கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மழை அடிக்கடி அழைக்காமலே எனக்குள் விஸ்வரூபம் எடுக்கும் உன்னைப் போல தூறலாகிக் கனக்கின்றது! குளிர்காற்று காதுமடல் தடவி தலைகோதும் போதெல்லாம் உன் உதடும் கைகளும் நினைவில் பாதங்கள் வெள்ளம் அழைகையில் உன் கால் கொலுசின் ஒலி! மழைத்துளி மண்ணில் மோதிச் சிதறித் தெறிக்கையில் மரணத்தின் வலி! மழை எல்லோருக்கும் பொதுவாய் கடவுள் எடுக்கும் பால பாடம்! புரிந்தவர்கள் ஞானம் பெறுகிறார்கள்!
-
- 4 replies
- 1.3k views
-
-
அன்பினில் விளைந்த ஆசை ஆசையை மறைத்த நாணம் இச்சை அறியா நேசம் ஈகம் செய்யும் உழைப்பு உண்மைக்கு வருகின்ற கோபம் ஊமையாய் ரசித்த காதல் என்னிலும் மேலான நாணம் ஏழ்மையில் சிரிக்கின்ற வேதம் ஐயம் எழுந்திட்ட போதும் ஒரு பக்கம் சாரா நீதி இத்தனை இருந்திட்ட போதும் ஊமையாய் விலகியேன் போனாய் இங்கு நான் என்னதானேன் - மழை ஈசல் போல் சிறகினை இழந்தேன்- - தயா ஜிப்ரான் -
-
- 1 reply
- 1k views
-
-
இலைகளைக் கழுவிச் சொட்டுகிற பெரு மழையில் கடைசியாய் நனைகிறது அமைதியின் ஓசை, மேகத்தில் மறைந்த கவலையின் வடுக்களை தன் கோடொன்றில் கீறி விரைகிறது மின்னலொன்றின் வெளிச்சம், தொலைந்த வானத்தைத் தேடி அலையும் நிலவின் சிதறலை ஆட்டி அசைக்கிறது தரைநீர்த் தேங்கலொன்றில் விழுந்த தூறல், கனத்துப் பெருத்த மழையின் சுவட்டில் கூடிழந்து உரத்துக் கூவுகிற பறவையின் இரைச்சலில் பாதித் தூக்கம் கலைந்துவிட, மீதி இரவில் மழையை நனைக்கிறது ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............ "மீதி இரவில் மழையை நனைக்கிறது ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............" ....... கனத்த வரிகள்
-
- 6 replies
- 4.5k views
-
-
-
மழை...... கவிதை - இளங்கவி மனதைத் தாலாட்டும் இயற்கையின் இன்பம் நீ...... மகிழ்வான சிறுவயதின் என்னை மகிழ்வித்த சொர்க்கம் நீ..... சிறுவனாய் நான்..... விளையாடி வரும்போது வெப்பமாகும் என் தேகம்..... மேலிருந்து நீ வந்து வந்து குளிரவைப்பாய் என் தேகம்.... என் சூடான சுவாசமும் சில்லென்று குளிர்ந்துவிடும்.... அதை இன்றும் நினைத்தாலும் ஜில்லென்று சுகம் தரும்.... இளைஞனாய் நான்...... தெருவோரம் அமர்ந்து தேடுவேன் என் பேரழகை.... திடீரென்று நீ வருவாய் சினத்தையும் நீ தருவாய்..... அந்த நேரம் என் அழகுச்சிலை வருவாள்... நீ துளிகளாய் அவள் முகத்தினிலே தொட்டதுமே ஒட்டிடுவாய்.... ஒட்டிய துளியொன்று அவள் மூக்குவளி இறங்கிவந்து அவள் …
-
- 14 replies
- 2k views
-
-
சாளரத்தில் மோதி விழுகின்ற மழைத்துளிகள்-அட யார் இங்கு தடை போட்டது தூக்கப் பொழுதுகளில் தலை கோதும் என் தாயின் கரங்களுக்கு.
-
- 0 replies
- 1.6k views
-
-
வாழ்வே உன் அர்த்தம் தேடி அலைகின்றோம் வழிநெடுகிலும் பொழுது போக அழுகின்றோம் எங்கள் காயங்களின் வினோதங்களை வேடிக்கை பார்க்கின்றோம் சாரலும் தூறலும் கூடவே பெருவெள்ளமும் மண்ணில் காய்ந்த குருதியை கழுவிச்செல்கின்றது புதுவெள்ளமாக திசைகளற்றுச் செல்கின்றது பள்ளம் எங்கேயோ அங்கு நகர்கின்றது எங்கள் வாழ்வும் அதன் நியாங்களும் கூடவே கரைந்து செல்கின்றது. வீழ்ந்தவர்களின் தடங்கள் ஊரெங்கும் பரவிக்கிடக்கின்றது உயிர்வலிகளுடன் நிறையக் காட்சிகள் நேற்று கனமாயிருந்தது அந்தப்பிள்ளை இங்குதான் சிதறிக்கிடந்தன் இந்தப் பிள்ளை இங்குதான் குடல் வெளித்தள்ளிக் கிடந்தான் இந்த தெருவில் அந்த முடக்கில் ஊரெங்கும் காடெங்கும் நேற்றுவரை எங்கள் செல்வங்களாக சித…
-
- 1 reply
- 728 views
-
-
மழைக்காலம் துவங்கும் மேய்ச்சல் நிலங்களை புற்கள் போர்த்தியிருக்கும் எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து மூங்கில் துளிர்க்கும் நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள் நான்கை ஈனும் நீண்ட குரலெடுத்து பாடும் ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும் வண்ணத்து பூச்சியொன்றின் நிறங்கள் குலைந்திருக்கும் தூறல் நின்றபின் வெளிக்கிடும் தவளைக்காக நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும் குயவனின் கனவுகளுக்குள் தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும் சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும் பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும் செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி சிலந்தியின் பின்னலில் சன்னல்களை வரைந்திருக்கும் விட்டில…
-
- 14 replies
- 1.7k views
-
-
[size=5]மழைச்சத்தம் [/size] [size=5]தர்மினி[/size] முன்னொரு காலம் மழை சத்தமிடுவதைக் கேட்டேன். ஓலைக் குடிசையொன்று மூடக்கதவில்லை சன்னல்களற்றுச் சுற்றிவரச் செத்தைகள் அதிலே குறைச்சுருட்டு, பாதிப்புழுக்கொடியல், பற்பொடிப்பைக்கற் சொருகிக்கிடப்பன. சாரைப்பாம்பும் சரசரக்கும். ஓலைக் கூரையில் மழைக்குதியோசை. நடுக்கூரை மழையொழுக டப்…தொப்…டப்…தொப் சட்டியிலும் சத்தம் . தாழ்வாரம் குந்திக் கை நனைக்க முற்றத்தில் குமிழ்கள் ஓடி வெடிக்கும் என் முகத்திலடிக்கும் சாரல். மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி கிணறு தழும்ப நெல்லி முறிந்து முருங்கை சரியும் மாம்பிஞ்சுகள் உதிர்ந்து பரவ பள்ளத்து வெள்ளங்களில் தவளைகள் கத்தும் சற்று நேரத்தில…
-
- 3 replies
- 621 views
-
-
எறித்த வெய்யிலை ஓரம் கட்டியபடி எங்கும் எக்களித்தபடி காற்று திடுமென வானம் திகைத்து நிற்க கார்மேகக் கூட்டத்தின் கடைபரப்பல் துமித்துத் தூவானத்துடன் தூறலாய் ஆர்ப்பரித்தபடி மழை அதி வேகத்தோடு சோவெனச் சோலைகளை நிறைத்து சொல்லாமல் பெய்கிறது கோடையில் மழை குதூகலம்தான் ஆயினும் ............ எரிக்காத வெய்யிலை இரசித்தபடி ஏகாந்தத்துள் திளைத்திருந்து சுவாசத்தின் காற்றை சுத்தமாய் நிரப்பியபடி மெய்மறந்திருந்த என்னை குளிர்ந்து பட்ட துளி குதூகலம் கலைத்து கூட்டினுள் கலைத்தது ஆயினும் வீசும் குளிர் காற்றும் மூக்கை நிறைக்கும் மழையின் மணமும் சடசடத்துப் படபடத்து ஆடும் இல்லை மரக் கொடிகளும் வாசலில் நின்றெனை வர்ணிக்க வைத்தது இயற்கை எப்போதும் இரசனைக்குரியதே ஆனாலும் மாந்தர் நாம் …
-
- 3 replies
- 917 views
-
-
குழந்தைகளுக்கு மட்டுமே மழையின் மொழி புரியும் மழையே வா வா மழையே வா பூக்களின் மேலே வந்து உன் புன்னகையை கொட்டிப் போ ஒரு கவி சொல்லக் காத்திருக்கிறேன் நீ பூவோடு பேசிய காதலை மௌனமாக வந்து என் காதோடு பேசி விட்டுப் போ வா மழையே வா . -பா.உதயன்
-
- 2 replies
- 763 views
-
-
[size=5]மவுனத்தின் மொழிபெயர்ப்பு ! [/size] சிறகு விரிச்சி பறக்குதே -மனசும் சித்தாடைக் கட்டி விரியுதே கொத்தோட பறிச்சவன் யாரடி கொண்டாட தேதியுந்தான் கூறடி. சித்திரையில் முளைத்தவனோ சினம் கொண்டே பிறந்தவனோ கத்திரியிலும் குளிரெடுக்க கற்கண்டாய் சொல் உதிர்ப்பவனோ? மலர் வனமே சென்றாலும் மணமேனோ வீசலையே- கட்டாந்தரையில் நானும் களையெடுக்கப் போனேனே.. கடுகுவெடிக்குமுன்னே காதை பொத்தி நின்றேனே களவு போனது நிஜம் தானோ கண்ணுறக்கம் மறந்ததேனோ? சொல்லுனக்காய்த் தேடித்தேடி சொப்பனத்தில் ஆழ்ந்தேனோ மவுனத்தை மொழிபெயர்க்க மல்யுத்தம் பயில்கின்றேன. மன்றாடித்திண்டாடி நானும் மயங்கித…
-
- 2 replies
- 677 views
-
-
''மா வீரர்கள்....'' கார்த்திகை மாதம் கண்ணீர் வடிக்கும் கல்லறை மீது தீபங்கள் ஏற்றும்.... பொன்னவர் உடல்கள் புக்களால் குளிக்கும் தேசமே திரண்டு அஞ்சலி செலுத்தும்... எங்களை காக்கவே தம்மையே அழித்தவர் மண்ணையே காக்கவே மரணத்தை ஏற்றவர்.... தீர செயல் கண்டு நெஞ்சமே விறைக்கும் உணர்வுகள் சிலிர்க்கும்... மெழுகாய் உருகி வழிகள் அழும் அவர் கல்லறையதையே கண்ணீர் கழுவும்... எழுந்தே வந்து என்னை உதைப்பான் அழுகிறாய் ஏனென்று என்னை கேட்பான்... அழுதே என்னை அசிங்கமாக்காய் எழுந்தே போய் களத்தில் நிற்ப்பாய்... அந்நியன் அவனை அடித்தே கலைப்பாய் அன்னை மண்ணை மீட்டே எடுப்பாய்... கல்லறை இருந்து கட்டளை இடுவான் இற…
-
- 2 replies
- 1.1k views
-
-
மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடுதிரும்பத் தடையில்லை நாங்க மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியலை நாடு திரும்ப முடியலை சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது சிங்களவன் படை வானில் நெருப்பை அள்ளிச் சொரியுது எங்களுயர் தமிழீழம் சுடுகாடாய் எரியுது தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயாகும் முன்னேயிளம் பிஞ்சுகளை அழிக்கிறான் தாய்கதறப் பிள்ளைகளின் நெஞ்சுகளைக் கிழிக்கிறான் தாயா…
-
- 1 reply
- 1.6k views
-
-
மாசி 22ம் எங்கட மண்ணும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று என்ர அம்மா அடிக்கடி சொல்லுறவ தையும் கடந்தது! மண்ணாய் போன மாசி 22 கடக்கப் போகுது! ஏ ஒன்பது திறக்குமா? ஏ பதினைந்து திறக்குமா? குடைக்குள் நெருப்பாக குழந்தை குமரி முதல் கிழடு கெட்டைகள் வரை கனவிலே தீப்பந்தம் எரியுது! ஆறுமாதங்கள் கடந்தும் ஆறுதல் வார்த்தைகள் மட்டும் அடிக்கடி தொன்கணக்காய்... கப்பலில் வருகிறது! அரிசி மாவு சீனி பருப்பு உள்ளி தேயிலை முட்டை எள்ளு உச்சவிலைப் பட்டியலை பார்க்க உயிர்க்குலை நடுங்குது! கொழும்பு வியாபாரியளுக்கு கொழுக்கட்டை தின்னுற கொழுத்த மகிழ்ச்சி பாhருங்கோ! நாலு கோடிக்க கிடந்ததுகள் பத்துக் கோடிக்கணக்காய்; சுருட்டிக் கொண்டு போக …
-
- 7 replies
- 1.4k views
-
-
வணக்கம் இந்தக் கவிதை என்னுடையது இல்லை . முகநூலில் என்னை நெருடிய முள் அவ்வளவே . நேசமுடன் கோமகன் ******************************************************************************************************************************************************** காதலின் புனிதத்தை காமத்தின் பெயரால் கறைபடிய விட்டதும் காணாமல் கருவுக்கு உயிர் கொடுத்து தெருவில் எறிந்த மனிதமற்ற மண்புழுக்களே வார்தைகள் கொண்டு உங்களை திட்டுவது தமிழுக்கு நான் செய்யும் துரோகம்.... நல்ல உள்ளங்களே யாரும் ஆனாதையாக பிறப்பதில்லை இந்த சமுதாய சனியன்கள் சிலரால் உருவாக்க படுகிறார்கள்................... நன்றி : முகநூல்
-
- 5 replies
- 770 views
-
-
மீண்டும் உயிர்த்தெழுந்து வா.... என்னுடன் என் சகோதரனே ' துயரங்களால் ஆழப்புதைக்கப்பட்ட உனது கரங்களை நீட்டு கருங்கல்லால் மூடப்பட்ட கல்லறையில் இருந்து திரும்பி வரப்போவதில்லை நீ.... பூமிக்கு அடியில் புதையுண்டு போன காலத்திலிருந்து எழுந்து வரப்போவதில்லை. உனது கோபக் குரல் மீண்டும் ஒலிக்கப் போவதில்லை - அல்லது தோண்டப்பட்ட உன் விழிகள் இமை திறக்கப் போவதில்லை. பூமியின் அடியாழத்திலிருந்து என்னைப் பாருங்கள் .... நிலத்தை உழுதவர்களே நெசவாளிகளே அதிகம் பேசாத ஆட்டிடையர்களே - நம் இனமரபுக் கடற்பறவையின் இனிய குஞ்சுகளே ' சதிகாரர்களின் கருங்கல் பலிபீடங்கள் உயர்ந்து எழுந்துவிட்டன.... நீங்கள் புதையுண்ட இடத்தின்மேல். ஆண்டியன் மலைத்தொடரின் கண்ணீரில் உறைந்து போன பண…
-
- 1 reply
- 537 views
-
-
மாட்டுக்கறி எங்கள் பண்பாடு மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை வாழ்க்கையின் பன்முகம் எங்கள் ஆன்மாவின் உயிர்மூச்சு "மாட்டுக் கறி உண்ணாதீர்கள்" நான் உன்னை கேட்கிறேன் - "எப்படி உண்ணாமல் இருப்பது?" நீ யார் எனக்கு அறிவுரை கூற, எங்கிருந்து வந்தவன்? எனக்கும் உனக்கும் என்ன உறவு? நான் கேட்கிறேன். இன்று வரைக்கும் நீ ஒரு ஜோடி காளை மாடுளை வளர்த்திருப்பாயா? ஒரு ஜோடி ஆடுகளையாவது? ஒரிரண்டு எருமைகளை? அவைகளை மேய்த்த அனுபவமுண்டா? குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா? இவைகளுடன் ஆற்றில் இறங்கி அவற்றை தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா? காளையின் காதை அறுத்து துளையிட்டதுண்டா? இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்து பார்த்திருக்காயா? அவற்றுக்கு பல்வலி வந்தால் என்…
-
- 3 replies
- 2.7k views
-
-
மாட்டுப்பொங்கல் வாய்க்கு ஒழுங்கா தீனி போடலை என்றாலும் வாய் நிறையா அம்மா என்று அழைக்கிறேனே உழைச்சு உழைச்சு ஓடா தேய்ஞ்சேனே எலும்பும் தோலுமா நிக்கிறேனே வருஷம் பூராவும் உழைக்கிற எனக்கு பொங்கலுக்கு மட்டும் என்னை கவனிச்சா போதுமா கதறி கதறி கண்ணிர் விடுற இந்த ஐந்தறிவுள்ள வாயில்லா ஜீவனை ஆறறிவுள்ள மனிதன் வருடம் பூரா கவனிக்க மாட்டானோ (இலங்கைப்பெண் கவிதைகளில் இருந்து)
-
- 1 reply
- 1.9k views
-
-
மாணவர்களுக்கு அரசியல் தேவையா ...? ஊழல்வாதிகள் அடிப்படை வாதிகள்... மாறாச் சமூகை உறுதி படுத்த வைக்கப்படும் கேள்வி... வாக்குப்போட மட்டும் உங்கள் தேவையை கேட்பர்... கூட விரலில் கருப்பு மையை வைத்து ஜனநாயக கடமை முடிந்ததாக சொல்லுவர்... வெள்ளையனின் ஓட்டத்தில் மாணவர்களின் பங்கிலாத அரசியல் உண்டோ? மொழிக்காக்க தீயாய் எரிந்த போரில் தீயே நீங்கள் அல்லவா.... மநூவின் நீதியை குலத்தொழிலை மறுத்த போர் இளைஞர்களின் போரல்லவா.... தந்தைச் செல்வாவின் வெற்றி வாக்கரசியலை சிங்களம் மிதித்ததாலேயே.... எழுதுகோல் ஏந்திய கைகளில் துவக்கு ஏந்திய அரசியலை உலகம் அறியாததா? சோவியத்தில் செஞ்சீனத்தில் பொலியாவில் வியட்நாமில் தத்துவ பலத்தை அரசியலாக்கியதில் இளைஞர்களில் பாதையை…
-
- 1 reply
- 903 views
-
-
நேற்றிருந்த வாழ்வகற்றி புதியதோர் ஒளியைத் தேடி விரைந்து மாணவனாக தமிழீழ மண்ணில் விடுதலை வேண்டி உயர்ந்த கரங்களால் உலகின் புருவங்கள் விரிந்தன !!!
-
- 1 reply
- 407 views
-
-
இது 2006 இல் யாழ் களத்தில் நான் பதிந்த கவிதை. கனவுகள் பொய்த்துப்போனாலும் உணர்வுகள் மனதின் ஆழத்தில் இன்னும் ஏக்கத்தின் அலைகளை எழுப்பியவாறே............ இது , நாம் தொலைத்த ஒரு பெருமை மிகு சகாப்தத்தின் மீட்டல் இன்றைய சூழலுடன் பொருத்தி, தியாகங்களைக் காயம் செய்யாதீர்கள். இன்னுயிதன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே -உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில் -வெற்றி மலைர்கலைத்தூவி நாம் வணங்கிடுவோம் . விதையென மண்ணில் வீழ்ந்தவரே -உங்கள் விதை குழிகளில் வேர்பாய்ச்சி ..... வான்வெளி எங்கும் கிளைபரப்பி.... விழுதெறிந்து வளர்வோம் இனி என்றும் வீழமாட்டோம் காலக்கிண்ணமதில் -இன…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ஈழமண் என்றோர் நாடொன்று இருந்ததாம் இனிமையாய் தமிழினம் அதனிலே வாழ்ந்ததாம் உரிமையைப் பெற்றிட உறுதியாய் நின்றதால் உலகமே சேர்ந்ததந்த இனத்தினை அழித்ததாம் ஆண்டுகள் ஐம்பது கழிந்திட்ட பின்னதாய் அபலைகள் எம்கதை ஏட்டினில் மட்டுமோ ஏங்கியே நிற்கிற புலம்பெயர் தமிழரின் ஏக்கத்தைப் போக்கிட துணிந்திட்ட வீரரே மகிழ்ச்சியால் வாழ்ந்திடல் மங்கையைக் கவர்ந்திடல் மதுவினை ருசித்திடல் மட்டுமே மாணவர் மனதிலே இருப்பதாய் மட்டிட்ட மடையரே மடையெனத் திரண்டஎம் மைந்தரைப் பாரடா ஏழைகள் பணத்தினை எளிதினில் சுருட்டிட ஏற்றதே அரசியல் என்பதாய் எண்ணிய அராஜகர் கைகளில் சிக்கிய எம்விதி அகற்றிடக் கங்கணம் கட்டிய தீரரே! ஆண்டவர் மருண்டிட ஆள்பவர் கலங்கிட அலையெனத் திரண்ட எம் சோதரர் உங்களின் அன்பி…
-
- 14 replies
- 771 views
-
-
மாதந்தை வேலுப் பிள்ளை மரணித்தார் என்றதுமே வேதனை தாங்கவில்லை வெம்பியழ இடமுமில்லை சோதனைகள் மத்தியிலே சோர்ந்தவர் மடிந்தாரோ பாதகர்கள் கொடுமையினால் புனிதரவர் இறந்தாரோ சாதனைகள் புரிந்தவொரு தமிழ்த்தலைவன் கருகொடுத்து மாதரசன் மணியாட்சி மகிழவொரு காலத்தே அதனழகைப் பார்க்காமல் உயிர்விடுத்தல் தகுமாமோ? சீதாவின் நிலையுறுத்தி சீரன்னை பார்வதியும் சேதியொன்று மறியாது சித்தங்கலங்கி நிற்க பேதையென வாடியங்கே புலம்புவது சரிதானோ? ஆதரிக்குந் தமிழரணி அணியணியாச் சிதறுதற்கு போதனைக்கு ஒருபெரியோன் இல்லாத குறையன்றோ வேதமொழி தாயகமாய் கொண்டவரால் நீதியங்கே அணிவகுத்த காலத்தை அழித்தங்கே அரக்கருடன் தாயகத்துக் கனவுகளை தகர்த்தெறியும் ஆட்சிவெறி தமிழ்மானம்…
-
- 1 reply
- 713 views
-