மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
கடவுளுக்கும் உலகத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை அநேக ஆயிரம் நூற்றாண்டுகளாக நமது உலகமே பிரபஞ்சமென்றும், வானத்தில் பிரகாசிக்கும் நட்சத்திரங்களும், சூரிய சந்திரர்களும் நமது உலக நன்மைக்கே உண்டாக்கப்பட்டவைகள் என்றும் நமது முன்னோர்கள் எண்ணி வந்தார்கள். நமக்குப் பகலில் வெளிச்சத்தைக் கொடுக்கச் சூரியனையும், இரவில் வெளிச்சத்தை கொடுக்கச் சந்திரனையும் நட்சத்திரத்தையும் கடவுள் படைத்தாரெனவும் கிறித்தவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் இவ்வுலகில் வாழ்ந்துவந்த பூர்வதான மனிதரும், நமது உலகை நடுவிலும், அதனைச் சுற்றி மற்ற ஆகாயப் பொருள்களாகிய சூரிய சந்திரர்களும், நட்சத்திரங்களும், ஓடிக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார்கள். பாலமி என்று ஓர் பூர்கால வான சாஸ்திரி, நமது உலகம் நடுவிலிருந்து …
-
- 1 reply
- 1.2k views
-
-
http://www.dailymotion.com/related/9226761...6-seeman-1_news
-
- 1 reply
- 1.5k views
-
-
கடவுளும் மனிதனும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் வெளியீடு: சிரித்திரன், ஆனி 1977 (பிரம்மஞானி என்ற புனைபெயரில் எழுதப்பட்டது). புத்தர் மகான் நிஷ்டையிலிருந்து விழித்துக் கொள்கிறார். அவர் முன்பாக ஒரு தாய் தலைவிரி கோலமாக நிற்கிறாள். இறந்து போன தனது புதல்வனின் பிணத்தைக் கையில் ஏந்தியவாறு. தனது புதல்வனுக்குப் புத்துயிர் கொடுத்து, தனது துயரத்தைத் துடைத்து விடும்படி அவள் மன்றாடினாள். கருணை வள்ளல் அவளிடம் சென்னார், “பெண்ணே உனது கிராமத்திற்குப் போய், அங்குள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று, சாவு நிகழாத வீட்டிலிருந்து ஒரு மிளகு வாங்கி வா,” என்று. அவளும் அப்படியே அந்தக் கிராமத்திற்குச் சென்று, வீடு வீடாக அலைந்து விசாரித்தாள். ஒவ்வொரு வீட்டிலும் சாவு சதி செய்திருந்தத…
-
- 3 replies
- 671 views
- 1 follower
-
-
கடவுளும் - மின்சாரமும் : கடவுளையும் மனிதன்தான் கண்டுபிடித்தான். மின்சாரமும் மனிதனால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தும் கடவுளை விட மின்சாரம் சக்திவாயந்தது. நம்பாதர்வர்கள் கடவுள் சிலையை ஒரு கையாலும் மின்சாரத்தை இன்னொரு கையாலும் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்ளவும். சக்தியை விடுங்கள், பயன்பாடு என்று பார்த்தால் கடவுள், அதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால் மின்சாரமோ சாதி, மத, இன, ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பயன்படுகிறது. ஏதோ ஒன்றை வணங்கவேண்டும் என்கிற நிலை வந்தால், நான் மின்சாரத்தை வணங்குவதையே அறிவுடமை என்பேன்.
-
- 1 reply
- 680 views
-
-
கடவுளை நம்ப முட்டாளே போதும் என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ, இல்லையென்றோ சொல்ல முன் வரவில்லை. அதுபோலவே நீங்கள் அனைவரும் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று கூறவில்லை. இன்னொன்றும் சொல்கிறேன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரணமாக ஒரு முட்டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லையென்று மறுத்துக்கூற ஒரு அறிவாளியால்தான் முடியும். மறுப்பதற்கான பல ஆதாரங்களைச் சொல்ல வேண்டும்; சிந்தித்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும். உலகில் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுமார் 100 கோடி மக்கள் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சற்றுக் கூடுதலாக இருப்பார்கள். நாம் எல்லோரும் கடவுள் நம்பிக்க…
-
- 177 replies
- 24.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒருவர் பிரார்த்தனை செய்யும் போது அவரது மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. கட்டுரை தகவல் எழுதியவர், ரேடாக்சியான் பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 9 மணி நேரங்களுக்கு முன்னர் நார்னியாவின் இலக்கியப் பிரபஞ்சத்தை உருவாக்கிய, புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சி.எஸ். லூயி, 'பிரார்த்தனை என்றால் என்ன’ என்பதை நன்கு விவரிக்கும் ஒரு சொற்றொடரையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. “எனக்கு வேறு வழி இல்லாததால் நான் பிரார்த்தனை செய்கிறேன். என் இதயம் நொறுங்கியிருப்பதால், நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் விழித்திருந்தாலும் அல்லது தூங்கினாலும், அவ்வாறு செ…
-
-
- 1 reply
- 356 views
- 1 follower
-
-
கடவுளை நம்புகிறான் சாஸ்திரத்தை நம்புகிறான் சோதிடத்தை நம்புகிறான் விதியை நம்புகிறான் செய்வினையை நம்புகிறான் தேசிக்காயை நம்புகிறான் பூசணிக்காயை நம்புகிறான் சாமியாரை நம்புகிறான் சிறு துண்டு கயிற்றை நம்புகிறான் ஆனால்! அவன், உன்னையும் நம்புவதில்லை என்னையும் நம்புவதில்லை ஏன்? அவன் தன்னையும் நம்புவதில்லை இப்படி இருக்கையில் அவனுக்கு எப்படிக்கிடைக்கும் நிம்மதி எப்போ மலரும் புன்னகை?
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
கடவுளைக் காண..! ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். "ஐயா! பெரியவரே..! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான். "தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.'' "ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா..! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?'' "தம்பீ, காண முயலுகின்றேன்.'' "கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?'' "இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்ற…
-
- 4 replies
- 940 views
-
-
[size=5]நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.[/size] [size=5]பேராசிரியர்: “நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”[/size] [size=5]மாணவன்: “நிச்சயமாக ஐயா..”[/size] [size=5]பேராசிரியர்: “கடவுள் நல்லவரா?”[/size] [size=5]மாணவன்: “ஆம் ஐயா.”[/size] [size=5]பேராசிரியர்: “கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?” மாணவன்: “ஆம்.”[/size] [size=5]பேராசிரியர்: “என்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நா…
-
- 4 replies
- 1.4k views
-
-
மாசு , மருவற்ற நம் சம காலத்து மகாத்மா - தான் பதவியில் அமர்ந்ததால் , குடியரசுத் தலைவர் பதவிக்கே பெருமை சேர்த்த Dr . APJ அப்துல் கலாம் அவர்களின், பள்ளிப் பருவத்தில் நடந்ததாக கூறப்படும், ஒரு சுவையான நிகழ்ச்சி. நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி.. அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ....... அவரது ஆசிரியருடன்... ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா? கலாம்: கண்டிப்பாக ஐயா ஆசிரியர்: கடவுள் நல்லவரா? கலாம்: சந்தேகமேயில்லை ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா? கலாம்: ஆமாம…
-
- 2 replies
- 4.1k views
-
-
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
-
-
- 46 replies
- 8.3k views
- 1 follower
-
-
கடவுள் உண்டா ? இல்லையா ? கடவுள் உண்டா? இல்லையா ? என்ற வினா, உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கேட்கப் படும் கேள்விகளாகும்! கடவுளைக் காட்ட முடியாது ! காண முடியும் ! எல்லா உயிர்களிலும், உடம்புகளிலும் ஒளியாக உள்ளது ,ஒளியை எப்படிக் காட்ட முடியும் ?உணரத்தான் முடியும் ! கடவுள் உண்டா? இல்லையா? என்ற வினாவுக்குப் நாம் போக வேண்டாம்--.நம்மை நாமே சிந்தித்து பார்க்க வேண்டும்!இந்த உலகம் என்னும் உருண்டை வடிவமான வட்டத்திற்குள் பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் --நிலம், ,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம் என்னும் கருவிகள் எப்படி வந்தன? என்று சிந்திக்க வேண்டும் ,அடுத்து அணுக்கள் என்று சொல்லப்படும் ஏழு விதமான அணுக்கள் --வாலணு,--திரவ அணு,--குரு அணு --லகு அணு --அணு --பரமாணு --…
-
- 0 replies
- 4.6k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் கடவுள் உண்டா, இல்லையா? ("சைவம்" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை) உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யெ…
-
- 35 replies
- 5.4k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் கடவுள் உண்டா, இல்லையா? ("சைவம்" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை) உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை ய…
-
- 15 replies
- 3.4k views
-
-
Stephen Hawking | Brief Answers to the Big Questions
-
- 40 replies
- 5.4k views
-
-
ஒரு அன்பர் கோவில் கோவிலாக ஏறி இறங்குவார். அவரைப் போன்ற பக்தி மானை எங்கும் பார்க்க முடியாது. பிரசாதம் கொடுப்பதற்காக தன் நண்பனின் அலுவலகத்திற்கு வந்திருந்தார். பெற்றுக் கொண்ட அவர் நண்பர் எப்படி இருந்தது கடவுள் தரிசனம் என்றார். யாரும் பக்கத்தில் இல்லையே என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மனம் விட்டுப் பேசினார். "மனதிற்கு ஒரு ஆறுதல் அவ்வளவுதான். புது சூழ்நிலை, நம்பிக்கை வார்த்தைகள், இனி நல்ல காலம் என்று ஒரு ஆறுதல் அவ்வளவுதான். கடவுளைப் பார்த்தாயா என்றால் கடவுள் சிலைகளைத்தான் பார்த்தேன் என்றார். வேறு ஒன்றும் புது மாற்றம் ஒன்றுமில்லை. இலக்கில்லாத பயணம் போல் தோன்றுகிறது சில சமயம் " என்றார் சரி ஒரு பொருளைத் தொலைத்து விட்டோம் என்றால் எங்கே தேடுவோம்? என்…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
கடவுள் எங்கே இருக்கிறார்? நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார். "நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?" "நிச்சயமாக ஐயா.." "கடவுள் நல்லவரா?" "ஆம் ஐயா." "கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?" "ஆம்." "என்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப…
-
- 8 replies
- 11.8k views
-
-
கடவுள் எங்கே இருக்கிறார்? எந்த திசையை நோக்கி இருக்கிறார்? என்ன செய்துகொண்டு இருக்கிறார்?
-
- 1 reply
- 506 views
-
-
2006 இல் வெளிவந்த மிகவும் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்றாக The God Delusion இருக்கிறது. இதை எழுதியவர் பிரித்தானிய உயிரியிலாளரும் Oxford பல்கலைக்கழக பேராசிரியர் Richard Dawkins. மக்களிற்கு விஞ்ஞானத்தை விளங்கப்படுத்த வைக்கும் முயற்சிப் பிரிவின் தலைவராகவும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார் (holder of the Charles Simonyi Chair for the Public Understanding of Science at the University of Oxford. Charles Simonyi என்பவர் மைக்குரோசொப்ற் நிறுவனத்தின் MS Office Application பிரிவை ஆரம்பித்து வெற்றிகரமாக அபிவிருத்தி செய்தவர்). கடவுள் என்னும் மாயை என்ற புத்தகத்தில் சொல்லப்படும் முக்கிய விடையங்களாக... Supernatural creator (எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட பரம்பொருள்?) என்…
-
- 39 replies
- 6.5k views
-
-
கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார் எனில், கடவுளை யார் படைத்தார்? இந்த உலகம் சிக்கலானது அதிசயமானது எனில், உலகத்தைப் படைத்த கடவுளும் அதிசயமானவரா சிக்கலானவரா? இவ்வாறான பல சிக்கலான கேள்விகளுடன் இன்று பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகம், The God Delusion.'Richard Dawkins'என்னும் ஒக்ஸ்போர்ட் பேராசிரியர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தில் அப்படி என்ன எழுதி இருக்கிறார்? மாய உலகில் ஒருவர் சஞ்சரிப்பார் எனில் நாம் அவருக்கு பித்துப் பிடித்து விட்டது என்போம், அனால் அதே மாயையில் பலரும் சஞ்சரிக்கும் போது அவர்கள் ஒரு சமயத்தைப் பின் பற்றுகிறார்கள் என்போம்.ஏன்? எதற்கு? என்கிற கேள்விகளுக்கு அப்பால் இது இப்படித் தான் இது புனிதமானது நீ இதனை நம்பு என்பது சமயம்.இது பற்றி எ…
-
- 8 replies
- 2.5k views
-
-
God Is Not a Solution - but a Problem
-
- 0 replies
- 965 views
-
-
கடவுள் என்பது யார் ? - பிரவீன் குமார் [praver5@gmail.com] ஒரு உணர்வா ? உருவமா ? ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையா ? மனிதனை உருவாக்கியதா ? அல்லது மனிதனின் வளர்ச்சிக்கு அவனால் உருவாக்கப்பட்டதா ? என பல வினாக்களை என்னுள் எழுப்பினேன்.விடை கிடைத்தது. அதை கடைசியில் பார்ப்போம்.யாரோ சொன்னார்கள் என்பதற்காக கடவுளை நம்புவதா? அல்லது அவர்களே சொன்னார்கள் என்பதற்காக கடவுள் இல்லை என்பதா? நம்முள் பலரின் நிலைமையும் இதுதான். நம்பெற்றோரின் வழி, பிள்ளைகளுக்கு கடவுள் நம்பிக்கை கட்டாயப்படுத்தப் படுகிறது. திணிக்கப் படுகிறது. நெற்றியில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு கலாச்சாரம். ஆண்களுக்கோ அது அடையாளம். ஆம் கடவுள் நம்பிக்கையை பிரதிபளிக்கும் அடையாளம். அதையே குறுக்காக இடுவதும், செங்குத்தாக இட…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
வணக்கம், சமயபாடப் புத்தகங்களில் நாங்கள் பல்வேறு வகைகளில் மூளை சலவை செய்யப்பட்டோம். அதன் தாக்கத்தை இப்போது பள்ளிக்கூடம்விட்டு விலகி பல வருசங்களின் பின்னரும் உணரக்கூடியதாக இருக்கின்றது. முன்பு நாயன்மார்கள் தேவாரம் படிக்க கோயில் கதவுகள் திறந்தன, செத்தவர்கள் மீண்டும் உயிர்த்தார்கள், ஊமைகள் பேசின.. உமாதேவியார் பால் கொடுத்தார் முருகன் ஒளவைப்பாட்டிக்கு நாவல்பழம் கொடுத்தார்... இப்படி பல விசயங்கள் நடந்திச்சிது. இதுபோலவே.. புனிதர் யேசு கிறிஸ்து தோன்றினார்.. அதிசயங்கள் செய்தார். இவை எல்லா மதங்களிலும் இப்படி தொடர்கின்றன. இப்ப கேள்வி என்ன எண்டால்.. முந்திமாதிரி இப்ப கடவுள் ஏன் முன்னால வாறதுக்கு பயப்படுகிறார் இல்லாட்டிக்கு வருவதில்லை? இந்தக்கேள்வியை இப்ப கேட்…
-
- 10 replies
- 2.3k views
-
-
கடவுள் குறித்த அறிவாளிகளின் பார்வை கடவுள் இல்லை என்று அறிவாளிகளால் மட்டுமே சொல்ல முடியும் - *தந்தை பெரியார்* மதம் புரட்சிகர நிகழ்வுகளில் மனிதனை கோழைத்தனமாகவே இருக்க செய்கிறது - *கார்ல் மார்ஸ்* நான் கடவுளுக்கு பயப்படுவதில்லை என் பயமெல்லாம் கடவுளை நம்புகிறவர்கள் மீது தான் - *ஸ்டீபன் ஹாவ்கிங்* நான் கடவுள் பற்றியோ,சொர்க்கம் நரகம் பற்றியோ,மறுபிறவி பற்றியோ இதுவரை எந்த ஒரு சின்ன அறிவியல் ஆதாரங்களையும் கண்டதில்லை. - *தாமஸ் ஆல்வா எடிசன்* பகுத்தறிவின் படி நான் எந்த கடவுளையும் நம்புவதில்லை. - *சார்லி சாப்ளின்* நான் எந்த ஒரு தனிப்பட்ட கடவுளையும் நம்புவதில்லை - *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்* நான் கடவ…
-
- 0 replies
- 594 views
-