Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, April 6, 2013 அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்களன்....! 28.03.2013 முதல் ஒரு தொலைபேசியழைப்பு ஒருமுறை ஒலிப்பதும் பின்னர் தொடர்பு அறுபடுவதுமாக 03.04.2013 மதியம் வரை இந்த அழைப்பு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. கடந்த ஏழுநாட்களில் அதிகாலையில் எழுப்பும் அழைப்பும் இதுவாகவே இருந்தது. இப்போதெல்லாம் ஒரு அழைப்பு வந்தால் முன்பு போல அடித்துப்பிடித்து உடனடியாக எடுப்பதில்லை. தொடர்ந்து துயர்களைக் கேட்கிற தாங்கு சக்தி இப்போது இல்லாது போய்க்கொண்டிருக்கிறது. அதுவோ என்னவோ புதிய அழைப்புகள் என்றால் பயம் தொற்றிவிடுகிறது. கையில் எதுவும் இல்லாமல் உதவிகள் என்று வருகிறவர்களுக்கான மாற்று வழியை…

    • 43 replies
    • 5.6k views
  2. 1996 இடம் பெயர்வு தொடர்ச்சியா இரண்டு தரம் யாழில் இருந்து வந்து சில மாதம் ஆகவில்லை மீண்டும் கிளிநொச்சியில் இருந்து ஸ்கந்தபுரம் ஊடா மல்லாவி என்று வாழ்க்கை பயணம் போகுது அப்ப எல்லாம் அந்த வயதில் எமக்கு அவைகள் ஒரு விளையாட்டு போல புதுசா ஒரு இடத்துக்கு போறம் என்கிற நினைப்பு தவிர அதன் வலிகளை அப்பொழுது புரிய எமக்கான வயதும் அனுபவனும் போதாது தான் ...வளர்த்த நாயை கிளி வரை கொண்டுவந்து சேர்த்த எனக்கு மீண்டும் வேறிடம் கொண்டு சொல்ல முடியவில்லை மனுஷர் போக வழியை கானம் இவன் வேற நாயை கொண்டு திரியுறான் என்று அப்பா பேசிய போது அப்பொழுது வந்த கோபம் இப்ப நினைத்தால் மனம் வலிக்குது பாவம் அப்பா அன்று நான் கோவப்பட்டு இருக்க கூடாது என்று ..எம்மை காப்பதில் தான் அவரின் முழு கவனமும் இருக்கு என்று அப்பொழு…

  3. சாத்திரி ஒரு பேப்பரிற்காக மேஜர்..டொச்சன்.(கந்தசாமி.ஜெயக்குமார்)பிறப்பு.21.06.1966...வீரச்சாவு.24.11.1992 .............................................................. டொச்சன் காலை எழுந்து துலாவில் தண்ணீர் இழுத்து இறைக்க அவனது அம்மம்மா வழிந்தோடி வந்த தண்ணீரை தோட்டத்தின் வாழைப்பாத்திகளிற்கு மாற்றி விட்டுக்கொண்டிருந்தார்.ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் மணி சத்தம் கேட்டதும் அவசர அவசரமாக உணவை வாயில் அடைந்து விட்டு நேரமாச்சு அம்மம்மா நான் போறன் என்றபடி பாடசாலைக்கு புத்தகப் பையை தூக்கிக் கொண்டு வெகு வேகமாக வசாவிளான் மத்திய மகா வித்தியலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனிற்கு வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி இலுப்பைபை மரத்தை தாண்டும் போது…

  4. பொன்னம்மா அத்தையைத் தெரியாதவர் எம்மூரில் இல்லை. ஆனாலும் அவர் பற்றி விபரம் கேட்டால் யாருக்கும் சொல்லத்தெரிவதில்லை. உண்மையில் அவர் எனக்கு அத்தை கிடையாது. என் பெரியம்மாவின் கணவரின் தங்கை அவர். பெரியம்மாவின் பிள்ளைகள் அத்தை என்று கூப்பிடுவதனால் நாங்களும் அப்படியே கூப்பிட்டுப் பழகிவிட்டது. கூப்பிடுவது மட்டுமேயன்றி அவருக்கும் எமக்குமான நெருக்கமோ அன்பான பார்வையோ கூட என்றும் இருந்ததில்லை. என் வீட்டிலிருந்து இரண்டாவது வீடு அவர்களது எனினும் எண்ணிக்கை நினைவில் உள்ள நாட்களே நான் அங்கு செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்கள் வீடும் கூட ஒரு ஒதுக்குப்புறமாக இருந்ததும் வீட்டைச் சுற்றி யாரும் இனி வைத்தும் பார்க்க முடியாதவாறு சுற்றிவர மதிலும் இருந்ததாலுமோ என்னவோ நான் மட்டுமல்ல மற்றையவர்கள் கூ…

  5. 'என் தங்கை' நான் பிறக்கும் பொழுது என் அம்மா, அப்பா இருவரும் மிகவும் மகிழ்வாக இருந்தார்கள். நான் அவர்களின் முதல் பிள்ளை. அவர்களுக்கு ஆண் பிள்ளை என்றால் கொள்ளை ஆசை. இரண்டு பையன்கள் வீட்டிற்கு வேண்டும் என்பது அவர்களின் கனவு. நான் ஐந்து வயது கடந்தபின், இரண்டாவது பிள்ளைக்கு முயற்சி செய்தார்கள். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே, ...... " [அகநானூறு 12] எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி! இள…

  6. அக்காவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு இப்படி லட்டாக இனிக்கும் என அப்போது எனக்கு தெரித்திருக்க நியாயமில்லை.முடிந்தால் இன்று பின்னேரம் ஆறு மணியளவில் எனது வீட்டிற்கு வருகின்றாயா? இதுதான் தொலைபேசியில் அக்கா சொன்ன செய்தி. ஆறுமணியளவில் அக்கா வீட்டடிக்கு போக பார்கிங் லொட்டில் நாலு கார்கள் நிற்குது,அதைவிட வீதி ஓரங்களிலும் ஏழு எட்டு கார்கள் என்னடா இது அக்காவும் அம்பேயில சேர்ந்துவிட்டவோ என்று எண்ணியபடி போய் காலிங் பெல்லை அமத்தினால் அக்கா கதவை திறந்தபடி “ உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிக்கிறம் கீழுக்கு போ” என்று பேஸ்மெண்ட் படிகளை நோக்கி கையை காட்டுகின்றா கீழே போனால் சாரி,சுடிதார் ,பான்ட்ஸ்,பேமுடாஸ்,சோட்ஸ் என்று எல்லா வயசிலும் பொம்பிளைகள் கூட்டம்.. “இவர்தான் தம்…

  7. 'லங்கா சாறி' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நீலப்புடவை !. நெத்தியில் சின்னதாக ஒரு திருநீற்றுக் குறி ! தேங்காய் எண்ணெய் தடவி, எவ்வளவுக்குத் தலைமயிரை இழுக்கமுடியுமோ, அவ்வளவுக்கு இழுத்து முடிக்கப்பட்டதால்,பளிச்சென்று தெரியும் நெற்றி ! இவ்வளவு தான், காமாட்சியின் வெளித்தோற்றம்! அவளது முகத்தில், ஒரு சோகம் கலந்த ஏக்கம், எப்போதும் இழையோடிய படியிருக்கும். காமாட்சிக்கு ஒரு பத்துவயது மகள். மகளுக்குப் பெயர் கமலம். இவ்வளவும் தான் அவளது குடும்பம். அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும். காலையில் தோட்டக்காரர் வேலைக்குப் போகும் போது, காமாட்சியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள், வறண்டு, காய்ந்து போன, எரு வரட்டிகளைத் தடியால் அடித்து நொருக்கித் தூளாக்குவ…

  8. முதல் பயணம் பற்றி எழுத முன்பாக ஒரு சத்தியம்: இந்த சிறு பதிவையாவது முழுமையாக எழுதுவேன் என புங்கையூரன் மேல் சத்தியம் செய்து விட்டு ஆரம்பிக்கின்றேன் (என் அம்மா மேல கனக்க தரம் பொய் சத்தியம் செய்து இருக்கின்றேன். இப்ப அம்மாவுக்கு 73 வயதாகின்றது) முதல் பயணம். 2007 ஏப்ரலில் இலங்கையை விட்டு டுபாயிற்கு நான் புறப்படும் போது என் பாஸ்போர்ட்டில் கனடாவுக்கான தற்காலிக வதிவிட வீசாவும் குத்தப்பட்டு இருந்தது. அப்படி புறப்படும் காலத்தில் தான் இலங்கையில் கொழும்பிலும் நாடு எங்கிலும் தமிழர்கள் வீதி வீதியாக சுட்டுக் கொல்லப்பட்டும், காணாமல் போக்கடிக்கப்பட்டும் கொண்டு இருந்தார்கள். ஊடகவியலாளார்களும் முஸ்லிம் வியாபாரிகளும் கடத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மகிந்தவுக்கும் கோத்தாவுக…

  9. முனேறிபாய்தல் நடவடிக்கை மூலம் வட்டுக்கோட்டை , சங்கானை கரையோரமான யாழ்ப்பாணத்து ஆறு வழுக்கியின் கரை வரைக்கும் இராணுவம் முன்னேறி இருந்த போது புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் முறை அடிக்கும் சமருக்கு தலைவர் பிரதான கட்டளை இட்டு கொண்டு இருந்தார்... பால்ராஜ் அண்ணை, சொர்ணம் அண்ணை, பாணு அண்ணை அனைவரும் முன்களங்களின் நிண்றார்கள்.... நானும் இன்னும் 10 பேர் வரை சங்கானை சண்டிலிப்பாய் எல்லையில் இருந்த வயல் கரையோரம் இருந்த ஒரு வீதியும்( மானிப்பாய் வீதியாக இருக்க வேண்டும்) சின்ன மதகு கொண்ட எல்லை பிரதேசத்தை பிடிச்சு அதில் ஒரு பாதுகாப்பு அமைக்க சொல்லி வந்த சொர்ணம் அண்ணையின் கட்டளையை நிறைவேற்ற போன போது த்னது முதலாவது அரனை ஆயுதங்களோடு கைவிட்டு போட்டு இரண்டாவது அரணாக இருந்த ஒ…

  10. என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க , ஒன்று இல்லை வேலை வீடு பிள்ளைகள் படிப்பு என நாங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்தில் வாழ்த்து தொலைக்கிறது ,ஆனால் இப்ப உள்ள பொடியள் தாங்கள் நினைச்சதை செய்து கொண்டு குடும்பம் உறவு பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழுதுகள் ,எல்லாம் காலம் மாறி போனதால அல்லது உறவுகள் இடத்தில நெருக்கம் குறைச்சு போனதால என்று தான் எனக்கு விளங்கவில்லை ...... என்னத்த அண்ணே சொல்லுறது நாங்களா வந்து ஒரு பெட்டியில் விழுந்து போனம் ஏறவும் முடியாது வெளிய குதிக்கவும் முடியாது நாலு பக்கமும் மாறி மாறி நடக்கவேண்ட…

  11. Started by பகலவன்,

    எங்களை வரிசையாக நிற்க சொன்னார்கள். சேறு பூசிய எங்கள் உடம்பில் இடுப்பிற்கு கீழே மறைப்பதற்கான உள்ளாடையை தவிர எதுவுமே இல்லை. எந்த திசையை நோக்கி நிற்கிறோம் என்று கூட தெரியாமல் கண்கள் கட்டப்பட்டிருந்தன. வெறும் கால்களால் தடவியதில் நாங்கள் ஒரு சேற்று பகுதி நிறைந்த புற்தரையில் நிற்பதை உணர்ந்தேன். எங்களுக்கான வரிசைக்குப் பின்னே பெண்களை கண்கள் கட்டிய நிலையில் வரிசைப்படுத்தி இருந்தார்கள். அவர்களின் பரிதவிப்பான குரல்களும் அடுத்த நிலை தெரியாத தவிப்பும் அவர்களின் குரல்களில் ஒலித்தது மட்டும் காதுகளில் கேட்டு கொண்டிருந்தது. எங்களை வரிசைபடுத்தியவர்கள் யாரோ ஒருவரின் கட்டளைக்காக காத்திருப்பது மட்டும் புரிந்தது. அது அவர்களின் பொறுப்பாளனாகவோ அல்லது அவர்களின் தலைவனாக கூட இருக்கல…

  12. தந்தையுமானவன்.....! அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது. அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு …

  13. மாலை நேரச் சூரியன் மறையும் காட்சி அத்தனை அழகாய் இருந்தும் மதுவால் அதை இரசிக்க முடியவில்லை. பெரிய தோட்டத்துடனான வீடு. சமதரையாக இல்லாது மேடும் பள்ளமுமாக இருந்ததில் அதற்கேற்ற நிபுணர்களைக் கொண்டு காசைப் பார்க்காமல் வடிவமைத்ததில் எத்தனைத்தரம் பார்த்தாலும் சலிக்காத அழகுடன் அந்த வீட்டின் பின்பகுதியும் தோட்டமும் அழகாய் இருக்கும். வரும் நண்பர்கள் அதைப் பார்த்துப் பொறாமை கொண்டாலும்கூட வாய்விட்டு அதன் அழகைப் புழுகாமலும் போனதில்லை. நிபுணர்கள் ஒருதடவைதான் வந்து வடிவமைத்தார்கள். அதன்பின் அவளே சிலதை புதிதாக நட்டும் மாற்றியும் அமைத்திருக்கிறாள். ரோசாக் கன்றுகள் மட்டும் விவதவிதமாகப் பூத்துக் குலுங்குவதை எத்தனை தடவை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. மாதம் ஒரு தடவை ஒருவர் வந்து கத்த…

  14. "வாழாவெட்டி" இலங்கையின் யாழ்பாணத்தில் ஒரு அமைதியான கிராமத்தில் நன்முகை என்ற ஒரு இளம் பெண் கனவுகள் நிறைந்த இதயத்துடன் உயர் வகுப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஆசிரியர் ஆகும் எண்ணத்துடன் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று வந்தார். நவம்பர் 28, 2022 அன்று யாழ்பாணத்தை ஆண்ட இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் குடும்பப்படம் தேசிய கல்வியியற் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது. சங்கிலிய மன்னனின் குடும்பப்படத்தை சித்திரத்துறை மாணவ ஆசிரியர்களின் மூலம் கல்லூரியின் சித்திரத்துறை விரிவுரையாளர் நெறிப்படுத்தியிருந்தார். அதேவேளை கல்லூரியின் நுழைவாயிலில் தனிக்கருங்கல்லால் ஆன 13.5 அடி சங்கிலியன் உருவச்சிலை இருப்பதும் குறிப்பிடத் தக்கது. அன்று…

  15. "பொய் சாட்சி" ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக் கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம் தீவீரம் அடைந்த…

  16. கோழிமுட்டைக் கண்ணன்! அதுதான் பெருத்த முழிகொண்ட கணக்கு வாத்தியாரின் பட்டப்பெயர். இந்தப் பட்டப் பெயரை மாணவர்கள் அவருக்குச் சூட்டியிருப்பது வாத்தியாருக்கும் தெரியும். அதற்குப் பழிதீர்ப்பது போன்று, முட்டை முட்டையாகக் கணக்குகளை இடுவார்! நாங்கள்தான் அதனைப் பொரித்து குஞ்சைக் காட்டவேண்டும். கோழிகளுக்குக்கூட 21 நாட்கள் அவகாசமுண்டு! ஆனால் எங்களுக்கோ...! இரண்டொரு நொடிகளில் பொரித்து குஞ்சைக் காட்டவேண்டும்! சற்றுப் பிந்தினாலும் பென்சிலுக்கும் அவர் விரலுக்கும் இடையே அகப்படும் காதுமடல், அடுத்த நாள்வரை தொட முடியாதபடி வீங்கி வலிக்கும். அந்தப் பரிதவிப்பைப் பார்த்து அம்மாதான் எண்ணைபோட்டுத் தடவி ஒத்தணம் தந்து ஆறுதல்படுத்துவா. பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் நாங்கள் கிளித்தட்டோ, கிட்டிப்புள்ளோ…

  17. பத்தாவது தேறியதும். தொடரந்து படிப்பைத் தொடர்வதற்கு என் குடும்பப் பொருளாதாரம் இடம்தர மறுத்தது. விவசாயத் துறையில் பயின்று அதில் முன்னேற முயன்ற எனக்கு ஒரு கூட்டுத்தாபன ஆலையில் இயந்திரங்களை இயக்கும் வேலை. மாமாவின் சிபாரிசு மூலம் கிட்டியது. என் மகனும் உத்தியோகம் பார்க்கிறான்...! என்ற மகிழ்ச்சியும், பெருமையும் அம்மாவின் முகத்தில் பிரகாசித்தது. இவன் சாதகத்துக்கு தண்ணீர் வாய்காலைத் தாண்டும் யோகமும் இல்லை. ஆனையிறவையும் தாண்டமாட்டான்...! என்று அம்மாவுக்கு யோசியன் சொல்லிய அடுத்த மாதமே, ஆனையிறவோடு மகாவலி கங்கையையும் தாண்டி மட்டுநகர் சென்றுவிட்டேன். சமுத்திரமும் தாண்டிப் புலத்திற்கு வந்ததும், குழந்தைப் பாக்கியமே இல்லை என்ற யோசியத்தையும் மீறி மூன்றுக்கு மேல் வேண்டவே வேண்டாம் என்று கட்ட…

  18. நீர்க்கடன் --------------- கடற்கரையின் ஓரத்தில் கடலை பார்த்தபடி தீர்த்தமடம் இருக்கின்றது. ஊரில் மற்றும் அயல் ஊரில் இருக்கும் கோவில்கள் என்று எல்லாவற்றிலும் தீர்த்த திருவிழா என்றால் அது சமுத்திர தீர்த்தம் தான். தீர்த்தமடத்தின் கிழக்கே மிக அருகிலேயே அந்தியேட்டி மடம் இருக்கின்றது. பின்னர் ஒரு வீடு, ஒரு சின்ன வெறும் காணி, அதற்கப்பால் சுடலை இருக்கின்றது. தீர்த்தமடத்தின் மேற்கே ஒரு ஆலமரம், அதன் மேற்கே இன்னொரு அரைச்சுவர்கள் மற்றும் கூரையுடன் கூடிய ஒரு கட்டிடம். ஒரு புரோகிதர் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அன்று சித்ரா பௌர்ணமி. அம்மாவை இழந்தவர்கள் தங்களின் அம்மாக்களுக்கு அங்கே நீர்க்கடன் செய்ய வந்திருந்தனர். இதுவரை தங…

  19. http://www.shobasakthi.com/shobasakthi/?p=1354 இந்தக் கதையினை வாசித்துமுடித்தபோது, எனது மனதில் எழுந்த முதலாவது கேழ்வி 'மாயோள்' என்ற தலைப்பினை ஏன் சோபாசக்த்தி கதையின் தலைப்பாக இடவில்லை என்பதாவே இருந்தது. அத்தனை அருமையான பெயர் அது. சோபாவின் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமான ஒரு சொல்லில் ஒரு எழுத்தினை வேண்டுமென்றே மாற்றி, அது ஒரு விசித்திரமான பெயர், வெளியிடத்தில் இருந்து வந்திருந்தவளின் பெயரென்று ஒரு பெரும் நாவலையே அந்தச் சொல்லிற்குள்ளால் நடத்தி முடித்திருக்கிறார். இந்தக்கதையின் அடி ஆழம் அனைத்தும் அந்தச் சொல்லிற்குள் பொதிந்து கிடக்கிறது. இருந்தும் அதனைத் தலைப்பாக இடாது குழந்தை காயாவின் பெயரினை வைத்திருக்கிறார். யோசிக்கும் போது அதன் தேவை புரிகிறது. இப்பதிவின் கடைசிப் பந்திய…

    • 20 replies
    • 3.8k views
  20. "காதல் கடிதம்" காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! “என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனித்துவமான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து …

  21. "வெள்ளந்தி மனிதர்கள்" கள்ளங்கபடமற்ற அப்பாவியாக, வெள்ளந்தியாக அல்லது காலத்திற்கு ஏற்ற புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத, பழைய சம்பிரதாயங்களைக் கைவிடாத பழம்போக்கு கொண்டவர்களாக, பத்தாம்பசலியாக, அதிகமாக கிராம புறங்களில் வாழும் மக்கள் இருப்பதாக பலர் கூறுவதை கேள்விப்பட்டுள்ளேன். இன்றைய தொழில் நுட்ப வசதிகள் மற்றும் நவீன போக்குவரத்து வாய்ப்புகள் நிறைந்த உலகிலும் உண்மை நிலை இன்றும் இதுதானா? என்னை சிலநாளாக வாட்டும் கேள்வி இது! நான் பட்டணத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கேயே இப்ப வேலையும் செய்கிறேன். எனவே ஒரு சில நாளாவது கிராமத்தில் இருந்து உண்மையை அறிய வேண்டும் என்ற அவா உந்த, ஒருவாறு தற்காலிக இடமாற்றம் பெற்று இன்று, அந்த குக்கிராமத்துக்கு, …

  22. "நிலவே முகம் காட்டு .. " ஞாயிறு, செப்டம்பர் 23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது. பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" எனக் கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர். எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது, நான் உயர் வகுப்பு படிக்கும் கூலித் தொழிலாளியின் மகன். எங்கள் குடிசைக்கு கொஞ்சம் அருகில் தான், ஒரு மாட மாளிகையில் ஒரு கோடீஸ்வரர் வாழ்ந்து வாரார். அவர் குடும்பமும் தமது மொட்டை மாடியி…

  23. "என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை) மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின. அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்க…

  24. விடியக்காலமையும் அதுவுமாய்...காகமொன்று மாறி மாறிக் கத்திக்கொண்டிருந்தது! சனிக்கிழமையாவது கொஞ்சம் கண்ணயருவம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச காகம் விடுகுதில்லை என்று அலுத்துக் கொண்டார் அம்பலவாணர்! சனிக்கிழமை ஓய்வெடுக்கிற அளவுக்கு அம்பலத்தார் ஒண்டும் பெரிசா வெட்டிப் புடுங்கிறதில்லை எண்டாலும் மகளின்ர மூண்டு பேரப்பெடியளும் அவரைப் போட்டுப் படுத்திற பாடு கொஞ்ச நஞ்சமில்லை! இண்டைக்கு மகள் லீவில நிப்பாள்! அதால அவருக்குக் கொஞ்சம்ஓய்வு கிடைக்கிற நாள் தான் இந்தச் சனிக்கிழமை! அம்பலத்தாரின்ர மனுசியும் மற்ற மகளின்ர பிள்ளைப்பெறு பாக்கவெண்டு அவுஸ்திரேலியாவுக்குப் போனது… போனது தான்! மருமகன் வலு கெட்டிக்காரன்! என்னவோ பூந்து விளையாடி மனுசியை டெம்பறரி விசாவில அங்க நிக்க வைச்சிட்டான்! அம்…

  25. Started by pri,

    ஞாபகங்கள் ஒரு வகையில் விசித்திரமானவை. அண்மையில் நடந்த சம்பவமொன்று மறந்து போகிறது.கடைத்தெருவில் சந்திக்கிற மனிதர் ஒருவர் என்னை ஞாபகமிருக்கிறதா என கேட்கிறபோது அசடு வழியவேண்டிவருகிறது. எங்கேயோ பார்த்த முகம் போல இருக்கும். பெயர் நினைவுக்கு வராமல் அடம் பிடிக்கும். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் இப்போதும் அச்சொட்டாக ஞாபகத்தில் இருக்கிறது. பல நூறு மனிதர்களையும் சில ஆயிரம் சம்பவங்களையும் கடந்திருப்போம். சிலது ஒட்டிக்கொள்கிறது. சிலது தொலைந்து போகிறது. எது தொலையும் எது தங்கிநிற்கும் என்பதற்கு ஏதேனும் எளிய சூத்திரம் இருக்கிறதோ தெரியாது. இது இன்னும் மறையாமல் எங்கையோ ஓரமாக ஒட்டிக்கொண்டிருகிற இரண்டு பள்ளிகால கனவுகள் பற்றியது. சின்ன வயதில்…

    • 12 replies
    • 4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.