Jump to content

ட்றைவர் சேனாதியும், மொறிஸ் மைனரும்!

Recommended Posts

ம்ம்............... கதை எழுதிய விதம் மிக அழகு, எழுதுங்கள் வாசிக்க மிக ஆவல்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கை, அருமையான  நினைவு மீட்டல் கதை. ஒவ்வொரு ஊரிலும் இப்படியிருந்திருக்கின்றார்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த நாள் ஞாபவங்கள் நெஞ்சிலே நண்பனே!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மற்றைய நான் வாசித்த கதைகளிலிருந்து இக்கதை வேறுபட்டு நின்று தன் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றது. வாழ்த்துக்கள் புங்கை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிறு பிராயத்தில் இப்படியான பழைய கார்களை சந்தியில் நிறுத்தி வைத்து வாடிக்கையாளர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களைக் கண்டதுண்டு. கதை அவர்களையும் அவர்களது கார்களையும் நினைவுக்குக் கொண்டுவந்தது. இந்த ட்றைவர்கள் ஒவ்வொரு நாளும் கார்களை கழுவித் துடைத்து பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆனால் நமது ஊரில் தோட்டச் செய்கையாளர்களே அதிகம் என்பதாலும், ஒரு சிறு பிரச்சினைக்கும் ஓடிப்போய் கிருமிநாசினியை குடிப்பது அதிகம் என்பதாலும் அடிக்கடி இந்தக் கார்களில் "பொலிடோல்" குடித்தவர்கள்தான் (இறுதிப்) பயணம் செய்வார்கள்!

Link to post
Share on other sites

பகிர்விற்கு நன்றி புங்கையூரான்

எல்லா ஊரிலும் இப்படியான கார்காரர்கள் இருக்கின்றனர்.

தங்கடை பிள்ளைகளைக் கவனிக்கின்றார்களோ இல்லையோ 

காரை மட்டும் ஒரு நாளில் பத்துத் தடவை தூணியாலை துடைப்பார்கள் 

அப்படித் துடைத்துக் கொண்டு போற வார ஆக்களுக்குக் கதை சொல்வதும் 

ஒரு தனித் திறமை.  

நல்ல அனுபவம் போலை கிடக்கு.....

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின் கதையில் வரும், சேனாதி உங்கள் அப்பாவா விசுகு.

கதையின் இறுதியில், வந்த நிகழ்வும்... நிஜமாக இருக்கின்றதா? அல்லது.. கற்பனைக்கு எழுதப் பட்டதா? என்பதை.... நீங்களிருவரும் தான் சொல்ல வேணும். :rolleyes:  :)

நன்றிகள், தமிழ் சிறி!

சேனாதி, விசுகரின் அப்பா இல்லை! 

கதையின் வந்த நிகழ்வுகள அத்தனையும் உண்மையானவை. :icon_idea:

அருமையான கதை புங்கை.

நாம் செலுத்தும் வாகனங்கள் மீது எமக்கு இனம்புரியாத ஒரு நேசம் உருவாகுவது பற்றி இயல்பான நடையுன் கூறியுள்ளீர்கள்.

உண்மை தான் நிழலி!

நாம் செலுத்தும் வாகனங்களில் மட்டுமல்ல, நம்மைச் செலுத்தும் வாகனங்களின் மீதும், எமக்கு இனம்புரியாத ஒரு நேசம் உண்டாவது இயல்பு தானே! :o

எழுதுவதில் புங்கையூரான் தனித் திறமை பெற்று விட்டார் :lol: வாழ்த்துக்கள்.எவ்வளவு வாசிச்சும் எனக்கு எழுத வருதேல்ல :(
 
புங்கையூரான் உங்கள் கதையில் போட்டு இருக்கும் கார் நிற்கும் இடம் லண்டனா :unsure:

கருத்துக்கு நன்றிகள், ரதி!

நான் ஏதாவது எழுதுகின்றேன் என நீங்கள் நம்பினால், அதற்கு முக்கியமான காரணம், யாழ் களமும், அதன் கருத்தாளர்களும், வாசகர்களுமே! :D

ஆமாம், ரதி. ஒரு நம்பர் பிளேட் இல்லாத காராகத் தேடினேன். லண்டனில தான் ஒண்டு சந்திச்சுது! :lol:

நீங்கள், ஈசனின் 'நிழற்படப் புலனாய்வுத்' திரியில் கவனம் செலுத்தவேண்டிய ஆள்! :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அக்கா பகிடி விடுறியள் எண்டு நினைக்கிறன்... புலிக்குட்டிக்கு பாய்ச்சல் கத்துக்கணுமா..? புங்கை அண்ணாவின் எழுத்துகளில் தீராக்காதல் கொண்டவர்கள் நாங்கள்...

நன்றிகள், சபேஸ்!

உங்கள் எழுத்துக்களை, ஆவலுடன் பார்த்திருப்பவர்களில் நானும் ஒருவன்!  :icon_idea:

நம்பினால்... நம்புங்கள்,

அந்த நாளில், புதுக் கார்... சிலோன் காசு, பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கலாம்.

இப்ப, ஸ்ரீலங்காவில்... அதன் மதிப்பு, என்ன?

உண்மை தான், தமிழ் சிறி!

அந்த நாளையில ஒரு தங்கப்பவுண் முன்னூற்றி ஐம்பது ரூபாய்!

இண்டைக்கு ஒரு தங்கப்பவுண் முப்பத்தையாயிரம் ரூபாய்! :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புங்கையூரன்.உங்கள் கதை அழகு......
 
நாங்கள்  ஏவோர்டி, மொறிஸ்மைனர், சோமசெற் எல்லாம் பாத்திருக்கிறம்.....ஆனால் ஏறேல்லை......ஏறி இறங்கினது முழுக்க வண்டில் மாடுதான்..அயிக்..அயிக்...அய்..அயிக்...சந்தோசம்...சிக்கனம்.....சுகாதாரம்.

வணக்கம், குமாரசாமியண்ணை!

ஊரிலையிருந்து மாட்டுவண்டியில, யாழ்ப்பாணம் வாறதெண்டால், இருட்டும்! :D

நாங்கள் தண்ணி ஏத்துறதுக்கு, ஒத்தைக்கரத்தையைப் பாவிக்கிறது! :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புரட்டாசிச் சனியன்று  அம்மா காகத்துக்கு சோறு வைப்பார்.  பிறகு சொல்லுவார் நான் வச்ச உடனே  அந்தக் காகம் மட்டும் பறந்து வந்து வாய் நிறைய சோறு அள்ளிக் கொண்டு போய்விடும் என்று. இப்படியே அக்கம் பக்கம் ஒவ்வொரு அம்மாக்களும், மாமிகளும்,சின்னம்மாகக்ளும் பின்னேரம் திண்ணையில் இருந்து கதைப்பினம் . ஒருவர் அப்பளத்தை தூக்கிச்சுது எண்டும் ,மற்றவர் வடகத்தை எண்டும் சொல்லுவார்கள்.

அது போன்றதுதான் உங்கள் அழகான கதையும் .பலருடைய நெஞ்சுக்குள்ளும் இருந்ததை உங்கள் வலிமையான எழுத்துக்கள் மூலம் பதிவு செய்துள்ளீர்கள் .

எங்களிடமும் மைனர், மற்றும் வோக்ஸ் வேகன் டாக்சிகள் இருந்தன. முன்னுக்கு பூ  வைத்தல் , கோவிலுக்குப் போனால் போனட்டில் அழகாக திருநீறும்,பொட்டும்  இடுதல் , யாரும் சில்லில் கால் வைத்தாலோ, அல்லது காரில் சாய்ந்து நின்றால் போலிசின் குலோத்தால் அடித்தல் என்று பல நினைவுகள்......

நன்றி புங்கை ! :rolleyes:  :D

நன்றிகள், சுவியண்ணை!

கோவிலில் தினமும் முழங்குகின்ற சங்கு போன்று இருந்த நாங்கள், இன்று ஆயிரத்தெட்டுச் சங்காபிஷேகத்தில் உள்ள அடையாளம் தெரியாத ஏதோவொரு சங்காகி நிற்கிறோம்!

பழைய நினைவுகளை மீட்கும்போது, அந்த வாழ்வைச் சில நிமிடங்களாவது, தொட்டுச் செல்லும் திருப்தி கிடைக்கின்றது!

நல்ல கதை  நன்றி அண்ணா பகிர்வுக்கு  

நன்றிகள் தம்பி!

கதை, அதை சொல்லிய விதம் அழகு உங்களை போன்ற எழுத்தாளர்கள் Sydney மண்ணில் இருப்பது அதைவிட பெருமை வாழ்த்துக்கள்....

நன்றிகள், சுண்டல்!

எழுத்தாளன் என்ற பெயர் கொஞ்சம் ஓவர்! :D

ம்ம்............... கதை எழுதிய விதம் மிக அழகு, எழுதுங்கள் வாசிக்க மிக ஆவல்!

நன்றிகள், அலை!

நேரம் கிடைக்கும் போது நிச்சயம் எழுதுவேன்!

நன்றி புங்கை, அருமையான  நினைவு மீட்டல் கதை. ஒவ்வொரு ஊரிலும் இப்படியிருந்திருக்கின்றார்கள்.

நன்றிகள், உடையார்! :D

அந்த நாள் ஞாபவங்கள் நெஞ்சிலே நண்பனே!

நன்றிகள், லியோ!

அந்த நாள் ஞாபகங்களின் தாலாட்டில் உறங்குவதே ஒரு சுகம் தான்!

உங்கள் மற்றைய நான் வாசித்த கதைகளிலிருந்து இக்கதை வேறுபட்டு நின்று தன் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றது. வாழ்த்துக்கள் புங்கை.

 நன்றிகள், சுமே!

தரம் உயர்ந்து நிற்கிறது என்று நீங்கள் கூறியது ஒன்றே போதும்! :icon_idea:

சிறு பிராயத்தில் இப்படியான பழைய கார்களை சந்தியில் நிறுத்தி வைத்து வாடிக்கையாளர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களைக் கண்டதுண்டு. கதை அவர்களையும் அவர்களது கார்களையும் நினைவுக்குக் கொண்டுவந்தது. இந்த ட்றைவர்கள் ஒவ்வொரு நாளும் கார்களை கழுவித் துடைத்து பத்திரமாக வைத்திருப்பார்கள். ஆனால் நமது ஊரில் தோட்டச் செய்கையாளர்களே அதிகம் என்பதாலும், ஒரு சிறு பிரச்சினைக்கும் ஓடிப்போய் கிருமிநாசினியை குடிப்பது அதிகம் என்பதாலும் அடிக்கடி இந்தக் கார்களில் "பொலிடோல்" குடித்தவர்கள்தான் (இறுதிப்) பயணம் செய்வார்கள்!

நன்றிகள், கிருபன்!

அந்த நாளில், கலப்படமில்லாத மருந்துகள்! :D

காரில கொண்டுபோனால் தான், ஆள் தப்பிற சந்தர்ப்பம் அதிகம் இருக்கும்! :o

பகிர்விற்கு நன்றி புங்கையூரான்

எல்லா ஊரிலும் இப்படியான கார்காரர்கள் இருக்கின்றனர்.

தங்கடை பிள்ளைகளைக் கவனிக்கின்றார்களோ இல்லையோ 

காரை மட்டும் ஒரு நாளில் பத்துத் தடவை தூணியாலை துடைப்பார்கள் 

அப்படித் துடைத்துக் கொண்டு போற வார ஆக்களுக்குக் கதை சொல்வதும் 

ஒரு தனித் திறமை.  

நன்றிகள், வாத்தியார்!

கார்கள் மட்டுமல்ல, றலி சைக்கிளுகள் கூட அந்த மாதிரி மினுங்கும்! :icon_idea:  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ப‌ழைய‌ நினைவுக‌ளைக் கிள‌றி விட்ட‌ புங்கைக்கு ந‌ன்றிக‌ள்! உண்மையில் சேனாதி போன்ற‌ ப‌ழைய‌ ஆக்க‌ளிட்ட‌ இருந்த‌ வாக‌ன‌ ப‌க்தி இப்ப‌ லைற்றுக‌ள் பூட்டி வான் ஓடும் ஊர் இளைஞ‌ர்க‌ளிட‌ம் இல்லை என‌ நினைக்கிறேன். ப‌ள்ள‌த்துக்கால‌ வெட்டுற‌தும் வீதிப் பிரிப்பானுக்கு மேலால‌ (வாக‌ன‌த்தின் ground clearance என்றால் என்ன‌ என்றே தெரியாம‌ல்!) ஏற்றி பெண்பிள்ளைக‌ளுக்கு ப‌ட‌ம் காட்டுற‌தும் தான் இப்ப‌ உள்ள‌ கார் வான் சார‌திக‌ளிண்ட‌ விளையாட்டுக‌ள்!

Link to post
Share on other sites
 • 1 month later...

நாம் மிக அதிகமாக நேசிக்கின்ற பொருட்களுக்கு சேதாரங்கள் வரும்பொழுது ஏனோ எமது மனது ஒத்துக்கொள்ளாது அடம்பிடிக்கவே செய்யும் .  கதாநாயகன் சேனாதியும் அவ்வறு இருப்பதை , உங்கள் பாணியில் தெளிவாகக் காட்டியமைக்கு மிக்க நன்றி புங்கையூரான் . தொடருங்கள் :) .

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.