Jump to content

About This Club

எதுவானாலும் மகிழ்விற்பதற்க்கானது ..... !
  1. What's new in this club
  2. பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? பனங்காய் பணியாரமே பச்சைக் கொழுந்து வெத்திலையே உன் பார்வை கொஞ்சம் பத்தலையே” என்ற ஈழத்து துள்ளலிசைப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். கேட்கும்போதே பனங்காய் பணியாரத்தின் வாசனையும் சுவையும் கற்பனையில் ஊறி நாவிலே தேன் சுரக்குமல்லவா? இன்றைக்கு நாம் பனங்காய் பணியாரம் பற்றிப் பார்க்கப்போகிறோம்…. பனங்காய் பணியாரம் ஈழத் தமிழரின் தனித்துவமிக்க ஒரு சிற்றுண்டி வகையாகும். இதன் சுவையும் மணமும் தனித்தன்மை வாய்ந்தவையாகும். பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? செய்து பாருங்கள்! ஈழத்தில் பனங்காய் பணியாரத்திற்கு பேர்போன இடமென்றால் யாழ்ப்பாணம் என்றுதான் சொல்லமுடியும். அதற்கு காரணமும் இருக்கிறது. இலங்கையின் சகல மாவட்டங்களிடையேயும் பனையால் அடையாளப்படுத்தப்படுவது யாழ்ப்பாணமே. யாழ்ப்பாணத்தின் தீவுகள் உட்பட சகல நிலப்பரப்பிலும் ஓங்கி உயர்ந்த பனைமரங்கள் உண்டு. இலையுதிர் காலத்தில் பெண் பனைகளில் நுங்குப் பாளைகள் முகிழ் விடுகின்றன. பின்னர் வசந்த காலத்தில் நுங்குகள் முற்றி பனம்பழங்களாகின்றன. பனம்பழங்களைத்தான் பனங்காய் என்று மக்கள் அழைக்கின்றனர். நன்கு முற்றிய பனம் பழங்கள் தாமாகவே கீழே விழுகின்றன. இவற்றைச் சேகரித்து மேல் தோல் உரிக்கப்படுகின்றது. பனம் பழத்தில் மூன்று விதைகள் அல்லது கொட்டைகள் காணப்படும். சில பனம் பழங்களில் அதிகப்படியாக நான்கு கொட்டைகளும் குறைவாக ஒரேயொரு கொட்டையும் காணப்படலாம். தோல் உரிக்கப்பட்ட கொட்டைகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் களி பிழிந்தெடுக்கப்படுகின்றது. நீரில் சற்று கலந்து பிழிகின்றபோது களி இலகுவாக எடுக்கப்படும். பிழியப்பட்ட களி சூடாக்கப்படவேண்டும். களி சூடாக்கப்படாத சந்தர்ப்பத்தில் பனங்காய் பணியாரம் கசப்புத்தன்மையாக இருக்கும். இதனை உள்ளூர் மக்கள் காறல் தன்மை என்பார்கள். அடுப்பில் சூடாக்கிய களியுடன் அவித்த கோதுமை மா கலக்கப்படுகின்றது. அதன்பின்னர்தேவையான அளவு சீனியும் கலக்கப்படுகின்றது. சீனி நன்றாக கரையும்வரை கலக்கப்பட்ட திண்மைக்களியானது, கொதித்த எண்ணெயில் போடப்பட்டு பணியாரம் சுடப்படுகின்றது. பணியாரம் அடுப்பில் சுடப்படும்போதே அற்புதமான வாசனையும் வெளிவரும். பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா? செய்து பாருங்கள்! எண்ணெய்யில் சுடப்பட்ட சுவையான பணியாரம் ஆறவிடப்பட்டு எல்லோருக்கும் பரிமாறப்படுகிறது. தமது குடும்பத்தினர்க்கு மட்டுமல்லாது சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் அயலவர்களுக்கும் இந்த பனங்காய் பணியாரம் பரிமாறப்படுவதுண்டு. இதனால் தமிழ் மக்களிடையே ஒற்றுமையினைக் கட்டியெழுப்பிய விருந்தோம்பற் பண்பாட்டில் பனங்காய்ப் பணியாரத்துக்கும் சிறப்பான ஒரு பங்கு காணப்படுகிறது. . நடிகர் சசிகுமாரின் முகநூலில் இருந்து .... Start new topic
  3.  



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.