Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உள்ளாடையும் கிழிந்து அந்தரங்கம் காட்டுகிறாள் கோயில் பிச்சைக்காரி.. அவளையும் தாண்டிச்செல்கிறார்கள் சாமிக்கு பட்டுச் சேலை சாத்த... http://www.ilankathir.com/?p=2593

    • 18 replies
    • 1.8k views
  2. அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள் அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறது சிதைமேட்டில் அழிக்க முடியாத உயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது உடைத்தெறியப்படுவதும் சிதைத்து புதைக்கப்படுவதும் யாரோ ஒருவருடைய பிள்ளையை. நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்? எதிலும் நிரப்ப முடியாத எலும்புத்துகள்களை அவர்கள் தங்கள் உணவுக்கோப்பைகளில் நிரப்ப இயலுமா? அவற்றை தின்று தீர்த்து பசியாறி ஆடலாமா? பெற்றவர்கள் யாரோ எல்லாம் இருதயத்திற்குள் அடித்தழுது புலம்பும்பொழுது கண்ணீர் சிதைகளை நனைக்கின்றன. யாரோ ஒருவருடைய பிள்ளை ஏதோ ஒன்றுக்காக வெடிபட்டு வீழ்ந்திருக்கிறது நெருங்க முடியாத எருக்கலைக்காட்டில் உள் நுழைந்து சாம்பிராணிகளை யாரே கொளுத்தியிருக்கி…

  3. காதலனே ...இதயத்தை செல்லமாக ....கிள்பவனே....நெஞ்சத்தை கிள்ளி ....எறிந்து விடாதே ....என் ராசா ....!!!$நீ தாண்டா ....இதயத்தின் ஊமைக்காயம் ..மெதுவாகவும் கனமாகவும்வலியை தருகிறாய் ..!!!$நான் ...நன்றாக அழுகிறேன் ....அப்போதுதான் -என் இதயம் கழுவுப்படும் ..என்றாய்....காதல் என்றால் என்ன ...?என்றும் புரியும் என்றாய் ....!!!$........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா ......................கவி நாட்டியரசர்.............................கவிப்புயல் இனியவன் ............................யாழ்ப்பாணம் ....................

  4. எனது சின்னஞ் சிறிய முகம், உனது முகம் பார்க்கும் கண்ணாடியென, உற்றுப் பார்த்த படியிருப்பாய்! உன் முகத்தின் இளமைக் காலப் புன்னகை, இன்னும் நினைவிருக்கின்றது! உனது அணைப்பின் இதமும், இதயத் துடிப்புக்களின் ஓசையும்,, இன்னும் கேட்கின்றது! மொட்டை வழித்த போது, முதற் பல் தோன்றியபோது, முழங்கால் மடித்துத் தவழ்ந்த போது, முதன் முதலாய் நடந்த போது..... எல்லா முதல்களிலும் , அருகிலிருந்து பூரித்தாய்! நிலாக் காட்டி, நீ ஊட்டிய பால் சோறு, இன்னும் இனிக்கின்றது!, நான் சிரிக்கையில் சிரித்து, நான் அழுகையில் அழுது, உனக்கென்று,ஏதுமின்றி, உணர்ச்சியில்லா ஜடமானாய்! எங்கோ அனுப்பி வைத்தாய்! எத்தனை போராட்டங்கள்? எத்தனை இடம்பெயர்வுகள்? ஆயிரம் …

  5. ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலேஉள்ளம் பதை பதைக்கும்எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்ஓலைச்சுவடி முதல்ஊர்களின் வரலாறும் தொன்மையும்சொல்லும் அத்தனை நூலும்...குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரைஎண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்தென்னாசியாவிலை பெரிய நூலகம்இதுவெண்டு எல்லாரும்புழுகமாச் சொல்லிச் சொல்லிசெருக்குப் படுறவையாம்கல்வி அறிவிலை உலக அறிவிலைதமிழன் கொடி கட்டிப் பறக்கஇதுதான் காரணமெண்டதைஎல்லாரும் அறிஞ்சதாலைஎப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்கல்வி அறிவைச் சிதைச்சால்கண்டபடி தமிழனாலை வளரேலாதுஎண்டு கற்பனை கட்டின சிங்களம்இரவோடு இரவா வந்து உயிரோடைகொள்ளி வைச்சுப் போனதாம்அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தைஅழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரைஅறிவுத் தேடலை அழிக்க முடி…

  6. சுயநலமற்ற தந்தைக்கு மகனென்பதாலும், வீரப்பரம்பரையின் விழுதென்பதாலும் அவசர அவசரமாக அழிக்கப்பட்டிருக்கிறது உன் தடம்… தனியே பள்ளி செல்லத் தவிக்கும் தமிழ்ப்பிள்ளைகளுக்கு நடுவில், பகைவனிடம் செல்லுகையில் கூட பயப்படவில்லை நீ… அது சரி…., தப்பாமல் பிறந்த தமிழ்மகனல்லவா… ஏதுமறியா அப்பாவியாய் இறுதிக்கணத்தில் இருந்திருக்கிறாய் என்பதை ஏங்கித் தவிக்கும் உன் விழிகள் எமக்குத் தெரியப்படுத்துகின்றன.. வரவேற்று உணவளித்து வாழ்த்தியனுப்புவது தமிழன் பரம்பரை . உணவளித்த பின் உயிரை எடுப்பது சிங்களவன் வரைமுறை ஆயுதபூசைகளுக்கு நடுவில் அவலக்குரல் எழுப்பியிருப்பாய் நீ .. இப்போது தான் உலகக் கடவுள்களில் ஓரிருவர் கண்கள் நீர்த்து நிறைகின்றன…! …

  7. தேநீர் கவிதை: அலைகள் மாறுவதில்லை! மு.மேத்தா காகிதம் பணம் ஆனது... பணம் மீண்டும் காகிதமாகிவிட்டது! பணத்தை என்ன செய்வதென்ற கவலை - அதிபர்களுக்கும் அதிகாரங்களுக்கும்! பணத்திற்கு என்ன செய்வதென்ற கவலை - அப்பாவிகளுக்கும் அபலைகளுக்கும்! கொள்ளை நோட்டுகளும் கள்ள நோட்டுகளும் குளிர் சாதன அறைகளில் கூடிப்பேசுகின்றன... பாவம் - நல்ல நோட்டுகள்தான் அலைகின்றன நடுத்தெருவில்! வங்கி வங்கியாய் …

  8. வேதப் பொருளே வெற்றுச் சிலையா நீ? சக்தியின் பெருவடிவே சங்காரத் திருவுருவே சிம்ம வாகனியே சிங்காரப் பெருந்தேவி சும்மா கிடக்கிறாயே.... உன் சுயம் எங்கு போனது? வேட்டை ஆடுகிறாய், வீதியுலா வருகிறாய் பாட்டம் கிடந்துழலும் பிள்ளைகளைப் பாராமல் மாற்றாரை உன் மண்ணில் மகிழ்ந்துலவ வைக்கிறாய் உனக்கென்ன கொலுவிருக்கும் இடமெல்லாம் கொண்டாடப் பெருங்கூட்டம் பட்டுப்பளபளப்பும், தங்கத் தகதகப்பும், பளிச்சென்று ஒளிவீசும் வைரச்சிலுசிலுப்பும், வெள்ளிக் கொலுசும், – வீரத் திருவாளும் , அள்ளி முடித்த கார்கொண்டை அலங்கரித்த வெள்ளி, பிறையும், துள்ளிக் குதித்தொளிரும் மின்னி மிடுக்கும் காணக்கண் போதாது அம்மையே….- ஆயினும்........ கள்ளச் சிரிப்பொளிரும் – உன் வதனக்கோலம் முள்ளாய் …

  9. கார்த்திகைப் பூக்கள் உங்களுக்காய் பூத்து நிற்கும்.... கவிதை- இளங்கவி எங்கள் மக்களின் அவலத்தில் எங்கள் வீரர்களை மறந்தோமா..? மாவீரர் ஆகி விட்ட எங்கள் புலிகளை மறந்தோமா...? ஆழிப்பேரலை போல் அழித்தவண்ணம் வந்தவனை சிறு மண்மேடாய் நின்று தடுத்தவரை மறந்தோமா..? சுற்றிவிழும் எறிகனைகள் நெருப்பு கக்கிவரும் பீரங்கிகள் காற்றுப் போல் சன்னங்கள் கழுகு போட்ட கொத்தணிகள் கருக்கிவிடும் வாயுக்கள் பொஸ்பரசின் பொசுக்கல்கள் இத்தனையும் தாங்கி எரிமலையில் நின்றுகொன்டு தன்னுயிர் போக முதல் ஒவ்வொரு தமிழரையும் காத்த எங்கள் கருங்கல்லு மலைகலை கனவிலும் நாம் மறப்போமா...? வேங்கைகள் பலருடனும் வீழ்ந்த பல விரத்தளபதிகள்... எங்கள் மக்களுக்காய் மடிந்த இ…

  10. தன்னை ஈய்ந்த (கொடுத்த )தாய்மை தன் முதற் பேறாய் என்னைக் கருவுற்ற வேளை உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது காலப்போக்கில் உதரம் சற்றே பருத்து அயலவர்க்கு அடையாளம் காட்டியது முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது முருங்கைக் கீரை சத்துணவானது எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது இளம் வெந்நீர்க் குளியலில் உடல் சிலிர்க்கையில் குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது என் தந்தை என்னே தாய்மை என்றார் எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் நாட்கள் எண்ணும் வேளை தன்னில் இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க அரசினர் வைத்திய சால…

    • 10 replies
    • 2.5k views
  11. எமக்கொரு நாடு கேடா.... வெறுப்பு உமிழும் காலம் மீது வாழ்வு சூழ் கொள்கின்றது ஒரு கண்ணை மறு கண் பிடுங்குது தான் பார்க்கா காட்சிதனை நீ பார்த்தல் ஆகாது என ஆவேசம் கொள்ளுது எதிரியின் தணல் எடுத்து மறுகண்ணை சுடுது இது எம் சாபம் யுகங்கள் தோறும் நாம் இப்படி தான் இருந்தோம் ஒரே காட்சியை ஒவ்வொருவரும் வர்ணம் பூசி பார்த்தோம் என் வர்ணம் பார்க்காத கண்னை வீதியின் முடிவில் குச்சொழுங்கையில் குடி வைத்தோம் எம் கண்ணை நாமே குருடாக்குவோம் எம் கைகளில் நாமே விலங்கிடுவோம் வரலாற்றின் நீண்ட பக்கம் எங்கும் எம் தோல்வியை நாமே எழுதிக் கொள்வோம் எம் முதுகெலும்பில் எதிரியின் மாட்டுச் சாணத்தை அப்பியது நாம் எம் குடிசைகளி…

  12. ஈனக்குரல் - தேவஅபிரா அலையிழந்து அடங்கியகடல் ஆடையிழந்து கூடாகிய உடல் நிலைகுலைந்து நின்றது நீயும் நீ அவளில்லை. அவள் நீயில்லை. எவளில்லை நீ? எவளென்றாலும் கறைபடிந்த உள்ளாடையுடன் காத்திருப்பர். கூடு கலைந்து ஒடியநாளில் கைவிடப்பட உயிர்களிடம் எஞ்சியிருந்தவற்றைக் காவி வந்தவர்கள் எவருமில்லை படிமங்கள் ஆயிரம் புனைவுகள் கோடி போரையும் வாழ்வையும் சொல்ல முடிந்த கவிஞர்கள் இங்கில்லை. யாரையும் நோகாது செல்லக் காற்றுக்கு முடியும்; கண்ணீருக்கு முடியாது. பெண்ணே நீ நின்ற கடல் சேறானது. உன்னைக் கைவிட்ட காலம் ஊனமானது. செய்யாதன செய்த அவன் அரியாசனம் பற்றி எரிகவென்று அறம்பாடச் சொல்வறண்டு போன கவிஞனடி நான். பொன்னே பொய்வாழுதடி போடி போன இலட்சம் உயிர்களோ…

  13. Started by nochchi,

    1987 யூலை 5 …. --------------------------------- இது வெறும் நினைத்து மறந்திடும் நினைவுநாளல்ல எம் தேசம் மீட்டிடத் தீயென வாழ்ந்தவர் தீரத்தைப் பாடிடும் வீர நாளன்றோ! விடுதலைப் பாதையின் தடைகளை வீழ்த்திட வெடிகளாய் மாறிய வேதங்களன்றோ! இவர் பாதம் பதிந்த நிலங்களின் மீதிலே பூக்களைத் தூவிடும் காலத்தைப் படைப்போம்! மக்கள் வாழ்வினை நெஞ்சிலே சுமந்தவர் தம்முயிர் வீசிடும் வேளையிற் கூடத் தாயக விடுதலை கீதம் பாடிடும் பெரும் ஞானிகளானோர்! ஞாலம் மீதிலே வாழ்கின்ற வரையிலே இவர் நாமத்தை எங்கள் நெஞ்சிலே சுமப்போம்! - நொச்சி -

  14. நண்பர்களே நான்தேடும் பாடல் உங்களிடம் இருக்கிறதா அல்லது எங்கு தரவறக்கம் செய்யலாம். இன்று என்னிடம் ஒரு நண்பர் பாடல்கள் சிலவற்றை போட்டு காட்டினார் அவையனைத்தும் தமிழில் பிரசித்தி பெற்ற சினிமா பாடல்களின் உல்டா மிகவும் நகைச்சுவையாக இருந்தன நாதம்.கொம்மில் தரவிறக்கம் செய்ததாக கூறினார் ஆனால் இப்பாடல்கள் தற்போது அங்கு காணமுடியவில்லை உங்களில்யாருக்காவது தெரியுமா சுறுளியின் குரலில் கேட்கவே மிக நகைச்சுவையாகவிருக்ம்.

  15. பீரங்கிகளின் பாதத்தில் மண் பானைகளாய் மண்டையோடுகள் உடைய பட்டினி கிடக்கிறது பொங்கல். பாலசிங்கத்தின் கல்லறையில் கசியும் ஊதுபத்தி புகை அனைத்து தமிழர்களின் ஆக்ஸிஜன் காற்று. தாய்களின் மார்புகளில் பொங்கிய பால் பொங்கலை குடிப்பதற்கு எப்படி எழுப்புவது செத்துப்போன குழந்தைகளை? கடல் தாண்டி போய் வந்த பறவையே எப்படி இருக்கிறார்கள் எம் தமிழர்கள்? ஆண்டுக்கொரு முறை தமிழர் திருநாள் எப்போது பிறப்பார் தமிழர்? இந்திய விடுதலைக்குப் பின் பிறந்தவன் தமிழர் விடுதலைக்காகக் காத்திருக்கிறேன். 47 இந்தியாவுக்கு 2007 ஈழத்துக்காய் விடியட்டும்! நன்றி ஆனந்தவிகடன்

  16. மன்னிப்பு என்பது .. ஏரோது மன்னன் தேடிய இயேசுவே எங்கே போகின்றீர் ? பாரிலே வாழ்ந்தவர் பாவிகள் தானய்யா தேவனே ஏகி நின்றீர் ! நீரோடை போலே நீர் சொன்ன வேதங்கள் நீர்க் குமிழ் ஆனதுவோ ? வேரோடு மானிடர் வீழ்ந்திட்டார் .. பாவத்தில் வேதனை தானதுவோ ? அன்புடன் நேசித்த அப்போஸ்தலன் இராயப்பன் அறியேன் .. என்றுரைத்தான் முப்பது வெள்ளிக் காசுகள் வேண்டி யூதாசும் முத்தமிட்டான் அன்றாடம் உம் நிழலில் அலைந்த இச் சீடர்கள் வென்றார்களா விதியை ? இறைவா .. எதிரி வேறெங்கில்லை .. என் வீட்டில் தான் என்ற பேருண்மை புரிந்து கொண்டேன் எதிரி வேறெங்கில்லை .. என் வீட்டில் தான் என்ற பேருண்ம…

    • 2 replies
    • 1.4k views
  17. விழி மூட முடியவில்லை விடியும் வரை கண்ணே!! விடிவெள்ளி பார்பதிற்கில்லை பெண்ணே விடியலுக்காய் உன்னை தேடி........... வில்லங்கங்கள் பல உண்டு வில்லன்ளும் பல உண்டு விடயம் அறிந்த பெற்றோர் உண்டு விட்டு வைப்பார்களா எம்மை........... விதி விட்ட வழி என்று கண் கலங்காதே வியாக்கியானங்கள் பேசாதே விகடமாக என்னிடம் பேசிய நீயா-இன்று!! விரக்தியாக பேசி என்னை கொல்கிறாய்!! விரியத் துடிக்கு பூவே நீ விருப்பத்தோடு காத்திரு வீரத்தோடு நான் வருவேன் விரைவில் உனைக் கைப்பிடிக்க............. எல்லா கவிஞர்களுக்கு வணக்கமுங்கோ..........நாமளும் ஒன்றை எழுதி பார்தோம் இதில போடுறேன் பேபி பென்சில் பிடித்து எழுதின முதல் கவி ஒருத்தரும் ஏசி போடாதையுங்கோ........கவியா தெரியாட…

    • 44 replies
    • 4.6k views
  18. 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும். நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட…

      • Thanks
      • Haha
    • 4 replies
    • 866 views
  19. இலக்கியமே நீ தூங்கு இழப்புக்கள் எமக்குப் புதிதல்ல இருந்தும் இம் மாவீரனின் இழப்பறிந்து ஏனோ? ஏங்கோ? வலிக்கிறதே ஏன் என்று தெரிகிறதா? மத்தாப் பூவாக மனங்களிலே மலர்ந்திருக்கும் சித்திரச் சிரிப்பொன்று நித்திரையாகியதா? வரலாற்றில் நிலைத்திட்ட வண்ணத் தமிழ் காவியமே மரணத்தை வென்றிட்ட மாவீர மன்னவனே சித்தமெல்லாம் தமிழீழக் கனவோடு உறவாடி வித்தாகி விதையான சத்தியனே நீ தூங்கு காற்றைவிட வேகமாய் கடுகிவரும் வேகமெங்கே? களத்தினில் புயலாக புகுந்திடும் தீரமெங்கே? சீற்றமுறும் சிறுத்தையாய் சினந்தெழும் வீரமெங்கே? மாபெரும் சபைகளில தோள் சேர்ந்த மாலையெங்கே? இலட்சியத்தின் வேட்கையுடன் இறுதிவரை போராடும் இலக்கணங்கள் இங்குண்டு இலக்கியமே …

  20. என் விம்பத்தை கண்ணாடியில் பார்க்கின்றேன் உடைந்து போன ஒரு கண்ணாடியில் தெரியும் சிதறிய முகமாய் எனக்கு என் முகம் தெரிந்தது சிதறல்களில் தெரிந்த என் முகம்கள் ஒவ்வொரு முகமூடி அணிந்து இருந்தது இப்படி முன்னம் என் முகம் இருக்கவில்லை அதற்கே அதற்கு என இரு கண்கள் இருந்தன இரு செவிகள் இருந்தன ஒரே ஒரு நாக்கும் ஒரு சோடி உதடுகள் மட்டுமே இருந்தன எப்ப பார்த்தாலும் இது என் முகம் என்று உரிமை கோரியிருந்தேன் ஆனால் கண்ணாடியில் இப்ப தெரியும் என் முகம் எனதில்லை என் முகத்தை என்னிடம் இருந்து திருடியது யார்? என் கண்களை அகற்றி தம் கண்களை செருகியது எவர்? எனக்கே எனக்காக இருந்த குரலையும் திருடி அதில் தம் குரலையும் பத…

  21. இன்று face book இல் பகிரபட்ட கவிதை ஒன்று பணத்தை தேடி அரபுநாடுகளுக்கு செல்லும் ஒரு கணவனை நோக்கி மனைவி தனது ஏக்கம்களை கூறுவதாக அமைய பெற்ற கவிதை படிச்சு பாருங்க திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்! என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது ... காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்! பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்! அம்மா வருவதாக…

    • 2 replies
    • 1.3k views
  22. அம்மா இங்கே வா வா!! அம்மா இங்கே வா வா! Arrest Warrant தா தா! வேலூர் ஜெயிலில் போட்டு கண்ணுல தண்ணியும் காட்டு! அப்புவும் ரவியும் கூட்டு சின்ன 'சாமி'க்கும் வேட்டு குடுத்தாங்க மாமீங்க பேட்டி சாயம் போச்சுது காவி வேட்டி பெருசுங்க பொருளுங்க குட்தாங்க கூடவே போட்டாவும் புட்ச்சாங்க எதிராளிய குத்தம் சொன்னாங்க மீதிய அமுக்கினு போனாங்க போஸ்டரு நோட்டிசு அடிப்பாங்க கட்டவுடுக்கு பாலும் ஊத்துவாங்க அந்த 'ஸ்டாரோட' குஞ்சு-கல காணோங்க பாலில்ல! ஒருபுள்ள போச்சுதுங்க அபலைங்க சோகமும் பார்த்தாச்சி அனுதாபமும் எரக்கமும் பட்டாச்சி பழய துணிமணி கொடுத்தாச்சி சுனாமி சோகமும் போயாச்சி மிருனாள் சென் -ஆ! யாருங்க? ஜெயலச்சுமி செரினா தெரியுங்க ஐயோ! '…

  23. என் சிரிப்புகளும் பொய் சொல்கின்றன இயல்புகளும் தம் இயல்பினை இழந்துவிடுகின்றன மரபியல் தாண்டிய முடிவுகளால்... மரத்துப்போய் விடுகின்றது மனசு...! புதிதாய் எதையோ தேடுகின்றது கிடைக்காது என்று தெரிந்தும் அதற்காகவே ஏங்குகிறது நேரகாலம் தெரியாமல்... வந்துபோகும் நினைவுகளால், கண்களோடு சேர்ந்து... நனைந்துபோகின்றது மனசும். பாரமான இதயம் பற்றியெரிய... ஈரமான மனசு கொதித்து, ஆவியாகிக் கிளம்புகின்றன ஏமாற்றங்கள். கலகலப்பாய் சிரித்துக்கொண்டிருக்கும் என்னில், என் அழுகையைத்தவிர... வேறெதுவும் உண்மையில்லை...!

  24. {சோழன் ஆண்ட தமிழன் வாழ்ந்த பூமியில் கப்பலேறி குடியேற வரும் அரபுத் திமிர்கள்.. பேரீச்சை மரங்கள். ஈழத்தின் கிழக்கின் காத்தான்குடி என்ற ஊர் இன்று முழு முஸ்லீம் கிராமமாகி அரபு வடிவம் எடுக்கிறது} அரபிய மணற்படுக்கையின் அற்புதங்களே ஈச்சை மரத்து வேர்களே.. கூலிகளாய் நாம் அங்கு சிந்திய வியர்வை சிதறிய நீரில் வளர்ந்து பெருத்த திமிர்களே..! எட்ட வளர்ந்து கனி தரும் போது ஒட்டகமாய் தாங்கி நின்று பறித்துப் பெட்டியில் அடைத்து ஏற்றி விட்டு நாம் கூனி விட்டோம்..! எஜமானர்களின் எண்ணெய் காசில் நீரோ நிமிர்ந்து நின்று மினுமினுக்கிறீர்..! விமானம் ஏறி ஆசை கொண்டு அரபுலோகம் வர தங்கை மீது பழிமுடித்து அவள் தலை கொய்தீர்..! நீரோ.. வேரூன்ற கப்பலேறி தமிழீழம் வருகிற…

    • 82 replies
    • 6.3k views
  25. பிஞ்சுப் பருவத்தில் பாலுக்காய்க் காத்திருந்தேன் பள்ளி நாட்களில் விடுமுறைக்காய்க் காத்திருந்தேன் கொட்டும் மழையிலே வெயிலுக்காய் காத்திருந்தேன் கொளுத்தும் வெயிலிலே வான்மழைக்காய்க் காத்திருந்தேன் கல்லூரிக் காலத்தில் காதலிக்காய்க் காத்திருந்தேன் கடமைகள் வந்ததும் காசுக்காய்க் காத்திருந்தேன் காத்திருப்பே வாழ்க்கையாய் காலமெல்லாம் தொடர்கையில் காத்திருப்பற்ற வாழ்க்கையொன்றைக் கண்டறியக் காத்திருக்கிறேன் http://gkanthan.wordpress.com/index/waiting/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.