தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
அகிலம் போற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து 27ஆம் திகதியுடன் 125வருடங்களாகின்றன. அவர் மட்டக்களப்பின் தென்கோடியிலுள்ள காரைதீவு எனும் நெய்தலும் மருதமும் ஒருங்கே அமையப்பெற்ற பழந்தமிழ்க் கிராமத்தில் பிறந்தார். சாமித்தம்பி கண்ணம்மை தம்பதியினர் தவமிருந்து 1892-03-27 இல் அடிகளாரைப் பெற்றெடுத்தனர். அப்பகுதியில்தான் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயமும் உள்ளது. காரைதீவின் காத்தல் தெய்வமாம் பத்தினித்தெய்வம் கண்ணகியைக் குலதெய்வமாகவும் அவ்வம்மையின் நாமத்தைத் தாங்கியவருமாகிய கண்ணம்மையின் வயிற்றில் முதலாவது உதித்தவர் அடிகளார். இன்றும் கண்ணகை அம்மனாலயத்தைப் பரிபாலித்து வருகின்ற விஜயராஜன் குடியார் என்று சொல்லப்படுகின்ற வம்வத்தைச் சேர…
-
- 2 replies
- 7.8k views
-
-
இது ஒரு தமிழகராதி. தமிழ்ச்சொற்கள் நிறைந்து இருக்கின்றன. நீங்களும் உங்களுக்கு தெரிந்த சொற்களை இணைக்கலாம். கணிமொழிகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவ்வாறு பலபகுதிகளில் சொற்களை இணைக்கலாம். அத்தோடு அங்கு உள்ள பல சொற்களிற்கு உரிய தமிழ்ப்பதத்தை நீங்களும் பதியலாம். இதுபற்றி முதலில் களத்தில் இருக்கிறதா தெரியாது. எனக்கு கிடைத்ததை பகிர்ந்து கொண்டேன். http://www24.brinkster.com/umarthambi/Tami...amil_search.asp
-
- 14 replies
- 7.8k views
-
-
மய்யம் என்றால் என்ன? மையம் என்றால் எங்களுக்கு என்ன? தமிழல்லாத சொற்களுக்காக ஏன் இந்த சொற்போர்?.. நடுவம் என்பது தான் தமிழ் .. எழுத்துச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பெரியார் செய்த வேலையே ஐ உருபுச் சொற்களை அய் ஆக்கும் முறைமை. ஆனாலும் முதலில் தமிழ்ச் சொல்லில் கலந்திருக்கும் சமசுக்கிருதத்தை அறிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன். தமிழர் தாயகப் பகுதிகளில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலுமே இந்து மதத்தின் தாக்கத்தினால் மொழிக்கலப்பு மிக அதிகமாகவிருக்கிறது. தொன்மையான வழிபாட்டு முறைகளைப் பேணும் தென் தமிழீழத்தில் மொழிக்கலப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தில் ஆங்கிலம் கலந்த வழக்கு இருப்பதால் ஆங்கிலம் கலக்காத யாழ்ப்பாணத் தமிழ், அதற்கென ஒரு உயர்வைப் பெற்றுக்கொண்டது…
-
- 10 replies
- 7.7k views
-
-
ஈழநூல் 70 நூல் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் ஆசிரியர் சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்) மின்னூலாக்கம் இ. பத்மநாப ஐயர் மின்பதிப்பு ஈழநூல் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் பதிப்பாசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன் இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு வெளியீடு ---------------------------------------------------. ARTS COUNCIL TAMIL DRAMA PANEL SERIES Published under the authority of the Arts Council of Ceylon GENRAL EDITOR S.VITHIANANTHAN, M. A. ph. D. Chairman, Tamil Drama Panel, Arts Council of Ceylon SECOND EDITION 1962 Price Re. 1.00 --------------------------------------…
-
- 5 replies
- 7.7k views
-
-
பூவின் ஏழு பருவப் பெயர்கள் பூவின் பெயர்கள் பூவினை மலர் என்று சொல்வது மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஒரு பூவானது அரும்பி ,மலராகி, மணம் பரப்பி மனங்களைக் கொள்ளை கொள்ளும்வரை எத்தனை எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன. மாற்றங்கள் மட்டுமா நிகழ்கின்றன? மாற்றங்களுக்கு ஏற்ப பெயரையும் அல்லவா மாற்றிக் கொள்கிறது. பருவத்துக்கு ஒரு பெயர் தாங்கி ஒவ்வொரு பருவத்தையும் என்னைப் பார் என்று உற்று நோக்க வைத்து உவகை கொள்ள வைக்கிறது. …
-
- 0 replies
- 7.7k views
-
-
சமீபத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய "வில்லோடு வா நிலவே" என்ற புத்தகத்தை படித்தேன். இது 1993ல் வெளிவந்தது. இப்பொழுது தான் எனக்கு அதை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், காக்கை பாடினியார் நச்செள்ளை எனும் புலவரை பக்கத்தில் கொண்டதாக புறநானுற்றில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. "பக்கத்து கொண்டான்" எனபதற்கு பட்டத்து மனைவியாகக் கொண்டான் என்ற பொருளைக் கொண்டு எழுதப்பட்ட கவித்துவமான நாவல். கவிதை இனிது.. காதல் இனிது... வீரம் இனிது. இந்த மூன்றையும் சங்க காலத்து பிண்ணனியில் கொடுத்த இந்தக் கதையும் இனிதாக இருக்கிறது. அம்பைத் தீண்டுவது வீரனின் செயல், வம்பைத் தீண்டுவது காதலனின் செயல். இவர் இரண்டையும் தீண்டியுள்ளார். "வம்பு" என்பதன் மற்…
-
- 2 replies
- 7.6k views
-
-
இந்தத் தலைப்பில் உண்மையில் பெரியார் என்ன சொன்னார் என்று ஒவ்வொரு விடயம் பற்றியும் எழுத/படி எடுத்துப் போட இருக்கிறேன்,அப்போதாவது பெரியார் எப்படிப்பட்டவர் என்பது விளங்கலாம் என்பதால். ஏனெனில் பெரியார் என்றால் எதோ பிராமணரை எதிர்க்கப் பிறந்த மனிதர் என்பதாக சிலர் இன்று தமிழ் இணயத்தில் அவர் மேல் வசைமாரிப் பொழியும் பிராமணர்களின் எழுத்துக்களை இங்கே வந்து போட்டுள்ளார்கள் அவர்களுக்கு பெரியார் மேல் இருக்கும் ஒரே கோவம் அவர் தாம் பிறந்த இந்து மதம் பற்றி அவர் வைத்த விமர்சனம் தான். அதற்கு மேல் இவர்களுக்கு அவர் என்ன சொன்னார் என்பதுவோ ஏன் சொன்னார் என்பபதுவோ புரிந்ததாகத் தெரியவில்லை. பகுத்தறிவு கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமயமலையின¢உயரத்தை ஏன் வெளி…
-
- 18 replies
- 7.5k views
-
-
பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்... நமது நாட்டில் பல்வேறு பழமொழிகளை நமது முன்னோர்கள் கூறக் கேட்டுள்ளோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன. அவற்றை நாம் உச்சரிக்கும் வகையிலேயே எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு சில பழமொழிகளை இங்கே உதாரணத்திற்கு கூறுகிறோம். அதாவது, நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் நகைச்சுவைக்காக அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இது தவறு, ஓர் அரண்மனை வாயிலில் நாயைக் கட்டி வைக்க வேண்டும் என்று மன்னன் விரும்பினான். அது கொஞ்சம் சிரமம் என்பதால் அதற்கு மாறாக நாயை தத்ரூபமாக கல்லில் செதுக்கி அரண்மணை வாயிலில் அமைத்தனர். அதனை சற்றுத் தொ…
-
- 0 replies
- 7.4k views
-
-
முதலில் மருத நிலத்தில் உழவர் என்னும் ஒரு வகுப்பினர் இருந்தனர். பின்பு அவர்கள் காலப்போக்கில் பிரிந்து உழவர், அரசர், வணிகர், அந்தணர் எனப்பட்டனர். ஒரே குலமாய் இருந்த தமிழர்கள் தமது தொழில் முறைக்கு ஏற்ப அதே தொழில் செய்வோரிடம் கொண்டும் கொடுத்து வந்ததால் நாளடைவில் வெவ்வேறு குலத்தினராயினர். அதாவது வேறு தொழில் செய்வோரிடத்தில் பெண் எடுத்து பெண் கொடுத்தால் தத்தம் தொழிலுக்கு ஒத்து வராது என்பதால் தம்மை ஒத்த தொழில் செய்வோரிடத்திலே பெண் எடுத்து பெண் கொடுத்து வந்தனர். பின்னாளில் அது தொடர்பற்ற வெவ்வேறு குலமெனும் கருதும் நிலையை அடைந்து ஒவ்வொருவரும் தத்தம் குலமே பெரிதென எழுதி தனித் தனி குலமாயினர். அந்தணன் என்னும் பெயர் அந்தணாளன் (அம் + தண் + ஆளன்) என்ற வடிவில் தான் பல இடங்களில் வழங்கப்பட…
-
- 6 replies
- 7.3k views
-
-
சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்? சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன.. பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்? உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்? பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது. தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்… ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..? சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது. (தலைவியை இயல்பாக ஓரிடத்…
-
- 9 replies
- 7k views
-
-
தமிழரின் கலைவடிவங்களில் ஒன்றான வில்லிசையை இலங்கையிலும் மலேசியா, இந்ததியா போன்ற நாடுகளிலும் 80ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக நிகழ்த்தியோரில் கலாவிநோதன் சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களும் ஒருவர். அவர் தாயகத்திலிருந்து வந்து சுவிஸ் நாட்டில் 2004ல் நிகழ்த்திய 'வள்ளி திருமணம்' என்ற வில்லிசை நிகழ்வு யாழின் ஒளித்தடம் பகுதியில் உள்ளது.
-
- 26 replies
- 7k views
-
-
கலித்தொகை சங்க நூல்களில் நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு, புறநாநூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றை எட்டுத்;தொகை நூல்களுள் அடக்குவர். அகவற்பா, விருத்தப்பா(ஆசிரியம்), வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பாவென்னும் ஐந்து பாவினங்களுள் கலிப்பாவென்னும் பாவகையைச் சார்ந்து பல புலவர்களால் இயற்றப்பட்ட செய்யுள்களின்; தொகுப்பாயமைந்தது கலித்தொகையாகும். கலித்தொகையும் பரிபாடலும் இசைகலந்து எடுத்துப் பாடப்படக்கூடிய இன்னிசைப் பழம்பாட்டுவகையினவென்று இசைவல்லார் கூறுவர். கலித்தொகை பண்டைய தமிழரின் அகவாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் அகத்திணைநூலாகும். பாலை, குறிஞ்சி, மருதம் முல்லை, நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பண்டைத்தமிழரின் காதல் வாழ்வுபற்றிய செய்திகளை அந்நூல் க…
-
- 2 replies
- 7k views
-
-
திருக்குறள் உலகப்பொதுமறையா? - சில சொல்லாடல்கள் - ந. முருகேச பாண்டியன் தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும் உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலையாக வள்ளுவர் நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்ததுதான். சங்க காலத்திற்குப் பிந்தைய நூலாக திருக்குறள் ஏதோ ஒரு வகையில் தமிழில் தொடர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது. பக்தி இயக்கக் காலகட்டத்தில் முக்கியத்துவம் இல்லாமலிருந்த திருக்குறள், இருபதாம் நூற்றாண்டில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வள்ளுவத்தின் எழுச்சி தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம், புராணங்கள் போன்றவற்றை இலக்கியமாகக் கருதிய சூழலில், அதற்கு மாற்றாகத் திராவிட இயக்கத்தின…
-
- 3 replies
- 6.9k views
-
-
தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் வெங்கட் சாமிநாதன் 1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில, மாதிரிப்படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸ…
-
- 3 replies
- 6.9k views
-
-
நன்பர்களே இங்கு நாம் நிறையவே தமிழில் தான் எழுதுகிறோம். என்றாலும் கூடுதலான ஆங்கில (புதிய) சொற்களின் தமிழ்மொழிபெயர்ப்பு கடினமாக உள்ளது. ஆகவே நாம் எம்மால் முடிந்த அளவிற்க்கு ஆங்கில சொற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை களத்தில் வைக்கலாமே.மற்றவர்களுக்கும் உதவியாகவிருக்கும். உதாரணத்திற்கு சில.. Automatic.....தானியங்கி Optional.......தேவைஏற்படின் Player...........சுழற்றி நன்றி. அன்புடன். …
-
- 13 replies
- 6.9k views
-
-
வன்னி நாட்டார் பாடல்களில் ஒரு பார்வை வன்னி விவசாயக்கிராமங்கள் நிரம்பியது.இங்கு குளங்களும் கோயில்களும் காடுகளும் நிரம்பியுள்ளன.வன்னிவள நாட்டின் பாரம்பரியமிக்க வாழ்வியல் வழி பாடுகள் சடங்குகள் தொழில்கள் என்பன பற்றிய நாட்டார் பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவை பெரும்பாலும் பள்ளு, சிந்து, கும்மி, வசந்தன் எனவும் கூத்து, கதைப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. பிள்ளையார் சிந்து, விறுமன்சிந்து, வதனமார்சிந்து ஐயனார் சிந்து, முருகையன்சிந்துஎன வழிபாட்டிலும், பண்டிப்பள்ளு, குருவிப்பள்ளு, குருவிச்சிந்து இகொட்டுக்கிணற்றடிப்பிள்ளையார் கும்மி, கமுகஞ்சண்டை, என வகைவகையாக வழக்கிலுண்டு. “முடியோடு தேங்காயைக் கையிலெடுத்தோம் மூத்ததோர் கணபதியைத் தோத்திரம் செய்தோம்” என என்ன வேலை செய்யப்புகுந…
-
- 7 replies
- 6.8k views
-
-
பல நாடுகள் என்பதா சரியான புணர்ச்சி. களத்தில் யாராவது உதவமுடியுமா? அல்லிகா :?:
-
- 25 replies
- 6.8k views
-
-
-
- 65 replies
- 6.8k views
- 1 follower
-
-
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி! கலாநிதி செ.யோகராசா ஈழத் தமிழ் சிறுகதை வளர்ச்சி பற்றிய ஒரு மறு மதிப்பீட்டிற்கான அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. அண்மைக் காலங்களில் வெளிவந்த ஆரம்ப காலச் சிறுகதைத் தொகுப்புக்களும் (எ-டு: சம்பந்தன் கதைகள்இ மறுமலர்ச்சிக் கதைகள்) ஆய்வுகளும் -(எ-டு: ஈழகேசரி காலக் கதைகள் பற்றி செங்கை ஆழியான் எழுதியவை) முனைப்புற்று வரும் பிரதேச நோக்கிலான ஆய்வுப் போக்குகளும் இதற்கு வழியமைத்துள்ளன. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றம் பற்றி இதுவரை ஆராய்ந்துள்ளோர் பலரும் இலங்கையர்கோன்இ சி.வைத்தியலிங்கம்இ சம்பந்தன் ஆகிய மூவரையுமே முன்னோடிகளாக முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும் (ஐ) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாக…
-
- 2 replies
- 6.7k views
-
-
வணக்கம் உறவுகளே தமிழில் ஒரு பிறந்தநாள் வாழ்த்துப்பாடலை உருவாக்கினோம் என்பது நீங்கள் அறிந்ததே .அந்த வகையில் அந்தப்பாடலை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் ...............மேலும் இந்தப்பாடல் இன்னும் வேறு வகையில் வீடியோ காட்சி செய்யப்பட்டுகொண்டிக்கிறது ..............பல தொலைக்காட்சிகள் ,வானொலிகள் இவற்றை ஒலிபரப்ப காத்திருக்கிறது ...............அந்த வகையில் யாழ்கள முகப்பிலும் இந்தப்பாடல் வெகு விரைவில் வர காத்திருக்கின்றது .. பாடலை நீங்களும் ஒரு தடவை கேளுங்கள் .நன்றி
-
- 12 replies
- 6.6k views
-
-
நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்.. என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள். இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார். ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவதும் தெளிவாக தெரியும். http://youtu.be/ZegXpXm4bug தமிழ் உலகை ஆண்ட மொழி, உலகிற்கு ந…
-
- 9 replies
- 6.6k views
-
-
சரி..நேரடியாக கேள்விக்கே வருகின்றேன். வாய்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா? அண்மையில் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கதைத்துக் கொண்டு இருக்கும் போது பிள்ளைகளுக்கு தமிழ் படிப்பித்தல் பற்றி எம் உரையாடல் திரும்பியது. அப்போது அங்கு இருந்த தமிழறிவுள்ள தாத்தா "தம்பி வாய்க்காலில் தண்ணீர் சலசலவென்று ஓடுமா" எனக் கேட்டார். நான் இவர் ஏன் இப்படிக் கேட்கின்றார் என நினைத்து விட்டு, ஊரில் வீட்டு கிணற்றடியில் இருந்து பின் வளவில் உள்ள சிறு வீட்டுத் தோட்டத்துக்கு வெட்டப்பட்ட வாய்க்காலில் தண்ணீர் ஓடிய காட்சியை மனத்திரையில் கொண்டு வந்து பார்த்தேன். தண்ணீர் சலசலவென ஓடின மாதிரி நினைவு வர "ஓம் அப்படித்தானே ஓடும்" என கேள்விக் குறியுடன் அவரை பார்த்தேன். "இப்படித்தான் இங்கு…
-
- 31 replies
- 6.6k views
-
-
-
279. ¦ºø¦¸É ŢΧÁ! À¡ÊÂÅ÷: ´ìÜ÷ Á¡º¡ò¾¢Â¡÷ ¾¢¨½: Å¡¨¸ ШÈ: ã¾¢ý Óø¨Ä ¦¸Î¸ º¢ó¨¾ ; ¸ÊÐÅû н¢§Å; ã¾¢ý Á¸Ç¢÷ ¬¾ø ¾Ì§Á; §Áø¿¡û ¯üÈ ¦ºÕÅ¢üÌ Åû¾ý¨É, ¡¨É ±È¢óÐ, ¸ÇòдƢó ¾ý§É; ¦¿Õ¿ø ¯üÈ ¦ºÕÅ¢üÌ Åû¦¸¡Ø¿ý, ¦ÀÕ¿¢¨Ã Å¢Ä츢, ¬ñÎôÀð ¼É§É; ýÚõ ¦ºÕôÀ¨È §¸ðÎ, Å¢ÕôÒüÚ ÁÂí¸¢, §Åø¨¸ì ¦¸¡ÎòÐ, ¦ÅÇ¢ÐŢâòÐ ¯Ëô, À¡ÚÁ¢÷ì ÌÎÁ¢ ±ñ¦½ö ¿£Å¢, ´ÕÁ¸ý «øÄÐ ø§Ä¡û, ‘¦ºÕÓ¸ §¿¡ì¸¢î ¦ºø¸’ ±É’ ŢΧÁ! Å¢Çì¸õ : þÅû н¢× Á¢ì¸Åû,Óý¨Éì ¸Çò¾¢ø þÅû ¾ó¨¾ ÀƢ¡ɡ÷,§¿üÚ ¿¼ó¾ §À¡Ã¢ø ¡¨ÉÔ¼ý ¦À¡Õ¾¢ þÅû ¸½Åý þÈóÐ §À¡É¡ý.þý¨È §À¡ÕìÌ «¨ÆìÌõ §À¡÷ôÀ¨È §¸ðÎ ¾ÉÐ ´§Ã þÇõÅÂÐ Á¸¨É,«ôÀÇõ À¡Ä¸É¢ý ¨¸Â¢ø §Å¨ÄìÌÎòÐ §À¡ÕìÌ §À¡ö Å¡ ±É «ÛôÒ¸¢È¡û.
-
- 25 replies
- 6.5k views
-
-
கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை (1876-1954) இருபதாம் நூற்றாண்டு தந்த இன் தமிழ்க் கவிஞர்களுள் நாஞ்சில் நாட்டுக் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை மிக முக்கியமானவராவார். சாதாரண குழந்தைக் கவிகளிலிருந்து, புத்தர் வரலாறு, சமுதாயப்புரட்சி போன்ற மிகவுயர்ந்த சிந்தனைகளைத் தூண்டும் பாடல்கள்வரை அவர் பல ஆக்கங்களைத்; தமிழுலகிற்கு அளித்திருக்கிறார். கவிமணியின் நூல்கள்: மலரும்மாலையும், மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி, உமர் கையாம் பாடல்கள், தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச் செல்வம், கவிமணியின் உரை மணிகள் என்பனவாம். இதைவிடத் தனிப்பாடல்கள் பலவுமுண்டு. ஆண்டான் கவிராயன், ஐயம்பிள்ளை, கணபதி, நாஞ்சில் நாடன், மெய்கண்டான், யதார்த்தவாதி ஆகிய புனைபெயர்களிலும் அவர் எழுதியுள்ளார். அவரது பாடல்கள் …
-
- 2 replies
- 6.5k views
-