கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
-
"பெட்டையள்" கூட கதைக்கப்படாது.. நேற்றைய ஒரு பெட்டையின் அன்றைய வேண்டுகோள்..!!! அது வேறு யாருமல்ல.. அம்மா தான்..! "கதைச்சால் என்ன".. பதில் கேள்வி ஆழ் மனதோடு தற்கொலை செய்துவிட பெற்ற தாயை எதிர்த்து ஒரு கேள்வியா.. மனம் தனக்குத் தானே பரிசளித்துக் களித்துக் கொள்கிறது.! "இவன.. போய்ஸ் ஸ்கூலில போடுங்கோ.." ஏன்... அப்பதான் ஒழுங்கா வளர்வான்..! இப்ப என்றால்.. gay என்று சொல்லுவாங்க என்ற பயம்.. அப்ப என்ற படியால்.. நானும் மகிழ்ச்சியாக அதை ஏற்க.. ஆண்டுகள் 6 அங்கேயே கழிகிறது..! பள்ளிக்காலம்.. பருவ மங்கைகளின் நினைவின்றி.. பக்குவமாய் கழிகிறது..! பாடங்களிலும் தொய்வின்றிய சித்திகள்.. பல்கலைக்கழகம் வரை காலடி விரைகிறது.. அங்கும்…
-
- 58 replies
- 4.9k views
-
-
-
நீயும்..! நானும்...! நிலாவொளியில் நீல கடலின் நீள் கரையில் நினைவுகள் மறந்து நீயும் நானும் பாலை வனத்தில் பற்றியெரியும் வெய்யிலில் வெற்றுக் கால்களுடன் நீயும் நானும் மாலை நேரத்து மஞ்சள் வானத்து மறையும் சூரிய அழகில் நீயும் நானும் எரிமலை வாசலில் எகிறி பாயும் எரிகுழம்பில் எமை மறந்து நீயும் நானும் வாச மலர் தோட்டத்தின் வண்ண மலர்களிடையே பாச பிணைப்பில் நீயும் நானும் இருபகை நாடுகளின் இடைவிடா யுத்தத்தின் இடை நடுவே நீயும் நானும் இந்த உலகத்தின் அத்தனை முரண்களிலும் இரு முரண்களான நீயும் நானும் ஒருவரையொருவர் பார்த்தபடியே காத்திருப்போம் ஒன்று சேர..!
-
- 56 replies
- 6.8k views
-
-
முகப்புத்தகத்தில் கிறுக்கும் வரிகளை இங்கும் பதிவிடலாம் என்று... ------------------------------------------------------------------------------------------------------------------------ நாசித்துவாரங்களை நனைத்த மரணத்தின்வாசனை இன்னும் நீங்கவில்லை... காவுகொடுத்த குட்டித்தீவு காய்ந்து கிடக்கிறது குருதிச்சுவடுகள் அழிக்கப்பட்டு... வெறிகொண்ட காற்றை சாடுவதற்கு நட்பின் வாசத்தை தம் வேரிலும் துயரத்தின் கதையை தம் ஆன்மாவிலும் சுமந்து நிற்கின்றன சிறுமரங்கள்.. நண்பர்கள் கேள்விகள் அற்று பெருந்தெருவில் சுடப்பட்ட வண்ணாத்துப்பூச்சிகள்... 31/10/2013
-
- 55 replies
- 5.6k views
-
-
பார்வைகள் பார்க்கின்றேன் தொலைதூர இருள் வானில் . சிலசமயம் , சுவர்களையும் சுவாரசியமாய் ஊடுருவிக் காண்கின்றேன். என் கையின் ரேகைகள் ஏனோ இன்னும் புரியவில்லை ........... ஆண்கள் பெண்களை காவல் புரிவதால் , பெண்மை தாழ்ந்தது இல்லை . வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை , என்றும் காப்பாற்றுகிறது. தங்கம் தாழ்ந்ததென கருதுகிறதா உலகம் ???????? புரியவில்லை இன்னும் ஏனோ புரியவில்லை.......... ****** எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .
-
- 55 replies
- 5.8k views
-
-
ஆதிமூலத்தில் அந்தணண் பக்தி வேலி இட்டான் ஆலயத்தில் அயலவர்கள் சாதி வேலியிட்டனர் அலுவலகத்தில் அதிகாரிகள் அதிகார வேலியிட்டனர் பாடசாலையில் ஆசிர்யர்கள் கல்வியால் வேலியிட்டனர் காதலர்கள் அன்பால் வேலியிட்டனர் கணவன்,மனைவி தாம்பத்திய வேலியிட்டனர் பேரினதவாதம் பயங்கராவாத வேலியிட்டது விடுதலை போராளிகள் விடுதலை வேலியிட்டனர் தம் உயிர் தியாகத்தால்!
-
- 55 replies
- 4.9k views
-
-
ஆள் ஆரவாரமற்று கிடக்கிறது வேப்பங்கிளையில் தூளி.., ஒன்றுகூட பசியாற்றா பாவத்தில் கிளைநிரப்பிய கொய்யா.., யாரினிதென்று இரைந்தபடி கிடக்கின்றன யாழும் குழலும்.., விண்ணவரும் கண்ணுறங்கி விட்டனர் இன்னும் முடிக்கவில்லையொரு கதைசொல்லி.., புள்ளதாச்சி குழிகளின் சாபம் முத்துக்களை உதிர்த்தபடி பல்லாங்குழி.., மழைநீரால் ஒளிந்து கொள்ளும் பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி.., சிலேட்டு பலப்பத்தில் உயிர்த்தெழ வரிசையில் நிற்கின்றன அ,இ,ஆ,உ.., விடுப்பு கடிதமெழுதி அனுப்புநர் முகவரி தொலைத்த விடுமுறைகாலம்.., மழைநீரை வெறித்தபடி கவலைகளில் மிதக்கின்றன சில காகிதங்கள்.., புதுவர்ண பூச்சு அலங்கோலம் தூரிகை மாயம் சுவற்றில்.., மதிப்பிழந்த சில்லறை காசுகள் அறைகளில் அங்கொன்றும் இங்கொன்றும்.…
-
- 54 replies
- 7.2k views
-
-
எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. ஆராவது உதவி செய்வியளோ? அதுக்காக மண்டையுக்கை களிமண் உள்ளதெல்லாம் கவிதை எழுத ஆசைப்படுதுகள் எண்டு புறுபுறுக்காமல்............ எப்பிடி ஆரம்பிக்கோணும்?வசன நடையள் எழுத்துநடையளை ஒருக்கால் சொல்லித்தருவியளே?
-
- 54 replies
- 5.7k views
-
-
உறவுகளே தொடர்கதை போல் தொடர் கவிதையை இங்கு படைப்போமா? நான் தொடக்கி வைக்கின்றேன். என்னை தொடர்ந்து வருபவர் நான் எழுதும் கருவுக்கு ஏற்றதாகவோ அதன் கடைசி வரிகளை தெரிவு செய்து அதிலிருந்து தொடங்க வேண்டும். முதல் கவிதையை நமது தாயக நினைவுகளுடன் தொடங்குவோமா? எமது பழைய நினைவுகள் எல்லாம் கவிதை வரிகளில் வலம் வரட்டும் இங்கு. என்ன நீங்கள் தயரா? அந்த நாள் எந்த நாளோ? சூரிய கதிர்கள் ஊர் எல்லாம் பரவுமுன்னே மாசிப்பனியில் பற்கள் நடுநடுங்க கூணல் கிழவிகள் போல குறுகிக் கொண்டு புத்தகப்பையை அனணத்தபடி சென்றுவிடுவோம் பிரத்தியோக வகுப்புக்கு :arrow:
-
- 54 replies
- 8.1k views
-
-
காவியக் கவிஞ்ஞன் நான் என் எழுத்துக்கள் ஆயிரம் பேரைப் போராளியாக்கியது அவகளை உலகம் பயங்கரவாதியாக்கியது.. என் உணர்ச்சிப் பாடல்கள் ஆயிரமாயிரம் பேரைப் போர்க்களமேவச் செய்தது - மாவீரராக்கி அவர்தம் குடும்பத்தை அநாதையாக்கியது.. என் சிந்தனைச் சிதறல்கள் குஞ்சு குருமனையெல்லாம் அழித்து எம் குலப்பெண்டிரைக் கைம்பெண்ணாக்கியது எஞ்சியவர்களை அகதியாக்கியது.. மாபெரும் வீரனை முருகனாய் பாவனை செய்து முள்ளிவாய்க்காலில் கோம(வ)ணக் கடவுளாக்கினேன்.. இன்று???????? அவன் அவதாரம் எடுப்பான் என் வயிற்றுப் பிழைப்பு நடக்க அவன் வருவான்.. வரவேண்டும் .!! சூரியத்தேவனாய் சுடர் விட்டழிக்க அவன் வரவேண்டும்...!!!
-
- 54 replies
- 6.4k views
-
-
இந்த திரியிலே நான் எழுதிய கவிதைகளை இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.புதிய கவிதைகளையும் நான் இதுவரை களத்திலே எழுதிய கவிதைகளையும் தொகுக்கலாம் என்று எண்ணுகிறேன்.நான் இங்கு எழுதிய கவிதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கின்றது ஆகவே அவற்றை ஒன்றாக சேர்த்தால் பிரயோசனமாக இருக்கும் . முதலில பெண் தெய்வங்களை வணங்கி தொடங்குவம் என்ன. பெண் தெய்வம் சொல்லாதே பெண்ணே நீயும் உன் -சொல்லுக்கு பொருளில்லை இங்கு பொற்சிலையாக நீயிருந்த நேரம் மொய்த்ததோ -ஆண்கள் கூட்டம் சிந்தையிலே திடம் கொள்ளு தாயே நீ -புகட்டிடு …
-
- 54 replies
- 8.1k views
-
-
நட்பு அவனும் அவளும் நட்பின் பரந்த வெளியில் கைகோர்த்து நடந்தனர். ஆண், பெண் பால்நிலைக்கு அப்பால் உன்னதப் பொருளின் விரிதளத்தில், கிண்டலாய், கலகலப்பாய், சண்டைகளாய் அவ்விருவரின் முன் விரிந்தது உலகம். ஆயிரங்கண்கள் அவர்களின் புனிதத்தை அறியாமல் இழிவாகப் பார்த்தன. ஆண்,பெண் பிம்பங்களுக்கு அப்பால் நட்பின் வளர்வைச் சமுதாயம் ஏற்கவில்லை. ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் மோகிக்கும் பாலியல் கண்கொண்டே பார்த்துப் பழக்கப்பட்ட சமுதாயம் வேறென்ன செய்யும்? மீள எண்ணாத சமூக எச்சங்களாக, அவன் காதல் மனையாளின் கண்ணீரும், அவள் வாழ்க்கைத் துணைவனின் சந்தேகமும் நெய்யிட்ட பெருந்தீயாய் சுவாலை வீசிற்று. கனத்த மனங்களுடன்... சுருங்காத உன்னத விரிதளத்தி…
-
- 54 replies
- 12.6k views
-
-
கவிபேரரசின் ""வைகறை மேகங்கள்"" கவிதை தொகுப்புக்கள்-"(தொடராய் வருகிறது....படியுங்கள்) ஒளிப்புக்கள்.... பூந்துகில் உடுத்த புதுமதி யழகி நீந்தியே திரியும் நீலப் பட்டில் வைத்துப் பின்னி வண்ணங் கூட்டித் தைத்துத் தொடுத்த தங்க சிமிழ்கள்... சற்றேதெறித்த சரச்சிரிப்பாக உற்று பார்க்கும் ஒளியின் பூக்கள் திரும்பிச் சிரித்துத் தேன்விழி அசைத்து விரும்பி அழைக்கும் வேசியர் கூட்டம்... சித்திரப் பூக்கள் செம்பலா ஈக்கள் நித்தில வீதியில் நிலவுக் கன்னி அறுத்துப் போட்ட ஆரச் சிதறல் வறுமை வானம் வடித்த கண்ணீர்... உறைந்து தங்கிய ஒளியின் துளிகள் விரந்து முறிந்த மின்னல் துண்டுகள் இன்ப இரவில் இருட்டின் விழிகள் விண்ணில் காணும் வெளிச்சக் கனவுகள்... …
-
- 54 replies
- 15.3k views
-
-
மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும் விடுதலை பெருந்தீயில் பேரியக்கமாய் முப்பத்தெட்டு ஆண்டுகளாய் சுடர் விட்டு எரிந்த தியாக விளக்குகளே பற்றி எரியும் பெரு நெருப்பை நெஞ்சின் அறைகளில் தாங்கி உயிரையே எண்ணையாக கொடுத்த பெரு மக்களே உங்கள் காலடித்தடங்களை எமக்குள் இறக்கி கைகூப்பி மண்டியிட்டு தொழுது வணங்குகின்றோம் வீர வணக்கங்கள் !! : யாழ் இணையம் மே, 2012
-
- 53 replies
- 9.2k views
- 1 follower
-
-
விழியும் மலரும்..!! மலர்ந்த அந்த பொழுதினில் வீசிய இதமான தென்றலில் மலர்களின் மெல்லிசை கேட்டு மலர்ந்தது என் விழி... மலர்ந்த விழி மொட்டுடைந்த அந்த மலரின் மெல்லிசை வந்த திசையினை தேடின..!! தேடிய அந்த விழியில் விழுந்ததோ பல மலர்கள் வாடின விழிகள்.. பூத்திருந்த மலர்களை பார்த்தும்.. மலர்கள் ஒவ்வொன்றினதும் இதமான சிரிப்பு விழிகளிள் விழுந்த போதும்..!! விழிகள் அதனை ரசிக்கவில்லை.. வீசிய தென்றலில் மலர்கள் தலையசைத்து விழியிடம்.. பேசின பல கதைகள்.. ஆனால் விழியோ மெளனம்..!! விழியின் ஏக்கம் அறியுமா மலர்கள்.. மலரின் குணம் அறியுமா விழிகள்.. மலரில் தேன் அருந்த தேனிக்கள் மெதுவாக …
-
- 53 replies
- 10.5k views
-
-
அதிசய குழந்தை அவன் ... ஆசான் நான் ... என்னைவிட அவனே முன்னுக்கு " அ " நான் "ஆ " இந்த குழந்தை இப்படியெல்லாம் .... பேசுமா....? சிந்திக்குமா ...? நம்ப முடியவில்லை என்போர் ... இந்த கவிதையை மூடிவிட்டு போகலாம் ....!!! இந்த குழந்தை என்னதான் சொல்லப்போகிறது என்பதை ... பார்க்க விரும்புவோர் .... பொறுமையோடு காத்திருந்து .... தொடராக வரும் வசனக்கவிதையை .... பாருங்கள் .....!!! அதிசயக்குழந்தை .... எப்படி இருப்பான் ...? ஆசான் நேரான சிந்தனையில் ... பேசினால் அவன் எதிர் சிந்தனையில் பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில் பேசினால் அவன் நேர் நித்தனையில் ... பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!! ஆன்மீகம் பேசுவான் அரசியில் பேசுவா…
-
- 53 replies
- 6.7k views
-
-
தொட்டுவிட்டவள் தொற்றிவிட்டவள் என்றிரண்டு பொண்டாட்டிங்க எனக்கு..! எங்களுக்க விவாகமுமில்ல விவாகரத்துமில்ல சண்டையுமில்ல சச்சரவுமில்ல கூவத் தெரிந்த நான் கூனியதுமில்ல.. கொண்டை வைச்ச நான் தலை சாய்த்ததுமில்ல..! இவ்வளவைய கட்டிமேய்க்கிறேன் கனகாலமாய்..! நானும் இரண்டு பொண்டாட்டிக்காரன் தான். Spoiler (இப்படிக்கு வெள்ளைக் கோழி.. சிவப்புக்கோழிகளின் கணவன் செஞ்சேவல்) படம்:முகநூல்
-
- 51 replies
- 7.4k views
-
-
-
வஞ்சிக்கொடியே வாஞ்சையுடன் என்னோடு கொஞ்சிப் பேசிப் பேசி கொள்ளை கொண்டவளே எனக்கே தெரியாமல் என்னுள் புகுந்து என்னையே கேட்காமல் எண்ணில்லா முத்தங்கள் தந்து என்னை கோபப்படுத்தினாய் என்னை செல்லமாக அழவைத்தாய் என்னுள் உனைத் தேடிக்கொண்டே உன்னில் எனை தேட வைத்தாய் கண்டேன் எனை உன்கண்ணில் கொண்டேன் அளவில்லா இன்பம் மீண்டும் எனை நீங்கி சென்றாய் உன் இருப்பிடம் சற்றேனும் எதிர்பாராபோது சினுங்கிய தொலைபேசியில் உன் அன்பான குரல் கேட்டு என் கையில் இருந்த லொலிபொப் புளிச்சது ஏன்?
-
- 51 replies
- 6.3k views
-
-
தூயவன் அழைப்பு..! யாழினில் ஒரு பகலவன் கலகங்களின் தலை இவன் அரிச்சகர்களின் துணை இவன் அவனே நம் தூயவன் சிறு ஊடல்கள் சில சில பெருஞ்சமர்களோ பலப்பல சினமது மிக வெளிப்பட வெளியேறினான் தனிப்பட வானவரில் நம்பிக்கை மதமது உன் தும்பிக்கை உன் தெய்வம் கணேசனோ கடுப்படித்தவன் சபேசனோ அடிக்கடி நீ வருபவன் அடிக்கு அடி நன்கு தருபவன் கெடுத்தவன் எந்த அரக்கனோ கொடும் நாரதக் கொடுக்கனோ களத்தில் கடுப்பு என்னையா நீ குளத்தில் எறிந்த கல்லையா நீ வருவதெப்போ சொல்லையா உன் மறுபிறப்போ பொன்னையா வருந்திப் பெறவில்லை தடை வெளியேறக் கிடைக்க இல்லை விடை உனக்கு இடம் இருக்கையா உடனிருப்பார் நம்ம தயா…
-
- 50 replies
- 7.5k views
-
-
அனைவருக்கும் ஒரு சிறு காதல் பாடல் போட்டி. காதலர் தினம் நெருங்கிவிட்டது. இரசிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இங்கே "காதல்" என்ற சொல்லில் அல்லது காதலிக்க, காதலுடன் இப்படியான சொற்களில் ஆரம்பிக்கும் சினிமாப்பாடல்களை எழுதுங்கள். ஒருவர் ஒரு பாடலின் வரிகளில் குறைந்தது முதல் வரியையாவது உருப்படியாக எழுதவேண்டும். முழுவதும் எழுதமுடிந்தால் எழுதுங்கள். ஒருவர் ஒருநேரத்தில் ஒரு பாடலை மட்டும்தான் எழுதவேண்டும். அடுத்தவர் வந்து ஒரு பாடலை எழுதியபின்னர் முன்னர் வந்தவர்கள் திரும்பவும் வந்து இன்னொரு பாடலை எழுதலாம். சரி, எங்கே பார்ப்போம்..... நானே ஆரம்பித்துவைக்கிறேன். குறிப்பு:-ஆரம்பத்தை மட்டும் படித்துவிட்டு என்ன ஆசிரியரே! இது உங்கள் சொந்த அனுபவமா? என்று கேட்கவேண்டாம். …
-
- 50 replies
- 7.5k views
-
-
விடைபெறும்வேளை விடைபெறும்வேளை நெருங்கிவிட்டதா எமக்கு என் கண்ணீர் உன் கண்களில் உன் கண்ணீர் என் கண்களில் இடம் மாறப்போகின்றோம் இதயங்கள் பரிமாறாமலே இப்படி இதய தேசத்தில் உன் நினைவுகள் நிறைய இருந்தாலும் எல்லாம் சொல்லபோவதில்லை உனக்கு இக் கவிதை இதுபோல இக் கவிதை சுமக்காத பல நிகழ்வுகள் உன்னுள்ளும்.......... என்னுள்ளும்........... என்ன தான் நான் எழுத உனக்கு என்னையே எழுதி கொடுக்க நினைத்த பின் எனக்கு உன்னிடம் இருந்து நினைவு பரிசு எதற்கு உன் நினவுகளே நீ எனக்கு தந்திருக்கும் பரிசு தானே பிரிவதற்கு துடிக்கும் உன்னை விட எனகென்றும் நிரந்தரம் பிரியமான உன் பிரியாத நினைவுகளே அன்பே சேர்ந்திருந்த பல பொழுதுகளில் ந…
-
- 48 replies
- 6.4k views
-
-
வடக்கால உள்ள காணியை அடகுக்கு விட்டு ஊர் சாகட்டும் நீ பத்திரமா.. வடக்கை விட்டு ஓடு என்று ஆத்தா விரட்டி அடிக்க.. ஓடி வந்து.. சிங்களக் குகையினில் சிங்கிள் றூமில.. பதுங்கிக் கிடந்து.. எனக்கு முதலாவே செல்லடிக்க முதலே 83 யூலையோட.. வசதியா தாம் வாழ என்று இருந்த இரண்டு மாடி வீட்டை வித்துப் போட்டு.. மேற்கால ஓடி வந்த குடும்பத்தில வந்த ஒருத்தனை செற்றப் பண்ணி.. நானும் மங்கை என்று வந்து செற்றிலாகி இப்ப நாலு குழந்தை பெத்து அதுகளும் குழந்தை பெறும் நிலைக்கு வந்திட்டுதுகள்..! ஒரு நாள் தற்செயலா.. கண்ணாடி முன்னாடி நிதானமா நிற்க.. தலைமுடி ஓரமா டை பூசாமல் விட்டதால தெரிஞ்ச அந்த நரைக்கும் வெள்ளை முடிகள்... ஊரில.. வெத்தில…
-
- 48 replies
- 6.6k views
-
-
இன்றுதான் பேசக்கிடைத்தது உன் தோழியிடம்... அன்று நீ என்னிடத்தில் எதிர்பார்த்த எதுவுமே, இன்று உன்னிடத்தில் இல்லையாம்! கேள்விப்பட்டேன்.....! உனக்காக அழவே கூடாது என்றிருந்தேன்... கண்கள் என்னை கைவிட்டன - உன்னைப்போல! எப்போதும் திரும்பப்பெறமுடியாத என்னுடைய நம்பிக்கைகளை உன்னிடத்தில் தொலைத்தவன் நான்! இனிமேலும் அதை நான் உன்னிடத்தில் தேட மாட்டேன்!!! இப்போது எல்லாமே இருக்கிறது என்னிடத்தில்... உன் வற்றாத நினைவுகளும் ஆற்றமுடியாத காயங்களும் ஆறாத கோபமும் கூட. உன்னையும் நீ செய்த துரோகத்தையும் எப்படி மறக்கமுடியும்??? என்னை மட்டுமா... என் தூய்மையான நேசத்தையும் கேவலப்படுத்தி... நீ தந்துவிட்டுப்போன பிரிவையும் அதன் சமுதாய அடையாளத்தையும் எப்படி மறைக்கமுடியும்??? அன்ற…
-
- 48 replies
- 4.9k views
-