கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
அமுதா.. எணேய் பிள்ளை எழும்பணை ராசாத்தி பள்ளிக்குடத்துக்குப் போகவேணுமெல்லே இன்னும் என்ன படுக்கை வேண்டிக்கிடக்கு, கெதியா எழும்பணை. ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்.. காலங்காத்தாலையே புலம்ப ஆரம்பிச்சிட்டியேம்மா, போங்கோ போய் அப்பாவை வரச் சொல்லுங்கோ எப்ப உங்கண்டை முகத்திலை முழிச்சனான் இண்டைக்கு புதுசா எழும்ப .. அப்பாவை வரச்சொல்லணை. எத்தனை நாளைக்குத்தான் இப்படி அப்பா முகத்திலை முழிக்கப் போறியோ, குமரா விட்டாய் கலியாணம் கட்டி போற இடத்திலை என்ன பாடுபடப்போறியோ... என்னங்க, உங்கண்டை ஆசை மகள் கூப்பிடுறாள் போங்கோ நான் ஏதும் சாப்பாடு தேடவேணும், பாவம் அவள் பசி இருக்க மாட்டாள், அப்படியே உவன் மதனையும் எழுப்பி விடுங்கோ பள்ளிக்குடம் போற பஞ்சியிலை படுத்திருக்கிறான். கணபதிப்பிள்ளை,சரஸ்வதியின் மூத்த மகள் அ…
-
- 17 replies
- 2.7k views
-
-
வசந்திக்குத் தன்னை நினைக்கவே ஆயாசமாக இருந்தது. நாடோடிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இங்கு புலம்பெயர்ந்து வந்தும் அப்படியானவர்களைப் பார்த்துமிருக்கிறாள். ஆனால் அவர்கள் வாழ்வு எப்படியும் தன்னதைவிட மேன்மையானதுதான் என்பதில் அவளுக்கு எள்ளளவும் சந்தேகம் இருக்கவில்லை. எம் சமூகக் கட்டமைப்பா என் வாழ்வை இந்த அளவுக்குக் கொண்டுவந்தது. சமூகத்திடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமூகம் எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றையும் தன்னதாக்க, தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன எல்லாம் செய்கிறது என எண்ணியவள், சமூகத்துக்குப் பயந்ததனால் மட்டும்தானா நான் இத்தனையும் சகித்துக் கொண்டு இத்தனைநாள் வாழ்கிறேன்??என தனக்குள் கேட்டுக் கொண்டாள். அதுமட்டும் காரணமில்லை என்பதும் அவளுக்குத் தெரி…
-
- 239 replies
- 17.5k views
-
-
“அப்பா சுபி போன் பண்ணினவா நாளைக்கு புது வீட்டில பாட்டியாம் ” வேலையில்இருக்கும் எனக்கு மத்தியான சாப்பாட்டு நேரம் ஒருக்கா போன் பண்ணாவிட்டால் மனுசிக்கு பொச்சம் தீராது.கடந்த இருபதுவருடங்களாக இதற்கு மாத்திரம் குறைச்சல் இல்லை.விஷயம் எதுவாகவும் இருக்கலாம்.மாமிக்கு சுகமில்லை ,சின்னவன் படிக்கிறானில்லை,சூப்பர் சிங்கர் இந்த முறை சரியில்லை ,சமைக்க பச்சை மிளகாய் இல்லை இப்படி ஏதாவது உப்பு சப்பில்லாத விடயத்துடன் போன் அடித்து இரண்டு வார்த்தை கதைத்துவிட்டு மனுசி போனை வைத்துவிடுவார். .”சரி என்னவாம்” என கேட்டேன். “பாட்டி என்ற பெயரில புது வீட்டை ஆட்களுக்கு காட்ட போறா போல” “அதில என்ன பிழை, இப்ப எல்லாரும் செய்கினம் தானே, இது அவர்கள் மிக ஸ்பெசலாக காணி வாங்கி கட்டிய வீடு அதை நாலு…
-
- 39 replies
- 5.4k views
-
-
எங்கட கதை பெரிசா சுவாரசியமாய் இருக்காது.நாங்கள் மூன்று பேர் ஒன்றாய் ஒரு அறையில தங்கியிருக்கிறம். இலங்கையில இருந்து இன்னொரு ஆசிய நாட்டுக்கு வந்து கப்பலுக்கு கொஞ்சக்காசைக் கட்டிட்டு ஆறு மாதமாய் பார்த்துக்கொண்டிருக்கிறம்.ஒ எங்களைப்பற்றி சொல்ல மறந்திட்டன்.நான் வன்னியில கொஞ்சக்காலம் ஊடகத்தில வேலை செய்தனான் என்றதைவிட சொல்ல ஒன்றுமில்லை.மாத்தளனில குடும்பத்தோட ஆமியின்ர பகுதிக்கு வந்திட்டன்.மற்றது டாவின் அவன் சங்கானைப் பெடியன்.அவன் எங்களுக்குள்ள வசதியான ஆள் .தமையன் இரண்டு பேர் வெளியால இருக்கிறாங்கள்.அவன் கொம்புயுட்டர் படிச்சவன்.அவன்ர லப் டொப்பில தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறன். அடுத்தது மோகன் அவன் பதினாலு வருஷம் இயக்கத்தில இருந்து இரண்டு வருஷம் புனர்வாழ்வுல இருந்தவன்.அ…
-
- 133 replies
- 10.9k views
-
-
என் விழியே......... என்று ஆரம்பித்த அந்த கடிதத்தின் ஆரம்ப வரிகளை வாசித்தபோது அவளின் மனதில் இருந்து எழுந்த மெல்லிய நடுக்கம் உடலெங்கும் பரவி பெருமூச்சாக வெளிவந்தது. கடிதம் முழுவதையும் வாசிக்கவேண்டும் போலவும், அப்படியே அந்த கடிதத்தை கண்களில் வைத்து சத்தமிட்டு அழவேண்டும் போலவும் இருந்தது ரேவதிக்கு. தன்னுணர்வில்லாமல் கடிதம் கிடந்த அந்த கொப்பியை மூடியவள், ஒரு உந்துதலால் கொப்பியின் முதல் பக்கத்தை திறந்து பார்த்தாள். "மறத்தல் கொடுமையானது அதிலும் கொடுமையானது மறந்தது போல நடிப்பது" என அவளின் கையெழுத்தில் எழுதப்பட்டு இருந்தது. தனக்கு மட்டும் கேட்கக்கூடியவாறு அந்த வரிகளை வாசித்தவளுக்கு, முகத்தில் அறைந்தது போல இருந்தது அந்த வரிகள். அறையின் புழுக்கமும், ப…
-
- 3 replies
- 1k views
-
-
மரணம் கொன்ற மாவீரர்களின் அப்பா. அப்பாவை அன்புச்சோலை முதியோர் இல்லத்தில் சமாதான காலத்தில் சந்தித்தேன். மகள் என்று சொல்லி தனது இருப்பிடம் பிள்ளைகளின் படங்களையெல்லாம் காட்டினார். எனது பிள்ளைகளை தன்னோடு கூட்டிச்சென்று தனது உணவிலிருந்து பங்கு கொடுத்தார். அன்புச்சோலையில் இருந்த பல அப்பாக்கள் அம்மாக்களில் அந்த அப்பாவும் ஒருவர். தலைவரிடம் கவுரவம் பெற்ற படமொன்றை தன்னோடு வைத்திருந்தார். அன்புச்சோலைக்கு பொறுப்பாயிருந்த டிஸ்கோ அண்ணா அங்கிருந்த பலரது சோகக்கதைகளை கதைகதையாகச் சொன்னார். அன்புச்சோலையை விட்டு வெளியேறும் போது பலரது பாசத்தையும் சுமந்து கொண்டே திரும்பினேன். யுத்தம் முடிந்து அனாதைகளான பலரைத் தேடியது போல அன்புச்சோலையின் அம்மாக்களை அப்பாக்களையும் தேடினேன். வவுனிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
3மாவீரர்களை நாட்டுக்குத் தந்த அப்பாவின் இன்றைய வறுமை. சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, April 20, 2013 comments (0) ஐயாவின் வாழ்க்கை இன்று ஒற்றைக் கட்டிலுக்குள் அடங்கிவிட்டது. 3ஆண்பிள்ளைகளும் 3பெண் பிள்ளைகளுமாக ஆறுபிள்ளைகளைப் பெற்று வாழ்ந்த வாழ்க்கையின் கடந்த காலத்தை எண்ணினால் அது பெரும் துயர் சூழ்ந்த காலம் தான். இப்போது தானொரு சுமையாகிப் போனேன் என்ற இயலாமைதான் மனசை உறுத்திக் கொண்டிருக்கிறது. ஐயா ஒரு கடற்தொழிலாளி. ஊரில் ஐயாவும் கடற்தொழிலால் முன்னேறி மற்றவர்களுக்கு ஒரு காலம் அள்ளிக் கொடுக்கும் கையாகத்தான் இருந்தார். மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்வு ஐயாவின் குடும்பம் அனுபவித்ததும் ஒரு காலம். ஐயாவின் மூத்த ஆண்மகனை கடலில் வைத்து இலங்கை இராணுவ கடற்படை என்…
-
- 10 replies
- 2.7k views
-
-
ஆபிரிக்காவில் பசியிருக்கும் ஈழப்போராளியின் குழந்தைகள். சாந்தி ரமேஷ் வவுனியன் அவன் ஒரு கடற்புலிப்போராளி. அவனொரு திறமையான சண்டைக்காரன். அவனொரு சிறந்த படகோட்டி , அவனொரு சிறந்த கலைஞன் , நடிகன்....! இப்படித்தான் அவனைப்பற்றிய அறிதல் இருந்தது. 2009 முடிவுகளின் பின்னர் நாட்டைவிட்டுத் தப்பிவிட ஆயிரக்கணக்கில் நேசித்த தாயகத்தைவிட்டு வெளியேறவும் அவர்களது குடும்பங்களையும் குழந்தைகளையும் காப்பாற்றவும் வேண்டிய கட்டாயத்தில் இந்தியா , இந்தோனேசியா ,மலேசியா என கடல்கடக்கத் துணிந்தார்கள். எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சமென புதிய புதிய வெளிநாடனுப்பும் முகவர்கள் பாதிக்கப்பட்ட போராளிகளை அணுகினார்கள். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் பல அழைப்புக்கள். துறைசார்ந்த நட்புகள் தொடக்கம் பல …
-
- 5 replies
- 1.5k views
-
-
ஆனந்தபுரம் நினைவும் அவலவாழ்வின் கதையும். Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Saturday, April 6, 2013 அக்கா ஒருக்கா இந்த நம்பருக்கு எடுங்களன்....! 28.03.2013 முதல் ஒரு தொலைபேசியழைப்பு ஒருமுறை ஒலிப்பதும் பின்னர் தொடர்பு அறுபடுவதுமாக 03.04.2013 மதியம் வரை இந்த அழைப்பு வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. கடந்த ஏழுநாட்களில் அதிகாலையில் எழுப்பும் அழைப்பும் இதுவாகவே இருந்தது. இப்போதெல்லாம் ஒரு அழைப்பு வந்தால் முன்பு போல அடித்துப்பிடித்து உடனடியாக எடுப்பதில்லை. தொடர்ந்து துயர்களைக் கேட்கிற தாங்கு சக்தி இப்போது இல்லாது போய்க்கொண்டிருக்கிறது. அதுவோ என்னவோ புதிய அழைப்புகள் என்றால் பயம் தொற்றிவிடுகிறது. கையில் எதுவும் இல்லாமல் உதவிகள் என்று வருகிறவர்களுக்கான மாற்று வழியை…
-
- 43 replies
- 5.6k views
-
-
இன்றைய சூழலில் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பாக கோடை காலக் களியாட்டங்களில் செய்யக் கூடிய (செய்ய வேண்டிய மாற்றங்கள்) மாற்றங்கள் தாயக மக்களின் அவல வாழ்க்கைக்கு ஆற்ற வேண்டிய பணிகள் என்பவை குறித்த என் மன ஆதங்கங்களை ஏதோ ஒரு படைப்பு மூலம் வெளிக் கொணர வேண்டும் என நினைத்தேன். அந்த எழுத்து வடிவம் குறித்து ஒரு குழப்பகரமான சூழலில் ஒரு நாடக வடிவில் இதனை வெளிக்கொணர முயற்சிக்கிறேன். நாடகப் பிரதிகளை எழுதுவது குறித்த எந்தவிதமான அனுபமும் எனக்கு இல்லை என்பதால் இது குறித்த உங்கள் விமர்சனங்களை தவறாது முன்வையுங்கள். குறிப்பாக நாடகப் பிரதிகளை எழுதுவதில் அனுபவமுள்ள பலரும் இங்கிருக்கிறீர்கள். எனவே உங்கள் விமர்சனங்கள் என்னைப் புடம் போட்டுக் கொள்ள பெரிதும் உதவும்.. அத்துடன் சர…
-
- 39 replies
- 3k views
-
-
நிலவு குளிர்சியாக இல்லை வானத்து முகில்களைக் கிழித்துக்கொண்டு ஜானவியை தாங்கிய அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.இன்னும் சிறு மணிகளில் தனது மகள் மைதிலியையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்கும் சந்தோசம் அவள் முகமெங்கும் பொங்கி வழிந்தது. ஆனாலும் காலையில் எழுந்த களைப்பும் முதுமை தந்த அசதியும், நித்திரை அவளை தன் பிடியில் சுலபமாகவே கொண்டுவந்தது. ஜானவி ஊரின் பிரபல மகளிர் கல்லூரி ஒன்றின் இளைப்பாறிய அதிபர். அவளது கணவரோ பிரபல கண்வைத்திய நிபுணராக இருந்து பத்து வருடங்களுக்கு முதல் காலமாகிவிட்டார். கணவரின் இழப்பை ஜானவியால் ஜீரணிக்க முடியவில்லை. கணவர் உயிருடன் இருந்தபொழுதே தனது ஒரே மகளான மைதிலியை பிரான்சில் இருந்த அவர்களது நண்பர் ஒருவரின் மகனுக்குக் கலியாணம் செய்து வைத்து விட்டா…
-
- 14 replies
- 1.5k views
-
-
பகுதி-1 வணக்கம் உறவுகளே.. நீண்டநாட்களின் பின்னர் ஒரு பதிவு போட வேண்டும் என்ற உந்துதலில், அண்மையில் மேற்கொண்ட பயணம் குறித்த சில சுவாரசியமான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று இதை எழுதுகிறேன். பத்து நாள் போட்டு வந்து பயணக்கட்டுரை எழுதுறான் என்று பகிடி விடக்கூடாது, ஏழுமலை,ஏழுகடல் தாண்டி .. என்ற புராணக்கதைகள் போல கடல் கடந்து காதலி.......சே.../மனைவியுடன் ஒரு சந்திப்பு என்ற வகைக்குள் அடக்குகிறேன். ஒரு சில சம்பவங்கள் யாரையும் காயப்படுத்தும், அவமதிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை அப்படி ஏதும் யாரையும் புண்படுத்தி இருக்குமாயின் முன்கூட்டியே அதற்காய் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். ****************************************************************************…
-
- 276 replies
- 24.5k views
- 1 follower
-
-
'லங்கா சாறி' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நீலப்புடவை !. நெத்தியில் சின்னதாக ஒரு திருநீற்றுக் குறி ! தேங்காய் எண்ணெய் தடவி, எவ்வளவுக்குத் தலைமயிரை இழுக்கமுடியுமோ, அவ்வளவுக்கு இழுத்து முடிக்கப்பட்டதால்,பளிச்சென்று தெரியும் நெற்றி ! இவ்வளவு தான், காமாட்சியின் வெளித்தோற்றம்! அவளது முகத்தில், ஒரு சோகம் கலந்த ஏக்கம், எப்போதும் இழையோடிய படியிருக்கும். காமாட்சிக்கு ஒரு பத்துவயது மகள். மகளுக்குப் பெயர் கமலம். இவ்வளவும் தான் அவளது குடும்பம். அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும். காலையில் தோட்டக்காரர் வேலைக்குப் போகும் போது, காமாட்சியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வார்கள், வறண்டு, காய்ந்து போன, எரு வரட்டிகளைத் தடியால் அடித்து நொருக்கித் தூளாக்குவ…
-
- 26 replies
- 4.2k views
-
-
அழகான அலங்காரத்துடன், உதட்டோரம் புன்னகை மாறாமல், அமைதியாக தூங்கும் தேவதையாக அவள். அவனைப் பார்க்கின்றாள். அவளையே பார்த்தபடி நின்றவனின் இறுகிய முகத்தில் ஏதோ தேடுகிறாள். இறுதி நிமிடங்கள், இப்போதாவது ஒரு வார்த்தை கணவனாக வாய்விட்டுச்சொல்வாயா? இத்தனை வருடங்கள் நீ எனக்குச் காட்ட மறந்த காதலை, நட்பை, சொல்லமறந்த நன்றிகளை, கேட்க மறுத்த மன்னிப்புகளை..... கடைசித் துளிகள், கைகள் நடுங்க, இதயம் கனக்க, அவன் அந்தப் பொத்தானை அழுத்துகிறான். காதலின்றி, நட்பின்றி, வாழாத வாழ்கையை வாழ்ந்த வலியுடன் அவள் காற்றில் கரைந்து காணாமல்ப் போய்விட்டாள். இதோ மனசுக்குள் மட்டும் அவன் நேசித்த(?) அவளை, ஒரு பிடியாக்கி மின்சாரம் கைகளில் தர, முதல் முறைய…
-
- 15 replies
- 2.1k views
-
-
சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள். அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார். " ம்..." நீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வந்தது. 'அப்பா செத்து ஐந்து வருடமாச்சு' தனக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் நினைவுகளில் மீண்டும் புதைந்துகொண்டாள் அவளை அ…
-
- 5 replies
- 1.3k views
-
-
சாந்தினிக்கு இப்போதெல்லாம் அடிக்கடி தூக்கம் வருகிறது. இரவில் பலநாட்கள் படுத்ததும் தூங்கிவிடுகிறாள். காலையில் அடித்துப் போட்டது போல் இருக்கும். ஆனாலும் காலையில் மணிக்கூடு அலறும் சத்தம் காதைத் துளைக்க எழும்பியே தீரவேண்டும் என்னும் கட்டாயத்தால் எழுகிறாள். அதன்பின் பல் துலக்கி, பால் காய்ச்சி, கணவனுக்குக் கோப்பி போட்டு, பிள்ளைகளுக்கு பால்த்தேநீர் போட்டு தானும் குடித்துவிட்டு, ஒவ்வொருவராக மூன்று பிள்ளைகளையும் எழுப்பி வெளிக்கிடுத்தி, அவர்களை காலை உணவு உண்ணச் செய்து, தேநீரைக் குடிக்கச் செய்து, பாடசாலையில் விட்டுவிட்டு வருவதற்கிடையில் வாழ்க்கை வெறுத்துவிடும். கணவன் செந்தில் ஒருநாளும் கட்டிலை விட்டு அசைய மாட்டான். எத்தனையோ தரம் கேட்டும் பயனில்லை. காதலித்து மணந்திருந்தாலாவது ஒர…
-
- 61 replies
- 6.9k views
-
-
சனிக்கிழமை காலை பத்துமணிஇருக்கும் தொலைபேசி அடிக்கின்றது. வேலை இடத்து தொலைபேசி இலக்கம் தொலைபேசியில் மின்னுகின்றது.வேலை சற்று பிசி எனவே வாரவிடுமுறைக்கு ஓவர்டைம் செய்ய வருவதாக மனேஜரிடம் சொல்லிஇருந்தேன் .சனி காலை நித்திரையால் எழும்ப கொஞ்சம் பஞ்சியாக இருந்தது, மனைவி தானும் சனிகாலை சொப்பிங் செல்ல வருவதாக நண்பிக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டதாக சொன்னார் .இனியென்ன மெல்ல கட் அடிப்பம் என்று சின்ன மகனுடன் கட்டிபிடித்துக்கொண்டு தூங்கிவிட்டேன். இப்ப மனேஜர் போன் அடிக்கின்றான் என்ன பொய்யை சொல்வம் என்று நினைத்தபடியே ரிசீவரை எடுக்கின்றேன் “Hi Perry, Darrell here . ஏன் இன்று வேலைக்கு வரவில்லை ,செய்தி கேள்விப்பட்டாயா” என்கின்றான் . “நான் மனேஜர் பிரையன் என்று நினைத்து பயந்துவி…
-
- 12 replies
- 1.7k views
-
-
மலர்ந்தும் மலராத…………………… அதிகாலைவேளை இருளும் வெளிச்சமும் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன. பனிப்புகாரும் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தது. அந்த விசாலமான வீட்டில் அமைதியின் ஆட்சி அட்டகாசமாக இருந்தது .அந்த விசாலமான படுக்கையிலே நிவேதிதா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் . அவளது உருள்கின்ற கண்கள அவள் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றாள் என்பதைத் தெளிவாகவே காட்டியது . அவளது அறையின் பரந்த ஜன்னல்களின் அருகே நான்கைந்து சிட்டுக்குருவிகளின் கிலுகிலுப்பு அவளை நிஜ உலகத்திற்குக் கொண்டு வந்தது . கண்ணை மூடிக்கொண்டு அவளையறியாது அவளது கைகள் நரேனைத் தேடிப் படுக்கையில் துளாவியது. நித்திரையில் இருந்தவளை எழுப்பாது இதமான முத்தத…
-
-
- 31 replies
- 4.4k views
-
-
அக்காவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு இப்படி லட்டாக இனிக்கும் என அப்போது எனக்கு தெரித்திருக்க நியாயமில்லை.முடிந்தால் இன்று பின்னேரம் ஆறு மணியளவில் எனது வீட்டிற்கு வருகின்றாயா? இதுதான் தொலைபேசியில் அக்கா சொன்ன செய்தி. ஆறுமணியளவில் அக்கா வீட்டடிக்கு போக பார்கிங் லொட்டில் நாலு கார்கள் நிற்குது,அதைவிட வீதி ஓரங்களிலும் ஏழு எட்டு கார்கள் என்னடா இது அக்காவும் அம்பேயில சேர்ந்துவிட்டவோ என்று எண்ணியபடி போய் காலிங் பெல்லை அமத்தினால் அக்கா கதவை திறந்தபடி “ உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிக்கிறம் கீழுக்கு போ” என்று பேஸ்மெண்ட் படிகளை நோக்கி கையை காட்டுகின்றா கீழே போனால் சாரி,சுடிதார் ,பான்ட்ஸ்,பேமுடாஸ்,சோட்ஸ் என்று எல்லா வயசிலும் பொம்பிளைகள் கூட்டம்.. “இவர்தான் தம்…
-
-
- 37 replies
- 4k views
-
-
அது ஒரு தனியார் கல்வி நிறுவனம். நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். முதல் வாங்கில் இருக்கும் கூட்டத்தில் நானும் அடக்கம். வாத்தியார்மார் முன்னுக்கு இருகிற படிக்கிற பிள்ளையள் என்று ஒரு நல்லெண்ணத்தில இருக்க, நாங்கள் நசுக்கிடாமல் நல்லாச்சுத்து மாத்து விடுவம். தமிழ் படிப்பித்த ஆசிரியை திடீர் என்று நின்று விட்டார். அன்று புதுசாக யாரோ தமிழுக்கு வரபோகினம் என்று எல்லாருக்கும் டென்சன். அதிபருடன் மெல்லிதாக கருப்பாக கிட்டத்தட்ட நடிகர் நாகேஷ் கருப்பாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவர். இவர்தான் இனி உங்கள் தமிழ் ஆசிரியர் என்று அறிமுகம் செய்து விட்டு அதிபர் போய்விட்டார். வந்த உடனே "வேற்றுமை " என்று கரும்பலகையில் எழுதி விட்டு முதலாம் வேற்றுமையில் தொடங்கி முழங்கத…
-
-
- 14 replies
- 2.9k views
-
-
அப்பா போன்” மகனிடம் இருந்து போனை வாங்குகின்றேன். “அண்ணை நான் இங்கு பீட்டர்” “பீட்டர் “ “அண்ணை கொம்பனியில இருந்த காரைநகர் பீட்டர் “ “டேய் எப்படி இருக்கின்றாய்? எங்க இருக்கின்றாய்?” “ அண்ணை நான் கனடா வந்து ஒட்டாவில் படித்துமுடித்துவிட்டு இப்ப டெக்ஸ்சசில் வேலை எடுத்து போய்விட்டன், நீங்கள் எப்படி இருக்கின்றீங்கள் அண்ணை ? ஒட்டாவாவில் இருக்கும் போது நீங்கள் அயன்சின் அக்காவை கலியாணம் கட்டி டொராண்டோவில் இருப்பதாக கேள்விப்பட்டனான் .பிள்ளைகள் இருக்கா அண்ணை?” “ இரண்டு பெடியங்கள்,வளர்ந்துவிட்டார்கள் .இப்ப என்ன இருந்தா போல என்ரை நினைவு” “போன மாதம் டொராண்டோவிற்கு ஒரு செத்த வீட்டிற்கு வந்தனான் ,அங்கு நந்தனை கண்டனான் ,அப்ப பழைய கொம்பனி கதைகள் கதைக்கும் போது உங்க…
-
-
- 43 replies
- 5.7k views
-
-
குறிப்பு. பாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன. பாம்பு “க்வ்”………. முனகலும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஈனசுரத்தில் எழுந்து அடங்கியது குரல். அடிவயிற்றைக் கைகளால் அழுத்தியபடி இருண்ட கொட்டிலுக்குள் அவ்வுருவம் சுருண்டு விழுந்தது. அந்தக்கரையில் இருந்த திடீர் தேனீர் கடையின் முன்னால் டிரம்மில் கிடந்த தண்ணீரில் சேறாகிய பஞ்சாபியைக் கழுவிக் கொண்டாள் சுபாங்கி. ஈரம் சொட்டச்சொட்ட பஞ்சாபி உடலோடு ஒட்டியது. சிறு குடிலான திடீர் த…
-
-
- 60 replies
- 9.3k views
-