Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. பசியும் பார்வையும் திரும்பத் திரும்ப அவளைப் பார்க்கத் தோன்றியது. உருவம் இன்னும் திடகாத்திரமாக முகத்தில் ஆண்களுக்கே உரித்தான ஒரு வித தடிப்புடன் தாடைகள் அமைந்திருக்க என்னுடைய ஞாபகக்குழிக்குள் அவள் முகம் தெரிந்ததுபோலும் தெரியாதது போலும் தளம்பல்பட்டுக் கொண்டிருக்க நான் அந்த முகத்தை யாரென்று ஊகிக்க மிக ஆழமாக உற்று நோக்கினேன். அவள் அருகில் இன்னும் ஒரு பெண் நளினத்தோடு முறுவலித்தபடி வெட்கச்சாயம் பூசியிருந்தாள் . முறுவலிட்டபடி இருந்தவளை இரசிப்பதா இல்லை மற்றவளை இனம் காண்பதா என்ற இரண்டு நிலையில் நான் அந்த ஸ்காபுரொ மோல் பக்கம் விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துச் செல்வது வழக்கம் இன்றும் அப்படித்தான் அவ்விடத்தில் நான் பிடித்தமான உணவுகளை வாங்க பிள்ளைகள்…

    • 4 replies
    • 2.2k views
  2. கண்ணாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் எதேச்சையாய்க் கண்ணாடி வழி வெளியே பார்க்கிறேன். காக்கி நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலங்கி. கரிய கேசம் சிற்றருவியாய் வழிய, லூயி விற்ரான் பை கையில் தொங்க அந்தத் தமிழ் அழகி வெளியே நடந்துகொண்டிருக்கிறாள். நான் தற்போது காதலில் கட்டுண்டு கிடக்கவில்லையேல் அவசியம் வெளியே சென்று அவளுடன் பேசி இருப்பேன். தவிர்க்க முடியாத அழகி. முறுவலோடு என் நடை கண்ணாடிக் கட்டிடத்திற்குள் தொடர்கிறது. நகரத்தின் கட்டிடங்களைத் தொடுக்கும் நடைபாதையாதலால் என்னை ஒத்தவர்கள் அதிகம்பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அனைவரது கைகளிலும் அலுவலக அலைபேசி. மின்காந்த அலைகள் எங்கும் நிறைந்திருந்தும் கண்ணில் படவில்லை. மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக…

  3. Started by putthan,

    கோயிலில் தோரணம் கட்டுதல் ,அன்னதானம் வழங்குதல்,சாமி காவுதல் போன்றவற்றிக்கு நானும் என்னுடைய நண்பர்களும் முன்னுக்கு நிற்போம்.இவற்றை செய்யும் பொழுது சில சுயநலங்களை எதிர்பார்த்துதான் செய்வோம் ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பொது நலம் போல இருக்கும்,இது தான் அன்றைய காலகட்டத்தில் பொதுசேவை என்று கூட சொல்லலாம்..அம்மாவின் அல்லது சகோதரிமாரின் தங்க செயினை வாங்கி போட்டு கொண்டு மேலாடையின்றி சாமி காவுவோம் அதிலும் முன்னுக்கு நின்று காவ வேணும் என்ற போட்டியும் எங்களுக்கிடையே நடக்கும்.சாமியை இருப்பிடத்தில் வைத்த பின்பு பிரசாதத்தை பெற்று கோவில் வெளிமண்டபத்திலிருந்து அன்றைய தரிசனங்களை இரைமீட்பது எங்களது வழமை. சின்ன பெடியள் அடிபட்டால் அவங்களை விளத்தி சமாதானப்படுத்தி அனுப்புதல்,பக…

    • 7 replies
    • 2.8k views
  4. 23.04.2017 தமிழினி அவர்களின் 45வது பிறந்தநாள்.தமிழினி அவர்கள் பற்றி பல்லாயிரம் கேள்விகள். தமிழினி அவர்களுக்கும் எனக்குமான உறவு பற்றியும் அவளது திருமணம் , ஒரு கூர்வாழின் நிழல் நூல் பற்றிய சர்ச்சைகள் என பெரிய பட்டியல் நீளம். எனது மௌனம் கலைத்து தமிழினி பற்றிய உலகம் அறியாத பலவியடங்களை பகிர்ந்திருக்கிறேன். இது பெரிய பகிர்வு. நேரமெடுத்து வாசியுங்கள். ------------------------------------ Saturday, April 22, 2017 தமிழினி.ஒருமுனை உரையாடல். முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது.…

  5. Thursday, April 20, 2017 மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்) அவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ? அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை. உரையாடலில் ஒருநாள்....., நாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது. என்றான் அவன். முற்பிறப்பெல்லாம் நம்பிறியேடா ? இது அவள். தெரியேல்ல..., ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு. நீங்கள் அப்…

    • 4 replies
    • 1.9k views
  6. பெறுபேறு /பெரும்பேறு. ஈன்றபொழுதிலும்....பின்னர் அவர்களே இன்பமென்று இருந்த பொழுதுகளிலும்... என்னை தாங்கும் வேரென நிறைந்த பொழுதிலும்..பெரிதாய் இருக்கிறது இன்று. அமுதாய் இனிக்கிறது. என் பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு ஒரு கனவு..அக்கறை..கடமை என்பதும் என்னை பழியுரைத்தோர்..எனது வீழ்ச்சி விரும்புவோர் முன்னே ஒரு சவால். வைராக்கியம். என்னை இந்த உலகிற்கு கொண்டுவந்த அம்மாவும்..என் பிள்ளைகள் உலகிற்கு வர காரணமானவனும் கூட ' எங்க உன்ர பிள்ளைகள் படிக்கிற கெட்டிதனத்தை பார்ப்பம்...என்றதுவும். தனியே நீ என்ன சாதிப்பாய். ...அடங்கி போ..என்று மிரட்டியவர்களிற்கும் முன்னே செயல் மூலமான பதிலாக ...எனது இத்தனை நாள் தவத்திற்கு வரம் கிடைத்தது. இன்றைய எனது நாட்குறி…

    • 19 replies
    • 3.7k views
  7. http://www.shobasakthi.com/shobasakthi/?p=1354 இந்தக் கதையினை வாசித்துமுடித்தபோது, எனது மனதில் எழுந்த முதலாவது கேழ்வி 'மாயோள்' என்ற தலைப்பினை ஏன் சோபாசக்த்தி கதையின் தலைப்பாக இடவில்லை என்பதாவே இருந்தது. அத்தனை அருமையான பெயர் அது. சோபாவின் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமான ஒரு சொல்லில் ஒரு எழுத்தினை வேண்டுமென்றே மாற்றி, அது ஒரு விசித்திரமான பெயர், வெளியிடத்தில் இருந்து வந்திருந்தவளின் பெயரென்று ஒரு பெரும் நாவலையே அந்தச் சொல்லிற்குள்ளால் நடத்தி முடித்திருக்கிறார். இந்தக்கதையின் அடி ஆழம் அனைத்தும் அந்தச் சொல்லிற்குள் பொதிந்து கிடக்கிறது. இருந்தும் அதனைத் தலைப்பாக இடாது குழந்தை காயாவின் பெயரினை வைத்திருக்கிறார். யோசிக்கும் போது அதன் தேவை புரிகிறது. இப்பதிவின் கடைசிப் பந்திய…

    • 20 replies
    • 3.8k views
  8. கரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரியுண்ட கோளமாய் சூரியன் கிடந்த காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய் குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது. இன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில் மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்று. ஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில் சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்பு…

  9. கொஞ்ச நாட்களாக நான் நின்மதியாக இருக்கிறேன். முன்பென்றால் எந்த நாள் என்றாலும் என் மனம் பதைபதைக்கத் தொடங்கிவிடும். கதைக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாது தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் என்னை அப்படியே விட்டுவிடுவாள். எப்போதடா இவள் கதைப்பதை நிறுத்துவாள் என ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தபடி நான் வேறொன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்…

  10. அப்பா இறந்த நாள் முதல் வீடு முழுவதும் நண்பர்கள் உறவினர் என்று இரவு பன்னிரண்டு ஒன்று என்று இருந்து கதைத்துவிட்டுப் போவதாய் முதல் மூன்று நாட்கள் கழிய, நான்காம் நாளிலிருந்து உறவினர்கள் படிப்படியாகக் குறைய எஞ்சியது நாங்கள் ஒரு இருபது பேர் தான். ஆனாலும் அப்பப்ப அயலில் உள்ளவர்களும் தெரிந்தவர் போனவர் என்று நாள்முழுதும் வீட்டில் பேச்சுச் சத்தம் கேட்டபடி இருந்தது. தம்பியின் ஐந்து நண்பர்களும் மனைவி பிள்ளைகளும் கூட இரவு பதினோருமணி வரை எம்முடன் இருந்து கதைத்து தாமே எல்லா வேலைகளையும் செய்து, அதன் பின் வீட்டுக்குப் போவார்கள். அம்மாவின் ஒன்றுவிட்ட தங்கை அம்மாவின் நெருங்கிய நண்பி. அவரே அம்மாவின் அருகில் தூங்கி எழுவது கடந்த மூன்று நாட்களும். அம்மா தன் பக்கம் படுக்க சின்னம்மா த…

  11. மறக்க முடியாத நினைவுகள்...  ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி முடிய பல மணிநேரம் இருந்து பல விடயங்களையும் கதைத்த இடம். இந்த மதில் ஓரத்தில் ஒரு சீமெந்திலான கட்டு இருந்தது (அது இப்ப அந்த இடத்தில இல்லை. அதையும் யாரோ தூக்கி கொண்டு போய் விட்டார்கள்) அதில்தான் நாங்கள் இருந்து கதைப்பது. இந்த மதிலுக்கு முன்பாக ஒரு 8 பரப்பு காணி. அதுக்குள் 2 புளியமரம், ஒரு வேம்பு, ஒரு மாமரம், ஒரு செரிபழ மரம்.. இதுக்கு நடுவில்தான் கிரிக்கெட். கண்னுக்கு பந்து தெரியும்வரை விளையாட்டுத்தான். யாழ் நகரில் உள்ள முன்னனி பாடசாலை மாணவர்கள் எல்லாம் பிற்பகலில் கூடும் இடம். கலகலப்புக்கும் நகைச்சுவை கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிலவேளைகளில் ஒரு அணியில் 15 பேர் கூட இருப்பார்கள்.. …

  12. வா…… என்னை வருடு! குளிர் பூச்சியத்திற்கு கீழே 15 ஆக இருந்தது. காற்று தாறுமாறாக வீசிக்கொண்டிருந்தது. அக்காற்றில் அலைக்கழியும் பனிப்பூக்கள் பூமியைத் தொட நிமிடங்களைக் கரைத்தன. அறையின் யன்னல் ஓரமாக எவ்வளவு நேரத்திற்குத்தான் இவற்றை இரசிப்பது? எனக்கு அலுத்து விட்டது. வீட்டில் எல்லோரும் படுக்கைக்குச் சென்று விட்டார்கள் அவள் மட்டும் இன்னும் சமையல் கட்டில் பாத்திரங்களைக் கழுவி அடுக்கும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. அவள் கரங்களின் தொடுகைக்காக மனதிற்குள் ஏக்கங்கள் குமைந்து கொண்டிருந்தன. அவளின் பாராமுகமும் அலட்சியமும் என்னைத் தினம் தினம் அவமானப்படுத்துகிறது. அடி போடீ என்று வெறுக்கும் சக்தியை இன்னும் உயிர்மை கொடுக்கவில்லை. அந்தக்கரங்களுக்குள் கட்டுண்டு கிடக்கும் கதகதப்பிற்காக ஒவ…

  13. ஆகாயத்தாமரை மீனா சலனங்கள் அற்ற பார்வையுடன் என்னை நோக்கினாள். அவளின் பார்வை எனக்குள் பலத்த அதிர்வை ஏற்படுத்தி என் எண்ணங்களை புரட்டிப்போட்டது. அவளுடைய பார்வையை மீறி பேசும் நிலையை அடைய முடியாத தவிப்பு என்னை ஆக்கிரமித்தது….. ஐரோப்பாவிலிருந்து உறவினர்களின் திருமண விழாவில் கலந்து கொள்ள கனடா வந்த எனக்கு மன ஆழத்தில் புதைந்திருந்த ஆவல் தலைதூக்கியதில் வியப்பில்லை பதின்ம வயதில் மறுக்கப்பட்ட காதலின் தாக்கம் ஐம்பதைத் தாண்டியும் மனதில் துயரமாக யாரும் அறியாமல் அழவைத்திருந்தது. நம்பியவளை ஏமாற்றிவிட்டோமோ என்று சிறுகச் சிறுக என்னைச் சாகடித்து எனக்குள் தன்னை மட்டும் உயிர்ப்பாக வைத்திருக்கும் உணர்வு காதலுக்கு மட்டுந்தான் இருக்கமுடியும். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் இன்னும் இருநாட்கள…

  14. அன்பு வாசகர்களுக்கு, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதிகம் எழுதவில்லை. காணாமல் போயிருந்தேன் என்றே சொல்லலாம். அவ்வப்போது முகநூலில் மட்டுமே உலவியிருந்தேன். பழையபடி நான் வேகம்பூட்டி ஓடத் தொடங்கியிருக்கிறேன். 2017 புத்தாண்டு என்னை புதுப்பித்திருக்கிறது. பலருக்கு என்பற்றிய பல கேள்விகள் சநதேகங்கள் ஆச்சரியங்கள் இப்ப நிறைய...., ஏன் காணாமல் போனேன் ? எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு புதிதாக ஒளியாக பிறந்திருக்கிறது. இனி நேசக்கரம் பணிகளும் விரைவடையப்போகிறது. கடந்து வந்த தடைகள் துயர்கள் கண்ணீர் புன்னகை யாவையும் இனி எழுதுவேன். கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு..., …

    • 7 replies
    • 3k views
  15. மலைகள் Dec. 02 2014, அறிமுகப் படைப்பாளிகள், இதழ் 63, இலக்கியம், சிறுகதை, டிசம்பர், முதன்மை 5 no comments [ A+ ] /[ A- ] அமலி வேலைக்குச் சேர்ந்து இரு வாரங்களாகிவிட்டன. இப்போதுதான் மனது கொஞ்சம் இலேசாகி இருக்கிறது. இளம் பெண்களுக்கு எங்கு சென்றாலும் ஆண்களால் பிரச்சனை தானோ? என எண்ணிய மனதை அப்படி இருக்காது. யாரும் இல்லை என்னும் நினைப்பே மற்றவர்களை அத்து மீற வைக்கிறது என்று எண்ணிக்கொண்டாள். அவளே எதிர்பார்க்கவில்லை. இதனை விரைவில் அவளுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு நல்ல வேலையும் பாதுகாப்பாகத் தங்குவதற்கு ஒரு நல்ல வீடும் கிடைக்குமென்று. இவள் கேட்ட உடனேயே கடை முதலாளி வேலையைக் கொடுத்து தங்குமிடத்தையும் ஒழுங்குசெய்துவிட்டார். அவள் இங்கு வந்தது நல்லதாகப் போய்விட்டது என்று மனதில் ந…

  16. கக்கூஸ் கதையல்ல கலாய் ... ஜீவநதிக்காக..சாத்திரி . வாஷிங்டன் சிட்டிசியில் வானுயர்ந்து நிற்கும் உலக வங்கி தலமையக கட்டிடத்தின் அறுபதியிரண்டாவது மாடியில் அமைந்திருந்த அலுவலகத்தில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் தனது இரண்டு கைகளையும் மடித்து தலையைப் பிடித்தபடி படு டென்சனாக அமர்ந்திருக்கிறார்.கட்டிடத்தின் கீழே சி.என்.என்.. பி.பி.சி .. சி.என்.பி.சி.. ஐ.பி .சி .. என்று உலகின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் நிருபர்கள் நித்தியானந்தாவின் வருகைக்காக காத்திருக்கும் பக்தர்களைப் போலவே உலக வங்கியின் தலைவர் எப்போ வருவார் என ஆவலோடு வாசலைப் பார்த்தபடியே பர பரப்பாக காத்திருந்தனர்.கட்டிடத்தின் உள்ளே நுழைய முயன்ற சில நிருபர்களை காவலர்கள…

  17. க..பூ..க..போ . (சிறுகதை) க..பூ..க..போ . இம்மாத அம்ருதாவில் . சாத்திரி .. இந்தத் தடவை தமிழ்நாட்டுப் பயணம் என்பது ஒரு திட்டமிடல் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அமைந்து விட்டது .அதனாலேயே நான் சந்திக்க திட்டமிட்டிருந்த பலரையும் சந்திக்க முடியாமலும் போனதில் வருத்தம் .முதலில் ஓசூரில் இருந்து சேலம் வழியாக தஞ்சை ..கும்பகோணம் செல்வதே எனது திட்டம் ஆனால் திடீரென கும்பகோணம் செல்லும் திட்டம் கைவிட வேண்டி வந்ததால் சேலத்திலிருந்து கிருஸ்னகிரி வழியாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது .சென்னை செல்வதற்காக அரசு விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டு நேரத்தைப் பார்த்தேன் மாலை ஆறு மணியாகி விட்டிருந்தது .சென்னைக்கு போய் சேர எப்படியும் இரவு பத்து மணி…

    • 14 replies
    • 4.1k views
  18. Started by putthan,

    நான் ஒரு அசைவ பிரியன் அதே போன்று எனது நண்பர்களும் அசைவப்பிரியர்கள் .ஐந்து லாம்படிசந்தி நானா கடையில் கொத்துரொட்டி எங்களது அதிஉயர் கெளரவமான சாப்பாடு அன்றைய எங்களது பொருளாதர நிலையில் அதுதான் எங்களுடைய‌ சைனீஸ்,தாய்,இட்டாலியன் ரெஸ்ரோரன்ட்.ஆட்டிறைச்சி கொத்து என்று சொல்லுவோம் ஆனால் அவர் ஆட்டை போட்டாரா மாட்டைபோட்டரா என்று ஆராச்சி ஒன்றும் செய்வதில்லை.எங்களுடன் ஒரு ஐயர் பெடியனும் இருந்தவன் அவன் வரமாட்டான். டுயுசன் வகுப்பில் பெண்களின் இருக்கைக்கு பின்னால் இருக்கும் இருக்கையில் முதலாவதாக போய் இருப்பது அவன் தான்.வேறு குழப்படிகளுக்கு ஒத்தாசை செய்வான் அதாவது பெண்களுக்கு லவ் லெட்டர் கொடுப்பது ,அவர்களி பின்பு சைக்கிளில் திரிவது போன்ற செட்டைகளுக்கு ஆனால் சாப்பாட்டு விடயத்தில் மட்டும் மிக…

  19. அஞ்சலி – சிறுகதை October 2, 2016 சிறுகதை சாத்திரி No Comments வழக்கம் போல இன்றும் காலை கடையைத் திறந்து விட்டுப் பத்திரிகை போடுபவன் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையைத் தேடினேன். நல்ல வேளையாக அது சுவரின் ஓரத்தில் கிடந்தது. போகிற போக்கில் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையை சில நேரங்களில் கடையின் கூரையிலும் தேடிப்பிடித்திருக்கிறேன். கடையின் உள்ளே நுழைந்ததும் ஒரு கோப்பியை போட்டு கையில் எடுத்தபடி சுருட்டியிருந்த பத்திரிகையைப் பிரித்து தலைப்புச் செய்திகளை ஒரு தடவை மேலாக நோட்டம் விட்டேன்.”ஆறாவது மாடியில் தீப்பிடித்தது. வீட்டில் இருந்த அனைவரும் தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனர் “. “விபத்து…..கடற்கரை வீதியில் காரோடு மோட்டர் சைக்கிள் மோதியது”. .”கா…

  20. Started by putthan,

    . விடியற்காலை ஆறு மணியளவில் வானொலியை போடுவார் அப்பா .மும்மத‌பக்திபாடல்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகும் .அப்பா காலைக்கடன் முடித்து தோட்டத்தில் ஒரு செம்பரத்தை பூவை பறித்து கொண்டு சாமி படத்திற்கு வைத்து போட்டு எழும்புங்கோ பள்ளிக்கூடத்திற்கு நேரமாகின்றது என்று சொல்லுவார்.அதன் பின்பு கையை காலை சோம்பல் முறித்து எழும்ப முயற்சிக்கும்பொழுது நித்திரா தேவி என்னை அறியாமலயே என்னை மீண்டும் அரவணைத்து கொள்வாள். வானொலியின் சத்தைதை கூட்டிவிடுவார் .இசை ஒலிபரப்பாகும் செய்தி ஆரம்பமாகப் போகின்றது என்பது இலங்கை வாழ் சகலரும் அறிந்த ஒன்று அதை தொடர்ந்து '"நேரம் ஆறு மணி முப்பது நிமிடங்கள் செய்திகள் வாசிப்பது...மையில்வாகனம் சர்வானந்தா" டேய் ரேடியோவில செய்தி போகுது எழும்புங்கோ என்ற…

  21. தொண்ணூறுகளுக்கு முன் தீபாவளி,வருடம்,பொங்கல் என்றால் மட்டும் புது துணிகள் எடுப்பதும், தைப்பதும் என ஒரே ஆரவாரமாக இருக்கும் ஊரும்,குடும்பங்களும் உறவுகளும் .... துணி எடுத்து ஜீன்ஸ் தைப்பதற்கு சேட் தைப்பதற்கு என்றால் யாழ்ப்பாணம் வரணும் ஊரில இருந்து,ஆஹா பஸ்சில போகபோறம் என்பது கூட ஒரு பெரும் சந்தோஷம் அம்மா கடை சந்தியில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபை (சிடீப்பி) பஸ்ஸில ஏறினாள் வேலணை ஊடாக வந்து மண்குப்பான் குணம் அண்ணையின் கடையில் நின்று வடை சாப்பிட்டு, மண்டைதீவு என யாழ் பஸ் தரிப்பிடத்தை அடையும்... அப்பொழுதுகள் கூட பஸ் கரையில் கண்ணாடிப்பக்கம் இருந்து ஓடும் மின்கம்பம் எத்தனை,மரம் எத்தனை என எண்ணிக்கொண்டு வரும் போது,வேலணை புங்குடுதீவு பாலத்தில் பயணிக்கும் தருணம் இனிமை,வள…

    • 6 replies
    • 2.2k views
  22. August 6th 2016 .Saturday . யாழ்ப்பாணம் . காலை ஏழு மணியளவில் கோண்டாவில் இருபாலை வீதியில் பச்சை பசேல் என்ற தோட்டவெளிக்குள் இருக்கும் அந்த வீட்டின் முற்றத்தில் ஒரு மோட்டார்சயிக்கில் வந்து நிற்கின்றது . முற்றத்தை கூட்டிக்கொண்டிருந்த அபிராமி விளக்குமாற்றை போட்டுவிட்டு வீட்டிக்குள் வந்து , “அப்பா ஊரெழு இராசையா மாஸ்டரின் மகன் வந்திருக்கின்றார்" . நம்பி என்ற பெயர் வாயில் வராமல் இராசையா மாஸ்டரின் மகன் என்று மகள் அவரை அழைப்பது வசந்தனுக்கு தெரியும் . காலையில் சனம் வந்து வரிசையில் குவிய முதல் போனால் தான் நல்ல ஆட்டு இறைச்சி வாங்கலாம் என்று வெளிக்கிட்டுகொண்டிருந்த வசந்தன் "என்ன இந்த நேரம் நம்பி வந்திருக்கின்றான் " என்று மனதில் நினைத்தபடி வெளியே வருகின்றான் . “ந…

  23. Started by Innumoruvan,

    வீடு புதிதாகக் கட்டுப்படுகையில், குடிபூரல் நிகழுமுன்னர் அதற்குள் தச்சுப்பேய் இருக்கும் என்பது முடிந்த முடிபாக ஊரிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தச்சுப் பேயைப் பார்த்தவர்கள் சாட்சியம் கூற இருந்ததனால் நம்பிக்கைத் தன்மையில் சந்தேகம் ஒட்டவில்லை. விதிகளிற்கு ஏற்ப வாழும் கிராமம் பேயை உரச விரும்பவில்லை — ஒரு சிறுவனையும் அவன் தம்பியையும் தவிர. அவ்விரு சிறுவர்களிற்கும் பேயைப் பார்த்துப் பேட்டி எடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வம் தாங்க முடியவில்லை. அப்போது அவர்களில் மூத்தவனிற்கு ஒன்பது வயதும் இளையவனிற்கு ஏழு வயதும் ஆகியிருந்தது. ஒரு இரவினைத் தங்கள் நடவடிக்கைக்குக் தேர்ந்தெடுத்தார்கள். மூத்தவன் ஒரு இரும்புக் கம்பியினை எடுத்துக் கொண்டான். இரண்டாமவன் குசினியில் இருந்து காய்கறி நறுக்கும…

  24. நிகழ்ச்சி நிரலில் இல்லாத இந்த அவதியான இரவு எப்படி தனது கடிகாரத்துக்குள் நுழைந்தது என்று நினைத்தவன், இந்த இரவு மட்டுமா நிகழ்ந்த, நிகழுகின்ற காலமும் தான் நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லையே என, எண்ணியபடி மேசைமீதிருந்த கடிகாரத்தை எட்டிப் பார்த்தான் முகிலன். இன்னும் சரியாக ஆறுமணி நேரம். குளிருக்காக போர்த்தியிருந்த கம்பளிப் போர்வையை நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையில் இறக்கி விட்டுக்கொண்டவன் இரவை எப்படி கடந்துவிடுவது என யோசித்தபடி, தலையணைக்கு கீழாக தடவி போனை எடுத்து பேஸ்புக்கை பார்க்கத்தொடங்கினான். மாட்டன் என்று சொல்லி இருக்கலாம். என்ர லீவுநாளில் நான் ஏன் போகணும். இவர் நெடுக இப்படிதான் விளையாடுறார். ஒரு வேலையை எடுத்துத் தந்துபோட்டு தான் நினைச்சநேரமெல்லாம் வா , போ …

  25. Started by Innumoruvan,

    எட்டுமணிக்கு முந்திய காலைப்பொழுது. தினம் விரியும் காட்சிகள் அப்படியே விரிந்து கொண்டிருக்கின்றன. பத்து நிமிட நடையில் மூன்று நடைபாதை நித்திரைகொள்ளிகள். காட்டுக்குள் காட்டெருமைகள் குழாமாய் நீரிற்கு ஓடுவதைப்போல் அலுவலகம் நோக்கி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நடைபாதை நித்திரைகொள்ளிகளை மிதித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் மேற்படி மூன்று இடங்களிலும்; காட்டருவி கிளையாய்ப் பிரிந்து பின் மறுபடி சேர்ந்து ஓடுவதைப்போல அலுவலக பயணிகள் விலகி இணைந்து நடந்து கொண்டிருந்தார்கள். நடைபாதை மனிதரை மிதித்துவிடக்கூடாது என்ற சிரத்தையில் நமக்கு அழுக்காகுமோ என்ற கவனமும் அவர்களிற்குள்ளாக இருந்ததாகவே பட்டது. அழுக்கு எனும்போது அது மனவெளியில் நடைபாதை மனிதன் சித்தரிக்கும் அந்தஸ்த்து இழப்பு சார்ந்து நிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.