ஆசாமி

எங்கட கதை

Recommended Posts

ம் ....தொடருங்கோ

Share this post

Link to post
Share on other sites

நான் எப்ப ஆசாமி ஆனேன் என்ற கதையையும் உங்களுக்கு சொல்லோனும் .
நான் வன்னியில ஒரு ஊடகத்தில வேலை செய்தனான்.மனம் நிறைவான வேலை .ஊடகத்தின்ர முக்கிய வேலைகளை பொறுப்பாளர் (போராளி)தான் செய்வார்.நாங்கள் அவர்கள் சொல்லுற வேலையைத்தான் செய்வோம்.அவர்களிட்டதான் அந்த அர்ப்பணிப்பும் இருந்தது.2008 ஆம் ஆண்டோட எங்கட வேலை முடிஞ்சுது.கடைசி போர்க்காலத்தில நாங்கள் பங்கர்களுக்குள்ள ஒளிச்சிருந்தம்.எந்த மக்கள் பணிகளிலையோ ,களப் பணிகளிலையோ ஈடுபடவில்லை.அது முழுப்பிழைதான். எனது பெற்றோர் வயதுபோனவர்கள்.அவர்களையும் பார்க்கவேண்டி இருந்தது. எனது மனநிலையும் துடிப்பாக இருக்கவில்லை.என்னைப்போல் பல ஊடகர்கள் பங்கருக்குள் ஒளித்திருந்தபடி வெட்டிப்பேச்சோடு  காலம் போயிற்று.ஆனால் உண்மையானவர்கள் மக்கள் பணியிலோ/களப் பணியிலோ இருந்தார்கள்.எங்களைப்போல் சில போராளிகளும் பங்கர்களுக்குள் ஒளித்து இருந்தார்கள்.அது வேறுகதை.உண்மைப்போராளிகள் யார்?போலிகள் யார்? என்று அறியக்கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான்.மாத்தளனை ஆமி பிடிக்கும் போது
நானும்/நாங்களும் ஆமி பகுதிக்குப் போனோம்.எப்பொழுது புலிகளின் நிர்வாகம் இருக்கும் போது நான் எதிரியின் பகுதிக்குள் போனேனோ அப்போதே நான் ஆசாமிதான்.எங்களை தூற்றாதீர்கள் . எங்களிடம் அந்தளவு அர்ப்பணிப்பு இல்லை.  உண்மை இல்லை.
 
தொடரும்        

உங்களை யாரும் தூற்றும்  நிலையில் நீங்கள் இல்லை. 

மனிதர்கள் எல்லோரும்  உயிருக்கு ஆபத்து வரும்  சந்தர்பத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வது யதார்த்தமே .
அதைக் கூட பிழை என்று நினைத்து மனம் வருந்துவது, உங்கள் நல்ல மனதையே காட்டுகிறது .
 
நீங்கள் எட்டப்பன் வேலை பார்க்கவில்லையே. பின்னர் என்ன குற்ற  உணர்வு ? 

Share this post

Link to post
Share on other sites

போராட்டத்தில சில குடும்பங்கள் சரியாய் பாதிக்கப்பட்டுப் போக,சில குடும்பங்கள் ஆதாயமும் அடைஞ்சிட்டினம்.ஊரில எங்கட வீட்டிற்கு கிட்ட ஒரு குடும்பம் இருக்குது.அந்த குடும்பத்தில மூன்று பிள்ளைகள் .ஒருவன் மாவீரன் ஒருவன் இறுதி யுத்தத்திற்கு பிறகு எங்கைஎன்றே தெரியாது ஒருவன் சில காலம் போராளியாய் இருந்து சாதாரண வாழ்க்கை வாழ்பவன். அந்த வீட்டு ஐயாவிட்ட மட்டும் நான் வெளி நாட்டுக்குப் போறதை சொன்னனான்.மற்றப்படி என்ற அம்மாவிற்கு மட்டும்தான் தெரியும் நான் நாட்டைவிட்டு வெளிக்கிடுவது.அதே நேரம் எங்கட ஊர் கிராம சேவையாளர் அவருக்கும் மூன்று பிள்ளைகள் அவை மூன்று பேரும் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள்.அவை கொழும்பில்தான் வேலை செய்வினம்.  கிராம சேவையாளர் முந்தி புலிகளின்ர கை ஆள் இப்ப அரசுக்கு சேவகம் செய்யும் அடிவருடிகளுக்கு சேவகம் செய்யிறார்.அவங்கள் வாழ்ந்திடுவாங்கள்.

இயக்கம் இல்லாததால பல குடும்பங்கள் சரியாய் கஷ்டப்படுகுதுகள் .இயக்கம் எவ்வளவு ஆட்களை பராமரிச்சது. எல்லாரும் நினைப்பினம் இயக்கம் தனிய போராடினது மட்டும்தான் என்று.ஆனால் அவையின்ர நிருவனங்களில எத்தனை ஆயிரம் பேர் வேலைசெயதவை.அந்தந்த நாட்களில சம்பளம் வரும்.

தொடரும் 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

நான் எப்ப ஆசாமி ஆனேன் என்ற கதையையும் உங்களுக்கு சொல்லோனும் .
நான் வன்னியில ஒரு ஊடகத்தில வேலை செய்தனான்.மனம் நிறைவான வேலை .ஊடகத்தின்ர முக்கிய வேலைகளை பொறுப்பாளர் (போராளி)தான் செய்வார்.நாங்கள் அவர்கள் சொல்லுற வேலையைத்தான் செய்வோம்.அவர்களிட்டதான் அந்த அர்ப்பணிப்பும் இருந்தது.2008 ஆம் ஆண்டோட எங்கட வேலை முடிஞ்சுது.கடைசி போர்க்காலத்தில நாங்கள் பங்கர்களுக்குள்ள ஒளிச்சிருந்தம்.எந்த மக்கள் பணிகளிலையோ ,களப் பணிகளிலையோ ஈடுபடவில்லை.அது முழுப்பிழைதான். எனது பெற்றோர் வயதுபோனவர்கள்.அவர்களையும் பார்க்கவேண்டி இருந்தது. எனது மனநிலையும் துடிப்பாக இருக்கவில்லை.என்னைப்போல் பல ஊடகர்கள் பங்கருக்குள் ஒளித்திருந்தபடி வெட்டிப்பேச்சோடு  காலம் போயிற்று.ஆனால் உண்மையானவர்கள் மக்கள் பணியிலோ/களப் பணியிலோ இருந்தார்கள்.எங்களைப்போல் சில போராளிகளும் பங்கர்களுக்குள் ஒளித்து இருந்தார்கள்.அது வேறுகதை.உண்மைப்போராளிகள் யார்?போலிகள் யார்? என்று அறியக்கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான்.மாத்தளனை ஆமி பிடிக்கும் போது
நானும்/நாங்களும் ஆமி பகுதிக்குப் போனோம்.எப்பொழுது புலிகளின் நிர்வாகம் இருக்கும் போது நான் எதிரியின் பகுதிக்குள் போனேனோ அப்போதே நான் ஆசாமிதான்.எங்களை தூற்றாதீர்கள் . எங்களிடம் அந்தளவு அர்ப்பணிப்பு இல்லை.  உண்மை இல்லை.
 
தொடரும்        

நீங்கள் இறுதி வரை தாய் மண்ணில் இருந்ததை இட்டுப் பெருமையடைகின்றேன். 

தொடருங்கள் வாசிக்க ஆவல்!

Share this post

Link to post
Share on other sites

ஆசாமி,

உங்கள் கதையை இன்று வாசித்தேன். நீங்கள் கூறும்கதையை கேட்கும்போது வாழ்க்கையில் பல முடிவுகளை சுயமாகவே தீர்மானித்து எடுத்துள்ளீர்கள் என்று தெரிகின்றது. எனவே, அனுதாபங்களோ அறிவுரைகளோ கூறமுடியவில்லை. ஆனால், உங்கள் பயணத்தில் சுகத்தையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற எனது பிரார்த்தனைகள். 

Share this post

Link to post
Share on other sites

உங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். பல அறியாத விடயங்களை , உங்கள் வலிகளை  அறிய முடிகிறது. 

Share this post

Link to post
Share on other sites

எத்தனை ஆயிரம் மக்கள் வலியோடும் வேதனைகளோடும் வாழ்ந்துகொண்டு இருக்கும் பொழுது .. என்னை போல பல பேர் சௌகர்யத்தோடு வாழ்வதை நினைத்து வெட்கி தலை குனிகிறேன் ....  

விரைவில் நல்ல  விடியல் உங்கள் வாழ்வில் வர பிரதிகிறேன் ....

Share this post

Link to post
Share on other sites
என்னை டாவின் கேட்டான் புலிகள் ஏன் தோற்றவை? நான் சொன்னேன் என்னைமாதிரி ஆட்களாலைதான் புலிகள் தோற்றவை.புலிகள் ஆளணி காணாததால்த்தான் சாவகச்சேரியை பிடிச்சும் யாழ்ப்பாணத்தை பிடிக்கேலாமல் போனது.சமாதான காலத்தில வடக்கு கிழக்கு எல்லாம் பிரச்சாரம் செய்தும் எத்தனை பேர் போராளியாய் இணைந்தவை?
போராளியாய் வாழ்வது அவ்வளவு இலகுவானது இல்லை அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு தெரிய பலர் உண்மைப்போராளியாய் கடைசிவரை வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு ஈடு இணையாய் வேறு மனிதரை காணவில்லை. 
 
மோகன் ஒரு நல்ல முன்னாள் போராளி.முள்ளிவாய்க்கால் இறுதியில் இயக்கம் போராளிகளை சுயமாய் முடிவெடுக்கச்சொன்னது.  அதன்படி இராணுவ வளையத்திற்குள் போனான் / போனார்கள்.இயக்கம் ஒழுங்குபடுத்தி நிற்க விருப்பமான ஆட்களை வைச்சு ஒரு முழுச் சண்டையை பிடிச்சிருக்கலாம்.ஒழுங்கு படுத்தாமல் விட்டுட்டுது என்று சொல்பவன். அண்ணை  சனங்களின்ர இழப்பை   விரும்பி இருக்க மாட்டார் என்றும் அவனே சொல்கிறான்.
 
தொடரும்  

Share this post

Link to post
Share on other sites

என்னத்தைச் சொல்லுறதெண்டே தெரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகலில் உண்மை இருப்பது மட்டும் தெரிகிறது. தொடருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

என்னத்தைச் சொல்லுறதெண்டே தெரியவில்லை. ஆனால் உங்கள் வார்த்தைகலில் உண்மை இருப்பது மட்டும் தெரிகிறது. தொடருங்கள்.

உண்மையைச் சொல்லுவதால் தொடர்ந்து வாசிக்க ஆவலாக உள்ளது.

என்னை டாவின் கேட்டான் புலிகள் ஏன் தோற்றவை? நான் சொன்னேன் என்னைமாதிரி ஆட்களாலைதான் புலிகள் தோற்றவை.புலிகள் ஆளணி காணாததால்த்தான் சாவகச்சேரியை பிடிச்சும் யாழ்ப்பாணத்தை பிடிக்கேலாமல் போனது.சமாதான காலத்தில வடக்கு கிழக்கு எல்லாம் பிரச்சாரம் செய்தும் எத்தனை பேர் போராளியாய் இணைந்தவை?
போராளியாய் வாழ்வது அவ்வளவு இலகுவானது இல்லை அதையும் ஏற்றுக்கொள்கிறேன்.எனக்கு தெரிய பலர் உண்மைப்போராளியாய் கடைசிவரை வாழ்ந்தார்கள் .அவர்களுக்கு ஈடு இணையாய் வேறு மனிதரை காணவில்லை. 
 
மோகன் ஒரு நல்ல முன்னாள் போராளி.முள்ளிவாய்க்கால் இறுதியில் இயக்கம் போராளிகளை சுயமாய் முடிவெடுக்கச்சொன்னது.  அதன்படி இராணுவ வளையத்திற்குள் போனான் / போனார்கள்.இயக்கம் ஒழுங்குபடுத்தி நிற்க விருப்பமான ஆட்களை வைச்சு ஒரு முழுச் சண்டையை பிடிச்சிருக்கலாம்.ஒழுங்கு படுத்தாமல் விட்டுட்டுது என்று சொல்பவன். அண்ணை  சனங்களின்ர இழப்பை   விரும்பி இருக்க மாட்டார் என்றும் அவனே சொல்கிறான்.
 
தொடரும்  

நீங்கள் உண்மையையை ஒத்துக் கொள்ளுகின்றீர்கள் ஆசாமி. 

Share this post

Link to post
Share on other sites

எங்கட வீட்டில நானும் அண்ணையும் தான். அண்ணா ஓயாத அலைகள் இரண்டில வீரச்சாவு அடைஞ்சிட்டான்.நான் தான் ஐயாவையும் அம்மாவையும் பார்க்கோணும்.ஐயாவும் மீள் குடியேறி கொஞ்ச நாளில இறந்திட்டார்.அதாலதான் புலிகள் கஷ்டப்படுற நேரத்தில உதவேலாமல் போயிற்று.அண்ணா சொல்லுறவன் கொஞ்ச ஆட்கள் இயக்கத்திற்கு சேர்ந்தால் இரவிலாவது கொஞ்சம் கூட நித்திரை கொள்ளலாம் என்று.போராட்டம் என்று வெளிக்கிடையிக்க அநேக சனங்கள் ஆதரவு தந்ததுகள்.அதுகளாலையும் ஒரு அளவுக்கு மேல என்ன செய்யமுடியும்?.   யாரிலையும் பிழை கண்டு பிடிக்க ஏலாது.நாங்கள் சிறிய இனம்.மற்ற நாடுகளின்ர நலனுக்கு எங்களை விட்டுக்கொடுக்க தன் மானம் விடயில்லை.  

போர் என்றால் கரடு முரடான பாதைதான். புலிகள் வெற்றி பெறயிக்க  சாமரம் வீசின என்னைப்போன்ற பலர்.ஆபத்தான நேரத்தில கைகொடுக்காமல் கைவிட்டிட்டம். அண்ணா சொல்லுவான் உதவி செய்யிறதெண்டால் தேவையான நேரத்தில செய்யோணும்.அந்த நேரத்தில ஒன்றும் செய்யேலாமல் போயிற்று.இப்ப இருக்கிற மனநிலை அப்ப இருக்கயில்லை. புலிகள் யுத்த நிறுத்தம் கேட்டவை ஆனால் அது சாத்தியப்படயில்லை. சரியான சாப்பாடு இல்லாமல் ஆராலதான் என்ன செய்யமுடியும்?
 
தொடரும் 
  • Like 2

Share this post

Link to post
Share on other sites

உண்மைதான் ஆசாமி தேவையான நேரத்தில வேண்டியது கிடைச்சிருந்தா எங்கட நிலைமை இப்பிடி இருந்திருக்காதுதான்.

Share this post

Link to post
Share on other sites

நாங்களெல்லாம் வெளி நாடு வராமல் அங்கிருந்து போராடி இருந்தால் ..........

Share this post

Link to post
Share on other sites

புலிகள் தோற்றதற்க்கு பல காரணகளைச் சொல்லலாம்.இதில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பங்கு முக்கியமானது. புலிகளின் கடல் வழி வழங்கலைத் தடுத்ததில் அமெரிக்காவும், இந்தியாவும் முக்கிய பங்கை ஆற்றின.சி|றிலங்காவிற்கு ஆயுதங்களை சீனா பாக்கிஸ்தான் வழங்கின. உங்கள் பதிவு முக்கியமானது.ஆனால் இதில் அங்கு இனி இல்லையென்ற துயரை அனுபவித்த மக்களையோ போராளிகளையோ நாம் தவறு சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தினூடாக புலிகளின் தோல்விக்கான அனைத்து நிலமைகளும் தோற்றுவிக்கப்பட்டன.

உங்களிடம் எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, இயக்கத் தலமை ஏன் இது நிகழ்வதை அவதானிக்கவில்லை? எதிரி மிகப் பலவீனமான நிலையில் இருக்கும் போது, குறிப்பாக சந்திரிகா ரணிலின் ஆட்சியைக் கலைத்த போது, புலிகள் திருகோணமலையக் குறி வைத்து தாக்குதல்களை ஆரம்பித்து இருந்தால் , இத் தகைய பாரிய பின் அடைவையும் அழிவையும் சந்தித்திருக்க முடியாது அல்லவா? இது சர்வதேச சக்திகளிடம் புலிகளின் பேரம் பேசும் வலுவை இன்னும் அதீகரித்திருக்கும். சிறிலங்கா அரசிற்கான சர்வதேச அனுசரணைகளை இது இடை நிறுத்தி இருக்கும்.

அவர்களை பிழையாக வழி நடாத்தியவர்கள் யார் என்னும் கேள்விக்கு ,உங்களுக்கு பதில் தெரிந்து இருந்தால் விளக்கவும்.இந்தக் கேள்விக்கு இது வரை எவரும் சரியான விளக்கம் தந்ததில்லை.

பதில் தரவல்ல திரு,நிலாந்தன்  போன்றோர் இதுவரை எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை.

Share this post

Link to post
Share on other sites

இந்தத் தலைப்பே ஒரு தனிக்கதையா போய்க்கிட்டு இருக்குது ஆசாமி.

எங்கள் மத்தியில் (யாழ் களம் உட்பட) உள்ள பல்வேறு மனிதர்களை இனங்காட்டும் ஒரு கதை உங்களின் கதைக்கு சமாந்திரமா இங்க ஓடிக்கிட்டு இருக்குது..!

வாழ்த்தோ.. தொடருங்கவோ சொல்ல முடியவில்லை. உங்கள் கஸ்டத்தில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்து கொண்டு.. ஓசில அட்வைசும்.. கதையும் படிக்கும்..  சராசரி மனிதனாக இருந்து கொண்டு.. embarrassing.. என்னை நினைக்க எனக்கே அவமானமா இருக்குது..! :(:rolleyes:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
இலங்கையைப் பொருத்தவரை நாங்கள் சிறுபான்மை இனம். நாங்கள் போராட வெளிக்கிட்டதே ஒரு வெற்றிதான்.எங்கட போராட்டம் எந்த நாட்டிலையும் தங்கியிருக்கவில்லை.புலம் பெயர் உறவுகளின் உழைப்பில்தான் மிளிர்ந்தது.ஆய்வாளர்களுக்கு எம் போராட்டம் ராஜதந்திரம் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் றால் போட்டு சுறா பிடிக்கும் உதவி நாடுகளால் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்காது.கிணறு வெட்ட பூதம் தான் வரும்.எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இத்தனை நாடுகளுக்கும் நடுவில் தமிழன் அரசாண்ட வரலாறு  என்றும் நிலைத்திருக்கும்.எதையும் யாரும் கதைக்கலாம் செய்துகாட்ட முடியாது.
தாயகமானால் என்ன புலமானால் என்ன எமது மக்களில் மூன்றில் ஒன்றுதான் ஏதோ ஒரு விதத்தில் போராட்ட பங்காளிகளாய் இருந்தனர்.இது மிகவும் கவலையானது.எமது பலத்தையே ஒன்றாக்க முடியவில்லை.இதுவும் இனத்தின் துயர்தான்.
போராட்ட வளர்ச்சி துரோகங்களால் சாண் ஏற முலம் சறுக்கிற்று.
 
தொடரும் 
  • Like 3

Share this post

Link to post
Share on other sites
எங்களுக்கு நாளையைப்பற்றி பெரிய கவலை இல்லை. நாங்கள் கடந்து வந்த பாதையை பார்க்கைக்க இப்ப நல்லா இருக்கிறமாதிரி நினைவு.எங்களுக்கு இன்னும் ஐந்து மாத விசா இருக்கு.அதுக்குள்ள
ஒரு ஒழுங்குக்கு வரலாம்.இரண்டு நேரம் சாப்பிடுறம் அதில ஒரு நேரம் பெரிய சாப்பாடு.அதை மூன்று பேரும் ஒன்றாய் இருந்துதான் சாப்பிடுவம்.எங்கட மண்ணில எத்தனையோ பேருக்கு அங்கங்கள் இல்லை.எங்களுக்கு என்ன குறை? எங்களுட்ட ஐ நா பதிவு துண்டு வைச்சிருக்கிறம்.அதால சிறிலங்காவுக்கு எங்கள அனுப்ப இயலாது என்று நம்புறம்.இங்கையும் சைவக்கோயில் இருக்கு.எல்லா இடமும் சுத்தித்திரிவம். அதோட என்ன வேலையும் ( நேர்மையான) செய்ய தயாராய் இருக்கிறம்.இங்க மொழி ஒரு பெரிய பிரச்சனை.
 
அந்த மொழி பழகிறது சாதாரணம்...நிங்..சொங்..சாம்..சிப் எண்டு தொடங்குங்கோ

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கோ ஆசாமி. நல்லதே நடக்கும் உங்களுக்கு என்று நம்பிக்கையோடு இருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

தொடருங்கோ ஆசாமி, உங்கள் பயணம் இனிதே நிறைவேறும்! 

Share this post

Link to post
Share on other sites

உங்கட கதையை தொடர்ந்து வாசிச்சுக்கொண்டு வாறன்.

உங்கட நிலையை என்னால் மிக நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது.

 ஏனென்றால்...நானும் இவற்றையெல்லாம் கடந்து வந்தவன்தான். இலக்கை அடையும்வரை என்ன நடக்கும் என்று சொல்ல இயலாது.

துணிந்தவனுக்கு எல்லாமே துரும்புதான்.

தங்களின் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.

Share this post

Link to post
Share on other sites
கடந்த புதன் கிழமை ஒரு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு நானும் மோகனும் போயிருந்தோம்.அது ஒரு கிறிஸ்தவ நிறுவனம் . அந்நிறுவனம் ஐ நா பதிவுள்ள அகதிகளுக்கு மாதாமாதம் சிறு தொகை பணமும் சில பொருட்களும் தருவார்கள்.நாங்கள் அதை பெற போயிருந்தோம்.   அங்கு எமது நாட்டு அம்மா ஒருவரையும் தற்செயலாய் சந்தித்தோம்.அந்த அம்மாவின் கணவர்,இருபிள்ளைகள் உள்ளீடாய் ஏழு பேர் சிறிலங்கா இராணுவத்தின் செல் வீச்சில் தேவிபுரத்தில் படு கொலை செய்யப்பட்டனர்.அவரும் மிகுதி குடும்பத்தினருடன் இங்கு வந்திருக்கிறார்.அந்த அம்மா புலிகளின் சமையல் கூடம் ஒன்றில் பதினோரு வருடம் வேலை செய்திருக்கிறார்.அதை அந்த அம்மா இப்படிச் சொன்னார் தன்ர போன பிறப்புப் நல் பயனால அந்தப்பிள்ளைகளுக்கு ( புலிகளுக்கு)சமைச்சுப்போடுற பாக்கியம் கிடைச்சது என்றா.அவ அதை எப்படி உணர்ந்தா என்பதை அவவின் முகத்தில் இருந்து நான் அறிந்தேன்.ஆனால் என் எழுத்து எவ்வளவு விளங்கப்படுத்தியிருக்குமோ தெரியவில்லை.அந்த அம்மாவின் ஒரு பிள்ளை இத்தாலியில் வாழ்வதையும் அவன்தான் தங்களை பார்ப்பதையும் சொன்னா . இரண்டு பேரப்பிள்ளைகள் இத்தாலியில் இருப்பதாயும் ஆனால் அந்தப்பிள்ளைகள் தமிழ் கதைக்காது என்றும் கவலைப்பட்டா.  
 
தொடரும் 

Share this post

Link to post
Share on other sites

நாளைக்கு வருஷம் பிறக்கப்போகுது.இன்றைக்கு எங்கட மண்ணில வித்தியாசமான குதுகலம் இருக்கும் . இங்க எல்லாம் ஒரே மாதிரித்தான்.இணையத்தில எங்கட மண்ணில என்ன நடக்குது என்று பார்ப்பமென்றால் உதயன் காரியாலம் தாக்கப்பட்ட செய்திதான் கிடக்கு.நானும் ஊடகத்தில வேலை செய்ததால எனக்கு இன்னும் ஒருதடவை நெஞ்சில குத்திச்சு.முழு இராணுவ ஆட்சி நடக்கிற மண்ணில வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும்? இதுக்குள்ள கொஞ்சப்பேர் (அடிவருடிகள்) அபிவிருத்தி என்று பேப்பே காட்டினம்.அரசாங்கத்தின்ர அராஜகத்தை மறைக்க நாடகம் ஆடினம்.சர்வதேசம் வழமை மாதிரி பார்வையாளராய் மட்டும் இருக்கு.  

இந்த நாட்டில இலங்கையை மாதிரி இரண்டு மடங்கு சனம் இருக்கு ஆனால் இலங்கையை விட அமைதி இருக்கு. நாங்கள் தங்கி இருக்கிற இடம் நாட்டுப்புரமும் இல்லை டவுனும் இல்லை. இங்கையும் கன ஆம்பிளைகள் மோட்டச்சையிக்கில்லில கூட ஆக்களை காசுக்கு ஏத்தி இறக்குவினம்.பொம்பிளைகள் இரவில எல்லாம் தனிய திரியுங்கள்.போலீஸ் காரங்கள் சரியான இறுக்கம். இந்தியா ஆட்கள் கடை வைச்சிருக்கினம்.எங்களுக்குரிய சாமான்கள் அங்க வாங்கலாம் .பருப்பு ,பப்படம், மிளகாய்த்தூள் அப்பிடியான சாமான்கள்.இன்றைக்கு அங்க போற பிளான் இருக்கு.டாவினும் வாற என்டவன் அதால அவனை பார்த்துக்கொண்டு இருக்கிறம்.நேற்று மழை பெய்தது.மீனும் விழுந்தது.சின்ன மீன் எங்கட ஊரில பார்த்த மீனுகள் மாதிரி இல்லை.ஆனால் சந்தையில எல்லா மீனும் வாங்கலாம்.இன்றைக்கு ஒடியல் மா வாங்கிற நோக்கம் இருக்கு.
 
தொடரும்      

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.