்களால் ஊகிக்கமுடியாதது நான் இன்னும் இங்கு அதிகம் பயணிக்கணும் என்ற தரவை எனக்கு தருகிறது.

அவருக்கான எதிர்ப்பும் அவரது நடவடிக்கைகளுக்கான எதிர்வினையும் தாயகத்திலுள்ளவர்களால் ஏற்கனவே காட்டப்பட்டு உலகுக்கு தெரியப்படுத்தியாகிவிட்டது என்று நினைக்கின்றேன்.

இதே காரணத்தை முன்வைத்து நாங்கள் முதலும் தர்க்கித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இது தேவையற்ற விவாதம். ஒரு நாள் முடிவு வரும், அப்போது யார் மக்களோடு இருக்கிறார்கள், யார் மக்களை விற்கிறார்கள் என்பது தெளிவாகும். அதுவரை நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான் குகன்.

மற்றும்படி உங்களுடன் கோபித்து என்னத்தைக் காணப் போகிறேன்.

நன்றி, வணக்கம் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விஷயம் மட்டும் நன்கு புலப்படுகின்றது 18 மே 2009 இன் பின்னர் தோன்றும் எவராயினும் அவர்கள் பின்பு பெரும்பாலானோர் தேசியத்துக்கு எதிரானவர்கள்தான் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என நம்புகின்றேன்.

இவர்கள் முன்பு எங்கிருந்தார்கள் ? ஏன் அப்போது எதையை பேசுவதில்லை ??

இதன் விடையை தேடினால் ...... சிங்கள அரசுக்கு எதொருவகையில் உதவியவர்களாகவே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் நானும் கேட்டேன். முடிந்தால் தாருங்கள் தமிழ் அரசு.

இவரைச் சந்தித்துக் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தும், வேறு குறுக்கீடுகளால் இனப்பிரச்சனை பற்றி கதைக்க முடியாது போய்விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களுக்கு உரிமை பேச வந்தவர்களா? அல்லது தமிழர்களது மிச்ச சொச்சத்தைளும் கூறுபோடவந்தவர்களா? யார் இந்த சுமந்திரன்? இப்படியானவர்கள் இருக்கும் வரை தமிழினம் விடிவு பெறாது. நெல்வயலில் முளைத்த புற்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்.. ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.. கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் ஏக பிரதிநிதித்துவத்தை தமிழர் தாயகக் கோட்பாட்டை.. சுயநிர்ணய உரிமையை முன் வைத்து தேர்தலில் நின்று வடக்குக் கிழக்கில் பெரு வெற்றி பெற்று வரலாற்றில் என்றுமில்லாத எண்ணிக்கையில் (22) தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களை சிங்களப் பாராளுமன்றில் கொண்டிருந்தது. அப்போது சுமந்திரன் எங்க இருந்தாரோ தெரியவில்லை..!

மேலும் சுமந்திரன்.. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியல்ல. சம்பந்தனால் முன்னிறுத்தப்பட்ட பிரதிநிதி..! அதுமட்டுமன்றி இவர் புலிகள் காலத்தில் புலிகளுக்கு "அட்வைஸ்" கொடுக்கிற நிலையிலும் இருக்கவில்லை. எனவே இப்போ புலிகள் இல்லை என்ற துணிவில்.. எலிகள் ஐக்கிய இலங்கை.. புலி வன்முறை பற்றி எல்லாம் பேச வெளிக்கிடக் கூடாது. புலிகள் இல்லை என்றாலும் புலிகள் முன் வைத்த மக்களின் எண்ணங்களுக்கு வாக்குப் போட்ட மக்கள் உள்ளனர்.

வன்முறையை புலிகள் மட்டும் கையில் எடுக்கவில்லை. 1952 இல் இருந்து சிங்கள தேசமே வன்முறையை தமிழர்கள் மீது துணித்து வருகிறது. அதற்கு புலிகளும் மற்றையவர்களும்... பதில் அளித்தார்களே அன்றி புலிகள் வன்முறையை நாடியதான இவரின் குற்றச்சாட்டு.. சிங்களப் பேரினவாதிகளை திருப்திப்படுத்தி சலுகைகள் அனுபவிக்க இவர் பிரியப்படுவதையே காட்டுகிறது.

சுமந்திரன் இவ்வாறான மிகைப்படுத்திய போலித் தோற்றம் காட்டுதலைக் கைவிட்டு யதார்த்த உலகிற்கு வருவது அவசியம். 1977 இலும் சரி.. 2005 தேர்தல்களிலும் சரி மக்கள் மனமாற்றமின்றி தமிழீழத் தாயகக் கோட்பாட்டையும்.. ஏக பிரதிநிதித்துவத்தையும் அங்கீகரித்துள்ளதை நீங்கள் காணலாம்.

1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் இருந்த அந்த நிலை 2005 இல் விடுதலைப்புலிகளிடம் கைமாறி இருந்தது. காரணம்.. கூட்டணி தமிழ் மக்களின் ஆணையை நிறைவேற்றாத ஏமாற்றுப் போக்கை இனங்காட்டியதால். கூட்டமைப்பையும் நீங்களும் சம்பந்தரும் அதே வழியில் கொண்டு செல்வதை செய்யாதிருப்பீர்கள் என்றே மக்கள் இன்னும் நம்புகின்றனர்.

இன்றேல் கூட்டமைப்பிடம் தமிழ் மக்கள் இன்று அளித்திருக்கும்.. தனிப் பெரும்பான்மை என்பது காணாமல் போவது கூடிய விரைவில் நடக்கும். அது சிங்களப் பேரினவாதிகளையே பலப்படுத்தி நிற்கும்..!

தமிழ் மக்கள் தமிழீழம்.. தாயகக் கோட்பாடு.. சுயநிர்ணய உரிமை.. இவற்றை தாரை வார்த்துக் கொடுக்க எப்போதும் தயார் இல்லை என்பதை எல்லா தேர்தல்களிலும் வெளிக்காட்டியே வந்துள்ளனர்.. என்பதை சுமந்திரன் உள்வாங்கி கொள்வது மிக அவசியம். இன்றேல் கூட்டமைப்பை விட்டு விலகி சிங்களப் பேரினவாதிகளோடு இணைந்து கொண்டு துரோகிகளோடு துரோகிகளாக மக்கள் விரோத பணியைச் செய்ய ஆரம்பிக்கலாம். அதற்கும் தடையில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg1aweb.jpg

உவர் இருக்கவேண்டிய இடம் வேறை

புலிகளை வைத்து அரசியல் உலகில் எங்கும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை வைத்து அரசியல் உலகில் எங்கும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

உண்மையோ இல்லையோ என்பதை அடுத்த தேர்த்தல் சொல்லி விடும்.மக்களின் முன் என்ன முகத்துடன் போய் நிற்கப்போகிறார்கள் என்று பார்த்து விடுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை வைத்து அரசியல் உலகில் எங்கும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

புலிகளை வைத்து செய்த அரசியல்தான் இதுவரைக்கும் இவர்களை கொண்டுவந்துள்ளது .......

இல்லாவிடின் இவர்கள் யார் என்பதே யாருக்கும் தெரியாது இருந்திருக்கும். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.