கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
அது ஒரு தனியார் கல்வி நிறுவனம். நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். முதல் வாங்கில் இருக்கும் கூட்டத்தில் நானும் அடக்கம். வாத்தியார்மார் முன்னுக்கு இருகிற படிக்கிற பிள்ளையள் என்று ஒரு நல்லெண்ணத்தில இருக்க, நாங்கள் நசுக்கிடாமல் நல்லாச்சுத்து மாத்து விடுவம். தமிழ் படிப்பித்த ஆசிரியை திடீர் என்று நின்று விட்டார். அன்று புதுசாக யாரோ தமிழுக்கு வரபோகினம் என்று எல்லாருக்கும் டென்சன். அதிபருடன் மெல்லிதாக கருப்பாக கிட்டத்தட்ட நடிகர் நாகேஷ் கருப்பாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவர். இவர்தான் இனி உங்கள் தமிழ் ஆசிரியர் என்று அறிமுகம் செய்து விட்டு அதிபர் போய்விட்டார். வந்த உடனே "வேற்றுமை " என்று கரும்பலகையில் எழுதி விட்டு முதலாம் வேற்றுமையில் தொடங்கி முழங்கத…
-
-
- 14 replies
- 2.9k views
-
-
குறிப்பு- கீழ்வரும் கதை புகழ்பெற்ற ஷெர்லக் ஹோம்சும், வாட்சனும் யாழ் நகர வீதிகளில் உலாவினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் புனையப்பட்டதாகும். பேக்கரி ஒழுங்கைக்குள் நுழையும் போது இடதுபக்கமாக இருக்கும் நீர்ப்பாசன திணைக்களத்தால் 221B என இலக்கமிடப்பட்ட மதகுதான் எனக்கும் ஷெர்லக் ஹோம்ஸிற்கும் பகல் வீடு.அடித்து கொளுத்தும் யாழ்ப்பாண வெயிலில் கூட அந்த இடம் குளு குளுப்பாய் இருக்கும்.தலைக்கு மேல் இலங்கை மின்சாரசபையின் மர அழிப்பையும் மீறி வியாபித்திருக்கும் ஆலமரம் குளுமைக்கு ஒரு காரணம் என்றால் பிரதான வீதியின் மறுபுறம் இருக்கும் ரியூசன் கொட்டிலில் படிக்க வந்து போகும் இளம் சிட்டுக்கள் அதற்கு இன்னொரு காரணம்.காலை ஆகாரத்தை முடித்தபின் முழு பற்றரி சார்ஜ் ஏற்றிய கலக்சி S3 யோடு இங்கே வ…
-
- 14 replies
- 2.4k views
- 1 follower
-
-
அந்த வேப்ப மரத்தின் நிழலில், சாக்குக்கட்டிலில் படுத்திருந்த சந்திரனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது! ஒரு நீண்ட காலச் சொகுசு வாழ்க்கை அவனது உடலை இன்னும் மாற்றிவிடவில்லை என நினைத்தபோது, தனது உடலைப்பற்றிக் கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது! பல வருடங்களுக்கு, முன்பும் இதே இடத்தில். பல தடவைகள் மதியச் சாப்பாட்டின் பின்பு படுத்து உறங்கியிருக்கிறான்! அப்போது, அருகே இருந்த தென்னம் பிள்ளையில், எட்டிப்பிடிக்கலாம் போலச் செவ்விளனிக் குலைகள் தொங்கும்! அவற்றின் அழைகைப் பல முறை பார்த்து வியந்திருக்கிறான்! ஒரு கவிஞனாக இருந்திருந்தால், அவனது அந்த வயதின் கற்பனைகள், அளவில்லாத, அர்த்தமில்லாத ஆயிரம் கவிதைகளையாவது புனைந்திருக்கும் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இருக்கவில்லை! இப்போது அந்தத…
-
- 14 replies
- 1.6k views
-
-
அழைப்பு மணி ஒலித்த பத்தாவது நிமிடம் கதவு திறக்கிறது. புலநாய்வில் கைதேர்ந்த சீலனிற்கு ஒரு தடவைக்கு மேல் மணி ஒலி எழுப்பும் அவசியம் இருக்கவில்லை. உள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் மணியினை அமிழ்த்து முன்னரே அவனிற்குத் துல்லியமாய்த் தெரிந்திருந்தது. அதனால் கதவு திறக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான். நிலா கதவினைத் திறந்தாள். பம்பாய் வெங்காயத்தின் மூன்றாவது அடுக்கின் நிறத்தில் அழகிய மென்மையான மேற்சட்டை அணிந்திருந்தாள். வெள்ளி நிறத்தில் பாதணிகள் அணிந்திருந்தாள். அவள் தொப்புளிற்கும் பாதணிகளிற்கும் இடைப்பட்ட பகுதியில் எந்த ஆடையும் இருக்கவில்லை. விமான ஓடுதளத்தில் பாதைதெரிவதற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் போன்று, அவளது ப…
-
- 14 replies
- 3.2k views
-
-
தொலை பேசி ,முகப்புத்தகம்,யுடுயுப்,வட்சப் இது இல்லாமல் நம்மட வாழ்க்கை இல்லை என்ற காலம் இப்ப பொழுது . ஒருகாலத்தில் முற்சந்தி ,படலையடி ,பொட்டுகள் வாசிகசாலை,விளையாட்டு மைதானங்கள் தான் எமது கருத்து பரிமாற்றங்கள் வீட்டு வேலை செய்ய கள்ளம் அடித்து எனது அறையில் அமைதியாக முகப்புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்,மெசெஞர் அலரியது பார்த்து கொண்டிருந்த நயன்ந்தாராவின் படத்திற்கு மேலே குகன் கொலிங் ஆன்சர் என்று வந்தது... இவனுக்கு ஆன்சர் பண்ண வெளிக்கிட்டால் இன்றைய பொழுது அதோ கதி என்று எண்ணியபடி மவுஸை வேறு இடத்திற்கு மாற்றினேன் ஆனால் எனது காலகஸ்டம் மவுஸ் ஆன்சர் என்ற இடத்தில் போய் கிளிக் பண்ணிவிட்டது. "ஹலோ மச்சான் எப்படிடா இருக்கிறாய் ,என்ன சிட்னி எரியுதாம் புஷ் வயராம்"…
-
- 14 replies
- 2.7k views
-
-
வானம் கருக்கட்டத் தொடங்கியது! ஒரு பிரசவத்துக்குத் தயாராகும் தாயின் முனகல்களைப் போன்று... மெல்லிய இடிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின! வானத்திலிருந்து பூமியை நோக்கிய மின்னல்கள் கடல் நீரின் மேற்பரப்பில் பட்டுச் சைக்கிள் சக்கரங்களைப் போல உருளத் தொடங்கின! 'சூட்டி' தோளில் ஒரு அலவாங்கொன்றைச் சுமந்த படி கடற்கரையில் நடந்து வந்து கொண்டிருந்தான் ! கோவிலடிக் கேணியில் நீச்சல் பழகி, மழைக்காகக் கேணிக்கட்டில் ஏறி நின்ற எங்களுக்கு அவன் நடந்து வருவதைக் கண்டதும் எந்த விதமான ஆச்சரியமும் ஏற்படவில்லை! ஏனெனில் அவனது பட்டப் பெயரே 'மூளை சூட்டி". அவனுக்கு அப்பா அம்மா வாய்த்த பெயர் 'பிறை சூடி' என்னடா இந்தப் பேரைக் காவிக் கொண்டு சீவியம் முழுக்கத் திரிய என்னால முடியாது! அதால என்ர பேரை மாத்தப் போ…
-
- 14 replies
- 1.8k views
-
-
எனது நண்பர் ஒருவருடன் லெப் கேணல் மகேந்தியண்ணையைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். மகேந்தி அண்ணையின் தனிச்சண்டைகள் பற்றியும் அவருடைய துணிச்சலான சம்பவங்களைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது, மகேந்தி அண்ணையைப் போலத்தான் சூட்டியும் என்று சொன்ன நண்பர், அவர்களிருவரும் ஒன்றாக இருந்தபோது நடந்த சில சுவாருசியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ‘‘அது 1989 ம் ஆண்டு காலப்பகுதி, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காலகட்டம், வன்னிக் காடுகளில் போராளிகள் அணி அணியாகப் பிரிந்து தங்கியிருந்தனர். இந்திய இராணுவம் காட்டுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்காக இறங்கினாலன்றி போராளிகள் வழமையான பம்பலும் பகிடியுமாகத்தான் இருப்பார்கள். பல யாழ்மாவட்டப் போராளிகளுக்குக் காடு புதிது, காட்டு …
-
- 14 replies
- 1.7k views
-
-
க..பூ..க..போ . (சிறுகதை) க..பூ..க..போ . இம்மாத அம்ருதாவில் . சாத்திரி .. இந்தத் தடவை தமிழ்நாட்டுப் பயணம் என்பது ஒரு திட்டமிடல் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அமைந்து விட்டது .அதனாலேயே நான் சந்திக்க திட்டமிட்டிருந்த பலரையும் சந்திக்க முடியாமலும் போனதில் வருத்தம் .முதலில் ஓசூரில் இருந்து சேலம் வழியாக தஞ்சை ..கும்பகோணம் செல்வதே எனது திட்டம் ஆனால் திடீரென கும்பகோணம் செல்லும் திட்டம் கைவிட வேண்டி வந்ததால் சேலத்திலிருந்து கிருஸ்னகிரி வழியாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது .சென்னை செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டு நேரத்தைப் பார்த்தேன் மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது .சென்னைக்கு போய் சேர எப்படியும் இரவு பத்து மணி…
-
- 14 replies
- 4.1k views
-
-
கலியாணப்புரோக்கர்களும் அவர் பின்னே ஞானும் *இது எனது மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலரின் வாழ்க்கையில் நடந்த நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றிய பதிவு * யார் மனதையும் புண்படுத்த அல்ல* கலியாணப் புரோக்கர்கள் கேட்கும் கேள்விகளை விட interview ல கேட்கிற கேள்விகள் கொஞ்சமாவது easy ஆக இருக்கும் போல தோணுறது எனக்கு மட்டும் தானோ என்னவோ.. கலியாணப்புரோக்கர்களுடனான எனது சம்பந்தம் ? தொடங்கினது 2012 க்கு பிறகு தான்..என நினைவு எப்ப நான் வயசுக்கு வந்தனோ..இல்லை..இல்லை ... எப்ப வேலை கிடைச்சுதோ அப்போதிருந்தே புரோக்கர் களை தேடி அப்பாவும் அம்மாவும் ஓடத்தொடங்கி விட்டனர். என்னோட கதைத்த ப்ரோக்கர் முதல் முதல் சொன்ன விசயம் இப்போதும் என் நினைவில் உள்ளது தம்பி இப…
-
- 14 replies
- 5.6k views
- 1 follower
-
-
ஊரடங்கிய நடுநிசி. புளிய மரம் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டிருக்கிறது. அது பிரசவித்த அனைத்துப் பேய்களதும் தடங்கள் காற்றில் பதிந்திருக்கிறது. முடக்கு வருகிறது. உரப்பையில் துவக்கை மறைத்து, ஏசியா துவிச்சக்கர வண்டியில் கோடன் சேட்டும் சாரமும் கட்டிப் பயணித்த பதின்வயது முகங்களின் சிரிப்பு அப்படியே அந்த முடக்கில் கண்ணிற்குப் புலப்படாத உணர்வாய் உறைந்திருக்கிறது. ஐபோன் ஆறு எஸ்சின் மூன்று பரிமாணத் தொழில்நுட்பம் போன்று, உறைந்த படத்தை அழுத்திப் பிடித்தால் உள்ளுர அது காணொளியாகி மறைகிறது. கடந்து நடக்கிறேன். சந்திக் கடையில் நின்று கதைபேசியவர் தடங்கள். காதிற்குள் ஒலி ஏறாத போதும் அவர்கள் உதட்டசைவை வாசிக்க முடிகிறது. கடந்து போகக் கோவில் வருகிறது. குஞ்சம்மா மூதாட்டி வழமை போல் ஜன்னலூடு கு…
-
- 14 replies
- 2.2k views
-
-
இது நான் சில வருடங்களின் முன்னர் எழுதிய நாடகம் ஒன்று. இங்கு யாழ் களத்தில் இருந்தால் இது யாருக்கேனும் உபயோகப்படலாம் என்றும், அத்துடன் நான் எழுதியவை அப்படியே மறைந்து போகாமல் இருக்கவும் கூடும் என்ற நோக்கில் இங்கு இவற்றை பதிவிடுகின்றேன். மோகன் அண்ணாவிற்கும், கள நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்னும் அருமையான சிறுகதையை தழுவியே இந்த நாடகத்தை எழுதினேன். அவருடைய இந்தக் கதையும், வேறு பல தலை சிறந்த கதைகளும் சென்னை வாசிகசாலை இணையத் தளத்தில் கிடைக்கின்றது. அவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்..................... https://www.chennailibrary.com/ppn/story/kadavulumkandasamyppillaiyum.ht…
-
-
- 14 replies
- 612 views
-
-
"லுமாலா" சைக்கிள் ----------------------------------------------------- 1.என்னதான் BMW காரில போனாலும் ஊரில மண் றோட்டில சைக்கிள்ள போற சுகம் கோடி குடுத்தாலும் வராது பாருங்கோ.முதன் முதலா எனக்கு நல்ல ஞாபகம் "சைக்கிள்" எண்டா எங்கட அப்பு வைச்சிருந்த "கீறோ" சைக்கிள்தான் நினைவுக்கு வருது. 2.நான் அறிய எங்கட ஊரில 1985,86 களில் (அப்ப நான் பால்குடி..இருந்தாலும் நினைவு இருக்கு)எங்கட ஊரில விரல் விட்டு எண்ணுற ஆக்கள் தான் சைக்கிள் வைச்சிருந்தவை.அதில எங்கட அப்புவும் ஒருத்தர்.( பெருமை பேசுறன் எண்டு குறை நினையாதையுங்கோ..) 3.அந்த மனிசன் அந்த சைக்கிளை விடியக்காலமை எழும்பினவுடன ஒரு சிரட்டையில மண்ணெண்ணையும் தேங்காய் எண்ணையும் கலந்து , அதை ஒரு சீலத்துணியால கம்பிகள் எல்லாம் துடை துடை எ…
-
- 14 replies
- 3.7k views
-
-
புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக .. பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு. பியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட…
-
- 14 replies
- 5.6k views
-
-
சாயங்காலம் சாயும் நேரம் மின் விளக்குகளின் மிதமான வெளிச்சத்தில் குளித்தபடி மௌனமாய் தவமிருக்கும் தவசிபோல அமைதியும் அழகும் மிகுந்த தூய்மையுடன் தூங்கிக்கொண்டிருந்தது அந்த முதியோர் இல்லம். ஆடி ஓடி ஓய்ந்து தம் இறுதிக்காலத்தை அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் கழிக்கும் அம் முதியவர்களின் முகங்களில் மிளிரும் புன்னகையையும் தாண்டி அவர்கள் மனங்களில ;;புதைந்து கிடக்கும் ஏக்கம் ஏமாற்றம், தனிமை, கழிந்த காலங்களின் நினைவுத் தடங்கள், என பல்வேறுபட்ட பரிமாணங்களையும் தாங்கி அங்கு பல இன, மத, மொழி, சார்ந்த பல குண இயல்புகள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கங்கள், உடை வேறுபாடுகள், என்று பலதரப்பட்ட முதியவர்களும் அங்கு தங்கி இருந்தனர். அடிவானம் வெளுக்கும் அந்த விடிகாலைப் பொழுதில் வாகனத் தரிப்பிடத்தில் …
-
-
- 14 replies
- 2.2k views
-
-
கடைசி எட்டு நாட்கள் ---------------------------------- ஏன் இறந்தவர்களுக்கு எட்டு என்ற ஒரு சடங்கைச் செய்கின்றார்கள் என்று நான் கேட்க மறந்துவிட்டேன். அம்மாச்சியிடம் அல்லது அம்மாவிடம் தான் இப்படியான கேள்விகளைக் கேட்பது. இருவரும் போன பின், வேறு எவரிடமும் இதைக் கேட்கத் தோன்றவில்லை. ஷெஹான் கருணாதிலகவின் 'மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்' என்ற நாவல் தலைப்பையும், சுருக்கத்தையும் பார்த்த உடனேயே, எட்டுச் சடங்கிற்கான விளக்கம் கிடைத்துவிட்டது. ஷெஹானிற்கு 2022ம் வருடத்திற்கான புக்கர் பரிசு கிடைத்தது. ஷெஹான் என்று ஒரு சக மனிதன் இந்தப் பூமியில் இருக்கின்றார் என்றே அதற்கு முன்னர் தெரியாது. இந்த நாவலின் உள்ளே என்ன உள்ளதென்றும் அப்பொழுது வரை தெரியாது. இந்த நாவலை ஏழு வருடங்கள…
-
-
- 14 replies
- 981 views
- 1 follower
-
-
நினைவெல்லாம் நீயே.. 1996ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த நேரம், வழமைக்கு மாறான நாய்களின் ஊளையும், புலன்களுக்குப் புலப்படாத இயந்திரங்களின் இரைச்சலும் கலவரத்தையே எமக்குள் உருவாக்கி விட்டிருந்தது. பரீட்சை எழுதும் மனநிலையில் நாம் யாரும் இருக்கவில்லை. ஆம்,வடமராட்சியில் இலங்கை ராணுவம் நுழைந்த நாள் அன்று. பட்டாம் பூச்சிகளாய் பறந்தவர்களின் வாழ்வெலாம் திறந்தவெளிச் சிறைகளுக்குள் அடைபடப்போகிறது என்பதைக் கட்டியம் கூறிய நாள். தினம் தினம் நடக்கும் சுற்றிவளைப்புகளும், தேடுதல் வேட்டைகளும், இராணுவ ஊர்திகளின் அணிவகுப்பும் இயல்வாழ்க்கையை முற்றிலும் சிதைத்திருந்தது. அப்படியான ஒரு நாளில் அறிமுகமானவர் தான் ராஜு அண்ணா. மாமி வீட்டுக் கிணற்றில் குளித்த…
-
- 14 replies
- 1.5k views
-
-
சந்திரனுக்கு அது ஒரு குறுகுறுத்த பருவம்! பாவாடை, சட்டையோட என்னத்தைப் பார்த்தாலும் வடிவாத் தெரியிற காலம்! அண்டைக்கும் சரசு வழக்கம் போல, படலையைக் கடந்து சென்றாள். ஒரு கொஞ்ச தூரம் நடந்து போய்த் திரும்பிப் பார்த்து, கழுத்தைத் திருப்பி ஒரு சின்ன “‘வெட்டு"! சும்மா ‘வெட்டு' எண்டு எழுதமட்டுமே முடியுமே தவிர, அதை எழுதி விளங்கப்படுத்திறது கொஞ்சம் கடினமான காரியம்! ஆனால், அடி வளவுக்குள்ள பனங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த ஆச்சிக்கு, அந்த ‘வெட்டின்' அர்த்தம் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்! மனுசி நேர சந்திரனிட்டை வந்து, ஒரு ஒளிவு மறைவுமில்லாமல், தம்பி, உனக்கும் அந்தப் பெடிச்சிக்கும் இடையில ஏதாவது இருக்கோ? என்று கேட்கவும், இப்படியான நேரடித்தாக்குதலைச் சற்றும் எதிர்பார்க்காத சந…
-
- 13 replies
- 1.6k views
-
-
கனடாக் கனகத்துக்கு கந்தர்மடக் கனகம் எழுதின கடிதம். பட்சமுள்ள கனகத்திற்கு! பாசத்துடன் கனகமக்கா எழுதிக் கொள்வது. நான் நலம் அதுபோல் நீயும் குடும்பமும் நல்லாயிருக்க நல்லூர்க் கந்தன் துணையிருப்பார். உன்ரை கடிதம் கிடைச்சது. என்னடா இவள் மறந்து போனாளோ எண்டு நினைச்சுக் கொண்டிருந்தனான். அட அப்படியே சீமைக்குப் போனதும் மறக்கிற மாதிரியே நாங்கள் பழகினனாங்கள். என்ரை கலியாண வீட்டுக்கு ஒரு கிழமைக்கு முதலே நீ சுன்னாகத்திலை இருந்து வந்து நிண்டு ஒவ்வொரு பலகாரமாச் சுட்டு வன்னமா அடிக்கி வைச்சது இண்டைக்கு மாதிரி கண்ணுக்குள்ளை நிக்குது. என்ன செய்யீறது ஒண்டுக்குள்ளை ஒண்டாப் பழகின எங்களைக் காலம் இப்படித் திக்குக்கு ஒராளா பிரிச்சுப் போட்டிட்டது, என்ன செய்யிறது எல்லாம் அவன் விட்ட வழி எண்ட…
-
- 13 replies
- 1.4k views
-
-
அவர் என்னைக் கடந்து போகும் போது, அவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது. நன்றாகத் தெரிந்த முகம் ஆனால் சட்டென்று அவர் யார், அவர் பெயர் என்ன என்பதை மூளை அறிவிக்க மறுத்து விட்டது. ஒருவேளை மூளைக்குத் தேவையான ஒட்சிசன் கிடைக்கவில்லை என்று அது கோவித்துக் கொண்டதா? தெரியவில்லை. தெரிந்த ஒருவரின் மாமியாரின் அடக்க நிகழ்வு. அங்கிருந்தவர்களில் பலரை எனக்குத் தெரியவில்லை. நாங்கள்தானே பார் எல்லாம் பரந்து வாழ்கிறோம். எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று எப்படித் தெரியும். ஆனால் குறிப்பாக அவரை மட்டும் எனக்குத் தெரிந்திருக்கிறது. என்னைக் கடந்து போகும் போது அவர் என்னைப் பார்த்த பார்வையில் அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது. அவரிடம் போய், “நீங்கள் யார்…
-
- 13 replies
- 1.4k views
-
-
ஒரு அறை நடுவில் ஒரு விளக்கு எதிர் எதிர் மூலைகளில் இரண்டு ஆண் பூனைகள், இரண்டு பெண் பூனைகள் விளக்கு அணைக்கப்படுகின்றது அடுத்து என்ன நடக்கும்? ------------------- இதனை கள உறவுகளே தொடருங்கள்
-
- 13 replies
- 1.3k views
-
-
முற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....! ஊர்முற்றக்கவிஞன் புதுவையின் முற்றத்தில் கரைந்த இனிய பொழுதொன்று. எங்களோடு பகிடி விட்டு , எங்களோடு அரசியல் பேசி , எங்களோடு கவிதைபேசி , எங்களோடு ஒருவனாய் கவிஞனாய் வாழ்ந்து காலநதிக்கரையில் புதுவையென்ற பெயரை மட்டும் ஞாபகம் தந்துவிட்டுக் காணாமற்போன புதுவை இரத்தினதுரை இன்றில்லை. அந்தக் கலைஞனின் முற்றத்தில் கண்ணகையம்மன் உற்வச காலத்தில் நடந்த சந்திப்பின் நினைவோடு கரையும் நாட்களிது. 2003ஆண்டு சமாதான காலத்துச் சந்தோசங்களில் கலந்திருந்த பொழுது. வற்றாப்பளை கண்ணகையம்மனின் உற்சவ காலம். வன்னி நிலத்தின் பெரும்பகுதி மக்கள் மச்சம் தவிர்த்து கண்ணகைக்கு விரதமிருக்கும் மாதம். எங்கும் கண்ணகையின் கதைகளை…
-
- 13 replies
- 4.6k views
-
-
கப்டன் லோலா ஈரநினைவாய்..... நிலை: கப்டன் இயக்கப் பெயர்: லோலோ இயற்பெயர்: தம்பிராசா சுரேஸ்குமார் ஊர்: புன்னாலைக்கட்டுவன், யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு: 16.07.1969 வீரச்சாவு: 29.12.1988 நிகழ்வு: சுன்னாகத்தில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கும்பலின் முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்ணடைந்து பின்னர் வீரச்சாவு. நெடிய தோற்றம். தேவையின்றிக் கதைக்காத சுபாவம். ஆனால் விழிகள் எப்போதும் ஆக்கிரமிப்பாளனின் நடமாட்டத்தை அவதானித்தபடியிருக்கும்.கழுத்தில் சயனைட்டோடு ஒரு சிலுவை அவன் கழுத்தில் எப்போதுமே இருந்தது. குப்பிளான் கேணியடியிலிருக்கும் எங்கள் கடைக்கு அடிக்கடி வருவான். தன் தோழர்களுக்கு உணவுப்பொருட்கள் வாங்குவான். வசாவிளானில் சென்றியிருக்கும் போராளி…
-
- 13 replies
- 2.4k views
-
-
வாழைப்பூ வடை -------------------------- வீட்டுக்கு வெளியே என்னை இருக்க வைத்திருப்பதற்கு அவன் ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டிருந்தான். வீட்டுச் சுற்றுமதிலுக்கும் வெளியே இரண்டு பிளாஸ்டிக் கதிரைகளையும், ஒரு சின்ன பிளாஸ்டிக் மேசையும் போட்டிருந்தான். எனக்கு துடக்கு என்று அவன் சொன்னான். இறந்தவர் எனக்கு ஆண் வழியில் உறவுமுறை என்பதால் இந்த துடக்கு 31 நாட்கள் வரை இருக்கும் என்றான். அவனின் வீட்டில் ஏதோ கோவில் விரதமோ அல்லது மாலை போட்டிருக்கின்றார்கள், அதனால் என்னை வீட்டின் உள்ளே விடவில்லை என்றும் சொன்னான். நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவதும் அரிது, அவற்றை துடக்கு கூட தொட முடியாது போல என்று நினைத்துக் கொண்டே கவனமாக கதிரையின் உள்ளே வசதியாக உட்கார மு…
-
-
- 13 replies
- 443 views
- 1 follower
-
-
இரவில் படுக்கும் போது என் இரண்டு குழந்தைகளுக்கும் ஒன்று அல்லது இரண்டு கதைகள் சொல்வது வழக்கம். கதை கேட்பதற்காகவே இரண்டு பேரும் என்னுடன் படுக்க விரும்பி வருவினம். நான் கதை சொல்வதுடன் அவர்களையும் கதை சொல்ல வைப்பதுண்டு. மகனுக்கு 9 வயதாகுது என்பதால் அவன் தான் வாசித்த கதைகளை ஓரளவுக்கு நேர்த்தியாக சொல்வான். மகளுக்கு 4 வயது என்பதால் தனக்கு நடக்கும் சம்பவங்களை கோர்வையின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்லி மெருகேற்றப் பார்ப்பாள். அவள் கதைகளில் அநேகமாக ஒரு Naughty boy வருவான். அது அவளது அண்ணனாகத் தான் இருப்பான். இப்படி, அவர்கள் என்னிடம் கதை கேட்கும் போது என்னால் நான் சின்ன வயதில் வாசித்த கதைகளை நினைவு வைத்து சொல்ல முடிவது இல்லை. என் ஞாபகத்தில் இருந்த சிறுவர் கதைகள் எல்லாம் மறந்த…
-
- 13 replies
- 3.9k views
-
-
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் திருமலையை ஆட்டிப்படைத்த ராணுவ புலனாய்வாளர்களின் பெயரை ஐந்து வயது குழந்தை கூட சொல்லும். அந்த அளவுக்கு பிரபல்யம் வாய்ந்தவர்கள் பெர்னாண்டோ, பைத்துல்லா, ராஜப்த்தீன். அவர்கள் செய்த கொடுமைகள் சொல்ல இந்த கதை போதாது. நிறைய குறுக்கு தெருக்களை கொண்ட திருமலை நகரின் மத்தியை நிறைந்த படையினரை கொண்டு அடைத்து விட்டு, நீல வானை கொண்டுவந்து, திருமலை மாவட்ட அடையாள அட்டை (முதலில் மஞ்சள் பின்னர் வெள்ளை) பரிசோதிக்கும் படையினரை இப்போ நினைத்தால் கூட வடிவேலு பாணியில் பில்டிங்கை ஸ்ட்ரோங் ஆக வைத்து கொண்டு பேஸ்மெண்டை நடுங்கும் பலரை இப்போதும் காணலாம். இவர்களது ஆட்டங்கள் கோலாச்சிய அந்த கால பகுதியில், திருமலை நகரின் மத்தியில் கல்லூரி வீதியையும் மூர் வீதியையும் இண…
-
- 13 replies
- 2.7k views
-