கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
656 topics in this forum
-
அதிகாலை ஐந்துமணிக்கு ஆறு நிமிடங்கள் இருக்கையில், எங்கள் அணி தாக்குதலுக்கான நகர்வை தொடங்கி இருந்தது. எங்கள் அணியில் மொத்தம் ஐந்து பேர் தான். இருட்டுக்குள் உருமறைபுக்காக கறுப்பு ரிஷேர்டும் கறுப்பு களுசானும் அணிந்திருந்தோம். நாங்கள் அவ்வளவு வெள்ளை இல்லை என்றாலும் வழக்கமான தாக்குதல் பாணிக்காக முகத்துக்கு கொஞ்சம் கரியும் தடவி இருந்தோம். மார்கழி மாத அதிகாலை பனி ஆட்களை கொல்லுமளவுக்கு குளிரும். நான் வடக்கு பக்கத்தில் இருந்து பனித்துளியுடன் கூடிய புற்களுக்கு நடுவாக இலக்கை நோக்கி நகர்ந்து இல்லை ஊர்ந்து கொண்டிருந்தேன். எங்களுக்குள் எந்த விதமான தொடர்பாடல்களும் இல்லை அதற்கான வசதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வயிற்றை நிலத்துடன் வைத்து முழங்கால்களினால் நகர்ந்து கொண்டிரு…
-
- 57 replies
- 8.6k views
- 1 follower
-
-
முற்றத்துக் கவிஞன் புதுவை இரத்தினதுரையின் முல்லைத்தீவு முற்றத்தில் ஒருநாள் நினைவில்....! ஊர்முற்றக்கவிஞன் புதுவையின் முற்றத்தில் கரைந்த இனிய பொழுதொன்று. எங்களோடு பகிடி விட்டு , எங்களோடு அரசியல் பேசி , எங்களோடு கவிதைபேசி , எங்களோடு ஒருவனாய் கவிஞனாய் வாழ்ந்து காலநதிக்கரையில் புதுவையென்ற பெயரை மட்டும் ஞாபகம் தந்துவிட்டுக் காணாமற்போன புதுவை இரத்தினதுரை இன்றில்லை. அந்தக் கலைஞனின் முற்றத்தில் கண்ணகையம்மன் உற்வச காலத்தில் நடந்த சந்திப்பின் நினைவோடு கரையும் நாட்களிது. 2003ஆண்டு சமாதான காலத்துச் சந்தோசங்களில் கலந்திருந்த பொழுது. வற்றாப்பளை கண்ணகையம்மனின் உற்சவ காலம். வன்னி நிலத்தின் பெரும்பகுதி மக்கள் மச்சம் தவிர்த்து கண்ணகைக்கு விரதமிருக்கும் மாதம். எங்கும் கண்ணகையின் கதைகளை…
-
- 13 replies
- 4.6k views
-
-
இரவு பெய்த மழை ஓய்வடைந்திருந்தாலும் சற்று தூறிக்கொண்டிருந்தது அந்த அதிகாலை வேளையில், ஆனால் எதிரியினால் வீசப்பட்ட எறிகணைகள் ஆங்காங்கே வெடிக்கும் சத்தத்துடன் மக்களின் அழுகுரல்களும் கேட்டுக் கொண்டேயிருந்தது. இரவு பெய்த மழையினால் பதுங்கு குழியினுள் நிரம்பியிருந்த மழைநீரினை வாளியினால் அள்ளி வெளியேற்றிக் கொண்டிருந்த வேளையில் அப்போது ஒரு எட்டு வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் வந்து எனது முகத்தைப் பார்த்து ஏதோ ஒன்றைக் கேட்பதற்கு முனைகிறான் என்பதை நான் புரிந்துகொண்டேன். அவன் கேட்கும் முன்பே நான் அவனைப் பார்த்து என்ன வேணும் தம்பி என்று கேட்டேன். அப்போதும் அவன் முகத்தில் கேட்பதற்கான ஒரு தயக்கம் தெரிந்தது. நான் மழை நீரை இறைத்துக் கொண்டிருந்த வாளியைக் காட்டி "மாமா அந்த வாளியைக…
-
- 10 replies
- 2.5k views
-
-
நீல நிற விழிகளை அசைத்து அந்த மனிதன் உணர்த்திய கணத்தில் ஆரம்பிக்கத் தொடங்கியது அவனது எஞ்சிய நாட்கள். நாக்கு உலர்ந்து வார்த்தைகள் வறண்டுவிட்ட அந்தக் காலத்தை மெல்லியதாகக் கிழித்து வெளியேற முயன்றான். அன்றையின் பின், எப்போதும் அந்த நீலக் கண்கள் பிடரிப் பக்கத்தில் படர்ந்திருப்பதைப் போல ஒரு கனம் அவனது மனதினில் இறுகத்தொடங்கியது. அவனால், எஞ்சியிருப்பது எவ்வகையான வாழ்வென்றே தஅனுமானிக்க முடியாதிருந்தது. பிடரியில் ஒட்டியிருப்பதான நீலநிற விழிகள் இரவுகளில், மரங்களில், சுவர்களில் அசைந்து கொண்டிருப்பது போலவும் பாம்பின் நாக்குப் போல அவ்வப்போது இடைவெட்டிக் கொள்வதாகவும் கண்டுகொண்டான். காற்பெருவிரல் நகத்திற்கும் தசைக்கும் இடையினாலான, இடைவெளியினூடாக ஊடுருவும் மெல்லிய குளிர் போ…
-
- 1 reply
- 1.6k views
-
-
அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன் நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின் வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது காதுகள் இருந்த இடம் தெரியவில்லை. நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம். கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம். அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தத…
-
- 25 replies
- 3.2k views
-
-
அந்த நாள் ஏன் விடிந்தது என்று இருந்தது ராணியம்மாவுக்கு... அதிகாலையிலேயே யுத்த தாங்கிகளின் ஓசையும் அந்த இடமெல்லாம் சுடுகாடாக்கும் வண்ணம் விழுந்த எறிகணைகளும் தான் ராணியம்மாவை துயில் எழுப்பின. ஐயோ ..ஆமி சுட்டு கொண்டு வாறான்..பதுங்கு குழிகளுக்குள் கைக்குண்டுகள் வீசி கொண்டு வாறான் என்ற செய்தி காற்றுடன் மக்களோடு கலந்தது.. மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்... ஆமி வரும் வரை ..பதுங்கு குழிக்குள் இருப்பம் என்ற கனவும் மண்ணாகி போனது அவர்களுக்கு... உண்டியல் சந்தியை அண்மித்த வடக்கு பக்கத்தில் இன்னும் புலிகள் தீரமுடன் போரிடும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது... கடற்கரை பக்கமாக வடக்கு ஆமியும் தெற்கு ஆமியும் இணைந்து மேற்கு பக்கமாக முன்னேறி வருவதையும் தடுத்தி நிறுத்தி புலிகள்…
-
- 6 replies
- 1.7k views
-
-
1998 ம் ஆண்டு, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை மூலம் வன்னிப்பெருநிலப்பரப்பைத் துண்டாடத் தீவிரமாகப் போர் தொடுத்துக் கொண்டிருந்தது சிங்களப்படை. மாங்குளச் சந்தியைக் கைப்பற்றுவதற்காகப் பல பகுதிகளால் புதிய போர் முனைகளைத் திறந்து முன்னேற முயற்சித்தது. மறுபுறம், புலியணியும் புதிய முனைகளில் முன்னேறிய இராணுவத்தின் மீது உக்கிரமான மறிப்புத் தாக்குதலை முன்னெடுத்தது. ஆனால், தினசரி வீரச்சாவும், காயப்பட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் சென்றதால், படையணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் காயப்பட்டு, காயம் ஆறி (முழுமையாகக் குணமடைவதற்கு முன்) களமுனைக்கு வந்து பணியாற்றியவர்கள் பலர். அதில் சிலர் வீரச்சாவடைந்து கூட இருக்கின்றனர். நிர்வாகத்திலிருந…
-
- 17 replies
- 1.9k views
-
-
மேமாத நினைவும் இருகண்களை இழந்த போராளியின் கதையும். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Sunday, May 19, 2013 தாயகத்தில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருந்த காலம் அது. 08.06.2003 மகளின் 5வது பிறந்தநாள். அந்தமுறைப் பிறந்தநாள் செஞ்சோலையில் காலையும் , மாலை காந்தரூபன் அறிவுச்சோலையிலும் , மதியம் நவம் அறிவுக்கூடத்தில் பல்துறை அறிவுசார் கற்கை நெறிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஊனமுற்ற போராளிகளோடும் அன்றைய பொழுதை செலவிடுவதென முடிவாகி காலை 8மணிக்கு வள்ளிபுனம் செஞ்சோலைக்குச் சென்று மதியம் 12மணிக்கு விசுவமடுவில் அமைந்துள்ள நவம் அறிவுக்கூடத்திற்குச் சென்றோம். ஏற்கனவே இருமுறை நவம் அறிவுக்கூடம் போயிருந்ததில் ஏற்பட்ட அறிமுகம் பல பாடகர்கள் , இசைக்கலைஞர்கள் , கவிஞர்கள் , எழுத்…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாங்கள் பார்த்து ரசித்த சினிமா பிரபலங்கள் பலர் எம்மிடமிருந்து விடை பெற்றுவிட்டனர்.அண்மையிலும் ஒரு இசை அமைப்பாளர் விடைபெற்றார்... வழமையாக இறந்தவர்களை மேலே போய்விட்டார்கள் என்று சொல்லுவோம்.அப்படி மேல போன திரை பிரபலங்கள் எப்படி உரையாடியிருப்பார்கள் என்ற ஒரு சிறு கற்பனை மட்டுமே...... அண்மையில் மேலோகம் போனவர் எம்.எஸ்.வி அவரை வரவேற்பதற்கு பல திரையுலக பிரமுகர்கள் பிரமாண்டமான முறையில் மேடை போட்டு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.பார்வையாளர்கள் பூமி பந்தில் தென்மண்டத்தில் வாழ்ந்து இப்ப மேலோகத்தில் வாழ்பவர்கள். பிரமாண்டமான ஒரு மேடையை, புலம்பெயர்ந்து மேற்கத்தைய நாடுகளில் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து மேலோகம் சென்றவர்கள் ஒழுங்கமைத்திருந்தனர். …
-
- 9 replies
- 3k views
-
-
உலர்த்திய மஞ்சள் சுடிதாரை காற்றிலே உதறிவிட்டு கயிற்றிலே தொங்கவிட்டு அது காற்றிலே அலையாமல் இருக்க இறுக்கியை அழுத்திவிட்டு, அடுத்த உடைக்காக கொஞ்சம் ஒதுக்கியபோது தான் அவள் முகம் எனக்கு தெரிந்தது. பெண்மைக்கு ஏற்ற உடல், குளித்த பின்னர் வடிவாக துவட்டாமல் அணிந்திருந்த ஆடைகள் சில இடங்களில் ஈரம் மிச்சம் இருந்ததை காட்டின எங்கள் மனசை போல. நீண்ட கரிய முடி, கொடியிலே கதிரை வைக்காமல் எட்டி துணிகளை காயவைக்க கூடிய அளவான உயரம். பிரம்மன் மற்றவர்களிடம் கொடுத்து படைக்காமல், தானே சிரத்தை எடுத்து படைத்த ஒரு அழகுப்பதுமை. கோயில் கோபுரத்திலே இருந்த சிலை உடைந்து கீழே விழுந்து விட்டதோ என்று அண்ணாந்து பார்க்க வைக்கும் ஒரு அழகு தேவதை. நான் வந்த நோக்கம், இலக்கு, கடமை, ஒழுக்கம் எல்லாவற்றைய…
-
- 17 replies
- 2.8k views
-
-
மொழியிழந்த முகம் -சுப.சோமசுந்தரம் களையிழந்த முகம் அல்லது ஒளியிழந்த முகம், புரிகிறது. அது என்ன மொழியிழந்த முகம்? முன்னது தானே சரியாகலாம் அல்லது எளிதில் சரி செய்யலாம். பின்னது கிட்டத்தட்ட உயிரிழந்த உடல் போல. இதயத் துடிப்பு நின்றபின் சிறிய கால அவகாசத்தில் உயிர்ப்பிப்பது போல் குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்ய முயலலாம் என்பது நம் எண்ணம். சரி, கதைக்கு வருவோம். நமது பரிதாபத்துக்குரிய கதாநாயகன் சுஷாந்த். அப்படித்தான் இவன் அப்பனும் ஆத்தாளும் பெயர் வைத்தார்கள். ஸ,ஷ,ஹ,ஜ இல்லாத பெயருக்குப் பரலோகத்தில் இடமில்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்கள். பெயர் முடிவில் sudden brake வேறு (ஆங்கி…
-
- 0 replies
- 3.3k views
- 1 follower
-
-
1989 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஒரு நாள். கோப்பாய் இந்திய இராணுவத்தின் முகாமுக்கு அந்தோணி அழைக்கப்படிருந்தான். அந்தோணி: காக்கை தீவிலே அல்லது நாவாந்துரையிலே மீன்களை வாங்கி பெட்டியில் கட்டி கொண்டு கொக்குவில், கோண்டாவில், உரும்பிராய், கோப்பாய், இராசபாதை வழியாக நீர்வேலி, சிறுபிட்டி, ஈவினை நவக்கிரி வரை கையிலே ஒரு ஊது குழலியை வைத்து, பா.. பாய்...ப் பாய் என்று ஊதியபடி அன்றாடம் மீன் வியாபாரம் செய்யும் ஒரு குடும்பசுமை மிக்க உழைப்பாளி. அது அவனது பிரதான தொழில், உப தொழிலாக இந்திய இராணுவத்தின் வருகைகளையும், பதுங்கி இருத்தல்களையும், அக்காச்சி தலைமையிலான கெரில்லா போராளிகளுக்கு சங்கேத மொழி மூலம் வழங்கி கொண்டிருந்தான். சில நாட்களில் அரக்குளா, சில நாட்களில் செவ்விளை, சில நாட…
-
- 34 replies
- 5.2k views
-
-
மௌனமான யுகங்கள் இன்பமான அதிர்ச்சியோடு தான் இந்த நாள் ஆரம்பித்தது, இன்னொரு புதிருக்கு விடை தரப்போவதும் தெரியாமலே! எதிர்பாராத விதமாக இன்று காலையில், அவசர அவசரமாக, எண்ணி ஒரு சில ஊழியர்களை மட்டும், அவர்கள் கடின உழைப்பை அங்கீகரித்து, பணி உயர்வு குறித்துப் பேச வேண்டும் என, முகாமைத்துவ அதிகாரி தனது அலுவலகத்துக்கு வருமாறு பணித்திருந்தார். அந்த ஒரு சிலரில் அவனும் ஒருவராக இருந்தான். அழைக்கப்பட்ட அனைவருமே நேர்மையான, கடின உழைப்பை விரும்புகின்ற ஊழியர்களாக இருந்தது அங்கு தொழில் புரிகின்ற அனைவருக்கும் தெளிவாகவே தெரிந்தாலும் எப்படி இவர்களைத் தெரிவு செய்தார்கள், யார் இவர்களைக் கண்காணித்தார்கள், எப்படி இது சாத்தியமாயிற்று என்பதெல்லாம் தெரியாத, புரியாத புதிராகவே இருந்தது. …
-
- 6 replies
- 1.8k views
-
-
வேலை முடிந்து வழமையாக வீடு செல்லும் பாதையால் பராக்கு பாாத்த படி சென்று கொன்டிருந்த வாசனை வணக்கம் என்ற ஒரு பெண் குரல் இடை மறித்தது.நிமிர்ந்து பார்த்தவன் தானும் ஒரு வணக்கத்தை உதிர்த்து விட்டு நடையை தொடர்ந்தவனை உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும் என்ற வாாத்தை தடுத்தது. நின்றவன் ஒரு கணம் தாறுமாறாய் குழம்பி தெளிந்தான் .அது வேறுயாரும் இல்லை அவனது நன்பன் கரனின் மனைவி தான்.குழப்பத்துக்கு காரணம் வழமையாக வணக்கத்துடன் போறவா இன்று கதைக்க வேணும் என்று சொன்னது தான்.தான் அவாகளிடம் கடணாக வாங்கிய பணம் ஞாபகம் வர தெளிந்தான். ஓம் சொல்லுங்கோ அக்கா என்றவன் தவனைசொல்வதற்க்குஅவசரமாக வசதியான திகதியை தேடிக்கொன்டிருந்தான்.வாசன் நீங்கள் அந்தக்காசை கரனிடம் கொடுக்க வேண்டாம் என்னிடம் தாங்கோ அதைய…
-
- 22 replies
- 3.4k views
-
-
அவர் ஒரு ஆபிரிக்க செனகல் நாட்டைச்சேர்ந்த வயதான பெண். அடிக்கடி கடைக்கு வருவார். நிறைப்பணம் செலவளிப்பார். ஊருக்கும் அனுப்புவார். கனக்க பைல்கள் கொண்டு வந்து போட்டோக்கொப்பி எடுத்து பல இடங்களுக்கும் அனுப்புவார். பைல்கள் முறையாக அடுக்கப்பட்டு அதற்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்டு இருக்கும். எழுதப்படிக்கத்தெரியாத அவரது இந்தத்திறமையைக்கண்டு நான் பிரமித்ததுண்டு. எழுதப்படிக்கத்தெரியாததால் என்னிடம் விலாசங்களை எழுதித்தரும்படி கேட்பார். அதில் பிள்ளைகளின் படிப்பு மற்றும் சொத்துக்கள் சம்பந்தமானதும் விவாகரத்து மற்றும் முறைப்பாடுகள் சார்ந்த அமைச்சுக்களின் விலாசங்களும் இருக்கும். ஒருநாள் கனநேரமாக தொலைபேசியில் அழுதபடியிருந்தார். என்னுடனும் …
-
- 5 replies
- 2.5k views
-
-
மச்சான் டி சொல்லு இதில போட்டு டக்கென்று வாறன் என்று சொல்லியபடி கைபேசியின் திரையில் கைகளை அழுத்தியபடி நடந்தான் ரமேஸ் ,உள் மனதில் இன்றாவது அரைவாசி தந்தால் நல்லது வாங்கி அப்படியே அனுப்பி போடலாம் அப்பாக்கு வேற ஒப்ரேஷன் இருக்கு ,முதல் மாறிய வட்டி காசு வேற கொடுக்க வில்லை திரும்பியும் கேட்டால் எப்படி தருவீனம் என எண்ணிக்கொண்டு வேகமா நடந்தான் இரயில் நிலையம் நோக்கி ....... இவன் என்னடா வேலை முடிய வாடா ஊருக்கு காசு போடணும் என்னிடம் விஸா இல்லை நீதான் போட்டு தரனும் என்று சொல்லிப்போட்டு ,டி சொல்லு வாறன் எண்டுட்டு எங்க போறான் இவன் என தனக்குள் கடுப்பாகியபடி நகுலன் வீதியை அலுப்பா பார்த்தான் ,வரட்டும் வரவிட்டு டி குடிப்பம் இப்ப வெளியில நிப்பம் ஏரியாவில் என்ன நடக்கு எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று. அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்; “கற்கும்போதே இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்… ஒன்று கலவி மற்றொன்று காளிதாசனின் கவிதை….” “காளிதாசனின் கவிதை இளமையான வயது கெட்டியான எருமைத் தயிர் சர்க்கரை சேர்த்த பால் மானின் மாமிசம் அழகிய பெண் துணை என் ஒவ…
-
- 0 replies
- 2.8k views
-
-
யார் சொல்லுவார்? சமீபத்தில்(25.03.2018) யாழின் கருத்துக்களத்தில் நவீனன் தரவிட்டிருந்த இணைப்பின் தலையங்கம் ஒன்று, பழைய நினைவொன்றை என்னுள் மீட்டிப்பார்க்க வைத்தது. “பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்” என்பதே அந்தத் தலையங்கம். 83, 84 ஆண்டு காலங்களே அதிகமான தமிழர்கள் யேர்மனிக்கு புலம் பெயர்ந்த காலங்களாக இருந்ததன. ஈழத் தமிழர்களுக்கு வடக்குத்தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, பல ஈழத்தமிழர்கள் யேர்மனியின் வட திசை சார்ந்த மாநிலமான Nordrhein-Westfalen இலேயே அப்பொழுது தங்கிக் கொண்டார்கள். புலம் பெயர்ந்து வந்த போதும் தாங்கள் சார்ந்த போராட்டக்குழுக்களை யேர்மனியில் காலூன்ற வைப்பதற்கு அவற்றின் அபிமானிகள் அன்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இதில் தெற்கு யேர்மனியில்…
-
- 9 replies
- 3k views
-
-
உறவுகளே இந்தத் திரியில் உங்கள் கருத்துக்களை வையுங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&hl=
-
- 256 replies
- 22.7k views
-
-
பதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும். நிலாவும் அப்படித்தான். பேரழகி என்று கூற முடியாவிட்டாலும் கடந்து போகும் ஆண்கள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்க்காது செல்ல முடியாது. அவளூரில் மிதியுந்தில் செல்பவர்கள் மிகச் சிலரே. அதிலும் அவள் மிதியுந்தில் செல்லும் வேகம் பார்த்து ஆண்களே, டேய் தள்ளி நில்லுங்கடா என…
-
- 55 replies
- 26.6k views
-
-
சில காலமாய் இந்தப் பதிவு ஒரு கேள்வியாக உள்ளிற்குள் துருத்திக்கொண்டிருந்தது. ஆனால் எழுதிப்போடும் அழவிற்கு அது துருத்தவில்லை அதனால் எழுதவில்லை. நேற்று poetன் தலைப்பொன்றைப் படித்தபோது அதில் அத்தலைப்புச் சார்ந்து பொயட் முன் வைத்திருந்த ஒரு கெஞ்சுதலும் அதற்கான நிழலியின் எதிர்வினையும் படித்தபோது, உள்ளிற்குள் முன்னிற்கு வந்து குந்தியிருந்த கேள்வி, கண்ணடித்தது. அதனால் இந்தப் பதிவு. 'கைதட்டலிற்கு ஆசைப்படாத கலைஞன் இல்லை' என்ற வாக்கு ஓரளவிற்கு நமக்குப் பரிட்சயமாகிவிட்டதால் அது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளவும் பட்டுவிட்டது. பரிட்சயமான அபத்தங்கள் கூட அபத்தங்களாகத் தொடர்வதில்லை. ஆனால், கைதட்டல் குறியாக எழுகின்ற படைப்பில் ஓட்டைகளை எப்போதும் கண்டடைய முடியும். காரணம், அவை வலிந்த உருவாக்கங்க…
-
- 9 replies
- 1.6k views
-
-
கணனித் திரையில் தனது அம்மாவைப் பார்த்து என் மனைவி கதைத்தபோது, நாளை நான் இருப்பேனா இல்லையோ என்ற அவரின் வயதிற்கேற்ற கூற்று என்மனைவியை ஆதங்கப்படுத்தியதில் வியப்பில்லை. அந்த ஆதங்கம் 90 வயதைத் தொடும் தனது அம்மாவைக் காணவேண்டும் என்ற தவிப்பை மேலோங்கச் செய்தது. தாய்தந்தையரை இழந்துவிட்ட எனக்கும் என் மாமிதான் தாயாக விளங்கினார். மனைவி துன்பப்பட்டால் தீர்த்துவைப்பேன் என்று திருமணத்தின்போது அய்யருக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்து, கூடவே விடுமுறையும் வரவே, துணைவியையும் அழைத்துக்கொண்டு பிறந்தமண்ணுக்குப் பறந்தேன். விடிந்ததும் எழுந்து யாழில் செய்திகள் பார்த்துக் கருத்துக்களும் எழுதும் எனக்கு இனிச் சிலவாரங்கள் அது முடியாதே என்ற கவலை எழுந்தது. கைத்தொலைபேசி பாவிக்கவும் தயக…
-
- 67 replies
- 9.9k views
-
-
விடியக்காலமையும் அதுவுமாய்...காகமொன்று மாறி மாறிக் கத்திக்கொண்டிருந்தது! சனிக்கிழமையாவது கொஞ்சம் கண்ணயருவம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச காகம் விடுகுதில்லை என்று அலுத்துக் கொண்டார் அம்பலவாணர்! சனிக்கிழமை ஓய்வெடுக்கிற அளவுக்கு அம்பலத்தார் ஒண்டும் பெரிசா வெட்டிப் புடுங்கிறதில்லை எண்டாலும் மகளின்ர மூண்டு பேரப்பெடியளும் அவரைப் போட்டுப் படுத்திற பாடு கொஞ்ச நஞ்சமில்லை! இண்டைக்கு மகள் லீவில நிப்பாள்! அதால அவருக்குக் கொஞ்சம்ஓய்வு கிடைக்கிற நாள் தான் இந்தச் சனிக்கிழமை! அம்பலத்தாரின்ர மனுசியும் மற்ற மகளின்ர பிள்ளைப்பெறு பாக்கவெண்டு அவுஸ்திரேலியாவுக்குப் போனது… போனது தான்! மருமகன் வலு கெட்டிக்காரன்! என்னவோ பூந்து விளையாடி மனுசியை டெம்பறரி விசாவில அங்க நிக்க வைச்சிட்டான்! அம்…
-
- 24 replies
- 4.9k views
-
-
எனக்கு லண்டன் நிலக்கீழ்த்தொடருந்தில் பயணம் செய்வதுதான் பிடிக்கவே பிடிக்காத விடயம். ஆனாலும் சிலவேளைகளில் பயணம் செய்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம். ஏறிக் கொஞ்ச நேரத்திலேயே பார்த்தவற்றை மீண்டும் மீண்டும் பார்ப்பதனால் தூக்கமும் விரைவில் வந்துவிடும். இதற்கு முன்னொருமுறை பயணம் செய்தபோது தூக்கம் எப்படித்தான் என்னைத் தழுவியதோ கண்விழித்துப் பார்த்தபோது நான் இறங்கவேண்டிய இடம் கடந்து பதினைந்து நிமிடம் ஆகியிருந்தது. பிறகென்ன அடுத்த தரிப்பிடத்தில் இறங்கி மற்றத் தொடருந்து பிடித்து வீடுவந்து சேர ஒரு மணிநேரம் தாமதம். இன்று தூங்காது எப்பிடியாவது சரியான நேரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மனதுள் தீர்மானித்தபடி சுற்றுமுற்றும் பார்க்கிறேன். பலர் செய்தித்தாள்களில் மூழ்கிப்போய் உள்ளனர். ஒர…
-
- 42 replies
- 4k views
-
-
சம்மருக்கு பீச்சுக்கு போகவேணும் என்பது எங்கன்ட சனத்தின்ட அட்டவணையில் ஒன்று அதற்கு அவனும் விதிவிலக்கல்ல. "அப்பா வீக்கென்ட சரியான நெருப்பு வெய்யிலாம்" "ஏசி யை போட்டு வீட்டுக்குள்ள இருக்கவேண்டியதுதான்,ஒரு இடமும் போகதேவையில்லை" "அது எங்களுக்கு தெரியும் அப்பா, வி வோன்ட் டு கொ டு பீச்" " அங்க சரியான சனமாயிருக்கும் அதுக்குள்ள போய் கார் பார்க் பன்ணுறதெல்லாம் கஸ்ரம்" "கொஞ்சம் எர்லியாக போனால் கார்பார்க் கிடைக்கும்" "உந்த கொழுத்திறவெய்யிலுக்குள்ள போய் கறுத்து போவியளடி" "அதற்கு சன்கீறிம் பூசிக்கொண்டுபோகலாம் ,அப்பா உங்களுக்கு சுவிம் பண்ணதெரியாதபடியால் சும்மா லெம் எஸ்கியுஸ்களை சொல்லாதையுங்கோ" "எனக்கு சுவிம் பண்ணதெரியாதோ! நிலாவரையில் டைவ் அடிச்சனெ…
-
- 15 replies
- 3.9k views
-