கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
ஒலி வடிவம் ------------------------------------- நெஞ்சில் ஓர் மூலையில் ஏதோவொரு சோகம் எனை அணைக்கும் உடம்பு சோர்வின் கைப் பிள்ளையாகும்! மனசு விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்யும் எதிர்காலம் கண்முன் விஷ்வரூபமெடுக்கும் தனிமையில் தத்தளித்து தாய் மடி தேடும் மனம் பொல்லாத கற்பனைகளால் இதயம் வெடிக்கும் தலை கோதி நெஞ்சில் முகம் சேர்த்து அணைக்க ஓருயிர் வாராதா என விழிகள் தேடும்! "எனக்கு மட்டும் ஏன் இப்படி" கண்முன் தெரியா கடவுளிடம் விசாரணை நடக்கும் கால் போனால் ஊன்றுகோல் மனசு உடைந்தால் என்ன உதவும் ? "நம்பிக்கை" என்ற பழகிப்போன பதிலில் சமாதானம் …
-
- 7 replies
- 1.7k views
-
-
மனசு போல வாழலாம் கலகலன்னு சிரிக்கலாம் காலமெல்லாம் சிறக்கலாம் நிலவிலேறிக் குதிக்கலாம் நிம்மதியாய் இருக்கலாம் வழ வழன்னு கதைக்கலாம் வண்டு போலப் பறக்கலாம் மலையிலேறி இறங்கலாம் மழையிலேயும் நனையலாம் மழலையாகப் பேசலாம் மரங்கள் மீது ஏறலாம் பனித்துளிகள் சேர்க்கலாம் பறவையோடு பாடலாம் கலைகளிலே திளைக்கலாம் தென்றலோடு நடக்கலாம் மலர்களிலே உறங்கலாம் மனசு போல வாழலாம் http://www.lankasripoems.com/?conp=poem&pidp=214612
-
- 1 reply
- 1.1k views
-
-
மனசுக்கு மட்டும்... சரித்திர சுவடுதான் கல்லறை பேசும் இலங்கையின் இலக்கை..! காக்கையும் ஏற்க்கும் குயில் முட்டை மனசுக்கு மட்டும்-ஏன் முட்டுக்கட்டை...!! உத்திர மழையில் நனைந்த வீதிகள் .. உயிர்த்துடிப்பின் ஓசைகள்.. தரிசு நிலத்து உர மேடுகளாய் சவமலர்கள்!! காலம் ஓடும் வரை கடந்து வருமா யுத்தம்.. நீதியின் தலைமகளே! கருப்பு கயிறு கட்டிய விழிகள் அவிழும் வரையிலுமா?!! ஆக்கம் : - மீனலோஷினி
-
- 0 replies
- 761 views
-
-
பேசாத வார்த்தை நொடியில் ... கரைந்து போனது என் வலி ... மவுனம் என்னை மவுனியாக்கி .. வேடிக்கை பார்க்குது மனவெளியில் .. எதிர் திசை நீ வரும் போதும் .. உன்னை தொட்டு வரம் காற்று ... உன் மனக்கணக்கின் எண்ணம் சொல்லும் .. ஆனாலும் நான் மவுனமா .. என்னை கடந்து போகையில் .. நீ வீசி செல்லும் விழி கேள்விகள் .. என் இதயத்தை ஒருமுறை உசுப்பும் .. ஆனாலும் நான் மவுனமா .. உன்னை அறியா வயதில் பார்த்து ... தெரியாத காதல் மொழி பேசி .. இன்று காதல் வயதில் காணும் போது .. கலங்குதடி கண்கள் இரண்டும் ... நான் சொல்ல வரும் ஏக்கம் .. உனக்கு வலிதரலாம் ஆதலால் .. நான் மவுனமா .... ஒரு வேலி ...ஒரு ஓணான் என.. பேசி திரிந்த அழகிய காலம் .. மீண்டும் வராது என தெரிவதால் .. இப்பொழுதும் நான் மவுனமா ...…
-
- 0 replies
- 502 views
-
-
ஆயிரம் கால்களுடன் மரஅட்டையொன்று, மனதினுள் ஊர்ந்து கொண்டிருக்கிறது சில காலங்களாக....!!! பரந்த வெளிப்பரப்பின் சன நெரிசலின் எதோவொரு மூலையில் முகமறியாத முகமொன்றின் புன்னகைக்காக தவமிருக்கிறது.....!!! தாழ்வாரத்தை நோக்கி பாய்ந்து முடிந்த, மழை வெள்ளத்தின் ஈரலிப்பை நோக்கி கால்கள் நகர்கின்றன.....!!! பாதையில்லாப் பயணமொன்றின் நடுவில், வழிதவறிய பாதையின் பாதச்சுவடுகளை தேடி கண்கள் பணித்து கலங்குகின்றன....!!! பாலைவனப் பாறையொன்றின் அடியில், இதிகாசங்களாய் கிடந்தது போல் இதயம் கணக்கிறது....!!! தேடிக் கிடைத்த பொருளை தொலைத்து விட்ட இயலாமையின் வலியை இன்றியமையாததாக்கி கொள்கிறது காலம்....!! மகரந்த தேனை உண்டு புசித்த வண்டை, பூக்கள் இல்லாத தேசத்தில் பறக்க விட்ட வெறு…
-
- 13 replies
- 1.7k views
-
-
மனதில் ஓர் காதல் பரிசு..... கவிதை - இளங்கவி சேர்ந்த உதடுகளுக்கிடையில் சீனப் பெருஞ் சுவராய் அவளின் தலைமுடிகள அவன் உதட்டை உறுத்தின........ அவள் மூச்சின் வெப்பம் மூச்சால் வெளிவர மறுத்து அவள் கண்களூடே வெளிவர அவன் கண்களோ- அவளின அனல் மூச்சின் வெப்பம் தாளாமல் அதைத் தணிப்பதற்கு வேறு இடம் தாவியது....... அங்கே குளிரும் அறையில் கொதி மலைகளின் தழுவல்..... இரத்த நாடிகளின் வேகம் அதன் உச்சத்தில் இருக்க... இரத்த நாளங்களோ அதற்குப் பக்கத் துணையிருக்க.... போதாது என்று- அவன் ஏக்கம் கூடவும்..... போதும் வரை போராடு என்று அவளின் உணர்வும் சேரவும்.... அந்த அறையில் சில நிமிடப் புயல்கள்.... சில கணங்கள் அமைதி.... பல நிமிட அணுயுத்தம் …
-
- 2 replies
- 1.1k views
-
-
தத்துவங்கள் பல தந்தனர் தமிழ் தத்துவ ஞானிகள் தமிழர் நாம் மறந்தோம் தத்துவம் தனை மனதில் பதிக்க சித்திரமாக சுவர்களில் பதித்தோம் சிலையாக வடித்தோம் தெருக்களில் வைத்தோம் குருபூசை-மறந்தோம் வையத்துள் வாழ குரு கூறியவைகளை உலா வந்தோம் உலக மொழி தத்துவங்களில் உணர்தோம் தத்துவம் யாவும் ஒன்றன்று உபதேசங்களை கடை பிடிப்பது கடினமென்று உணர்ந்து மறைத்தோம்,தொலைத்தோம் எம்மை உபதேசித்தவர்களின் பெயர்களிலும் மன்றங்களிலும்
-
- 6 replies
- 1.5k views
-
-
மனதில் மறையாத பனித்துளிகள்..... காதலர் தினக்கவிதை - இளங்கவி சூரியன் திசை நோக்கும் சூரியகாந்தி போல இந்தக் சூரியன் போகும் திசையையும் நோக்கியது ஒர் சூரியகாந்திப் பூ.... ஆம்.. அவளும் ஓர் பூதான் அவள் பெயர் செவ்வந்தி..... அவளின் தரிசனத்துக்காய் காத்து நிற்கும் இடம் வண்ணங்களால் மனதைத வருடும் காகிதப்பூச் சோலையொன்று...... செவ்வந்தி வருகைக்காய் காத்து நிற்கும் ஒவ்வொரு கணங்களும் காகிதப் பூக்களைப் பார்த்து வண்ணங்கள் இருந்தென்ன என்னவள் போல உங்களுக்கு வாசமில்லையே என்று சொல்லிச் சிரிப்பதுண்டு...... காகிதப் பூக்களுக்கு என்னில் கோபமிருந்தாலும் என்னவள் வருகையறிந்தவுடன் சிறு சலசலப்புக் காட்டிவிட்டு தானாகவே மறுபக்கம…
-
- 0 replies
- 664 views
-
-
தூவனம் தூவத் தூவ மழைத்துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிர் கரைவதை நானே கண்டேன் கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில் குயில் என மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புழுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில் யார் தீங்கு செய்தாலும் மன்னிக்கத் தோன்றும் நீ தந்த என் மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே . இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோர்க்க உதட்டினை முகம் பார்க்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரீங…
-
- 1 reply
- 1.3k views
-
-
மனதுக்குள் பெய்த மழை கண்ணோடு கலந்ததுவும் கருத்தோடு இணைந்ததுவும் என்னோடு கரம்பற்றி இணைந்தேதான் வாழ்ந்ததுவும் உள்ளான அன்போடு உயிராக இருந்ததுவும் தண்ணான நிலவாக தரணியிலே குளிர்ந்ததுவும் விண்ணோடு மேகமதாய் உறவாடி மகிழ்ந்ததுவும் தூரத்துக் காற்றினிலே தூதுசொல்லி அழைத்ததுவும் மெல்இறகாய் எனைஅணைத்து மேனியினை வருடியதும் காயமுற்ற வேளைகளில் கண்ணீரைத் துடைத்ததுவும் நேயமுற்ற நெஞ்சுடனே நிறையவே பேசியதும் வாடிநின்ற நேரமெல்லாம் தேடிஎன்னைத் தேற்றியதும் கண்மணியின் மென்இமையாய் கருத்தோடு காத்ததுவும் மழலையாய் எனைஎண்ணி மருவியே அணைத்ததுவும் நோயுற்ற வேளைகளில் தாயைப்போல் தேற்றியதும் இனிமையாய் பேசி என்னில் இறுதிவரை நிலைத்ததுவும் சீராட்டிப…
-
- 7 replies
- 1.5k views
-
-
மனதை வருடும் ஹைக்கூ....... காலடிப்பதிவை கவிதையாக்கிச் செல்லும் கொலுசுச் சிணுங்கல்... என்னருகில் அமர்ந்திருப்பவர் எழுந்திருக்கிறவராய்த் தெரியவில்லை கர்ப்பிணிப்பெண் நிற்கிறாள்...... - எல்.இளங்கோ. நிமிர்ந்து நின்றது புல் வளைத்துக் காட்டியது ஒரேஒரு மழைத்துளி -ப.ஆனந்தன் குப்பை பொறுக்கும் சிறுமியின் கையில் ஃபிளாப்பி டிஸ்க். அப்பாவுக்கு அறுபதனாயிரம் மனைவிகள் இருந்தும் சந்தேகம் இல்லை. ராமனுக்கு ஒரு மனைவி ஆயிரம் சந்தேகங்கள். -கபிலன் (வைரமுத்துவின் மகன்) பறவை சிறகை மீறின ஆகாயத்தை அளந்து ஓய்ந்து அலகை மீறின வனத்தை உண்ண அமர்ந்தது. -எம்.யுவன் எந்தப் ப…
-
- 4 replies
- 7k views
-
-
நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் நானும் காற்றில் கத்தி வீசுகிறேன் யாரின் முகமூடி கிழிக்கவோ திறந்த முகத்தில் குத்தி கூர்பார்கவோ அல்ல எமக்கான விளையாட்டு காற்றில் கத்தி வீசுவது என் தூரம் அறிந்தே வீசுகிறேன் எல்லைக்கு உட்பட்டு மழுங்கிய கத்தி கொண்டே வீசுகிறேன் காற்றை கிழிக்கும் ஓசை எனக்கானது காற்றின் அறைகூவல் வீசட்டும் மணலில் கத்தி சொருகி நிலை கொண்டிருப்பேன் அது ஓயும்வரை ஒளி, ஒலி பிழை இருக்கலாம் காற்றை கிழிப்பதில் இருக்கிறது விளையாட்டின் வெற்றி எனக்கும் பிரிகையில் காற்றுக்கும் இதுவரை தோற்றாலும் இது ஒரு விளையாட்டு அவ்வளவே! http://pakkam5.blogspot.com/2006/05/blog-post…
-
-
- 338 replies
- 119.9k views
- 2 followers
-
-
பிரிதலின் நினைவுகள் உயிர் பிரியும் வரை பிரிவதில்லை அதன் நினைவுகள் காதல் காதலானது கண்களில் தினமும் ஈரமானது காலமும் என்னோடு பாரமானது கடந்திடாத நினைவுகளும் என்னுள் உயிரானது காதலே நீ என்னை தீண்டியதேன் காதலே இன்றும் என்னுள் நீ வாழ்வதேன் காதல் கொண்டவள் என்னை விட்டு பிரிந்ததேன் காதலி தந்த காதல் இன்றும் என்னுள் வாழ்வதேன் உண்மையான காதல் என்னுள் வந்ததாலா அல்லது உண்மையாகவே அவளை நான் காதல் கொண்டதாலா நேசம் அது உன் வாழ்வில் வேஷம் என் வாழ்வின் நேசம் உண்மையான பாசம் என்னில் நீ தந்த நேசம் என் வாழ்வின் சோகம் உன்னில் நான் தந்த பாசம் என் உயிர் பாசம் பிரிதலோடு நீ பிரிந்தாலும் என் உயிர் துடிப்போடு தொடர்ந்திடும் என் நேசம் என்னுள் இருக்கும் இதயம…
-
- 5 replies
- 5.1k views
-
-
[தாய் மண்ணைப் பிரிந்து வந்த ஏக்கம் எல்லா உயிர்களிடத்தும் இருப்பது.பறவைகள் விலங்குகள் கூட தங்கள் கூடுகளையும் இருப்பிடங்களையும் தேடிப்போகவே எப்பொழுதும் முனைகின்றன.மண்ணைப்பற்றிய ஏக்கமானது ஒவ்வொரு புலம்பெய்ர்ந்த மனிதனது ஆன்மாவையும் ஓயாத தீயாக எரித்துக் கொண்டே இருக்கும்.சிதறிக்கிடந்த யூதர்களின் மனங்களில் எல்லாம் எரிந்த அந்தத்தீயே இன்று ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழர்களின் மனங்களிலும் கணல்கிறது, என்னுள்ளும் இருக்கும் அணைந்து போகாத அந்ததத் தீயில் உருகிய சில கவித்துளிகள்....தொடரும்] பெருங்கூட்டமாய் நெடிதுயர்ந்து நிற்கும் ஓக் மரங்களின் கீழ் நான் தனிமையைத்தேடி வந்தமர்ந்தபோது காற்று துருவப்பாறைகளிலிருந்து பனித்திவலைகளைக் காவிக்கொண்டு விரட்டிவரும் வெளிச்சத் துண்டுகளிடமிருந்து …
-
- 29 replies
- 3.7k views
-
-
கிழிக்கப்பட்ட தாள்களில் வரையப்பட்ட ஓவியமாய் உடைந்த சிதைவுகளில் செதுக்கப்பட்ட சிற்பமாய் அதிகாலை கனவில் அவளின் அருகாமை வீணாய் போனது விடியலின் பொழுது விரிக்காத படுக்கை மடிக்காத உடைகள் வேண்டாத உணவு தீண்டாத தேநீர் காலையை தின்று மதியம் கொன்றது மங்கையின் நினைவு மரண வலியாய் தனிமை பயணத்தின் ஒவ்வொரு தரிப்பிலும் தடுக்கி விழுந்து மீண்டும் தொடர்ந்து கற்பனைகளில் சுழன்ற சுந்தர வதனம் கூரிய வாள்முனை குரல்வளை அறுப்பதாய் வேதனை தந்தது அந்தி சாய்ந்து ஆதவன் அணைகையில் மெல்லத் தவழ்ந்து கள்ளம் கலந்து கொல்லத் துடித்த கொள்ளை அழகில் உருகி…
-
- 7 replies
- 1k views
-
-
எதைக் கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய் வெட்கத்தை கேட்டால் விட்டத்தை நோக்குகிறாய் விட்டத்திலா இருக்கிறது என் காதல்? * - * - * - * - * மார்கழி மாசம் வாசலில் கோலம்! நடுவிலே சாணம் சாணத்திலே பூசணிப்பூ! அது பூவல்ல என் இதயம்! உன் இதயத்தை சாணத்தில் தான் வைத்தாளா என்று கேட்காதீர்! சாணம் கூட சந்தனமானது சந்தியாவின் விரல்பட்டு! * - * - * - * - * 'லவ்'டப், ‘லவ்'டப் சிலகாலமாக இதுதான் என் இதயத்தின் ஒலி! சண்டாளி தயவுசெய்து என்னை சாகடிச்சிட்டு போடி!! * - * - * - * - * நீ நெருப்பு நான் பஞ்சு காதல் ஊழிப்பெருந்தீயாய் பற்றியெரிவோம் வாடி! * - * - * - * - * எனக்கு கொடுக்க உன்னிடம் …
-
- 8 replies
- 2k views
-
-
மனம் என்னும் மாயப் பிசாசு மறைந்திருந்து கொல்லும் எண்ணங்கள் எதிரிகளாக கடிவாளமற்ற குதிரைகளில் காததூரம் கடக்கும் சொற்களற்ற நிழல்களிநூடே சொல்லாது விடும் வார்த்தைகள் கோர்த்து சுவற்ற சிற்பங்களாய் கனவுகள் ஆயிரம் வடிக்கும் பகுத்தறிய முடியா உண்மைக்கும் பொய்க்கும் இடையே சஞ்சலம் மட்டும் கொண்டு சக்திகள் எல்லாம் அற சகலதும் துறக்கத் தோன்றும் ஏன் தான் மனிதற்கு மட்டும் இறைவன் ஒருமனம் தந்தான் விருப்பமற்றதை விலக்கி வேண்டாதவற்றை கழற்றி வில்லங்கம் கொண்டதை விடுத்து நின்மதியாய் நான் வாழ நிறைய மனங்கள் வேண்டும் எனக்கு
-
- 13 replies
- 1k views
-
-
அலை கடலாய் ஆர்பரிக்கும் அப்பப்போ அமைதி கொள்ளும் எட்டாத எல்லையெல்லாம் எப்படியோ கடந்துவிடும் ஏட்டிக்குப் போட்டியாக எதுவும் செய்துவிடும் ஏக்கம் கொண்டு பின்னர் எதை எதையோ எண்ணிவிடும் மார்க்கம் கண்டபின்னர் மட்டிலா மகிழ்ச்சி கொள்ளும் முந்தை வினைப்பயனை முழுதுமாய் நம்பிவிடும் அன்பு கொண்டு ஆட்படும் அகந்தை கொன்று அகப்படும் சிந்தை நிறைந்து சிரிக்கவைக்கும் செம்மை கொண்டு சிலிர்க்கும் சொந்தங்கள் தேடி சொர்கங்கள் கூட சந்தங்களாகி சத்தங்கள் ஓய நித்தமும் ஓய்வின்றி நித்தியக் கடனாகி நினைவின்றி ஓடும் மனம்
-
- 1 reply
- 577 views
-
-
*.மனம் சுமக்கு’மே ‘ வலிகள். * (மே பதினெட்டு - கவிதை) ******************************************* *இருளும் -ஒளியும் இரவும் -பகலும் என்பதுபோல், இழப்பும் -ஏற்பும் கொண்டோம் இதனால் எம் வாழ்வில் என்பதுண்டு! – இதில் சில எண்களும் உண்டு! “அவ் வெண் பதினெட்டு!” *பதினெண்கீழ் கணக்கு” - பதினெட்டு நூல்களின் தொகுப்பு! தமிழுக்கு இதனால் சிறப்பு! *பதினெட்டு ‘மே’ என்பதிலோ எண்ணற்ற கணக்கு!.... - இங்குண்டு தமிழரின் இறப்பு! தமிழுக்கும் இழப்பு!.... *வைகாசி, புத்தம் ஞானம் பெற்ற மாதம் ! - இருந்தும் சுத்தம், மொத்தமாக மதம் இழந்த மாதம் - நித்தம் யுத்தம் செய்த மாதம்! … *நாமோ,.. சுற்றம் த…
-
- 2 replies
- 828 views
- 1 follower
-
-
காலத்தின் சாட்சியாய் துடிக்கிற கவிதைமனத்துள் செட்டை அடிக்கும் நினைவின் பிரளயம் மாக்ஸ்சின் தத்துவம் கண்முன் விரிவதை கட்டவிழ்த்து சுடுவதெல்லாம் ஒளிப்பதுபோல் எதிர்பார்ப்பற்ற இரங்களில் பேர்ரொன்றிடம் வரம்பெற்ற கைகளை அரிக்கின்றது உயிர்கொண்டு அணைபோட்ட நேரத்தில் அவர்கள் கருக்கிவிட்ட விருப்பங்களின் விதைள் விருட்சமானதில் நிழல் குளித்த தருணங்கள் ஆகாய வெளியைப்போல் இன்னும் நீள ஆணிவேர் போல் நினைவு காவும் உள்ளம் கண்ணீர் பனிக்கும் தருணங்கள் படிமமாய் பரம்பரைக்கு கைமாற தீயாகங்கள் உயிர்பெறும் இலட்சியக் காவிகளாய் நிழள் குளித்தவன் பொய்யில் மறைத்த வாழ்க்கை கோறையாய் உறுமாற ஒரு விளக்கு எரியும் விடுதலையின் ஒளியாய் இரவை …
-
- 0 replies
- 1.2k views
-
-
இனிய இளகிய காலை ஒன்றில் மனவெளியில் மட்டற்று மயக்கங்கள் நீண்டு தெரியும் நெடுமரங்களோடு நட்பாய் நடக்கையில் நிமிர்வற்ற மரங்களின் உதிர்ப்பில் நிலம் முழுதும் நிறைந்து கிடக்கும் நிழல் தந்த இலைகள் நெஞ்சமதை நெகிழ்க்கின்றன உதிர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சலும் கொற்றலும் கூச்சலுமாய்க் கூடியிருந்த புலுனிகள் கூட்டம் கூடி ஒன்றாய் புல்லமர்ந்து கொற்றித் தின்றன எதையோ பின் கூடி எழுந்து கோலமிட்டபடி கண்ணிமை மூடித் திறக்குமுன்னே காணாமலும் போயின மீண்டும் அவை வந்து போகலாம் மிடுக்காய் அமர்ந்து மின்னலாய்ப் பறந்து மாயங்கள் செய்யலாம் காலம் மாறிக் கடும்பனி போனபின் குனிந்த மரங்கள் மீண்டும் குளிர் விரட்டி தளிர் கொள்ளலாம் நாம் மட்டும் தொலைந்த எம் இருப்பை எண்ணி தொலைவிலும் தெரியா துள…
-
- 10 replies
- 728 views
-
-
மனிக் ஃபாம்... இளங்கவி - கவிதை.... மரணத்தின் பிடியிலிருந்து மீண்ட நம் உயிர்களுக்கு மனிக் ஃபாம் என்ற மரண வலயத்தில் இலவச உணவாம்...!.இல்லை..! இலவச உடையாம்.....! அதுவுமிலை...! நிம்மதி தூக்கமாம்...! சுத்தப் பொய்....! தமிழன் வாழ்க்கையில் இளமையிலும் மரணம் தரும் ஓர் இருண்ட நிலமது....! ஆம்...! பூமியில் எமன் அமைத்த மகிந்தரின் புனித பூமி அது....! எமனின் முகவர்கள் எகத்தாளமிடும் பூமி.... சிறுமி முதல் குமரிவரை சுவைத்திடுவான் ஆமி.... வன்னியிலே.. மழை வந்தால் ஆடிய மயக்கிட்ட மயில்களும்..... மனம் விட்டுப் பாடிய தேனிசைக் குயிகளும்...... கால்களும் ஒடிக்கபட்டு..... குரல்வளையும் நசுக்கப்பட்டு..... கட்டிய கூடாரத்தினுள் ஒட்டுண்…
-
- 15 replies
- 1.6k views
-
-
மனித உரிமை மாநாடும் மண்ணாங்கட்டியும்.....!!!! ------------------------------------------ ஜெனிவாவில நடக்கப்போதாம் மாநாடு அது முடிஞ்சதும் அவங்கள் தருவாங்களாம் தமிழனுக்கு தனி நாடு! அமெரிக்கா கொண்டுவருமாம் தீர்மானம் அவன் இலங்கையை பிரிச்சுத்தருவான் சரிசமானம் இந்தியாவும் ஆதரிக்குமாம் தீர்மானம் பிறகு "என்பலப்பில" மடிச்சுத்தருவாங்களாம் தமிழீழம்!!! முப்பது வருசம் கழிச்சுத்தான் தெரியுது "இன அழிப்பு" எண்டு! அஞ்சு வருசம் கழிச்சுத்தான் தெரியுது "போர்க்குற்றம்" எண்டு! இன்னும் அம்பது வருசம் கழிச்சு வரும் "தீர்ப்பு" இருங்கோ பாத்துக் கொண்டு...!!! மன்னாரில தோண்டுறாங்கள் "மண்டை ஓடுகள்" சனத்தை அடிச்சு சாக்கொன்றவனே அதற்கு காவலும் கண்காணிப்பும்..!…
-
- 2 replies
- 988 views
-
-
மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (விரல்கள் )------வலது கை விரல்கள் மெருமை காட்டியது " மோதிரவிரல் "-----கும்பிடுகிறேன் பெருமை படுகிறது "சின்ன விரல்கள் "----கோபத்தின் தொடக்கி சண்டையில் தொடக்கி "சுட்டுவிரல் "----குட்டை கவலையில்லை அம்பு எய்வேன் "கட்டை விரல் "---நான் தான் வீமன் உயரமானவனும் "நடுவிரல் "
-
- 1 reply
- 659 views
-