சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
புகைத்தல் வெறும் பழக்கமல்ல, அது ஒரு நோய் புது வருஷத்தைத் தொடங்கும்போது “இந்த வருஷமாவது சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திடணும்” என்று வைராக்கியத்துடன் கிளம்புபவர்கள் பொங்கல் முடிவதற்குள் புகைபிடிப்பதை மீண்டும் தொடர்வதைப் பார்த்திருப்போம். பலரும் சொல்வதைப் போல் புகைப் பழக்கத்தை நிறுத்துவது சற்று சிரமமான காரியம்தான். ஆனால், மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை. எனது அனுபவமே அதற்கு உதாரணம். அப்பா ஆசிரியர். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர். ஆயுளுக்கும் பள்ளிக் கூடத்தில் தொண்டை வறளக் கத்தியதும், ஓய்வுநேரத்தில் புகைத்த கோபால் பீடிகளும் அவருக்குத் தீராத இருமலைத் தந்தன. பள்ளியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, திடீரென்று ஆஸ்துமா தாக்குலுக்கு ஆளாகி, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர…
-
- 6 replies
- 1.7k views
-
-
கவுரவத்துக்கான போராட்டம் உண்மையில், கவுரவம்தான் மனித குலத்துக்கு இன்றியமையாதது, பொருள் சார்ந்த லாபங்கள் அப்படிப்பட்டவையல்ல. நல்ல இயல்புகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்குத் தெரியும், பாலியல் தொழிலில் வருமானம் கிடைக்கும் என்று. ஆனால், அவர் அப்படிச் செய்வாரா? தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி-சட்னிகூடக் கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் கவுரவத்துக்காகப் போராடுகிறோம். துரதிர்ஷ்டத்தின் ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம் நிலைமை மாறாது என்ற சூழல்தான் இந்த நாட்டில் தற்போது காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்துவைப்பதற்குச் சாத்தியமே கிடையாது. இந்து மதத்தில் இருந்துகொண்டு நம்மால்…
-
- 2 replies
- 1.3k views
-
-
நான் ஒரு பெண் – ஜக்குலின் அன் கரின் நான் ஒரு பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள். ஏனென்றால் நான் ஒரு பெண். பெண்ணாக இருப்பதற்காகப் பெருமைப்படுகிறவள் என்னையும் என் போன்றவர்களையும் இந்தச் சமூகம் நோக்குகின்ற முறைக்கெதிராகக் குரல் எழுப்புமாறு நான் நிப்பந்திக்கப்படுகிறேன். பெண்களை முழுமையாகவும், தனிநபராகவும், ஆண்கள் அனுபவிக்கும் முறைக்கெதிராகவும் நான் குரல் எழுப்புகிறேன். பெண்களைச் சிறுமைப்படுத்திப் பார்க்கும் முறை பெண்கள் கூட தம்மை அப்படிப் பார்க்கும் படி செய்துவிடுகின்றது. நான் ஒரு பெண். மற்றப் பெண்களையும் போலவே அறிவுள்ளவள், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவள், எனக்கென சொந்தமான புத்தியும் கொண்டவள், என்னுடைய சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஆண்களில் தங்கி நிற்பதற்க…
-
- 0 replies
- 581 views
-
-
நான்... நான் ஒரு பெண்; நான் ஒரு மகள்; நான் ஒரு தாய்; நான் ஒரு தங்கை; நான் ஒரு மனைவி; நண்பர்களுக்கு நான் ஒரு தோழி; வேலை செய்யும் இடத்தில் நான் மேலதிகாரி. 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்று என் வாழ்க்கை இல்லை. பொருளாதாரத்தில் நான் தனித்து நிற்கிறேன். விரும்பிய உடைகளை அணிகிறேன். ஆனால், எங்கேனும் ஒப்பனைகள் இன்றி நான், நானாக இருக்க முடிகிறதா? நண்பர்களே... சில நிமிடங்கள் நான் பேசுவதைக் கேட்கிறீர்களா? சில நிமிடங்கள் போதும்... கொஞ்ச நேரத்துக்கு உங்கள் காதுகளையும் மனதையும் திறந்து அமைதியாகக் கேளுங்கள் போதும்! 'என்னது பொம்பளைப் பிள்ளையா?’ என்ற அலறல்கள் வீடுகளில் இன்று கேட்பது இல்லை. 'ஒரே ஒரு குழந்தை, அதுவும் பெண் குழந்தைதான் வேணும்’ என்று ஆசைப்பட்டு பலர் பெற்றுக் கொள்கிறார்க…
-
- 3 replies
- 3.2k views
-
-
நான் காணும் தொ.ப. ஒருவரது சான்றாண்மையால் ஈர்க்கப்பட்டோர் அவரைத் தத்தமது பார்வையில் காண முயல்வர். அச்சான்றோரின் அடிப்படைத் தத்துவங்கள் எல்லோருக்கும் பொதுவாக அமையினும், பார்வைகள் சற்றே விலகி வேறுபடலாம். அவ்விலகலும் வேறுபாடும் அச்சான்றாண்மைக்கு மேலும் அணி சேர்ப்பதாகும். நான் காணும் அறிஞர் தொ.பரமசிவன் அறிவுலகில் தமக்கென தடம் பதித்தவர். அவரை அறியாதார்க்கு சில அறிமுகச் சொற்கள். திருநெல்வேலிப் பகுதியான பாளையங்கோட்டையில் பிறந்து, வளர்ந்து, பேராசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊரிலேயே வாழ்பவர். மானுட வாசிப்பில் துறை போகியவர். சமூகப் பிரச்சனைகளில் தமது கருத்துக்களை வெளியிடுவதில் எவ்விதத் தயக்கமுமின்றி எழுதுகோலை ஆயுதமாய்க் கொண்ட சமூகப் போராளி. எடுத்து…
-
- 0 replies
- 1.8k views
- 1 follower
-
-
நான் துறவி அல்ல, காதலன்! KaviApr 01, 2023 11:31AM ஷேர் செய்ய : சத்குரு படிக்கும் வயதில் படிக்க வேண்டும், வேலை செய்யும்போது வேலை செய்யவேண்டும் என்றால், காதலிப்பது எப்போது? காதலிக்க நேரமில்லை என்றாலும், காதலில்லாமல் வாழ முடியுமா? நாம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், அதில் காதல் கலந்திட என்ன செய்வது? சத்குரு சொல்கிறார், மேலும் படியுங்கள். “நான்கு அரியர்களை வைத்து இருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணிநேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி க…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
சாதாரணமாக மது குடிக்கத் தொடங்கி, தினமும் அதை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும் நேரங்களில் பலரும் நினைக்கும் விஷயம் தான் மேற்கண்ட தலைப்பு! அந்த நாட்கள் மிகவும் சோர்வான நாட்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுதெல்லாம் இது போன்ற மனச் சோர்வுமிக்க சூழல்களை பணியாளர்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் எப்படி கையாளுகிறார்கள் என்ற விஷயம் மிகவும் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. சில அலுவலக பணியாளர்கள் குடித்து கும்மாளமிடும் பஃப்களுக்கு சென்று தங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க முயல்கிறார்கள். இதன் மூலம் வெள்ளிக்கிழமை இரவுகள் எல்லாம் குடிமயமான இரவுகளாக மெதுவாக மாறத் தொடங்குகின்றன. இதுவே வார நாட்களில் பீர் பாட்டில்களை கையில் ஏந்த ஒரு தொடக்கமாகவும் உள்ளது. …
-
- 1 reply
- 715 views
-
-
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலிருக்கும் ஸ்வாட் பள்ளத்தாக்கு பூலோக சொர்க்கம். இயற்கை தனது எழில் மொத்தத்தையும் கொட்டி செதுக்கிய அற்புதம். உலகமெங்கும் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் வாழ்நாளில் ஒரு முறையாவது அப்பகுதியை தரிசிக்க தவம் கிடப்பார்கள். அதெல்லாம் 2003 வரை. ஆப்கானிஸ்தானை ஒட்டியிருந்த இப்பகுதியிலும் தாலிபன் ஆதிக்கம் கொடிகட்டியது. பெண்கள் கல்விகற்க பிறந்தவர்கள் அல்ல என்பது தாலிபனின் தாரகமந்திரம். அவ்வளவு ஏன், வீட்டு வாசற்படியை அவர்கள் தாண்டுவதே பாவம் என்று நம்பினார்கள். ஆனால் மலாலா யூசுப்ஸாய் என்கிற பெண் குழந்தைக்கு இதெல்லாம் அவசியமற்ற மூடநம்பிக்கை என்று தோன்றியது. கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கக்கூடிய அப்பா அமைந்தது அவளது பாக்கியம். அங்கிருந்த சிறுநகர…
-
- 3 replies
- 1.6k views
-
-
நாமும், நமது முன்னோரும் பாவித்த பொருட்கள். தற்போது... இவற்றில் பல மெல்ல அழிந்து கொண்டு வருகின்றது. அடுத்த தலைமுறையில் இவை, முற்று முழுதாக இல்லாமல் போய்விடும்.
-
- 0 replies
- 259 views
-
-
டெல்லி மாணவி அமானத்'தின் மரணத்துக்காக உலகம் முழுவதும் கண்ணீர் விடுகிறது.மாணவிக்கு நடந்த கொடுமையின் கொடூரம் என்னவென்று அனைவருக்கும் தெரிந்தமை தான் இந்த கண்ணீர்கள்,அஞ்சலிகளுக்கு காரணம்.பாலியல் வன்புணர்வாளர்கள் சமூகத்தில் எத்தகைய கொடூரமானவர்கள் என்கின்ற உண்மை இப்போது தான் பலருக்கு உறைத்திருக்கிறது. அவரவர் குடும்பங்களில் நடந்தால் தான் இதனை விட அந்த வலியின் தாக்கம் எத்தகையது என்பது புரியும். இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் தினசரி இலங்கையிலோ இந்தியாவிலோ,உங்கள் பிரதேசமோ எங்கள் பிரதேசமோ,அனைத்து இடங்களிலும் வெளியே தெரியவராமல் கூட நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இன்றைய பத்திரிகையை விரித்தால் மண்டைதீவில் நான்கு வயது சிறுமி,வட்டுக்கோட்டையில் பதினைந்து வயது சிறுமி,அனுராதபுரத்தில் பௌத்த த…
-
- 4 replies
- 1.1k views
-
-
நாம் எப்படியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இவன் மனிதனா அல்லது மிருகமா? அண்மையில் ஜேர்மனிய தலைநகரத்தில் நடந்த கொடூரச்செயல். இது செய்தியல்ல......சிந்திக்க மட்டுமே. யார் இவர்கள்? எதற்காக செய்கின்றார்கள்?
-
- 4 replies
- 659 views
-
-
நாம் சாகமாட்டோம். விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம். எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள். ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை. பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரி வாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தம்புள்ளை மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை. அங்கர் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. பசளை இன்றியிம் விவசாயம் செய்தோம் நாங்கள் சாகவே இல்லை. வீட்டி…
-
- 0 replies
- 462 views
-
-
பத்திரிகைகள் சமூகத்தைப் பிரதி பலிக்கின்றன...எமது முனேறிய சமுகத்திற்கு இதைவிட அழகான உதாரணம் தேவை இல்லை...இதிலிருந்து ஆரம்பித்துத்தான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக நாடுபிடிக்கவேண்டும்...இன்னும் கொஞ்சக் காலத்தில் இப்படியான விளம்பரங்கள் யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் வரும்...ஒரு இனத்தின் போராட்டம் ஒற்றுமை அற்று அழிந்து போன வரலாற்றிற்கு உரமாய் இருந்த நச்சுப்பயிர்கள் இவை....வார்த்தை ஜாலங்களில் இல்லாமலும் நடைமுறையில் மிகமோசமாகவும் உயிர்வாழும் இந்த சமூக விலங்குகள் உடைபடாத வரைக்கும் நாங்கள் எவ்வளவு தொண்டை கிழியக் கத்தினாலும் வார்த்தைகளில் ஒற்றுமையாகவும் நடைமுறையில் தமிழின ஒற்றுமை எட்டாக் கனியாகவுமே இருக்கும்...
-
- 5 replies
- 945 views
-
-
நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதியாக நம்புங்கள்’ மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை 41 Views கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது தொடர்பில் இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர். க…
-
- 0 replies
- 285 views
-
-
நான் ஒரு நண்பனுடன் நேற்று கதைக்கும்போது சொன்னான், அவனது நண்பன் ஒருவனது தகப்பனார் சில வாரங்களுக்கு முதல் இயற்கை மரணம் அடைந்து விட்டார். அவரது மரண சடங்கிற்கு அவனும் போயிருந்தான். ஆனால் அந்த ஊர் மக்கள் ஒருவரும் அந்த மரண வீட்டுக்கு போகவில்லை, ஒரு சிலரை தவிர. அவன் சொன்னான் (இனி அவன் சொல்வது போல எழுதுகிறேன்) “அந்த ஊரில் அண்ணளவாக 400 குடும்பம் வரையில் வாழ்கிறார்கள், எனக்கு அவர்களில் பெரும்பாலானவர்களை தெரியும். ஆனால் அந்த மரண வீட்டில், அந்த ஊரை சேர்ந்த ஒரு சிலரைத்தான் (10 ம் குறைவாக) காணமுடிந்தது. மேலும் நண்பனின் நட்பு வட்டாரத்தை சேர்ந்த சிலரும் அவனது நெருங்கிய உறவினர்கள் சிலைரயும்தான் காண முடிந்தது. அந்த மரணவீடுக்கு மொத்தமே 50 - 60 பேர்தான் வந்திருப்பார்கள். நானும் எல்லா ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாளைய தலைவர்களுக்கு இடமளிப்போம்! - கருணாகரன் “எங்களுடைய காலத்தைப்போல இன்றில்லை. இப்போதைய இளைஞர்கள் நன்றாகக் கெட்டுப்போய் விட்டார்கள். எந்த நேரம் பார்த்தாலும் கைத்தொலைபேசியும் அவர்களுமாகவே இருக்கிறார்கள். இல்லையென்றால் தண்ணி (மது) அடிக்கிறார்கள். அல்லது கூட்டமாக வம்பளந்து கொண்டு, ஊர் சுற்றுகிறார்கள். குடும்பத்தின் நிலை என்ன? பொருளாதார வசதி என்ன என்றெல்லாம் முன்பின் யோசிக்காமலே விலை கூடிய பைக்குகளை வாங்கித்தருமாறு அடம் பிடிக்கிறார்கள். கடன் பட்டு பைக்கை வாங்கிக் கொடுத்தால், வேலை வெட்டியில்லாமல், அந்த பைக்கில் இன்னும் நான்கைந்து பேரைச் சேர்த்துக் கொண்டு இரவு பகல் என்றில்லாமல் எங்கெல்லாமே அலைகிறார்கள். எங்கே போ…
-
- 0 replies
- 391 views
-
-
நாள் 7- ஓனாயும் ஆட்டு குட்டியும் - Niyaz Baseer
-
- 0 replies
- 903 views
-
-
த்தியானந்த குருவும் சீடர்களும் ஆர்.அபிலாஷ் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை - இந்தியன் ஐந்து வருடங்களுக்கு முன் சத்யசாயி பாபாவை விமர்சனம் செய்யும் ஜி.ஆர்.ஆர். பாபுவின் “Sex,Lies, and Video Tape” என்கிற கட்டுரையை புதியகாற்று என்கிற பத்திரி கைக்காகத் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தேன். ஒருநாள் அது பற்றிக் குறிப்பிட்ட போது என் காதலி “தயவுசெஞ்சு அதைப் பண்ணாதே” என்று கெஞ்சினாள். அதனால் ஏதேனும் கேடு நேரும் என்று அவள் அஞ்சினாள். எனக்கு விநோதமாக இருந்தது. அவள் தீவிர சாய் பக்தை ஒன்ற…
-
- 3 replies
- 2.7k views
-
-
வணக்கம் உறவுகளே, எனக்கு பரீட்சைகள் வருகிறது. வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பகலில் படிப்பது மிகவும் கடினம். இரவில் விழித்திருந்துதான் படிக்க வேண்டும். வேலையிலிருந்து லீவு எடுத்துப் படிக்கவுள்ளேன். இரவு முழுவதும் நித்திரை முழித்திருந்து படிப்பதற்கு என்னென்ன செய்யலாம் எனக் கூறுவீர்களா?
-
- 25 replies
- 7.2k views
-
-
நினைத்ததை நடத்தியே முடிக்க ஆசையா?! சில முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள் 'உங்களின் வெற்றி ரகசியம் என்ன?' என்று உலகப் புகழ் பெற்ற செய்தியாளர் டயானே சாயரிடம் ஒரு மாணவர் கேட்டபோது அவர் தந்த பதில், 'எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். அதுவே நான் கற்ற பாடம்!' நண்பர்களே உலகில் இரண்டே வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர்-கழுத்தை நெரிக்கும் டெட்லைனில் முழுக் கவனம் செலுத்திக் காரியத்தை முடிப்பவர்கள். இன்னொரு வகையினர்- இந்தச் செயலுக்கு இந்த அளவு கவனம் போதும் என்று நிதானமாகச் செய்து முடிப்பவர்கள். சினிமா, செல்போன், டி.வி, இன்டர்நெட், கேர்ள்/பாய் ஃப்ரெண்ட் என உங்கள் கவனம் கலைக்க இன்று காரணங்கள் ஆயிரம். இந்த வெளிப்புறக…
-
- 1 reply
- 12.3k views
-
-
‘எதிர்பாலினர் மீது வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் காதல் வரும்’ என்று சொல்வார்கள். அப்படியானால் அதுதான் முதல் காதல். நமது இந்திய கலாசாரத்தைப் பொறுத்தவரையில் பலரும் அடிக்கடி காதலிப்பதில்லை. அப்படி காதலித்தால் அதை ஒரு ஒழுக்கக் கேடாகவே கருதுகிறார்கள். வாழும் வரை ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று காதலித்துக் கொண்டே இருப்பதும், அடிக்கடி திருமணம் செய்துகொண்டே இருப்பதும் வெளிநாட்டினர் கலாசாரம். அதனால் அங்கு காதலும், கல்யாணமும் பொழுதுபோக்காக இருக்கிறது. இங்கும் அந்த நிலை இப்போது தோன்றிக்கொண்டிருக்கிறது. ‘சும்மா நேரப்போக்குக்காக காதலித்தேன்’ என்று ஆண்களும், பெண்களும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முதல் காதல் என்பது அவர்களுடைய ஆன்மாவில் வெகு ஆழமாக ப…
-
- 17 replies
- 1.9k views
-
-
நியமான வாழ்வியல் எது ?நன்றாக கிரகித்து அசல் எது நகல் ( நசல்) எது? இது எல்லாம் சாத்தியமா என்று கேள்வி கேட்க தெரிந்த கழுதை வயதிலும் நாடகங்கள் நீலப்பட ங்கள் ஹீல்ஸ் (REELS) இவைகளில் காட்டப்படும் அனைத்தும்நியமான வாழ்வியல் தான் என்று நம்பி அதே போல் வாழ முற்பட்டு வாழ்க்கையை வாழ முடியாமல் நாங்களே திண்டாடும்போது ......எதுவுமே தெரியாத அனுபவமே இல்லாத குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுவதால்அவர்களின் மனதில் நியமான வாழ்வியல் என்பது எப்போதும் எல்லாவற்றிலும் வெற்றி தீயவர்கள் நல்லவர்கள் யாரானாலும் தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் விலை உயர்ந்த பொருட்களில் இருந்து எல்லாவற்றையும் உடைத்து சேதப்படுத்தலாம் எத்தனை நூறு பேரை சுட்டால் என்ன வாகனங்களினால் நெரி த்தால் என்ன? தனக்கு எத…
-
- 0 replies
- 548 views
- 1 follower
-
-
ஒருவர் பெற்றவரால், சுற்றத்தால், உறவினரால், நண்பரால்,கணவன் மனைவியால், காதலன் காதலியால், பிள்ளைகளால், ஆசிரியர்களால், சக மாணவர்களால்,ஏன் முகம் தெரியாத யாரோ ஒருவரால் கூட நாம் நிராகரிக்கப்படலாம். மற்றவரால் நாம் நிராகரிக்கப்படும்போது ஏற்படும் வேதனை, ஏமாற்றம், தவிப்பு என்பன எம்மை வாழ் நாள் பூராகவும் நினைவில் வந்து கொல்லும் வல்லமை கொண்டது. சிலர் அவற்றை உடனே மறந்துவிட்டாலும் எப்பொழுதோ ஒருமுறை நினைவில் வந்து குதியாட்டம் போடுவதைத் தடுக்கவே முடியாது. சில நிராகரிப்புகள் காரணமின்றியே எம்முடன் கூடவே இருந்து தினமும் கொல்லும் தன்மை வாய்ந்தது. எம்மை எந்த வேலையும் செய்ய விடாது மனதை அழுத்தி எம்மை நோய்க்கு உட்படுத்தும். தூக்கம் தொலைக்க வழிவகுக்கும். இன்னும் எத்தனையோ எழுதிக்கொண்டே போகலாம்.…
-
- 40 replies
- 3.5k views
-
-
நிர்வாணமே ஆயுதம் எட்டு ஆண்டுகளுக்கு முன் தினசரி செய்தித்தாளில் படித்தது. தோலாடைகளுக்காக மிருகங்களைக் கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பியப் பெண்கள் பலர் நிர்வாணமாகக் கொட்டும் பனிமழையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுபோல், ஈராக் மீது போர்த்தொடுக்க அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியப் படைகளை அனுப்பாதே என்று ஆஸ்திரேலியா பெண்கள் பலர் ‘No War’ என்று நிர்வாணமாக புல்தரையில் படுத்துக்கொண்டே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களின் துணிச்சல் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த பூமி இன்று ஆணின் கையில் இருக்கிறது. யுத்தத்தின்போது, ஒருநாட்டின் படை, வேறொரு நாட்டிற்குள் நுழையும் போது அந்நாட்டின் ஆண்களை சித்திரவதைச் செய்து கொல்கிறார்கள். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட…
-
- 4 replies
- 1.4k views
-
-
நிறமிழக்கும் வண்ணங்கள் சரி எங்குதான் போவது, ஒருவாறு சமாளித்துகொண்டு இருந்துவிடும் எம்மில் பலரும், இரண்டு வருடங்களுக்கு ஒருதடவையேனும், மாறிக்கொண்டே இருப்பர். இருப்பதை ஆங்காங்கே மாற்றிமாற்றி அடுக்கிவைப்பதைத் தவிர, புதிதாக வாங்குவதற்குக் கனவு கண்டாலும், அது கனவிலேயே கலைந்துவிடும். ஏனெனில், சில வாடகை வீடுகளில், மாடிவீட்டுக்கான ஏறுபடிகளைக் கூட, தங்கள் வீட்டுக்குள்ளே ஒழித்துவைத்துக் கொள்வர். அதனால்தான் என்னவோ, “கல்யாணம் கட்டிப்பார்; வீட்டைக்கட்டிப்பார்” என, முன்னோர் கூறிக்கொண்டிருப்பதை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். கல்யாணத்தைக் கட்டிக்கொள்ளும் எம்மில் பலருடைய, வீட்டைக் கட்டுவதற்கான ஆசைகள், நிராசைகளாகவே முடிந்துவிடுகின்றன. இருக்கும் வரையிலும் சொந்த வீடிலில்லா…
-
- 0 replies
- 676 views
-