Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு வாலியின் இரங்கல் கவிதை எம்.எஸ் .சுப்புலட்சுமி காலமான போது ,வாலி எழுதிய உருக்கமான கவிதை ஒன்று ! நடுத்தமிழ் நிற்கிறது நடுத்தெருவில் .... தன் விலாசத்தை தவறவிட்டு ; அதன் - திருவிழி உகுக்கிறது தீர்த்தச் சொட்டு ! எம்.எஸ் ஏறிவிட்டார் வாகனம் ; எல்லோர்க்கும் இருந்தென்ன ? எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்! இழந்து நிற்கிறது இசைக்கலை - தான் தங்கியிருந்த - எம்.எஸ் என்னும் இன்ஷியலை! ஓதம்சூல் உலகின்காண்- ஓர் ஒப்புலட்சுமி-இல்லாதவர் சுப்புலட்சுமி ; தூய வாய்மலரால்- இசைத் தேனைத் துப்புலட்சுமி என்னணம் எண்டிசை-இனி பயணிக்கக் கூடும் -நம் பண்டிசை? எம்.எஸ் என்பது சங்கீத சாஸ்திரத்தின் ப…

    • 1 reply
    • 2.3k views
  2. ஆட்டம் காண்கிறதா சிறி லங்கா-பா.உதயன் அன்னியச் செலாவணி கையில இல்லையாம் அத்தியாவசிய பொருளும் வாங்கவும் முடியாதாம் எல்லாப் பொருளும் இப்போ தங்கத்தின் விலையாம் பண வீக்கம் கூடி பாணுக்கும் பாலுக்கும் பஞ்சமாம் நாட்டில ரோட்டில நிற்கினம் சனங்கள் இப்போ சரியான பொருளாதாரக் கொள்கையும் இல்லை நாட்டில இப்போ கால் ஊண்டிப் போட்டான் சீனாக் காரான் சிறி லங்காவில அரைவாசியை வேண்டியும் போட்டான் இவன் வட்டிகள் எல்லாம் குட்டி போட்டு கடனைக் கட்டவும் காசும் இல்லை லங்காவிடம் எடுத்த கடனும் இப்போ கூடிப் போச்சு இனி எடுக்கவும் முடியாது கொடுக்கவும் முடியாது மத்திய வங்கியும் சொல்லியும் போட்டுது கையில இப்போ…

  3. 1969ல் எழுதிய என் முதல் கவிதையும் 1970ல் எழுதிய எனது இரண்டாவது கவிதையும் வன்னி பற்றியது.அப்போதெல்லாம் இணைப்பாட்ட்சி அடிப்படையிலான பொது உடமையை வென்றெடுக்க புரட்சி வரப்போகிறது என்கிற நம்பிக்கையோடு செயல்ப்பட்டோம். புரட்ச்சி வன்னியில் மையம்கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் நமது இராணுவப்புவியியலை கற்க்கவென்று அந்த சின்ன வயசுகளில் காடு காடுகளாக அலைந்தேன். இதோ கவிதைகள் http://noolaham.net/project/01/10/10.txt 1. பாலி ஆறு நகர்கிறது அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம்…

    • 1 reply
    • 1.4k views
  4. வீதியின் ஓரம் நின்று வேடிக்கை பார்.. தமிழர் படை அலைகடல் என..பொங்கி பீறிட்டு எழுந்து குபு..குபுவென்று வருவதை! *************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* பாதியிலே போர் முடிந்தாலும் நீதி கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும்.. நெருப்புக்குள் இருந்து பீனிக்ஸ் பறவைகள்போல் பிரளயமாகப் புறப்பட்டு வருவோம்..! நாங்கள் வெறியர் களடா.. .. சாதி வெறியர்கள் அல்ல.. மத வெறியர்கள் அல்ல.. மொழி வெறியர் களடா .. தமிழ் மொழி.. வெறியர் களடா..! எம்மோடு அணிவகுத்து வர இன்னும் நீ துணியவில்லை என்றால்.. சும்மா வீதியின் ஓரம் நின்று வேடிக்கை பார்.. தமிழர் படை அலைகடல் என.. பொங்கி பீறிட்டு எழுந்து குபு....குபு வெ…

    • 1 reply
    • 797 views
  5. Started by manthahini,

    வேதனை தீருமா வெங்கொடுமை சாகுமா வேதனை தீருமா வெங்கொடுமை சாகுமா? கோரப்பிடிக்குள் நின்று கொடிய வதைபட்டாலும் தீரமாய் முடிவெடுத்து தீர;க்கமாய் ஆணை தந்த தமிழ்ஈழ மக்கள் துயர; தீர வழி பிறக்குமா? மாவீரர; நினைவுகள் சுமந்த மக்கள்; அளித்த வாக்குகள் தான் தமக்கு கிடைத்தன என்பதை வெற்றி பெற்றோர; மனதில் இருத்தி செயற்பட்டு பாதை தவறாமல் நடக்க உறுதி எடுக்க வேண்டும். அறவழியில் போராடி உயிர; உருக்கிய தியாகி திலீபன் நினைவு நாட்களில் மக்கள் தெளிவான தீர;ப்பு ஒன்றை தந்துள்ளனர; -ஆட்சி அமைப்பவர; சரியான வழி நடப்பர; என நம்புகின்றனர;. வெற்று ஆரவாரங்கள் வெறும் அறிக்கைகளை நம்பி சட்டென முடிவெடுத்து எவரும் புள்ளடிகள் இடவில்லை தங்களுக்காக உயிர; கொடுத்த தாயகப் புதல்வர;களை பக்குவமாய் நெஞ்சிலே தா…

  6. மகிந்தவின் கழுத்தில் தொங்குவது சிங்களவரின் கோவணம் இடியமீன் சிரிக்கிறான்

  7. தீபச்செல்வனின் அழகான கவிதை. தரப்பால்களின் கீழாய் கிடந்து அடங்குகிறது நமது எல்லா வழிகளும். துப்பாக்கியின் நுனியில் வடிகிற முகத்தில் எழுகிறது நமது எலும்புக்கூட்டின் நினைவுகள். எல்லாமே சட்டென தலைகீழாகிறது நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிற துவக்கு சாம்பலை எதிராய் கிளம்புகிறது. சனங்களின் குருதி கடலில் குதித்து தப்பிச் செல்லுகிறது. வழியில் தற்கொலை செய்துகொள்ள துடிக்கிறது மீதமிருக்கிற நகரத்தின் சுவடு. ஒரு மாபெரும் அரசனின் ஒற்றை வாளில் முழுச் சுவரும் வெட்டுண்டுபோகிறது. பிள்ளைகளை அனுப்பிய தாய்மாரின் கண்ணீரைத்தவிர குறுகிய நிலத்தில் எதுவும் இல்லை. மிகவும் கொடுமையான அனுபவங்களை வானத்திற்கு மேலால் கடல் நிரம்புகிறது. இப்பொழுது கடைச…

  8. தேசத்தின் புயல் மாதவன். பச்சை வயல் நிறைந்த தென்மராட்சி மண்ணில் மாதவமாய் வந்துதித்த மனோரஞ்சன். தொண்ணூறுகளின் தொடக்கம்...., யாரெவனோ என்றிவனை ஊர் போற்றும் வீரனாய் புலி வேங்கையாய் போர்க்காலமொன்றில் யாழ் மண்ணில் பணிசெய்ய வந்தான். 'மாதவன்' மறக்க முடியாத நினைவுகளில் அவன் புன்னகையும் ஆழுமையும் ஆற்றலின் பன்முகமும் அழியாச்சுடர் அவன்.....! நெருப்பைச் சுமந்தான் சிரிப்பில் மட்டும் இனிப்பாய் கரைந்தான். இனிமையான போராளியாய் இதயங்களில் நிறைந்தான்....! இசையூடக வழியே பாடகனாய் திரையூடக வழியே நடிகனாய் கவியூடக வழியே கவிஞனாய் கலையின் மொத்த வடிவம் - மாதவன் கலைபண்பாட்டுக்கழகத்தில் இவனொரு வரலாறு. இவனின்றிய வரலாறொன்று இருந்தறியாத நாட்களில் கலைகடந்து கனரகம் சுமந்து களம் கண்ட ப…

  9. Started by nunavilan,

    கண்டனம் ஒரு புல்லின் இதழுக்கு ஊறு விளைவிக்கும் உரிமையை என் நாட்டின் போராளிகளுக்கு மறுக்கிறேன் ஒரு வெடிகுண்டைக் கையாளும் உரிமையை குழந்தைக்கு - எல்லாக் குழந்தைகளுக்கும் மறுக்கிறேன் ஒரு துப்பாக்கியை ஏந்தும் உரிமையை என் சகோதரிக்கு மறுக்கிறேன் நீங்கள் சொல்லும் எதை வேண்டுமானாலும் என்னால் மறுக்க முடியும் - ஆனால் அவர்களின் கண்கள் கொலைகாரர்களின் குதிரைகள் பாய்ந்தோடி வருவதைப் பார்க்கும்போது இத்தனை இலட்சியங்களை யாரால் உத்திரவாதம் செய்யமுடியும்? பத்து வயதிலேயே ஒரு குழந்தை வீரனாவதை எதிர்க்கிறேன் மரங்களின் உடல்கள் வெடிமருந்துக்குப் புகலிடமாவதை எதிர்க்கிறேன் எனது பழத்தோட்ட மரங்களின் கிளைகள் தூக்குமரங்களாக்கப் பயன்படுத்தப்படுவதை எதி…

  10. a உன்னை ஒரு தமிழனாகப் பார்த்தால் படி இதை!. ''நான் முதலில் இந்தியன்'' என நினைத்தால் படிக்காதே இதை! வெம்புலி பெற்ற அம்புலி -கவிஞர் வாலி கன்னியாகுமரியிலிருந்து கை...தட்டிக் கூப்பிட்டால், ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ; தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி - இங்கிருக்கும் சோழத்தமிழன்தான் அங்கிருக்கும் ஈழத்தமிழன் ; அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான் இங்கிருக்கும் சோழத்தமிழன்! சோழத் தமிழன் சோர்வு தவிர்க்க- ஓர் 'அண்ணா' வாய்த்தது போல்- ஈழத் தமிழன் ஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி' வாய்த்தான்! முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது - தமிழின் உயிரும் மெய்யும்; ஆனால்- ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது- தமிழரின் உயிரும் மெய்யும் ! பிரபாகரன்! அவ் ஆறெழுத்து அல்…

    • 1 reply
    • 1.4k views
  11. “Happy Birthday” என்ற ஆங்கிலப் பாடலுக்கு பதில் தமிழில் மனதார வாழ்த்தும் வரிகளைக் கொண்ட இந்த தமிழ் பிறந்தநாள் பாடலை இனி பயன்படுத்துவோம். நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.! வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்.! அன்பு வேண்டும்.! அறிவு வேண்டும்.! பண்பு வேண்டும்.! பரிவு வேண்டும்.! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்.! எடுத்துக்காட்டு ஆக வேண்டும்.! உலகம் பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும்.! சர்க்கரைத் தமிழள்ளித் தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம் பிறந்த நாள் வாழ்த்துகள்.! பிறந்த நாள் வாழ்த்துகள்.! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.!

  12. Started by kavi_ruban,

    குருதி ஓடையும் பிண வாடையும் என் தேசத்து தெருக்களில்... உயிர் சுமந்து இருப்பதில் சில சுமந்து இடையில் குழந்தை சுமந்து நடையில் என் தேசத்து எல்லை கடக்கின்றனர் மக்கள்! என் மண்ணின் உயிர் ஆயிரமாயிரம் 'பூட்ஸ்' கால்களின் காலடியில் நசுங்குண்டு சுதந்திர தாகத்தோடு காத்திருக்கிறது! பலிகள் பல கொடுத்து நரிகளின் ஊளை கேட்டு பரிகளாகி மேனி விடைத்து அரிகளின் தேகத்தை 'ரவை' களால் கிழித்து கரிகாலன் கண்ணசைவில் பாய்கின்றனர் புலிகள்! இருந்தும் அரசு கட்டில் அமர்ந்திருக்கும் ஆந்தைகள் அலறும் ஒலி கேட்டு காது பொத்தி 'அடைத்த செவியினர்' ஆக வெளிநாடுகள்! படை மட்டும் நடாத்தி கிடைப்பதல…

  13. உன் பொங்கல் கவிதை தித்திப்பதற்காகவே சேர்த்தாயா உன் சக்கைரைப் பெயரை இப்படி இனிக்கிறதே * தினம் நீ முறித்து தரும் கரும்பின் சுவை அலுத்துவிட்டது எங்கே கரும்பொன்றை கடித்துவிட்டு தா உன் இதழ் தொட்ட சுவை அறிய வேண்டும் நான் * நீ கண் மூடி வழிபட வழிபட தன் நெற்றிக் கண்ணையும் திறந்து பிரகாசிக்கிறான் சூரியபகவான் * சூரியபகவானுக்காய் நீ போடும் நட்சத்திரக் கோலத்தோடு உன்னை பார்க்கும்போது நிலாக்கோலம்தான் ஞாபகம் வந்தது எனக்கு * எல்லாரும் கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தார்கள் நீ பாடிய தேவாரத்தை நான் மட்டும் கண்திறந்து கவனித்துக் கொண்டிருந்தேன் எப்போ பிரியும் உன் இமைகள் என்று -யாழ்_அகத்தியன்

    • 1 reply
    • 913 views
  14. ஒரு ஜீவாத்மாவின் கவிதை ----------------- என்னை அவர்கள் மதிக்கவில்லை...... என்று கோபப்படாமல்...... அவர்கள் மதிக்கும்படி........ நான் மாறவில்லை என்று ...... கவலைப்படு - காரணத்தை..... தேடு மதிக்கப்படுவாய்.......!!! பாராட்டும் போது...... துள்ளி குதிக்கும் மனம் ....... விமர்சிக்கும் போது....... துவண்டு விழுகிறாய்....... அப்போ உன் மனத்தை ...... கடிவாளம் போட்டு .... வழிநடத்துகிறாய்.......... கடிவாளத்தை கழற்று ...... சவாரிசெய் நிச்சயம் விழுவாய்...... காயப்படுவாய்....... ஆனால் வாழ்க்கையில் ...... வெற்றி பெறுவாய்,............!!! கரையில் நின்று கடலை ...... பார்த்தால் தப்புக்கடலும்.…

  15. Mummy பொங்குறா பொங்கல் பிள்ளை order பண்ணுறான் Pizza Daddy எனக்கு வேண்டாம் புக்கை வாங்கித்தாங்கோ மக் பேர்கர்! விடியக்காலம மனிசிக்கு வேலை பின்னேரம் எனக்கு வேலை Fridge இக்குள்ள புக்கை! Facebook இல அரட்டை அட் ரா சக்கை ..... அட் ரா சக்கை ...! இதுதாண்டா புலம்பெயர் பொங்கல்!!!! பொங்கலோ பொங்கல்!!!! டமில்போய் 14/01/2014

  16. இருண்டகாலத்தின் பதுங்குழி சொங்களற்றவர்களின் அசையா முகங்களில் சங்கீதம் பாடி ஆடுகின்றன ஈக்கள் இரவுக்கும் பகலுக்கும் இடையில் மாபெரும் யுத்தப்படை ஒன்று என் கிராமத்தை கடந்து போயிருக்கையில் காணவில்லை விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை சாட்சிகளற்றவர்களின் நிலத்தில் கைது செய்யப்பட்ட குழந்தை ஒன்றை ஏற்றுக்கொள்ளவும் யாருமில்லை மீண்டுமொரு இருண்ட காலத்தில் பதுங்குகின்றனர் குழந்தைகள் வானத்தில் விமானங்கள் இல்லை எத்திசைகளிலிருந்தும் செல்கள் வரவில்லை வானத்தையும் திசைகளையும் கண்டு அஞ்சுகின்றன குழந்தைகள் இப்போது எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை பீரங்கிகள் எதுவும் இல்லை விமானங்களும் இல்லை போர்க்களங்களைத் துறந்துவிட்டோம் பாசறைகள் யாவற்றையும் மூடிவ…

  17. Started by priyaa,

    ஏழை குழந்தையின் கண்கள் மின்னியது.... மாற்று உடுப்பு கிடைத்தது எண்டு எண்ணி ... பாவம்.. தன்னை போல அதுவும் 'வேண்டாம்' என ஒதுக்க பட்டவை எண்டு அறியாமல் ...

  18. என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா.... புலர்ந்த பின் உன்னை கண்டு பசுமையை சுவாசித்து உயிர் வந்தது... வந்த உயிர் மூச்சு மெல்ல அடங்க, விடியல் காற்று அறைந்தது... மேலும் வாழ ஓர் ஆசை, -பிரபஞ்சம்- ஓசை அழகைக் காண-- நித்தம் தேடி வருந்துதல் இலாமே விலையிலா ---- .. நீ எனக்கு மட்டும் சொந்தம் .... .உன் பெயர் நெஞ்ஜி குழியோரம் குறித்து செல்லமே! ... "உயிரே, அன்பே பொங்கிப் பாயும் நதியே, நீ கரைந்து-மோதி நாடி நரம்புகள் எல்லாம் ஓடி நிறைந்திருக்க வண்ண ஓவியமாய்,வந்து......... என்னை தாலாட்டும் சங்கீதம் நீ அல்லவா..... இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது

    • 1 reply
    • 1.4k views
  19. சுட்டெரிக்கும் சூரியனையும் சுட்டெரித்துவிடும் எம் அடிவயிற்றுத் தீ புயற்காற்றையும் விடப் பெரியது உஷ்ணமான எம் பெருமூச்சு சமுத்திரங்களையும் சிறிதாக்கும் எம் கண்ணீரும் செந்நீரும் எம் நெஞ்சின் கொதிப்பு பூகம்பத்தின் நெருப்புக்குழம்பு கடவுளே கடவுளே என்ற எம் கதறல் மரண ஓலங்கள் நாம் விடும் சாபங்கள் இத்தனையும் காத்திருக்கு இனவெறி பிடித்தாடும் இலங்கை கொடுங்கோல் ஆட்சியாளரை தண்டிக்க; ஆனால்.......... அதற்கு எத்தனை காலமெடுக்குமோ கடவுள் நின்று கொல்லட்டும் நான் காத்திருக்கின்றேன் என் தலைவனின் பதிலுக்காய் உயிர்போன குழந்தைக்கு பாலூட்டும் ஒரு அன்னை உயிரற்ற குழந்தையை உயிருள்ள பிள்ளை போல் தோலில்போடும் ஒரு தந்தை உணவின்றி தூக்கமின்றி பதுங்குகுழிய…

    • 1 reply
    • 1.4k views
  20. Started by வர்ணன்,

    எவர் கண்ணிலும் படாத ......... இறைவனுக்கு - இருப்பு.... உண்டென்றால்..... இருப்பவருக்காகவே .. எலாம் இழந்த இவருக்கு... என்ன பரிசு? வாழ்த்தா ? பாராட்டா? வசையா? எது வேண்டுமென்றாலும்.. எவரும் சொல்லட்டும்.. ஒன்று மட்டும்.. சொல்வேன்... இந்த ........ மானம் கெட்ட இனத்தில்... என்று நீ - பிறந்தாயோ..... அன்றே நீ ....... இறந்தாய் - போ ! இனி எதுக்கு வாழ்த்து?

  21. கத்திக் கதறுது மனது-நீ இன்னும் இருக்கிறாய் என்று புழுதி புரண்டழுது. தெருவெல்லாம் இழுத்து வந்தேன் - என் இதயத்தை தேம்பியழும் அதை எங்கு மறைக்க ? அண்ணா அவசரப்பட்டயோ - நாம் அங்கீகாரம் உலகில்லல்லவா கேட்டோம் - நீ விண்ணிற்கு சென்றதேன் ? இனி அந்தச்சிரிப்பை எங்கு நாம் தேட ? உன் விழியில்லாத் தேசம் இருண்டல்லவா கிடக்கு ! தலைவருக்கு தோள் கொடுக்க யாரைத் தேடுவோம் ? நீயில்லாத செய்தி - வந்திருக்கவே வேண்டாம் !

  22. Started by arjun,

    கனவுகளும் நிஜங்களும் புணர்ந்து கொள்கையில் நம்பிக்கைகளின் பிரசவம் கணக்கு வழக்கின்றி... முன்னொரு போதில் இவை தேர்தல் வாக்குறுதிகளாகவே அறியப்பட்டிருந்தது... ஜனநாயகியோடு படுக்கையை பகிராதவரில்லை! போனவன் வந்தவனெல்லாம் பெற்றுத்தள்ளிவிட்டு போனான்..... தலை ஒன்றுக்கு மூளை இன்னொன்றுக்கு வயிறு வேறொன்றுக்கு அதன்கீழ் ஏதோவொன்றுக்குமாக.... குழந்தைகளோ.... பல்வேறு தேசங்களில் பல்லின மக்களாயின.... நோய் முற்றித்தளர்ந்த விபசாரி வீதிக்கு வந்தாள் பிச்சைக்காரியானாள்.... ராஜ்ய பரிபாலினி ராப்பிச்சையானாள் புடவை கிழிசல்களுக்குள்ளால் தசைப்பகுதி தெரிந்தது..... எஞ்சிய அரசியல்வாதிகளும் இடியாப்பம் வாங்கிக் கொடுத்துவிட்டு இன்பம் அனுபவித்து போனார்கள்.... வயித்தெரிச்சலில் இப்போத…

  23. Started by prasaanth,

    sorry

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.