சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
ஒருதலைக்காதல் என்பது, ஒரு வகையான வற்புறுத்தல். தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் முறை. மற்றவரை தன் வசப்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சி. இதில் வெற்றியும் கிடைக்கலாம். தோல்வியும் கிடைக்கலாம். ஒருவர், இன்னொருவரை காதலிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல் ஒருவர், இன்னொருவரை காதலிக்காமல் போகவும் பல காரணங்கள் இருக்கலாம். ஒருதலைக் காதலர்களுக்கு இந்த உண்மை புரியாமல் போவதால், ஒருதலை காதல் ஒரு வன்முறை யாகவே இருந்து கொண்டிருக்கிறது. பல நேரங்களில் இந்த ஒருதலைக்காதலில் ஏற்படும் முடிவுகள் விபரீதமானதாக இருக்கின்றன. காதல் தோல்வியில் ஏற்படும் வலியும் வேதனையும் இந்த ஒருதலை காதல் தோல்வியிலும் ஏற்படும். இது ஒருவருக்கு வேதனையாகவும், மற்றவர…
-
- 33 replies
- 4.1k views
-
-
திருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள் திருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்: பெண்கள் பூப்படைதல் மூலம் வயதுக்கு வந்துவிட்டாலும், அப்போதே இனப்பெருக்க திறனுக்கான முழுஆற்றலையும் அவர்கள் உடல் பெற்றுவிடுவதில்லை. பூப்படைவதில் தொடங்கி அதற்கான வளர்ச்சி மெல்ல மெல்ல நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பெண்களின் உடலில் 17, 18 வயதில் வியத்தகு மாற்றங்கள் உருவாகிறது. அப்போதிருந்து உருவாகும் பாலியல் ஆர்வம் 35-40 வயது வரை சீராக நீடிக்கிறது. ஆனால் 40-45 வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் அந்த ஆர்வம்கட்டுப்படுகிறது. பெண்களுக்கு மனோபாஸ் காலகட்டத்திற்கு பின்பும் தாம்பத்யத்தை அனுபவ…
-
- 3 replies
- 4.1k views
-
-
முதற்கண் பாசம் உள்ள யாழ்கள் உறவுகளுக்கு நீண்ட நாட்களின்பின் என் வணக்கம் . உறவுகளின் இன்ப துன்பங்களில் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் சிறப்பு நிகழ்வுகள் பிறந்த நாள் மணிவிழா நாட்களில் உங்கள் ப வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மிகவும் சிறந்தவை . வேறு எந்த இணைய தளத்திலும் இல்லாத் ஒரு சிறந்த் பண்பு நம் யாழ் களத்தில் உண்டு. என் தற்போதைய வாழ்வில் எழுத் நேரம் இல்லத நிலைமை உங்களுக்குபுரியும் ஆனாலும் இடையில் நேரம் கிடைத்தால் ஒருபத்து நிமிடமாவது வாசிக்க ( சுவாசிக்க) வருவதுண்டு... என் நண்பி கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்ல உள்ளார் ...அவரது தயார் தனது நோய் வாய்ப்பட்ட மூத்தத் சகோதரனை பார்க்க விரும்புகிறார் . தன்னையும் யும் அழைத்து செல்லும்படி மன்றாட்ட்மாக் கேட்கிறார்…
-
- 8 replies
- 4.1k views
-
-
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னம் வாகனத்தில போய்க்கொண்டு இருக்கேக்க கனடா பல்கலாச்சார வானொலியில நகைமாடம் சம்மந்தமான ஏதோ விளம்பர ஒலிபரப்பு போய்க்கொண்டு இருந்திச்சிது. ஆணும், பெண்ணுமாக இரண்டு அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டு இருந்தார்கள். அதில பெண் அறிவிப்பாளர் கிட்டத்தட்ட இப்பிடி சொன்னார்: அழகுக்கு அழகு சேர்க்க உங்கட அம்மாவுக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட காதலிக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட மனைவிக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட சகோதரிக்கு நகை வாங்கிக்குடுங்கோ, உங்கட மனைவியிண்ட சகோதரிக்கு மாத்திரம் நகை வாங்கிக்குடுக்காமல் இருந்தால் சரி. ?
-
- 58 replies
- 4.1k views
-
-
பிடித்த பத்து (வரிசைப்படி): 1.உணவு- பிரியாணி (றால் மட்டன் சிக்கன் நண்டு எது என்டாலும்) 2.விளையாட்டு - பட்மின்டன் ,நீச்சல்,செஸ் 3. வாசிப்பு - ( நாவல்கள்,கட்டுரைகள் மற்றும் ஏனையவை) 4.ஓட்டம்- சில மாலை நேரங்களில்( ஞாயிறு காலையில்) 5.சமையல் 6.மெலடிஸ் 7.தமிழ் ஆங்கில படங்கள் மற்றும் சீரியல் 8.செய்யும் வேலை ( பிடித்து தானே ஆகணும் ) 9.நண்பர்கள் உறவினர்களுடன் அரட்டை 10. எதிர்காலத்தை பற்றிய திட்டமிடல் மேலே எனக்கு பிடித்து செய்வன/ செய்தவை 10 எழுதியிருக்கன் வாசிப்பது ,படங்கள் சீரியல் ஓட்டம் என்பன இப்போது குறைந்து விட்டது ( கொரோணோ தான் காரணம் வேற எதை சொல்வதுன்னு தெரியல) உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் பிடித்து செய்…
-
- 26 replies
- 4.1k views
-
-
ஆபீஸூக்கு செக்ஸி டிரஸ் போடாதீங்க அது ஆபத்தாயிடும்! வீடோ, அலுவலகமோ உடை உடுத்தும் விதத்தில் நேர்த்தி இருக்க வேண்டும். நாம் உடுத்தும் உடைதான் நம் மீதான மதிப்பினை அதிகரிக்கும். பணி இடங்களில் நம்முடைய உடல் அழகை காட்டும் விதமாக உடை உடுத்திச் செல்வது ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். லோ கட் ப்ளவுஸ் க்ளிவேஜ் காட்டும் லோ கட் ப்ளவுஸ் அணிந்து செல்வது என்றைக்கும் ஆபத்தானதுதான். வி நெக், யு நெக் என போட்டுக்கொண்டு சிங்கிள் பிளீட்ஸ் விட்டு புடவை உடுத்திக் கொண்டு அலுவலகத்திற்குச் செல்வது பார்ப்பவர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் நிபுணர்கள். வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூட இன்றைக்கு முன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை பெண்கள் ப…
-
- 18 replies
- 4k views
-
-
பனிக்காலம் வந்தாலே ஊர்ல தினமும் காலைல கலர் கோழிக் குஞ்சுகள் விக்கறவங்களை பார்க்கலாம். சைக்கிள் கேரியரில் அகலமான மூங்கில் கூடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக 2 அல்லது 3 கூடைகள நிறைய கோழிக் குஞ்சுகள் கொண்டு வருவாங்க. ஒரே சமயத்தில் 2 , 3 வியாபாரிகள் கூட ஒன்றாய் வந்து விற்பார்கள். பச்சை , சிவக்கு, நீலம், இளஞ்சிவப்பு , பழுப்பு என பல வண்ணங்களில் கோழிக் குஞ்சுகள் இருக்கும். எந்த வீட்டில் எல்லாம் பொடிசுகள் இருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் எல்லாம் இதற்கு டிமாண்ட் இருக்கும். எல்லோரும் வாங்கி வளர்ப்போம். நாட்டுக் கோழிகளுடன் சேர்க்காமல் இதை எப்போதும் கூண்டில் அடைத்து தனியாகவே வளர்ப்போம். நாட்டுக் கோழிகள் இவற்றை சேர்க்காது. கொத்தி காயப் படுத்திவிடும். கலர்க் கோழிக் குஞ்சுகள் வாங்கிய கொஞ்ச …
-
- 1 reply
- 4k views
-
-
மனிதப் பெண்களுக்கு இயற்கையாக மாதவிடாய் என்பது நிகழ்கிறது. குறிப்பாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த மாதவிடாய் மாதத்தில் எப்பவோ 3 - 5 நாட்கள் வந்தே தீரும். அது கிட்டத்தட்ட 28 நாட்கள் என்ற தவணை முறையில் வருகிறது. இக்காலத்தில் பெண்களின் உடல்நிலை மட்டுமன்றி மனநிலையிலும் மாற்றங்கள்.. சோர்வு.. கோபம்.. எரிச்சல்.. தலையிடி.. வயிற்றுவலி போன்றன ஏற்பட்டு அவர்கள் சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பது என்னவோ வருந்தத்தக்க ஒன்றுதான். அண்மைய நாட்களாக இந்திய தமிழ் தொலைக்காட்சி ஒன்றில்.. விளம்பரங்களில் ஒரு 30% விளம்பரங்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் உபகரணம் தொடர்பானது என்று அமைகிறது. அதில் ஒரு விளம்பரத்தின் இறுதியில் "Have a nice day" என்பது போல "…
-
- 19 replies
- 4k views
-
-
தாரா வளர்ப்பில் சாதிக்கும் யாழ்ப்பாண இளம்பெண் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆக பணியாற்றுகிறார். அதேவேளை, சீர் பயோ (ளுநநச டீழை) என்கிற நிறுவனத்தை நிறுவி அதனூடாக தாரா வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார். இன்று 300 க்கும் மேற்பட்டதாராக்களைவளர்ந்துவரும் ஸ்ராலினியுடன் பேசியபோது, 2016 ஆம் ஆண்டு சித்திரை மாதம் மலேசியப் பயணத்தின் போது தான் என் தொழில் முயற்சிக்கான முதல் விதை …
-
- 3 replies
- 4k views
-
-
உழைப்பால் உயர்ந்தவர்கள்: விபத்தே என் வாழ்க்கைப் பாதையை மாற்றியது இவ்வாண்டு 2017 யாழ். கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற சிறுதொழில் முயற்சியாளர் கண்காட்சியின் போது.... இன்று சுய பொருளாதார வாழ்வாதார முயற்சிகள், சுய கைத்தொழில் முயற்சிகள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற சூழலில் சில நம்பிக்கை அளிக்கின்ற செயற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பது மன நிறைவைத் தருகிறது. யாழ்ப்பாணம் - சுன்னாகம் புதுவளவு என்கிற இடத்தில் வசிக்கும் மார்ட்டீன் ஜெயராஜா நிர்மலா என்கிற குடும்ப பெண்ணொருவர் ஜெயா உற்பத்திகள் என்கிற பெயரில் பெண்களுக்கான விதவிதமான கைப்பைகளை 2014 மாசி மாதம் முதல் தயாரித்து வருகிறார். அவர் சொந்தமாக தயாரிக்…
-
- 3 replies
- 4k views
-
-
நகம் கடித்தல் மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கருதப்படுகிறது. மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை,மனப்பதட்டம், ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்றதான பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவவயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். அனேகமானோர் தம்மை மறந்…
-
- 19 replies
- 4k views
-
-
ஹாய் ...... காதலர் தினம் வருது.....அதனால இப்பிடி ஒரு தலைப்பு தட்ஸ் தமிழ் இனையத்தில வந்திச்சு........யாழ் கள உறவுகளும் இந்த முயற்சியில ஈடுபட்டு உங்கள் நினைவுகளை பகிர்ந்துக்கலாமே........ வாழ்க்கைப் புத்தகத்தில் காதல் என்ற அத்தியாயம் சுவாரஸ்யமானது. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை உணர்ந்திருப்பார். அது எங்கு, எவ்விதம், எப்படி நம்மைத் தாக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது. காதல் சிலருக்கு சிறுகதையாக முடிந்திருக்கும், சிலரது வாழ்க்கையில் குறு நாவலாக இருந்திருக்கும். சிலருக்கு மட்டுமே காதலித்தவரையே கரம் பற்றி தொடர்கதையாக நீடிக்கும் வரம் கிடைத்திருக்கும். உங்கள் காதல் எப்படிப்பட்டது? உங்கள் வாழ்க்கையின் வசந்த காலப் பக்கங்…
-
- 47 replies
- 3.9k views
-
-
டைனாமிக் திருமணத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டு இருகிறீர்களா? அல்லது பங்குபற்றிய அனுபவம் இருக்க? இதைப் பற்றி இன்று தான் முதல் முதல் பார்த்தேன்... இது தான் உண்மையில் தமிழ் கலாச்சாரம் என்கிறார்களே... உண்மையா??
-
- 20 replies
- 3.9k views
-
-
சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். ‘‘எந்த ஊர் நீங்க?’’ ‘‘திருவண்ணாமலை பக்கம்..’’ ‘‘திருநெல்வேலிகாரங்கதான் நிறைய இருப்பாங்கல்ல ..’’ ‘‘இப்போ அப்படி இல்ல… அவங்கல்லாம் வேற கடைக்குப் போயிட்டாங்க.. நாங்க திருவண்ணாமலை பிள்ளைங்க நிறைய பேரு இருக்கோம். 150 பேராச்சும் இருப்போம்..’’ ‘‘தினமும் எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?’’ ‘‘காலையில 9 மணிக்கு வரணும். நைட் 11 மணிக்கு முடியும்.’’ ‘‘அப்படின்னா 14 மணி நேரம் வருதேங்க.. கிட்டத்தட்ட 2 ஷ…
-
- 6 replies
- 3.9k views
-
-
-
ஒருவரை நாம் பார்த்துப் பழகிய சில நிமிடங்களிலேயே கேட்பது, ‘‘ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கா?”... ‘‘வாட்ஸ் அப் நம்பர் தர முடியுமா?” என்பதுதான். செல்போனில் வாட்ஸ் அப் இல்லை என்றாலோ, ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் இல்லை என்றாலோ, அவர்களை ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள். சமூக வலைதளங்களில் நாம் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம்முடைய தகுதி, ஸ்டேட்டஸ் இருக்கும் என மற்றவர்கள் நினைக்கும்படி இவை நம் வாழ்க்கையில் ஓர் அங்கம் ஆகிவிட்டன. சமூக வலைதளங்களால் பல நன்மைகள் இருந்தாலும், இதனால் ஏற்படும் தீமைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன, குறிப்பாகப் பெண்களுக்கு. சேலம் சந்தித்த கொடுமை! சேலத்தில் வினுப்ரியா என்ற இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரது …
-
- 1 reply
- 3.9k views
-
-
சுண்டல் வாங்குவது கேவலமா? தி.செங்கை செல்வன் செப்., 23 நவராத்திரி ஆரம்பம்! ""நீ கோயிலுக்கு வர்றதே சுண்டல் வாங்கவும், சர்க்கரைப் பொங்கல் வாங்கவும் தானே!' என்று உங்களைக் கேலி செய்யும் நண்பர்கள் இருக்கிறார்களா? "சுவாமியா பாயசமும், வடையும் கேட்குது. நீ சாப்பிடுறதுக்காகத்தானே இதையெல்லாம் செய்றே!' என்று உங்கள் வீட்டுக்காரர் உங்களை கிண்டலடிக்கிறாரா? இந்தக் கிண்டல் ஆசாமிகளிடம் இந்தக் கட்டுரையைக் கொடுங்கள். சக்திதேவிக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அந்தப் பெயர்களால் அவளை அர்ச்சிக்கும் மந்திரங்கள் அடங்கிய நுõலே லலிதா சகஸ்ரநாமம். இந்த நுõலிலேயே தேவிக்கு பிடித்த நைவேத்ய வகைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த நுõல் தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு இர…
-
- 11 replies
- 3.9k views
-
-
எனக்கு பெண்கள் என் மீது ஆதிக்கம் செய்வது பிடிப்பதில்லை. பெண்கள் மட்டுமல்ல.. எவராக இருந்தாலும்.. என் மீது எனது தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பது அதைச் செய்.. இதைச் செய் என்பது எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. புத்திமதி சொல்லக் கேட்பது வேறு.. ஒன்றை தயவோடு.. அன்போடு செய்யச் சொல்வது வேறு...! ஆனால் ஒன்றை அதிகார தொனியில் அல்லது மேலாதிக்க நோக்கில்.. அல்லது கட்டாயக் கடமை என்ற போர்வையில்.. செய் என்று பணிப்பது வேறு.. எனக்கு இந்த கடைசியில் சொன்ன செயல்கள் செய்பவர்களைப் பொதுவாகப் பிடிப்பதில்லை..! அப்படிச் சொல்லப்படும் விடயங்களை தெரிந்து கொண்டே செய்யாமல் புறக்கணித்தும் விடுவேன். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை..! இதில் உங்கள் நிலைப்பாடு என்ன..???! பெண்கள் சொல்வதை எல்லாம் க…
-
- 41 replies
- 3.9k views
-
-
தேவதைகளின் குசு by கங்காதுரை • January 1, 2019 எதேச்சையாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. தனியார் அலைவரிசையில் பாடல் நிகழ்ச்சி ஒன்று ஒளியேறிக்கொண்டிருந்தது. வாண்டுகள் தங்கள் திறமையைக் காட்டிக்கொண்டிருந்தனர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது இருவரும் நகைச்சுவை என்ற பெயரில் சில கன்றாவிகளை செய்தனர். அதில் ஒன்று, பெண் தொகுப்பாளினி கீழே குனியும்போது குசு விடும் சத்தத்தை ஒலிக்கச் செய்து அரங்கில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கப் போராடினார்கள். எனக்கு இது என் பல்கலைக்கழக காலத்தை நினைவுப்படுத்தியது. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நேரம் அது. ஓர் இரவு நேரத்தில் பொது அமர்வு இடத்தில் சீனியர்களும் ஜூனியர்களுமாக பேசிக்க…
-
- 3 replies
- 3.9k views
-
-
24ந்திகதி நல்லிரவு 23 மணி 30 நிமிடங்கள் இருக்கலாம். நல்ல குளிர். ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போய்விட்டு வெளியில் வந்து எனது வாகனத்தடிக்கு போய் மனைவி பிள்ளைகளை காருக்குள் ஏறும்படி சொல்லிக்கொண்டிருந்த எனக்கு தமிழில் யாரோ கதைக்கும் சத்தம் கேட்க திரும்பிப்பார்க்கின்றேன். 2 ஆண்கள் 3 பிள்ளைகள் (5 வயது 3 வயது 2 வயது இருக்கலாம்.) பிள்ளைகள் கையில்லாத ரீ சேட் மட்டும் அணிந்துள்ளனர். வேறு எதுவித உடுப்பும் இல்லை. காலில் சொக்சோ சப்பாத்தோ இல்லை. ஊ.... ஊ என நடுங்கி அழுதபடியுள்ளனர். நான் : அண்ணன்மார் பிள்ளையள் நடுங்கினம் வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு போங்கோ அதில் ஒருவர் : அது என்ர பிள்ளை எனக்கு தெரியும் நீ உன்ரை வேலையைப்பார்த்துக்கொண்டு போ. நான் : அண்ணை பாவ…
-
- 37 replies
- 3.9k views
-
-
"உங்களைப் பெற்றவர் என்ற காரணத்துக்காக உங்கள் அம்மாவை எப்படி மதிக்கிறீர்களோ, நேசிக்கிறீர்களோ அதே மாதிரி உங்கள் குழந்தைகளின் அம்மாவையும் நேசியுங்கள். தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் நேசிக்கிற கணவனைத்தான், மனைவி மனதுக்குள் `ஆண்' என்று கொண்டாடுவாள்." இரண்டாவது தேனிலவு... தேனிலவுக்கே போகாத தம்பதியர்தான் நம்மிடையே அதிகம் பேர். இருந்தாலும், இரண்டாவது தேனிலவு செல்வது ஏன் அவசியம்; திருமணமான எத்தனை வருடங்கள் கழித்து இரண்டாவது தேனிலவுக்குச் செல்லலாம்? இதனால், ஒரு கணவன் - மனைவிக்குக் கிடைக்கிற நன்மைகள் என்னென்ன? டாக்டர். ஷாலினியிடம் கேட்டேன். அவருடைய விளக்கமான பதில்களை படியுங்கள். தேனிலவு ஏன் அவசியம்? `திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் ஒ…
-
- 27 replies
- 3.9k views
-
-
அம்மா இருக்கும்போது செய்யவேண்டியவை. இவற்றைத்தான் அம்மா இருக்கும் போது செய்ய வேண்டியவை/ செய்திருக்க வேண்டியவை என்று என்னால் பட்டியலிட முடியுமா என்று எனக்கு தோன்றவில்லை. இதை அம்மா இருக்கும்போதும் எழுதிவிட முடியாது. அம்மாவை இழந்த வலியின் விளிம்பில் இருந்து இன்னொருவரின் அம்மாவுக்கு நடந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் வேணும் என்றால் இதை எழுதலாம் என்று தோணுகிறது. உலகில் எல்லா அம்மாக்களுக்கும் தங்களின் பிள்ளைகள் ஒரு நல்ல நிலையில் நன்றாக வாழவேண்டும் என்று ஒரு ஆசை சில வேளைகளில் பேராசையாக கூட இருக்கலாம். ஆனால் அது அம்மாக்களால் மட்டுமே முடியும். தங்களின் கனவுகளை பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிவிடலாம் என்ற ஒரு ஆதங்கதிலுமே பெரும்பாலும் வாழுவார்க…
-
- 7 replies
- 3.9k views
-
-
தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று உலகமெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பெறுகின்றது. இத் திருநாளை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது. இவ் விழா சங்க காலத்தில்; வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும் (வெய்யிலையும்), காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்தகால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தம…
-
- 0 replies
- 3.9k views
-
-
எனக்கு திடிரென ஒரு சந்தேகம் ஆண்கள் அழலாமா?...ஆண்கள் என்டால் சின்ன வயதில் தைரியசாலி,வீரர் என சொல்லித் தானே வளர்ப்பார்கள் ஆனால் அவர்களுக்கு ஏதாவது துன்பம்,துயரம் வந்தால் அவர்கள் வெளிப்படையாய் அழலாமோ ..சிரிக்கின்ற பெண்ணை எப்படி நம்பக் கூடாதோ அதே மாதிரி அழுகின்ற ஆணை நம்பக் கூடாது என நான் நினைக்கிறேன்.இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?
-
- 24 replies
- 3.9k views
-
-
வாழ்க்கையின் பல இடங்களிலும் அடிக்கடி அடி வாங்குபவள் பெண் தான். பெற்றோரின், உறவுகளின் கைக்குள் வளரும் அவள், திருமணம் என்ற சடங்கினுள் புகுத்தப்பட்டதும் பல விடயங்களில் கைவிடப்படுகிறாள்... அல்லது கவனிப்பாரற்று போகிறாள். கடந்த 7-11-2012 அன்று விஜய் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து இந்த எண்ணம் என்னை உலுப்பிக் கொண்டே இருந்தது. தன் வாழ்க்கையில் தவறும் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று எத்தனை இலகுவாக கூறி விடுகிறார்கள்.... அவள் ஏன், எப்படி, யாரால் அப்படியானாள் என்பதைப் பற்றி யாரும் பேசத் தயாரில்லை. தன் கணவனிடமிருந்து கிடைக்காத அன்பும் அரவணைப்பும் இன்னொருவரிடம் கிடைக்கும் போது, அவர்கள் மனம் பாசத்தில் ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல தடம் மாறிப் போவ…
-
- 17 replies
- 3.8k views
-