கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
o தீபச்செல்வன் 01 கொலைக்காட்சிகளின் நிழலில் உயிரிழந்த சிறுவனின் சித்திரவதையினால் எழும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. முதலில் எல்லோரையும் கைது செய்தனர் சிலரது கண்களை கட்டினர் சிலரது கைகளை கட்டினர் இறுதியில் எல்லோருக்கும் கைகளும் கண்களும் கட்டப்பட்டன வரிசையாக இருத்தப்பட்டனர் புற்களின் மேலாயும் பற்றைகளின் வழியாகவும் வதை எழும்பும் ஒலியுடன் இழுத்துச் செல்லப்பட்டனர் மாபெரும் கொலைக் காட்சிகள் நிகழ்த்தப்பட்ட நிலத்தில் குருதியின் மேலாய் பூக்களை தூவ தந்தையை இனங்கண்ட சிறுமி காத்திருக்கிறாள் மறுபடியும் அதே நாட்களில் வானம் உறைந்து கிடக்கிறது உருக்கிக் கொட்டுகிறது சத்தமிட்டு அழுதுகொண்டிருக்கிறது கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளன துப்ப…
-
- 5 replies
- 2.1k views
-
-
Print this Page கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப்படம், திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ (காலச்சுவடு 2008), ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ (உயிர்மை 2009), ‘பாழ் நகரத்தின் பொழுது’ (காலச்சுவடு 2010) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர். ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகிறார் (deebam.blogspot.com). தற்போது யாழ் பல்கலைக்கழக ஊடக நிலையத்தி…
-
- 5 replies
- 1.3k views
-
-
புலம் பெயர்ந்த என் ஈழத்து நண்பர்களை இப்போது நான் சந்திப்பதில்லை அவர்களது மின்னஞ்சல்களை நான் திறப்பதில்லை கணினியின் உரையாடல் அறையில் அவர்களது வணக்கங்களுக்கு இப்போது நான் பதில் வணக்கம் சொல்வதில்லை வரலாற்றில் இதற்கு முன்பும் இது போல்தான் இருந்ததா அழிவின் மௌனங்கள்? * நிறைய பார்த்தாகிவிட்டது சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை நிறைய காண்பித்தாகிவிட்டது படுகொலைகளின் படச்சுருள்களை நிறைய படித்தாகிவிட்டது கொரில்லா போர் முறையின் யுத்த தந்திரங்களை வரலாற்றில் இதற்கு முன்பும் இப்படித்தான் சொல்லப்பட்டதா விடுதலையின் கதைகள்? * முப்பதாண்டுகளின் குருதிவெள்ளம் ஒவ்வொரு சதுரமைலாகச் சுருங்கி இப்போது …
-
- 5 replies
- 966 views
-
-
அவன் வருவான் வருவான் என காத்து இருந்தன் ஆனால் வந்தது அவன் இல்லை அவன் திருமண கடிதம்
-
- 5 replies
- 1.1k views
-
-
அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது... அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது... செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது... உலகெங்கிலும் உள்ள என் வயது நெருங்கிய என் அண்ணன்கள் என் அக்காள்கள் என் தங்கைகள் என் தம்பிகள் அனைவருக்குமானது! ஆம்...அப்பா! நீ எங்கள் அனைவருக்குமான 'ஆண் தாய்' அப்பா! அதனால்தான் சொல்கிறேன்... நான் மாணவனாக இருந…
-
- 5 replies
- 757 views
-
-
உயிரானவளே ....!!! உன்னை சந்தித்ததிலிருந்து ... தனிமையை இழந்தேன் ... இனிமையாய் வாழ்ந்தேன் ... என் இதயத்தில் காதலே ... சுவாசமாய் இருந்தது .....!!! என்னவளே ...!!! எங்கே சென்றாய் ....? அத்தனையையும் இழந்து விட்டேன் ... உயிரை தவிர இழப்பதற்கு ... என்னிடம் ஒன்றுமில்லை ... சொல்வதெல்லாம் உண்மை ... காதலை தவிர வேறொன்றுமில்லை....!!!
-
- 5 replies
- 517 views
-
-
கவிதை! ஊரறியாமல் நீயழுத கண்ணீர்........ பாயின் துவாரமூடு ...... பாய்ந்து செல்ல பார்த்திருக்கிறியா? அது கவிதை! ஊரழுத கண்ணீரை - உணர்வின் ........ முதுகில் தாங்கி ........ சோர்ந்து போனாயா? துவண்டு போனாலும் ....... நீ வாழ்ந்தாய் மனிதனாய் அது கவிதை! எது கவிதை? சொல் என்ற மானும் அல்ல.......... மொழி என்ற காடும் அல்ல........ மொழி காட்டில் சலங்கை எடுத்து ...... சொல் மானுக்கு கட்டி விடு..... பின் ..கற்பனைகாட்டில் கலைத்துவிடு... அது கவிதை! நேற்றைய பொழுதில் மை எடு.. இன்றைய பொழுதின் எழுதுகோலில் நிரப்பு....... நாளைய பக்கங்களை ..... வீச்சோடு .... எழுதி நிரப்பு...... புலர்கின்ற பொழுதில்......... நீ இல்லாமல் போனாலும்....... பொய் …
-
- 5 replies
- 1.8k views
-
-
சித்திரையாள் நித்திரையோ? சிதைந்த எம் வாழ்க்கை காணலையே! எத்தனை சித்திரை பிறந்து வந்தது இத்தரை நன்மை நடந்ததா இதுவரை? புதுச் சித்திரை மாது நீ நன்மை நடத்த வந்த தூது நீ துவக்கினால் உயிர்கள் தூங்கியது போதும் தூங்கவை துவக்குகளை காட்டுமிராண்டுகளை ஓட்டு நீ உலகை விட்டு இரக்கமில்லா மனிதப் பிராணிகளை கொளுத்து நீ விசாரணை விட்டு இரத்த மழை பெய்யாது ஆக்கிவிட்டு சாமாதான கீதங்களை இதயவீணை தோறும் மீட்டி விட்டு உலகைப் பார் கார்ச்சியளிக்கும் கவலை விட்டு கதிரை விளித்துப் புதிரை அவிழ்க விடிவே நீ வாராய் விரைந்தே நீ வாராய் நடுச் சாமமானாலும் நரகக் குழியானாலும் நீயே எமக்குக் கதி இதுவே எமது துதி எட்டி நின்று ஒட்டிப் பார்க்காது அண…
-
- 5 replies
- 1.5k views
-
-
அடங்காநா வாய்பேசில் இவர்சொல்கொடு வாளெனெவே வீசும்புலவர் தொடங்காப்பா போற்பொய் யாகும்வீணே நீபார் வந்தபயன் பொருள்: உனது நாவை அடக்கமுடியவில்லை எனில் பேசற்க, இல்லையேல் நீ கூறும் சொற்கள் கொடிய வாள் வீச்சுக்கே ஒப்பானது. ஆதலால் நீ இந்த பூமியில் வந்து பிறந்ததன் பயன் ஒரு புலவனின் இயற்றப்படாத பாடல் போன்று பொய்யாகிப்போகும்.
-
- 5 replies
- 1.4k views
-
-
''ஒழிந்து விடு...'' தேர்தல் வந்ததுமே தெருவிறங்கி குரைத்தவரே ''மாலை போட்டு வந்தன்று மேடையேறி குலைத்தவனே... மானம் உள்ளாய் நீ என்றால் உன் நாக்குகளை வெட்டியெறி...'' ஓட்டெடுத்து சீற்ரெடுத்து ஒய்யார அமர்ந்து விட்டு மரணம் வருகுதென்றா மண்ணை விட்டு நீ போனாய்..? ( கனடா) திருந்தினாய் நீயென்று திருத்தி நாம் படித்தோம்- பாவி கையுட்டு மாறியதாலோ- நீ கை மாறி போனாய்....? கோழையே நீயா கொள்கை கொண்டாய்...? மக்களை காத்திடவா மன்றேறி நீ வந்தாய்...?? நினைத்தாலே சிரிப்பு ஆனாலும் வெட்கம் - நீ இருந்தாலே கேடு இன்று நீ ஒழிந்து விடு... - வன்னி மைந்தன் -
-
- 5 replies
- 1.3k views
-
-
முற்றும் துறந்த முனிவர் முற்றும் துறந்த முனிவர் அவர் - வேதம் கற்றுணர்ந்த காரணத்தால் மானைப் போன்ற துணையை விட்டு கானைத் தேடிப் புறப்பட்டார் - திரு மாலைத் தேடித் தவமியற்ற விலங்கினம் வாழும் ஒரு காடு - அங்கு அமைத்தார் தான் வாழ ஒரு வீடு ஏந்தினார் கையில் கமண்டலத்தை மறந்தார் ஊன் முதல் உறக்கத்தை - புந்தியில் வைத்தர் ஐயன் நாமத்தை மறுநாள் காலை விடியும்வேளை புறப்பட்டார் அருவியை நோக்கி சந்தியாவந்தனம் செய்வதற்கு - அங்கு கண்டார் ஓர் இளங் குருவியை ஆடை நெகிழக் குளிப்பதை விடுவாரா! முற்றும் துறந்த மாமுனிவர் விரகம் அவரைத் தலையெடுக்க அடையத் துடித்தார் அந்தப் பெண்மலரை நெருங்கினார் அவளைத் தாகத்துடன் காமம் கண்களில் கொப்பளிக்க விலகினா…
-
- 5 replies
- 7.1k views
-
-
மடிகளை உள்ளிழுத்த மாடுகள் காலவெற்றிடத்தில் உறுமத் தொடங்கி நாணயக்கயிற்றுக்குள் வளைந்து உடல் சிலுப்பி நிலம் விறாண்டி மூச்செறியவும் செய்தன.. புளுதிகளையும் மூச்செறியும் கனதியையும் வலியேதுமில்லாமல் வழிந்த வீணீர்களையும் முகர்ந்த உண்ணிகள் தாமும் கூட உறுமமுயன்று உருத்திரதாண்டவமாடின... எரிந்து கிடக்கும் நிலத்தின் எச்சங்களை தின்றும், உறைந்துபோன மனங்களின் மர்மங்களை கொன்றும், ஈரமிழந்த வேர்களிலாலும் உயிர்ப்பை சுமக்கும் புனிதர்கள் தோள்கள் மீதேறியும், இன்னலற்ற சுவரோரம் முதுகு தேய்த்து உண்ணவும் உறங்கவும் ஆகுதிகளை வைத்து அவிபாகம் பெறவும் மடிகளை மறைத்து உறுமத்தொடங்கின கறவைமாடுகள்.. மேச்சல்நிலம் கொண்ட மாடுகளின் ஏவறைகளுக்கும் ஓய்வுநேர அசைபோடலுக்கும் அர்த்தமாயிரம் க…
-
- 5 replies
- 911 views
-
-
பதின்மங்களின் படிமக்கனவுகள்; புதினங்களாய் பேசிக்கொள்ளும் இரகசிய வார்த்தைகள்; இளசுகளின் சுத்தல்களில் பெருசுகளுக்குப் புரியாத தலைமுறை வளர்ச்சியின் வழக்கமான அதே காதல்! எப்போதும் புத்தம் புதிதாய் மின்னும் எண்ணங்களுடன் தோன்றும் மின்னல்கள்! மின்சாரம் இல்லாத ஊரில் மனசுக்குள் விளக்கெரியும்! இரு ஜோடி இதழின் அழுத்தத்தில் பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்! முதல் முத்தம் எப்பொழுதும் தலைக்கேற்றும் பித்தம்! முதன்முதற் காதல்.... காலத்தால் அழியாத இதயத்தின் மோதல்! சூரிய உதயங்கள் வரை வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த வாலிப பருவத்தின் வலிந்த போர்க்காலங்கள் ! கருவேப்பிலை மரத்தைக்கூட பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து பார்வையாலே …
-
- 5 replies
- 1.1k views
-
-
நம்மை மறந்த நமது நட்சத்திரங்கள் ! காவிரியில் தண்ணீர் வரவில்லை கால் நடையில் சென்றீர்கள் உங்களின் கடமையுணர்வு தெரிந்தது! கார்கில் வீரர் காயம் ஆறவில்லை கைகள் கோர்த்து நின்றீர்;கள் உங்களின் கண்ணியம் புரிந்தது! ஈழத்திலே போர் இன்னும் ஓயவில்லை குஞ்சுகளின் தலையில் குண்டுமழை உங்களின் கட்டுப்பாடுதான் தெரிகிறது! மக்கள் திலகம் எம்.ஐp.ஆர் போல்;; நடிகர் திலகம் சிவாஐpயும்-எங்கள் மண்ணையும் மக்களையும் நேசித்தார்! உலகம் முழுதும் திரைவானிலே உங்கள் திரைபடம் ஓடவேண்டுமா அங்கே ஈழத்தமிழன் ஓடிவருவான்! உரிமைக்காக குரல் எழுப்பி உலகம் முழுதும் அலையும்-ஈழத் தமிழனுக்காய் நீங்கள் ஓடிவரவில்லை! தலைமுடி கோதும் படையப்பா தர்மத்தின் தலைவனாய் ந…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஆயிரம் கைகள் சேர்ந்து செய்த மெத்தையில் படுத்திருக்கிறேன் உன் இருகையில் மட்டும்தான் தூங்கி இருக்கிறேன் * அம்மா உனக்கு அவ்வளவு பாரமாய் இருந்தேன் என்றா பால் கொடுத்து என்னை வளர்த்தாய் நீ தூக்கவே முடியாதளவுக்கு * வெற்றி பெற்றால் தேடி வந்து வாழ்த்த ஆயிரம் உறவுகள் தோற்றுப்போனால் தேடி வந்து அணைக்க உன்னைத் தவிர யார் எனக்கு * ஆயிரம் முறை தலை சீவிய சந்தோசம் நீ ஒரே ஒரு தடவை தலை கோதிவிடும் போது * எல்லாம் சேலைதான் எனினும் நீ கட்டிய சேலையில்தான் என் நிம்மதியான தூக்கம் அவிழ்ந்து கிடக்கிறது * என்னை நடக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட …
-
- 5 replies
- 1.4k views
-
-
அம்மா சொல்லிக்கொடுத்து சொல்லாமல் சொன்ன சொல் "அம்மா"... எண்ணும் கணக்கில் எண்ணாமல் எண்ணும் நெஞ்சம் "அம்மா"... தத்தி நடை நடந்து மண்ணில் தடக்கி அங்கே விழுகையிலும் முட்டி நிற்க்கும் கண்ணீர் முன்னே முந்தி வரும் வார்த்தை "அம்மா"... தள்ளாடும் வயதினிலும் சொல்லாடல் மாறாமல் உள்ளோடும் உயிரோடு உறைந்த உயர்ந்த வார்த்தை "அம்மா"... கண் மூடிப் தூங்க பாயில் போகும் போதும் "அம்மா" கனவு கண்டு உளறி வாய் உதிர்க்கும் வார்த்தை "அம்மா"... உண்ட உணவு தொண்டை வரை நிறைந்துவிடும் போதும் எடுத்துப் பெரு மூச்சுவிடும் வேளையிலும் "அம்மா"... களைத்து உடல் இளைப்பாறும் வேளையிலும் கூட இதமாய் கையை நிலத்தில் உன்றி சொல்லும் வார்த்தை "அம்ம…
-
- 5 replies
- 1.2k views
-
-
முகமரியா தேசத்தில் நம் தேசம் - தொலைத்து தூர தேசசம் வந்தும் . . ஆறறிவை தொலைத்து - சிலர் நிர்வாணமாய் திரிகின்றார்கள்...... அகதி முத்திரையோடு அகங்காரமாய் ஆயுதங்களுடன் அதிகாரமாய் உறவாடும் கால் முளைத்த.. பிசாசுக்களாய்..... அரியாலை மன்னார் வல்வெட்டித்துரை - இன்னும் எத்தனையோ...எத்தனையோ.... தாய் மண்ணில்தான் ஊர் சண்டையென்றால்.. வற்த இடத்திலுமா - தங்கள் கசாப்புக்கடை .. தத்துவங்கள்....... தம்முடைய புதைக்குழியை தாமே வெட்டுமளவுக்கு இரத்த தாகம் கொண்டலையும்...காட்டேறிகளாய்.... உயிர்க்கும் பிழைப்புக்கும் இடம் தேடி வந்தவர்கள் வந்த இடத்தில் - பிழைப்போ உயிர் வதைப்பு.... உலக நாடுகளில் மரண தண்டனையை சட்ட யாப்புகளிலிருந்த…
-
- 5 replies
- 1.5k views
-
-
காதலர் தினமும் காதலர் மனமும் அன்புள்ள காதலன் கி.பி 270 ல் ல் த கா....! தொடக்கி வைத்தான்! அன்புள்ள காதலிக்கு அன்பு நிறைத்து அனுப்பி வைத்தான் காதல் கடிதம்! அன்று தொடங்கி இன்று வரை தினம் தினம் எழுதிக் கொணடே இருக்கின்றான் மனிதன்! அறிவுக் கண்ணால் அவள் பார்த்தாள் அன்புக் கண்ணில் அவன் வீழ்ந்தான்! வலன்டைன் வாழ்க !! ஐPலியா வாழ்க வாழ்க!! காதல் வழிந்து கசியக் கசிய... கண்கள் அழகு பெண்கள் அழகு இரு விழிகள் இதயத்தில் எழுதும் இனிய வரிகள் காதல்! இதயத் தோட்டத்தில் இளமை ஊஞ்சலாடும் புதுமை வலிகள் காதல்! காலை முதல் மாலை வரை கவிதை தின்றால் காதல் வளரும் காதல் வளர்ந்தால் கவிதை இனிக்கும் உன்ன…
-
- 5 replies
- 1.3k views
-
-
புறமுதுகிட்டு ஓடச் செய்தாய் பூரித்துப் போனேன். பொழுது புலர்ந்து விடும் – உன் புதுமை நிர்வாகம் உலகறியச் செய்யும். காத்திருந்த கணங்கள் அனைத்தும் தொடர்கதையாகி விடுகதையையும் சேர்த்து விட்டுச்சென்றுள்ளது? திசையெல்லாம் கூடிய ஆதரவில் திசை திரும்பாமலே பயணித்தாய். சேர, சோழ, பாண்டிய கதைகள் பழங்கதையாகி தேசமெங்கும் தேசியத் தலைவரானாய். நல்லவரா? கெட்டவரா? நாள்தோறும் முண்டியத்த நாக்குகளுக்கு மட்டுமே தெரிந்ததால் நகைப்பாய், நகைச்சுவையாய் நாள்தோறும் தலைப்புச் செய்தியானாய்? உன் ஓழுக்கம் குறித்து – இங்கு அக்கறையில்லை. ஊடக விற்பனையில் – நீ உரத்துச் சொன்ன அத்தனையும் உலகறியாது? உதிரம் கொடுத்து உள்ளே புதைந்தவர்கள் உறவை விடுத்…
-
- 5 replies
- 884 views
-
-
களம் களமிது யாழ்க்களம் வந்து பாருங்கோ உளங்களிக்க உள்ள எழுதிப்பாருங்கோ வந்து நீங்க எட்டிப்பாத்து வணங்கிட்டா…. உங்க வண்ட வாளம் அலச ஒரு கூட்டங்கோ நாரதரும், சாத்திரியும் நாத்தீக இளங்கோவும் தூயவனும், ஈழவனும், டங்குவாரை அறுத்தெறிய, நெடுக்கால போறவரும், குறுக்கால வாறவரும் கந்தப்பு இறைவனுக்கு காவடி எடுத்தாட சின்னாவும், வடிவேலும், சிலுக்கோட கூத்தாட குத்தாட்டம் போட்டபடி கு. சாவும் தள்ளாட கானத்துப் பிரபாவும், கதை எழுதும் மணிப்பயலும் கதவோரம் நின்று நின்று களத்துக்குள் கல் பொறுக்க வானவில்லும் வெண்ணிலாவும் வக்கணையாய் பேச்செடுக்க பொக்கைவாய் திறந்து யம்மு போயிலை சாறுமிழ விண்ணான டங்குவுடன் விம…
-
- 5 replies
- 996 views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் * வெடிகுண்டு சப்தம் தாலாட்டுகிறது ஈழக் குழந்தைகளை...! * குடித்த பின் குடும்பச் செலவானது குவளைகள்...! * மைல்கள் சாமியானது சந்தோஷம் பூசாரி! * காந்தி ஜெயந்தி கனவு கலைந்தது `குடி' மகனுக்கு! * மரண அறிவித்தல் தவளையின் சப்தம் * சாலையோர மரம் சாமியானதும் சரியாமல் நின்றது!
-
- 5 replies
- 1.3k views
-
-
காற்றின் சுழிகளில் திருகி வெற்றிட நிறையில் தோற்று நீரின் பாயத்தில் பயணிக்கும் உதிர்ந்த பழுப்பு நிறச்சருகின் புறப்பரப்பின் கீழே நிறப்பிரிகையடையும் சூரிய பிரவாகத்தின் ஒளிக் கீற்றில் மெல்லப் படரும் வைகறையின் நிறத்தில் நெளியும் மஞ்சள் நதியின் இரு கரைகளிலும் வானேகி வளர்ந்த தென்னைமரங்கள் கடந்து தொடுவா னளவு பச்சையம் விரித்துக் கிடந்த பூமியின் உழவு மாடுகளை விற்ற கோடை நாளொன்றில் அப்பாவின் முகத்தில் வழிந்த மூதாதையரின் கண்ணீரை கழுவிச் சென்ற மழையில் முதன் முதலாய் நனைய பிடிக்க வில்லை..... ~ராஜன் விசுவா 10.4.16
-
- 5 replies
- 1.6k views
-
-
“அழகான கொலைகாரியே😷” அழகான கொலைகாரியே அடிவயிற்றை கலக்கிறியே வளமான எம் வாழ்வை வந்தேனோ அழிக்கிறியே பாழான பழக்கத்தால் உருவான அழகே-இன்று உலகெல்லாம் பரவிநீ-எம் வாழ்வில் செய்வதெல்லாம் இழவே உறவோடு நாமிங்கு உறவாட முடியாமல் எம் மிடைவந்த சதிரே இவ்வுலகையே உலுப்ப உருவான புதிரே சத்தமின்றி பெரும் யுத்தமின்றி கொத்துக்கொத்தாய் உயிர் அள்ளிபோறவளே சத்தியமாய் சொல்லு உனை ஏவியவன் எவனோடி உன்னை நாம் தொட்டதில்லை முத்தமிட்டதில்லை ஏன் பார்த்தது கூட இல்லை எப்படி எம் சுவாச அறைவரை வந்தாய் கண்கானா அழகே உனை கவிதையாய் வடிக்குமுன் எத்தனை முறை தும்மிவிடுகிறேன். ஒருவேளை என்னையும் நினைப்பதை உணர்த்தும் அறிகுறியாடி உனை தாங்கும் தைரிய…
-
- 5 replies
- 2k views
-
-
மீண்டும் நீ மறக்க முடியா நினைவாக....! Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Sunday, May 26, 2013 comments (0) எதிர்பாராத நிகழ்வுகளாய் வந்தடைகிற நட்புகளும் உறவுகளும் உன்னவர்களாகவே வருகிறார்கள்....! நீண்ட வருடங்களைக் கரைத்திருக்கிற காலக்கதவுகளை உடைத்தபடி கனவுகளோடு இலட்சியம் சுமந்து உன் தோழர்கள் மீண்டும் வருகிறார்கள்....! உன்பற்றியும் உனது வீரமரணம் பற்றியும் நேரமெடுத்துப் பேசுகிறார்கள் நினைவழியா உன் வாழ்வை நேசிக்கிறவர்களாய்....! நினைவிலிருந்து கழற்றியெறியப்பட்ட தடங்களை மீளவும் புதுப்பித்துச் செல்கிறார்கள் மீண்டும் நீ மறக்க முடியா நினைவாக....! வரலாறுகள் என்றுமே வெற்றிடமாய் ஆவதில்லை நீ வழிகாட்டிய பாதைவழி அவை தொடர்ந்து கொண்டே…
-
- 5 replies
- 1k views
-
-
கேள்வி ? நீ எந்த ஊர் என்று கேட்டனர் ஊரைச் சொன்னாள் ஊரில் எத்தனையாம் வட்டாரம் என்று கேட்டனர் இடத்தைச் சொன்னாள் எந்த வீதி என்று கேட்டனர் வழியைச் சொன்னாள் யார் மகள் என்று கேட்டனர் பெற்றவர் பெயர் சொன்னாள் அதன் பின் 'ஓ' 'நீ அந்த வாத்தியார் மகளா' என்று வாய் நிறையச் சிரித்தனர் அவளோ மனதுக்குள் அழுதாள் இத்தனை கேள்வி கேட்டது அவள் குலப் பெருமை அறிவதற்கு என்று புரிந்து கொண்டபோது அவளோடு அவர்களும் புலம் பெயர்க்கப் பட்டனர்.
-
- 5 replies
- 1.4k views
-