கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இக்கவிதையை எழுதியவன் ஒரு முன்னாள் போராளி. இவனது பெயர் யோ.புரட்சி. சிறைகள் வதைகள் யாவும் சென்று வந்தும் தனது எழுத்துப்பயணத்தை தொடர்கிறான். அண்மைய மாகாணசபை பதவியேற்பு அடிபிடிகள் பற்றி பேசிய போது தனது எண்ணத்தை எழுத்தாக்கி அஞ்சலிட்டிருந்தான். அடிவாங்கியும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் இந்த இளைஞனின் கனவுகள் இன்னும் நீண்டபடியேதான். அவனது கவிதையை யாழ்கள வாசகர்களுக்காக எடுத்து வந்திருக்கிறேன். பத்திரிகைகள் வானொலிகளில் இவன் எழுதிய எழுதிக் கொண்டிருக்கும் படைப்புகளையும் இனி யாழ் வாசகர்களுக்கும் எடுத்து வருவேன். இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயராத நாய் என்றொரு கவிதைத் தொகுதியை இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்டுள்ளான். புத்தகத்தை பெற்றுக் கொள்ள விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்…
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரிவு பூக்கள் உதிரும்போது காம்புகள் அநாதையாகின்றன... ஒய்வு ஒவ்வொரு இறகையும் கோதிவிடுகையில் உதிர்ந்து போகிறது பறவையின் களைப்பு... கவலை துரத்தில் மைதானத்தில் புள்ளி புள்ளியாய் கால்பந்தாடும் சிறுவர்கள் யன்னலோரம் கவலைகளில் இளமையைத் தொலைத்துவிட்டு நான்.. மதம் எல்லா வீதிகளும் தொலைந்து போகின்றன நெடுஞ்சாலையில்... மரணம் ஒவ்வொரு மரணத்திலும் முற்றுப்பெறுகிறது காலம் எழுதிமுடித்த ஏதோ ஒரு அத்தியாயம்.. முயற்ச்சி மின்மினிகள் போராடுகின்றன இரவை எரித்துவிட.. மௌனம் காற்றின் சலனங்களில் கலைந்து போகிறது மரங்களின் மௌனம்..
-
- 2 replies
- 597 views
-
-
உன் பார்வையில் பார்த்துக் கொண்டேன் என் கண் காட்சியை * உன்னை சுற்றியதில் சேலைக்கு கிடைத்தது அழகான தேவதை * தேடிப் பார்க்க தொடங்கினேன் எனக்குள் இருக்கும் உன்னைக் கொண்டு உனக்குள் இருக்கும் என்னை * உன்னை பார்த்த களைப்பில் ஓய்வெடுக்க விரும்புகிறது கண்கள் உழைக்க விரும்புகிறது உதடுகள் * முத்தத்தை முடித்து வைக்க பிரம்மன் வைத்தான் உன் உதட்டில் ஒரு மச்சம் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 855 views
-
-
"பகை வந்த வாசலில், சிறையுண்ட வாழ்வில் பயம் வந்து சேரும். தடை வென்ற பூமியில், நிமிர்கின்ற போதில் பலம் வந்து சேரும்." (ஈழத்தில் பல சந்திகளில் இப்படிப்பட்ட வாசகங்கள் உள்ளன.)
-
- 2 replies
- 996 views
-
-
கடலுக்கு அரசி கடற்காரிகைகளில் அவள் அழகு சுந்தரி..! கவிழ்ந்திடாத வரலாறு தந்து காலம் பல வாழ்ந்து காவியங்கள் படைக்க வந்தவள்..! அவள் தான் கொஸ்ரா கொன்கோடியா..! அன்றைய பொழுதும் நீலக் கடல் நடுவே.. அவள் பயணம் அமைதிப் பயணம்..! அரசியின் ஆட்சியில்.. ஆயிரம் ஆயிரம் பேராய் அரசவையில் அகம் மகிழ்ந்திருக்க இவள் வந்தாள்.. கண்ணிமை பொழுதில் அரசனைக் கவிழ்ந்தாள்.. அரசியும் கவிழ்ந்தாள்..! வரலாறு மாறிப் போனது.. கவிழ்த்திட முடியாது என்பதே பெண் என்பதன் முன் கவிழ்ந்து கிடந்தது…! உயிர்ப் பலிகளும் அங்கு..! பேயே கவிழும் போது கப்பல்…???! கப்பலே கவிழும் போது.. அர்ப ஆண்கள்..?! இது சதியா… விதியா..??! இயற்கையே உனக்கேனிந்தக் கொலைவெற…
-
- 2 replies
- 972 views
-
-
நெருப்பு நீ, நீர் நான். சூரியத் தகட்டில் வெப்பந் தணியா நெருப்பு நீ, வா! வந்தனை பூமியை உருட்டு; திரட்டு; என்னோடு இணைந்து பிரட்டு. என்னுள் ஊடுருவி உள் துளை கக்கிய தீயெடுத்து நாக்கிலே குழை. அணை என்னை; அல்லது அணைப்பேன் உன்னை. பிதுக்கி யெடுத்தவாறு பதுங்கி வா! தொடு முத்தமிடு தீ முழுவதுமாய் கக்கு, முடிந்தவரை போராடுகிறேன். சத்தமிடு, மொத்தமும் இடு. இன்னதென அறியாமல் தொடுகிறேன் உன்னை தாக்கு; தேக்கு காதல் ரசங்களை (உன்)ஜுவாலைகளின் வழியே போக்கு. சுவடெரித்து விட்டு திரும்பச் செல்; இல்லயெனில் எனை நீரென்றும் பாராமல் கொல். உடுத்து; படுத்து; உன் கோப வெறிக்கு ஆளாகாத என்னை உன் சாம்பலிலே கிடத்து. அகல விரி விழ…
-
- 2 replies
- 1k views
-
-
ஆவி ஈந்தவர் முகத்தில் ... ஈ மொய்க்கும்..! ஆசுவாசமாய்.... இருக்கையின் இருபுறம் இரு கை ..விரித்துக்கொண்டே சொல்கிறாய் - புலி முடிந்ததென்றே! தளங்களை வென்றவர்... வென்றதெல்லாம் தளங்களா? எமக்காய் தலங்கள்! நாவில் ஈரமென்று .. யாரோ சொன்னார்... மெய்யில்லை நண்பா நண்பா! உனக்கு................. அதன் சுவையரும்புகளில்.. நஞ்சின் கசிவு! சாணம் மேல் ஈயாய் கிட...! உரம் அது என்று தெரிந்தும்.. ஈரத்தை உறிஞ்சு.... மண்ணில் புதைக்கும் நாள் வந்தால்.... எழுந்து பறப்பாய்..!! இருப்பதை ஏளனம் செய்தாலும்... ஆலமரத்தை உன்னால் தனித்து.... ஆண்டியாக்க முடியுமா? வேர்களுக்கும் - விழுதுகளுக்கும் எதிரி ஆவாய்!
-
- 2 replies
- 1.1k views
-
-
ராஜபக்க்ஷே..! நம் சாம்பல் மேட்டில் உன் கருகிய பிணம் விழும்.... கவிதை - இளங்கவி துட்ட கைமுணுவின் அடுத்த அவதாரம்..... சிங்களர் புகழ்வார் உன் புகழ் எந்நாளும்...... சிங்களர் வாழ்வில் நீயோர் சரித்திரம் தமிழர் வாழ்வுக்கொ நீயோர் தரித்திரம்..... பூக்காத மொட்டையும் கருவிலே கசக்கினாய்.... பூத்த மலரெல்லாம் தீயிலே பொசுக்கினாய்.... தமிழர் பிணங்களின் நடுவில் உன் இராச்சியம் நடத்துவாய்.... பொய்கள் உரைத்து உன் தேசியம் விளக்குவாய்..... தமிழரின் அழுகுரல் உனக்கு உன் தேசிய கீதமா...? எங்களின் பிணங்கள் உன் புல் தரை புற்களா...? ஆடுகள் நனைவதில் நீ ஓநாய் கவலையாம் உன் அழிவுத்திட்டத்துக்கு; தமிழரை அழைப்பதே உன் வேலையாம்.... தம் உ…
-
- 2 replies
- 1.4k views
-
-
உறவுகட்காய் சிலதுளிகள் மண்மீட்புப் பணியினிலே மாவீரர் ஆகிவிட்ட மாண்புகளை எமக்களித்த மகத்தான பெரியவர்க்காய் எம் மண்ணின் நினைவுடனே எங்கெங்கோ வாழ்ந்திருக்கும் எம்களத்து உறவிடத்தில் என்னுடைய விண்ணப்பம் http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=208806#208806
-
- 1 reply
- 1.1k views
-
-
இங்கு விசமாகிபோகும் மனிதர்களும் உண்டு உணர்வுகளை புரிந்துகொள்ளாத மனிதர்களும் உண்டு உடுத்தியிருக்கும் உடையின் உள்ளிருக்கும் பாகத்தை பார்க்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனை தாக்கி அளிக்க துடிப்பவர்களும் உண்டு சக மனிதனின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் மனிதர்களும் உண்டு ஆறறிவு படைத்த மனிதனுக்குள்ளே எத்தனை விதமான எண்ணங்கள் ஐந்தறிவு படைத்த விலங்கினங்களுக்கு இல்லாத அத்தனை குணமும் இங்கு மனிதர்களுக்கு இருக்கிறது அத்தனையும் வன்முறையா? இல்லை குரூரமா? புரியாத புதிராய்!
-
- 1 reply
- 853 views
-
-
1 பேச வாயற்று போன இடத்திலிருந்தே வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன; விழுகின்ற வார்த்தையினால் கொதிக்கும் ரத்தத்தில் தான் - மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!! ----------------------------------------------------------------- 2 நாம் அணியும் ஒவ்வொரு சட்டைக்குள்ளும் நம்மை காக்கும் - மானமும் இருக்குமெனில் அதற்குள் - விடுதலையும் இருக்கும்!! ----------------------------------------------------------------- 3 வெள்ளைக் கொடியில் விடுதலை எல்லாம் - இனி வெற்று வாய்க்கு மெல்ல வெற்றிலை போல்; உடல் கீறி ஒழுகும் ரத்தம் நனைத்தேனும் சிவக்கட்டும் - இனி வெள்ளைக்கொடி!! ----------------------------------------------------------------…
-
- 1 reply
- 690 views
-
-
உன்னால் கவிஞன் ஆனதிலிருந்து உனக்காக எழுதி எழுதி என் அயுளைக் குறைத்துக் கொண்டத்துதான் மிச்சம் நீ என்னை புரிந்து கொண்டதுமில்லை இனியும் புரிந்து கொள்வாய் என்ற நம்பிக்கையும் இல்லை நீ என்னை வாசித்ததில்தான் தவறு என்று எண்ணியிருந்தேன் இப்போதுதான் புரிகிறது உனக்கு தெரிந்த மொழியில் நானிருக்கவில்லையென்று என்னை உனக்கு விளங்கப்படுத்திக் கொண்டேயிருக்க என் அயுளை உனக்காக கரும்பலகையாக்க முடியாது பொறுமைக்கும் எல்லை இருக்கிறது தண்ணீர் கூட மூன்று தடவைக்குமேல் பொறுக்காது நான் எத்தனை ஆண்டுகள் பொறுப்பது நீ என்னை புரிந்து கொண்டு வருவாய் என்று போதும் இதுவரை உனக்காக கவிதையோடு நான் காத்திரு…
-
- 1 reply
- 915 views
-
-
எங்கள் கனவு சுதந்திர வாழ்வு உங்கள் ஆசை அகண்ட வேலி வேலியை அகட்டும் வேலைக்கான கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர் ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர் இருந்தும் கனவின் தினவை கண்களில் ஏந்தியோர் சொந்தக் கால்களில் நடக்கத் தொடங்கினர், புராணகாலப் பொழுதில் இருந்தே உமக்கு நாம் தான் போரும் புகைச்சலும் கடல் தாண்டி நீவிர் கதியால் போட வந்தவேளை மீண்டுமொருமுறை எங்கள் பூஞ்சோலை உங்கள் வானரங்களால் பிய்த்தெறியப்பட்டது அந்தப் பூக்களை தொடுத்தே நாங்கள் ஏவியோன் கழுத்தில் மாலையை ஏற்றினோம் சிதைதலின் வலி எத்தகையதென்பதின் நினைவூட்டல் அது, அதன் பின் காலம் சுழன்று நிழலின் பின்னே நிசமாய் அரசு நிகழ்ந்தது எத்தனை உயிர்களின் …
-
- 1 reply
- 860 views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை என்று சொல்லப் பட்டுள்ளதே தர்மத்தின் தோல்விகளில் இருந்து ஆரம்பிக்கிற மாகாவியங்களில் முன்னமே இதுபோல் பாடல்கள் உள்ளன. காலம்தோறும்…
-
- 1 reply
- 1.6k views
-
-
என் காதலை உன்னிடம் சொன்னபோது உன் இதயம் வெற்றிடமாக இல்லையென்றாய், உன் இதயக் கோயிலில் குடியிருக்கும் குபேரனை நினைத்துப் பொறாமைப்பட்டேன், அவனைவிட அதிஸ்டசாலி இருக்கமுடியாதென்று. அப்புறம்தான் அறிந்துகொண்டேன் உன் இதயம் ஒரேயொரு ஆண்டவனுக்குரிய ஆலயமல்ல, பல குடியிருப்பாளர்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பென்று. ஆறுதலாக வீடு தேடிய அதிஸ்டசாலி இப்போது நான்தான்.
-
- 1 reply
- 917 views
-
-
[size=4] [/size] [size=6][size=5] மலமும் உமிழ்நீரும் கூட அழகாய் தெரிகிறது மகிந்தா உன் மானங்கெட்ட முகத்தை காணும் போது[/size][/size] [size=5][size=6] [/size] பக்கத்துக்கு பேய்களும் சீனத்து நாய்களும் வக்கத்த உனக்கு வலுவேத்த இல்லை எனில் திக்கத்து போயிருப்பாய் திறனி இன்றி வாடி இருப்பாய் தமிழனின் வீரத்தில் தறிகெட்டு ஓடி இருப்பாய் தன்மானமற்றவனாய் மண் மூடி போயிருப்பாய் ஆண்மையை வித்து நீ ஆயுதம் வாங்கினாய் எங்கள் ஆண்மகன் நினைவிலே தினம் அச்சத்தில் தூங்கினாய் இருளிலே விளக்கேற்றி இல்லத்தை மெருகேற்றி தெருவிலே கோலமிட அவளை சுற்றி தேனிக்கள் ரீங்காரமிட சிரிப்பிலே குழந்தையாய் சிந்தையி…
-
- 1 reply
- 571 views
-
-
''அதுவரை எம்தேசம் உனக்காய் அழுதிடட்டும்'' தேசத்தின் தாய் மகளே தெரு நாய்கள் உன் உடலை கடித்து குதறி உன் உயிரை காவு எடுத்ததுவோ...? சுதந்திரத்தின் வீரர்களாம் சுடுகாட்டு நரிகள் - உன்னுடலை கண்ட துண்டமாய் வெட்டி காட்டுக்குள் எறிந்ததுவோ.... என்ன நீ நினைத்து என் பாடு நீ பட்டாய்.. யாரறிவார் இன்றம்மா யான் அழுகிறேன் உனக்காய்... தொண்டுகள் செய்திடவே தொண்டனாகி நீ வந்தாய்- இன்று காம குண்டர்களால்- உன்னுயிர் காவு போனதுவே.... நினைத்து பார்க்கையிலே நெஞ்சு வெடிக்குதம்மா கைகள் துப்பாக்கி காவிடவே துடிக்குதம்மா... உன்னை வெட்டி கொன்றவரை சுட்டு தள்ளிடவே சுடு கலனை தேடுதம்மா... சிரித்த மலருன்னை சிதை;தானே சிந்துயனே தானுண்டு…
-
- 1 reply
- 973 views
-
-
எல்லாமும் நீயே அன்பாலே கவர்ந்திட்ட கண்மணியும் நீயே ஆவியுடன் இரண்டாகக் கலந்தவளும் நீயே இல்வாழ்வை இனிதாக்க வந்தவளும் நீயே ஈருடலில் ஓருயிராய் இணைந்தவளும் நீயே உணர்வுக்கு உயிரூட்டம் தந்தவளும் நீயே ஊடல்கள் செய்கின்ற முழுநிலவும் நீயே என்மனதை எளிதாகச் சரித்தவளும் நீயே ஏக்கத்தைக் களைந்திட்ட பெருநிதியும் நீயே ஐயங்கள் தீர்க்கின்ற அறிவணங்கும் நீயே ஓன்றித்துப்; போய்விட்ட எனதுயிரும் நீயே ஓயாமல் துன்பத்தைத் துடைத்தவளும் நீயே ஓளசதமாய் வந்திட்ட ஆரணங்கும் நீயே நீயே இனியெனக்கு எல்லாமும் நீயே
-
- 1 reply
- 1k views
-
-
படுவான்கரைக் குறிப்புகள் – (நீள்கவிதை)-கருணாகரன் (Remarks Of Paduvankarai) கைவிடப்பட்ட போராளியின் குறிப்பு (01) முள் குத்திய கால் சிந்திய ரத்தத்தில் படுவான்கரைப் புழுதி சிந்திய ரத்தம் மட்டுமல்ல, எழுந்த அழுகையொலியும் படுவான்கரையின் காய்ந்த குரல்தான். அங்கிருந்து நானூற்றுக்கு மேல் சின்னப்பெடியனுவள் வடக்கு நோக்கி நடந்தம். அது விடுதலைப்பயணம் என்றார்கள் எந்த நட்சத்திரமும் வழிகாட்டவில்லை கூடிப் பழகியவரும் கூட்டிச் சென்றவரும் பிறத்தியாராகினர் அறிந்திராத திசையில் விரும்பிச் செல்லாத பயணத்திற்கு வழிகாட்டிகள் உண்டென்றார். நிகழ்ந்த பயணத்தில் வழிநடத்தும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்த தலைகளின் கீழ் இதயம் மறுத்துரைத்தது அதுவல்லத் திசை அதுவல்ல வழியென்று. காலடியில் நாறிக்கிட…
-
- 1 reply
- 673 views
-
-
o ------------------------------------------------------------------ நாட்கள் சலித்துப்போன நாட்காட்டியில் குறித்து வைத்த திகதிகள் ஊட்டிய நிறத்தை இழந்துகொண்டிருக்கின்றன. வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மா மீளவும் ஒரு திகதியை அறிவித்திருக்கிறாள். யரோ ஒருவருடைய வீட்டில் அவிந்துகொண்டிருக்கிறது எங்களுக்கான உணவு. வெளியேறி வருவதற்கான அம்மாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட முதல் நாள் மாலை அரிசியும் காய்கறிகளும் வாங்கி வைத்திருந்தேன். புழுதி படிந்து காலம் முடிந்த பேருந்துகள் வந்துகொண்டிருக்கும் வழியால் நகர மறுக்கிற பேரூந்தில் அம்மா வருகிறாள். இன்னும் வளராமல் இருக்கிற தலைமுடியை இழுத்துக்கட்டியபடி தங்கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
இதோ உதடுகள் உன் பெயரை உச்சரிக்கும் மறுகணமே விரல்களுக்கு நடுவே விருக்கெனப் புகுந்து விடுகிறது வீரம்! பிரபாகரன் என்ற இப்பெயருக்குத்தானே பீரங்கிகளும் பின்வாங்கின! பிரபாகரன் என்ற இப்பெயர் கேட்டால்தானே இப்பிரபஞ்சமே பிரமித்து நிற்கிறது! வேங்கை உன் வேகம் கண்டு சிறுநீர் கழித்தபடியல்லவா சிதறி ஓடின சிங்களத்து சிறு நரிகள்! புரட்சி என்ற சொல்லுக்குப் புது இரத்தம் பாய்ச்சிய நீ புலித்தலைவன் மட்டுமல்ல! எமைப் பொறுத்தவரை இப்புவித் தலைவனும்கூட! கட்டுப்பாடு என்பதன் அர்த்தத்தை நீ கட்டியெழுப்பிய படைகளிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்! உன் ஆயுதம் சினுங்கியவரையில் தன ஆணவம் அடங்கியல்லவா கிடந்தது சிங…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாராட, பார்த்தாட, பாதைபல வார்த்தாட வகுத்த பிரபாகரம் வாழீ போர்த்து மழைத்துளி பொழியும் பொன்முகிலைச் சுமக்கும் ஆகாய வெளியே! நீ வாழீ ஆர்த்து அலை எறிந்து அன்பு நுரை சுரக்கும் ஆனந்தக் கடலே! நீ வாழீ பார்த்து வர்ணப் புன்னகைக்கும் வனப்புகளில் கோலமிட பூத்தெழுந்த பூமகளே! வாழீ - இங்கு வார்த்து ஒரு வாழ்த்துரைக்க வல்லமை கோர்த்துவந்த திகட்டாத செந்தமிழே! வாழீ காலமகள் புதல்வனை தூளியிலே தந்த கார்காலத் திங்களே! வாழீ - அக் கதிரவனின் கால் தடங்கள் வலயவரப்பெற்ற வல்லமைத் திருமண்ணே! வாழீ சூரியப் புதல்வனைத் தழுவிச் சுழல்கின்ற கனிவான காற்றே! நீ வாழீ - அடர் காட்டிடை அணைத்துக் களைப்பாற்றி அனுப்பிய அழகான தருகளே! வாழீ மானமகன் தலைசாய்ந்த…
-
- 1 reply
- 876 views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
கடல் நுழையும் மணற் பதுங்குகுழி ஒரு பக்கத்து வானத்தில் பெருந்துயர் மிகு சொற்கள் எல்லாருக்குமான பாவங்களைச் சுமக்கும் சனங்களின் குருதி மிதக்கும் துண்டுக் கடலில் கறுப்பு இரவு திரிகிறது. எல்லாவற்றையும் கிடங்கிலிருந்து கழித்து ஓ.. என்ற பெரும் மூச்சை மணல்வெளியில் புதைத்தாய் வானம் தாறுமாறாய் கிழிந்தது. சப்பாத்துகள் நெருக்கி கடலில் தள்ளிவிடத்துடிக்கும் ஒரு துண்டு நிலத்தில் எச்சரிக்கப்பட்டிருக்கும் வாழ்வு மணல் போல உருந்துபோகிறது. எல்லாவற்றையும் இழந்து ஒடிவரும் இரவு சிக்கியது மிருகத்தின் வாயில் எறிகனை கடித்த காயத்திலிருந்து கொட்டும…
-
- 1 reply
- 934 views
-