சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
மக்கள் பற்றாக்குறையில் மேலை நாடுகள் ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் பண்புகளையும், திறமைகளையும், செயல்பாடுகளையும் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்தித்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்போதுதான் நாடுகள் வளம் பெறுகின்றன. எனவேதான் அடுத்த தலைமுறையினர் குறித்து எப்போதுமே முந்தைய தலைமுறையினர் கவலை கொள்கின்றனர். ஆனால் ஒரு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கையே குறைந்து வந்தால் என்ன செய்வது? வருங்காலத்துக்குப் போதுமான குழந்தைகள் பிறக்கவில்லையெனில் ஒரு நாடு என்னவாகும்? எதிர்காலம் என்பதே இல்லாமல் போய்விடுமா? இந்த மாதிரி நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத பிரச்சினைகளில் இன்று ஒரு நாடல்ல, பல நாடுகள் மூழ்கியுள்ளன. அந்…
-
- 0 replies
- 965 views
-
-
வாருங்கள் பேசுவோம் ! இன்றைய கால கடடத்தில் நம் சமுதாயம் தாயகத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பல அதில் இதுவும் மிக முக்கியமான ஒன்று . "போதை காடடும்பாதை ". நம் இளைய சமுதாயம் சீர் கெட்டுப்போகிறது. வெளி நாட்டுக்கு காசு ...பெற்றோரின் கவனிப்பு இன்மை . உடல் உழைப்பின்மை அரச இயந்திரத்தின் திட்ட் மிட்ட் சதி ..போதையூட்டும் மருந்துகளின் தாராளா வரவு. என்பன ,. இதை தடுக்க என்ன செய்யலாம். உளவள ஆற்றுப்படுத்தலின் மையங்கள் ஒரு சில தான் உள்ளன. பணம் இதில் பெரும்பங்கு வகிக்கிறது.
-
- 1 reply
- 660 views
- 2 followers
-
-
மனைவிகளின் முதல் எதிரி ! சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். டீ கொடுத்த நண்பரின் மனைவி, ''அண்ணே, இந்த ஒலகத்துலேயே நான் வெறுக்கிற ஒரே விஷயம் என்ன தெரியுமாண்ணே?'' என்றார். நான் சிரித்துக்கொண்டே அவரைப் பார்க்க, பதிலுக்கு அவர் கொஞ்சம்கூட புன்னகைக்காமல் ''செல்போன்!''என்றார். ''ஏன்?'' என்றேன். ''சாயங்காலம் ஆபீஸ் விட்டு வந்ததும் அந்த செல்போனை நோண்ட ஆரம்பிச்சிடுவார். டி.வி பார்க்கிறது, சாப்பிடறது, புக் படிக்கிறதுனு என்ன வேலை செஞ்சாலும், செல்லு கையோடயே தான் இருக்கும். அப்பப்போ அதை எடுத்துப் பாத்துக்கிட்டே இருப்பார். தூக்கம் சொக்குற வரைக்கும் அதுதான் கதி. அப்படியும்கூட, சார்ஜ் போட்டு அவர் கைக்கு எட்டும் தூரமா வெச்சுக்குவார். காலையில அது முகத்துலதான் முழிப்பார்…
-
- 2 replies
- 1.1k views
-
-
நான் சில காலத்திற்கு முன்னர் எனது நண்பி ஒருவர் இந்தியாவில் செட்டியார் (காரைகுடி)திருமணம் செய்தது பற்றி (அந்த பதிவை பார்க்க முடியவில்லை) குறிப்பிட்டு இருந்தேன், அதற்காக அவர் தனது ஆடை அணிகலண்கள், வாழ்வியல் முறைகளில் பல மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது. அதில் ஒரு அம்சம் தான் அவர் அவரது இரண்டு மூக்குகளிலும் பெரிய மூக்குத்தி அணியுமாறு வேண்டப்பட்டார், உண்மையில் அவரது படங்களை யாழில் பிரசுரித்து கள உறுப்பினர்களின் கருத்தை அறியலாம் என இருந்தேன் ஆனால் எனது நண்பி அதை பிரசுரிக்க வேண்டாம் என்று கூறினார், ஆனால் அண்மையில் தொலைகாட்சி விளம்பரஙக்லில் அவர் திருமணம் செய்த சமூகத்தவர் சம்ப்ந்தமான ஒரு திருமண காட்சி இடம் பெறுவதாக கூறி தான் அணித்து இருப்பது போல் மூக்குத்தி அணிந்த பெண்ணின் புகை…
-
- 11 replies
- 12.7k views
-
-
[size=4]மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. ’அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’ என்பது இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி. இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது. அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும். ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றி விட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது. அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசை வளரும். அவளைக் காணாத நேரமேல்லாம் கவலைப்படும். கனவு காணும் கற்பனை செய்யும் மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல்…
-
- 11 replies
- 2.5k views
-
-
-
தமிழ்நதி புளொக்கிலிருந்து மேற்படி கட்டுரையை இணைக்கிறேன். பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும் “கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல் அவர்களாலேயே) கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது என்பதை அறியநேர்ந்ததில் வருத்தமே. முற்கூட்டிய தீர்மானங்களுடன் இப்பதிவினை வாசிக்க முனைபவர்கள் தயவுசெய்து வேறு பக்கத்தைக் கிளிக்கிட வேண்டுகிறேன். பெண்கள் ச…
-
- 15 replies
- 3.3k views
-
-
எமது சமுதாயத்தில் இரு மதத்தவர் இடையே திருமணம் நடப்பது சாதாரணமானது. ஏமது ஈழ சமுதாயத்தில் இது பெரும்பாலும் கிறிஸ்த்தவர்களுக்கும் சைவர்களுக்கும் இடையில் தான் நடக்கும். இவ்வாறான சந்தர்ப்பஙளில் பெரும்பாலும் அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் தமது மதத்தை விட்டுக் கொடுப்பவர் சைவ மத்தவராகவே இருப்பார். இது ஏன்? ஏன் சைவ மக்களால் தமது மதத்தை விட்டுக் கொடுத்து திருமணம் செய்ய தயங்குவதில்லை, அவர்களது பெற்றாரோ அல்லது சகோதரரோ ஏன் அவர்களுக்கு அறிவுறை கூறுவது இல்லை.எம்மைத் திருமணம் செய்பவரின் மதத்தை மதிப்பது முக்கியம் தான், அதற்கு இரு மத முறைப்படியும் திருமணத்தை நடத்தலாம், ஆனால் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் பலர்,முழுமையாக அல்லவா தமது மதத்தை விட்டுக் கொடுகின்றனர், …
-
- 1 reply
- 896 views
-
-
செர்மைன் லீ பிபிசி மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புக்காக நம்முடைய உறவு மேலும் நீடிக்காது என்று ஜியார்ஜிடம் யேன்ஸ் கூறியபோது, அவளுடைய கன்னத்தில் கண்ணீர் வடிந்தது. ஹாங்காங்கை சேர்ந்த 28 வயது அந்த பெண், நிம்மதிப்பெருமூச்சுடன் வீடு நோக்கி உடைந்த்க இதயத்துடன் மெதுவாக நடந்தாள். இரண்டு மாதங்களில் இருவரும் பிரிவது இது மூன்றாவது முறை. இந்த முறை அதில் இருந்து பின்வாங்குவதில்லை என்று யேன்ஸ் கூறினாள். நான் அவனை மிகவும் மிஸ் செய்கிறேன்…
-
- 0 replies
- 735 views
-
-
சிறுமிகள் யாரால் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் இதில் அடக்கம். குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள். குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்க…
-
- 0 replies
- 338 views
-
-
சமூக ஊடகமான டெலிகிராம் செயலியில், பெண்களின் அந்தரங்க படங்கள் பெருமளவில் பகிரப்பட்டு வருவதை, பிபிசியின் கள விசாரணை கண்டறிந்துள்ளது. இது அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தவும், மிரட்டவும், அவமானப்படுத்தவும் பகிரப்படுகிறது. எச்சரிக்கை: இந்த கட்டுரை பாலியல் தொடர்பான விஷயங்களை உள்ளடக்கியது. ஒரே விநாடியில், சாரா தனது நிர்வாணப் படம் டெலிகிராம் செயலியில் வெளியாகி, பகிரப்பட்டிருப்பதை அறிந்தார். அவரது வாழ்க்கை முற்றிலும் மாறியது. அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளும் அதில் இணைக்கப்பட்டிருந்தன; அவரது அலைபேசி எண்களும் இருந்தன. அடையாளம் தெரியாத ஆண்கள் மேலும் புகைப்படங்களை கேட்டு, அவரை தொடர்ந்து தொடர்பு கொண்டனர். "என்னை ஒரு பாலியல் தொழிலாளி போல் அவ…
-
- 0 replies
- 559 views
-
-
இது உங்கள் வாழ்விலும் பல தடவையோ அல்லது சில தடவையோ வந்து போயிருக்கலாம். இருந்தாலும் யாரும் இதைப் பற்றி பொதுவாகப் பேசுவதில்லை. ஆனால் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் என்ற அடிப்படையில் குருவிகளின் வலைப்பதிவில் இப்பதிவை இடுகிறேன். இப்போ நீங்கள் வெளியில் போகும் போதோ பேரூந்தில் போகும் போதோ வேலையிடத்திலோ பள்ளியிலோ மனித ஆணின் இணைப்பாலாரான பெண்களை சாதாரணமாகக் காண்பீர்கள் தானே. அவர்களைக் கண்டால் கண்கள் பார்க்கத்தான் செய்யும்.(என்ன ஒரு ஜொள்ளுப் பார்வை.. கண்ணால் பார்க்காமல் காண முடியாது தானே. அதைத்தான் சொல்ல வந்தன்.) இப்போ பிரச்சனை பெண்களைப் பார்ப்பதில் அல்ல. பெண்கள் குறிப்பாக (மேலை நாடு, கீழை நாடு என்றில்லாமல்) இந்த விடயத்தில் அவர்கள் யாருக்கும் குறைவைப்பதில்லை. என்னடா விசயத…
-
- 44 replies
- 5.9k views
-
-
ஒழுக்கம் ஒரு சிக்கலான விஷயம்: அமுதா சுரேஷ் அமுதா சுரேஷ் அமுதா சுரேஷ் நான் அறிந்தப் பெண்மணியொருவர் கணவர் விடாது கொடுமைப்படுத்துகிறார் என்றும், எத்தனை முறை காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், தம் பெண்குழந்தைகளுக்காக மறைந்து வாழ தலைப்பட்டதைப் பகிர்ந்துக்கொண்டார், அதுவும் காவல்துறையில் ஒருவர் “யார்தான் குடிக்கல, அடிக்கல, புருஷன் இல்லாம வாழ்ந்துடுவியா நீ?, வேற யாராச்சையும் பார்த்துகிட்டியா?” என்று கேவலப்படுத்தியதால் மனம் நொந்தததையும் பகிர்ந்துக்கொண்டார்! நேற்று ஒரு பெண், வாட்ஸ் அப்பில் தன் கணவர் தன்னையும் தன் ஆறு வயது மகனையும் கொடுமைப்படுத்துவதை பகிர்ந்துக்கொண்டு தற்கொலையும் செய்துக்கொண்டார் என்ற செய்தியையும், இன்று அந்தக் காணொளியையும் காண…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
"ஹலோ யாரு பேசுறது" "பிக் எப்.எம்.மோட ரகசிய சிநேகிதியா?" "ஆமாங்க நான் ரகசிய சிநேகிதி தான் பேசுறேன். நீங்க யாரு" "என் பேரைச் சொல்ல விரும்பலீங்க. என் ப்ரெண்ட்ஸ்ஸெல்லாம் என்னை தோஸ்த்துன்னு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க" "சரி தோஸ்த். உங்க காதலி பேரு என்ன? எப்போலே இருந்து காதலிக்கிறீங்க. இப்போ உங்க காதல் எந்த கண்டிஷன்லே இருக்கு?" "என் காதலியோட பேரையும் சொல்ல விரும்பலீங்க. அவங்களுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆயிடுச்சி" "ஸோ பிட்டி. என்ன ஆச்சி? எப்படி பிரிஞ்சீங்க?" "என் காதலியோட அப்பா ஒரு அரசியல் கட்சி பிரமுகர். எந்தக் கட்சின்னு சொல்ல விரும்பலை. அவரால என் உயிருக்கு ஆபத்து வருமுன்னு என் காதலியே என்னை பிரிஞ்சி வேற கல்யாணத்துக்கு ஒத்த…
-
- 9 replies
- 3.5k views
-
-
இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்களிடத்தில் வெளிநாட்டு மதுபானங்களையும் சிகரெட்டுகளையும் அறிமுகப்படுத்தாதீர்கள் மாறாக முடிந்தால் வெளிநாட்டு கல்வியையும், பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்துங்கள். மாதாந்தம் பணம் வழங்கி முதுகெலும்பற்ற தங்கிவாழும் தலைமுறையை உருவாக்காதீர்கள், முடிந்தால் நிலையான வருமானமீட்டலிற்கு -வாழ்வாதாரத்திற்கு உதவி செய்யுங்கள். இலங்கைவாழ் உங்கள் உறவுகளிற்கு ஆடம்பர வாழ்க்கைக்கு பணம் வழங்குவதைவிட இன்னமும் அடிப்படை வசதிகளிற்காய் ஏங்கும் தமிழ் உறவுகளிற்கு உதவுங்கள். பனியில் வெய்யிலில் பதினொருமாதம் வேலை செய்து ஒரு மாதம் ஒய்வெடுக்க நீங்கள் வருவதை நாமறிவோம் ஆயினும், உங்கள் ஒருமாத கால உல்லாச வாழ்க்கையையே வெளிநாட்டு வாழ்வாக எம்மவர்கள் பிழையாக புரிந்துகொள்க…
-
- 2 replies
- 508 views
-
-
காரணங்கள் இதோ! அரசும் கல்வியாளர்களும் ஆராய்ந்து பின்லாந்தைப் பின்பற்றலாம்! பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது... பின்லாந்து கல்வி முறையின் சிறப்புகள் யாவை? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது... ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில் ப்ரீ.கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி.…
-
- 0 replies
- 932 views
-
-
பனிக்காலம் வந்தாலே ஊர்ல தினமும் காலைல கலர் கோழிக் குஞ்சுகள் விக்கறவங்களை பார்க்கலாம். சைக்கிள் கேரியரில் அகலமான மூங்கில் கூடைகளை ஒன்றன் மேல் ஒன்றாக 2 அல்லது 3 கூடைகள நிறைய கோழிக் குஞ்சுகள் கொண்டு வருவாங்க. ஒரே சமயத்தில் 2 , 3 வியாபாரிகள் கூட ஒன்றாய் வந்து விற்பார்கள். பச்சை , சிவக்கு, நீலம், இளஞ்சிவப்பு , பழுப்பு என பல வண்ணங்களில் கோழிக் குஞ்சுகள் இருக்கும். எந்த வீட்டில் எல்லாம் பொடிசுகள் இருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் எல்லாம் இதற்கு டிமாண்ட் இருக்கும். எல்லோரும் வாங்கி வளர்ப்போம். நாட்டுக் கோழிகளுடன் சேர்க்காமல் இதை எப்போதும் கூண்டில் அடைத்து தனியாகவே வளர்ப்போம். நாட்டுக் கோழிகள் இவற்றை சேர்க்காது. கொத்தி காயப் படுத்திவிடும். கலர்க் கோழிக் குஞ்சுகள் வாங்கிய கொஞ்ச …
-
- 1 reply
- 3.9k views
-
-
ஆண்கள் எப்போதும், தங்கள் வலிகளை.. வெளிப்படுத்தமாட்டார்கள். அனைவருக்குமே பெண்களை விட ஆண்கள் சற்று வலிமையானவர்கள் என்பது தெரியும். ஏனெனில் ஆண்கள் எதையுமே தைரியமாக, மன வலிமையுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள். ஆனால் பெண்கள், தங்கள் வலிகளை கோபத்தின் வாயிலாகவோ அல்லது அழுதோ வெளிப்படுத்திவிடுவார்கள். அதுவே ஆண்கள் தனக்கு ஏற்படும் வலிகளை ஒரு போதும் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிலும் கஷ்டம் மனதில் இருந்தாலும் ஆண்கள் அழுது வெளிப்படுத்துவது மிகவும் அரிதானது. முதலில் ஆண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்பது ஏற்கனவே ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்போது லீட்ஸ் மெட்ரோபாலிட்டன் பல்கலைகழகத்தில், பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வலியை பொறுத்துக் கொள்வார்கள் எ…
-
- 17 replies
- 1.6k views
-
-
-
தாம்பத்திய உறவில் முக்கியமானது எது? உடனே நீங்கள் சொல்வது,உறவு என்ற சொல்லே அதைச் சொல்லி விடுகிறதே என்றா? படுக்கையைப் பகிர்ந்து கொள்வது மட்டும் தாம்பத்தியமாகி விடுமா? இல்லறம் இனிமையானதாகி விடுமா? இந்த உறவில் மிக முக்கியம்,புரிதல்,விட்டுக் கொடுத்தல்,அனைத்தையும் பகிர்தல். இன்பம்- துன்பம்,எழுச்சி-வீழ்ச்சி,வரவு –செலவு என்று எல்லாம் பகிர்ந்து கொள்ளுதல். இதைச் சொல்கையில் சமீபத்தில் நான் படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்ட கதைதான். ஆனால் அதையும் மீறி அதனுள் இருக்கும் அந்த உன்னதமான தாம்பத்திய உறவின் அழுத்ததைப் பாருங்கள். இதோ கதை-------- ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்; கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மே…
-
- 15 replies
- 2.6k views
-
-
-
ஆண்கள் அலைபவர்கள் அல்ல! ) ஓர் ஆணை காதல் வளையத்தில் சிக்கவைப்பது மிகவும் எளிது என்றுதான் பெரும்பாலான பெண்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு பார்வை, ஒரே ஒரு சிரிப்பு, கொஞ்சம் செக்ஸியான உடல் அசைவு என எதையாவது செய்தால் ஆண்கள் அம்பேல். அப்படியே குட்டி போட்ட பூனை மாதிரி தங்களையே சுற்றிச் சுற்றி வருவார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதெல்லாம் மாயைதான். அப்படியானால் ஆண்கள் பெண்களுக்காக அலைபவர்கள் இல்லையா என கேட்காதீர்கள். பெண்களுக்காக அலைபவர்கள்தான். ஆனால் காதலுக்காக அல்ல. குழம்பாதீர்கள். பெண்களிடமிருந்து எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், பணம் செலவில்லாமல், எவ்வித பொறுப்புகளும் இல்லாமல் செக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்கள் அலைவார்கள். ஆனா…
-
- 12 replies
- 2.1k views
-
-
உலகில் உள்ள உயிர் மூன்டெழுத்து உயிரை இயக்கும் சக்தி மூன்டெழுத்து சக்தியின் வடிவம் அன்னை மூன்டெழுத்து அன்னை காட்டும் அன்பு மூன்டெழுத்து அன்பை உயர்த்தும் அறிவு மூன்டெழுத்து அறிவை வளர்க்கும் பள்ளி மூன்டெழுத்து பள்ளியிற் கற்கும் கல்வி மூன்டெழுத்து கல்வியால் கிடைக்கும் பதவி மூன்டெழுத்து பதவியை சிறப்பிக்கும் இளமை மூன்டெழுத்து இளமை தரும் மணம் மூன்டெழுத்து மணத்தால் இணையும் மனைவி மூன்டெழுத்து மனைவியால் உறவாகும் மழலை மூன்டெழுத்து மழலைக்கு செலவாகும் பணம் மூன்டெழுத்து பணத்தினை தேடும் உடல் மூன்டெழுத்து உடல் சோரும் முதுமை மூன்டெழுத்து முதுமையின் பின் முடிவு மூன்டெழுத்து முடிவின் பின் தேவைப்படும் பெட்டி மூன்டெழுத்து பெட்டியில் அடங்கும் பிணம் மூன்டெழுத்த…
-
- 2 replies
- 1.6k views
-
-
பெண்களை கௌரவப்படுத்தும் சர்வதேச மகளிர் தினம் *மகளிர் தின சிறப்புக் கட்டுரை ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு வரும் வியாழக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட இந்த நாளன்று பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் பெண்களால் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளை நினைவுகூர்ந்து பாராட்டவும் பெண்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காணவும் இந்த நாளில் முயற்சி மேற்கொள்ளும் வகையில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நம் நாட்டையும் அயல்நாடான இந்திய நாட்டையும் பொறுத்தவரை வளமான நாடாக உருமாற்றுவதற்கு பெண்கள் ஆற்றிவரும்…
-
- 12 replies
- 2.7k views
-
-
ஆவிகள் பற்றிக் கண்ணதாசன் உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை. ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து. ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன. பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன. சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம். திடீரெண்டுஅ…
-
- 10 replies
- 2.1k views
-