கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கடவுளின் ஞாயிறு - கவிதை கவிதை: அ.வால்டர் ராபின்சன், ஓவியம்: ரமணன் ஞாயிறென்றும் பாராமல் இன்பாக்ஸில் தொடர்ச்சியாக வந்துவிழும் வேண்டுதல்களால் எரிச்சலுற்ற கடவுள் தனது கைப்பேசியை எதிர்ச்சுவற்றில் ஓங்கி அடிக்கிறார் இதுவரை நிறைவேற்றிய வேண்டுதல்களுக்காக ஒருமுறைகூட நன்றியை ருசித்ததில்லையென வருத்தம் கொள்கிறார் தான் மிகக் கடுமையான மனஅழுத்தத்தில் இருப்பதாகச் சிதறிக்கிடக்கும் கைப்பேசிச் சில்லுகளைப் பார்த்து ஆவேசமாகக் கத்துகிறார் ஆசுவாசப்படுத்திக்கொள்ள மனிதக்கூட்டத்தில் ஒளிந்துகொள்வது சரியெனப்படுகிறது கடவுளுக்கு பூமிக்குத் திரும்ப நினைத்த மறுகணம் ஒரு புறவழிச்சாலையின் திருப்பத்தில் இறங்கிக் கொள்கிறார் வெயில் சுடும் உடலி…
-
- 1 reply
- 1.9k views
-
-
கல்லையும் கடவுளென்பர் - தாவும் குரங்கையும் கும்பிடுவார் மாட்டையும் மாதாவென்பர் - அதன் மலத்தையும் மதித்திடுவர் பாவிகளையும் பகவானென்பர் -பகைப் பாம்புக்கும் பால்விடுவர் சனியையும் சாமியென்பர் - சுடும் சூரியனையும் சிறப்பிப்பர் தர்மத்தைத் தொலைத்திடுவர் - தவிக்கும் தமிழரைத் தவிர்த்திடுவர் http://gkanthan.wordpress.com/index/pakthar/
-
- 1 reply
- 927 views
-
-
எமக்கென ஒரு நாடு ! ----------------------------------- புலம் பெயர்ந்த எங்களது உறவுகளே நாடற்று ஓடியோடி வாழ்கின்ற நிலைதானா ! வரலாற்றில் எங்களுக்காய் ஒரு நாடு அமைப்போமா வாழாதிருந்து நாம் அடிமைகளாய் மடிவோமா ! அனாதை இனமாக அடையாளம் இழந்தவராய் அழகற்ற வாழ்வையா எமக்காக விட்டுச் செல்வீர் நாம் நாமாக வாழ்வதற்கு எமக்கென ஓர் நாடு தமிழீழத் தாயகமே ! இவ்வண்ணம் நொச்சியான் 04.01.2009
-
- 1 reply
- 879 views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜனநாயகக் கோமாளிகள் கோவி. லெனின் சிங்கங்களுக்கு எலிப்பொந்தில் கிடைக்கிறது எல்லாவிதமான வசதிகளும். புலிகளுக்குப் பசி என்றால் புல்லுக்கட்டு வேண்டாம் புண்ணாக்கே போதும் தேர்தல் நேரமெனில் எதனையும் எதனுடனும் கூட்டிக் கொள்ளலாம். கழிக்க வேண்டியவை மானமும் வெட்கமும். கொள்கைகள்... கூவி விற்பதற்கே! தகையும் விலையென்றால் தன்னையே விற்கவும் தயார் எங்கள் தலைவர்கள். கூட்டணி மேடைகளில் கூடியும் கலைந்தும் கூத்தடிக்கிறார்கள் ஜனநாயகக் கோமாளிகள். எல்லாவற்றுக்கும் எம்மக்கள் கைதட்டிச் சிரிப்பார்கள் எனக் கணக்கிட்டுச் சிரிப்பாய் சிரிக்கிறார்கள் வாய்ச் சொல் வீரர்கள் குறிப்பு: யதார்த்தமாக இந்தப் பக்கத்தில் கவிதை வெளிய…
-
- 1 reply
- 827 views
-
-
· கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய் எங்கள் தமிழினத்திற்கு… எத்தனை வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும் காலில் விழுந்தும் கதறியும் கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று… எதுவுமே காதில் விழாத உங்களுக்கு இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்… பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைக…
-
- 1 reply
- 392 views
-
-
மாவீரர்கள் பற்றிய கவிதைகள் வேண்டும். யாழில் பல கவிஞர்கள் இருக்கிறார்கள். உங்களிடமிருந்து மாவீரர்களின் தியாகங்கள், சாதனைகள் பற்றிய கவிதைகளை எதிர்ப்பாக்கிறேன். வான்புலிகள்,கரும்புலிகள் பற்றிய கவிதைகளும் வேண்டும். வருகிற செவ்வாய்கிழமைக்கு முதல் வந்தால் நன்றாக இருக்கும்.
-
- 1 reply
- 1.3k views
-
-
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா? 2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…) 3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ??? 4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? 5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா?? (நாம தான் ஊருக்கு போய்ச்சேரலையே ?? ) 6.…
-
- 1 reply
- 1.2k views
-
-
இனம் தின்னும் ராஜபக்சே கவிஞர் வைரமுத்து சொந்த நாய்களுக்குச் சொத்தெழுதி வைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நிலம் மீட்டுத் தாருங்கள் பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தை தொட்டு மனித குலம் நிற்கிறதே! மனம் இரங்கி வாருங்கள்! வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு ரொட்டி ரொட்டியென்று கைநீட்டிடும் சிறுவர்க்குக் கைகொடுக்க வாருங்கள்! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்கள வெறிக் கூத்துக்களை நிரந்தரமாய் நிறுத்துங்கள்! …
-
- 1 reply
- 827 views
-
-
மனிதனாக எவரும் இங்கு வாழவில்லையே தனியுடமை இன்னும் இங்கு போகவில்லையே பொதுவுடைமை எங்கும் இங்கு வரவுமில்லையே பொல்லாத உலகம் இது மாறவில்லையே எல்லோர்க்கும் எல்லாமே கிடைக்கவில்லையே உழைப்பவன் கை இன்னும் உயரவில்லையே உனக்கும் எனக்கும் சமத்துவம் எதுகுமில்லையே சமூக நீதி வந்ததாக தெரியவில்லையே மாற்றம் இன்னும் இங்கு மாறவில்லையே அது வரும் என்ற நம்பிக்கைதான் கையில் இருக்குது. பா.உதயன் ✍️
-
- 1 reply
- 943 views
-
-
மாட்சிமை பொருந்திய பெருநரகம் யாரிவார். நாட்களின் சிதைவுகளில் நாற்றம். கனவின் மீதியெங்கே எதைத் துணைகொள்வது நாய் கட்டையை சுற்றி கறிக்கு அலையும் நாய். எறும்புகள் புற்றை நீங்குகின்றன. வாயில் இரை. இனி எப்பாம்பு அங்கு நிலை கொள்ளுமோ? வெளிச்சத்தில் கடவுள் தலைகுனிந்திருந்தார். கேள்விகளில்லை. சந்தனம் குங்குமம் பன்னீர் கலந்த வாசனையும் இல்லை ஓவியன் வரைந்திருந்த சிறு புன்னைகை கூட இல்லை. சிவந்த உதடுகளை முத்தமிட நெருங்கினேன். ஓ கடவுளே மரணித்துவிட்டாயா ? யாரிடமிருந்து பகலை திருடமுடியும் தானாய் விடிந்த ஒரு பகல். கால்களில் இடறுகிறது கிழிந்துபோன நேற்றைய பகல். இருளின் முடிவில் நல்நிமித்தங்கள்…
-
- 1 reply
- 1.7k views
-
-
வேண்டாம் இனி ஒரு தீக்குளிப்பு ......... தியாகியே முருகதாசா ..... ஏன் இந்த அவசரம்..... உன் கல்வி இளமை ,உன் உயிர் நம் விடியலுக்கு தேவை அப்படி இருந்தும ஏன் இந்த் அவசரம் தீக்குளிப்பு தான் முடிவென்றால் மீதியை யார் முன்னெடுப்பது ... தேவையல்லவா உன் போன்ற இளையர்களின் பணி ... முருக தாசா ...முத்துக்குமரா ... ஏன் இந்த அவசரம் .பணியாற்ற ஏதேதோ வழி இருக்க மீள பெறமுடியாத . விலைமதிப்பற்ற உயிரை ஈந்த செல்வங்களே நீள் துயில் கொள்வீர் . .மலர்வீர் தமிழ் ஈழத்தில் ஒரு பூவாக .. .அமைதி ..... புறாவாக
-
- 1 reply
- 770 views
-
-
Defending Tamils is Tamils’ responsibility Saturday, 02 May 2009 21:02 administrator -When - When Sri Lankan state unleashed its hate, World failed to defend Tamils’ fate. When they killed without hesitation, World stood still in hallucination. When they sent us on boats to the North, World looked at us as refugees of no worth. When the Tsunami swallowed our families, World treated us like we were anomalies. When we saw murders with heart full of terror, World looked in its rearview mirror. When those devils did the slaughter, World let Tamil lives become shorter. When we stood-up peacefully against Racists, World …
-
- 1 reply
- 1.4k views
-
-
இடுகாட்டு இருட்டில் சிதைக்கு மூட்டும் தீயில் வெளிச்சம் பிறக்கும் என்று மாண்டார்கள் அடிமைகள் ஆழுக்கொரு கொள்ளிக்கட்டையை எடுத்து காலடி வெளிச்சம் பிடித்து எஜமான் வீடு நோக்கி நடந்தார்கள் நெஞ்சாங்கட்டையையும் பங்குபோட்ட அடிமைகளைப் பார்த்து சிதைகள் எழுந்து அழுது மீண்டும் மடிந்தது. எஜமானின் கோடிக்குள் திவசம் கொண்டாடவும் முடியாத அடிமைகள் காக்காவுக்கு சோறு வைக்க கரைகின்றார்கள். சீமைப்பசுவின் கோமயத்தில் முகம்கழுவி முக்தி பெற்ற பெருமக்கள் ஆங்காங்கே திவசம் கொண்டாடுகின்றார்கள். வடையும் வாய்பனும் கூடவே டோனற்றும் படைக்கின்றார்கள். காரிருளை கலைத்த சிதைகளின் தீயையும் சூறையாடிய அடிமைகள் மேற்கில் வெண்மேகம் மோதி மின்னல் பாய்ந்து தேசம் விடியும் என்ற கனவில் மிதக்கின்றார்கள். கதிரவன் …
-
- 1 reply
- 622 views
-
-
அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள் அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான். யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான். நான் இப்பொழுதும் கேட்கிறேன் அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும் குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று. என் அன்பு மிகுந்த சனங்களே! எங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க இந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை நீங்கள்தான் அமைத்து வைத்திருக்கிறீர்கள். எங்கள் கோரிக்கைகளும் அரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும் நஞ்சுக் கனிகளில் மறைந்திருக்கின்றன. துக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும் எங்கள் தந்தையே! ஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடைய…
-
- 1 reply
- 709 views
-
-
இரவல் மொழியில் பெருமை பேசி இழந்த உண்மை இன்பம் கோடி கோடி இரைந்து கத்தும் காகத்தை போன்று இல்லாமையில் பெருமை தேடும் பலர் இங்கே தட்டி தமிழ் மகான்கள் சொன்னப் போது தாழ்மையுடன் உணர்ந்தோம் நம் பெரும் பிழையை தாயாய் காக்கும் நம் தமிழ் மொழியை தரணி எங்கும் வாழ்த்த வழி செய்வோம் வெளிநாட்டு மோகம் எம்மை ஆட்கொண்டு வெள்ளையர் வாழ்வு சீர் என நினைத்தும் ஏன் ? வெளிர் நிறத்தில் உள்ள அழகும் நிலையில்லையே …
-
- 1 reply
- 526 views
-
-
சாவுக்கு ஒரு தூது! சாவே சட்டென வந்தென்னை அணைத்துக் கொள் சகதி வாழ்க்கையில் தொலைந்திட விருப்பமில்லை மொட்டுக்களே உங்கள் குவிந்த உதடுகளை விரித்துப் புன்னகையுங்கள் பூப்பெய்திய பெண்களைப் பார்த்ததில்லையா? துடுப்பென இருசிறகு கக்கத்தில் கட்டிய பறவைகாள்! ஆகாய வீதியில் ஒன்று கூடுங்கள் மரணத்தின் முன்னால் ஒரு மகிழ்ச்சிக் கீதம் கேட்க வேண்டும் ஆங்காங்கே நரைத்த முடிகளை காட்டாது ஓடி மறையும் மேகங்களே... கறுப்புச் சாயம் பூசிக் கொள்ளுங்கள் மண்ணின் மார்புச் சேலை நனைக்க மழைவேண்டாமோ? அருமை நண்பர்களே அஞ்சலிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்! உங்களில் ஒருவன் பிரியப் போகின்றான்! கனவுப் பயிர் வளர்த்தவன் க…
-
- 1 reply
- 1.4k views
-
-
உன்னை நாளையும் சந்திக்கலாம் என்ற சந்தோசத்தைவிட இன்றும் உன்னைப் பிரிவதே கொடிது * நம் முதல் சந்திப்பை பற்றி யாரிடமாவது பேச நினைக்கும் போதெல்லாம் வாயடைத்துவிடுகிறது நம் முதல் பிரிவு * ராஜ்மகாலில் கூட கடைசியாக நின்றாலும் நுழைந்துவிடலாம் யாருமே காத்திராத உன் வீடுதான் என்னை நுழைய விடாது உலக அதிசயமாய் தெரிகிறது * எப்பதான் எனை உன் வீட்டுக்கு கூட்டிச் செல்லப் போகிறாய் நான் முதல் முதலாய் வாங்கிக் கொடுத்த பொம்மை கிழவியான பிறகா..? * உன்னைப் பார்த்தால் யாருக்கும் அலுக்காதுதான் அதற்காக உன்னை உன் வீட்டிலே வைத்திருந்தா என் கண்கள் சும்மாவிடுமா..? -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 938 views
-
-
சைவப்பற்று -பாவேந்தர் பாரதிதாசன்- இரும்புப் பெட்டியிலே - இருக்கும் எண்பது லக்ஷத்தையும், கரும்புத் தோட்டத்திலே - வருஷம் காணும் கணக்கினையும், அருந்துணையாக - இருக்கும் ஆயிரம் வேலியையும் பெருகும் வருமானம் - கொடுக்கும் பிறசொத்துக்களையும், ஆடை வகைகளையும் - பசும்பொன் ஆபரணங்களையும் மாடு கறந்தவுடன் - குடங்கள் வந்து நிறைவதையும், நீடு களஞ்சியம்கள் - விளைந்த நெல்லில் நிறைவதையும், வாடிக்கைக் காரர்தரும் - கொழுத்த வட்டித் தொகையினையும், எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள் எங்கள் மடாதிபதி வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம் மேனியெலாம் பூசிக் கண்கவர் பூஷணங்கள் - அணிந்து கட்டில் அறைநோக்கிப் பெண்கள் பலபேர்கள் - குலவிப் பின்வர முன்நடந்தா…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=3][size=4]ஈழத்தின் மூச்சே என்றன்[/size] [size=4]எண்ணத்தின் கருவே - தங்கம் கீழிடை பணிந்துபோக கிளம்பிய புகழே வாழி! மானமே மகுடம் என்று மலையென எம்மில் மீண்டு காலத்தால் உருவாய் வந்த கதிரவன் வாழ்க வாழ்க!. உலகத்தில் உயர்வு நீதான் உண்மைக்கு உரைகல் நீதான் கலங்கரை விளக்கம் நீதான் கடுமையும் நீதான் என்பர். விடுதலை வேள்வி மூட்டி விண்ணதிர் களங்கள் கண்டு சாவினை மீண்ட தங்க தலைவனே வாழி வாழி! ஒப்புக்கும் பயந்ததில்லை -உன் உருவத்தில் கடுமையில்லை தப்புடன் ஒருநாள் கூட - நீ தன்நிலை பகிர்ந்ததில்லை நிச்சியம் உங்கள் எண்ணம் நிமிர்ந்திடும் நாளை என்போம் அத்துணை காட்சி காண்போம் ஆதவன் நீவிர் வாழ்க! மூட்டிய பயணம் மீழும் முடிவது நன்றே சேரும் …
-
- 1 reply
- 514 views
-
-
நான் பட்டைகளை அணிந்துள்ளேன், எனது நெஞ்சின் மேல், வெடி குண்டைக் காவியுள்ளேன், எனது மனதின் வெண்மையில் குளிர் காய்கிறேன், பெரு நெருப்பின் தணலாய் முகிழப் போகிறேன். மேலுள்ள வரிகள் fஉன்டமென்டல் என்னும் இசைக் குழுவின் உறுப்பினரான அகி நவாஸின் , எல்லமே யுத்தமே என்னும் புதிய இசை அல்பத்தில் வரும் ,கூக் புக் டிஐவய் , சுய சமையற் குறிப்புக்கள் என்னும் பாடலின் வரிகள். இந்தப் பாடல் தற்கொடைப் போராளிகளின் எண்ணங்களைக் காவி வருகிறது.இந்த இசைக் குழு பிரித்தானியா ஏசியர்களின் அரசியல் எண்ணக் கிடைக்கைகளை, உலகளாவிய ஆசிய மக்களின் ஏகாதிபத்திய எதிர் அரசியலின் வரிகளைக் காவி வருகிறது. இனி வெளியிடப் பட உள்ள இந்த இசைத் தட்டு பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி விட்டுள்ளது.இந்தப் பாட…
-
- 1 reply
- 990 views
-
-
கௌதம புத்தருடன் - ஒரு கவிதா நேர்காணல் ஜெ.கி.ஜெயசீலன் நான்: தார்மீகப் பெரு நெறியைத் தக்கபடி போதித்து யார் மீதும் பகையில்லா யாகத்தைச் செய்தவனே! உனதடியை வணங்கி வரும் உன்னரிய புத்திரர் தாம் மனதறியச் செய்துவரும் மா கொடுமை அறியாயோ! ஊருறங்கும் நள்ளிரவில் ஊளைவிடும் 'ஷெல்' நரிகள்! போருறங்காப் பூமியிதில் பொழுதெல்லாம் குண்டு மழை நீ வளர்த்த கருணையினை நெஞ்சத்திற் பேணாமல் தீ வளர்த்த தென்னிலங்கை திருந்த வழி சொல்வாயா? புத்தர்: அன்பார்ந்த தமிழ் மகனே! அவலத்தின் உள்ளே மண்பாய்த்து அழிகின்ற மடமை பல கண்டேன்! போதி மர ஞானமதைப் போதித்தும் என்பக்தர் நீதி தரவில்லையெனும் நீசத்தாற் துடிக்கின்றேன்! கொல்லாமை பேரறமாம்; குரலெடுத்துக் கூறிய என் சொல்லாலே ஏமாற்றிச்…
-
- 1 reply
- 601 views
-
-
2006ல் என்னுடைய கவிதை அம்மா விடுதலைப் புலிகளின் வெளிச்சம் உள்சுற்று சஞ்சிகையில் வெளியாகிப் பாராட்டைப் பெற்றது.ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் குறுங்காவியத்துக்கு அடுத்து தோழன் புதுவை இரத்தினதுரைக்கு பிடித்த என் கவிதைகளுள் அந்தக் கவிதையும் ஒன்று. . அதே காலக்கட்டத்தில் தோழன் ஜெயராஜ் ஆசிரியராக இருந்த விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ பத்திரிகையான ஈழநாதத்தில் ஊடகத்துறையைக் கண்காணிப்பாலராக புலனாய்வு துறையில் பணிபுரிந்த எழுத்தாளர் தான…
-
- 1 reply
- 1k views
-
-
என் அன்பே! !! முழு நிலவான உன்னை பற்றி ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன். என் மேசை எங்கும் வார்த்தைகள் நட்சத்திரங்களாய் கொட்டி க்கிடக்கின்றன. என் அன்பே! என் வெளிச்சம். உன் காதல் எனக்கு காவல். உன் பேச்சு. .... எனக்கு இன்பம் உன் குரல். .. என் தேடல். உன் நலம் என் நிம்மதி. உன் நிம்மதி என்சந்தோசம். உன் உயிர் அது என் உயிர். என் அன்பே. ........
-
- 1 reply
- 1.3k views
-
-
முன்னபோனா முட்டுது பின்னவந்தா உதைக்குது மிஸ்டுகால் பார்த்து ரிங்குனா அப்பா இருக்கார் அப்புறம் பண்ணு சாயங்காலம் பாக்கலாமா சாரி அம்மாவோடு கோயிலுக்கு போறேன் நேத்து ஏன் பார்க்க வரலை நேரமில்லையா? நெனைவு இல்லையா? சிகரெட்டு புடிப்பியா தண்ணி அடிப்பியா செருப்பால அடிப்பேன் தறுதலை ப்ளூகலர் ட்ரெஸ் நல்லாருக்கா? ஏய் அந்த ப்ளாக் சுரிதாரை சைட் அடிக்காதே! புது ரிசப்ஷனிஸ்ட் என்னைவிட அழகா? கண்ணை நோண்டிடுவேன் முண்டக்கண்ணா சம்பளம் வந்திடுச்சா மாயாஜால் போலாமா எம்ஜிஎம் போலாமா எனக்கு சத்யம் கூட ஓக்கேதான் மாப்பிள்ளை பார்த்திருக்காங்க செம ஸ்மார்ட் டேக் ஹோம் 80கே எனக்கு டபுள் ஓகே ம்ம்ம்ம்.... …
-
- 1 reply
- 1.3k views
-